Tuesday, May 30, 2017

மாடு, மனிதன், மனிதம், மண்ணாங்கட்டி!

அதாவது அமெரிக்காவில் நாங்க என்ன சொல்லுவோம்னா "I n G o d W e t r u s t!". இங்கே "We" யாருனா நாங்க தான் அமெரிக்கர்கள். நாங்க ஏன் கடவுளை நம்புகிறோம்னா.. கடவுள் எல்லாரையும் விட எங்களை மட்டும் கொஞ்சம் உயர்வாக வைத்துக் கொள்ள எல்லா வகையிலும் உதவணும். ஏன் கடவுள் எங்கள் எதிரியையும் எங்களைப் போலவே நினைத்தால் அல்லது மதித்தால்? எல்லோரையும் சமமாக நினைக்கும் அப்படிப்பட்ட கடவுள் எங்களுக்குப் பிடிக்குமா என்னணு தெரியவில்லை.

மனிதன் நியாயங்கள் எல்லாம் அவன் வசதிக்கு அவனே உருவாக்கிக் கொண்டது. கடவுளைக் கூட மனிதன் அவன் தேவைக்கு, அவன் மனநிலையை சரி பண்ண உருவாக்கிக் கொண்டான்.

மோனிங் டவ் என்பது ஒரு வகையான புறா. இவ்வகைப் புறாக்கள் மில்லியன் கணக்கில் பெருகிக்கொண்டே போகிறது என்பதால் அதைச் சுட்டுக் கொல்லலாம், வேட்டை ஆடலாம் என்பது அவன் வகுத்த சட்டம். அதே சமயத்தில் பலவிதமான கொடூர விலங்குகள் சிங்கம், புலி, சிறுத்தை போன்றவைகள் அழிந்து கொண்டு வருகின்றன என்பதால் அவைகளை கொல்லுவது சட்ட விரோதம்!!! இப்படித்தான் மனிதன் சட்டதிட்டங்கள் வகுத்து வாழ்கிறான். இதேபோல்தான் மனிதன் நியாய தர்மங்கள் தொடர்கின்றன.

நீங்க கவனித்துப் பார்த்தால் மனித இனத்தைவிட  மட்டமான ஜென்மங்கள் எதுவுமே இல்லை . ஆனால் இவன் தன்னைப் பற்றி யோசிக்காமல் உலகில் உள்ள மற்ற ஜீவராசிகளை, ஒட்டுண்ணி, சாருண்ணினு முத்திரை குத்தி ஏமாத்திக் கொண்டு திரிகிறான். இவனுக்குத் தேவைனா நாயையும் பூனையையும் கொஞ்சுவான். அவைகள் காமுற முடியாவண்ணம் அவைகளுடைய செக்ஸ் உணர்வுகளை அழித்துவிடுவான். கேட்டால் அப்படி செய்வதால் அவைகள் அதிக நாள் உயிர் வாழ்கின்றன என்பான். எல்லாம் அவன் வசதிக்கு! வடிகட்டிய சுயநலம்! இப்படித்தான் மனிதன் வாழ்கிறான்..இந்த வாழ்க்கையில் இவன் மனிதம் மண்ணாங்கட்டினு இந்தக் கழிவுகளில் இவன் நல்ல கழிவு, இவன் கெட்ட கழிவுனு  வகைப் படுத்துகிறான்.

இவ்வுலகில் மிகப் பெரிய பிரச்சினையே..மனித இனம் உலகில் தோன்றி வளர்ந்துகொண்டே போகிறது என்பதுதான். எங்கே பார்த்தாலும் மனிதன், மனிதன் மனிதன். கோடி கோடியாக வளர்ந்துகொண்டே போகிறான். உலகம் நாசமாவதுக்கு மனித இனப் பெருக்கம் கட்டுமீறிப் போவதுதான் காரணம். "க்லோபல் வாமிங்"க்கு முக்கியக் காரணம் மனித வளர்ச்சி, மற்றும் அவன் விஞ்ஞான வளர்ச்சிதான். தண்ணீர்  பஞ்சத் திற்கு காரணமும் மனிதப் பெருக்கம்தான்.

