Tuesday, September 28, 2010

இந்த வெள்ளைக்காரியும் ரஜினி ரசிகையா?!


பில்லி பைப்பர் (Billie Piper) னு இங்கிலாந்து நாட்டு பாடகி, மற்றும் நடிகை, தன்னுடைய டே அண்ட் நைட் பாடலில் ரஜினி டி- ஷர்ட் அணிந்துள்ளார்! (வீடியோ பார்க்க, இங்கே க்ளிக் செய்யவும்)

இவர் ஒரு ரஜினி ரசிகைனு எல்லாம் நான் கதை கட்ட விரும்பவில்லை! இருந்தாலும் இவர் எப்படி ரஜினி டி ஷர்ட்டை கண்டுபிடிச்சு வாங்கினார்? இவருக்கு ரஜினியைத் தெரியுமா? ஒரு வேளை ரஜினி ரசிகையா இருந்தாலும் இருக்குமோ? னு சில கேள்விகள் எழுகினறன.

இதே டி-ஷர்ட்டை நம்ம ஊர்ல யாராவது போட்டுக்கொண்டு அலைந்தால், தலையில் அடித்துக்கொள்ளும் மேதாவிகள் இப்போ என்ன செய்வார்கள்? னு யோசிச்சேன் சிரிப்பு வருது!

மைக்கேல் ஜாக்ஷன் டி-ஷர்ட்டை (தி இஸ் இட்) னு நம்ம மாட்டிக்கிட்டு அலைகிறோம்! அதுபோல "பில்லி பைப்பர்"
நம்ம ரஜினி ட்-ஷட்டை போட்டுக்கிட்டு அலையிறார் போல இருக்கு.

In any case, it is certainly a good news for super * fans! :)

Monday, September 20, 2010

எந்திரனில் ரஜினி ஜோக்கராம்!- ஒரு எதிர்வினை!


பதிவுலகில் "தரமான பதிவர்கள்" என்று தன்னை நினைத்துக்கொண்டு பெரியமனிதப் போர்வையுடன் "வாழும்" இவர்கள் நிலைகுழைந்து, நிம்மதியிழந்து, உலகையே வெறுத்துக்கொண்டு இருக்காங்க! பாவம் அவர்களுக்கென்ன அப்படி கஷ்டம்? எல்லாம் நம்ம ரஜினியின் எந்திரன் படம்தான்.

-----------------------------
எந்திரனுக்கு வாழ்த்துச் சொல்றார், திரு. மாதவராஜ்! எப்படினு பாருங்க!

மாதவராஜ் said...
September 14, 2010

"சீக்கிரம் அந்த ’சனியன்’ வந்து தொலையட்டும். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்."

--------------------
இவருக்கு ஏன்ப்பா இப்படி ஒரு காண்டு???!! இவரை எவன் போய் எந்திரன் பார்க்கச்சொன்னான்? இல்லை சன் டி வி சேனலை பார்க்க சொன்னார்கள்? இவருக்குப் பிடிக்காதமாதிரி உலகத்தில் படம் எடுத்தால் அது சனியனாம்!

தனக்கு பிடிக்காததை நாகரீகமாக புறக்கணிப்பவந்தான் பெரிய மனுஷன்? அதுவும் படம் எப்படியிருக்கும்னே தெரியாத ஒரு நிலையில், இவர் செய்றதெல்லாம் சின்னத்தனம்! இதுபோல் பின்னூட்டமிட்டு இவரை இவரே தாழ்த்திக்கொண்டு நிம்மதி இழந்து இவர் அலைறதைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கு!


--------------------------------

இன்னொரு பதிவுலக மேதை! இவர் வழகுரைஞராம்! சட்டம் படித்தவர் இவர்!! என்ன சொல்றார்னு பாருங்கப்பா! பெரிய காமடியனா இருப்பார் போலயிருக்கு!


Prabhu Rajadurai said...

அதை விட சுவராசியம், 42 வயது மாமனாருக்கும் 18 வயது மருமகளுக்கும் உள்ள தகாத உறவைப் பற்றி வந்துள்ள ஒரு படத்தை 'நம்ம கலாச்சாரம் என்னாவது' 'மக்கள் இதனை புறக்கணிக்க வேண்டும்' என்று வாங்கு வாங்கு என்று தினகரனில் போனவாரம் விமர்சனம். கீழே எந்திரன் பட விளம்பரம் ரஜினி ஐஸ்வர்யாவுடன் :-)
----------------------------------------

இவர், மாமனார்- மருமகள் தகாத உறவு உள்ளதுபோல எடுத்த ஒரு படத்தையும், 60 வயதான ஒரு நடிகன், 35 வயதான ஒரு நடிகையுடன் ஜோடியாக நடிப்பதையும் ஒரே மாதிரி விசயம்னு சொல்றார்!

எனக்கு உண்மையிலேயே புரியலை! இவர் என்னதான் சொல்ல வர்ரார்? இதுபோல் தகாத உறவு படங்களுக்கு வக்காலத்து வாங்குகிறாரா? எந்திரன் படத்த்சிச் சொல்லி?

இவர், எம் ஜி ஆர், சிவாஜி, ராஜர் மூர், ஷான் கானரி நடிச்சப் படங்கலெல்லாம் பார்த்ததில்லையா?

இவரைக் கூட்டி போயி சில எம் ஜி ஆர் -மஞ்சுளா, லதா, சிவாஜி- அம்பிகா, ராதா மற்றும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் போட்டுக் காமிங்கப்பா!!!


----------------------------

150 கோடி செலவழித்த சன் நிறுவனம்!

150 கோடி போட்டு படம் எடுத்த சன் நிறுவனம், தன் முழுபலத்தையும் கமர்சியலில் செலவழிச்சு போட்ட காசை எடுக்க முயல்வது தப்பா என்ன?! எவன் இதுபோல் ஒரு தொகையை தைரியமாக இன்வெஸ்ட் பண்ணுவான்? கமலோட மருதநயகம் இன்னும் கதையோட நிக்கிறதுக் காரணமே 150 கோடிக்குமேல் அந்தப் படம் எடுக்க செலவாகும் என்கிற காரணம்தானே?. மொதல்ல பணம் (அவ்வளவு பெரிய தொகை) போட எவனும் முன்னுக்கு வரமாட்டான். ஷங்கர்ருடைய ட்ரீம் ப்ராஜெக்ட்டை சன் நிறுவனம் எடுக்க முன்வந்ததுக்கு காரணமே அவர்களுடைய இதை கமர்ஷியல் பலத்தில் உள்ள நம்பிக்கையில்தானே?.

இதிலே சினிமா ஒரு வியாபாரமானு சந்தேகம் வேற? கழண்டுடுச்சா இவர்களுக்கு? உலகத்துக்கே தெரியும் சினிமா என்பது வியாபாரம்னு! இந்த மேதாவிகளுக்கு ஏன் தெரியலை? சினிமா சமூகத்தொண்டு! 150 கோடி செலவழிப்பது, தமிழ் மக்களுக்காக செய்யும் பெரிய தொண்டுனு நெனச்சார்களாம்! என்னதான் படத்தை கமெர்ஷியலை பண்ணினாலும் போட்ட காசை எடுக்கமுடியுமானு சன் நிறுவனம் ஒரு பயத்தில் இருப்பதென்ன உண்மைதான். இதுபோல் பயமிருப்பதில் தப்பில்லை! பதிவுலகில் இவர்கள் காண்டுவுக்கு அவசியமும் இல்லை!

ரஜினியின் விசிறிகள்!

அக்டோபெர் 1 தேதி படத்தைப் பார்க்கத் துடித்துக்கொண்டிருக்கும் ரசிகர்களும் படம் எப்படி வந்திருக்கோ? ஷங்கர் ரஜினியை வைத்து இந்தமுறையும் வெற்றியடைய முடியுமா? யானைக்கும் அடி சறுக்கும்! ஷங்கர் மட்டும் இந்த பழமொழிக்கு விதிவிலக்கல்ல என்கிற ஒரு மாதிரியான் பயத்துடந்தான், படம் நல்லா வரனும்னு மனதுக்குள்ளேயே கடவுளை எல்லாம் வேண்டிக்கிட்டு இருக்காங்க! தனக்குப் ப்டித்த நடிகர் படம் நல்லா வரனும், வெற்றி யடையும்னு நினைப்பது இயற்கை!

ரஜினி ஜோக்கரா?!

சரி தலைப்புக்கு வருகிறேன். எந்திரனில் ரஜினி ரோல், BATMAN படத்தில் ஜாக் நிக்கோல்ஷன் ஜோக்கர் ரோல் போல் வருமாம். யார் சொன்னா? யாரோ சொன்னது கேட்டது. ரஜினி ஜோக்கராக வந்து எல்லாரையும் சிரிக்க வைக்கபோவதுடன் அவரை வெறுக்கவும் வைப்பாராம்!

Friday, September 17, 2010

பிரபுதேவா-நயன்தாராவை வாழ்த்துவோமா?

