Tuesday, February 28, 2012

பதிவர் வால் பையனுக்கு ஒரு ஆலோசனை!

அறிவுரை என்பது பெரிய வார்த்தை. எனக்குத் தெரிய யாருக்குமே பிடிக்காது. பொதுவாக அறிவுரை சொல்ல தகுதி யாருக்கும் இருக்கானு எனக்குத் தெரியலை. ஆனால் சும்மா ஒரு ஆலோசனை செய்யலாம், நலம் விரும்பியாக இருந்தால்.

இவருடைய சமீபத்து பதிவிலிருந்தும், ஏற்கனவே எழுதிய பல பதிவுகளிலிருந்தும் சாருனா வால் பையனுக்கு சுத்தமாகப் பிடிக்காதுனு தெரியுது. இதே மாதிரி ஏகப்பட்ட பேரு இருக்கோம். சமீபத்தில் இணையதள கருத்துச் சுதந்திரம் கிடைத்தவுடன் பலருடைய படைப்பையும் ஏன் அவர்களையும் பலவாறு விமர்சிக்கிறோம். பொய் சொல்றவங்களைப் பார்த்து எரிச்சலடைந்து, சமூகத்தை கெடுப்பவர்களைப் பார்த்து கோபமடைந்து, நம் உணர்வுகளை அள்ளிக்கொட்டுறோம். இது நம்முடைய பேச்சுரிமை, எழுத்துரிமை, எழுத்துச் சுதந்திரம்னு ஜஸ்டிஃபை பண்ணலாம். அதில் சந்தேகமே இல்லை!

ஆனால், பேச்சுரிமை, எழுத்துரிமைக்கும் ஒரு வரம்பு இருக்குனு நான் நம்புறேன். ஒருவரை பார்த்தால் அவரை கண்ட இடத்தில் அடிப்பேன் என்று சொல்வது நிச்சயம் பேச்சுச் சுதந்திரத்தில் அடங்காதுனு நான் நினைக்றேன்.

நேரில் பார்த்தால் சாரு என்னிடம் அடி வாங்குவது உறுதி என ரமேஷ்வைத்யாவிடம் சொன்னது எனது பழைய பதிவில் இருக்கும் அதை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்!

இப்பொழுது நான் சென்னையில் தான் இருக்கிறேன், மே மாதம் வரை சென்னையில் இருந்தே ஆகவேண்டிய காட்டாய வேலைப்பணி, அதற்குள் சாரு அடி வாங்கினால் நண்பர்களுக்கு ட்ரீட் நம்ம செலவில், பத்து வட்டிக்கு கடன் வாங்கியாவது!

நான் சட்டம் படிக்கவில்லை! அதனால் சட்டத்தை இங்கே கோடிட்டுக் காட்ட இயலாது. ஒருவரை வெறுக்க நமக்கு நிச்சயம் உரிமை இருக்கு. அவர்களை, அவங்க படைப்புகளை வெறுக்கலாம். அவங்களப் பார்த்தால் அடிக்கனும் உதைக்கனும் என்ற எண்ணங்கள் மனதில் இருக்கலாம், தன் நண்பர்களிடம் கொட்டித் தீர்த்துக்கலாம்தான். ஆனால் அதையே உங்கள் தளத்தில் உலகத்துக்குத் தெரியும்படி எழுதுவது, நீங்க வம்பை விலைக்கு வாங்குவது போல. நாளைக்கு நீங்கள் சம்மந்தமேப் படாமல ஏதாவது "மேற்படியாருக்கு" அசம்பாவாதம் நடக்கலாம், அப்படி எதுவும் நடந்துவிட்டால், நீங்கள் எழுதிய ஸ்டேட்மெண்ட் உங்க வாழ்க்கையையே சீரழிக்க வாய்ப்பிருக்கு. நீங்க உண்மையிலேயே அப்படி செய்து அதுக்காக சட்ட ரீதியாக எதிர்கொள்ளுவது என்பது வேற விசயம். ஆனால் நீங்க செய்யாமல், யாரோ செஞ்சதுக்கு பலியாவது எப்படி நியாயமாகும்? ஒண்ணு ஞாபகம் வச்சுக்கோங்க, நீங்க தனி ஆள் இல்லை. உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கு. அதனால் நண்பர் வால் பையனுக்கு என்னுடைய தாழ்மையான ஆலோசனை என்னனா, இப்படி எல்லாம் நீங்க எழுதக்கூடாது சார் என்பதே. முடிந்தால் அதை அகற்றிவிடுங்கள். நீங்க இதை அகற்றுவதால் உங்க ப்ரெஸ்டிஜ் நிச்சயம் இறங்கிவிடாது. நமக்குப் பிடிக்குதோ இல்லையோ சட்டம்தான் நமக்கு எல்லாம் மேல். அதை மதிப்பதில், அதன்படி நடப்பதில், சரி செய்துகொள்வதில் எந்த அவமானமும் இல்லை.

வால் பையன் இந்தப் பதிவைப் பார்த்தாலும், படிச்சுப்புட்டு, இவனுக்கு வேலை வெட்டியில்லைனு நெனச்சுக்கிட்டு, அவரு எழுதியதை எல்லாம் எடுக்கப் போவதில்லைனுதான் என் உள் மனதில் தோனுது. இருந்தாலும் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஒரு வரம்பு, எல்லை இருக்கு என்பதை வால் பையன் மூலமாக உலகுக்குச் சொல்ல அவர் பதிவு உதவியதால் அவருக்கு ஒரு பெரிய நன்றி! வணக்கம்! :)

Thursday, February 23, 2012

இந்தியர்களை காட்டுமிராண்டிகளாகக் காட்டும் என்கவுண்டர்!

எந்த ஒரு குற்றசாட்டப்பட்டவனையும், சட்டத்தின் முன்னால் நிறுத்தி, நீதி மன்றத்தில் அவரை குற்றவாளி என்று முடிவு செய்த பிறகு, அன்னாருக்கு மரண தண்டனை வழங்குவதுதான் இந்த நவநாகரிக உலகத்தில் சரியான செயல். அதை விட்டுப்புட்டு, இவன் குற்றவாளினு உலகத்துக்கே தெரியும், அவனை கண்ட இடத்தில் போட்டுத்தள்ளலாம்னு இருக்கிற இந்த "என்கவுண்டர்" என்னும் "இழிவான ஒரு செயல்" இந்தியாவை ஒரு காட்டுப்பய நாடாக உலகிற்கு காட்டும் ஒரு விசயம் என்பதை எல்லோரும் அறிவீர்களா?

யாரு இதை கண்டுபிடித்தது? எதுக்காக இதை இன்னும் இந்தியாவில் செயல் படுத்திக்கிட்டு இருக்காங்கனு எனக்கு விளங்கவே இல்லை. ஒரு அமெரிக்க நண்பரிடம் இதைப் பத்தி சொல்லும்போது, "இந்தியா இவ்வளவு மோசமான காட்டுமிராண்டி நாடா?" னு நேரிடையாகவே என்னிடம் கேட்டார்.

"குற்றவாளி" (குற்றம் சாட்டப்பட்டவர்) க்கும் "ரைட்ஸ்" இருக்கு. சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு குற்றவாளி"னு ஊர்ஜிதம் செய்தவுடந்தான் யாரையுமே தண்டிக்கனும் என்று நமக்குத் தெரிந்ததை இன்னொருமுறை எடுத்துச் சொன்னார்.

என்கவுண்டர் என்பது தவறான ஒண்ணு. அதை இந்தியா அகற்றுவதுதான் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் உலகளவில் கொஞ்சமாவது மரியாதை பெறச்செய்யும் முயற்சி!

Wednesday, February 22, 2012

பிரபல பொறம்போக்குகளுக்கு சில கேள்விகள்!

நான் இங்கே "பிரபல" பதிவர்கள் பத்தி எழுதலை, அதனால நீங்க பிரபலப்பதிவர்னு நீங்களே நெனச்சுக்கிட்டு இருந்தாலும், இல்லை உலகம் உங்களை அப்படி நினைத்தாலும், இல்லை அதுதான் உண்மை என்றாலும், நீங்க தவறாக புரிஞ்சுக்கிடாதீங்க. நான் பிரபலங்கள் பத்தி எழுதுறேன்! உங்களைப் பத்தி இல்லைங்க! அதாவது பிரபல நடிகர்கள், நடிகைகள், எழுத்தாளர்கள், விமர்சர்கள் இப்படி வகையறாக்களைப் பத்தி.

மதிப்பிற்குரிய பிரபலங்களே!!!

நீங்க ஒரு பெரிய எழுத்தாளர், இல்லை பிரபல நடிகர், இல்லை பிரபல விமர்சகர்தான் உங்களுக்குனு ஒரு தரம் தகுதி எல்லாம் இருக்கு, உண்மைதான். முக்கியமாக உங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்க என்பதால் நீங்க பிரபலம்னு நாங்களும் முழுமனதாகவோ இல்லை அரைமனதாகவோ ஒத்துக்கிறோம்!

நமக்குக்கிடைத்திருக்கிற பதிவுலக சுதந்திரத்தால் இன்றைய பதிவுலகில் யாரு வேணா யாரை வேணா எப்படி வேணா விமர்சிக்கலாம் என்கிற நிலை வந்துயிருக்கு. அதனால் உங்களைப் பத்தி தவறான ஒரு செய்தியை தகுதியே இல்லாத ஒரு வம்புப் பதிவர் எழுதுறதெல்லாம் இந்தக் காலத்தில் ரொம்ப சகஜம்தான். ஆனால் அந்தப் பதிவில் உள்ள உண்மை மற்றும் பொய்கள் எதுவென்று உங்களுக்கு மட்டும்தான் தெரியும்.

சப்போஸ், அப்படி ஒரு பதிவர் உங்களைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் எழுதுறாருனு வச்சுக்குவோம். அதோட அந்தப் பதிவர் "அனானி"களை அந்தத்தளத்தில் கருத்துச் சொல்ல விடுவதில்லை! உங்க நண்பரோ, மனைவியோ, இல்லை உங்களைப் பிடிக்காதவரோ அந்தப் பதிவை படிச்சுப்புட்டு, வந்து உங்ககிட்ட சொல்லிப்புடுறாக. நீங்கதான் பெரிய ஆளாச்சே. இப்படி பொய்த் தகவல் கொடுத்ததால் ஏற்படும் அவதூறை நெனச்சு ரொம்பக் கோவப்படுறீங்க. கோபத்தில் அந்தத் தளத்துக்கு வந்துடுறீங்க. இந்த ஒரு சூழ்நிலையில் நீங்க "எதிர் கருத்து" சொல்லத் துடிக்கிறீங்க. இப்போ நீங்க, நீங்களாவே "இதெல்லாம் தவறான செய்திப்பூ!" னு எடுத்துச் சொல்லலாம். அப்படிச் சொல்ல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. உங்க உரிமை மதிக்கப்படும், நிச்சயம் பறிக்கப்படாது! பொதுவா ஞாநி அதுபோல் செய்றதுமாரித் தெரியுது.