மாட்டை சாப்பிடக்கூடாது ஆனால் கொன்னு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம்?!. இல்லை, பசு மாட்டைத்தான் கொல்லக் கூடாது! எருமை கருப்பா இருக்கு அதை வெட்டினால் தப்பில்லை . ஆடு, கோழி எல்லாம் கொன்னால் தப்பில்லை. பசு மாடுமட்டும்தான் பாவம்! என்ன இதெல்லாம்? பார்ப்பனர்கள் மேல் கடுப்பாவது இங்கேதான். ஒரு பார்ப்பான் சொல்றான், நாம் கொன்னு ஏற்றுமதி செய்வது எருமைமாட்டைத்தான். பசுவை அல்ல! அதாவது அவரு நியாயப் படுத்துகிறார். எருமைனா என்ன? பசுனா என்ன முண்டம்?! இவ்வளவுக்கும் இவன் ஒரு பயாலாஜிஸ்ட். டெய்லி எலியையும் முயலையும் கொன்னு ரிசேர்ச் பண்ணுபவன்!  உண்மை என்னனா இப்படி கொன்னு அனுப்பலைனா இந்திய வருமானம் தடைப்படும். பணத் தேவைக்காக ஒரு சில எருமையைக் கொன்னு அனுப்பலாம். கேவலமான நியாயப் படுத்தல்!

இவன் மட்டுமல்ல பொதுவாக மனிதர்களே இப்படித்தான். எதையும் "நியாயப் படுத்துகிறார்கள்"! இது சரி, இது தப்பு! என்று இவர்களே ஒரு சட்டம் ஒரு வெளக்கெண்ணை வியாக்யாணம் பேசி தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

பறவைகள் புழுக்களை கொத்தி சாப்பிடுகின்றன. அதைப் பறவைகள் நியாயப் படுத்துவதில்லை!

பருந்துகள் சிறு பறவைகளை கொன்னு சாப்பிடுகின்றன. அதையும் அவைகள் நியாயப் படுத்த  முயல்வதில்லை.

ஆனால் ஆறறிவு பெற்ற மனிதன் ஏதாவது ஒரு வகையில் தான் வாழச் செய்யும் பலவிதமான அயோக்கியத் தனங்களை தொடர்ந்து நியாயப் படுத்துகிறான். தன்னையும் உலகையும்  ஏமாற்றி வாழ்கிறான். இதுதான் உண்மை.

கவனித்துப் பார்த்தால், மனிதன் பேசும் மனிதம், மனிதாபிமானம், இறை பக்தி எல்லாமே அவன் செய்யும் அயோக்கியத் தனங்களை நியாயப் படுத்த அவனே உருவாக்கிக் கொண்டது.

இது ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேன் என்கிறது?

ஏன் இப்படி எல்லாம் நீங்க யோசிக்க முயல்வதில்லை?

உங்களை நிற்கவைத்து உங்கள் எதிரி நிலைமையிலிருந்து உங்கள் அசிங்கப் பகுதியை பார்க்க நீங்கள் முயல்வதில்லை. ஏன்? ஏன் என்றால் உங்களைப் பற்றிய உண்மை உங்களைக் கொன்றுவிடும். உங்களைப் பார்த்தால் உங்களுக்கே பரிதாபாமாக இருக்கும். அருவருப்பாக இருக்கும். அதனால் நீங்க அப்படியெல்லாம் யோசிக்க முயல்வதில்லை.

நீங்கள் உங்கள் அசிங்கத்தைக் கழுவ, கடவுள், பக்தி, மனிதம், மனிதாபிமானம் என்கிறீர்கள். எல்லாமே உங்களை நீங்கள் ஏமாற்றிக்கொள்ள உருவாக்கிய கான்சப்ட்தான். இந்த ஆறாவது அறிவு  உங்களை சித்ரவதை செய்யும் என்பதால் உங்களுக்கு இத்தேவை இருக்கிறது. ஆமாம் நீங்கள் உயிருடன், மனநலத்துடன் வாழும் வரை.

Thursday, May 25, 2017

அ ரு வ ரு ப் பு என்பதுதான் சரி!

