Monday, December 31, 2012

விஸ்வரூபம் அதுக்குள்ளே 300 கோடி வசூல்?!

அதற்குள்ளே 30 லட்சம்  பேர் டி ட்டி எச்க்கு ரூ 1000 கொடுத்து விஸ்வரூபத்திற்கு அட்வாண்ஸ் புக்கிங் செய்துள்ளதாக இணையதள் உலகில் ஆதாரப்பூர்வமான செய்தி வந்துள்ளதாக வதந்திகள் உலவுகிறது! "இந்த உண்மையான செய்தியை நம்பாதவன் எல்லாம் மனநோயாளி" என்று வந்தியத்தேவன் என்னும் ஈழத்தமிழர் மற்றும் கமல் ரசிகர் கோபமாக சொல்லியுள்ளார்! உண்மைகள் முதலில் வதந்தியாக வருவது இது முதல் முறை அல்ல! இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் 150 கோடி இண்வெஸ்ட் செய்த கமலஹாசன் படம் வெளிவரும் முன்பே 150 கோடி வருமானம் செய்துள்ளார் என்று ஆகிறது! இந்த மிகப்பெரிய சாதனைக்கு கமலஹாசனை நாம் வாழ்த்துவோம்!

பூஜாகுமார் மற்றும் ஆண்ட்ரியா



இன்னும் இந்தப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவில்லை! கேரளா மற்றும் தமிழ் நாட்டில் உள்ள தியேட்டர் ஓனர்களெல்லாம் பிரச்சினை செய்துகொண்டுள்ளனர். எப்படியோ விஸ்வரூபம் திரையரகுகளில் வெளிவந்தால் அங்கே குறைந்தது ஒரு 100 கோடியாவது வந்துவிடும்.

ஆக, கமலஹாசனின் விஸ்வரூபம் குறைந்தது 400 கோடியாவது  கலக்சன் பெற்றுவிடும்.

கமலின் விஸ்வரூபம் ரஜினியின் * எந்திரன், * சிவாஜி,  கமலின் *தசாவதாரம், விசய்யின் * துப்பாகி  எல்லாவற்ரையும் தூக்கி எறிந்துவிட்டு முதல் இடத்தை அடைந்துவிடும்!

படம் நல்லாயிருக்கோ இல்லை குப்பையோ, க்ரிட்டிக்ஸ்க்கு பிடிக்கிதோ என்பதெல்லாம் இப்போ முக்கியம் அல்ல! கமலஹாசன் தான் செலவழித்த பணத்தைவிட படம் வெளிவரும் முன்பே இரண்டு மடங்கு சம்பாரித்து விடுவார் என்பதே இங்கே முக்கியம்.

இது அவருடைய திறமைக்கான பரிசு! அவருடைய வியாபார உக்திக்கான பரிசு! எம் பி எ பட்டம் பெற்றவன் சாதிக்க முடியாததை நமது மேதை, சகலகலா வல்லவன் சாதித்து உள்ளார்! அவர் ஒரு தமிழன் என்று பெருமைப் படுவோம்! அவரு ஒரு நாத்திகன் என்று பெருமைப்படுவோம்! மனதாறப் பாராட்டுவோம் அவரை, அவருடைய துணிவுக்காக!

இன்னொரு நல்ல செய்தி என்னானா, இத்தனை கோடிகள் சம்பாரித்த கமலஹாசன் அடுத்து தான் சம்பாரித்த 300 கோடியையும் அப்படியே செலவழித்துமருதநாயகம் எடுக்கத் தயாராகிவிடுவார்.  மருதநாயகம் வியாபாரம் ஒரு 1000 கோடியாவது டி ட்டி எச் மற்றும் சினிமா ரிலீஸ் மூலம் கலக்சன் பெற்றுத்தரும்!  ஆக, கமல் இந்தியாவிலேயே #1 ஆக்டராகவும், #1 தயாரிப்பாளாரகவும், கின்னஸில் இடம் பெறுவார்! அவரை வாழவைத்த தமிழர்களுக்காக  என்னன்ன செய்யப் போகிறாரோ!!

டி ட்டி எச் ரைட்ஸை ரூ 50 கோடிக்கு கமல் விற்றுவிட்டார் என்கிற செய்தி ஒன்று உலவியது. அது உண்மை என்றால், இலாபம் ஏர் டெல் நிறுவனத்திற்கு போய்விடுமா என்னனு தெரியலை!

எது எப்படியோ, வாழ்க உலக நாயகன் புகழ்!! வாழ்க அவரை வாழவைக்கும் ரசிகாமணிகள்!

Thursday, December 27, 2012

நடிகர் விஜயின் ப்ளாக் பஸ்டர் நண்பன் ஃப்ளாப் ஆன கதை!

தமிழ் சினிமால, ஒரு படத்தை வெற்றி, தோல்வி, ஹிட், சூப்பர் ஹிட், ப்ளாக் பஸ்டர்னு ஆளாளுக்கு ஒண்ணை சொல்லிக்கிட்டு திரிகிறார்கள். நேத்து ஒண்ணை சொல்லி இருப்பானுக,  இன்னைக்கு ஒண்ணை சொல்லுவானுக. நாளைக்கு இன்னொண்ணை சொல்லுவானுக! உண்மையிலேயே படம் வெற்றியா தோல்வியா என்பது எவனுக்குத் தெரியும்னு தெரியலை.

நம்ம விஜயுடைய நண்பன் படத்தை "பளாக் பஸ்டர்"னுதான் சொன்னாங்க! இப்போ என்னனா, இந்த துப்பாக்கி ப்ளாக் பஸ்டர் ஆனதும், நண்பன் ப்ளாப் படம்னு சொல்ற அளவுக்கு போட்ட காசை எடுத்ததாக சொல்றாங்க! யார் சொல்றா? நம்ம ஸ்ரீதர் பிள்ளை.

இதே ஸ்ரீதர் பிள்ளை என்னென்னவோ முன்னால இதே நண்பன் பற்றி ட்விட்டரில் பிதற்றினார். இன்னைக்கு நண்பன் தோல்விப்படம்னு சொல்ற அளவுக்கு எழுதி இருக்காரு!!





top2012







2012- Top grossers at the Box-Office



By Sreedhar Pillai

2012
has been a landmark year for Tamil film industry. A new record of 168 films released (by December 28), and there have never been so many releases in the last three decades.
As per trade sources, nearly 17 films at the time of writing have recovered their cost of production, with most of them turning profitable or break even. The list has been compiled from trade sources in distribution and exhibition.
The chart has been put together estimated from Indian domestic theatrical collections, overseas, audio and television rights and other revenue sources. It need not be exactly correct and may vary.
We have categorised the films on the basis of – Top grosser of the year, blockbuster meaning 100% on Return On Investment (ROI), Super Hit meaning 50% ROI, Hits 20 to 30% ROI, Above Average which means marginal profit of 5 to 10% and Average meaning will cover cost.

Thuppakki
The Vijay film directed by AR Murgadoss is estimated to have taken a theatrical distributors share of approximately Rs 60 Crore from Tamil Nadu alone. It is the third highest theatrical collections for any film in Tamil after Enthiran and Sivaji. Blockbusters - 100% on Return On Investment (ROI)
 Oru Kal Oru Kannadi
 Sundarapandian
 Kumki (may go higher up by Jan as film released on Dec 14)

Super Hit –  50% on Return On Investment (ROI)
Naan Ee

Pizza

Kalakalappu
Hit –  20 to 30 % ROI
Marina
Mannam Kothi Paravai
Kadhalil Sodhapuvadu Yeppadi

Above Average – 5 to 10 % on ROI
Attakathi

Vazhakku Enn 18/9
Naan
Kazhugu
Saatai 
Average – Break Even
Nanban
Neerparavai

ஸ்ரீதர் பிள்ளைக்கு ஓரளவு சினிமா வட்டாரங்களின் உண்மை நிலவரம் தெரியும்!  இவர் சொல்ற விசயத்தில் துப்பாக்கி ப்ளாக் பஸ்டர்னு சொல்வதை எல்லா விஜய் ரசிகனும் ஏத்துக்குவான். ஆனால், நண்பன் ப்ளாக் பஸ்டர் கெடையாது னு அதே விஜய் ரசிகன்  ஏத்துக்க மாட்டான்!

*********************

முதலில் கமலஹாசனுடைய தசாவதாரம் வசூல் பற்றி பெரிய காமெடியே இருக்கு.

According to Wikipedia! நம்மாளுக அவன் அவன் வசதிக்கேத்தாற்போல் எடுத்து கலக்கி விடுவதே ஒரு சில தொண்டர்களுக்கு வேலையாப்போச்சு!

Dasavatharam collection:
It was also the first Tamil film to beat the record set by Sivaji a year later. However, this new record was beaten two years later by Enthiran.

Budget INR60 crore (US$10.92 million)[1]
Box office INR250 crore (US$45.5 million)

Sivaji collection:
Budget INR80 crore[1]
Box office INR172.2 crore[2]

துபோல் விக்கிபோடுதால் காலப்போக்கில் ப் பொய்த்வல்கள் உண்மையாகிவிடும் பயங்கரம் இருக்கு!

கண்ணால் காண்பதும் பொய்!

காதால் கேட்பதும் பொய்!

எதையும் பகுத்தறிவதே புத்திசாலித்தனம்!

 கமல் ரசிகர்கள் எல்லாம் இந்த ஒரு சில தவறான ஒரு கலக்ஷன் ரிப்போர்ட்டை பிடித்துத் தொங்கி, சிவாஜியை விட தசாவதாரம்  உலகளவில் பெரிய வெற்றி பெற்றதாக சொல்லி, விக்கிலகூட போட்டு விட்டார்கள்.

 அதாவது தசாவதாரம், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சென்னை எல்லா இடங்களிலும் "சிவாஜி"யை விட குறைவாகத்தான் வசூல் செய்தது. அதுதான் உண்மை. இருந்தாலும் "international BO collection"னு வரும்போது சிவாஜியை விட பலமடங்கு வெற்றி பெற்றதாக ஒரு தவறான "டேட்டா" "உண்மையாக்க"ப் பட்டது.


Check this out!

இது வெளிநாடுளில் சிவாஜி வசூல்!

> Show Full Index
Country
(click to view weekend breakdown)
Release
Date
Total Gross
FOREIGN TOTAL 6/14/07 $5,871,620
United Kingdom 6/15/07 $792,659
Malaysia 6/14/07 $2,435,416
South Africa (Entire Region) 7/27/07 $101,779
> Show Full Index

இங்கே foreign total என்பது international BO collection! For sivaji, they have EXCLUDED INDIA! அயல்நாடுனா முக்கியமா மலேசியா, அமெரிக்கா, யு கே! மற்றதெல்லாம் ரொம்ப வராது.


Now check this out!

இது தசாவதாரம் வெளிநாட்டு சூல்!

> Show Full Index
Country
(click to view weekend breakdown)
Release
Date
Total Gross
FOREIGN TOTAL 6/12/08 $16,356,962
Malaysia 6/12/08 $1,721,109
India 6/13/08 $75,378
United Kingdom 6/13/08 $492,006
> Show Full Index

தசாவதாரத்துக்கு மேலே வெளியிடப்பட் international BO collection is WRONG!

ஏன் தப்பு?? 

மலேசியா, யு கே மற்றும் யு எஸ் கலக்சன் சுமார் $ 6 000 000 வந்து இருக்கலாம். எங்கேயிருந்து மிச்சம் $10, 000 000 வந்தது??? ந்தியாவில் ருந்து வந்து இருந்லக்சன் ரிப்போர்ட்டையும் இண்டெர்னேஎல் லக்னாசேர்த்து விட்டுட்டாணுக! 

 இல்லை அது சரிதான் அப்படினு சொன்னால், இந்தியா BO collection னும் சரினு ஒத்துக்கணும்!  



India6/13/08$75,378

புத்தியுள்ள எவன் ஒத்துக்குவான்? ஆனால் மேலே உள்ரிப்போர்ட்டில் கமல் ரசிகர்கள் அந்த international BO collection மட்டும் ரியாதாஎடுத்துக்குவாங்க. இந்தியாவில் வந்த கலக்சனை தவறானதுனு புரிந்து கொள்வாங்க.:))) இந்த ஒரு பொய் டேட்டா வைத்து சிவாஜியை தசாவதாரம் முறியடித்துவிட்டதுனு சொல்லிக்கிட்டு அலைகிறாணுக ஒரு சில அரை வேக்காடுகள்!

ரசிகன் என்பவன் பகுத்தறியத்தெரியா அடிமுட்டாள் என்பதற்கு இவை இரண்டும் அழகான உதாரணங்கள்! இதில் எந்த நடிகர்களின் ரசிகர்களும் விதிவிலக்கல்ல!

Wednesday, December 26, 2012

ஏங்க இப்படி என் மானத்தை வாங்குறீங்க?! (18 + மட்டும்)

 “என்னங்க  இவ உங்களை கைகாட்டி ஏதோ சொல்லி திட்டிட்டுப் போறா”

“ஸ்ஸ்ஸ் சும்மா இருடி, மாலா!”

“அவளும்  ரெஸ்ட் ரூம் பக்கம் இருந்துதான் வர்ரா. என்னவோ உங்களைக் கைகாட்டி சொல்லிட்டுப் போறா.”

“சும்மா இருக்கமாட்டியா? எல்லாம் என் கெட்ட நேரம்.”

“என்னனு சொல்லித் தொலைங்க!"

"ஒண்ணும் இல்லடி!"

"பொய் சொல்லாதீங்க!  அவளை என்ன பண்ணுனீங்க?!”

“அங்க பாரு! உன் ·ப்ரெண்ட் கவிதா வர்ராங்க! இதான் அவங்க சின்னப் பையனா?”

********************

“ஹாய் மாலா!”

“ஹாய் கவிதா! எப்படி இருக்க! இவன்தான் உன் சின்னப் பையனாடி?”