உங்களைப்பற்றி அவதூறு எழுதிய வலைதளத்துக்கு நீங்க வர்றீங்க! உங்க உண்மையான பெயரை, அதாவது, கமல்ஹாசன், ரஜினிகாந்து, விஜய்யி, ஜெயமோகன், சாரு நிவேதிதா, ஞாநி, எஸ் ராமகிருஷ்ணனு உங்களை நீங்க அந்த வலைதளத்தில் காட்டாமல், ஒரு குப்பன், சுப்பன் இல்லைனா ஏதோ ஒரு பொறம்போக்குப் பேரை வச்சுக்கிட்டு இன்னொரு "ஐடெண்ட்டிட்டி" ல வர்ரீக . வந்து விவாதிக்கிறீங்க, சண்டையே போடுறீங்க!

இப்போ, நீங்க சொல்ற கருத்தில் 100% உண்மைதான் இருக்கு. ஆனால், தங்களை நீங்கள் யாருனு அடையாளம் காட்டிக்கவில்லை! நீங்க உள்ளே களத்தில் இறங்கி அடித்துச் சொல்றீங்க, அப்படி எல்லாம் நடக்கவில்லை னு. இந்த இடத்தில் நீங்க எவ்ளோ பெரிய ஆளாயிருந்தாலும், ஒரு சாதாரண பொறம்போக்கு ஐ டில வருவதால் உங்க கருத்துக்கு மதிப்புக் கொடுக்கப்படுவதில்லை. அப்புறம் நீங்க உள்ளே இறங்கி விசயத்தை விளக்கும்போது உங்களை நீங்களே கொஞ்சம் அடையாளம் காட்டிப்புடுறீங்க. இதெப்படி இந்தாளுக்கு "மேற்படியாருடைய" தனிப்பட்ட பிரச்சினையெல்லாம் இவ்ளோ விலாவரியாத் தெரியுது? னு யோசிக்க வைக்குமளவுக்கு. இவரு உண்மையிலேயே பொறம்போக்கு சுப்பன் தானா? இல்லை சும்மா பொறம்போக்கு வேடம் தரித்து வந்த "இன்னாரா"?னு சந்தேகம் வந்து புடுது. கவலைப் படாதீங்க! வெறும், சந்தேகம்தான், அதை வச்சு ஒண்ணும் பண்ண முடியாதுதான். ஆனால் உங்களுக்கு மனசாட்சி மனசாட்சினு ஒண்ணு இல்லையா? என்ன?? சரி, ஒவ்வொருவருடைய மனசாட்சியும் வேற வேறமாரி செய்லபடலாமா? அது சரிதான்.

எனிவே, "பொறம்போக்கு" ஐ டி ல வர்ர, "பிரபலம்" உங்களுக்கு சில கேள்விகள்!

* இணையதளம் தவிர, சாதாரண உலகில் இதை நீங்க செய்றது கொஞ்சம் என்ன ரொம்பவே கஷ்டம். இணையதளத்தில் மட்டும்தான் இப்படி இன்னொருவர்போல வந்து உங்களுக்காக நீங்களே வாதாட முடியும். இல்லையா?

* நீங்க செய்ற இந்தக் காரியம் உங்க மனசாட்சிக்கு சரினு தோனுதா? இது ஒரு கீழ்த்தரமான செயல் இல்லையா?

* இது மாதிரி செய்வது பெரிய மனுஷனுக்கு (பிரபலங்களுக்கு) அழகா? அப்புறம் உங்களுக்கு முதுகெலும்பு இல்லைனு நான் சொல்லலாமா?

ஏன் இந்தக் கேள்விகள்? எதுக்கு இந்த வெட்டிப் பேச்சு??

ஒரு சில பிரபலங்கள் இணையதள பதிவுலகில் மாறுவேடத்தில் திரிவதாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் கெடச்சி இருக்கு. இந்த பிரபலங்கள் தாங்கள் தாக்கப் படும்போது சுப்பனாகவோ, சொக்கனாகவே வந்து இஷ்டத்துக்கு வார்த்தை ஜாலங்களை அள்ளிவிடுவதாக நம்பப்படுகிறது. ஒருவேளை இந்தப் பதிவையும் அந்த மாதிரிப் பொறம்போக்கு பிரபலம் வாசிக்கலாம். அவங்களுக்குத்தான் இந்த மெசேஜ்! அப்படி இன்னொருவர்போல வந்து தனக்காக விவாதம் செய்றது எல்லாம் ரொம்பக் கீழ்த்தரமான செயல்னு பொறம்போக்குப் பிரபலங்ககிட்ட சொல்லிப்புடனும்னுதான் இந்த கேள்விகள், பதில்கள், இந்தப் பதிவு எல்லாமே!

Tuesday, February 21, 2012

சாரு நிவேதிதா என்னும் போதைப் பொருள்!

சாரு நிவேதிதா பற்றி பதிவுகள் எழுதுவது எப்படினா..என்ன சொல்றது? சாருவைப் பத்தி க்ரிடிசைஸ் பண்ணுறது இல்லைனாஅவர வச்சு "காமெடி" பண்ணுறதெல்லாம் யாரு வேணா ரொம்ப எளிதாச்செய்யலாம். சமீபத்துல அது ஒரு மாதிரியான "போரான" "சப்ஜெக்ட்டா" ஆயிப்போச்சுனுகூடச் சொல்லலாம்.

உண்மையைச் சொல்லப்போனா சாரு, ஒரு போதைப் பொருள் மாதிரி. இவரைப் பத்தி எழுத வேணாம்னு விட்டுத் தொலைச்சாலும் மறுபடியும் ஒரு நாள் எதையாவது எழுத வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிடுவார். பொதுவாக இவரைப் பத்தி திட்ட ஆரம்பிச்சா "இவரைப் பத்தி தெரியாதாக்கும்?" "புதுசா ஏதாவது சொல்லுங்கப்பா!" னு ஆளாளுக்கு அலுத்துக்கிறதைத்தான் பார்க்கலாம்

என்னதான் ஏகப்பட்ட குறைபாடுகள் இருந்தாலும் சாருவைப் பாராட்ட வேண்டிய சில விசயங்கள் உண்டு. அதைப் பார்க்கலாம் இங்கே!

நான் பார்த்தவரைக்கும் ஒரு எழுத்தாளனா இருந்துக்கிட்டு சாரு என்னைக்குமே தன் அகந்தையை அநாகரிகமாக வெளியே காட்டுவதில்லை. மற்றவனை கடுமையாக விமர்சிப்பது வேற, தாந்தான் பெரிய இவன்னு எழுதுவது வேற. இது ரெண்டுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை நீங்க ஒழுங்காப் புரிஞ்சுக்கனும்!

அப்புறம் தன்னைவிட வயதில் சின்னப் பசங்களோட கூடிக் கும்மாளம் போடுறது, தண்ணியடிக்கிறது, வெட்டிப் பேச்சு பேசுறது இதெல்லாம் நிச்சயம் இவருக்கு ப்ள்ஸ் பாயிண்ட்ஸா ஆகிறது இன்றைய சமுதாயத்தில்.

தன் வலைதளத்தில் "அடியேன்" என்று இவரு தன்னைப் பத்தி சொல்வது ரொம்ப "எளிமையாக" தன்னைப்பத்தி சொல்வதுபோல இருக்கு. வர வர "அடியேன்" என்கிற வார்த்தை "சாரு"க்கு மறுபெயர்னு சொல்ற அளவுக்கு ஆகிப்போயிடும் போலயிருக்கு. :-)

அப்புறம் எப்பப்பார்த்தாலும் எதையாவது தன் பிரச்சினையை எழுதி (எவனுக்குப் பிரச்சினை இல்லை?) இவன் என்னை இப்படி செஞ்சுபுட்டான், இவன் எனக்கு துரோகம் பண்ணிப்புட்டான், அப்படி இப்படினு எதையாவது புலம்புவது, தமிழன் எழுத்தாளனை மதிக்கிறதே இல்லைனு ஒரு ஒப்பாரி வைப்பது. இதுபோல் தன்னை வெளிவுலகுக்கு ஒரு "பரிதாபப்பட்ட ஜென்மம்" போல் இவரு காட்டிக்கொள்வதால் இவரை இஷ்டத்துக்கு ஆளாளுக்கு நியாயமாகத் திட்டும் போதுகூட இவர் மேலே ஒரு பரிதாபம் உருவாகுது னுகூட சொல்லலாம்.

போதாக்குறைக்கு இவர் மேலேதான் ஏகப்பட்ட ("பொய்")குற்றச்சாட்டுகள்..

* கதைத் திருட்டு குற்றச்சாட்டு.

* நித்தியானந்தா சம்மந்தப்பட்ட "கமர்சியல்" கட்டுரைகள் எழுதியது. அப்புறம் அதை வைரஸ் வந்து தின்னுட்டதால அதெல்லாம் காணாமல்ப் போனது.

* யாரோ ஒரு கொஞ்ச வயதுப் பொண்ணோட அநாகரிகமாக "சாட்" (அந்தப் பெண் விரும்பாத வகையில்) செய்ததாகக் குற்றச்சாட்டு.

இப்படி ஏகப்பட்டது..

ஆனால், சாரு இன்னும் கற்றுக்க வேண்டியதுனு சொன்னா, நிச்சயம் இதைச் சொல்லியே ஆகனும்! "இவருக்கு எப்படி நட்பு பாராட்டுறதுனு சுத்தமாத் தெரியலை"னு சொல்லலாம். கூடத் திரிய நாலு ஜால்ராப் பசங்க எப்போவுமே இருக்கத்தான் செய்வானுக, அதெல்லாம் உறுப்படியான நட்பாகுமா? நான் சொல்ல வர்றது "உண்மையான நண்பர்கள்"! பாராட்டும்போது பாராட்டி, தப்பு செய்யும்போது, "ஏன்யா உன் பேரைக் கெடுக்கிற, லூசு?" னு உரிமையுடன் கண்டித்து சொல்றவர்கள்.

நான் பார்த்தவரைக்கும் சாரு நல்ல நண்பர்களை இழந்துகொண்டே வருகிறதுபோல தோனுது. இப்படியே போச்சுனா.. நெனைக்கவே சங்கடமாயிருக்கு.

Wednesday, February 15, 2012

சாதியை ஒழிப்பது மனித இயற்கைக்குப் புறம்பானது?!