தமிழில் அதிகப் பிழையுடன் எழுதும் மிகச்சிலரில் அடியேனும் ஒருவன் (சாரு ஞாபகம் வருது இங்கே!) என்பதை  எந்தவித வெட்கமோ, கூச்சமோ  இல்லாமல் சொல்லுகிறேன். உண்மையை எடுத்துரைக்க என்றுமே பயப்படக் கூடாது. அப்படிப்பட்ட எனக்கு அழகான தமிழில் எழுதும் தமிழ் மேதைகள் தமிழ்ப் பிழை செய்வதைப் பார்க்கும்போது  ரொம்பவே கஷ்டமாக இருக்கும். சமீபத்தில் வாசித்த பதிவுகளில், தமிழ் நன்றாகத் தெரிந்த இரண்டு பதிவர்கள் இவ்வார்த்தையை அருவெறுப்பு என்று எழுதியிருக்கிறார்கள். முன்பொருமுறை நண்பர் சத்யப்பிரியன் பதிவில் அது "அருவருப்பு"னுதான்னு சொல்றாங்கனு (தமிழ் நன்கறிந்த அவரிடம்) இதைச் சுட்டிக் காட்டினேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது இவ்வார்த்தையை பலரும் தவறாகவே எழுதுகிறார்கள் என்று.  இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி எழுதும்போதுகூட "அருவெறுப்பு" தான் சரியோ என்கிற குழப்பம் எனக்கு வருகிறது. அப்படி  வருவதால், இன்று இதை ஒரு பதிவாகவே வெளியிட்டு  ஒரு முடிவுக்கு வந்துவிடுவது என்ற முடிவுடன் இப்பதிவை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன் . நன்றி. வணக்கம்.

Sunday, May 14, 2017

பாகுபலி ஒண்ணும் ரெண்டும் அப்புறம் நானும்!

உலக இந்தியர்கள் கொண்டாடும் ஒரு படம் பாகுபலி. நாலு தரப் பார்த்தேன் ஏழுதரப் பார்த்தேன் என்கிறார்கள். ஒரு பக்கம் ஒரே புகழாரம். இன்னொரு பக்கம் வர்ணாசிரப்படம், தெலுங்கர்கள் படம் என்றெல்லாம் குறைசொல்லிக் கொண்டு இப்படத்தை பார்க்காதவர்கள் இல்லை. என் அக்கா, தங்கச்சி மற்றும் அவர்கள் குடும்பம் அனைவரும் பார்த்து விட்டதாகவும் படம் பிரம்மாண்டம் என்றும் பாராட்டுகிறார்கள்.  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஹிந்தியிலும் எல்லா அம்மொழிப்படங்கள் செய்த சாதனைகளை முறியடித்துள்ளது இப்படம். இனி எந்த ஒரு படமும் இச்சாதனையை முறியடிக்க முடியாது என்கிற ஒரு மிரட்டலுடன் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது இப்படம்.

எனக்கு மட்டும் இப்படங்களைப் பார்க்க ஒரு ஈர்ப்பு இல்லை. இதென்ன வீண் பிடிவாதம்? இது ஒரு "ஆட்டிட்டூட் ப்ராப்ளம்". ஆமா, இல்லைனு இப்போ யார் சொன்னா? எதையும் யாரையும் மிகவும் உயர்த்திப் பேசிக்கொண்டே போனால் ஒரு சிலருக்கு அப்படத்தின் மீது ஈர்ப்பு குறைந்துவிடும். அதேபோல் ஒரு பிரச்சினைதான் இது. ஒண்ணு பார்க்காத்தால் கட்டப்பாவோ கழுதப்பாவோ அவன் யாரு தாலியை அறுத்தா நமக்கென்ன? என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லாமல்ப் போய்விட்டது போலும் எனக்கு மட்டும்.

வீரத்தமிழர் சத்யராசு வாய்க்க்கொழுப்புடன் பேசியதுக்கு கன்னடர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டாராம். அடேங்கப்பா! ஆனால் தமிழன் பூராம் இதைப் பார்த்துக்கொண்டு பொத்திக்கிட்டுதான் இருக்காணுக. இதே செயலை ரஜினிகாந்த் செய்தபோது என்னவெல்லாம் பேசினாணுக? தமிழர்கள் நெஜம்மாவே உயர் பண்புள்ளவர்களா இல்லைனா தற்குறிகளா? என்கிற கேள்வி என்னைப் போல் தமிழனுக்கு எழாமல் இல்லை. கழுதப்பா மன்னிப்புக் கேட்டா அது பெரியமனுஷத் தன்மை. படையப்பா மன்னிப்புக் கேட்டால் அது சிறுப்பிள்ளைத்தனம்? அப்படித்தானே?