“ஆமடி! இதுதான் வினோத்! மாலா ஆண்ட்டிக்கு ஹாய் சொல்லு வினோத்!”

“ஹாய் !”

“வினோத்! யு பிகேம் எ பிக் பாய்!” ரெண்டு வயது வினோத் கன்னத்தை லேசாக கிள்ளினாள், மாலா.

“ஏண்டி இவன் பர்த்டேக்கு உன்னைக் கூப்பிட்டேன் இல்ல! நீ வரமாட்டேன்னு சொல்லிட்ட!”னு கோபமாகச் சொன்னாள் கவிதா.

“எல்லாம் இவராலதான்.”னு பாலாவை மாட்டிவிட்டாள்.

“ஆமங்க கவிதா, ஏற்கனவே ஒரு கம்மிட்மெண்ட் இருந்துச்சு. மன்னிச்சுக்கோங்க!"

"இட்ஸ் ஓ கே பாலா!"

" ஆமா உங்க ஆத்துக்காரரையும் உங்க மூத்த பொண்ணு ரம்யாவையும் எங்கே காணோம்?”

“ரம்யாவும் அவரும் அந்தப் பக்கம் போயிட்டாங்க. அவளுக்கு ஏதோ அரைகுறை அவ்ட்·பிட் எடுக்கணுமாம், அப்பாவையும் இழுத்துண்டு போயிட்டாள்.  துணைக்குப் போறேன்னு போயிட்டார் ரவி”

“என்ன படிக்கிறா, ரம்யா?”

“ஹைஸ்கூல் ஜூனியர். உன் பையன், ப்ரஷாந்த்தை எங்கே? அவன் என்ன படிக்கிறான்?”

“ப்ரஷாந்த் 8த் க்ரேட் படிக்கிறான். ·ப்ரெண்ட்டோட பேஸ்பால் ஆடப்போறேன்னு போயிட்டான். அவன் வீட்டிலேயே ஸ்லீப் ஓவெர் வேற, நாளைக்குதான் வந்து சேருவான்.”

“என்னடி ஷாப்பிங், கவிதா?”

“ஒண்ணும் பெருசா இல்லடி! சண்டேயானால் எந்நேரமும் ஃபுட்பால் பார்த்துண்டே இருக்கார் ரவி. அதான் கொஞ்சமாவது எங்களையும் கவனிங்கனு மால் க்கு இழுத்துண்டு வந்தேன். இங்கேயும் வந்து என்ன செய்வார்னு நெனைக்கிற? ஏதாவது டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்ல போயி டி வில ஸ்போர்ட்ஸ்  பார்த்துண்டு இருப்பாரு! சரியான ·புட்பால் பைத்தியம்”

“பாவம்ங்க ரவி! வாரத்திலே ஒரு நாள் ·புட்பால் பார்த்தால் என்னங்க, கவிதா? ஆம்பளைங்களுக்கு இதுக்குக்கூட சுதந்திரம் கெடையாதா?”

“அது சரி, உங்களுக்கு நீங்களே வக்காலத்தா? என்னவோ ரவிக்காக உருகிறமாரி ட்ராமா வேற”னு கோபமாகச் சொன்னாள் மாலா!

“உங்காத்துலேயும் இதே கதைதானா?”

“எப்போ இந்தச் சனியன் சூப்பர் பவ்ல் முடியுதோ அப்புறம்தான் நமக்கு நிம்மதி!”

“ஹா ஹா ஹா”

“சரிடி கவிதா! நான் கால் பண்ணுறேன்”

“சரிடி பார்க்கலாம்!”

“பை வினோத்!”

**************************

“ஆமா, என்ன அதுக்குள்ள பெட் ரூம்ல விஜயம்?”

“ப்ரஷாந்த்தை மார்னிங்ல போயி பிக் அப் பண்ணனும்.”

“அதனால?”

“ஒண்ணுமில்லை!”

“சண்டே நைட் ஃபுட்பால் அதுக்குள்ள முடிஞ்சிருச்சாக்கும்?”

“இட் வாஸ் போரிங்”

“சரி, இந்த சல்வார் சிப்பை கழட்டிவிடுங்க. என் முடியைப் பிடிச்சி இழுக்குது”

“கார்த்தாலயிருந்து இப்படியேவாடி  திரிஞ்ச? உன் தலைமுடி ஒரு கொத்து சிப்ல மாட்டியிருக்கு.”

“சரி சரி பிரா கொக்கியை நான் கழட்டிவிட சொல்லல. சல்வார் சிப்பை மட்டும்தான் கழட்டிவிடச் சொன்னேன்..”

“கொஞ்ச நேரம் சும்மா இருடி. என்ன வயசுடி ஆகுது உனக்கு, மாலா?”

“எனக்கா?  இப்போத்தான் பதினெட்டு நடந்துக்கிட்டு இருக்கு!”

“நெஜம்மாவா?”

“சரி "மால்"ல ரெஸ்ட் ரூம் போயிட்டு வரும்போது அந்த வைட் லேடி என்னவோ உங்களைக் காட்டி சொல்லிட்டுப் போனா.. என்ன பண்ணுனீங்க அவளை?”

“நான் ஏன் எவளையும் என்னவும் செய்றேன்?”

“ச்சீ பின்னால பேண்டிஸ் உள்ள கைவிடாதீங்க..ரொம்ப "நாட்டி" நீங்க.”

“சரி முழுசா கழட்டிடுறேன்.."

"இது மட்டும் நல்லா செய்றீங்க."

"என்ன சைஸ்டி உன் இது?”

“என்ன சைஸா? பேண்டிஸ் சைஸ்தான் எனக்குத் தெரியும்”

"நான் வேணா அளந்து பார்க்கவா?"

"ஏன் பார்க்க மாட்டீங்க? சரி என்னனு சொல்லுங்க"

"அதான் உன் சைஸ் ரொம்ப பெருசுடினு சொல்ல வந்தேன்!"

"ச்சீ, என் "பட்" சைஸ் பத்தி கேக்கலை! "மால்"ல என்ன நடந்துச்சுனு கேட்டேன்."

 "அவ, எதுக்கு என்னை கைகாட்டிட்டுப் போனானா?'

"என்னனு சொல்லுங்க. இல்லைனா என் தலை வெடிச்சுடும்!"

"யார்ட்டயும் சொல்லிடாதே! தெரியாமல் லேடீஸ் பாத் ரூம் உள்ள போயிட்டேன்!"

"அடப்பாவி!"

"ஏதோ யோசனையுடன் போனேன்டி.. தப்பான பாத்ரூம் உள்ள போயிட்டேன் போல! உள்ள போனதும்தான் தெரிஞ்சது. என்னடா இது வேற மாரி இருக்குனு.."

"ஹா ஹா ஹா.  உங்களை என்ன பண்ணலாம்?"

"நல்லவேளை உள்ள யாரும் இல்லை! உடனே வெளிய வந்துட்டேன். நான் சரியா வெளிய வரும்போது அந்தம்மா உள்ள வர நுழையப்போனாள். நான் லேடீஸ் பாத்ரூம்ல இருந்து வெளிய வர்ரதப் பார்த்ததும்  அவ குழம்பிட்டாள்..முழிச்சிட்டு திரும்பி வெளிய போனாள். நான்  வேகமா வெளிய வந்து மென்ஸ் ரூம் உள்ள போயிட்டேன்.  "

"உண்மையச் சொல்லுங்க! எவளையும் நேக்கடா பார்த்துட்டீங்களா?'

"யாருமே இல்லைடி. உடனே வெளிய வந்துட்டேன். வெளிய வரும்போதுதான் இந்தம்மாவைப் பார்த்தேன்."

 “ஏங்க இப்படி என் மானத்தை வாங்குறீங்க?”

“உனக்கு என்ன இப்போ மானம் போச்சு? என்னைத்தான் அவ தப்பா நெனைச்சு இருப்பாள்?”

“ஒரு வேளை இவனோட ஆளு, அதான் நான், சரியில்லையோ என்னவோ அதான் அலையிறான்னு நெனச்சிருப்பாள்.”

“அதுதான் உண்மையோ என்னவோ? நீ என்னை சரியா கவனிக்கலை போலடி மாலா. அதான் இப்படி லேடிஸ் பாத்ரூம்ல எல்லாம் நுழையிறேன்?”

“கொழுப்பா? உங்களுக்கு நான் எதுல குறை வச்சேன்?”

“அப்படிக் கேளு?!”

“பொறுக்கி! எதுலடா கொறை வச்சேன்?”

“சொல்றேன் இருடி” நு ஓடிப்போயி ஒரு பார்சல எடுத்துட்டு வந்தான்.

“என்ன இது?”

“உனக்குத்தான். எனக்கு எந்தக்குறையும் வைக்காதனால ஒரு கிஃப்ட்!”

“கிஃப்ட்டா? என்ன அது?”

"உனக்கு ஒரு ஸ்பெஷல் "பேங்கில்"ஸ் வாங்கி வந்திருக்கேன்"

"என்ன அது? கோல்டா?'

"கொஞ்ச நேரம் கண்ணை மூடு!  கை ரெண்டையும் பின்னால வை!"

" சரி, இந்தாங்க!"

"கொஞ்ச நேரம் அப்படியே இருடி!"

"அடப்பாவி! என்னய்யா இது! கைக்கு விலங்கா மாட்டுற?"

"சும்மா அன்பு விலங்கு! "

 Sexy Soft Red Steel Fuzzy Furry Handcuffs Fur Trimmed Sex Toy Hand Cuffs

"இப்படி விலங்குல கட்டிப் போட்டுட்டா நான் எதுவும் செய்யமுடியாதே!  அரிச்சா சொறியக்கூட முடியாதே!'

"இந்த அடிமை எதுக்கு இருக்கேன்? எஜமானிக்கு எல்லாப் பணிவிடையும் செய்யத்தான்."

"ஆஹா! பெரிய தியாகி! என்ன ப்ளான் இன்னைக்கு?'

"இரு மொதல்ல உனக்கு "அண்ட்ரெஸ்" பண்ணி விடுறேன். ட்ரெஸ் போட்டிருந்தால் நீ கண்றாவியா இருக்க!"

"இருப்பேன் இருப்பேன்..ஆமா நான் என்ன செக்ஸ் ஸ்லேவா?'

"நீதானே காதல் விலங்குனா என்னனு கேட்ட?"

"அதுக்காக? ஒரு க்யூரியாசிட்டில கேட்டேன்"

"என்னனு சொல்லித் தர்றது என் கடமை இல்லையா? அப்படியே பெட்ல படுடி! "

"இப்படி விலங்கை மாட்டிக்கிட்டு..குப்புறத்தான் படுக்க முடியும்? இல்லைனா சைட்ல படுக்கவா?!"

"உன் வசதிப்படி, படு!"

"சரி! இப்போ என்னை என்ன பண்ணப்போறீங்க?"

"சும்மா உன்னை கைதியா வச்சு வேடிக்கைப் பார்க்கப் போறேன்."

"அவ்ளோதானா?"

"அவ்ளோதானாவா? நான் என்ன பண்ணினாலும் உன்னால உன் கைகளை வச்சு ஒண்ணும் பண்ண முடியாது! கிச்சுக்காட்டினால்க் கூட"

"லேடிஸ் பாத்ரூம் உள்ள போனதுக்கு உங்களைத்தான் பிடிச்சு உள்ள போடணும் . ஆனால் என்னை இப்படி விலங்கு போட்டு அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்க? என்ன நியாயம் இது?"

"அதையே சொல்லாதடி! இட் வாஸ் அன் ஆக்ஸிடெண்ட்!"

"சரி, ஒரு முத்தம் கொடுங்க"

" "

"ச்சீ அங்கேயா முத்தம் கொடுக்கச் சொன்னேன்? இங்கே உதட்டில்"

"பேசாமல் இருடி! நான் ரொம்ப மூடா இருக்கேன்"

"ச்சீ!"

"மாலா! நீ வர வர ரொம்ப அரக்கியாகிக்கிட்டே வர்ர. புருஷன்னு கொஞ்சம்கூட மதிப்பு மட்டு மரியாதை எதுவுமே இல்லை. என்ன சொன்னாலும் திட்டுற. அதான் இன்னைக்கு உன்னைக் கைதியா வச்சு அடிச்சு, துன்புறுத்திப் பழிவாங்கி என் ஆசையைத் தீர்த்துக்கப் போறேன்."

"ஆமா, நீங்க அடிச்சு, துன்புறுத்தி, பழிவாங்கி.. லேசா அழுறாப்பிலே நடிச்சா உடனே ஆஃப் ஆயிடுவீங்க. உங்களைத் தெரியாதா எனக்கு?"

"அடிப்பாவி!"

"எனக்கு விலங்கு மாட்டினாலும், நாந்தான் ராணி. நீங்கதான் என் அடிமை!"

-முற்றும்.

Friday, December 21, 2012

ஏன்ப்பா நீங்கள்லாம் நெஜம்மாவே ரூம் போட்டு யோசிப்பேளா?!

தெரியாமல்த்தான் கேக்கிறேன்..நீங்கள்லாம் நெசம்மாவே ரூம் போட்டு யோசிப்பீங்களா, சார்? இல்லை ஊருப்பயலுக சொல்றான்னு நீங்களும் சொல்லிண்டு திரியுறேளா? காற்றாட மரத்தடியில் உக்காந்து யோசிக்கலாம்.. தனிமையில் கடற்கரையில் உக்காந்து யோசிக்கலாம். ஏன் உங்க வீட்டுக் கொள்ளைப்புறத்தில் உக்காந்துகூட யோசிக்கலாம். உங்க வீட்டு பாத்ரூம்லகூட குளிக்கும்போது யோசிக்கலாம்! அதென்ன எவன் காசுலயோ ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு அடச்சுசுண்டு யோசிக்கிறது? அல்கஹால் தான் சிந்தனைகளை தூண்டிவிடுமா? அப்படி எதுவும் ஆராய்ச்சிக்குறிப்பு இல்லையே!