நம்ம பிரபுதேவா (36), நயன்தாராவை (25?) தான் உயிருக்கு உயிரா காதலிப்பதாகவும், கல்யாணம் செய்துகொள்ளப் போவதாக வெளிப்படையாவே சொல்லிட்டாராம்! இப்போ நம்ம கடமை ஒண்ணு இருக்கு! இந்த இளம்ஜோடியை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்னு னு வாழ்த்தனும்! வேண்டாமா?

காதல் புனிதமானது! கல்யாணம் என்பது ஒரு மங்களகரமான மேட்டர்னு பெரியவங்க சொல்லுவாங்க. எங்கேயோ பிறந்த ரெண்டுபேரு ஒருவரை ஒருவர் சந்திச்சு, விரும்பி, மனதாற காதலிச்சு, ஒருவரோட ஒருவர் கலந்து உலகறிய கல்யாணம் செய்துகொள்ளப் போறாங்க! எவ்ளோ பெரிய விசயம்!

சரி, நம்மிள் எத்தனை பேர் இவங்கள வாழ்த்தப் போறோம்? நான் சொல்றது, மனதாற வாழ்த்துறவங்கள! உண்மையில், ஏதோ எழவு நடக்கப் போறதுபோலதான் >90% தமிழ் மக்கள் இந்த ஒரு நிகழ்வைப் பார்க்கிறாங்க! இந்த தம்பதிகளை மனதெரிந்து திட்டுறவர்கள் கோடிக்கணக்கில் இருக்காங்க! ஒருவேளை அவங்க ரெண்டுபேரும் தங்களைத் தாமே ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கிட்டா ஒரு ரெண்டு பேரு தேறுவாங்க! அப்புறம் இதே போல வேற "பிரபுதேவா லீலைகள்" செய்த "பெரியமனிதர்கள்" நம்ம மட்டும் தனியா இல்லை! துணைக்கு நம்ம பிரபுதேவா வந்துட்டாருனு வாழ்த்தினாலும் வாழ்த்துவார்கள். இதில், முக்கியமாக இவர்களுடைய சுயநலம்தான் இந்த வாழ்த்துக்கு காரணம்!

அதென்னனு தெரியலை, மனைவி இருக்கும்போது, இன்னொருவரை காதலித்து, அவள் சரி சொன்னதுக்கப்புறம் மனைவியை கழட்டிவிடுவதுதான் காலங்காலமா இந்த ஆம்பளைங்க செய்றாங்க!

என்ன பேசுற வருண்? "சட்டப்படி தப்பு இல்லையே!" "அந்தம்மா (அவர் மனைவி) எப்படியோ, யாருக்குத்தெரியும்?" "இது ஒருவருடைய ப்ரைவேட் மேட்டர் நம்ம இதை எல்லாம் எடைபோடக்கூடாது!" என்று பலர் சொல்றது கேக்கிறது. இருந்தாலும் நமது கலாச்சாரத்தில் இதை மனதாற ஏற்றுக்கொள்ள நம் மக்களுக்கு மனது இன்னும் இல்லை என்பதுதான் உண்மை!

WHY? Why it is wrong? There are some facts buried here which we need to look at!

* He must have cheated on his wife!

அதாவது, நயன் தாராவுடன் "இன்வால்வ்" ஆகும்போது நிச்சயம் இவர் தன் மனைவிக்கு துரோகம் (பல பொய்கள் சொல்லி) செஞ்சிதான் இருக்கனும் அது தப்பு!

* It is okay if he had divorced his wife before he met Nayanthaara! ஆனால், இவர் அப்படி செய்யலையே! மனைவியை விவாகரத்து செய்து தனியா இருக்கும்போதா இந்த "லவ்" அரும்புச்சு? இல்லையே!

* Now she is young and fresh, so he goes after her. What a lowlife this Prabudeva is! How long this love is going to last? May be another few years? அது ஏன் இன்னொருத்தி அதுவும் "யங்கா" பார்த்த பிறகுதான் இந்த ஆம்பளைங்களுக்கு மனைவி கசக்கிறாள்? இவளும் ரெண்டு குழந்தை பெத்தவுடன், இவளை எவன் பார்ப்பான்? காதல் எல்லாம் கரைந்து ஓடிவிடும்! இன்னைக்கு வயது இருக்கு இளமையிருக்குனு வர்றான்! நாளைக்கு? இன்னும் கொஞ்ச நாள்ல இவளை கழட்டிவிட்டுட்டு இன்னொருத்திக்கு தாவுவான், அப்போத்தான் புரியும் இவளுக்கு!

* Why do these young actresses fall in love with Married guys? ஏன் இந்த உலகத்திலே கல்யாணம் ஆகாத ஆண்களே இல்லையா இவங்களுக்கு? Certainly there are some gentlemen who would happily marry her or not?

இதுபோல உலகம் நினைப்பதை/சொல்றதை எல்லாம் யாரும் தவிர்க்க முடியாது. சரி, யார் யார் இந்த தம்பதிகளை வாழ்த்துறாங்கனு பார்ப்போம்! :))) .

Tuesday, September 14, 2010

"போர்ன் சாமி" குடும்பப்படம் எடுக்கப்போறாராம்!



நம்ம இயக்குனர் சாமி ஏதோ புது மாதிரியா யோசிக்கிறேன், படம் எடுக்கிறேன்னு ஏதாவது இன்செஸ்ட் கதைய வச்சு ரசிச்சு ரசிச்சு தமிழ்ல படம் எடுத்து வெளிவிடும். இதுக்கு எவன் சாமினு பேர் வச்சான்னு தெரியலை! அண்ணி கொளுந்தனுடன் தகாத உறவு கொள்ள முயல்வது போல ஒரு ப்ளாட்! அதுதான் இந்தசாமியோட உயிர். உலகத்திலே எவனுமே யோசிக்க முடியாத ஒரு ஐடியா, பாருங்க!

அப்புறம் சாமி, மிருகம்னு ஒரு படம் எய்ட்ஸ் விழிப்புணர்வு கொண்டுவருவதுபோல எடுத்து விட்டுச்சு. இதுலயும் இதுக்கு உண்மையான எய்ம் என்னனு தெரியலை. சரி, மிருகம் நல்ல படம்னே வச்சுக்கலாம்னு பார்த்தா, நடிகை பத்மப்ரியாவை செட் ல அறைஞ்சிருச்சாம் சாமி! என்ன இந்த ஆளு பெரிய லூசா இருக்கான், "யாரையும் கை நீட்டிலாம் அடிக்கக்கூடாதுடா நாயே!"னு தமிழ் திரைப்படச்சங்கம் சாமிய ஒரு வருடம் படம் கிடம்னு வந்து நிக்காதே னு அடிச்சு தொறத்திவிட்டாங்க.

அதுக்கப்புறம் சிந்து சமவெளி னு இன்னொரு மாமனார்- மருமகள் தகாத உறவை எடுத்துவிட்டது, சாமி. சாமியுடைய சிந்து சமவெளியப் பார்த்து, இவன் என்ன இதே மாதிரி படமா எடுத்துட்டுப் போறான், அனேகமா இவனோட அடுத்த ப்ளாட் இதைவிட மோசமா இருக்கும்னு நம்ம மறத்தமிழர்கள் எல்லாம் சாமி வீட்டுக்கே போய் கல்லெறிந்தது மட்டுமில்லாமல், படத்தை படுதோல்வி அடைய வச்சுட்டாங்க ஒரு வழியா!

இப்போ சாமி என்ன பண்ணுறதுனு யோசிச்சு குடும்பப் படமா விக்ரமன் படம் மாதிரி எடுக்கப் போதாம்! குடும்பப் படம்னு என்ன எழவை எடுக்கப் போதோ தெரியலை!



சில வம்புகள்!

* குஷ்புவும், சுஹாஷினியும் சாமிக்கும் கருத்து சுதந்திரம் இருக்குனு சொல்லி, சாமிக்கு வக்காலத்து வாங்கினால் அதிசயமில்லை னு நான் சொல்லல!

* பதிவுலகில், ஷங்கர் போன்ற இயக்குனர்கள்தான் தமிழ் கலாச்சாரத்தை இழிவு படுத்தியதாவும் அவர் படத்தைப் பார்க்கக்கூடாதுனு சொல்கிற மேதாவிகள் இந்தப் "போர்ன் சாமி"யுடைய கலாச்சார சீரழிவு செய்யும் படங்களை ஏன் கடுமையாக விமர்சிப்பதில்லை னு எனக்கு புரியலை! இல்லை, விமர்சித்து இருக்காங்களா?

தொடுப்புகள் கொடுக்கவும்!

* என்னைக்கேட்டால், தன்னை லிபெரல்ன்னு நெனச்சுக்கிட்டு கலாச்சாரக்காவலர்களை எல்லாம் எதையாவது சொல்லி விமர்சித்துக்கொண்டு திரியுறவங்க எந்த அளவுக்கு அவங்க தான் லிபெரல் னு யோசிச்சுப் பார்ப்பாங்களானு தெரியலை. Because no matter how liberal you are, you need to draw a line at some point! That particular line would not make any sense either! That is what culture is all about!

Thursday, September 9, 2010

எந்திரன் செப் 24 ரிலீஸ் முடிவானது!