சமீபத்தில் ஜல்லிக்கட்டு விவாதத்தில் ஒரு தமிழன்பருடன் மல்லுக்கட்டும்போது நான் தெரிந்து கொண்ட விசயம், அவருக்கும் கமலஹாசனுக்கும் ஒரு ஒற்றுமையை கண்டேன், ரெண்டு பேருமே இதுவரை ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டதில்லை. ஆனால் முழுநேரமும் ஊருப் பயலுகளைத் தூண்டிவிட்டு ஒரு 10-20 பேரை பலிகொடுத்த வாய்ச்சொல்லில் வீரர்கள் இல்லை ஈனத் தமிழர்கள் என்று. 10 பேரு செத்தான்னு படிக்கும்போது வீரம், தாலினு பேசும் இந்த "வாய்ச்சொல்லில் வீரர்கள்" ஏன் போய் மாடுமுட்டி செத்தால் என்ன? என்ற கேள்வி எழுந்தது. "ஆமா 10-15 செத்து இருக்காணுக,  நீர் இன்னும் சாகலையா?" என்று நேரிடையாகக் கேட்டதும் அவருக்கு ரொம்ப சங்கடமாகிப் போயிடுத்து. உங்க "நல்லெண்ணம்" நிறைவேறாது அன்பரே! நாங்க  கமலகாசன் எல்லாம் மத்தவனைத் தூண்டிவிட்டு தமிழர் மரபைக் காப்பாற்றுவோமே ஒழிய எங்களைப் பலிகொடுக்க மாட்டோம் என்று சொல்லாமல் சொன்னார் ஒரு கொற அழுகையுடன்..

பாகுபலியை விடுங்க..மனிதர்களில்தான் எத்தனை விசித்திரப் பிறவிகள்! தனக்கென்று ஒரு நியாயம். ஊரில் உள்ளவனுக்கு இன்னொன்று! எத்தனை எத்தனை (எத்தினி இல்லை! I HATE when it said, "எத்தினி"... தென் தமிழ்நாட்டிலிருந்து வந்ததாலோ என்னவோ) வகைகள்! எத்தனை ஊருக்கு உபதேசம் பண்ணும் சுயநலவாதிகள்! எத்தனை சந்தர்ப்பவாதிகள்! இதுகளை கவனித்தாலே ஏகப்பட்ட எண்டர்டெய்ண்மெண்ட் கிடைக்கும் போது நமக்கெதுக்கு பாகுபலி ஒண்ணும் ரெண்டும்?

என்ன பார்க்கிறீர்கள்?  பாகுபலி பார்க்காதற்கு இதெல்லாம் வெறும் சப்பைக்கட்டுதான்.

ப்ளஸ் டூ படிக்கும்போது முக்கியமாக அறிவியலில் ஒரு சில காண்ஸப்ட் சரியாகப் புரியாமலே புரிந்துகொண்டதுபோல் ஒரு மாதிரி தவறாக அனுமானித்து படிச்சு பதிலெழுதி பாஸான வகை நான். ஆனால் அந்த "கில்ட்டி ஃபீலிங்" இன்னும் இருக்கிறது. ஏன் நமக்கு மட்டும் புரியலை? நம்ம பார்ப்பனரல்லாதலால் நமக்கு அறிவு கம்மியா? இல்லைனா ஆங்கில ஞானம் கம்மியானதாலா? இல்லைனா ஒரு சாதாரணப் பள்ளியில் படித்ததாலா?. இதேபோல் இளநிலை, முதுநிலை மேற்படிப்பு படிக்கும்போதும் புரியாதவைகள் தொடர்ந்தது.. நெறையவே சேர்ந்துவிட்டது. அதாவது புரியாமல் படித்து முடித்த பாடங்கள் ஏகப்பட்டது. நல்லவேளை வட்டி எல்லாம் கிடையாது அது இன்னும் பலமடங்காக. ஆனால் அதே கில்ட்டி ஃபீலிங் இன்னும் அதிகமாகிக் கொண்டே போனது.

இன்றைய சூழலில் ஏகப்பட்ட ரிசோர்ஸஸ், புத்தகங்கள்  கிடைப்பத்தால் புரியாமல் படித்தவற்றை, சேர்த்து வைத்தவைகளை  இன்று புரிந்துகொள்ள நெறையவே வாசிக்கிறேன். சாதாரண பேசிக் சயண்ஸ்தான். உங்களுக்கெல்லாம் அப்பவே புரிந்த விசயங்கள்தான். That keeps me busy and keeps me away from baahubali too. Trust me, it is lot of fun and relaxing when you get rid of "such a guilty conscience" by learning the "unlearned" concepts today!  Today I could do it because I am not having an exam coming soon and there is no such pressure now!

Relax please!

Image result for deepika padukone