அர்த்தமில்லாத புதுமொழிகள் என்று சொல்லலாம். நான் எல்லாம் என் முன்னால ஆயிரம் பேர் இருந்தாலும் என் உலகில் வாழமுடியிற கேஸ்! பஸ்ல ட்ரயின்ல, ஏன் நடக்கும்போது, ஏன் ஓடும்போதுகூட யோசிக்க முடியும். சிந்தனைகளை ஒன்றுகூட்ட முடியும்.  பொதுவாக நம் மனநிலை பொறுத்து அதற்கான சிந்தனைகள் ஓடும். மனநிலைதான் இதில் ரொம்ப முக்கியம்! சந்தோஷமாக இருக்கிறேனா?  கவலையாக இருக்கிறேனா?  கோபமாக இருக்கிறேனா? இல்லை ரொமாண்டிக்கா இருக்கிறேனா? என்பதைப் பொறுத்து அதற்கேற்ப என் சிந்தனைகள் ஓடும்! ஆனால் ஒரு $150க்கு ரூம் போட்டு ஒரு ஹோட்டல் உக்காந்து யோசிக்கச் சொன்னால் யோசனையும் வராது ஒரு மண்ணாங்கட்டியும் வராது. ரூமை காலி பண்ணியதும் வேணா ஏதாவது  நல்ல சிந்தனைகள் வரலாம்!

ஊர் விட்டு ஊர் போகும்போது நண்பர்கள் உயிரை வாங்காமல் ரூம் போட்டு தங்குவதெல்லாம் உண்டுதான். ஆனால், ஏதோ ஒரு கதை எழுதணும், கட்டுரை எழுதணும், கவிதை எழுதணும்னு ரூம் போட்டு உக்காந்துக்கிட்டு தண்ணியப் போட்டுட்டு மூளையைக் கசக்கி யோசிப்பார்களாம் ஒரு சிலர். ஆமா, யோசிக்கிறேன்னு சொல்லிட்டு ஏதாவது ஹாலிவுட் படத்துல உள்ள ஐடியாவை கொண்டுவந்து இறக்குவாணுக. இல்லைனா ஏதாவது ஒரு நாட்டில் எவனோ எழுதிய கதை தமிழ்ப்படுத்தி புதுச்சரக்கா விப்பாணுக. இதுமாரி சிந்தனைகள்தான் வரும் ரூம் போட்டு யோசித்தால்! ஒரு சில சில ப்ரஃபெஷனல் திருடர்கள்  இதுமாரி எதையாவது சொல்லிட்டுப் போகட்டும். அதென்ன ஆளாளுக்கு இதை ஒரு பெரிய வசனம் மாரி, பழமொழி சொறமாரி சொல்லிண்டு திரிகிறானு எனக்கு விளங்கவில்லை! யாராவது ரூம் போட்டு யோசிக்கிறவங்க அப்படி யோசிச்சு வந்த சிறப்பான ஒரு க்ரியேஷனைச் சொல்லி எனக்கு விளக்கினால் நல்லாயிருக்கும்! சும்மா சொல்லுங்க! நான் நம்ப முயல்கிறேன்!

இது ஒருபுறம் இப்படி ரூம்போட்டு யோசிக்காதவன் ரூம்போட்டு யோக்கிறதைப் பத்தி சொல்லிண்டு திரிகிறது. இன்னொரு பக்கம் பழமொழிகளை இஷ்டத்துக்கு அவன் அவன் தோதுக்கு பயன்படுத்திக்கிறதுனு ஒரு சில இழிபிறவிகள் திரியுதுக. ஏதாவது பச்சை அயோக்கிய்த்தனம் பண்ணிப்புட்டு, அதற்கு ஏதாவது ஒரு தோதா பழமொழியைச் சொல்லுறது. எவனையாவது வேணும்னே ஜோடிச்சுக் கோர்த்து விட்டுப்புட்டு "நெருப்பில்லாமல் பொகையுமா?" னு சொல்றது!

சமீபத்தில் நம்ம "படிக்காத மேதை" கமலஹாசன் செய்ற மேதாவித்தனம்.. இவரு படத்தை, ரிலீஸோட சேர்த்து டி டி எச் ல ரிலீஸ் பண்ணுவேன்னு ஒரு உலகமகா யோசனையோட வந்துபுட்டாறாம்.

இந்த முயற்சி வந்து வடிகட்டின சுயநலம்! ஏன் என்றால் தியேட்டருக்கு போறவனுக காசை டைரக்டா இவரு முழுங்கிடுவாரு. தியேட்டரை வச்சு பொழைப்பு நடத்துறவன் என்ன பண்ணுவான்?

தியேட்டர் வச்சு நடத்துவறன் எல்லாம் கொள்ளையடிக்கிறான்னு சொல்ல முடியாது. சிவாஜி, எந்திரன் போன்ற படங்களுக்கு பெரிய தொகையைக் கொடுத்து எடுத்துப்புட்டு, நஷ்டமடஞ்சவன் எல்லாம் உண்டு! உடனே சமூசா, பாப்கார்ன் வித்து சம்பாரிச்சிருப்பான்னு விடாதீங்கப்பா! ப்ரமீட் சாய்மீரா குசேலன் படத்தை 60 கோடி கொடுத்து எடுத்து நாசமாக் போகலையா என்ன?

டி ட்டி எச் ரிலீஸால பாதிக்கப்படப்போற தியேட்டர் ஓனர்..என் காசை அள்ளி உன் பாக்கட்டுல போடாத! போட்டால் உன் படத்தை எங்கேயாவது "ஆண்லைன் தியேட்டர்ல" ரிலீஸ் பண்ணிடுனு சொல்லத்தான் செய்வான்..

டி டி எச் ல ரிலீஸ் பண்ணுவது கமலஹாசனுடைய சுயநலம்! அப்படி செய்தால் தியேட்டரில் ரிலீஸ் பண்ணமாட்டோம்னு சொல்றது தியேட்டர்காரன் சுயநலம்..

எல்லாம் சரி, இந்த உலகமகா ஐடியாவை வச்சுக்கிட்டு இவரு பேசுற வியாக்யாணம்தான் வேடிக்கையா இருக்கு. அதாவது உலகம் உருண்டை! னு சொன்னப்போ எல்லாரும் எதிர்த்தாங்களாம். ஆனால் கடைசியில் அது உருண்டையாப் போயிடுச்சாம். அதேபோல் இந்த மேதாவி டி டி எச் ல ரிலீஸ் செய்ற ஐடியா "உலகம் உருண்டை"னு சொன்ன உண்மைக்கு சமமானதாம்!  அதுபோல இந்த கதையைச் சொல்லிக்கிட்டு திரிகிறார். ஆனால் இந்த டி ட்டி எச் ரிலீஸ் ஐடியாவுக்கும் உலகம் உருண்டை யானதுக்கும் எந்தவிதமான  சம்மந்தமும் இல்லை!  

உண்மை என்ன? டி ட்டி எச் ரிலீஸ் விளைவுகள் என்ன ஆகும்னு எவனுக்கும் தெரியாது. கமலஹாசன் மண்ணைக்கவ்வுவாரா இல்லைனா தன் பாக்கட்டை நிரப்புவாரானு தெரியலை. விளைவுகள் எப்படி வேணா இருக்கலாம். இது ஒரு எக்ஸ்பெரிமெண்ட்! விளைவுகள் நன்மை பயக்குமா இல்லை உபத்திரவமா முடியுமா? என்பது யாருக்கும் தெரியாது!

 சப்போஸ், இந்தக் குப்பையை எவன்  1000 ரு கொடுத்துப் பார்ப்பான்னு  ரொம்பப்பேரு பார்க்கவில்லைனா, அதே சமயத்தில் திருட்டு வி சி டி அதிகமானால் இந்தாளு ஐடியா மட்டமானதுனு ஆயிடும்! அப்போ என்ன சொல்லுவாரு? "உலகம் உருண்டை"னு நம்ப மாட்டிங்கிறான் நம்மாளுனா? இந்த டி ட்டி எச் ரிலீஸ் ஐடியா மண்ணை கவ்வினால், உலகம் மறுபடியும் தட்டையாகிவிடும்!

இப்போ இவர் ரசிகாமணிகள் தியேட்டர் ஓனர்கள் சங்க தலைவரை கூப்பிட்டு மிரடினார்களாம். கமலஹாசன் ரசிகர்கள்  எல்லாம் மேதாவிகள்னு சொல்லிண்டு திரிவா. அது  ஏன் இப்படி சில்லறைத்தனம் செய்றானு தெரியலை இந்த மேதையை வணங்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் !

3 Kamal fans held for threatening producer

Dec 21, 2012, 05.00AM IST TNN

CHENNAI: Three fans of actor Kamal Hassan were arrested by the Central Crime Branch on Thursday for threatening producer K Rajan who had opposed the telecast of Kamal-starrer "Viswaroopam" through DTH ahead of the scheduled release of the movie in January. The arrested were members of Kamal Haasan fan club in Hosur.

Police said Rajan, who has been opposing the actor's bid to telecast the film ahead of its theatrical release, lodged a complaint saying he received threat calls from three people who claimed they were fans of Kamal Hassan. "They reportedly demanded that he stop from expressing any views against the actor," police said. They also said that he would face dire consequences if he didn't listen to them. Rajan provided police the number from which the call was received.

Last week, the Cyber Crime Cell of city police traced the call to Hosur. Subsequent investigations identified the callers as Murugan, Moorthy, and Surya Prakash. A case was registered and the three nabbed. They were later remanded in judicial custody.
இதுக்கும் ஏதாவது நல்ல பழமொழி சொல்லுங்கப்பா!

Wednesday, December 19, 2012

பேருந்தில் மாணவியை வன்புணர்வு செய்யும் வீரர்கள் நிறைந்த பாரதம்!

ஒரு பக்கம் சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?னு ஒரு சிலர் நம்மூர்  பெருமை பேசும் பிதற்றல்! இன்னொரு பக்கம் நம்ம ஊர்ல லஞ்சம், ஊழல், விபச்சாரம், பிச்சைக்காரன்னு இருந்து கொண்டு இருக்குனு அதைப்பற்றிக் கவலைப்பட்டால்.. இப்போ தலைநகர் டெல்லியில் ஒரு 23 வயது யுவதியை ஓடும் பேருந்தில் நாங்கைந்து மனித மிருகங்கள்  பாலியல் வன்புணர்வு செய்துள்ளன!  அவளுடன் பயணித்து வந்த அவளுக்கு உதவ வந்த தோழனை பேருந்தில் இருந்து அடித்து தூக்கி எறிந்துவிட்டு! மேலும் பஸ் ட்ரைவர் இந்த மிருகங்களுக்கு உதவி பண்ணியிருக்கிறார்!

உலகமே நம்மைப் பார்த்து காறி உமிழும் ஒரு அவல நிலை இது. இந்த நிகழ்ச்சியால் நாம் அனைவருமே வெட்கப்பட வேண்டிய தருணம் இது! செய்தது ஆண்கள் னு வெட்கப்படனும்! அந்த மிருகங்கள் இந்தியர்கள் னு வெட்கப்படணும்.

 தப்பு செஞ்சவங்க யாருனு பார்த்தால் படிக்காதவங்க, உழைக்கும் வர்க்கம்போல தோணுது.

* பவன் குப்தா (குமார்)- வயது 19- பழம் விற்பவன்

* வினய் ஷர்மா- வயது 20- இவன் ஒரு ஜிம் இண்ஸ்ட்ரக்டராம்

* முகேஷ் -வயது 26- இவன் தான் ட்ரைவெர்னு சொல்றாங்க


பலியான பெண், ஒரு கல்லூரி மாணவி, மருத்துவக்கல்லூரில படிப்பவள்!

படிப்பில்லாதவனுக்கு அறிவு இருக்காதுனு சொல்வதற்கு இது ஒரு க்ளாசிக் உதாரணம்னு சொல்லலாம். ஆனால் படிப்புக்கும் பண்புக்கும் சம்மந்தம் இல்லை என்பதுதான் உண்மை!

 இன்னொன்னு இதுபோல் இவர்கள் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்வது இதுதான் முதல் முறையா? என்பதும் பெரிய கேள்விக்குறி!

இதுபோல் நடக்கும்  மிருகங்கள நெறையவே இந்தியா முழுவதுமே, எல்லா இடத்திலும் பரவலாக இருக்காங்க. ஏன் தமிழ்நாட்டிலும்கூட  வாழ்ந்து கொண்டுதான் இருக்காங்க. இந்தியாவில் பொதுவாக பல ஆண்கள், பெண்களை தங்களுக்கு இணையாக, சமமாக  நினைக்காமல், "தன்னிடம் அடங்கிப் போகணும்"  என்கிற சில்லறை மனோபாவத்துடன்தான் வாழ்றாங்க என்பதுதான் இந்தச் செய்திகள்மூலம் நாம் இன்னுமொரு முறை அறிந்துகொள்வது.

நீயா நானா? நிகழ்ச்சியில் கூட பெண்கள் ஆடையணிவது, கவர்ச்சியாக ஆடையணிவது போன்ற தலைப்புகளில் விவாதிக்கும்போது ஒரு சில "படித்த மைனர்கள்" என்னவோ பெண்கள் இவன் சொல்றபடிதான் நடக்கணும், இவன் சரினு நெனைக்கிறபடிதான் பெண்கள் ஆடை அணியணும், வாழனும். இல்லைனா நான் அவர்களை, நான் கேலி செய்வேன், அசிங்கமா விமர்சிப்பேன் என்பதுபோல் பேசியதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது! மேலும் பஸ்ஸில் பெண்கள் மேலே கை வைப்பது, உரசுவது, செல் ஃபோனை வச்சி அசிங்கமா ஃபோட்டோ எடுப்பது, கேவலமான காமெண்ட் பாஸ் பண்ணுவது, இதெல்லாம் பெரிய தவறுனே தெரியாமல் பெண்களை பலவகையில் சித்ரவதை செய்வது ஆண்களின் உரிமை என்பதுபோல் மிருகங்களா அறியாமையில் வாழ்ந்துகொண்டுதான் இருக்காங்க.