* எந்திரன் அதிகாரப்பூர்வமான ஹிந்தி ட்ரைலெர் வெளி வந்து விட்டது! அதிகாரப் பூர்வமான ரிலீஸ் டேட்டும் அதில் அறிவிக்கப் பட்டுள்ளது!

தொடுப்பு 1

தொடுப்பு 2

ரஜினி ரசிகர்களுக்காக ஒரு பதிவுலகப் புதிர்!

ஒரு பதிவுலக நண்பருக்கு எந்திரன் மேலே உள்ள "அன்பை"ப் பத்தி சொல்லௌம்! இவருக்கு ஷங்கரைப் பிடிக்காதாம்! அப்புறம் ரஜினியை மட்டும் பிடிக்குமா என்ன? பிடிக்காதாம்! ஏ ஆர் ரகுமானையும் பிடிக்காதாம்! சன் நெட் வொர்க்கை பிடிக்கவே பிடிக்காதாம்! அதுமட்டுமல்ல, 10 கோடிக்கு மேலே செல்வழிச்சு எடுக்கிற எந்த்ப் படமும் பிடிக்காதாம். அதனால 100 கோடிக்கு மேலே பணம் போட்டு தயாரித்த எந்திரனைப் புறக்கணியுங்கள்னு இவர் எல்லாரையும் ஆதங்கத்துடன் கேட்டுக்கிறார்.

யார் இவர்? சிவாஜி படத்தை வீம்புக்கு பார்க்காத ஒரே பதிவர் இவர்தான்னு சொல்லிக்கிறார்! சிவாஜி படத்தி டி வி ல போட்டாலும் பார்க்க மாட்டார் போல! பெண்களை ஒதுக்கனும் நெனைகிறவர்கள்தான் "பெண் சுகம்"னா எப்படியிருக்கும்னு ஏங்குவார்களாம். அப்படிப்பார்த்தால் இவர் சிவாஜி (ஸ்ரேயா) ஏக்கத்தில் இருப்பாரோ என்னவோ?

எந்திரன் டீம்ல இவருக்கு காண்டு இல்லாத ஒரே ஒருவர் வைரமுத்துதான். அது ஏன் வைரமுத்துவை மட்டும் விட்டுட்டாரு? அவர் சம்பளம் இல்லாமலே பாட்டு எழுதினாரோ? அவர்ட்டத்தான் கேக்கனும். ஒரு வேளை பயம்மா? இருந்தாலும் இருக்கலாம்! அவர் மீசையைப் பார்த்து பயந்து இருப்பாராக்கும்!

இவர் எழுதிய எச்சரிக்கை பதிவில் எந்திரனை சயண்ஸ் ஃபிக்ஷன் படம்னு அந்தப்படத்தைப் பற்றி தெரிந்தவர்கள் சொன்னால், சயண்ஸ்னா என்ன ஃபிக்ஷன்னா என்னனு கேக்கிறாரு? ஏன் சயண்ஸுக்கும் ஃபிக்ஷனுக்கும் இவர்தான் அந்த்தரிட்டியா என்ன? எந்திரன் படத்தை இவர் கற்பனா ஷக்தியாலேயே பார்த்த இவருக்கு மட்டும்தான் தெரியுமாம சயண்ஸும், ஃபிக்ஷனும்! நமக்கென்ன தெரியும்?

படம் வெளி வருமுன்னாலேயே இவர் ஏன் சயண்ஸ்லயும், ஃபிக்ஷன்லயும் பெரிய அத்தாரிட்டி மாதிரி இவர் பேசுறார்னு யாருக்காவது புரியுதா? எனக்குப் புரியலை. சரி, ரஜினி விசிறி யாராவது, நான் மேலே சொன்ன பதிவர் யாருன்னு கரெக்ட்டா சொல்லுங்க பார்க்கலாம்!

இரங்கல் செய்தி ஒண்ணு!

எனக்குப் பிடித்த நடிகர் பூவிலங்கு முரளி இறந்துவிட்டாராம். பல லட்சக்கண்க்கான ரசிக ரசிகர்கள் இவருடைய திடீர் மறைவால் அழாத குறைதான். இவருக்கு வயது 47 தானாம். குடிப் பழக்கம் உண்டுனு சொல்றாங்க! ஆமா இப்போலாம் யாரு குடிக்கிறதில்ல? கார்டியாக் அரெஸ்ட் னு சொல்றாங்க. இதயம் சம்மந்தமான வியாதிகளை எவ்வளவோ ஒழிச்சிட்டோம். இருந்தும், பணப்பற்றாக்குறை இல்லாத ஒரு நடிகர் இதயக் கோளாரால் சாகிறார்னா, என்னனு புரியலை.

பதிவுலகில் பெண்கள்!! ஆண்கள் கவனம்!

நான் பதிவுலகில் பெண்களை கவனமா இருக்கச் சொல்லல! காலங்காலமாக பெண்கள் கவனமாயிருக்கிறேன் இருக்கிறேன்னு எந்தக் கருத்தையும் சொல்லாமல் போயிடுவாங்க! பேசட்டும்! கருத்தை சொல்லட்டும், கதை கவிதை எழுதட்டும், அரசியல் பேசட்டும் விவாதிக்கட்டும்! ஆனால், இன்று, மனம்திறக்கும் பெண் பதிவர்களிடம் ஆண் பதிவர்கள் கவனமாயிருக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது! அவங்க சொல்ற கருத்துப் பிடிக்காமல் பின்னூட்டத்தில் திட்டமுடியலைனு புனைவெழுதி திட்டி வம்புல மாட்டிக்காதீங்க!

சமீபத்தில் பதிவுலகில் பெண்கள் தன் பிரச்சினைகளை முன்வைக்க வந்து விட்டார்கள்! சமூகப் பிரச்சினையை அல்ல! பதிவுலகில் தனக்கு வரும் பிரச்சினைகளை! வினவு குழுவினர், பெண்களுக்காக இந்தத் தொண்டை இப்பொழுது மும்முறமாக செய்கிறார்கள்! இன்னும் யார் யார் தலை உருளப்போகுதோ தெரியலை!

உங்களுக்கு ஒரு பெண்பதிவரைப் பிடிக்கலை, அவர் கருத்தைப் பிடிக்கலைனு ஏதாவது புனைவெழுதுறேன்னு எழுதி, புனைவுதானே யார் கேக்கமுடியும்னு தாறுமாறா சாடி, வம்புல மாட்டி, அப்புறம் வினவு வந்து உங்க பேரை நாறடிச்சு பஞ்சாயத்து வச்சு, உங்க பரிதாப நிலைமையை பார்த்து உங்க குடும்பத்தினர் உங்க புனைவைப் படிச்சு, "உங்களுக்கு எதுக்கு இதெல்லாம்?" னு உங்க குடும்பத்துக்குள்ளே பிரச்சினை யாகப்போகிற பரிதாப நிலைமைக்கு ஆளாகப்போறீங்க!

இன்றைய சூழ்நிலையில் பெண் பதிவர்களையும் அவர்கள் கருத்துக்களையும் மதித்தே ஆகனும் நீங்க! எனக்கும் சேர்த்துத்தான் சொல்லுறேன். You just have to respect them even if you find their thoughts are unacceptable! பிடிக்கலைனா ஒதுங்கிப் போயிடுறது நல்லது! எதையாவது தனிநபர் தாக்குதல் போல புனைவா எழுதுவதால் கடைசியில் நீங்களே உங்க தலையில் மண் அள்ளிப் போட்ட கதைதான் ஆகும், ஆகிக்கிட்டு இருக்கு.

பொதுவாக தெரிந்தோ தெரியாமலோ நம்ம கலாச்சார ஆண்கள் எல்லாம் தன் தாய், தன் சகோதரி போன்ற உறவுகளை மட்டும் தெய்வம் போல் மதிப்பது மற்றபடி ஊர் உலகத்தில் உள்ள பெண்களை, வேற ஒரு லெவெல் ல வச்சிருப்பது ஒரு கசப்பான உண்மை. இது காலங்காலமாகவே நம்ம ஊர் ஆண்களுக்கு தப்பாவே தோனாது. ஏன்னா அது போலலொரு கலாச்சாரத்தில் நாம் பிறந்து வளர்ந்து ஊறிவிட்டோம்!

ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டியது! இது 21ம் நூற்றாண்டு! காலங்காலமாக ஆண்களால் அடக்கி வைக்கப் பட்ட பெண்கள், "ஓவெர் ரீயக்ட்" செய்யும் காலம்! அவங்க சொல்றதெல்லாம் சரினு இல்லை! ஆனால் அவர்கள் பிரச்சினைகளை முன்வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆணோ பெண்ணோ, அதிகமாப் பேச ஆரம்பித்தாலே ஏதாவது தவறுதலா வருவது இயற்கைதான். பெண் பதிவர்களை ஊக்குவிக்கனும்னு பொது நோக்குள்ள பதிவர்கள் நிறைந்த இந்தக் காலத்தில் பதிவுலகில் ஆண் பதிவர்கள் உங்க மரியாதையை காப்பாத்தனும்னா பேசாமல் பிடிக்காத பெண் பதிவர்களை "இக்னோர்" பண்ணிவிடுவ்வது நல்லது! பழி வாங்குறேன்னு ஏதாவது புனைவு அது இதுனு (புனைவுதானே, கற்பனைனு கதைவிடலாம்னு நெனச்சு) எழுதினால் கடைசியில் நீங்க நல்லவரா இருந்தாலும் உங்களுக்குத்தான் கெட்ட பேருதான் வந்து நிக்கும்!

