Tuesday, June 28, 2016

பொதுமக்கள் கையில் கத்தி துப்பாக்கி தற்காப்புக்கு??

எம் சி ஆர் ஒரு காலத்தில் எல்லாரும் ஒரு கத்தி வைத்துக்கொள்ளுங்கள்னு சொன்னதை  பார்ப்பனர் சோ ராமசாமி முதல்கொண்டு தமிழ்நாடே கேலி பண்ணியதாகத் தான் வரலாறு சொல்லுகிறது. போயி பழைய துக்ளக் எடுத்து வாசிச்சுப் பாருங்க! ஆனால் இன்னைக்கு கருணாநிதி அதை விமர்சனம் பண்ணியதுதான் நம்ம அன்பர் காரிகனுக்கு ஞாபகம் வருது.  உலகமே கேலி பண்ணிய ஒரு விசயத்தை எதிர் கட்சி தலைவன் கேலி பண்ணியது பெருங்குற்றமாம்! அடேங்கப்பா நம்ம காரிகன்  எத்தனை பெரிய எம் சி ஆர் பக்தர்னு இப்போத்தான் தெரியுது!

-----------------------------

அமெரிக்காவில் இன்னைக்கு உள்ள பிரச்சினக்கெல்லாம் காரணம் ஆளாளுக்கு தற்காப்புக்குனு துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம் என்கிற ஒரு விசயம்தான்.

தற்காத்துக்கொண்டு எத்தனை பேர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள்?

அதை எத்தனை பேர் தவறாக பயன்படுத்தி பயங்கரவாதம், கொலைகள் எல்லாம் அதிகமாகி நாடு குட்டிச்சுவராகும்?

 என்பதை யோசித்துப் பார்த்தால், திருடர்களும், தீவீரவாதிகளும், கொலைகாரர்களும்தான் அமெரிக்காவில் "Right to bear arms" இதனால் பயனடைவது என்பதை கண்கூடாகப் பார்க்கலாம். "Right to bear arms" என்கிறது மிகப்பெரிய வம்பை விலைக்கு வாங்குவது என்பதை நமக்கு இன்றைய அமெரிக்கா எடுத்துரைக்கிது.

சட்டம் ஒழுங்கை அமல்ப்படுத்தணும்னா, அதிகமான காவல்த் துறை அலுவலகர்கள் வேணும். காவல்துறை அதிகாரிகாளை அதிகப் படுத்தணும். பொது இடங்களில் காவல்துறை அதிகாரிகள் அதிகமாக இருந்தால், சுவாதியை வெட்டும் முன்னால் அவனை அங்குள்ள காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்று இருக்கலாம். மற்றபடி பொது மக்கள் கத்தி வச்சுக்கணும், துப்பாக்கி வச்சுக்கணும்னு சொல்றதெல்லாம் பின் விளைவுகளை சரிவர யோசிக்காமல் சொல்வது.

Friday, June 24, 2016

வளர்ந்து தேயும் கவிதையில் வராத பின்னூட்டம்!

அரவிந்தசாமி நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நல்லாத்தான் போயிட்டு இருக்கு. சமீபத்தில் ஒரு வாத்தியாரு ரசினி ர சி க ர்னு தன் தனிப்பட்ட ரசனையை சொல்லாதாவரைக்கும்! இன்னொரு ஹெட்மாஸ்ட்டர் அவரை தான் ஒரு ஒலகநாயகன் ரசிகர்னு சொல்லியிருந்தால் வளரும் கவிதையில் "நீ வெ ஒ கோ" சம்மந்தப்பட்ட இந்தப் பதிவே வந்து இருக்காது.



அப்பா-மகள் போலனு வியாக்யாணம் கொடுக்க வேணாம்! எனக்குத் தெரிந்த தமிழ் கலாச்சாரத்தில் வயது வந்த மகளுக்கு தந்தைகூட முத்தம் கொடுப்பதில்லை!
அறிவு சம்மந்தப்பட்ட போட்டியில் இதுபோல் தன் அபிமான நடிகன் அசிங்கம் பண்ணினாலும் தப்பாவே தெரியாது!