நம்ம டோண்டு ஐயாதான் இப்படி ஒரு காமெடியான வரியை எழுதியிருக்காரு. வழக்கம்போல ஜாதிக்கு வக்காலத்து வாங்காமல் வாங்கி, அது நம்ம கலாச்சாரத்துடன் கலந்துவிட்டது, அதனால அதை ஒழிப்பது என்பது இப்போதைக்கு நடக்கிற காரியம் இல்லைனு அவரு எப்போவும் சொல்றதை இப்போவும் சொல்ல வரும்போது, "ஜாதியை ஒழிக்க நினைப்பது மனித இயற்கைக்கு புறம்பானது" னு சொல்லியிருக்காரு.

ஆமா, ஜாதிக்கும் மனித இயற்கைக்கும் என்ன சம்மந்தம்னு தெரியலை எனக்கு.

ஏற்ற தாழ்வு, மனித இயற்கை!

அழகு, அழகின்மை, மனித இயற்கை!

அறிவாளி, புத்தியில்லாதவன் மனித இயற்கை!

வீரம், கோழைத்தனம், மனித இயற்கை!

இதெல்லாம் மனித இயற்கை, சரிதான். ஆனால் இந்தியாவில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட சாதி என்னும் ஒருவகையான பிரிவினை மனித இயற்கைனு சொல்றது சுத்தமான அபத்தம் இல்லையா? ஜாதி அடிப்படையில் ஒருவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது எப்படி மனித இயற்கையாகும்?!

அவர் பதிவுக்கு ஆங்கிலத்தில் பின்னூட்டம் ஒண்ணு எழுதிப் போட்டுட்டுத்தான் வந்தேன். நிச்சயம் அது வெளியே வரும். இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதியதால், அவ்ளோ திருப்தியில்லை! இப்போ அதன் தமிழாக்கம் இங்கே!

சாதியை ஒழிப்பது, அதாவது ஜாதிங்கிறத சொல்லிக்கிட்டு திரிகிறவங்க இல்லாமல்ப் போவது என்பது நம் வாழ்நாளில் நடக்கப் போற விசயம் இல்லை என்பதை முதலில் ஏற்றுக்கொள்வோம்.

ஆனால் ஜாதியை முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பதால் அதுக்குக் காரணம் மனித இயற்கைக்கு புறம்பானது என்பதெல்லாம் சுத்தமான அபத்தம்.

கவனித்துப் பார்த்தால் சாதி மட்டுமல்ல, உலகில் நெறைய விசயங்களை முழுமையாக நம்மால் ஒழிக்க முடியவில்லைதான்.

* கேன்சர், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற வியாதிகளையும்தான் அடியோட ஒழிப்பதென்பது இப்போதைக்கு முடியாது. அதனால அதை ஒழிக்க நாம போராட முயற்சி செய்யாமலா இருக்கோம்? அவைகளை ஓரளவுக்கு கட்டுப் படுத்துவதால் எத்தனையோ பேர் இன்னைக்கு உயிரோட இருக்காங்க இல்லையா? இதுபோல் வியாதிகள் வரத்தான் செய்யும், வந்துட்டுப் போகுது, அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகுது, வந்தால் அதை ஒழிக்க வழி கண்டுபிடிப்பது என்பதெல்லாம் இயற்கைக்கு புறம்பானதுனு பேசாமல் எல்லோரும் சாவோமா? காலரா, பெரியம்மை போன்ற வியாதிகளை எல்லாம் நம்ம அரவே ஒழிக்கவில்லையா? அதனால் இன்னைக்கு மனிதன் இனம் அதிக நாட்கள் வாழ வில்லையா? நன்மையடையவில்லையா??

* பொறாமை, அறியாமை, தாந்தான் பெரிய இவன் என்கிற அகம்பாவம் போன்ற மனித இயல்புகள் எல்லாமே இயற்கையானதுதான். அதனால் அதுபோல் சின்னப்புத்திகளை தவறு என்று சுட்டிக்காட்டி, அதை ஒழித்தால்தான் மனித இனம் மேலும் உயரும் என்றும் காலங்காலமாக நம் முன்னோர்கள் படிச்சு, நாமும் படிச்சு, இளையவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதில்லையா? ஏன் அப்படி செய்றோம்?அது இயற்கையான உணர்வுகள் என்பதால் அதுக்கு எதிரா நாம் செயல்படுவது தப்பு, இயற்கைக்குப் புறம்பானதுனு எல்லாம் சொல்லிக்கிட்டு நாம் அதுபோல் உணர்வுகளை கண்டுக்காமல் விட்டுவிட்டு நம்ம பாட்டுக்கு வாழ்ந்திருந்தோமேயானால் இன்னைக்கும் மனிதன் காட்டுமிராண்டியாகத்தான் வாழ்ந்துகொண்டு இருப்பான்.

அதனால ஒண்ணை முழுமையாக ஒழிக்க முடியாது என்ற நிலையிருந்தாலும், அதை ஓரளவுக்கு ஒழிக்க, அதனால் விளையும் கொடுமைகளை கட்டுப்படுத்த முயல்வதே இன்னைக்கு நாம் நம் எதிர்கால சந்ததிகளுக்கு செய்ய வேண்டிய நம் கடமை! நம்மால் முழுமையாக ஒழிக்க முடியாது என்பதால் "எல்லாம் பகவான் செயல்" "இயற்கைக்கு புறம்பானது" என்று பேசுவதெல்லாம் அபத்தம், அறியாமை!

Tuesday, February 14, 2012

காதலர் தினமும் ஒரு படமும்!

காதலர் தினம் சமயத்தில் இந்தப் படம் வெளிவந்துள்ளது, The Vow!. காதலர்கள் பார்க்க வேண்டிய படம். வெகுவிரைவில் இதை தமிழ்ல யாராவது ஒரு "ஜீனியஸ்" காப்பியடிச்சு வெளியிட வாய்ப்புள்ளது.

கதை.. ரெண்டு பேரு சந்திக்கிறாங்க, பிடிச்சுப் போயிடுது காதலிச்சு கல்யாணம் செய்துகொள்றாங்க. அவன் ஒரு ரெக்கார்ட் ஸ்டுடியோ வச்சு நடத்திக்கிட்டு இருக்கான். அவள் ஒரு ஆர்ட்டிஸ்ட். ஒரு சின்ன ஸ்டுடியோ வைத்து அவள் தொழில் செஞ்சுக்கிட்டு இருக்கா. ரெண்டு பேரும் பெரிய அளவில் சம்பாரிக்காவிட்டாலும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்துகொண்டு இருக்காங்க.

அப்போ ஒரு "ஸ்னோ டே" அன்று, அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து போகிற காரை பின்னாலலிருந்து ஒரு "ஸ்னோ ரிமோவ் பண்ணுற ட்ரக்" வந்து அடிச்சுப்புடுது. பெரிய விபத்து. ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு..
அவளுக்கு மூளையில் அடிபட்டு எப்படியோ பிழைத்துவிடுகிறாள். அவனுக்கு அப்படி எதுவும் பெரிய காயம் இல்லை.

இப்போ அவ 'கோமா"ல இருந்து வெளிவந்தவுடன், அவளுக்கு தன் கணவனையே யாருனு தெரியலை. அவனை சந்திச்சது, கல்யாணம் செய்தது எதுவுமே ஞாபகம் இல்லை அவளுக்கு. அவன், அவளிடம் தாந்தான் அவள் கணவன்னு சொல்ல வேண்டிய பரிதாப நிலை. தாந்தான் அவள் கணவன்னு "கன்வின்ஸ்"ப் பண்ண அதற்கான ஆதாரங்கள் ஃபோட்டோ வீடியோ எல்லாம் மனைவியிடமே காட்ட வேண்டிய கட்டாயம். இவ்வளவு சொன்ன, விளக்கிய பிறகும், அவளுக்கு அவன் ஒரு "ஸ்ட்ரேஞ்சர" போலவே உணர்வு. அவளால அவனை ஏற்றுக்க முடியாத சூழல்.

இதில் வேடிக்கை என்னனா, திடீர்னு அவளோட அம்மா, பணக்கார அப்பா, தங்கை எல்லோரும் அவளைப் பார்க்க, கவனிக்க வந்திடுறாங்க. அவங்கள அவளுக்கு ஞாபகம் இருக்கும். அவள், அவ கணவனை சந்திக்கும்போது அம்மா அப்பா விடம் இருந்து பிரிந்து வந்து தனியாக வாழ்ந்து கொண்டுயிருப்பாள். ஏதோ பிரச்சினையால் வீட்டிலிருந்து வெளியே வந்திருப்பாள். அவளுக்கு அது என்னனு ஞாபகம் இருக்காது. இப்போவும் அது ஞாபக்த்துக்கு வராது.

இப்போ அப்பா அம்மா, ஒரே அன்பு, பாசம்.. திரும்ப அவளை தங்கள் வீட்டிற்கே கூட்டிச்செல்ல முயற்சிப்பாங்க. ரொம்ப பணக்காரங்க அவங்க. அவளோட பேரண்ட்ஸ் அவளோட கணவனை மீட் பண்ணியதே இல்லை. அதனால, அவனைப் பத்தி அவங்க ரொம்ப கவலைப்படமாட்டாங்க, அவனை சட்டையே செய்ய மாட்டாங்க. மகளுக்கும் அவனை ஞாபகம் இல்லை என்பதால், அவன் எப்படிப் பட்டவனோனு அவனைக் கழட்டிவிடப் பார்க்கிறாங்க. அதைவிட கொடுமை என்னனா, அவளுக்கு ஏற்கனவே ஒரு பாய்ஃப்ரெண்டு ஒருத்தன் இருந்து இருப்பான். அந்த உறவு ஏற்கனவே முறிந்துபோயி இருக்கும். இவ அவனை "டம்ப்" பண்ணியிருப்பாள். அவனைக்கூட அவளுக்கு நல்லா ஞாபகம் இருக்கும். ஏன் அவனோட உறவு முறிச்சுக்கிட்டோம்னு தெரியாது. ஹஸ்பண்டை சுத்தமாக ஞாபகம் இருக்காது.

ஆனால் நம்ம ஹாண்ட்சம் ஹீரோவுக்கு (ஹி இஸ் ஹாட்) அம்மா அப்பா யாருமே கெடையாது. மனைவிதான் எல்லாம். உண்மையிலேயே அவளை கண்ணா பின்னானு லவ் பண்ணுவான். அவளுக்கு ஞாபக சக்தி (அவனைப்பத்தி, அவங்களப் பத்தி) கொண்டுவர முயற்சிப்பான். காதலர் தினம் இந்த மாதிரி தம்பதிகளுக்கு எவ்ளோ முக்கியம்? அதனால காதலர் தினத்தை யாரும் கேலி பண்ணாதீங்கப்பா! It means a lot to some couple!