அதனால் என்ன? நான் முந்திக்கு இப்போ பிரபலமாயிட்டேனேனு நினைத்தால், உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! பெண் பதிவர்களிடம் ஆண் பதிவர்கள் கவனமாக இருக்கலைனா உங்க மானம் கப்பலேறிடும் என்பதைத்தான் இப்போது கண்கூடாகப் பார்க்கிறோம்! இல்லை இல்லை "நான் இண்னொசண்ட்"னு நீங்க புலம்புறது கேக்குது! I dont think anybody is going to buy your story! Whether you win or lose, you are the LOSER for sure!

Friday, September 3, 2010

படித்ததில் பிடிக்காதது- மரப்பசு விமர்சனம்!




11 வருடங்களுக்கு முன்னால "திண்ணை"ல அம்பைனு ஒருவர் ஜானிகிராமனின் மரப்பசு பற்றி இந்த சிந்தனைகளை அள்ளிக் கொட்டியுள்ளார்! கீழே இவைகளுடைய இணைப்பு களுடன் அவர் விமர்சனத்தைக் கொடுத்துள்ளேன். இதை எதுக்குத் தருகிறேன்னா, இதுபோல் நான் இந்தக்கதையை சிந்தித்ததே இல்லை!

--------------------------------------

பகுதி ஒன்று இணைப்புக்கு இங்கே க்ளிக் செய்யவும்



பசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்

அம்பை

மரத்துப்போன பசு, மரத்தால் ஆன பசு, என்று பால் வற்றிப் போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள் படும்படி பெண்ணை உவமித்து கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை பெண்பாலை பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு, பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் கட்டப்பட்ட பாதை.

இந்த பாதை இந்த நாவலில் எப்படி எல்லாம் புகுந்து புறப்படுகிறது, இதன் அடித்தளம் என்ன என்று தெரிந்து கொண்டால்தான் இத்தலைப்பையும், அதன் விளக்கத்தையும், இந்த நாவலிலையும் நாம் புரிந்துகொண்டு விவாதிக்க முடியும்.

பெண்ணின் பால்தன்மை பற்றி ஆணித்தரமாகக் கூறக்கூடியவர்கள் ஆண்கள்தான் என்ற நிலைமை ஆரம்பகாலத்திலிருந்தே இருக்கிறது.

அரசன் நகர்வலம் வரும்போது எந்தெந்த வயதுப் பெண்கள் எப்படி எப்படி மோகித்தார்கள், காமுற்றார்கள், பிச்சியானார்கள் என்று உலாக்கள் எழுதியிருப்பது ஆண்கள்தான்.

அது மட்டுமல்ல பெண்ணாக மாறி ஆண்கடவுள்கள் மேல் மோகமும், காதலும், பக்தியும் கொள்ளுமளவு பெண்ணின் பால்தன்மை சுலபமாக யூகித்து எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது.

பெண் ஆண் பக்தராக மாறி எந்தப் பெண் கடவுளையும் மோகித்ததாகச் சரித்திரம் இல்லை. அதனால் பெண்ணின் பால்தன்மை, அவள் தேடல் இது பற்றி தன்மை நிலையில் எழுத ஒரு ஆண் எழுத்தாளருக்குச் சரித்திரத்தின் பின்புலன் இருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் பெண்ணின் பால்தன்மையை விளக்கி, விளக்கத்தினுள் அதைக் குறுக்கிய ஆண் முயற்சிகளின் பின்னே பெண்ணின் பால்தன்மையின் வீச்சு பற்றியும், அது அடையக் கூடிய 'விபரீத எல்லைகள் ' பற்றிய ஒரு பயம் இருந்தது என்கலாம்.

இது ஒரு நிரந்தர சரித்திர பயமாக இருந்து வந்திருக்கிறது. 'புகையிலை விரிச்சா போச்சு, பொம்பளை சிரிச்சா போச்சு ' போன்ற சாதாரணமான பழமொழியிலிருந்து வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறும் பெண்களுக்கான தண்டனைகள் பற்றிய மாதர் ஹிதோபதேசங்கள் வரை இந்த பயத்தின் பிரதிபலிப்பைக் காணலாம். இந்த பயத்தை உள்ளடக்கிய நாவல்தான் மரப்பசு.

தன்மை நிலையில், ஒரு பெண் தன்னைப் பற்றி நினைத்துக் சொல்வது போல அமைந்திருந்தாலும், இந்த நாவல் ஒரு பெண்ணின் குரலாக்கிச் சொல்வது ஆணின் பயங்களைக் குறித்து; பெண்ணின் பால்தன்மை பற்றிய அஞ்ஞானத்தையும், குறுகிய நோக்கையும், ஆண் என்ற நிலையிலிருந்து எழும் அப்பட்டமான ஆயத்தங்களையும், கோணல்களையும் குறித்து.

எதிர்மறை உணர்வுகளின் மேல் நிறுத்தப்பட்ட பெண்ணின் பால்தன்மை பற்றிய இந்த பாரபட்சமான விவரிப்புகள் மேனி நிறத்தில் தொடங்கி, மைதுனம் வரை எட்டி, பின்னர் அவள் வாழ்க்கையின் அர்த்தம், அவள் தேடல், அவள் வியாபிக்கும் இடம், அவள் பேணும் மொழி எல்லாவற்றின் மேலும் வலை போலப் படர்ந்து கொள்கிறது. ஹிந்து பத்திரிக்கையில், படித்த பையனுக்கு சிவப்பான அழகான பெண் கேட்டு வரும் திருமண விளம்பரங்களின் நிறம் பற்றிய பாரபட்ச நோக்கு மரப்பசுவின் ஆரம்பப் பக்கங்களிலேயே வந்து விடுகிறது.

அம்மணமாக நிற்கும் பெண் பைத்தியம். கறுப்பு. 'கறுப்பு அம்மணத்துக்கே இத்தனை ஈர்ப்பு என்றால்... ' (ப. 12) என்று கறுப்பு நிறத்துக்கே ஒரு சொட்டை சொல்லியாகி விடுகிறது. பிறகு கடைசி பக்கங்களில் மரகதம் வருகிறாள். கண்ணை பறிக்கும் கறுப்புடன். கோபாலி சொல்கிறார் பச்சையப்பனிடம் - அவள் மாத்திரம் இந்த நிறத்தில் இல்லாவிட்டால் பார்ப்பவர்கள் கொத்திக் கொண்டு போயிவிடுவார்கள் என்று( ப 247). மரகதம் அழகுதான். மலைக்க வைக்கும் அழகு. ஆனால் கறுப்பு. கறுப்பு சிவப்பு பேதங்களிலும் ஆண்-பெண் பாகுபாடு உண்டு. ஆண் கறுப்பு என்றால் அவன் கறுப்பண்ணசாமி (மலர் மஞ்சம் ப. 205). இதை இகழ்ச்சியாக ஒரு சிவப்பான பிராம்மணப் பையன் சொன்னாலும், திடமான, வலிய உடல் படைத்த அந்தக் கதாபாத்திரத்தின் ஆண்மை அழகுக்கு மெருகூட்டும் விஷயமாகிப் போகிறது அந்தக் கறுப்பு. பிறகு நெஞ்சில் காம உணர்வைக் கிளறும் தேவி சொரூபமாகப் பெண் பாத்திரங்களை படைப்பவர்கள் கூட, 'கறுப்பு ஆனால் அழகு ' என்ற வர்ணனைக்குப் புறம்பானவர்கள் அல்ல. இத்தகைய வர்ணனைகளை வழக்கமாகப் படித்துப் படித்து அதை ஒரு அழகுக்கான அளவுக் கோலாக கொண்டுவிட்டதனால் இதை நாம் ஒதுக்குவதற்கில்லை. காரணம் இந்த மொழி ஒரு பெண்ணிடமிருந்து பிறப்பதாக இருக்கிறது.

அதுவும் அவளிடம் குழந்தையிலிருந்தே- இயற்கையான மொழி போல.. இருப்பதுபோல் காட்டப்படும் மொழி, சிவப்பு மேல் அதீத விருப்பம் உள்ள குழந்தை. கண்டு சாஸ்திரிகளின் மஞ்சள் ஓடிய வெள்ளை நிறத்தால் கவரப்படும் குழந்தை அவள் வெள்ளை வெளேர் உடம்புக்கு ஏற்பு இல்லாத உள்ளங்கால் அழுக்கைத் துடைக்க விரையும் பெண் குழந்தை.