ஆனால் ஒருத்தர் தன்னை ரஜனி விசிறினு சொல்லிட்டாபோதும்! அது கேவலம்! அவமானம்! வெக்கக்கேடு!

தெரியாமல்த்தான் கேக்கிறேன் மேலே உள்ள படத்துல நடக்கிற  அசிங்கத்தைவிட அந்தாளு என்ன பெரிய தப்புப் பண்ணீட்டான்??

இதையெல்லாம் விமர்சிக்க வக்கில்லை!!! இப்போ மட்டும் பெருசா அறிவு மண்ணாங்கட்டினு விமர்சனம் வேண்டிக் கெடக்கு??

-----------------------------------------

இன்னொரு வாத்தியாரு இன்னொரு அவருடைய அபிமான நடிகனுக்கு (திட்டுவதுபோல் கொஞ்சி) அவர் வலைதளத்தில் ஆராதனை  செய்கிறார். 

இதுல மட்டும் பெருமை!!!

 ****http://valarumkavithai.blogspot.com/2014/11/60.html****

ரொம்ப அவசியமான பதிவு பாருங்க!!! ஹா ஹா ஹா!


----------------------------------------------------
சினிமாக்காக இவரு செலவழிச்சு ஏழையாகிவிட்டாருனு வேற அப்பப்போ கொறை அழுகை அழுவார்கள்!!

Kamal Haasan Net Worth

    TheRichest
   
 • Richest Actors

Kamal Haasan Net Worth : $100 Million

-----------------------------------

இந்த மில்லியனருக்கு இதுபோல் ஆராதனை செய்கிற நேரத்தில் நாலு ஏழை மாணவர்களுக்கு ஏதாவது பாடம் சொல்லிக்கொடுக்கலாமே? ஒரு நடிகன், கமல் பெருமை மட்டும் என்ன பீத்த வேண்டியிருக்கு?

அதானே?  நமக்குனா ஒரு நியாயம் ஊரில் உள்ளவர்களுக்கு இன்னொரு நியாயம்! இதுதானே நம்ம  ஊரு பெரிய மனிதர்கள் பேசும் வியாக்யாணம்?

ஆக,  ஒன்னு, இந்த ரசினி விசிறிக்கு மட்டுமல்ல நடிகனை ஆராதனை செய்யும் எந்த வாத்தியார்க்ளுக்கும் கூறு கெடையாதுனு சொல்லலாம். 

இல்லைனா  வாத்தியார்களும் மனிதர்கள்தான். அவர்களும் இதுபோல் நடந்துக்காத்தான் செய்வாங்கனு ரெண்டு பேரையும் மன்னிக்கலாம். 

எது எப்படியானாலும் இருவரையும் ஒரே தராசில்தான் நிறுக்கணும்!

வாத்தியார் வேலை பார்ப்பது ஒருவர் தொழில்! பாடம் நடத்துவது சம்பளம் வாங்கத்தான். மாதாமாதம் சம்பளம் கொடுக்கலைனா மாணவர்களைப் பத்தி வாத்தியார்கள் கவலைப்படாமல் வேற வயித்துப் பொழைப்பைப் பார்ப்பார்கள்!

ஆனால் அப்பவும்கூட மில்லியனர் கமல் ஆராதனை மட்டும் தொடரும்!! அது ஒருவர் தனிப்பட்ட விசயம். ஆனால் அவர் ரசினி விசிறியாக இருந்தால் விமர்சிக்கிறது, தன்னைப் போல் கமல் விசிறியாக இருந்தால் பம்முறதெல்லாம் சரியல்ல! ரசனைனு வந்துவிட்டால் வாத்தியார்களும் சிறுபிள்ளைத்தனமாகவும் நடந்துக்குத்தான் செய்வாங்கனு 62 வயதான முதியவருக்கு  நம்ம பாடம் நடத்த வேண்டியிருக்கு!

உங்களை நீங்க முதலில் நடிகன் பெருமை பேசுவதை நிறுத்தி உங்களைத் திருத்திக்கோங்க. அது முடியாதா? மற்றவர்களையும் அவர்கள் விரும்பும் நடிகர்களை ஆராதிக்க விடுங்க.