Anyway, அம்மா அப்பா, தங்கை மற்றும் இவனை மீட் பண்ணும் முன்னாலிருந்து எக்ஸ் பாய்ஃப்ரெண்டு எல்லாம் ஞாபகத்தில் இருக்கும். ஏன் வீட்டிலிருந்து வெளியே வந்தோம்? முக்கியமா எப்படி தன் கணவ்னை சந்திச்சோம், எப்படி காதலிச்சோம், எவ்வளவு தூரம் அவனை காதலிச்சோம், என்ன வேலை செய்துகொண்டிருந்தோம் எதுவுமே ஞாபகம் இருக்காது.

அவன் அவளைத் அவங்க வாழ்ந்துகொண்டிருந்த தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, நினைவை திருப்பிக் கொண்டு வர முயற்சிப்பான். ஆனால் அது அவ்வளவு ஒண்ணும் நல்லாப் போகாது. அவளுக்கு எதுவும் ஞாபகம் வராது. இந்த நிலையில் அவளோட அம்மா அப்பா அவள அவங்க வீட்டுக்கு அழைச்சுப் போவாங்க.

அங்கே போனதும் அவளை அவளோட அப்பா, மறுபடியும் "சட்டம்" படிக்க வைக்க காலேஜில் சேர்ந்த்துவிடப் பார்ப்பார். "சட்டம்" அவளுக்குப் பிடிக்காமல்ப் போயிதான் "ஆர்ட்டிஸ்ட்" ஆகி இருப்பாள். ஆனால் அது அவளுக்கு இப்போ ஞாபகம் இருக்காது.

அவ தங்கைக்கு "எங்கேஜ்மெண்ட்" நடக்கும், திருமணம் நடக்கப்போகும். அதை சாக்கு வச்சு அவளை அவள் பெற்றோர்கள் கணவனிடம் இருந்து அழச்சுட்டு வந்து தன்னுடனே வச்சுக்குவாங்க. அவளுக்கும் கணவன் மேலே இன்னும் ரொம்ப பிடிப்பு வராது என்பதால் சரினு பெற்றோர்கள் வீட்டுக்குப் போய் விடுவாள். எக்ஸ் பாய்ஃப்ரெண்டு இவளை மறுபடியும் கல்யாணம் செய்துக்க முயற்சிப்பான். அவளோட பேரெண்ட்ஸ் இந்த ஏழைக் கணவனை சீரியஸாவே கழட்டிவிட முயற்சிப்பாங்க. விவாகரத்து செய்ய அவளும் சரினு சொல்ற நிலைமையில் இருப்பாள்.

நம்ம ஹீரோ விடாமுயற்சியில் ஈடுபட்டு அவளோட "ஸ்ட்ரேஞ்சரா"கவே பழக ஒரு "டேட்" கேப்பான். அவள் சம்மதத்துடன் ஒரு நாள் ரெண்டு பேரும் சேர்ந்து சுத்துவாங்க. அவளுக்கு அவனைப் பிடிக்கும்தான் ஆனால்.. அப்பா அம்மா அவளை கன்வின்ஸ் பண்ணி "லா" படிக்க அனுப்பிவிடுவாங்க.

வேற வழியில்லாமல் அவனும் (ஹஸ்பண்ட்) விரக்தி ஆகி அவளை விவாகரத்து செய்யும் நிலை வந்துவிடும். விவாகரத்தும் செஞ்சுடுவாங்க..

ஆனால் "லா" படிக்கும்போது அவளால் அந்த லெக்ச்சர்கள்ல கவனம் செலுத்த முடியாது. எதையோ வரைந்து கொண்டு இருப்பாள். :-)

ஒரு நாள் ஒரு பழைய ஃப்ரெண்டை சந்திப்பாள். அவள் இவளிடம் வந்து முன்னால நடந்த ஒரு தப்புக்கு மன்னிப்பு கேப்பாள். அது என்னனா இவள் தோழிக்கும் இவளோட அப்பாவுக்கும் ஒரு "அஃபையர்" (கள்ளக்காதல்) வந்துவிடும். அந்த விசயம் அவளுக்கு தெரிஞ்சதும்தான் இவ்வளவு மட்டமான அப்பாவைப் பிடிக்காமல் வீட்டைவிட்டு ஓடி தனியாக வாழ்ந்துகொண்டிருப்பாள். இப்போ இந்த விசயம் அவளுக்கு அவள் தோழியின் மன்னிப்பால் ஞாபகப்படுத்தப் படும். இந்த கசப்பான் உண்மை தெரிந்தவுடன் மறுபடியும் அப்பாவை வெறுப்பாள், அம்மாவை திட்டுவாள்.

தனக்கு ஆர்ட்ல இண்டெரெஸ்ட் இருப்பதையும் உணர்ந்து, "லா" ஒத்துவராதுனு முடிவுக்கு வந்துவிடுவாள். திரும்பி தன் கணவனைத் தேடிப் போவாள். அவன் இன்னும் "சிங்கிளா" இருக்கானா? என்ன ஆகுதுனு போயி வண்ணத்திரையில் பாருங்கப்பா!

A quote: The difference between friendship and love is how much you can hurt each other! :)

Friday, February 10, 2012

மாணவன் ஆசிரியையை குத்திக்கொலை! நவீன பாரதம்!

இந்தியா முன்னேறுகிறது! எங்கே பார்த்தாலும், காரு, ஃப்ளாட், வேலைவாய்ப்பு, இணையதளம், டாஸ்மாக் தண்ணி னு எல்லாமே அதிகமாகிப் போயிக்கொண்டு இருக்கு! ஆளாளுக்கு ஒரு செல் ஃபோன் வச்சுக்கிட்டு தன் பொன்னான நேரத்தை செல்ஃபோன்ல பேசியே வீணடிக்கிற அளவுக்கு முன்னேறி இருக்கிறது.

கேள்ர் ஃப்ரெண்டு, பாய் ஃப்ரெண்டு, காசுவல் செக்ஸ், ப்ரி மாரிட்டல் செக்ஸ், அடல்ட்டரி எல்லாம் தப்பே இல்லை, இதெல்லாம் எதுக்கு பெருசுபடுத்திக்கிட்டு னு பேசுற அளவுக்கு முன்னேறிடுச்சு இந்தியா.

நம்ம ஞாநி, காதலர்களுக்கு செக்ஸ் வச்சுக்க பார்க்ல ஏதாவது வழி செய்யனும், பாவம் இடம் கெடைக்காமல் ரொம்ப கஷ்டப்படுறாங்கனுகூட ஒருதர காதல்ர்கள் தினத்தின் போது ஏதோ எழுதினாரு.

ஆனால், இப்படி ஒரு பக்கம் முன்னேறிக்கொண்டு போகிற பாரதம் கெட்ட நடத்தை, கொலை கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம், ஏமாற்று போன்ற இன்னொரு பக்கத்திலும் முன்னேறிக்கொண்டுதான் இருக்கும்! அதையும் நம்ம புரிந்து கொள்ளனும்.

அந்த முன்னேற்றத்தை மக்கள் உணரும் தருணம் இதுபோல் கொலை நடக்கும்போதுதான்! கொஞ்சம் குதர்க்கமாகச் சொன்னால் ஒரு மாணவன் ஆசிரியையை (ஆசிரியரை அல்ல!) குத்திக் கொலை செய்யும் அளவுக்கு இந்தியா முன்னேறியிருக்கிறதுனு சொல்லலாம்!

ஆமா, யாரு மேலே தப்பு?

மாணவனை கஷ்டப்படுத்திய ஆசிரியர் மேலேயா?

இல்லை மாணவனை இப்படி வளர்த்துவிட்ட பெற்றோர் மேலேயா?

இல்லைனா கொலை செய்த மாணவன் மேலேயா?

நான் எதுவும் சொல்றாப்பிலே இல்லை!

ஆனால் இதே போல கொஞ்ச வருடம் முன்னாள் ஒரு மாணவியை ஆசிரியர் மற்றும் அவங்க தரப்பு திருடியாதச் சொல்லி "பொய்க்குற்றம் சாட்டி" அவமானப்படுத்தியதால் அந்த ஏழை மாணவி தற்கொலை செய்துகொண்டாள். அந்தத் துயரம் நடந்ததுக்கும் ஆசிரியர்தரப்பு மேல்தான் குற்றம் சாட்டப்பட்டது.

இப்போ நடந்துள்ள இந்த கொலை சம்மந்தப்பட்ட கேஸிலும் இரக்கமில்லாதவர்கள் பலியான ஆசிரியர் மேல் குற்றம் சாட்டலாம்தான்!

அமெரிக்காவில் யுனிவேர்ஸிட்டி ஆஃப் லாஸ் ஏஞ்சல்ஸ் ல ஒரு வேதியில் பேராசிரியரின் கீழ் வேலை செய்த இள அறிவியல் மாணவி சில வருடங்கள் முன்னால் பரிதாபமாக ஆய்வக விபத்தில் இறந்தாள்! டெர்ஸியரி ப்யூட்டல் லித்தியம் என்கிற ஒரு "ரியேஜண்ட்"டை பெரிய அளவில் -அருகில் யாரும் இல்லாதபோது, ஒரு விடுமுறை நாள் அன்று- பயன்படுத்தி, அது தீப்பிடிச்சு, இவள் ஆய்வக அணிவுடை (தீப்பிடிக்காத லாப் கோட்) அணீயாததால் இவள் அணிந்திருந்த ஸ்வெட்டரில் தீப் பிடித்து, பிறகு உடம்பெல்லாம் தீப்பிடித்து எரிந்து பரிதாப மாக இறந்தாள் (தீக் காயங்களால்).

இப்போ அந்த பேராசிரியருடைய கவனக்குறைவாலதான் இவள் இறந்ததாக அந்தப் பெண்ணின் தாய் தந்தையர் இவர் மற்றும் யுனிவேர்ஸிட்டி மேலே கேஸ் போட்டு, அது "ட்ரயலு" க்கு போகும் நிலையில் இருக்கு. இந்த பேராசிரியர் கவனக்குறைவால்தான் அவள் இறந்தாள்னு என்று சட்டம், ஜூரி, கோர்ட் முடிவு செய்தால், இந்தப் பேராசிரியருக்கு, 4 வருடங்கள் வரை சிறைத்தண்டனை கெடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

கீழே உள்ள பதிவில் இதைப்பற்றி எழுதியிருக்கேன். இந்த நிகழ்வு நடந்து சில மாதங்களில்..

நல்ல நெருப்பும், கெட்ட நெருப்பும்! (உண்மைக்கதை)

அதனால் ஆசிரியர் வேலை எல்லாம் அபாயமில்லாதது என்பதெல்லாம் இன்றைய நிலையில் உண்மையல்ல! ஆமா, இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி!`

நவீன இந்திய ஆசிரியகளுக்கு..