ஹரியானாவில் ஒரு  தலித் பெண்ணுக்கு அவலம் நடந்தபோது அதை யாரும் (அரசியல்வாதிகள்) பெரிதுபடுத்தவில்லை! இன்று  டெல்லியில் ஓடும் பஸ்சில் அதேபோல் அவலம் ஒரு மேட்டுக்குடி பெண்ணுக்கு நடந்துள்ளது. உடனே எல்லாரும் கண்ணைத் திறந்து உலகைப் பார்க்கிறாங்க!

இன்று இந்தப்பெண் பலியாகக் காரணம் என்ன?  நேற்று இவளைப்போலவே பலியான இன்னொரு பெண் தலித் என்பதால் நடந்த அநீதியை சட்டம் சரியாக தண்டிக்காமல் அசட்டையாக விட்டதால்தான். என்னைப்பொறுத்தவரையில், தலித் என்றோ மேட்டுக்குடி என்றோ இந்நேரம்  நாம் பார்க்கக்கூடாது.
 இது ஒரு ஆண் - பெண் பிரச்சினை! இந்த 21 நூற்றாண்டிலும் பெண்ணை, அறிவுகெட்ட ஆண்  என்னவேணா செய்யலாம்னு  மனப்பால் குடிக்கிறான்!

கடுமையான சட்டம் கொண்டுவந்து, எந்தப்பெண் இதுபோல் பாதிக்கப்பட்டாலும் கடுமையான தண்டனை வழங்கினாலேயொழிய இதுபோல் குற்றங்கள் நடப்பதை முழுவதும் அகற்றமுடியாது! என்னைப் பொறுத்தவரையில் இந்தக் குற்றவாளிகளை இரக்கமே இல்லாமல் உலகறிய தூக்கில் போடணும்! கடுமையான தண்டனை வழங்கவில்லை என்றால், 2-3 வருடத்தில் மறுபடியும் வெளியில் நடந்தால், இதுபோல் குற்றங்கள் தொடரத்தான் செய்யும்!

Tuesday, December 18, 2012

டிசம்பர் 21 2012ல் உலகம் ஏன் அழியாது?! தெளிவான விளக்கம்!

உலகம் அழியப்போதாம்! மயன் காலண்டர் சொல்லிடுத்தாம்! ஆனால் யாருமே நம்பத் தயாராயில்லை! ஏன்? வாழனும் ஆசை! சாதிக்கவேண்டியது நெறையா இருக்கு! அதுக்குள்ள எப்படி? அதெல்லாம் அழியாது!

Mayan ceremony
The modern Maya who live in Guatemala, Honduras, Belize and Mexico’s Yucatan peninsula aren’t worried about Dec. 21.
ஆனால் உலகம் அழிவதுபோல் ஒரு நல்ல விடயம் எதுவுமே இல்லை! ஒரு நிமிடம் யோசிங்க!  பொதுவாக சாவின்போது நம் உற்றார் உறவினர் நண்பர் யாரும் நம்முடன் வருவதில்லை! சாவின் மிகப்பெரிய வலியே நம்மை இழப்பவர்கள் நாம் இல்லாமல் துன்புறுவதுதான்! எல்லாருமா சேர்ந்து ஒரேயடியா போயிட்டா என்ன பிரச்சினை? எல்லாருமே அனாதைப் பொணமாப் போயிடலாம்! அதைவிட பாக்கியம் மனிதனுக்கு எதுவுமே இல்லை!

அந்தமாரி ஒரு நல்ல விடயம் எல்லாம் நடக்கவே நடக்காது! ஒவ்வொரு மனிதனும் தான் செய்த அநியாயத்திற்கெல்லாம் உயிரோட இருந்து அனுபவிக்க வேண்டியது நெறையா இருக்கு! உலகம் அழியலைனா, இப்படி ஆயிப்போச்சே! னு  கவலைப்படுங்க! அழுங்க! ஒப்பாரி வைங்க!

மற்றவர்களை விடுங்க! இந்த உலகில் எல்லாரும் யோக்கியர்கள்தான் என்னைத் தவிர! எனக்கெல்லாம் அவ்வளவு நல்ல சாவு எல்லாம் கெடைக்காது! :-) இன்னும் "அனுபவிக்க" வேண்டியது நெறையா இருக்கு! அதனால் உலகம் அழியாது! :-)

Monday, December 17, 2012

கவுதம் மேனனுக்கு எப்படி ஜால்ரா அடிப்பது?

நான் ஒரு கவுதம் மேனன் ஜால்ராங்க!  எப்படியோ கெளதம் மேனன் எடுத்த நடு நிசி நாய்கள் படத்தை வித்தியாசமான பார்வையில் பார்ப்பதாகச் சொல்லி சிறந்த படம்னு  விமர்சனம் எழுதி அவருடைய நன்மதிப்பை ஓரளவுக்குப் பெற்றேன். என்னது?  "படம் நல்லாயிருந்ததுனா  நல்லாயிருக்குனு எழுது.  நல்லாயில்லைனா நல்லா இல்லைனு எழுது. விமர்சனம் என்கிற பேரில் விபச்சாரம் பண்ணக்கூடாது" னு  மேதாவிகள் சொல்றானுகளா!  ஆமா,  ஊர் உலகம் ஆயிரம் சொல்லும்!  அதனாலென்ன? ஊர் ஒலகம் நமக்கு சாப்பாடு போடாது! மேதாவிகள் சொல்றதையெல்லாம் நம்ம சீரியஸா எடுக்கப்படாது!

என்ன நடுநிசி நாய்கள் விமர்சனத்துக்கு வந்த எதிர்ப்புக்கெல்லாம் எப்படியோ "உண்மையைத்தான் எடுத்தாரு", "உனக்கு திறந்த மனசு இல்லை" "கலாச்சாரக் காவலர்கள் சும்மா உண்மையை ஏத்துக்க மாட்டேன்கிறாங்க" அப்படி இப்படி னு சொல்லி எப்படியோ நான் சமாளிச்சுட்டேன்.

இப்போ மறுபடியும் என் கெட்ட நேரம்!

அதான் இந்த "நீதானே என் பொன் வசந்தம்" விமர்சனம் எழுத வேண்டிய கட்டாய சூழல் எனக்கு!

படம் நல்லாவேயில்லைனு எல்லாரும் சொல்லிட்டானுக. என்னங்க ஒருத்தன்கூட இந்தப்படம் நல்லாயிருக்குனு இதுவரை சொல்லவில்லை!  ஆமா, படம் குப்பையாப் போச்சு! இப்போ நான் என்ன பண்ணுறது?  என்னனு விமர்சன்ம எழுதி அழறது?

 நம்ம என்னதான் கவுதமுக்கு ஜால்ரா அடிப்பதுபோல் விமர்சனம் எழுதினாலும் ஓரளவுக்காவது- கொஞ்சமாவது  நியாயமா எழுதனும். அப்படி எழுதினா இந்தப்படம் நல்லாயில்லைனு சொல்லியேதான் ஆகனும்!  எவனுக்குத்தான் அவன் படம் நல்லாயில்லைனு விமர்சிச்சாப் பிடிக்கும், சொல்லுங்க? கவுதம் மேனன் என்ன விதிவிலக்கா? அப்படி ஒரு விமர்சனம் எழுதிய, அவன் படம் பிடிக்காத எனக்கு,  எப்படி அந்தாளு வாய்ப்புத் தருவான்? இல்லை நட்பு பாராட்டுவான்? உண்மையா நான் விமர்சனம் எழுதினா எனக்கு கவுதம் மேனனிடம் கெடைக்கப்போவது கெட்ட பெயர்தான்! சந்தேகமே இல்லை! இப்போ என்ன பண்ணுறது?

ஒண்ணு பண்ணலாம்.. இப்போதைக்குப் படம் பார்க்கல, படம் பார்க்க முடியலை, டிக்கட் கெடைக்கலை, வேற தியேட்டர் போயிட்டேன்..னு எதையாவது கதை எழுதி தப்பிச்சிட வேண்டியதுதான். என்ன இப்போ? ஒரு 10 நாள் ஓடட்டும், படம் ஓப்பனிங் கலக்சன் எல்லாம் ஆகி முடிக்கட்டும் அப்புறம் எழுதுவோமே ஓரளவுக்கு சுமாரான  விமர்சனம்? இல்லைனா விமர்சனம் எழுதாமலே விட்டுப்புடுவோம்!

என்னை யாருனு உங்களுக்குத் தெரியுதா?  என்ன அது? ஆமா ஆமா, நான் ஒரு பதிவுலக வியாபாரி! :-)

Friday, December 14, 2012

எச்சரிக்கை!அமெரிக்காவைவிட்டு விரைவில் வீடு திரும்புங்க!

தொடர்ந்து துப்பாக்கி சூடு, மக்கள் பலி என்று ஆகிக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா என்னும் சொர்க்க பூமியில். கனக்டிகட் என்னும் மாநிலத்தில் நியூடவ்ன் என்னும் ஊரில் இன்று 27 பேர் மரணம்! ஒரு 20 வயதுப் பையன் துப்பாக்கியுடன் ஒரு பள்ளிக்குச் சென்று, அவன் அம்மாவையும் (அவர் ஒரு ஆசிரியை), மற்றும் அந்தப்பள்ளியில் இருந்த சிறுவர் சிறுமியர் (மாணவ மாணவியரை) 18 பேர் மற்றும் 8 பேர் (சக ஆசிரியை போன்றவர்களை) சுட்டு கொன்று இருக்கிறான்!




சூட்டிங் நடந்த இடம்



ஷூட்டிங் நடந்த பிறகு குழந்தைகளை அந்த இடத்தில் இருந்து வேறு பாதுக்காப்பான இடத்துக்கு அழைத்துச் செல்றாங்க!



கடந்த ஆறு மாதமாக எவனாவது ஒரு லூசுப்பயலால இதுபோல் தொடர்ந்து பல அப்பாவிகள் சுட்டுக்கொல்லப் படுறாங்க!


27 Killed in Connecticut Shooting, Including 18 Children



 A gunman killed 26 people, 18 of them children, in a shooting on Friday morning at an elementary school in Newtown, Conn., about 65 miles northeast of New York City, a law enforcement official said.

The gunman, who was believed to be in his 20s, walked into a classroom where his mother was a teacher. He shot and killed her and then shot 18 students in the classroom. He also shot seven other adults.The gunman then killed himself inside the school. The shooting ranks among the worst in recent United States history.
A 9-year-old student said he was in the gym when the shooting erupted.
“We were in the gym, and I heard really loud bangs,'’ said the boy, as he stood shivering and weeping outside the school with his father’s arms draped around him. “We thought that someone was knocking something over. And we heard yelling, and we heard gunshots. We heard lots of gunshots. We heard someone say, ‘Put your hands up.’ I heard, ‘Don’t shoot.’ We had to go into the closet in the gym. Then someone came and told us to run down the hallway. There were police at every door. There were lots of people crying and screaming.'’
Another student at the school told an NBC affiliate in Connecticut: “I was in the gym and I heard like seven loud booms, and the gym teachers told us to go in the corner and we huddled. We all heard these booming noises, and we started crying. So the gym teachers told us to go into the office where no one could find us. Then a police officer told us to run outside.”
State police said the Newtown police called them shortly after 9:30 a.m., according to Lt. J. Paul Vance of the Connecticut State Police. “On- and off-duty troopers responded to the school, and with Newtown police immediately upon arrival entered the school and began an active shooter search,” Lieutenant Vance said.
Meredith Artley, the managing editor of CNN.com, said that someone who works at the school told her the shooting happened in the hallway. “She described it as a ‘Pop, pop, pop,'” Ms. Artley said. “She said three people went out into the hall and only one person came back, the vice principal, she said, who was shot in the leg or the foot, who came crawling back. She cowered under the table and called 911. She never saw the shooting. There must have been a hundred rounds.”
President Obama was briefed on the shooting at 10:30 a.m., the White House said.
Danbury Hospital said it was treating three patients from the shooting scene, according to its Facebook page. The hospital, which is not far from the elementary school, said it was on lockdown.
At the hospital, stunned-looking personnel in white coats looked shaken as they gathered in small groups talking about the shooting. In a corner near the gift shop, one woman comforted a weeping colleague.
In the coffee shop, a few customers finished their sandwiches at the lunch counter and the cashier wiped tears from her eyes as she rang up customers.
In a mostly empty fifth-floor waiting room, three women watched local coverage of the tragedy, shaking their heads at each new horrifying detail.
Gov. Dannel P. Malloy arrived at the scene of the shooting on Friday afternoon.
The school, located among wooded hills and suburban tracts in Fairfield County, 12 miles east of Danbury, serves kindergarten through fourth grade. The school has about 700 students.
“It’s just a little country school,'’ said Robert Place, 65, as he stood near the scene. “The look is very ‘50s or ‘60s. One floor. It’s always had a good reputation. People come to Newtown for the schools.'’
The school’s principal, Dawn Hochsprung, was reportedly one of those shot. But at the home of her daughter Cristina Hassinger, in Oakville, Conn., the family was still awaiting any news of her fate.
“We’re looking for any hope,” said Ryan Hassinger, the son-in-law of the principal. “If she’s in the hospital, any chance is better.”
He said that his wife, Cristina, 28, and “her sister are there now,” with Connecticut state troopers, and that he and other relatives were awaiting word on any news.
“I looked on Twitter and it says that she is passed,” said Mr. Hassinger. But, he added, the family was “just waiting.”
A photograph published by a local newspaper, The Newtown Bee, showed a line of children being escorted out of the school with some of the children crying.
In front of a senior center next door to the school, a 20-year-old woman was with her 4-year-old sister, who was in the school at the time of the shooting. The older woman came to pick up her younger sister along with their mother. The girl had her arms and legs wrapped around her older sister.
When a reporter asked the woman what the little girl knew of what had happened, the woman said, “Absolutely nothing, and we don’t plan to tell her anything.”
Reporting was contributed by Peter Applebome, Robert Davey, Elizabeth Maker and Kristin Hussey Zisson from Connecticut, and Al Baker, Joseph Goldstein, Andy Newman, Jennifer Preston and Wendy Ruderman from New York.