சும்மா, அறிவு மண்ணாங்கட்டினு விளக்கம் எல்லாம் எதுக்கு?

---------------------------

பின் குறிப்பு: நான் நேரம் செலழிச்சு எழுதிய பின்னூட்டம் ஒண்ணு வளரும் கவிதையில் வெளியிடப்படவில்லை! அதெல்லாம் தப்பே இல்லை! நான் எழூதிய பின்னூட்டத்தின் சாரம் இங்கே பதிவாகா வந்து நிக்கிது.

நடிகன்னு வந்தூவிட்டால் எம் சி ஆரு, சிவாஜி, கமலு, ரசினி  எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என்பதை எப்போ புரிந்து கொள்ளப்போறாங்கனு தெரியலை! தன் அபிமான நடிகனுக்கு ஒரு மாதிரியும் தனக்குப்பிடிக்காத நடிகனுக்கு இன்னொரு  மாதிரியும் பேசுவதெல்லாம் பேச்சுச் சுதந்திரம் உள்ள உலகில் விமர்சிக்கப் படத்தான் செய்யும்!


Tuesday, June 21, 2016

தூக்கம் இழக்க வைக்கும் கபாலி!

போனமுறை லிங்கா வெளிவரும்போது நிம்மதி இழந்து தூக்கமிழந்து ஒரே கவலையில் டிப்ரெஸ் ஆகி அலைந்தவர்களுக்கு மறுபடியும் கெட்ட நேரம் ஆரம்பிச்சுருச்சு. என்ன காரணம்? நம்ம கபாலிதான்!

நம்ம ராமன் அங்கிள் ஏற்கனவே  கபாலிக்கு அவர் தரப்பில் ஒரு கமர்ஷியல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.  

அதான் முதல் நாள் முதல் காட்சி சென்னையில் பார்க்க ஒரு "கபாலி விமானம்" பறக்கப் போதாம். ஐ டி ல வேலை பார்க்கும்  பணக்கார விசிறிகள் எல்லாம் கபாலி விமானத்தில் பறக்க ஆயத்தமாகிக்கொண்டு இருக்காங்க! அனேகமா இது கின்னஸ் ரெக்கார்ட் ஆனாலும் ஆகலாம்.

 

ராமன் அங்கிளாவது மனதில் தோன்றியதை சொல்லிட்டாரு ..நம்ம ராம் கோபால் வர்மா மாதிரி. ஹா ஹா ஹா

ஆனால் கபாலினு சொன்னாலே காண்டாகி தூக்கமிழந்து நிம்மதி இழக்கும் பலரை நினைத்தால் எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு! :(

வழக்கமா, பேத்தி வயது பெண்னோட நடிக்கிறான், டூயட் பாடுறான்னு புலம்பல் வரும்.

 

 




அதென்னவோ இந்த முறை நம்ம ராதிகா ஆப்தே வயது தெரியாமல் போயிடுத்தா என்னனு தெரியலை. அந்தப் புலம்பல் எதையும் காணோம். ராதிகாவுக்கும் ரஜனியின் அரை வயதைவிட கம்மிதான்!

சரி, இவ்வளவு தூரம் வந்துட்டீங்க..

கபாலி வாரான் கையைத் தட்டு பாட்டையும் கேட்டுட்டுப் போங்க!





Sunday, June 19, 2016

நீங்க ஒரு ட்யூப் லைட்!

"எதைப்பார்தாலும் சிரிப்பு வருகிறது" என்றுதான் மரப்பசுவில் ஜானகிராமன் ஆரம்பிப்பார்னு நினைக்கிறேன்..அம்மணி மனிதப் பைத்தியங்கள் நிரம்பிய பைத்தியக்கார உலகைப் பார்த்து சிரிப்பதுபோல் ஆரம்பித்து கதை போகும்.