பழைய இந்தியாவில்..

* வாத்தியார் மாணவனை அடித்தால் தப்பு இல்லை! அவன் நன்மைக்காகத்தானே அடிக்கிறார்னு ஒரு சில பெற்றோர்களே நல்லா அடிக்கச் சொல்லுவாங்க!

* அடியாத மாடு படியாது னு ஒரு சில வாத்தியார்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் நம்பியதும் உண்டு!

ஆனால் இன்னைக்கு நவீன இந்தியா மாறிக்கொண்டு வருகிறது. அதற்கேற்ப ஆசிரியர்களும் தங்களை மாற்றிக்கொள்ளனும் என்பதை கவனத்தில் கொள்ளத்தான் இதுபோல் ஒரு பரிதாபமான் நிகழ்ச்சி நடந்துள்ளது. ஒரு ஆசிரியர், ஒரு மன நலம் பாதிக்கப் பட்ட மாணவனை சரியாக எடைபோடாததால, கவனக்குறைவாக இருந்ததால பலியாகியுள்ளார்.

என்ன பயங்கரம்! தப்புத்தான். நீங்க கடவுளுக்கு சமம்தான். ஆனால்..மாணவனை அடிக்கிறது, சரியாப் படிக்கிறதில்லை என்பதால் உங்களுக்கே தெரியாமல் அவனை அவமானப் படுத்துறது எல்லாம் சட்டப்படி குற்றம். அதையெல்லாம் ஆசிரியர்கள் விட்டுத் தொலையனும். அவன் நல்லாப் படிக்கலைனா அவன் தலையெழுத்து! அவனுக்கு உதவி செய்யனும்னா அவனை நீங்க "ஊக்குவிக்கனும்". அப்படி எதும் செய்ய முடியலைனா மூடிக்கிட்டு இருங்க! அவன் படிக்கலைனா அவந்தான் பாதிக்கப்படப்போறான். நீங்க ஏன் போட்டுக்கிட்டு, சும்மா என்னவோ அவன் படிக்கலைனா உங்க குடிமுழுகிப் போறாப்பிலே?

அப்புறம் இன்றைய நவீன பெற்றோர்களுக்கு!

படிக்கிற பிள்ளைக்கு என்ன பிரச்சினை? அவனுக்கு என்ன தேவை? அவன் "ஐ க்யு" லெவெல் என்ன? அவனால் என்ன படிக்க முடியும்? என்ன முடியாது? னு அன்றாடம் கவனிக்க எல்லாம் பெற்றோர்களான உங்களுக்கு நேரமில்லைனா என்ன எழவுக்குடா பிள்ளை உங்களுக்கு? இந்தியா ஜனத்தொகைதான் பெருகிக்கிட்டே போகுதே? நீங்க பேசாமல் பிள்ளை எல்லாம் பெற்றுக்காமல் புருஷனும் பெண்டாட்டியும் சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே?

இன்னைக்கு, 15 வயது மாணவர்கள் போர்னோக்ராஃபி பார்க்கிறாங்க! பலவகையில் மோசமான "எக்ஸ்போஷர்" அவங்களுக்கு கெடைக்கிது! ஆனால் பெற்றோர்கள் (நீங்கதான்) எல்லாம் சம்பாதிப்பதில் ரொம்பவே பிஸியா இருக்கீங்க. பெற்றோர்களில் சிலர், கெடைக்கிற நேரத்தில் அவங்க சந்தோஷத்துக்கு போர்ன் பார்ப்பதில் இருந்து நாகரீகமாக குடிப்பதில் நேரத்தை செலவளிக்கிறாங்க! அடல்ட்ஸ்தானே? இதில் என்ன தப்பு? அடல்ட்ஸ்க்கு நெறையாப் பொறுப்பு இருக்கு! இது மாதிரி சில்லரை வேலை எல்லாம் செய்யும்போது அது குழந்தைகள் பார்வைக்கு எட்டாமல் செய்யனும்கிற பெரிய பொறுப்பு!

எனக்குத் தெரிய ஒரு 14 வயதுப் பெண் தன் பெற்றோர்கள் வேலையில் இருக்கும்போது தன் வீட்டிற்கு படிக்க வந்த தன் தோழிகளை தன் அப்பாவின் பெட் ரூமுக்கு அழைத்துச் சென்று அவள் பெற்றோர்கள் பார்க்கும் அடல்ட் மூவியைத் தன் தோழிகளைப் பார்க்கச் செய்து இருக்கிறாள். இதே சென்னையில்தான்! நம்ம ஊரில் இந்த அளவுக்கு படித்த பெற்றோர்கள் பொறுப்பில்லாமல் இருக்காங்க!

அப்புறம் ஒருத்தரு, நவீன எழுத்தாளரு அவரு தளத்தில் எழுதுறாரு, அது ஒரு ஜோக்காம்! நெஜம்மாவே எனக்கு சொல்லவே கஷ்டமாயிருக்கு! பெற்றோர்கள் உடலுறவு செய்யும்போது சின்னப்பய்யன் (மகன்) உள்ள வந்துட்டானாம்! இதுபோல ஒரு சூழலைச் சொல்லி ஒரு கழிவான ஜோக்! தமிழ் இணையதளத்தில்தான்!! எதுக்கு? ஒரு 1000 ஹிட் அதிகமாக் கிடைக்க? 18+ போடத்தவறிய இதை எத்தனை நூறு அரைவேக்காட்டு சிறுவர்கள் வாசிக்கிறாங்களோ! இதுபோல் ஒரு குடும்ப சூழல்ல ஜோக்!!! கேட்டால், இந்த மாதிரித்தான் உலகம் இருக்குனு சொல்றானுக! ஏன்யா இதெல்லாம் ஒரு ஜோக்கா? கேவலமாயில்லை? னு கேட்டால், நீ ஏன் மெண்டல் மாரி டென்ஷனாகிற? இந்த மாரி பொறுப்பில்லாத அப்பா அம்மாதான் இன்னைக்கு இந்தியாவில் இருக்காங்கனு சொல்லி சிரிக்கிறாங்க!

அது சரி, அப்போ, இது மாதிரி கொலைகளையும் சாதாரணமா எடுத்துக்க வேண்டியதுதான். சும்மா குய்யோ முறையோ னு எதுக்கு கத்திக்கிட்டு?

இன்றைய பெற்றோர்கள் இதுபோல் பொறுப்பில்லாமல் இருந்தால், இன்றைய மாணவன், கொலை செய்வான், நாளைக்கு டீச்சரை கற்பழிப்பான்! ஆமா, இதுதான், பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் தன் எழுத்துத் திறமையால் உருவாக்கப்போகும் இந்தியா! எல்லாத்தையும் பார்த்துட்டு மூடிக்கிட்டு போயிட்டே இருங்க. ஆமா, எதுக்கு ஒப்பாரி எல்லாம் வச்சுக்கிட்டு? பேசாமல் இல்லாத இந்தியாவ கற்பனையில் காதலிச்சு வாழ்ந்துக்கிட்டு போவீங்களா?

Thursday, February 9, 2012

ப்ரைவசி வைரஸை வெளியே அனுப்பியாச்சு!-கடலை கார்னர் -75

"ஏய்! உன் ப்ரைவஸி வைரஸை ஒருவழியா அனுப்பியாச்சு!"

"தேங்க்ஸ் கண்ணன்!"

" சரி, எப்படினு சொல்லவா?"

"மொதல்ல இங்கே வாங்க!"

"என்னடா!"

"ஒண்ணுமில்ல.. சும்மா ஒரு முத்தம் என் கண்ணனுக்கு"

" "

" "

"என்ன சைன்ஃபெல்ட் (Seinfeld) ல பார்த்து இதெல்லாம் கத்துக்கிட்டயா?"

"என்ன அது?"

"இல்லை கிஸ் பண்ணுறேன்னு உன் நாக்கை உள்ளேவிட்டு என்னென்னவோ பண்ணுற? கிஸ் பண்ணுறதுல எக்ஸ்பெர்ட் ஆயிட்டேப் போற, பிருந்த்"

"எப்படி இருந்துச்சு என் கிஸ்?"

"ரொம்பப் பிடிச்சது. சரி, நான் உன் கம்ப்யூட்டர்ல இந்த வைரஸை ரிமூவ்ப் பண்ண என்ன செஞ்ச்சேன்னு சொல்லவா ?"

"அதெல்லாம் வேணாம். மறுபடியும் பிரச்சினைனா நீங்கதான் இருக்கீங்களே?"

"திடீர்னு ஒரு ஆக்ஸிடெண்ட்ல நான் போய் சேர்ந்துட்டேன்னா? ஆவியா வந்தா உதவமுடியும்?"

"இப்படி எல்லாம் பேசக்கூடாது, கண்ணன்!"

"இந்த மாரித்தான் உலகத்துல நடந்துக்கிட்டு இருக்கு, பிருந்த்."

"நடந்துட்டுப் போகுது. நமக்கு நடக்கனும்னு இல்லையே?"

" போன வாரம் என் காலேஜ் க்ளாஸ்மேட் ஒருத்தி ரொம்ப வருடத்துக்கு அப்புறம் பேசினாள். அவ ஹஸ்பண்ட் திடீர்னு "ஹார்ட் அட்டாக்" ல இறந்துட்டாராம். இவ, காலேஜ்ல படிக்கும்போது சர்ச், சர்ச், ஜீசஸ் ஜீசஸ்னு சொல்லிட்டே இருப்பாள். இப்போ இந்த சோகத்துக்குக்கப்புறம் "சர்ச்"க்கே போவதில்லையாம்!"

"நெஜம்மாவா?"

"பாவம் பிருந்த். எனக்குத் தெரிய ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு! ஆனால் பயங்கர "ரிலிஜியஸா" இருப்பாள். இந்த மாதிரி ஆயிடுத்து"

"எங்கே நடந்தது இதெல்லாம்?"

" இவ்வளவும் "யு எஸ்" லதான் நடந்து இருக்கு. இப்போதைக்கு இந்தியா திரும்பிப் போகாமல், அவங்க அண்ணா பக்கத்திலே இருக்கிறதாலே ஏதோ சமாளிக்கிறாளாம். கைக்குழந்தையோட இருக்கா! "நான் என்ன தப்பு செய்தேன்? ஏன் என்னை இப்படி ஆண்டவன் தண்டிக்கிறார்?" னு அழுகிறாள், புரியாமல் குழம்புறா. இதைவிட கொடுமை என்னனா அவ வீட்டுக்காரர் லைஃப் இண்சூரண்ஸ்கூட ஒரு நல்லதொகைக்கு செய்யவில்லையாம். ஏதோ 100, 000 டாலர்கள் மட்டும்தான் வந்ததாம்! அதை வச்சு என்ன செய்ய?"