அமெரிக்க வாழ்க்கை எளிதானதல்ல! பல லூசுப்பயலுக துப்பாக்கி வச்சுண்டு அலைவானுக!  ஒரு சிலர் தெரியாமல், இது என்னவோ சொர்க்க பூமினு நெனச்சு வந்துடுறாங்க! நாள் ஆக ஆக, சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?" னு ஞானோதயம் வந்து திரும்பிப்போயி சந்தோஷமாக தங்கள் ஊரில் வாழ்றாங்க!

மறுபடியும் சொல்றேன் அமெரிக்கா, சொர்க்க பூமியல்ல! இங்கேயும் கேன்சர், ஹார்ட் அட்டாக்ல செத்துக்கிட்டுத்தான் இருக்காங்க!

 இங்கேயும் பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் இதுபோல் பரிதாபமாகக் கொல்லப்பட்டுக்கொண்டுதான் இருக்காங்க!

காரு, ரோடு, பே-செக் இதையெல்லாம் பார்த்துப்புட்டு ஏதாவது நீங்களா கற்பனையை வளர்த்துக்கிட்டு அமெரிக்காவில் செட்டிலாகிப் புடாதீங்கப்பா!

மரியாதையாக கொஞ்ச காசு சம்பாரிச்சுட்டு பிள்ளைகள் வளரும் முன்னால இடத்தை காலி பண்ணி திரும்பி உங்க ஊருப்பக்கம் போயிடுங்க! சந்தோசமா இருங்க!

Thursday, December 13, 2012

கன்னிப்பெண்ணின் கற்பை விலைக்கு வாங்க முயன்ற பிராமணாள்!

பிரசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கன்னிப்பெண் (இதுவரை யாருடனும் உடலுறவு கொள்ளாதவர்) தன் கற்பை $ 780,000 க்கு ஏலத்தில் வித்து விட்டாராம். Catarina Migliorini  என்னும் இவளை ஏலத்தில் வென்றவர் இவருடன் முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ளத் தகுதிபெற்ற  "பாக்கியசாலி"யாவார்!  இவளுடைய கற்பை அதிக விலை கொடுத்து வாங்கியவர் ஒரு ஜப்பானியர். இவரு பேரு நாட்சு னு சொல்றாங்க! அவர் படம் கிடைக்கவில்லை!

ஏலத்தில் $ 730,000 வரை கொடுத்து இவரை அடைய முயன்றவர் நம்ம இந்தியர் ஒருவர், பெயர்: ருத்ரா சேட்டர்ஜி என்னும் பெங்காளி பிராமணாள்! ஜஸ்ட் ஒரு $50,000 டாலர் குறைத்துக் கேட்டு இப்படித் தோற்றுப்போயி  நம்மள எல்லாம் அவமானப்படுத்திவிட்டார் மனுஷன்! :(



ருத்ரா சேட்டர்ஜி




இந்தப் பெண்ணை முதன்முதலாக ருசிக்க ஏலத்தில் இவர்கள் கேட்ட விலை


Catarina Migliorini
Catarina Migliorini


Brazil woman sells virginity for $780K online


A Brazilian student is set to sell her virginity for a staggering $780,000 after she put it up for auction online.
A man called Natsu, from Japan, fended off strong competition from American bidders Jack Miller and Jack Right, and a big-spender from India, Rudra Chatterjee, to secure a date with 20-year-old Catarina Migliorini.
Virgins Wanted Catarina's bid history on the ‘Virgins Wanted’ auction page.
The auction ended at 4 a.m. EST this morning, and the physical education student — who said she will use the cash to build homes for poverty-stricken families — was the subject of 15 bids
Catarina's move sparked outrage across the globe, with many claiming she was little more than a prostitute.
She also caused controversy when she revealed she would be followed every step of the way by an Australian crew for a documentary film called “Virgins Wanted.”
But, she said: “I saw this as a business. I have the opportunity to travel, to be part of a movie and get a bonus with it.
“If you only do it once in your life then you are not a prostitute, just like if you take one amazing photograph it does not automatically make you a photographer.
“The auction is just business, I'm a romantic girl at heart and believe in love. But this will make a big difference to my area,” she told Folha newspaper.
READ MORE: YOUNG BRAZILIANS AUCTION OFF VIRGINITY ONLINE TO RAISE FUNDS FOR CHARITY
Catarina will be “delivered” to her buyer on board a plane between Australia and the U.S. — being interviewed before and after the sexual act.
The intercourse itself will not be filmed and Natsu will retain a right to be anonymous, without his picture appearing in the media.
Sex toys will be banned from use and a condom will be compulsory, with Catarina saying she was prepared to prove to any sceptics that she has not had sex before.
Natsu will be tested for sexually transmitted diseases prior to the encounter.
Virgins Wanted A scene from Catrina Migliorini's video introduction on the ‘Virgins Wanted’ auction site.
A male virgin named Alexander, who is also being followed as part of director Justin Selsey's documentary, sold for $3,000 to a Brazilian woman called Nene B.
Catarina previously said she wanted to plough the money — $20,000 and 90% of the final auction price — into a non-governmental organization that will construct modern houses in her home state of Santa Catarina.
She signed up to the project two years ago when she saw an advertidement by Thomas Williams Productions looking for virgins to film.


Catarina Migliorini
Catarina Migliorini

Catarina Migliorini என்னும் இவர் கற்பை ஒரு நல்ல காரியத்துக்காக விற்றாராம்! தான் ஒரு விலைமகள் இல்லை என்கிறார். ஒரே ஒரு முறை மட்டும் கற்பை விற்றால் நான் ஒரு விலைமாது என்றாகாது என்கிறார்.

 இவருக்கு "அரங்கேற்றம் " என்னைக்கு நடந்தது/நடக்கப்போதுனு தெரியலை. இவரை வாங்கியவன் "காண்டம்" பயன்படுத்தணுமாம்! அப்புறம் அவன் செக்ஸுவல்லி ட்ராண்ஸ்மிட்டெட் வியாதி எதுவும் இல்லைனு சான்றிதழ் கொடுக்கணுமாம். அம்மணியும் "கற்பு" டெஸ்ட் (வேர்ஜினிட்டி டெஸ்ட்) பாஸாகணும்!

நம்ம உலகம் எங்கேயோ போயிண்டு இருக்கு! நம்மதான் இன்னும் பட்டிக்காடா இருக்கோம் போல!  எனக்கு அழுகை அழுகையா வருது - இப்படி கட்டுப்பட்டியா இருக்கோமே நம்மனுதான். :(

Wednesday, December 12, 2012

வினவு விஷமான கதை!

நம்ம ரசினி பத்தி வினவுதள மேதைகள் ஒரு  "மீள்" பதிவு எழுதி இருக்கா! எல்லாரும் போயி கட்டாயம் படிச்சுடுங்கோ! என்னைக்கு இது மாரி ஒரு பதிவு?  ஒருத்தன் பொறந்த நாளைக்கு! அதுவும் அந்தாளு சாகக்கெடந்தான். செத்துட்டான் னுகூட உலகம் சொல்லிக்கொண்டு திரிந்தது. அப்படி செத்து பொழைச்சு எப்படியோ வந்து சேர்ந்து இருக்கான். செத்துப் பொழச்சவன் குடும்பத்தோட பொறந்த நாள் கொண்டாடுறான்! இதென்னப்பா அப்படி என்ன ஒரு பெரிய பாவமா?

அவன் ஒருபக்கம் இருக்கட்டும்! தன் தேவைக்காக மீடியா, ஏன் பதிவுலகமே அந்தாளு பொறந்த நாளைக் கொண்டாடுது..ரஜினி ரசிகர் இல்லாதவன் எல்லாம் ஏதாவது ரஜினி படம் பத்தி எழுதுறான் - அவன் தேவைக்கு, அவன் தோதுக்கு!

வினவு மேதைகளா! சரி நீ நல்ல மனுஷன்னா ஒருத்தன் பொறந்த நாளைக்கு முடிஞ்சா அவனை வாழ்த்து. இல்லைனா என்னனு போறான்னு விட்டுத் தொலைங்க! ஒருத்தன் பொறந்த நாளுக்கு அவனை ஊரறிய கரிச்சுக் கொட்டினால், யாருக்கு அவமானம்? உனக்குத்தான் அவமானம்!

நீதான் விஷம்!

நீதான் கீழ்த்தரமானவன்!

என்னைப் பொறுத்தவரையில் வினவுசகோக்கள் தன்னை விஷம் என்றும் தான் கீழ்த்தரமானவன் என்று விளபரப்படுத்திக் கொண்டதே இந்தப் பதிவு!

 விஷத்தளத்தில் ரஜினிக்கு பொறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் அழகு!
மைனர்  கெட்டால் மாமா; மாமா கெட்டால் …? பாட்ஷா கெட்டால் பாபா; பாபா கெட்டால் …? என்ன வர இருக்கிறது என்று தெரியவில்லை. எதற்கும் ஒரு பிய்ந்த செருப்பைக் கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த படத்திற்குக் கட்டியம் சொல்ல வரும் பத்திரிகைக்காரர்களை அடிக்க உதவும். 

அதுவும் ஏதோ பொதைகுழியிலே இருந்து 2002ல எழுதினதை தோண்டி எடுத்துட்டு வந்து பொறுப்பா பப்லிஷ்ப் பண்ணி நாறடிச்சு இருக்கா!

ஏன்ப்பா ஏதோ மேதாவித்தனம் பண்ணுவதாக உங்களை நீங்களே இப்படி  கேவலப்படுத்திக்கிறீங்க? :(

Tuesday, December 11, 2012

கருந்தேளால் கடிபட்ட உ சி ர ஒப்பாரி மேல் ஒப்பாரி!

என்னப்பா இவங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை?  அதான் இந்த கருந்தேளுக்கும், உ சி ரசிகருக்கும்?? கமலஹாசன் ஒரு உலக மகா கலைஞன்னு கமலு என்ன செய்தாலும் அது ஒலக சாதனைனு கூசாமல் பொய் சொல்லிக்கிட்டு இருக்காரு/இருப்பாரு இந்த உலக சினிமா ரசிகன். இவரு யாருனு தெரியலை. இதுக்கு முன்னால் வேற வடிவுல இருந்தாரா என்னனு தெரியலை.

கொஞ்ச நாளாதான் தமிழ் சினிமா பத்தி எழுதிக்கிட்டு இருக்காரு. சினிமாவா? பொதுவாக முழுக்க முழுக்க கமல் பத்தியும் அவர் படங்கள் பத்தியும் ஏதாவது ஆராய்ச்சி குறிப்பு எழுதுவாரு.  இவர் தளத்துக்குப் போயி, கமல் செய்வதை ஏதாவது விமர்சிச்சு நம்ம பின்னூட்டம்  போட்டா, உடனே  "அம்மா! அப்பா!" னு அழ ஆரம்பிப்பதுடன் இவரோட ஒரு நாலு பேரு சேர்ந்து இவர் தளத்தில்கூடி  ஒப்பாரி வைப்பார்கள்.

வருண பகவான் வந்தாரு, பின்னூட்டமிட்டாரு, நாங்க வெளியிட மாட்டோம்னு கூடிக் கூடி இவுகளா என்னவோ செய்வாக, பேசுவாக. இவுக என்ன சொன்னாலும் "ஆமா ஆமா"னு ஆமாஞ்சாமி போட ஒரு  கமல் ஜால்ராக் கூட்டம் ஒண்ணு அங்கேயே இருக்கும். காமெண்ட் மாடெரேசன்னு கேணத்தனமா எதையோ வச்சுக்கிட்டு இருப்பாக. அங்க போயி  "நம்மளப் பத்தி பேசாதே" னு கூட சொல்ல முடியாத மாரி ஒரு நிலையில் நாம் தள்ளப்படுவோம். சரி என்னனு தொலையிறான் இந்தாளு, நல்லா யிருக்கட்டும்னு விட்டாச்சு.

இப்போ என்னனு தெரியலை திடீர்னு இவர் வழக்கமா செய்வதுபோல் கமல் படங்கள் பத்தி ரிசேர்ச் பண்ணுவதை விட்டுப்புட்டு கருந்தேள் கடிச்சுப் புடுச்சுனு என்னமோ ஒரே தொடர்  ஒப்பாரிப் பதிவா வருது இவர்ட்ட இருந்து.

ஒப்பாரி ஒண்ணு:  ‘காப்பித்திலகம்’ கருந்தேளின் ரத்த வாந்தி.

ஒப்பாரி ரெண்டு: ‘காப்பித்திலகம்’ கருந்தேள் அடித்த காப்பி. 


நமக்கு இவரு ஆராய்ச்சி செஞ்சு எழுதுற சினிமாப் பதிவே புரியாது. இப்போ இவர் வைக்கிற ஒப்பாரிப்பதிவு  ஒரு மண்ணும் புரியமாட்டேன்கிது. நான் புரிஞ்சுக்கிட்டது..இவர் பிரச்சினை, கருந்தேள் கண்ணாயிரம்னு ஒரு பதிவர் போல.. அதாங்க, பதிவர் கருந்தேள் கண்ணாயிரம்னு (ராஜேஷ்?) ஒருத்தர் கமல் படங்களை எல்லாம் எடுத்து வச்சு, அதனுடைய ஒரிஜினல் சோர்ஸ் என்னனு ஆராஞ்சி, இது இந்த ஹாலிவுட் படம், இது இந்த ஹாலிவுட் படம்னு ஓரளவுக்கு உண்மையுடன் கமலைப் போட்டு கவுத்து கவுத்து கவுத்துவாரு இல்ல? அவர்தான்.