அம்மணி மரகதத்தை பார்ப்பதும் ஒரு ஆணின் கண்ணோட்டத்துடன் தான். ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அழகைக் கண்டு வியப்பதும் அதை ரசிப்பதும் சகஜமான ஒன்றுதான். அது சாதாரணமாக நடை பெறுவதுதான். பார்க்கப் போனால் உடலிலிருந்தும், அதன் மேல் சுமத்தியுள்ள ஆணாதிக்க மதிப்பீடுகளிலிலிருந்தும் விடுபட உடலையே ஒரு பிரதி போல் பாவித்து மறு வாசிப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மறுவாசிப்பின் மைய முயற்சியாக இருப்பது வாழ்க்கை, தன் தடங்களை பதித்துள்ள பெண் உடலை அதன் மேல் ஏற்றியுள்ள அர்த்தங்களின் சுமைகளை அகற்றிப் பார்ப்பதுதான். அழகு - அழகின்மை, கறுப்பு - சிவப்பு, இளமை - முதுமை போன்ற மதிப்பீடுகளிலிலிருந்தும் நீங்கி உலக வாழ்வில் ஆழ்த்தப்பட்டிருக்கும் உடலை நேரிடையாக தைரியமாக கோணல்கள் இல்லாமல் பார்ப்பது. அம்மணி மரகதத்தைப் பார்ப்பது இப்படி இல்லை. ஒரு ஆணை கிறங்க வைக்கும் அழகு, அவனை காமமுற வைக்கும் அழகு என்றுதான் பார்க்கிறாள். அது மட்டுமில்லை, அவள் கணவன் அவளை அனுபவிக்க தகுதி யுடையவன்தானா, அவர்கள் எப்படி கூடி முயங்குவார்கள் என்றெல்லாம் அவள் சிந்தனை போகிறது.

இந்த ஆண் நோக்கு மிகும் போது- கிட்டத்தட்ட அவள் மரகதத்தை உடலால் அடைய நினைக்கிறாளா என்று ஐயம் பிறக்கும் போது - அதற்கு சால்ஜாப்பு, சப்பைக்கட்டு எல்லாம் தேவைப்படுகிறது; தனக்கு ஓரினச் சேர்க்கையில் விருப்பமில்லை என்று அவள் தெரிவு படுத்த வேண்டியிருக்கிறது (ப. 245).

எது மீறல், எதற்காக மீறல் என்பதில் தி.ஜாவுக்கு நிறையக் குழப்பங்கள் உள்ளன. இந்தக் குழப்பங்களை எல்லாம் பூசிக் கொண்டு வளைய வருகிறாள் அம்மணி. ஒன்று வீட்டில் உழழும் பத்தினி, அல்லது தாசி என்ற அப்பட்டமான இரு எதிர்நிலைகளில்தான் அவரால் பெண்னைப் பார்க்க முடிகிறது. அதனால்தான் கோபாலி அம்மணியிடம் 'நீ பிராமண தாசியாகிவிடு ' என்கிறார். இதிலுள்ள முதல் சறுக்கல் தேவதாசிகளைப் பற்றியது,. முதலாவது இது தேவதாசிகளை ஒரே முகம் கொண்டவர்களாகக் காண்கிறது. தேவதாசிகள் பலதரப்பட்டவர்கள். பல வகைகளில் இயங்கியவர்கள். தேவதாசிகள் எல்லோருமே கலைஞர்கள் அல்லர். கலைகளுக்குரிய ஞானமும், சிரத்தையும் உள்ளவர்கள் மட்டுமே கலைஞர்கள் ஆனார்கள். மற்றவர்கள் கோயில் பூசைகளில் மட்டும் பங்கு கொண்டனர். உறவுகளைப் பொறுத்தவரை சிலர் ஒரே ஆணின் வைப்பாட்டியாக இருந்தனர். சிலர் கை மாறினார்கள்; சிலர் வெவ்வேறு பல ஆண்களுடன் ஓர் இரவுக்கு மட்டுமேயான உறவுகளை மேற்கொண்டனர். உறவுகளைத் தேர்ந்தெடுப்பதிலோ, முறிப்பதிலோ ஒரு வயதுவரை எந்தத் தேவதாசிக்கும் சுதந்திரம் இருக்கவில்லை. ஒரு பேராசைக்கார அம்மாவோ, உறவுக் கூட்டமோ அதிகப் பணத்தைக் காட்டும் நபரிடம் ஒரு தேவதாசியைப் பிணைக்கலாம்.

உயர்ந்த கலைஞர்களாக இருந்த தேவதாசிகள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இத்தகைய உறவுகளை முறித்துக் கொண்டு,கலையில் பூரணமாக ஈடுபட்டார்கள். ஆகவே காமத்தையும், காமம் சார்ந்த உறவுகளையும் விலக்க ஒரு தேவதாசிக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சுதந்திரம் இருந்தது. தேவதாசி என்பவள் உடலுறவில் ஈடுபடுபவள் என்ற நிலையில் இருந்து கொண்டே அதை விலக்கும் சுதந்திரத்தையும் அவள் பெறுகிறாள். ஒரு தேவதாசியும் பல வயதுகளைக் கடக்கிறாள். இப்படிப் பாராமல், எல்லாத் தேவதாசிகளையும் வேசிகளாகப் பார்த்ததால்தான், தேவதாசிகளை உறவுக்காரர்களின் கைப்பொம்மையாகாமல் தடுக்கும் உயரிய நோக்கத்துடன் பிறந்த தேவதாசித் தடைச்சட்டம், அவர்கள் கலை முகங்களையும் அழித்துவிட்டது, களையை அறுக்கும் அரிவாள் பயிரையும் வெட்டியதுபோல. இது சரித்திரம். நுண்ணுணர்வு உள்ளவர்கள் மறக்கக்கூடாத சரித்திரம். இந்த சரித்திரத்தில் எல்லாம் தி.ஜாவுக்குச் சிரத்தை இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் தாசி என்பவள் வைப்பாட்டியாக இருக்கும் 'சுதந்திரம் ' உள்ளவள். அம்மணியின் மீறல் உணர்வுகளுக்கு ஒரு பெயர் கொடுத்தாக வேண்டி இருக்கிறது. அதாவது ஒருத்திக்கு ஒருவன் என்ற நியதியை மீற நினைத்தால் தாசியாவதைத் தவிர வேறு வழியில்லை. வைப்பாட்டியாகும் தாசி.

- இந்த கட்டுரையின் கடைசிப் பகுதி அடுத்த வாரம் திண்ணையில்

(தி ஜானகிராமனின் நாவலான 'மரப்பசு ' வை படித்தவர்கள், இந்த கட்டுரை பற்றியும் பொதுவாக மரப்பசு பற்றியுமான தங்கள் கருத்துக்களை திண்ணைக்கு தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம். அடுத்த வாரம் இந்தக் கட்டுரையின் இறுதிப்பகுதி வெளியாகும்போது, அந்த கடிதங்களும் பிரசுரிக்கப்படும்) -திண்ணை, டிஸம்பர் 12, 1999

மரப்பசு பற்றி அம்பை

(இரண்டாம் பகுதி)

பகுதி ரெண்டு க்கு இங்கே க்ளிக் செய்யவும்

இரண்டாவது சறுக்கல் மீறல்/சுதந்திரம் என்ற கோட்பாடு பற்றியது. திருமணம் எனும் பந்தத்தில் இருக்க விரும்பவில்லை அம்மணி. தான் புணர வேண்டும் என்று அவள் நினைக்கிறாள். ஒரு ஆவேசப் புணர்ச்சி. இப்படி நினைக்கும் முதல் பெண் இல்லை அம்மணி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 'ஆயிரம் யோனிகள் உடையவள் நான் ' என்று தன் உடலின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டு, உருவக ரீதியில் உலகைப் புணர்ந்து திகம்பரியாக வளையவந்தவள் அக்கமகாதேவி என்னும் சிவபக்தை. நவீன உலகில் இந்த உடலின் பந்தங்கள் வேறு வகையில் முறிக்கப்படுவது ஏற்க வேண்டியதே. இழுத்துக் கட்டப்பட்ட ஒன்று விடுபடும்போது நிலை கொள்ள அவகாசம் எடுப்பது போல.