எல்லோருமே பைத்தியக்காரர்கள். ஏன் இப்படி அலைகிறார்கள்?  காசுக்காக அலைகிறார்கள். நாட்டுக்காக. தான் நம்பும் இல்லாத கடவுளுக்காக. தன் சாதிக்காக. தான் பேசும் மொழிக்காக. காமத்துக்காக அலைகிறார்கள். அழகான பெண்களுக்காக அலைகிறார்கள். வாழும் வரை இப்படி அலைந்து கொண்டேதான் திரிகிறார்கள்.

அப்பப்போ சுடுகாட்டு ஞானோதயம், பிரசவ வைரக்கியமும் வந்து போவதென்னவோ உண்மைதான்.

-------------------------------

உன் வாழ்க்கையின் குறிக்கோள் (purpose of your life. why do you think you have born?) என்ன? னு ஒரு பெரியவர் என்னிடம் அடிக்கடி கேட்பார்.

"அப்படினா??" என்பது  என் கேள்வி.

என்  "பழைய" தோழி ஒருவர் சொல்லுவார். "நீ ஒரு ட்யூப் லைட்" என்று.  எனக்கு அப்போப் புரியவில்லை அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்று. இப்போ யோசித்துப் பார்த்தால் உண்மை என்றுதான் தெரிகிறது. ஆமாம், அவர் என்னைவிட என்னை நன்றாகப் புரிந்து கொண்டவர்.

"அப்படினா?..நீ ஏன் பிறந்து வாழ்கிறாய்? வாழ்ந்து சாகும்போது என்ன சாதித்துவிட்டு செல்லப் போகிறாய்?" விளக்க முயல்கிறார் அவர்.

"நான் அப்படியெல்லாம் இப்பொழுது யோசிப்பதில்லை" என்பது "ட்யூப்லைட்"டின் பதில்.

"நீ அதைப் பத்தி யோசிக்கணும்! நீ பிறந்தற்கு ஏதோ காரணம் இருக்கிறது" என்பார் கனிவாக.

என்னால் நடிக்க முடியாது. என்னிடம் உள்ள மிகப் பெரிய குறைபாடு இது.

"இல்லை, நான் ரொம்பவே யோசித்ததுண்டு, ஆனால் அதெல்லாம் வெறும் அனுமானங்களை அடிப்படையாக வைத்தவை. உண்மையை அல்ல. அதனால் எனக்கு அர்த்தமற்றதாகத் தோனுது" என்பது ட்யூப் லைட்டின் பதில்.

அவருக்கு இன்னும் திருப்தி இல்லை. என்னைப் பரிதாபமாகப் பார்ப்பார்.

இவர் இப்போது தனியாக வாழ்கிறார்.பிறப்பில் க்ரிஷ்ட்டியன். பர்சனல் வாழ்க்கையில் பெரிய வெற்றி இல்லை.இப்போது  மெடிட்டேஷனில்  நாட்டம். மனநிம்மதிக்காக இதுபோல் ஏதாவதில் நேரத்தை செலவளி(ழி)க்கிறார். "பர்ப்பஸ் ஆஃப் லைஃப்"னு அவரே கற்பனை பண்ணிக்கொள்கிறார். தன் கற்பனையை உண்மை என்று நம்புகிறார். அந்த நம்பிக்கையுடன் வாழ்ந்து முடிப்பார்.

உங்களுக்கு இப்போ என்ன புரியுது?

மனிதர்கள் எல்லோருமே  நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டுதான் வாழ்கிறோம். கடவுள் என்கிற கற்பனையில். காதல் என்கிற கற்பனையில்.  நாம் நல்லவன்/நல்லவள் என்கிற கற்பனையில். இவரைப் போல.

ஏன் அவரை மட்டும் விமர்சிக்கணும்? நீங்களும், நானும் இதில் விதிவிலக்கல்ல! என்பதும் கசப்பான உண்மை!

-தொடரும் (நேரம் வாய்க்கும்போதெல்லாம்)

----------------------
அறிவியல் கார்னர்:'

# 4 உனக்கு நினைவு படுத்துவது என்ன?

"கார்பனுக்கு "4" வாலென்ஸ் எலக்ட்ரான்கள்"..

You must be an organic chemist! Ha ha ha!

------------------------------------------