கமலை கவுத்துவதுதான் கருந்தேளுக்கு  பிடித்தமான வேலை! கமலைப் பிடிச்ச சனியனான இவர்தான் இப்போ நம்ம உ சி ரக்கும் இப்போ பெரிய பிரச்சினை போல இருக்கு.

ஒருத்தருக்கு கமல் சாமி!

இன்னொருத்தருக்கு கமல்னா பச்சனாவி!

இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி ஒத்துப் போகும்?

இவர் ஏதோ தேள் கொட்டிருச்சு, அது கருந்தேள்..அப்படி இப்படினு பொலம்பப் பொலம்ப..அட என்ன எழவுடா இதுனு மொதல்ல ஒண்ணுமே எனக்குப் புரியலை. அவந்தான் காப்பி யடிக்கிறான், நான் ஒரிஜினல் ரைட்டரு அது இது னு வேற என்னத்தையோ சொல்லிச் சொல்லி ஏங்கி ஏங்கி அழுதுக்கிட்டு இருந்தாரு மனுஷன் பதிவுமேலே பதிவைப் போட்டு.

ஏற்கனவே ஹே ராம் பத்தி நாலஞ்சி ரிசேர்ச் பேப்பர் விட்டு இருக்காரு போல. அதான் நம்ம உலக சினிமா ரசிகர்தான். அடுத்து ஏதோ "ஒரிஜினல்"  ஹேராம் ரிசேர்ச் பதிவு ஒண்ணு எழுதினார்போல!  ஆனால் அது ஏதோ ஆங்கில விமர்சன தழுவல்னு என்று கருந்தேள் சொல்றாரு போல. சரி, இதுபத்தி  நம்ம ஏதாவது சொல்லலாம்னு  இவர் தளத்துக்கு போனா, அப்போத்தான் ஞாபகம் வந்துச்சு அங்கே பின்னூட்டத்தில் இவருக்கு ஜால்ரா மட்டும்தான அடிக்க முடியும்? உண்மை எது , நியாயம் எதுனு எல்லாம் அங்கே, இவர் தளத்துல, நம்ம பேசமுடியாது! அதான் நம்ம சொல்ல வர்றதை இங்கேயே சொல்லிப்புடுவோம்னு..

எனக்கு என்ன புரியலைனா, இவர் (உ சி ர) ஏன் இப்படி அலட்டிக்கிறாரு??  If you are not doing anything like that (copying someone's write-up) WHY DO YOU CARE?

"நான் அப்படி செய்யலை" "நான் ரொம்ப நல்லவன்" "அவந்தான் காப்பி யடிச்சான்" னு இந்த தொடர் ஒப்பாரியை நீங்கள் வைப்பதால் உமக்குத்தான்யா வினையா முடியும்.  "ஒரு வேளை நீர் அப்படி எதுவும் செஞ்சுபுட்டீரோ? அதான் புலம்புறீரோ?" னு தான் நம்மாளு நெனைப்பான். அதனால் நீங்க உடனே உங்க தொடர் ஒப்பாரியை நிறுத்தினால்தான் உங்களுக்கு நல்லது.

ஆமா இதுக்கு எதுக்கு ஒரு பதிவு???

அதை ஏன் கேக்குறீங்க? பதிவுலகில் மாடெரேசன்னு வச்சுக்கிட்டு என்னென்ன அயோக்கியத்தனம்லாம் பண்ணுறானுக! நம்ம நேரத்தை செலவழிச்சு பின்னூட்டம்போடுவதற்கு இவனுக அப்ரூவலுக்காக  காத்திருக்கணும். இவனுக செய்ற நாட்டாமைக்கெல்லாம் "ஆமா ஆமா"னு சொல்றாப்பிலே பின்னூட்டம் டிசைன் பண்ணணும். சொன்னா நம்ப மாட்டீங்க! நம்ம ஏதாவது கேள்வி கேட்டால், பதில் தெரிந்தால்தான் பின்னூட்டத்தையே வெளியே விடுறாக!!!  தெரியலைனா மாடெரேசன் என்கிற பேரில் பின்னூட்டத்தை சாப்பிட்டுறானுகப்பா!  நல்லவேளை நமக்குனு ஒரு தளம் இருக்கு! :)

Monday, December 10, 2012

திருட்டு வி சி டியை அதிகமாக்க வழிவகுக்குகிறார் உலகநாயகன்- அபிராமி ராமநாதன்!

இன்றுவரை கமலஹாசன் தன் முடிவில், விடாப்பிடியாகத் திடமாக நிற்கிறார். டி டி எச் சில் அவர் விஸ்வரூபத்தை ஒரே ஒரு காட்சி மட்டும் வெளியிட முடிவு செய்துவிட்டதாக செய்திகள் சொல்லுகின்றன. ரூ 1000 கொடுத்து விஸ்வரூபத்தை வீட்டிலேயே பார்க்கலாம் என்கிறார்கள். இந்த முயற்சியால், திருட்டு வி சி டியை குறைக்க உதவுகிறார் உலகநாயகன் என்று சொல்லிக்கொண்டு அலைகிறார்கள் பலர்.

அதாவது திருட்டு வி சி டியை ஒழிக்கவே, கமல் இதுபோல் ஒரு முயற்சி எடுக்கிறார்னு எல்லாரும் கமலை ஆஹா ஓஹோனு புகழ்ந்து தள்ளிட்டாங்க. அப்படி ஒளிபரப்பும் படத்தை யாரும் டிஜிட்டலாக ரெக்கார்ட் செய்ய முடியாது என்கிறார்கள். ஆனால் சினிமாகொட்டகை ஓனர்கள் தலைவரான அபிராமி ராமநாதன், இந்த முயற்சியால் திருட்டு வி சி டி நிச்சயம் அதிகமாகும் என்கிறார்!!!

அபிராமி ராமநாதன்



உலக நாயகன்

Viswaroopam in theatre or at home?

However, Abirami Ramanathan, President of the Tamil Nadu Theatre Owners Federation, asks why he should even try something which has not been experimented by Hollywood. “As theatre owners, we may not suffer any major losses because of this one film. But, if others too choose to follow this model, the entire exhibition business may have to suffer a huge setback,” he told Business Line.
Though Kamal Haasan says the move would be a blow to the piracy market, which is wrecking the industry, Ramanathan says this would only pave the way for more piracy. “If someone films the entire movie with an hand-held HD camera when the film is being played on an HD TV, the result will be pretty good; then how can that prevent piracy?” he asks.

அபிராமி ராமநாதன் என்ன சொல்றாருனா, டி டி எச் ல ஒளிபரப்புவதை ஒருவர் எச் டி கேமராமூலம் மொத்தப்படத்தையும் நல்ல காப்பி எடுக்க முடியும். அப்படி எடுத்து திருட்டு வி சி டி ஆக்கி விற்றால் அதை எப்படி தடை செய்யமுடியும்? இதுபோல் கேமெரா மூலம் காப்பி செய்வதை யாரும் தடை செய்ய முடியாது என்கிறார்.

இப்போ, "திருட்டு வி சி டி அதிகமானால் எங்க கமலுக்குத்தான் நஷ்டம், நீங்கள்லாம்  அதுக்கு ஏண்டா ஒப்பாரி வைக்கிறீங்க?" னு கமல் ரசிகாமணிகள் கேக்கலாம். அந்தக் கேள்வியை  ஒருபுறம் வைத்துவிட்டு, திருட்டு வி சி டி தயாரிப்பு  டி டி எச் ஷோவால்  அதிகமாக்குமா இல்லை குறைக்குமா? என்பதைப்பத்தி கொஞ்சம் யோசிங்கப்பா!

Friday, December 7, 2012

கமலஹாசனின் விலைபோகாத "ம்பரூவஸ்வி"?!


வர வர கமலஹாசன் பக்தசிகாமணிகள் எல்லாம் ரொம்ப செண்ஸிட்டிவா, செண்டிமெண்ட்டலா ஆகிக்கிட்டு இருக்காங்க. இவர்கள் எதுக்கெடுத்தாலும் கமல் புகழ்பாடும்போது நம்ம ஏதாவது மாற்றுக்கருத்து அல்லது எதிர்கருத்துச் சொன்னால்க்கூட நம்ம பின்னூட்டத்தால் பயந்து, நடுங்கி, அழுது, புலம்பி ஒப்பாரி வச்சு, நம்மலயும் அழவச்சுடுறாங்க!
க்ளிண்ட்க்கு ஒரு அண்ஃபர்கிவன் போல கமலுக்கு விஸ்வரூபம் அமையுமா?

  "ம்பரூவஸ்வி" அதான் விஸ்வரூபம் பட ட்ரைலர் பார்த்து நான் நெசம்மாவே அசந்துட்டேன். மன்மதன் அம்பு ட்ரைலர் போல் கேணத்தனமாக இல்லாமல் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக ட்ரைலர் இருந்ததுனு சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!    நம்ம க்ளிண்ட் ஈஸ்ட்வுட்க்கு ஒரு அண்ஃபர்கிவென்! கமலுக்கு ஒரு "ம்பரூவஸ்வி"யா? என்று நான் பாஸிடிவாக கமல் படத்தை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்.

விஸ்வரூபம் படத்தோட பட்ஜெட் குறைந்தபட்சம் 150 கோடினு சொல்றாங்க! (தமிழ், தெலுகு, ஹிந்தி எல்லா மொழியிலும் சேர்த்து). ஏதுப்பா இவருக்கு இவ்ளோ பணம்!! அவர்தான் சம்பாரிச்ச காசை எல்லாம் சினிமாலயே விட்டுப்புடுவாரே? அப்புறம் எப்படி இம்பூட்டு காசு வச்சிருக்காரு மனுஷன்? ஆக இன்னும் சம்பாரிச்ச எல்லாத்தையும் விடலை போல இருக்கு!
 ஒருவேளை சினிமால சம்பாரிச்ச காசை சினிமாலயே விட்டே ஆகனும்னு இப்படி முயற்சிக்கிறாரோ என்னவோ!

படம் ஜனவரி 11ல வெளிவரப்போதுனு எல்லாரும் சொல்லிக்கிறாங்க. படம் செண்ஸார் எல்லாம் போயிட்டு வந்துருச்சு.யு/எ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது! ஆனால் இன்னும் யாரும் படத்தை விலைகொடுத்து வாங்கியதாகத் தெரியவில்லை!

இந்த நிலையில் நம்ம கமல், புது மாதிரியான ஒரு முயற்சி மேற்கொள்கிறார். அதாவது படம் ரிலீஸ் ஆகும் அதே நேரத்தில் டி டி எச் ல  டி வி லயும் இந்தப் படத்தை ஒரே ஒரு காட்சி ஒளிபரப்ப முயல்கிறார்.

நேத்து ம்யூசிக் ஆல்பம் வெளிவந்து விட்டது. பாட்டெல்லாம் பிரமாதம்னு கமல் ரசிகாமணிகள் எல்லாம் சொல்றாக..

வதந்தி ஒண்ணு (அ): விஸ்வரூபம் டி வி லயும், தியேட்டரிலும் ஒரே நாள் ரிலீஸ்!

Kamal Haasan has come up with a new revenue model for his mega budget project, Vishwaroopam. The rumour is that the actor has made a negotiation worth Rs 50 crores with DTH (Direct To Home) players for releasing the film on TV on 11th January, the day of its theatrical release itself. It will be a onetime release on television and will not be recordable.
It is also heard that the Tamil Theater Owners’ Association are in a deep state of shock and are supposedly threatening to ban the release of Vishwaroopam in theaters. An emergency meeting with Kamal Haasan will be held today and the association looks to sort out the issue.
There are fears amid the theater owners that if this model indeed succeeds, many small films would adapt to this one for extra income.
வதந்தி ஒண்ணு (ஆ): விஸ்வரூபம் டி வி லயும், தியேட்டரிலும் ஒரே நாள் ரிலீஸ்!
Kamal Haasan has confirmed at a meeting of producers on Wednesday (Dec 5) evening at Film Chamber in Chennai that his magnum opus Vishwaroopam will be shown on DTH platforms.
The DTH premiere will take place 8 hours before the film’s first show in theatres prior to the film's release. It is the first ever time in the world that a big film is being shown on DTH before its theatrical release.
A major DTH operator will work out the finer details of the telecast and its costing. They are planning to rope in other DTH operators, so that the film gets a wide viewing. Kamal and the DTH operator will be sharing the revenue.
Meanwhile the Tamil Nadu theatres are not taking it lying down. They have called for an emergency meeting of the association today and will take a call.

Said Abirami Ramanathan : “ We are holding an extraordinary meeting tomorrow to discuss this Vishwaroopam on DTH issue . It is a very serious matter that will have far reaching consequences for theatres in Tamil Nadu. We will talk after the meeting is over.”  
வதந்தி ரெண்டு: விஸ்வரூம் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமே தியேட்டர்களில் வெளியிடும்!

Kamal Haasan has decided to distribute Vishwaroopam through his own firm, Raaj Kamal Films International. The release date is, as earlier reported, January 11th. The distributors for the Telugu and Hindi versions of the movie are yet to be known.
The music is widely expected to be released on December 7th and fans are eagerly looking forward to more announcements about the movie as the release date nears.
கமல்ஹாசன் டி வி லயும் தியேட்டர்லயும் ஒரே நேரத்தில் வெளியிட்டு, டி வி ரைட்ஸ்க்கு ஒரு தொகையைப் பார்க்க முயல்கிறார். அது நல்ல முயற்சிதான். ஆனால் இந்த முயற்சியை தமிழர்கள் நலனுக்காக செய்கிறார் என்பதெல்லாம் சுத்தமான அபத்தம். இது கமலின் புதிய வியாபார யுக்தி என்பதே உண்மை!