உடலால் ஒடுக்கப்பட்டவர்கள், உடலுக்கு இடப்பட்ட எல்லைகளை உடைக்க உடலையே பயன்படுத்துவது பீறிடலின் ஆரம்பக்கட்டம்தான். விடுபடும் குதிரை பாய்ந்து ஓடிப் பின்னர் சாவதானமாக நடப்பது போல இதுவும் ஒரு கட்டம்தான். இலக்கு அது அல்ல. இந்தக் கட்டத்திலிருந்து உடல் வெகு எளிதாக வெளிப்பட்டுவிடுகிறது. ஒரு ஆண், பெண் உடலுக்கு அலைவது போன்றது இல்லை இது. இது தேடலின் ஒரு கட்டம். உடம்பையும், தன்னையும், உலகையும், விண்ணையும், வானையும் புரிந்து கொள்ளும் ஒரு கட்டம். இப்படி எல்லாம் இதைப் பார்க்க தி.ஜாவுக்கு முடியவில்லை. காரணம் இவர் எல்லாவற்றையும் ஏற்கெனவே உள்ள கச்சிதமான அமைப்புகளுக்குள் போட விரும்புகிறார். மனைவி அல்லாத மற்ற பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஆண் கோபாலி போன்ற கலைஞன். கணவனே வேண்டாம் என்னும் பெண் பரத்தையாகத் தான் இருக்கமுடிபும் தி.ஜாவைப் பொறுத்தவரை. அவலை வைப்பாட்டியாக வைத்துக் 'கெளரதை ' யைத் தருவது ஆண்தான். இப்படிப்பட்ட சுதந்திரத்தைத் தான் அம்மணிக்கு அளிக்கிறார் தி.ஜா. இதில் என்ன சுதந்திரத்தை அம்மணி காண்கிறாள் என்று தெரியவில்லை. இளம் விதவையான தன் மகளை மொட்டையடிக்கும் கண்டு சாஸ்திரிகளை வெறுக்கும் அவள்பதினைந்து வயதில் தன் பெண்ணைத் திருமணம் திருமணம் செய்து தந்துவிட்ட, ஒரு ஆணைப் பொறுத்தவரை சமூகம் அங்கீகரிக்கும் உறவுகளில் தப்பாமல் ஈடுபடும் கோப்பாலியை, எப்படி தன்னை ஆதரிப்பவராக ஏற்க முடியும் ? கோபாலி ஏற்பாடு செய்த வீட்டில், அவர் ஆதரவில் வாழ்வது எந்த வகையில் அம்மணியைச் சுதந்திரப்படுத்தியது என்று புரியவில்லை. கோபாலி அவளை உடலளவில் திருப்தி செய்கிறாரா என்று கூடத் தெளிவாகப் புரியவில்லை. அம்மணியைச் சுருதி கூட்டி விட்டு மீட்டாத ஆசாமியாக இருக்கிறார் அவர். (ப. 105) எல்லோரிடமும் அவளைத் தன் பெண் போல என்று கூறிக்கொண்டு, இரவில் அவளிடம் உறவை விழையும் நபராகவும் இருக்கிறார். இந்த நிலை அம்மணியின் தேடலின் தரத்தை வெகுவாகக் குறைக்கிறது. எந்த உள்நோக்கமும் இல்லாமல், உறவுகளை மேற்கொள்ளும் சுதந்தரியாக இல்லாமல், ஒருவனைப் பயன்படுத்துபவளாக அவளைக் காட்டுகிறது. இது இத்தகைய தேடலையே இழிவு படுத்தி, இத்தகைய பெண்களை குழப்பம் நிறைந்தவர்களாகக் காட்டுகிறது. இதைவிட வாகான பெண் 'சுதந்திரம் ' - ஆண்களுக்கு வாகானது - கற்பனை செய்யமுடியுமா என்ன ? ஆண்கள் அலைந்தால் அவர்கள் இசை மும்மூர்த்திகளைப் பூசை செய்யும், ஆத்மாவைத் தொடும்படி பாடும் கோபாலி போன்ற பாடகர்களாக இருக்கலாம். ஜொலிக்கும் உடலும், முகமும் உள்ள அருணகிரி நாதர், பட்டிணத்தடிகளாகலாம். ஆனால் பெண் பெறுவது தண்டனைதான். அந்த மோகத்தால் சிவந்து, மேடிட்ட கன்னங்களும், வெளுத்த கூந்தலும், ஒரு ஆணின் ஆதரவு தேவை என நினைக்கும் அம்மணியாகும் தண்டனை. அவளுக்கு முற்றிலும் எதிரான மரகதம் அவள் ஆதர்சமாகிப் போகிறாள்.

இதில் முதுமை பற்றியும் சில சிக்கல்கள் உள்ளன. நாவலின் ஆரம்பத்தில் அம்மணிக்கு, கோபாலியுடன் உறவை மேற்கொள்ளும்போது இருபது வயது. கோபாலிக்கு நாற்பத்தேழு வயது. இருபத்தேழு வய்து வித்தியாசம். நாவலின் முடிவில் கோபாலிக்கு அறுபத்தோரு வயது. அம்மணிக்கு முப்பத்து நாலு இருக்கவேண்டும். ஆனால் தி.ஜா முப்பத்தெட்டாக்கி, கிழவியும் ஆக்கிவிடுகிறார். திஜாவுக்கு கணக்கு தெரியாது என்றில்லை. முப்பதை ஒரு பெண் தாண்டியபிறகு, முப்பத்து நாலானால் என்ன, முப்பத்தெட்டானால் என்ன என்ற எண்ணம்தான். முப்பதைத் தாண்டிய பெண்கள் தமிழ்க் கதைகளில் 'முதுமை 'யை எட்டுவது எந்தப் புதுமையும் இல்லை. பல நாடுகளுக்குச் சென்று பயணக் கட்டுரை எழுதும் எழுத்தாளர் அவர்களை 'ஊசிப் போன பண்டம் ' என்றே கூறியிருக்கிறார். கடைசியில் அம்மணிக்கு ஞானம் பிறப்பது இந்த 'முதுமை ' வந்து தாக்கும்போதுதான். உடனே அவளுக்குப் பட்டாபியின் உடமையாகவேண்டும், அவன் அவள் உடமையாகவேண்டும் என்று தோன்றிவிடுகிறது. இதுதான் தி.ஜா. அம்மணிக்கு அளிக்கும் ஞானம். அவள் வாழ்க்கையின் குழப்பங்களுடன் கூடிய தேடல், அவள் மீறல் எல்லாவற்றையுமே இல்லாமல் செய்துவிடும் இறுதித் தண்டனை. புணர்ச்சியில் பெண் மேலேயும், ஆண் கீழேயும் இருந்த நிலை மாறியதால்தான் பெண்ணின் நிலை இழிபட்டது என்று வாதிடும் ஒரு பெண் மூப்பையும், நரைத்தலையும் கற்பனையே செய்யாததுபோல கலங்குகிறாள். முடிவில் அவளிடம் எந்தக் கேள்விக்கும் பதிலில்லை. 'பட்டாபியைக் கேட்டுச் சொல்கிறேன் ' என்பதுதான் அவள் முடிவாகச் சொல்வது. 'ஏதோ குதித்தாயே ? பறந்தாயே ? வீழ்த்தினேன் பார்த்தாயா உன்னை ? ' என்ற ஒரு ஆணின் கொக்கரிப்பு என் காதில் ஒலித்தது முடிவில்.

இவை எல்லாம் நாவலில் உள்ள பாதைகள். மரப்பசு என்ற தலைப்பு இந்த பாதைகள் இட்டுச் செல்லும் இலக்கு. சரி பசுவைப் பற்றி பார்ப்போம். பசு பால்தரும் என்பதுதான் ஒரு குழந்தை முதலில் கற்பது. பால் தராத பசுவைப் பற்றி நினைக்கமுடிவதில்லை. பால் தரும் பசு நல்ல பசு. பால் தராத பசு கெட்ட பசு. தன் ரத்தத்தை பாலாக்கி தருவது பசு. வேதங்களில் அகிலம் ஒரு பசு. அது நல்ல பாலையும் கெட்ட பாலையும் தருகிறது. பால் தராத பசு இயற்கையை மீறுவதாகவே கருதப் படுகிறது. விஷ்ணு புராணத்தில் அகிலப் பசு ஒரு முறை பால் தர மறுக்கிறது. தாக்கப்பட்ட பிறகுதான் அது பாலைத் தருகிறது. காமதேனுப் பசு பாலைப் பொழியும் தாயாகவே காணப்படுகிறது. பாலைத் தருபவள் நல்ல தாய். பாலை உடம்பிலிருந்து வெளியேற்றாமல் இருப்பவள் கெட்ட தாய்.