"ஏன் இவங்க எதுவும் வேலை பார்க்கலையா?"

"ஹஸ்பண்ட்தான் நல்ல வேலையில் இருந்தாருனு இவ இல்லத்தரசியாத்தான் இருந்தாளாம். அதுதான் அவர் ஆசையாம்! மனைவி குழந்தையை வச்சுக்கிட்டு லைஃப் இண்சூரண்ஸ்கூட ஒழுங்கா செய்யாமல் இருந்து இருக்காரு, அந்த மனுஷன். நம்ம மக்கள் எல்லாம் சாவைப்பத்தி பேசினாலே ஒரு மாதிரி ஆயிடுறாங்க. இந்த மாதிரி சூழ்நிலை யாருக்கு வேணா வரலாம், வந்தா அந்த நிலையில் என்ன செய்றதுனே யோசிக்கிறது இல்லை!"

"அவங்க அண்ணா என்ன பண்ணூறாராம்?"

"ஏதோ சாஃப்ட்வேர் கம்பெணி வச்சு நடத்துறாராம், கலிஃபோர்னியாவில். எஸ் எ பி ல பெரிய ஆள் போலயிருக்கு. ரொம்ப "ரிச்" மாதிரி தெரியுது. அவர்தான் இப்போ எல்லா வகையிலும் சப்போர்ட் பண்ணூறாருனு சொல்றா. இவளும் குடும்பத்தோட அவங்க அண்ணா பக்கத்திலேயே "மூவ்" பண்ணிப் போயிட்டாங்களாம். இப்போ ஏதோ கோர்ஸ் எடுத்து "ஆண்லைன் வேலை" ட்ரை பண்ணூறாளாம்! எனக்கு இவளுக்கு என்ன ஆறுதல் சொல்றதுனே தெரியலை!"

"யு எஸ் வந்ததுக்கப்புறம் உங்க க்ளாஸ்மேட்டை மீட் பண்ணினீங்களா?"

"இல்லை, பிருந்த். இவ இந்தியாவிலேயே ஏதோ "டீச்சிங் ஜாப்" எடுத்துட்டு செட்டில் ஆயிட்டாள். அதுக்கப்புறம் யு எஸ் வந்ததே எனக்குத் தெரியாது. திடீர்னு ஒரு ம்யூச்சுவல் ஃப்ரெண்டுட்ட இருந்து ஒரு இ-மெயில் வந்தது. இவ "யு எஸ்" லதான் இருக்கா, அப்புறம் இவ கணவனை இழந்த நிலையை எல்லாம் சொல்லிட்டான். இவ நிலமையை ஏற்கனவே என் ஃப்ரெண்டு சொல்லிட்டதுனாலே நான் ஓரளவுக்கு தயாரா இருந்தேன். மொதல்ல ஒரு "ஹாய்" இ-மெயில் அனுப்பினாள். நானும் அவ ஹஸ்பண்ட் பத்தி கேள்விப்பட்டேன்னு அவளுக்கு இ-மெயில்யே சொல்லிட்டேன். அப்புறம் அவ ஃபோன்ல பேசும்போது ரொம்ப அதைப் பத்தி நான் ரொம்ப கேக்கல. அவளா சொன்னாள். யங், ஏர்லி த்ர்ட்டீஸ்தானாம். இவளைவிட 4 வயது மூத்தவர்போல. எந்தவிதமான ஹெல்த் பிரச்சினையும் இல்லையாம். திடீர்னு ஒரு நாள் "கொல்லாப்ஸ்" ஆயிட்டாராம். ஐ சி யு ல ரெண்டு நாள் "கோமா"ல இருந்தாராம். ரெண்டு நாள் ல போயி சேர்ந்துடுட்டாராம். "ஹார்ட் டிஸீஸ்" லாம் இந்தக் காலத்தில் பெரிய விசயம் இல்லைதான். ஆனால் இதுமாதிரி ஒரு சிலர் இறந்துகொண்டும் இருக்கத்தான் செய்றாங்க!"

"ஏன் இண்சூரண்ஸ் சரியாப் பண்ணலையாம்?"

"ஏன்னா? உன்ன மாதிரித்தான் சாவைப் பத்தி பேசவே, நெனைக்கவே பயம்! இந்த மாதிரி டிப்பெண்டெண்ட்ஸ் இருக்கும்போது இவரு பொறுப்பா இருந்து இருக்கனும் இல்ல? நம்ம தேஸி மக்கள் எல்லாம் பொதுவா இப்படித்தான். ஒரு சிலர்தான் விதிவிலக்கு."

"இவங்க இந்தியாவுக்கு திரும்பிப்போகலாம் இல்ல?"

"அங்கே, அப்பா இல்லை, அம்மாக்கு வயசாயிடுச்சு, இருந்த வேலையையும் ராஜினாமா செஞிட்டு வந்து இருக்காள். இங்கே அண்ணா சப்போர்ட் ப்ண்ணுறதாலே இருக்காளாம். இவ அண்ணியும் இதுக்கு ஒத்துழைப்பதாலே இதெல்லாம் முடியுது. இல்லைனா இதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்கிற விசயமா?"

"சரி, நீங்களும் திடீர்னு ஆக்ஸிடண்ட்ல இறந்துடுவீங்கனு நெனைச்சு "ப்ரிப்பேர்ட்" ஆ இருப்பதாலே என்ன பிரையோஜனம், கண்ணன்?"

"அப்படினா?"

"அந்த பாஸிபிலிட்டியை யோச்சிச்சு இருப்பதால் நீங்க போனதும் ஈஸியா எடுத்துக்க முடியுமா? It will break my heart no matter what. Right?"

"இருந்தாலும்.."

"Ignorance is bliss, கண்ணன். சாவைப்பத்தி, நெனைக்காமல் இருக்கதுதான் நல்லது. We have to be optimistic! ஒண்ணு பண்ணுங்க, என்னைக் கலயாணம் பண்ணியதும் பொறுப்பா ஒரு மில்லியன் டாலருக்கு இன்ஸூர் பண்ணிடுங்க. சரியா?"

"சரிடா. சரி, இப்போ "privacy virus" எப்படி ரிமூவ் பண்ணினேன்னு சொல்லவா?"

"விட மாட்டீங்களா?"

"சொல்லுறேன் கேட்டுக்கோ!

1: --safe mode --ல கொதல்ல போயிக்க்கோ. அதாவது restart, பண்ணிட்டு F8 பட்டனை க்ரேஸியா ப்ரெஸ்பண்ணிட்டே இரு! இப்போ
safe mode ல அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்க்குள்ள நுழை.

2:
control pannel > folder options,> tools > unhide hidden folders

3: find that folder
"App-Data" (AppData\roaming)

4: அதுல உன் target என்னனா "privacy.exe". அதை கண்டு பிடிச்சு செலெக்ட் பண்ணி டெலீட் பண்ணிடனும்!
"

"இவ்வளவு வேலையிருக்கா?"

"ஒண்ணு பண்ணு, மறுபடியும் அந்த "சைட்"க்குப் போயி இந்த "ப்ரைவசி" வைரஸை வாங்கிட்டு வா! நீயே இந்த முறை டெலீட் பண்ணிப்பார்க்கலாம்!"

"நான் என்ன லூசா? மறுபடியும் அந்த வைரைஸை பிடிச்சுட்டு வர? வாங்க சாப்பிடலாம்!"

"உன் ஃபோன் கத்துது!"

"இந்த ஸ்டேஸிதான். அவளை என்ன பண்ணுறேன் பாருங்க!"

"நான் வேணா பேசுறேன். நீ சாப்பிட எல்லாம் எடுத்து வை !'

"அதெல்லாம் வேணாம்! நானே பேசுறேன்."

"என் மடியிலே உக்காந்து பேசுறியா? நீ பேசும்போது உன்னை கொஞ்சிக்கிட்டே இருக்கேன்.. எனக்கும் பொழுது போகும்?"

"இப்படியா?"

"ஓ மை காட்!"

-தொடரும்

தொடர்புடைய முந்தையப் பதிவுகள்!

ப்ரைவசி வைரஸ்! கடலை கார்னர் - 74 (18+ மட்டும்)

ப்ரைவசி வைரஸ்!! கடலைக்கார்னர்-73

Tuesday, February 7, 2012

சாருவுக்கு கெடைக்காத பாராட்டு, கைதட்டு!- நக்கீரன் உபயம்

சாரு! இதென்ன ரஜினிகாந்து- எஸ் ரா விமர்சனக்கூட்டமா?? இல்லைனா எக்ஸைலுக்கு இன்னொரு பேரு ரஜினிகாந்தா?

எக்ஸைல் விமர்சனக்கூட்டத்துல ஏதாவது இலக்கியவாதி எக்ஸைல அப்படிப் பாராட்டினாங்க இப்படி பாராட்டினாங்க, அல்லது இப்படி திட்டினாங்க னு பேசாமல், ரஜினிகாந்த் பற்றி விமர்சனம் எதுக்கு??

எஸ் ரா வுக்கு இயல் விருது கிடைத்ததை பாராட்ட ரஜினி சென்றது பாவம் நம்ம சாருவுக்குப் பிடிக்கலை போலயிருக்கு. பிடிக்கலை சரி, அதுக்காக அதை இப்படியா வெளியே காட்டுறது? ஒரு வேளை எக்ஸைல் விமர்சனக்கூட்டத்தில் ரஜினியைப் பத்தி எதையாவது பேசி, தன் "எக்ஸைல்" மேல் கொஞ்சம் கவனத்தைத் திருப்ப முயற்சியாக்கூட இருக்கலாம்? என்ன எழவாயிருந்தாலும் சாருவுடைய ரஜினிகாந்து விமர்சனம் (வீடியோ) மற்றும் அவர் தளத்தில் வந்துள்ள வயித்தெரிச்சல் கட்டுரைகள் எல்லாமே படு மட்டமாயிருக்கு!

ஏதோ பாபாவுக்கு கதை எழுதிய பழக்கத்தில் "தகுதியில்லாத ரஜினி" போயி இந்த விழாவில் எதையோ பேசி சமாளிச்சு ஒரு வழியா விழா நல்லபடியா முடிஞ்சிருச்சு. இதனால எஸ் ரா ரொம்ப பாப்புளர் ஆவார், அவர் நாவல்கள் நெறையா விற்கும், என்பதெல்லாம் சாத்தியமேயில்லை. இதை, சாரு, ஒரு ஜெண்டில்மேன் போல கண்டுக்காம விட்டுட்டுப் போயிருக்கலாம்.