இம்முயற்சிக்குக் காரணம் இஸ்லாமியர்களின் எதிர்ப்பு அது இதுனு வந்து பிரச்சினையாயிடுமோ என்கிற பயமாக இருக்கலாம். இந்த முயற்சியால் தியேட்டர் பக்கம் எவனும் போகமாட்டானோ? என்கிற பயம் படம் ரிலீஸ் பண்ணுறவனுக்கு வரத்தான் செய்யும். அதனால விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள் எல்லாம் படத்தை வாங்க தயங்குறாங்க. இதைப் பத்தி கூட்டம் போட்டு பேசுறாங்க. மினிமம் கியாரண்டி எல்லாம் பெரிய தொகை  தரமுடியாதுனு முடிவுக்கு வரலாம். இதற்கிடையில் கமல், தன் படத்தை  தானே  ரிலீஸ் செய்யலாம்னு பார்க்கிறார். என்னைப் பொறுத்தவரையில் டி வி ரைட்ஸை டி டி எச் க்கு இவர் கொடுத்தால், இந்த படத்தை இவரே ரிலீஸ் செய்வதுதான் சரி. இவர் புதிய முயற்சியால் ஏற்படும் இலாப நஷ்டங்களையும் அவர்தான் ஏற்றுக்கனும். அதுதான் நியாயம்!

சரிப்பா, ஒரே ஒரு காட்சி டிவி ல ரிலீஸ் செய்யும்போது மின்சாரப் பிரச்சினை இருக்கக் கூடாதே? தமிழ்நாட்டில் ஏற்கனவே தொடர்ந்து மின்சாரம் இல்லாமல் அவதியா இருக்கு. விஸ்வரூபத்திற்காக அம்மாவின் அருளால் சிறப்பான ஏற்பாடு செய்யப்படுமா?

Wednesday, December 5, 2012

இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்! (21+ மட்டும்)

"சொல்லுங்க திவ்யா! உங்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் என்ன பிரச்சினை?"

"என் கணவரோட உறவு வச்சுக்கவே ரொம்ப அருவருப்பா இருக்கு, டாக்டர்..."

"ஏன் திவ்யா? உங்க கணவர்  குடிச்சுட்டுவந்து உறவு வச்சுக்கிறாரா?'

"இல்லை, டாக்டர்"

"ஒரு வேளை அவரு.. எஸ் டி டி அல்லது எச் ஐ வி பாஸிடிவா  கண்டா இருப்பாரோனு உங்களுக்கு எதுவும் பயம்மா இருக்கா?"

"சேச் சே, அதெல்லாம் இல்லை"

"தப்பா நெனசுக்காதீங்க. இல்ல உங்க கணவர் பல பெண்களுடன் உறவு எதுவும் வச்சுக்கிறாரா? அப்படி ஏதாவது.." 

"நோ நோ! இல்ல டாக்டர். ஐ ஆம் பாஸிட்டிவ். என் கணவர் என்னைத்தவிர யாருடனும் உடலுறவு கொண்டதில்லை!"

"தட்ஸ் க்ரேட், திவ்யா! எனக்கு விளங்கவில்லை! அப்போ என்ன உங்க பிரச்சினை? அவர் ஒருவேளை ஹாண்ட்சம்மா ஆள் பார்க்க நல்லா கவர்ச்சியா  இல்லையா?"

"ஐயோ, அவர்தான் "ஹாண்ட்சமெஸ்ட் மேன்"  இண் த எர்த், டாக்டர். இங்க பாருங்க அவர் ஃபோட்டோவை!"

"சந்தோஷம்."

"சரி, நானே சொல்றேன் டாக்டர்..படுக்கையில் அந்த நேரத்தில் நிர்வாணமா படுத்து இருக்க என்னை ரசிக்காமல் யாரையோ மனசுல நெனச்சுண்டு என்னோட உறவு கொள்றார்"

"அதெப்படி உங்களுக்குத் தெரியும்?"

"என்னால அதை நல்லா உணர முடியுது, டாக்டர்!'

"அவரிடம் இதைப் பத்தி பேசினீங்களா?"

"இல்லை டாக்டர்! ஆனால்"

"நான் ஒண்ணு சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க, திவ்யா..."

"சொல்லுங்க டாகடர்"

" இல்லை..பொதுவாக இந்த ஆம்பளைங்களே கொஞ்சம் இப்படித்தான். ஆனால் நீங்க என்ன செய்யலாம்னா.."

"ஓ மை காட்!"

"என்ன திவ்யா!'

 "ஓ மை காட்!"

"என்னாச்சு திவ்யா? என்ன?!"

"You are also another sick bastard just like my husband, right?"

"இல்ல திவ்யா.."

"Dont lie! YOU ARE just like my husband, right?"

"ஐ ஆம் சாரி"னு டாக்டர் தலை குனிந்தார்

"So am I." னு அறையைவிட்டு வெளியே போனாள், திவ்யா.

-முற்றும்


அடுத்தவீட்டுப்பெண்-விமர்சனம்


Add caption
 தமிழ் சினிமாவில் காதல்ப்படங்கள் இன்றைய தேதிக்கு என்ன நிலைமையில் இருக்கு? வசந்த மாளிகை, ஒருதலை ராகம், வாழ்வே மாயம், முதல் மரியாதை என்று வந்து இன்னைக்கு அரை டவுசர் எஸ் ஜே சூரியாவும், சைக்கோ செல்வராகவனும், அல்லது அவங்க அப்பா மரைகழண்ட கஸ்தூரி ராஜாவும் கழிவுபட்ட படங்களை எடுத்துவிட்டு அதை காதல்ப் படங்கள்னு சொல்லிப் பிழைப்பு நடத்துற நிலைமைனு சொல்றீங்களா?!

இருந்தாலும் கல்லூரி, ஏப்ரல் மாதத்தில், உன்னை நினைத்து போன்றவை பரவாயில்லைதான்.

சரி நம்ம இப்போ ஒரு 40 வருடங்கள் முன்னால போவோம். போய் அழகான வசீகரமான அடுத்த வீட்டுப்பெண்ணைக் கொஞ்சம் கவனிப்போம். சரியா?

ஐயோ ப்ளாக் அண்ட் வைட் படம்லாம் எனக்குப் பிடிக்காதுங்கனா தயவுசெய்து இடத்தை காலி பண்ணுங்க சார்/மேடம்! உங்களுக்காக இல்லை இந்தப்பட விமர்சனம்!

இது 60 ஸ்ல வந்த ஒரு அழகான காதல் கலந்த காமடிப் படம். இன்றும் இதை ரசித்துப்பார்க்க முடியும் - என்னைப் போல ஒரு சிலரால் மட்டுமே. அந்தக்காலத்தில் காதலை வலியுறுத்தி ஒரு படம் இவ்வளவு விரசம் இல்லாமல் எடுக்கவும் முடிஞ்சிருக்கு என்பது நம்ம ரொம்ப பெருமைப்பட வேண்டிய விசயம்தான்.

இந்தப்படத்தில் தடுக்கி விழுந்தால் பாடல்கள்! எல்லாம் தேனா இருக்கும்! (நெசம்மாத்தான் சொல்றேங்க)! அஞ்சலிதேவியின் கணவர்தான் இசையமைப்பு, டைரக்ஷன், தயாரிப்பு எல்லாமே!

* 1. கன்னித்தமிழ் மணம் வீசுதடி காவியத்தென்றலுடன் பேசுதடி

* 2. பிரேமையின் ஜோதியினால்

* 3. சங்கம் இது! கற்றார் நிறைந்த சங்கம் இது

* 4. மலர்க்கொடி நானே மகிழ்ந்திடுவேனே கவிக்குயில் போலே இன்ப கானம்பாடுவேனே

* 5. கையும் ஓடல காலும் ஓடல கண்ணே உன் ஆசையினாலே

* 6. மன்னவா வா வா மாசில்லா வா

* 7. வாடாத புஷ்பமே! வற்றாத செல்வமே! தறி நாடாவைப் போல் ஆடும் இதயத்திலே தினமும் உந்தன் தாபமே!

* 8. கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே!
காதாலே கேட்டுக் கேட்டு செல்லாதே!
காதல் தெய்வீகராணி! போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனசைவிட்டுத் துள்ளாதே!

* 9. எனக்கு ராஜா நீயே

* 10. கண்களும் கவி பாடுதே! கண்ணே உன் கண்களும் கவி பாடுதே! (இது ஒரு போட்டிப்பாட்டு)

* 11. மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே! (கடைசிப்பாட்டு)

சிரிப்பு நடிகர் டி ஆர் ராமச்சந்திரன் தான் ஹீரோ! ஆனால் உண்மையில் இதில் ஹீரோயின் அஞ்சலிதேவியும் (இவர் சொந்தப்படம்) , தங்கவேலும்தான் முக்கிய ஹீரோ பாத்திரங்கள்.

கதை:

மன்னார் (டி ஆர் ஆர்) பண்புள்ள தரமான ஒரு இளைஞன். தன் வயதான மாமாவுடன் (60 வயதில் இன்னொரு கல்யாணம் (அதுவும் ஒரு சின்னப் பெண்ணை) செய்ய ஆசைப்படுகிறார்) என்று அவருடன் கோபித்துக்கொண்டு அவருடன் சண்டை போட்டுவிட்டு தன் அத்தையிடம் (டி பி முத்துலட்சுமி) வந்து சேர்கிறார். கூறுகெட்ட மாமாவின் துணைவியான அத்தையும், அவளுக்கு உதவிக்கு ஒரு வேலைக்காரப் பையன் தனியாக வாழும் வீட்டில் மன்னாரும் வசிக்க வருகிறான்.

மன்னார் ரொம்ப நற்பண்புகள் கொண்ட இளைஞன். அத்தையின் வீட்டில் அவனுக்கென்று மாடியில் ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குவருகிறான். ரொம்ப நாள் குடித்தனம்  இல்லாமல் இருந்த பக்கத்துவீட்டில் ஆட்கள் இருக்கும் அரவம் கேட்கிறது. அது ஒரு அழகான இளம்பெண் அங்கும் இங்கும் அலைவது இருப்பதுபோல இருக்கு. மன்னாருக்கு  ஒரே க்யூரியாஸிட்டி!

"காலியா இருந்த பக்கத்துவீட்டில் யாரு குடிவந்து இருக்கிறார்கள், அத்தை?" என்று கேட்கிறான்.

"நல்ல குடும்பம். அந்த குடுப்பத்தில் அப்பா அம்மா ஒரு பொண்ணு.அப்பாவும் அம்மாவும் குணத்தில் தங்ககம்பி, ஆனால் அந்தப்பொண்ணு இருக்கே அது ஒரு குரங்கு!" என்கிறாள் அத்தை.

"ஏன் அத்தை அப்படி சொல்றீங்க?'

"பொண்ணா அது! எந்நேரமும் ஒரே ஆட்டமும் பாட்டும், வயசுப்பொண்ணு ஒழுங்கா அடக்கமா இருக்க வேணாம்? எனக்கு சுத்தமாக பிடிக்கலை" என்கிறாள் அத்தை.

அத்தை மருமகனை, பலகாரம் சாப்பிட சொல்லிவிட்டு கீழே போவாள்.

இந்த ஒரு சூழ்நிலையில்..

 பக்கத்துவீட்டில் உள்ள "அழகான குரங்கு" லீலா (அஞ்சலிதேவி) ஒரு அமுதகீதம் பாடுகிறாள். ஆஹா!

அதுதான் இரண்டாவது பாடல் பிரேமையின் ஜோதியினால்னு ஆரம்மிக்கும். ஒரு அழகான அர்த்தமான க்ளாசிக் பாடல் (பி சுஷீலா) இது!

பிரேமையின் ஜோதியினால்...
பேரின்பம் எங்கும் பொங்கும்
இவ்வையம் தங்கும் மெய்யன்பினால்
பேதமெல்லாம் அழியும் - இப்புவிமேல்
அன்பு மழை பொழியும்.

பாரில் பிரேமை ஒன்றில்லையானால்
சீருலாவிடுமோ.. ஓ...
ஜீவன் வாழ்ந்திடுமோ.... - மெய்யன்பினால்
துன்பம் மறைந்தொழியும் - இப்புவிமேல்
இன்ப மழை பொழியும்.. ஓ..

மனத்தாலே நினைத்தாலும்
இனிப்பாகும் எண்ணம்
மாறாது வளர் காதல் கொண்டாலே திண்ணம்..ஓ..
ஆணும் பெண்ணும் அன்பாலே இணைந்தால்
அமர வாழ்வல்லவோ.. மெய்யன்பினால்
ஜாதி மறைந்தொழியும் - இப்புவிமேல்
நீதி மழை பொழியும் .. ஓ


இது ரொம்ப ரொம்ப நல்ல பாடல்!

யு-ட்யூப் தொடுப்பு இங்கே!

பாடல் வரிகளும் குரலும் இசையும் பிரம்மாதமாக இருக்கும் நம்ம மன்னார் ரொம்பவே ரசிப்பார்.மயங்கிவிடுவார் அஞ்சலிதேவியைப்பார்த்து. காதலும் கலப்புத் திருமணமும்தான் ஜாதியை ஒழிக்கமுடியும் என்பதை அழகா சொல்லி இருப்பாள் அந்த அருமையான பாடல் வரிகளில். எப்போ? 40 வருசத்துக்கு முன்னாலே! நம்ம திருந்திவிடுவோமா என்ன?

மன்னார் மட்டுமல்ல, அவன் அத்தையும் (டி பி முத்துலெட்சுமி) பாட்டை ரொம்பவே ரசித்துத்தான் கேட்பார்கள். ஆனால், பாட்டு முடிஞ்சதும், அத்தை மறுபடியும் மேலே வருவாள்.