பூதனை கிருஷ்ணனுக்கு முலையில் விஷத்துடன் பாலூட்ட வருகிறாள். கிருஷ்ணன் அவளை அழிக்கிறான். ஆனால் அவள் செல்வது சொர்க்கத்துக்கு. பாலூட்டும் கெட்ட பெண்களுக்குக் கூட மோட்சம் உண்டு. ஆனால் ஏற்கெனவே முடியாதவர்கள் தாயல்லாதவர்கள். அம்மணி தாயாக மறுக்கிறாள். இதற்குத் தான் அவளுக்குத் தண்டனை. தாயாவது இயற்கை; பெண்ணுக்கு இயற்கையாகவே உள்ள விழைவு என்று கூறும் உலகில் அவள் தாய்மையை மறுக்கிறாள். தாயாவது இயற்கை மட்டுமல்ல, ஒரு பெண்ணின் பால்தன்மையே தாய்மையை மையமாக்கியதுதான் என்று பொதுவாகக் கருதப்படும்போது, இன்கு பசுவின் மடிப்பால், பெண்ணின் முலைப்பால் இரண்டுமே, வெறும் பாலாக மட்டுமல்லாமல் கருப்பை வளப்பத்துக்கும், காம உணர்வுக்கும் குறியீடாகிறது. பெண்ணின் பால்தன்மை அவள் உடலில் இரு அங்கங்களிலும் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவள் யோனியிலும்,முலைகளிலும். பசுவின் மடியும், அதிலிருந்து பொழியும் பாலும் இவ்வாறே இரு தன்மை உடையதாய், ஆண்குறிக்கு ஈடான பெண்குறியாய் கருதப்படுவதை நாம் பல புராணக் கதைகளிலும் காணலாம். ஸ்கந்த புராணத்தில் ஒரு பசு லிங்கத்தின் மேல் தன் மடிப்பாலைப் பொழிகிறது. ஒரு அரசன் பசுவை அம்பால் கொல்ல வருகிறான். பசு அவனைத் தாக்கிக் கொல்கிறது. ஆனால் இந்தக் களேபரத்தில் லிங்கத்தைத் தன் காலால் உதைத்து உருக்குலைத்து விடுகிறது பசு. வெண்மை நிறத்தில், உருகின மெழுகுவர்த்தி போல ஆகிவிடுகிறது லிங்கம். லிங்கத்துக்குக் கோபமே வரவில்லை. பசு தன்னைத் தொட்டது குழந்தை முத்தம் போல அதற்கு இனிக்கிறது. இதே கதையின் இன்னொரு வடிவில், சிவன் லிங்கத்தினின்றும் தோன்றி , பசுவின் கொம்பாலும், குளம்பாலும் ஏற்பட்ட வடுக்களை உமையின் முலைகளும், வளையல்களும் ஏற்படுத்திய காயங்களை ஏற்றுக் கொண்ட அதே ஆனந்தத்துடன் நான் ஏற்கிறேன் என்கிறார். இதில் பால்பாலாக மட்டும் இல்லாமல் பால் தன்மையாகவே கொள்ளப்படுகிறது. பசுவையும் பெண்ணையும் இணைக்க இப்படிப் பல பக்திப் புராணக் கதைக் குறியீடுகள் உண்டு. பெண் உடலின் 'இயற்கை ' என்று கருதப்படும் இத்தகைய பால்தன்மையை மீறும் பெண்கள் நம் பழங்கதைகளில் ஆண் முனிவர்களைப் போல உடலைத் தாண்டாமல், உடலையே துறக்க வேண்டியிருக்கிறது. அதற்குப் பல அற்புதங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வையார் இளமை உடலைத் துறந்து முதுமையை மேற்கொள்கிறார். காரைக்கால் அம்மையாரோ உடலின் சதை, தோல், திரவங்கள் எல்லாவற்றையும் துறந்து எலும்புக் கூடாகி விடுகிறார்.

அம்மணி பசுவைப் பற்றி கற்பனை செய்கிறாள். இவ்வளவு தெளிவான, பசுவின் பாலையும் அவள் பால்தன்மையையும் இணைக்கும்படியான நேரடி உவமையுடன் கூடிய, விவரமான கற்பனை வருவதற்கான எந்தச் சாத்தியக் கூறுகளும் அவள் கதாபாத்திரத்தில் இல்லை. அதனால்தான் ப்ரூஸ் என்ற ஆணின் கண்ணோட்டத்தில் அதைக் காண வேண்டியிருக்கிறது. தெளிவில்லாவிட்டாலும் தன் சுய உணர்வுடன் உறவுகளில் ஈடுபட்ட அவள் எவ்வாறு தன்னைப் பசுவுடன் உவமித்துக் கொள்ள முடியும் ? பசுவின் பால் வற்றியதும் அது விலக்கப்படுவதைப் போல, அவள் பால்தன்மையின் ஒரு கட்டம் தாண்டியதும் அவளும் தெருவோரத்தில் கிடப்பாள் என்று அவள் எப்படி நினைக்க முடியும் ? அப்படியானால் இந்த உறவுகளில் அவள் ஒன்றுமே அடையவில்லையா என்ன ? மற்றவர்களுக்காகவே தன் பால்தன்மையை அவள் வெளிப்படுத்தினாள் என்றால், இந்த அதீத 'தியாகத்துக்கு ' அவளைத் தூண்டியது எது ? அதனால்தான் ப்ரூஸ் கற்பனையின் மூலாதாரமாக வருகிறான். தி.ஜா அம்மணியின் பாத்திரத்தை அணுகும் விதத்தில், இப்படிப் பட்ட கற்பனை/கனவு வருவதைத் தவிர வேறு வழியில்லை. பெண்ணைப் பற்றியும் பசுவைப் பற்றியுமான இந்தப் பிம்பம் உள் மனதில் கலாச்சாரத் தாக்கமாய் புதைந்து கிடக்கிறது. பாலைப் போல வழங்கப்படும் ஒன்றுதான் பெண்ணின் பால்தன்மை. ஒரு பெண்ணின் தேடலை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் இப்படித்தான் பார்க்க முடியும். வாழ்க்கையில் முப்பது வயதைத் தாண்டியவுடன் அம்மணி தன் பால்தன்மையை பசுவின் பாலுக்கு ஈடாக்குகிறாள். பசு பால் தருவது போல இவளும் பால் தன்மையை வெளிப்படுத்தியதாக - தந்ததாக - நினைக்கிறாள். திடாரென சுயதேடல், உலகை அறியும் விளைவு, பிணைப்புகள் இல்லாத உறவுகளை நாடுவது எல்லாமே, எந்தப் பலனையும் எதிர்பாராமல் பால் தரும் பசுவின் தியாகமாகி விடுகிறது. தான் உபயோகப்படுத்தாத ஒன்றாக அவள் நினைக்கிறாள். அதுவும் தெருவில், யாரும் சீந்தாத ஒரு மிருகமாய்.

அவள் பால்தன்மையின் ஒரு அங்கம்தான் காமம். முதுமை அதன் வேகத்தைக் குறைத்தால் அவள் நிலை குலைய வேண்டியதில்லை. சாவு பயத்தால் பீடிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் அவ்வளவுதான் அம்மணி. உடம்பை மட்டுமே ஒட்டியது அவள் தேடல். உடம்பு மாறியதும் அத்தனையும் சரிகிறது. அவள் இருவகையில் சபிக்கப்பட்டவள். முதலாவது, பசு பால் தருவது போல் அவள் தன் பால்தன்மையை காட்டும் தாராளத்துக்கு ஒரு சாபம். இரண்டாவது தன் உடலின் நிஜமான பாலை - முலைப்பாலை - அவள் எந்தக் குழந்தைக்கும் ஊட்டாததற்கான சாபம்.

வெறும் மரப்பசுவாக - மரத்தால் ஆன பசுவாக - இருந்திருந்தால் தான் இப்படிச் சீந்துவாரின்றி இருக்கவேண்டாமே என்று நினைக்கிறது தெருவில் செத்த பசு. செத்தபிறகு ஏது நினைவு ? சரி. அது அப்படி நினைப்பதாக அம்மணி நினைக்கிறாள். அது மட்டுமில்லை. தானும் மரத்தால் ஆன பசுவாக இருந்தால் காலத்தின் எந்த தொடலும் இன்றி மேசை மேல் வைக்கும் அலங்காரப் பொருளாக இருந்திருக்கலாமே என்று நினைக்கிறாள். கடைசியில் ஒரு ஜடப் பொருளாகவா இத்தனை ஓட்டம் ?

மகிஷனைக் கொல்ல முக்கடவுள்களும் தங்கள் மூவரின் சக்தியையும் ஒன்று திரட்டி, அதன் வடிவாய்க் காளியை உருவாக்குகிறார்கள். மகிஷனிடன் காளி, தான் பெண் உருவில் இருந்தாலும் தான் பெண் அல்ல என்கிறாள். எல்லா வகை அநீதியையும் குலைக்க வரும் காளி போலக் கிளம்பும் அம்மணியும் கோபாலி, பட்டாபி, புரூஸ் என்ற மூவரால் உருவாக்கப்படுபவள்தான். ஆனால் அவள் எந்த சம்ஹாரத்தையும் செய்யாமல் விட்டுவிடுகிறாள்.

பெண்ணின் தேடல், அவள் உடல், உலகம், வாழ்க்கை இவற்றிலிருந்து எழும் கேள்விகளின் உருவமான மகிஷன் அவளால் சம்ஹாரம் செய்யப்படாமல் நிற்கிறான். தெருவில், செத்து நாறிக்கிடக்கும் பசுவாக தன்னை பார்த்துக் கொள்பவளாகத்தான் அம்மணியை உருவாக்க முடிகிறது தி.ஜாவால். இதையெல்லாம் மீறி, ஒரு ஜீவனுள்ள பெண் பாத்திரத்தை கற்பனை செய்யவும், படைக்கவும் நமக்குத் தேவைப்படுவது பெண் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளும் முதலடியாய், காலம் காலமாக நம்முள் ஊறிக் கிடப்பவற்றைத் துறக்கும் செருக்கின்மை. அதை ஒட்டி வரும் அடக்கம்.


Thinnai 1999 December 3



------------------------------------

My comments on ambai's review!

* I hated reading "her" review/criticism on this novel and about this writer.

* ஜானகிராமன், ஒரு மாதிரியான பேர்வழி, ஆண் ஆதிக்கவாதி என்கிற குருட்டுப்பார்வையிலேயே இவர் சிந்தனைகள் எல்லாம் இருக்கு.