ஏன் எஸ் ரா மேலே போயி அப்படியொரு பொறாமை இந்தாளுக்கு? எஸ் ராவைப் பார்த்தால் ஜெயமோஹன், ஞாநி போல யாரோடையும் எந்த வம்புக்குப் போற ஆள் மாதிரித் தெரியலை. சாருவோட எக்ஸைல் வெளியீட்டு விழாவுக்கும்தான் வாலி, மதன், ஞாநி எல்லாம் வந்து இருந்தாங்க. சாருவைப் பத்தி அவர் நாவல்கள் பத்தி என்ன சொல்றதுனே தெரியாமல் புகழ்றமாரி எதையோ ஒளறிக் கொட்டிவிட்டு சென்றார்கள். அது காமெடியாக இருந்ததாலோ என்னவோ, அதையெல்லாம் பாத்து எஸ் ரா பொறாமைப் பட்டு எதையும் ஒளறவில்லை, எழுதவில்லை.

இந்த மாதிரி ஒரு விசயத்தைப் போட்டு குறை கண்டுபிடிக்கனுமேனு வலுக்காட்டாயமாக உக்காந்து, மண்டை காய யோசிச்சு, உப்புச் சப்பு இல்லாத ஒரு குப்பை மேடைப்பேச்சைப் பேசி.. ரஜினிக்கு இது தெரியாதா? அது தெரியாதா? னு பத்தி பத்தியா எதுக்கு பேசிக்கிட்டு, எழுதிக்கிட்டு?

இதனால சாரு சாதிச்சது என்ன? என்னை இப்படி ஒரு பதிவு எழுத வச்சதைத்தவிர ஒரு எழவும் இல்லை! இவரோட இந்த அர்த்தமில்லாத பேச்சால் எக்ஸைல் வாங்கனும், படிக்கனும்னு நெனச்சவன்கூட இனிமேல் வாங்க மாட்டான்!

சாருவுடைய இந்தப்பேச்சில் பெரிய பிரச்சினை என்ன வென்றால் இதில் எந்தவிதமான வீரியமும் இல்லை. உப்புச் சப்பு இல்லாமல் பேசியதால் எவனும் கைகூட ஒழுங்காத் தட்டல்ல போல இருக்கு! இந்த வீணாப்போன நக்கீரன் பத்திரிக்கை, சாரு பேச்சையும் ரஜினி பேச்சையும் படு கேவலமாக மிக்ஸ் பண்ணி, ரஜினி வாங்கிய கை தட்டை எல்லாம் ஏதோ சாருக்கு கெடச்ச கைதட்டு மாதிரி (உபயம் செய்து )வீடியோவை எடிட் செய்து ஒரு ஈனப்பொழைப்பு நடத்தியிருக்கிறது!

மறுபடியும் ரஜினி - தீபிகா படகோன்! கோச்சடையான்!


ரஜினி இந்தத் தள்ளாத வயதிலும் புதுப்படம் பண்ணப் போறார்னா என்னைப் போன்ற ஒருசிலருக்கு அது ஒரு மிகப்பெரிய சந்தோசமான விசயம்தான் . ராணா படத்தை ஆரம்பித்தபோது அதில் எனக்கு அதிக "interest" வந்ததுக்குக் காரணம் ரஜினியோட நம்ம தீபிகா படகோன் சேர்ந்து நடிப்பதாக முடிவு செய்யப்பட்டவுடன் தான். பச்சையா உண்மையைச் சொன்னால், I find her extremely attractive, and HOT! I think Rajni-Deepika on screen chemistry will work great!

ராணா படம், ரஜினி உடல்நிலை காரணமாக நிறுத்தப் பட்டபோது, ரொம்ப வருத்தமாத்தான் இருந்துச்சு. "சே ரஜினியும் தீபிகா படகோனும் சேர்ந்து நடிக்கிற படம் பார்க்க முடியாமல் போச்சே" என்கிறதுதான் அந்த வருத்தத்துக்கு ஒரு முக்கியக் காரணம். இனிமேல் ந்ன்னத்தை ரஜினி உடல்நலம் தேறி வந்து ..இவரோட நடிச்சு, இதெல்லாம் நடக்கும்னு நெனைக்கவே இல்லை!

ஆமா, ரஜினிக்கு 62 வயசுதான், தீபிகா படகோன் க்கு 26 வயதுதான்! நல்லாவே தெரியும். எனக்கு பிடிக்குது அவர்களுக்குள் உள்ள "கெமிஸ்ட்ரி" இப்போதைக்கு. படம் பார்த்துட்டு என்ன சொல்வேன்னு தெரியவில்லை! ஆனால் படம் பார்க்க இந்த ஜோடி ஒரு பெரிய் உந்துதல்தான். இன்றைய சினிமா உலகில் அது ரொம்ப முக்கியம் !

ஆமா, நிஜவாழ்வில் இந்தளவுக்கு வயது வித்தியாசம் இருக்கும் ஜோடி என்பது சிரிக்கத் தக்கதுதான். ஆனால், சினிமாதானே? இதில் எல்லாமே நடிப்புத்தான். எல்லாமே "ரீல்" தானே? அதனால பரவாயில்லைனு தோனுது. ரஜினிக்காக என் "லெவெலை" இன்னும் இறக்கிக்கொள்வது என் பலஹீனம்னு கூடச் சொல்லலாம்!

ரெண்டு நாள் முன்னாள கோச்சடையான் "ஸ்டில்" வெளியிட்டபோதுகூட, நண்பர் கிரியுடைய "ப்ளாக்"க்கு போயி ஒண்ணும் எழுதத்தோணவில்லை. ஆனால் இப்போ தீபிகா படகோன் தான் ராணாவில் ரஜினி ஜோடினு சொன்னதும், கோச்சடையானில் ஆர்வம் வந்துருச்சு. :) எதையாவது எழுதுவோமே னு எழுதுறேன்.

என்னைப்பொறுத்தவரையில் எந்திரனிலேயே தீபீகா படகோனைப் போட்டு இருக்கலாம்! படம் இதைவிட நல்லாப் போயிருக்கும்! :) ஆமா இப்போ சொல்லுவீங்களே? :)))

Saturday, February 4, 2012

பதிவுலகில் சாதாரண பதிவர்களுக்கும் பிரச்சினைகள்!!

சாதாரணப் பதிவர்கள் பலருக்கு பதிவுலகம் என்பது தன் சிந்தனைகளை அள்ளிக்கொட்ட கெடச்ச ஒரு நல்ல இடம், ஒரு பொழுதுபோக்கிடம்! அம்புட்டுத்தான்.

இந்தப் பதிவுலக எழுத்தை வச்சு பெரிய க்ரிட்டிக்காகவோ, பெரிய எழுத்தாளனா ஆகனும்னோ, இல்லை நெறையா சம்பாரிக்கனும்னோ, எண்ணமெல்லாம் பொதுவாக இந்த சாதாரணப் பதிவர்களுக்குக் கெடையாது.
தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில், தங்கள் கருத்தை அவங்களுக்குத் தெரிந்த தமிழில் எழுத்துப்பிழை, பொருள்ப் பிழை, எல்லாப் பிழைகளுடனும் எழுதி, ஒரு முறை வாசிச்சுக்கூடப் பார்க்காமல் பதிவுல சொல்லிப்புட்டு, மறக்காமல் திரட்டிக்கு அனுப்பிட்டு, எவனும் படிச்சாப் படிக்கிறாங்க இல்லைனாலும் பரவாயில்லை னு பெரியமனுஷத்தனமா நெனச்சுக்கிட்டு..அதோட ஒதுங்கி போயிடலாம்னுதான் பார்க்கிறாங்க..

ஆனால்..

என்ன ஆனால் னு இழுக்கிற??

ஆனால் அதோட இவர்கள் ஒதுங்கிப் போவதில்லை!

ஏன்??

இங்கேதான் ஒரு சாதாரணப் பதிவரின் மனதின் அடியில் உள்ள "பொதுநோக்கு" அல்லது "பொதுத்தொண்டு", அல்லது "தமிழ்த்தொண்டு" தலை காட்டுது!

புரியல! யாருக்கு?

அதான் மேலே சொன்ன அந்த சாதாரண பதிவர்களுக்கு!!

என்னத்தையோ சும்மா பொழுதுபோக்குக்கு எழுதிட்டு, படிச்சாப் படி இல்லைனா விடுனு போகனும்னு நெனைக்கிற பிரச்சினை-விரும்பாப் பதிவர்களுக்கும் பதிவுலகில், பிரச்சினை வருது!

என்ன பிரச்சினை அவங்களுக்கு?? கொஞ்சம் தெளிவா சொல்லேன்?

* 1) ஏன் பதிவுலகில், இவ்வளவு மட்டமான பதிவுகள், ஒண்ணத்துக்கும் உதவாத பதிவுகள் எல்லாம், மகுடம் சூட்டுது?

* 2) இந்தப் பதிவெல்லாம் எதுக்கு வாசகர் பரிந்துரையில் அதிக மதிப்பெண்கள் பெற்று இடம் பெறுது?

* 3) இந்தக் குப்பையெல்லாம் எதுக்கு சூடான இடுகையா வந்து நிக்கிது?

* 4) அதே நேரத்தில் ஏன் இப்படி ஒரு சில நல்ல தரமான பதிவுகளெல்லாம் வந்ததும் உடனே மறைந்துடுது?

இந்த மாதிரிப் பிரச்சினைகள், கவலைகள், ஆதங்கம், இத்யாதி இத்யாதி, எல்லாம் மேலே சொன்ன "சாதாரண"ப் பதிவர்களுக்கு வந்து விடுது, அப்புறம் திரட்டி நடத்துறவங்களுக்கும் இந்தக் கவலை இருக்கத்தான் செய்யுது.

திரட்டிகள் என்னதான் புதிய சட்டதிட்டங்கள் கொண்டு வந்து மாற்றியமைத்தாலும் இதே "திருப்தியில்லா" நிலைக்குத்தான் பதிவுலகம் கடைசியில் மறுபடியும் மறுபடியும் வந்து நிக்கிது."

"4 வருடத்துக்கு முன்னால நல்லாயிருந்துச்சே?" ஒரு சிலர் நெனைக்கிறாங்க, சொல்ல்லிக்கிறாங்க. ஒத்த சிந்தனையுள்ள பதிவுலக நண்பர்கள் சிலர் தங்களுக்குள் வருத்தத்துடன், ஆதங்கத்துடன் இந்த "அவலநிலை" பத்திப் பேசிக்கிறாங்க, கவலைப் படுறாங்க. ஒர் சிலர், ஒரு பதிவு போட்டும் தன் வருத்தத்தை காட்டுறாங்க!

இதுக்கு என்னதான் மருந்து?

என்னதான் தீர்வு?


இவங்க என்ன செய்யலாம்?