"பாட்டு ரொம்ப பிரமாதம் இல்லையா, அத்தை?" என்பார் மன்னார். அத்தையின் "ஒப்பீனியன்" கேட்பார். :)

"பாட்டா இது? ஒரு ராமாயணம், பாரதம் பாடாமல், இப்படி ஒரு வயசுப்பொண்ணு காதல் பாட்டா பாடுவாங்க! பொண்ணா அது! பொண்ணுனா அடக்கம் வேணும்" னு சான்றிதழ் கொடுப்பாள்.

இதை பக்கத்துவீட்டிலிருந்து ஒட்டுக்கேட்ட லீலா (அஞ்சலிதேவி), பயங்கரகோபத்துடன், ஒரு சவுக்கு, துடைப்பத்துடன் வந்து, ஜன்னல் வழியாக மன்னாரை அழைப்பாள்..

"ஏய் மிஸ்டர்!"

"ஏன்"

"அந்த கெழவி என் பாட்டைப்பத்தி கேவலமா பேசும்போது ரொம்பத்தான் ரசிச்சீங்களே?'

"பே பே"

"இனிமேல் நீயோ, அந்த கிழவியோ என் பாட்டை பத்தி ஏதாவது சொன்னீங்க, இந்த சவுக்கையும் விளக்குமாறையும் வச்சு விளாசு விளாசுனு விளாசிவிடுவேன்! இடியட்! ஸ்டுப்பிட்!" என்று கொடுப்பாள்.

மன்னார் லீலாவின் அழகையும், மிரட்டலையும் பார்த்து அரண்டு போய் தன் நண்பர்களிடம் உதவிக்காக ஓடுவார்.

யாரு நண்பர்கள்?

தங்கவேலு, கருணாநிதி, மற்றும் இரு காமடி நடிகர்கள்! இவர்கள் ஒரு சங்கம் நடத்துவார்கள்.

"கற்றார் நிறைந்த சங்கம் இது! காரியம் கைகூடும் சங்கம் இது! என்று ஒரு பாடல்.

நண்பர்களிடம் போய் மன்னார் தன் காதலை கைகூட உதவி செய்யச்சொல்லிக் கேட்ப்பார். அவர்கள் எல்லோரும் மான்னார் வீட்டு மாடிக்கு வருவார்கள், அந்த அழகான ராட்சசியைப் பார்க்க.

அப்பொழுது, மலர்க்கொடி நானே பாடல் காட்சி. நண்பர்கள் அனைவரும் பாட்லையும், பாடகரையும் பார்த்து மயங்கிவிடுவார்கள்! "நல்ல செலக்ஷன்டா மன்னாரு" என்று மன்னாரை பாராட்டுவாங்க!

இதிலே என்ன பிரச்சினைனா, மன்னாருக்கு சுட்டுப்போட்டாலும் பாட்டுப்பாட வராது. ஆனால், லீலாவை அடைய ஒரே வழி, நல்ல பாடகனாக இருக்கனும்.

இதற்கிடையில் ஒரு பாட்டு வாத்தியார் (மன்னாருக்கு வில்லன்), "புலவர் பூவரசன்" (நடிகர் பக்கிரிசாமி?) லீலாவுக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பார். பாதி பாட்டு பாதி ஜொள்ளு. அவனையும் சமாளிச்சு அவளை வெல்லனும்.

"யார்டா இவன் புதுசா?" என்பான் மன்னார்

"இவந்தான் உன் சகலை! இவனைத் தெரியாதாடா மன்னாரு? பழைய பாட்டுப்புத்தகம் ப்ளாட்ஃபார்ம்ல வித்துக்கிட்டு இருந்தான்டா இவன். இப்போ புலவர் பூவரசன் னு பேரை மாத்திக்கிட்டு பாட்டு வாத்தியார் ஆகிட்டான்" என்பான் நண்பன் தங்கவேலு.

அந்த நேரத்தில அழகான பி பி எஸ் பாடல் வரும்,

லீலாவைப்பார்த்து "புலவர் பூவரசர்" வர்ணித்து ஜாடையாக பாடுவான்!

"வாடாத புஷ்பமே!
வற்றாத செல்வமே!
தேடாத தெய்வீக பிம்பமே!
தறி நாடாவைப்போல் ஆடும் இதயத்திலே தினமும் உந்தன் தாபமே!கோபமேன்?
வனிதாமணியே! நீ வாராய் அமுத கனியே!

யு-ட்யூப்ல இருக்கு இந்தப் பாடல்!

இதைப் பக்கத்துவீட்டிலுருந்து மன்னார் கோஷ்டி பார்த்து வயிறு எரியும்! இப்போ லீலாவை இம்ப்ரெஸ் பண்ண ஒரே வழி, நல்லா பாடுவது! மன்னாருக்கு பாட்டுப்பாட ட்ரயினிங் கொடுப்பாங்க, நண்பர்கள். ஆனா மன்னாருக்கு பாட்டு வரவே வராது!

மன்னாரை வாயசைக்க வைத்து தங்கவேலு பின்னால் இருந்து பாடுவார்.

என்ன பாடல்?

கண்ணாலே பேசிப் பேசிக்கொல்லாதே!
காதாலே கேட்டுக்கேட்டு செல்லாதே!
காதல்தெய்வீகராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனசைவிட்டுத் துள்ளாதே!

யு-ட்யூப்ல இருக்கு இந்தப் பாடல்! 

இந்த முதல் பாடல்லயே, மன்னார் மேலே மதிப்பும், மரியாதையும் காதலும் வந்துவிடும் லீலாவுக்கு. படம் இப்படியே ரொம்ப ஜாலியாப் போகும், கடைசிவரை.

கடைசியில் ரொம்ப நல்ல முடிவு!

இதுவரை அடுத்தவீட்டுப்பெண் லீலாவை பார்க்கவில்லைனா கட்டாயம் பாருங்க! ரசிக்கத்தக்க இருப்பாள்!

* இது ஒரு மீள் பதிவே!

Tuesday, December 4, 2012

துப்பாக்கி! அம்மாடி எம்பூட்டுப் பெரிய வெற்றி?!

 Thupaki (telugu) - cast, music, director, release date


கடந்த பதிவிலேயே துப்பாக்கி வெற்றிப்படம் என்று நாம் தெளிவாக சொல்லியாச்சு. இப்போ அது எம்பூட்டுப் பெரிய வெற்றினு பார்ப்போம்!

* முதலில் சென்னையில்..

 கடந்த 3 வாரங்களில் சுமார் 11 + கோடிகள் வசூல் என்று சொல்லப் படுகிறது. இது நண்பன், வேலாயுதம், காவலன், மங்காத்தா எல்லாம் கடந்து தசாவதாரத்தையும் வீழ்த்திய வெற்றி! சிவாஜியின் வசூலை அடுத்த வாரத்தில் வீழ்த்தும்! ஆக சென்னையில் இது மிகப்பெரிய வெற்றி! ஒரு கல் ஒரு கண்ணாடி வசூல் 16+ கோடியோ என்னவோனு சொன்னார்கள். அது உண்மையா என்ன எழவோனு தெரியலை. மற்றபடி எந்திரனை துப்பாக்கி முறியடிக்குமானு தெரியலை. இப்போ சென்னையைப் பத்தி மட்டும்தான் பேசுறோம்.

* மற்றபடி தமிழ் நாட்டில் பி அண்ட் சி செண்டர்களில்

இதுபோல் துப்பாக்கி பெரிய வெற்றியடைந்ததாக சொல்ல முடியாது. பி, சி செண்டர்களில் வாழும் "சாதாரண விஜய் ரசிகர்களை" துப்பாக்கி அவ்வளவாக கவரவில்லை என்பதே உண்மை நிலவரம். இந்தப் படத்திற்கு பி அண்ட் சி செண்டர்களில் ரிப்பீட் ஆடியண்ஸும் கெடையாது!

* ஓவெர்சீஸ்ல படம் சிறப்பாக வசூல் செய்துள்ளது..

* வட அமெரிக்கா

வசூல் எந்த தமிழ்ப் படத்திற்கும் சரியான வசூல் வெளிவருவதில்லை. துப்பாக்கி பெரிய வெற்றி என்றுதான் சொல்கிறார்கள்.

* யு கே யில்

ரெண்டு வார கலக்ஷன் சுமார் $304,596 அமெரிக்க டாலர்கள் வசூலாகியுள்ளது. இது நண்பனை ஒத்த வசூல்னு சொல்லலாம். சிவாஜியின் வசூலை முறியடிக்க வாய்ப்பில்லை.

17 10 Thuppakki n/a $42,153 -80.2% 10 -10 $4,215 $304,596 2

* மலேசியாவில்

 மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. நண்பனைவிட மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. நண்பன் ஒரு ரீமேக் படம் என்பதால் மலேசியாவில் அவ்வளவு எடுபடவில்லை! துப்பாக்கி ஒரிஜினல் ஸ்க்ரிப்ட் என்பதால் பெரிய வெற்றி எனலாம்.
 
4 1 Thuppakki FiveStar $139,655 -83.4% 80 - $1,746 $1,614,439 2

* ஆந்திராவில் முக்கியமாக ஹைதராபாத்ல  துப்பாக்கி எடுபடவில்லை என்பது முக்கியமான விசயம். பொதுவாக முருகதாஸ் படங்கள் ஆந்திராவில் நல்லாப் போகும். அதென்னனு தெரியலை நம்ம விஜயை ஆந்திராக்காரனு களுக்கு பிடிக்கவில்லைனு தோணுது.

இன்னைக்கு நிலமைக்கு துப்பாக்கி ரெண்டு தியேட்டர்லதான் ஓடுது


 Showing in 2 theatres, on the 22nd day (4th week)

ஆக ஆந்திராவில் துப்பாக்கிப் படம் பெரிய வெற்றி இல்லை என்பதே நிதர்சனம்.

* கேரளா மற்றும் கர்நாடகாவில் பெரிய வெற்றி என்றுதான் சொல்றாங்க. இருந்தாலும் இது எம்பூட்டுப் பெரிய வெற்றினு சரிவர தெரியவில்லை!

Friday, November 30, 2012

பிராமணாள் தளம்! தமிழ்மணம் சாதித்தளங்களை வரவேற்கிறதா?

"ப்ராமணாள் வலைப்பூ" னு ஆரம்பிச்சு அதை தமிழ்மண திரட்டியில் சேர்த்து விட்டு சாதித்தளங்களுக்கு "பிள்ளையார் சுழி" போட்டு விட்டு இருக்கான், அருண் அம்பி என்னும் ஒரு ஐயர் ஆத்துப் பையன் .  இது என் தளம் நான் எப்படி வேணா பேரு சூட்டிக்குவேன், என் சாதிப் பெருமை பேசுவேன், அதை எவன் கேக்கிறது?  என்கிறான் சாதிவெறிபிடித்து அலையும் இந்த அம்பி!

ஆமாம், கருத்துச் சுதந்திரம் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும் மறுக்கப்படக்கூடாது! எப்படிவேணா தளம் ஆரம்பிக்கலாம். என்ன வேணா பேரு சூட்டிக்கலாம்!  ஆமாம், ஐயன் சொல் னு சொல்லலாம் இல்லைனா ஆத்தா சொல்னு சொல்லலாம். அது அவனவன் உரிமைதான்!  தளத்தில் என்ன படம் என்றாலும் போட்டுக்கலாம்!

உடனே இந்த திராவிட சாதி வெறியர்களும் ஆளாளுக்கு வன்னியர், தேவர், நாடார், முதளியார், கோணார்னு தமிழ்த்தளம் ஆரம்பிச்சுடாதீங்கப்பா.
ஒண்ணு தெரிஞ்சுக்கோங்கப்பா, 21 நூற்றாண்டிலும்  பார்ப்பானுகளுக்கு பகுத்தறியும் புத்தி கெடையாது!  அதற்கு உதாரணம்தான் இந்த அருண் அம்பியும் அவன் "ப்ராமணாள் வலைப்பூ" பிரச்சாரமும். இந்த சாதிவெறிபிடித்த முட்டாள்ப் பார்ப்பான் செய்றான்னு நீங்களும் எதையாவது லூசுத்தனமா செஞ்சுபுடாதீங்க!

மடிசார்ல யாரோ இன்னொரு அம்மா
மடிசார்ல யாரோ ஒரு அம்மா



யாரோ ஒரு ஆச்சாரமான அம்பி

மடிசார்ல யாரோ ஒரு 3 வது அம்மா (1 வது?)
 
பார்ப்பான் சிந்தனைகள் எல்லாம் சின்னத் தனமாத்தான் இருக்கும் அதன் வெளிப்பாடுதான் இந்த "பிராமனாள் வலைப்பூ" என்கிற அடைமொழியோ மண்ணாங்கட்டியோ!

ஆனால் ஒரு சாதி வெறிபிடிச்சு அலைகிற வெட்டிப் பார்ப்பான், இதைப்போல் ஒரு சாதித்தளம் ஆரம்பிச்சு, அப்பட்டமாக  தன் சாதி சனத்தை எல்லாம் ஒண்ணுகூட்டவும்,  தன் சாதிப் பெருமை பேசவும் முயலும் ஒரு  முயற்சியை ஏன் தமிழ்மண திரட்டியில் இணைக்கனும்?

என்னுடைய கேள்விகள்!

* தமிழ்மணம் இதுபோல் சாதித்தளங்களை வரவேற்கிறதா? 

* தமிழ்மணம் இதுபோல் சாதித்தளங்களை தொடர்ந்து ஊக்குவிக்கப் போகிறதா? என்ற கேள்விகளை நான் முன் வைக்கிறேன். 

நான் என்ன கேள்வியை வைத்தாலும் தன்னை அடையாளம் காட்டாத இவன் ஒரு லூசுப்பயனு தமிழ்மணம் கண்டுக்கப் போவதில்லைதான்! இருந்தாலும் கேட்கவேண்டியது என் கடமை!