Tuesday, September 20, 2016

பசி பரமசிவம் சார்!

என்ன சார் உங்க தளம் ரீடர்ஸ் ஒன்லி ஆயிடுச்சு? ஒரு ஆறு ஏழு வருடமாக வலைபதிவில் நீங்க எழுதுறீங்க. கடவுள் மறுப்புக் கொள்கை, சிறு கதை மற்றும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பதிவுகள் எழுதுறீங்க. உங்க கருத்துக்களை ஆணித்தனமாக சொல்றீங்க. ஆனால்  பல முறை உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் இட வழியில்லாமல் செய்துவிடுறீங்க. இப்போ என்னனா பதிவையே வாசிக்க முடியாத அளவு ஆக்கிவிட்டீங்க. எனக்கென்னவோ நீங்க ரொம்பவே உணர்ச்சி வசப்படுறீங்க, பதிவுலகில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பர்சனலாக எடுத்துக்குறீங்கனு தோனுது. நான் உங்களுக்கு அறிவுரை எல்லாம் சொல்லத் தகுதியில்லாதவன். ஆனால், நீங்க எளிதாக எடுத்துக்கொள்வது நல்லது. பதிவுலகில் நல்ல நண்பர்களிடமும் கருத்து வேறுபாடு வரும், அவர்களும் எரிச்சல் தரும் பதிவெழுதுவாங்க! ஒரு சில நேரம் நாம் மட்டும் தனியாக நின்றுதான் நம் கருத்தை சொல்ல வேண்டி வரும். இதையெல்லாம் நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு நம் கருத்தை சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கணும். நாம் உண்மையை மட்டும் சொல்லும் பட்சத்தில் நம் எழுத்துக் காலத்தால் அழியாது. 100 வருடம் சென்று நம் பதிவை வாசிப்பவர்கள் நம்மை ஞானி என்பார்கள். இன்றைய மக்களுக்காக நீங்க எழுத வேண்டியதில்லை. காலத்தால் அழிக்கமுடியாத உண்மையை எழுதுங்க! ஆணித்தமனமாக்! மற்றவற்றைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டியதில்லை! நன்றி சார். :)




Friday, September 16, 2016

காவிரியும் தமிழர்களின் உலகமகா ஒற்றுமையும்!

தமிழனுகளுக்குள்ள நூத்தி எட்டு சாதி! பார்ப்பனர்கள், உயர் சாதி தமிழர்கள், ஆண்ட பரம்பரைனு சொல்லிக்கொண்டு அலைபவர்கள், தலித்கள், தலித்களிலே மைனாரிட்டியாக இருக்கும் பரிதாபத்துக்குரியவர்கள்! இவர்களுக்குள் எந்த ஒற்றுமையும் கெடையாது. ஒரு சாதில உள்ள பெண் இன்னொரு சாதியிலே உள்ளவனை காதலிச்சா, அப்பா தற்கொலை பண்ணி சாவான், இல்லைனா மகளை எரிச்சுடுவானுக. அப்போ எல்லாம் தமிழச்சிதான் அந்தப் பெண் நாம் தமிழர் என்கிற உணர்வுமிருக்காது, ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது.

இப்போ காவிரி பிரச்சினை என்றவுடன் தமிழனை அடிக்கிறாங்க! கன்னடிகாக் களை திருப்பி அடிக்கணும்னு இவர்களிடம் என்ன ஒரு ஒற்றுமை!! இதே ஒற்றுமை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாதபோது தமிழர்களிடம் இருந்தால் இவனுகளை மதிக்கலாம்.

இது  போதாதுனு "நாம் தமிழர்" போராட்டத்தில் ஒரு இளைஞன் தீக்குளிச்சு செத்து இருக்கான். பாவம் அவனை பெற்றவர்கள், உறவினர். ஆமா, காவிரித் தண்ணி வந்துவிட்டால் இவன் வீட்டில் தினந்தோரும் தீபாவளியா என்ன?

கன்னடிகா கலவரம் பண்ணினால், அடாவடித்தனம் பண்றவர்களை சட்டம்தான் உள் நுழைந்து தமிழர்களை காப்பத்தணும். மாநில அரசாங்கம், அல்லது மத்திய அரசாங்கம். அதை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் கன்னடிகாவை அடிச்சா, கர்நாடகா பங்களூரில் வாழும் தமிழர்களுக்குத்தான் இன்னும் சிரமம். அதைத்தான் சாதிக்கப் போறீங்க.

தமிழர்கள் ஒற்றுமை என்றாலே செம கமெடிதான்!

நீ என்ன அமெரிக்காவில் இருக்கனு வந்து எதாவது சொல்லிக்கிட்டு இருக்கக் கூடாது! நானும் பங்களூரில் வாழ்ந்து இருக்கேன். இதேபோல் காவிரி பிரச்சினையின்போது தமிழர்களை அவர்களை அடிக்கும்போதும் தான். நம்ம சீமான் மாதிரி தமிழ்நாட்டில் ஒரு மூலையில் உக்காந்து கொண்டு வீரம் பேசுறவன் இல்லை நான். புரியுதா?