எது சூடாகுது, எது பரிந்துரைக்கப்படுது, எதெல்லாம் மகுடம் சூட்டுது என்பதையெல்லாம் கண்டுக்காம, பேசாமல் தனக்குப் பிடித்த, தனக்கு எதிர்கருத்து சொல்லத்தோணுற பதிவுகளில், விவாதிக்க தோணுகிற பதிவுகளில் போய், தங்கள் கருத்தை சொல்லிப்புட்டு, தன் மதிப்பீட்டின்படி தகுதியில்லா "over-rated" பதிவுகளை கண்டுக்காமல் ஒதுங்கிப் போயிடுறது நல்லது. இப்படிப் போனால், செய்தால், நீங்க ஒரு தரமான பதிவராயிடலாம்!



"இவங்க (நீங்க) எதிர்பார்க்கிற ஒரு உயர் தர பதிவுலக நிலை ஒரு போதும் வரப்போவதில்லை!" என்பதே உண்மை.

எனது புரிதல் என்னனா, எந்தத் திரட்டியும், இதுபோல் "பதிவுலக ஒழுங்கீனத்தை" ஒட்டு மொத்தமாக உடனே ஒழிக்க முடியாது. இதுபோல் ஒழுங்கீனங்கள் நிர்வாகிகளுக்குப் பிடிக்காமல் இருந்தாலும், அதை ஓரளவுக்கு "tolerate" செய்து போக வேண்டிய சூழல்லதான் திரட்டிகளும் உள்ளன. அவர்களால் ஒரு சில பொதுப்படையான மாற்றங்களே செய்ய இயலும்.

திரட்டிகளால் இயலாதது சுதந்திரப் பதிவர்களால் முடியும்!

ஒரு புதுப்பதிவர் (அல்லது அது மாரி நடிக்கிறவர்) ஒருத்தரு, புதிய வலைதளத்தில், பல கமர்சியல்களை போட்டுக்கிட்டு எதுக்கெடுத்தாலும் "அந்த மாதிரி படத்தில் நடிக்க இந்த நடிகைக்கு ஆசையாம்" "ஆபாசப் படம் காட்டும் சின்னத்திரை" னு ஒவ்வொரு பதிவுலயும் தொடர்ந்து, ஆமா, தொடர்ந்து, எழவைக்கூட்டினால், அந்தப் பதிவரைப் பத்தி எந்த ஒரு சாதாரணப் பதிவரும், பொதுநலம் கருதி "ஏன்ப்பா இப்படி செய்ற?" னு ஒரு பதிவைப்போட்டு கண்டிக்கலாம்! அந்த அளவுக்கு தைரியம் இல்லை, வம்பில் மாட்ட இஷ்டமில்லைனா, நீங்க நல்லவனாகவே இருக்கனும்னா, பேசாமல் விட்டுப்புட்டு போயிடுங்கோ!

Friday, February 3, 2012

எஸ் ரா விழாவில் ரஜினிக்கு என்ன வேலை?!


உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு பழைய ரஜினியாகத் தெரிகிறார். நடிப்பில்தான் எல்லாரையும் கவர்ந்தார், இப்போ மேடைப் பேச்சிலும் இன்று நாள்வரை ரஜினியை சோடை சொல்ல முடியவில்லை! ரஜினியின் வெற்றிக்குக் காரணம், தன்னடக்கம் மற்றும் பொய் பேசாமை, இது இரண்டுமதான். "கடவுள் நம்பிக்கை", "இறைபயம்" என்று சிலர் நினைப்பதை என்றுமே என்னால் ஏற்கலாகாது.

மறுஜென்மம் எடுத்து வந்திருப்ப்பதால் இறைவன் பக்தி இன்னுமே அதிகமாகியிருக்கு! கடவுள் இருக்கிறார் என்று சொல்லிச் சொல்லி ஊர்ஜிதம் பண்ணிக்கொள்கிறார்.

எடிசன் பற்றி சொல்லும்போது கொஞ்சம் நெருடலாவே இருந்தது. கடைசியில் அந்தக் கதை உண்மையோ இல்லை கற்பனையோ? எதுவாக வேணா இருந்துட்டுப் போகட்டும், அதில் உள்ள விசயம் இதுதான் என்று சொல்லியதால், தன்னை விமர்சனங்களில் இருந்து காப்பாற்றிக் கொண்டார்.

எஸ் ராவுக்கும் ரஜினிக்கும் பாபா படத்தில் இருந்து ஒரு மாதிரி நட்பு உண்டாகியிருக்கிறது என்பதைப் பற்றியும், தனக்கு இங்கே, இலக்கியவாதிகள் முன்னால், பேச பயமாக இருக்கிறது என்கிற உண்மையான வாக்கியங்கள் ரஜினியை இமயத்திற்கு மேலும் உயர்த்திக் கொண்டு சென்றுவிட்டது!

இலக்கியவாதி எஸ் ரா, ஏழையாக இருந்தாலும் தன்னைவிட உயர்ந்தவன் என்று எஸ் ராவைப் புகழ்ந்து தன்னை இறக்கியதால் இன்னும் கொஞ்சம் உயரத்திற்கு சென்றுவிட்டார் ரஜினி என்றே சொல்லனும்!

ரஜினியின் வெற்றிக்குக் காரணம், ஆன்மீகமோ, இறைநம்பிக்கையோ கெடையாது, honesty is the best policy என்கிற அவர் "பாலிஸி"தான்! என்பது ஆத்திகர்களுக்கு நான் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டிய ஒன்று. :)

Thursday, February 2, 2012

உங்களோட கூட்டணி வச்சதுக்கு நாங்க வெட்கப்படுறோம்!

என்னபபா இது, தமிழ்நாட்டு அரசியல் எல்லாம் உப்புச் சப்பு இல்லாமல் இம்பூட்டுக் கேவலமா இருக்கு! ஒரு 10 வயது சிறுவன் சொல்லிடுவான், "இன்னைக்கு இந்த அரசியல் தலைவர் இப்படிச் சொல்லுவாரு, ஆனால் இதே தலைவர் நாளைக்கு வெற்றியடஞ்ச உடனே அப்படியே மாத்திப் பேசுவாருனு! "

இந்த மாதிரி இருக்கிற அரசியல் தலைவர்களை நம்ம அரைவேக்காடுகள், "இவங்கதான் அரசியல் சாணக்கியர்கள் அது இதுனு "எதையாவது சொல்லி உளறிக்கிட்டு திரிவானுக! இப்படி அரசியல் சாணக்கியன் பட்டம் கொடுக்க ஒரு வெட்டிக்கூட்டம்!

ஆட்சியைப் பிடிக்க முன்னால இந்த அம்மா, எங்க கூட்டணி தரமான அசைக்க முடியாத கூட்டணி அது இதுனு பேசினாரு. சரி, சொன்னது சொல்லியாச்சு, சொன்னதை அப்படியே விட்டுத் தொலைய வேண்டியதுதானே?

இப்போ ஒரு பிரச்சினையினு வந்ததும் சிறுபிள்ளைத்தனமாக "இவங்க இல்லாமலே நாங்க வெற்றியடஞ்சி இருப்போம், இது இவங்களுக்கு நான் போட்ட பிச்சை, கட்சி முடிவெடுத்தாலதான் நான் சேர்ந்தேன், எனக்கு எப்போவுமே தே மு தி கவுடன் கூட்டுச் சேர இஷ்டமில்லை! "னு எதுக்கு வெவஸ்தைகெட்டதனமா சொல்லிக்கிட்டு? இதெல்லாம் ரொம்பக் கேவலாமாயிருக்குங்க ! யாருக்கு? உங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்குத்தான்! என்ன என்ன? "நீங்க வேற, அவனுக முட்டாப் பசங்க, எல்லாத்தையும் உதிர்த்தவனுகனு சொல்றீங்களா?" அது சரிதான்!

ஒருவேளை தோல்வியடைஞ்சி இருந்தாலும், விஜய்காந்து எம் எல் எ வேட்பாளரைப்போட்டு அடிச்சதாலேதான் நாங்களும் தோற்றோம்னு சொல்லியிருக்கும்! அப்போவும் விஜய் காந்துக்கு "க்ரிடிட்" கொடுக்கபடும்! இதுவும் ஒரு 10 வயதுக் குழந்தைக்குக்கூடத் தெரியும்!

கூட்டணி எல்லாம் நிலையானது இல்லைதான். தேர்தல், வெற்றி எல்லாம் முடிஞ்சதும், ஆளுங்கட்சி, எதிர் கட்சினு ஆயிப்போச்சு, சரி! அவன் அவன் கடமையைச் செய்யனும், அதுவும் சரி! இன்னைக்கு நிலைமையில் எதிர் கட்சி பிரச்சினையை கிளப்பினால், அதற்கு ஒழுங்கா பதில் சொல்லனும் இல்லைனா விட்டுட்டு போயிகிட்டே இருக்கனும்! அதைவிட்டுப்புட்டு சும்மா என்னாலதான் உனக்கு 27 தொகுதி கெடைச்சதுனு கேவலமா ஒரு அறிக்கை! உடனே அவரு, இந்தம்மாவோட நான் கூட்டு வச்சதே தப்பு னு, எதிர் வாதம். இப்போ என்ன எழவுக்குப்பா பழசைப்போட்டு கிளறி எடுக்கிறீங்க?

உண்மையச் சொல்லப்போனால், ஜெயலலிதா வெற்றிக்கும், விஜய் காந்த் வெற்றிக்கும் காரணம் யாரு?

எல்லாருக்கும் தெரியும் நம்ம தானைத் தலைவர்தான், இவங்க வெற்றிக்கு வழி வகுத்ததுனு! அப்படியிருக்கும்போது ஏன் இதுக ரெண்டும் ஏன் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிட்டு, உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டனு உளறிக்கிட்டு? நம்ம தானை தலைவருக்கு தெனமும் ஒரு மாலையைப்போட்டு வணங்குவாங்களா!!

ஆமா நம்ம "அரசியல் மாமா", சோ மாரிச்சாமி "துக்குஃபக்குளக்கு"ல என்னப்பா சொல்றாரு இப்போ? தமிழ்நாட்டு அரசியல் கூத்து பத்தியெல்லாம் கண்டுக்காம எதையாவது அன்னா ஹாசாரே, இல்லைனா காங்கிரஸ் பத்தி எழுதிக்கிட்டு திரிவான் அந்தப் பார்ப்பனப் பொறம்போக்கு!

தரகு வேலை செஞ்சு ஜெ-யையும், வி-காந்தையும் ஒண்ணு சேர்த்துவிட்டு ஜெயிச்சதுக்கப்புறம், வேலை முடிஞ்சதா?? இன்னைக்கு அடிச்சுக்கிட்டு நாறும்போது யாரு சொல்றது சரி, யாரு சொல்றது தப்பு னு சொல்லுய்யா அரசியல மாமா!!!