* ஏதோ பெண்களை கேவலப்படுத்தவே இந்தக்கதையை எழுதியது போல பலவிதமான குற்றச்சாட்டுக்களை அள்ளி எறிகிறார்!

* There are so many interesting information and interesting stuff are hidden in the novel as usual. Unfortunately, this "ammbai" is not smart enough to get this as she is concentrating on misinterpreting every damn thing as she seems to have all kinds of complexes and low self-esteem!

* TJR has insulted men more than women as far as I can see. கோபாலி மாதிரி ஒரு கேவலமான ஆண் இருக்கமுடியுமா? மனைவியிடம் இருந்து "ஊர் உலகத்துக்கு மகள்" என்று சொல்லிக்கொள்ளும் இளம் பெண்ணுக்குத்தாவுகிறான். அதன் பிறகு வேலைக்காரி மரகதம் மேல். ஆண்கள் இழிபிறவிகள், வயதாக ஆக "பர்வேர்ட்" ஆகிக்கொண்டே போகிறார்கள் என்று இதைவிட சொல்லனுமா என்ன? மேலும் அம்மணி, கோபாலியை விட பலமடங்குகள் உயர்ந்தவள் எனப்தை அம்பையின் "க்ளோஸ்ட் மைண்ட்" பார்க்க முடியவில்லை.

* ஒரு ஆண் பெண்னைப்பற்றி தான் புரிந்துகொண்டதைத்தான் எழுதமுடியும். அதைத்தான் ஜானகிராமன் செய்கிறார். அவருடைய அந்தப்பார்வை சரி என்று அவர் எங்கே சொல்கிறார்? பெண்களை புரிந்துகொள்ள முடியாத புதிராகவேதான் எப்போதுமே அவர் காட்டியுள்ளார். என் பார்வையில் ஜானகிராமன் என்றுமே பெண்களைப் பார்த்து, பெண் உணர்வுகளை புரிந்துகொள்ளமுடியாமல், பெண்களின் பலம் பற்றி பயப்படும் ஒரு சாதாரண ஆணாக்த்தான் எனக்குத் தெரிகிறார்.

*தன்னுடைய பிற்காலம் எப்படியிருக்கும் என்று அம்மணி மரப்பசுவைப் பார்த்து தன் உடலழகு காலப்போக்கில் அழிந்துவிடும் என்பதைத்தான் உணருவதாக காட்டுகிறார். அதை இந்த அம்பையார் இஷ்டத்துக்கு விமர்சிப்பது பரிதாப்பத்துக்குரியது.

Thursday, September 2, 2010

"மரப்பசு" சுத்தமாப் பிடிக்கலை-கடலை கார்னர்-61

"கொஞ்சம் இரும்மா வர்றேன், யாரோ கதவை தட்டுறா!"

***************

"வாங்க கண்ணன்!"

"யாரோட பேசிட்டு இருக்க, பிருந்த்?"

"வேற யாரு? எங்கம்மாதான்!"

"சரி பேசு. நான் நீ பேசுற அழகைப் பார்த்து ரசிக்கிறேன்"

"உங்களைமாதிரி உலகத்திலே யாருமே ஐஸ் வைக்க முடியாது."

"நெஜம்மாவே நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க பிருந்த்"

"தேங்க்ஸ்"

**********************

"யாருடி அது?"

"என் ஃப்ரெண்டுதான்."

"ஃப்ரண்ட்னா? யாருடி அது?"

"கண்ணன் னு சொல்லுவேன் இல்லை? அவர்தான்.."

"யாரு? உன்ன அந்த மரப்பசு கதைப்புத்தக்கம் படிக்கச் சொன்னவரா?"

"அவரேதான். நான் ஃபோனை அவர்ட்ட கொடுக்கிறேன். "ஏன் என் மகளை இது மாதிரி கதையெல்லாம் படிக்கச் சொல்ற"னு நாலு கொடுக்கிறயா?"

"அதெல்லாம் வேணாம்டி"

"பயப்படாதே! அவர் ரொம்ப அப்பாவி. நீ திட்டினாலும் எனக்காக வாங்கிக்குவாரு"

"ஏய், நீ ஃபோனை என்ட்டகொடு, பிருந்த்! நான் ஆண்ட்டிக்கு ஹாய் சொல்றேன்"

"கண்ணன் ஏதோ சொல்லனுமாம். அவர்ட்ட பேசும்மா"

"இந்தாங்க, ஃபோன்."

"ஹலோ ஆண்ட்டி! நான் கண்ணன், உங்க பொண்ணோட ஃப்ரெண்ட்"

"ஹல்லோ"

"எப்படி இருக்கீங்க, ஆண்ட்டி?"

"நல்லாயிருக்கேன்..நீங்க நன்னாயிருக்கேளா?"

"ஆண்ட்டி! உங்க மகளுக்கு மரப்பசு புத்தகம் படிக்கச்சொல்லி ரெக்கமெண்ட் பண்ணின பாவி நாந்தான்! திட்டுறதுனா இப்போவே நேரடியா திட்டலாம்."

"இல்லை, ஏன் இதுமாதிரி கதையெல்லாம் அவளை படிக்க சொல்றீங்க?"

"பிருந்தா இப்போ பச்சை குழந்தை இல்ல ஆண்ட்டி. பெரிய பொம்னாட்டியா ஆயிட்டா. அவளுக்கு ஒரு கதையில் உள்ள கருத்தில் எதை எடுத்துக்கனும் எதை விடனும்னு தெரியும்."

"எனக்கு மரப்பசு சுத்தமாப் பிடிக்கலை. அதுவும் அந்த அம்மணி இருக்காளே, அவளை சுத்தமாப் பிடிக்கலை! என்ன பொண்ணு அவ!"

"ஏன் ஆண்ட்டி உங்களுக்கு கோபாலியைத்தான் ரொம்பப் பிடிக்குமா?"

"அச்சச்சோ! யாருக்காவது அந்த கெழத்தைப் பிடிக்குமா?"

"ஆண்ட்டி! கதை எப்படிப் போனாலும் முடிவு நல்லாத்தானே இருந்தது?"

"முடிவு பரவாயில்லைதான்."

" சரி, உங்க மகளோட பேசுங்க. வெர்ரி நைஸ் டாக்கிங் டு யு ஆண்ட்டி."

"சேம் ஹியர்!"

"இந்தா பிருந்த், ஃபோன்!"

************************************

"என்னடி உன்ன இப்படி கூப்பிடுறாரு?"

"என்ன சொன்னாரு?"

"உன்ன பிருந்த் னு சொல்றாரு."

"ஆமா, அவர் அப்படித்தான் கூப்பிடுவாரு. ஏன் உனக்குப் பிடிக்கலையா?"

"அது இல்லடி."

"வேற என்ன?"

"என்னவோ ரொம்ப உரிமையாப் பேசுற மாதிரி இருக்கு."

"க்ளோஸ் ஃப்ரெண்டுனு சொன்னேன் இல்ல? சரி நான் அவருக்கு காஃபி போட்டுக்கொடுக்கனும்மா. அடுத்த வாரம் பேசுறேன். சரியா?"

"கொஞ்ச நேரம்கூட உன்னோட பேசலை."

"நான் அப்புறம் கூப்பிடுறேன். சரியா?"

"சரிடி, பிருந்தா."

"பை ம்மா"

*********************************

"ஏய்! என்ன அதுக்குள்ள உங்கம்மாட்ட பேசி முடிச்சுட்ட?"

"உங்களை கவனிக்க வேண்டாமா? அதான்."

"உங்கம்மா என்னை திட்டுறது கேக்குது"

"திட்டிட்டுப் போகட்டும் விடுங்க. சரி, எனக்கு ஒரு கிஸ் கொடுங்க!"

"காஃபி போட்டுத் தரப்போறதா சொன்ன?"

"ஆமா. அது அப்புறம்தான்"

"இங்கே வாடா!"

"வந்துட்டேன்"

Kannan gently kissed her in her cheek holding her really tight.

"அவ்ளோதானா?"

"கிஸ்தானே கேட்ட?"

"கன்னத்திலேயா கேட்டேன்?"

"வேறெங்கே வேணும்?"

"என்ன கேட்டாலும் கெடைக்குமா? பெட்ரூம் போகலாமா?"

"ஆர் யு நாட் ஹாவிங் யுவர் பீரியேட்ஸ் நவ்?"

"ஆமா, அதான் ரொம்ப மூடாயிருக்கு."

"உனக்கு கேரம் விளையாடத் தெரியுமா?"

"நல்லா வெளையாடுவேனே.."

"ரியல்லி! நீ என்னை பீட் பண்ண முடியாது!"

"பார்க்கலாம்!"

"நான் ஒரு போர்ட் வாங்கி வந்திருக்கேன். விளையாடுவோமா?"

"எங்கேயிருக்கு?"

"என் கார்ல இருக்கு. உனக்குத்தான்."

"பொய்"

"நெஜம்மாத்தான். இரு எடுத்து வர்றேன்."

"நான் காஃபி போடுறேன்."

-தொடரும்