Thursday, June 28, 2012

இந்துக்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள்?

 


நான் வளர்ந்த தமிழ் மண்ணில் என்னுடைய இஸ்லாமிய நண்பர்களின் அன்னையர்கள், சகோதரிகள் முக்காடு அணிவதைத்தான் நான் முதன்முதலில்  பார்த்து இருக்கிறேன். எங்க ஆத்துலே உள்ள பெண்கள் எல்லாம் யாரும் முக்காடு அணிவதில்லை! அதனால இந்த முக்காடு அணிவது  இஸ்லாமியர்களுடைய கலாச்சாரம் என்று நம்பி அதைப் பற்றி ரொம்ப ஆராய்ந்ததில்லை. இன்னும் ஒண்ணு,  நான் வளர்ந்த/வசித்த பகுதியில் பெரும்பாலும் இஸ்லாமியப்பெண்கள் "பர்தா" அணிவதில்லை.

அப்புறம் ஒரு சில ஹிந்திப்படங்களில் வட இந்திய இந்துப் பெண்கள் முக்காடு அணிந்து வருவதை பார்த்து இருக்கிறேன். ஒருவேளை வட இந்தியாவில் வயதானவர்கள் அல்லது கணவனை இழந்தவர்கள் மட்டும் அணிவார்களோ? என்ற சந்தேகம் வந்ததுண்டு. அப்போ, இதையெல்லாம் பற்றி  ரொம்ப ஆராய்ச்சி செய்யாமல் விட்டுவிட்டேன்.

இப்போ "உறவுகள் தொடர்கதை" னு விஜய் டி வி ல வருகிற தமிழாக்கம் செய்யப்பட்ட வடமொழி சீரியல் பார்க்கும்போது அதில் வரும் ஆண்கள் எல்லாம் பெரிய பெரிய பொட்டு வச்சுருக்காங்க இல்லைனா நாமம் போட்டு இருக்காங்க. அதனால அவங்க இந்துக்களாத்தான இருக்கனும்? அவர்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவருமே முக்காடு அணிந்து இருக்காங்க. வீட்டைவிட்டு வெளியே வரும்போது அல்ல! கூட்டுக்குடும்பத்தில் வசிக்கும் இவர்கள் வீட்டில் இருக்கும்போதே, முக்காடு அணிந்துதான் இருக்காங்க!

இந்த சீரியலில் வரும் இந்துக்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள்?

இந்து மதம் இஸ்லாமிய மதத்தைவிட பழமையானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கெடையாது. அதனால இஸ்லாமிய பெண்கள் முக்காடு அணிவது என்கிற வழக்கம், இதுபோல வட இந்திய இந்துப்பெண்களிடம் இருந்து இஸ்லாமியர்களுக்கும் தாவிய ஒரு பழக்கவழக்கமா இருக்குமோ? னு யூகிக்கத் தோனுது. யாராவது விபரம் தெரிந்த பெரியவா இந்துப் பெண்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள்னு சொன்னால் நல்லாயிருக்கும்.

உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்களேன், ப்ளீஸ்!

Tuesday, June 26, 2012

அய்யோ பாவம் ஜெயமோஹன்!

ஜெயமோகனுக்கு நேரம் சரியில்லை போலயிருக்கு. என்னங்க இவரு நல்ல கதை எழுதலாம் இல்லைனா இலக்கிய விமர்சனம் எழுதலாம், இல்லைனா மதம், மொழி சம்மந்தப்பட்ட விவாதங்கள் செய்யலாம். அவைகளை எல்லாம் விட்டுவிட்டு ஆதாரமில்லாத அரைகுறையான  தகவல்களை வைத்து பணம் வாங்கியதா இல்லை கொடுத்ததாக எதை எதையோ  எழுதி இப்போ வம்பில் மாட்டிக்கொ ண்டு முழிக்கிறார் பாவம். 

காலச்சுவடு கண்ணன் , TATA க்குசெய்த அந்த குறும்படத்துக்கு லீனா மணிமேகலை எவ்வளவு பணம் வாங்கினார் என்ற கேள்வி/கேலியோட நிறுத்திக்கொண்டார்.

இதை விமர்சிக்க நுழைந்த ஜெயமோகன்,  தடம் புரண்டு பல பிரபலங்களை (தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பழைய நண்பர்கள்) தேவையே இல்லாமல் இழுத்து, போதுமான ஆதாரமில்லாமல் இன்னாரு அந்நிய நிறுவனங்களிடம் பொருளுதவி/பணம் பெற்றார் அது இது எழுதிவிட்டார். இப்படி வரம்புமீறி  இவரு எழுதவும்  பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் செம கடுப்பாகிட்டாங்க.  அதோட இவரு  எதையோ எழுதிட்டுப் போறாருனு விடாமல், எரிச்சலும், கோபமுமாக பலவிதமான தொடர்ந்து மிகவும் சீரியஸான கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டே இருக்காங்க.  

பாதிக்கப்பட்டவர்கள் கேட்கும் கேள்விக்கு ஜெயமோகன் பதில்சொல்லியே  ஆகனும்னு ஒரு நிலைமை  உருவாகிவிட்டது. அதனால் ஜெயமோகன், ஒரு சில "பக்கவாத்தியங்களுடன்", தான் உளறியதெல்லாம் சரி என்பதுபோல் என்னதான்  ஆயிரம் விளக்கங்கள் கொடுத்து, சமாளிச்சாலும் இதெல்லாம் இவருக்குத் தேவையா எங்கிற கேள்வி எல்லார் மனதிலுமெழுகிறது.

ஜெயமோகன், தெரிந்து கொள்ள  வேண்டியதென்னனா இவருெழுதியது ஒருவரை கருத்துச்சண்டைகளால் கெட்டவார்த்தைகளால் திட்டுவதைவிட மோசமான  செயல்  என்பது. இன்னாருக்கு இந்த நிறுவனம் பணம் கொடுத்து இருக்கு, அதனால இவரு இப்படி இப்படி எழுதுகிறார்னு  தன் கற்பனைத் திறனைக் கலந்து போதுமான  ஆதாரங்கள் இல்லாமல் சொல்வது மிகவும் கீழ்த்தரமான செயல் ஜெயமோகனுக்கு தெரியாமல்ப்போனது பரிதாபம்.

கேள்விக்கணைகளை சமாளிக்க இவரு சொன்னவைகளுக்கு ஆதாரமாக இணையதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் அங்கே சொன்னதை இங்கே சொன்னதை எடுத்துக்காட்டி, தன்பக்கம் நியாயம் இருப்பதாக என்னதான் ஆதாரம்னு எதையாவது கொடுத்தாலும், இவர் தரத்துக்கும், இவரு தளத்துக்கும் இவரே சூனியம் வச்சுக்கிட்டாரு னுதான் நான் சொல்லுவேன்.

பொதுவாக எனக்கு இவர் எழுத்தில் தெரியும் இவரின் அகங்காரம் எரிச்சலை உண்டாக்கும். ஆனால் இன்று இவர் தளத்தில் மற்றும் பல தளங்களில் தோன்றும் பலருடைய கடிதங்கள் இவர்மேல் பரிதாப்படவைத்துவிட்டது என்னையும்கூட.

Monday, June 25, 2012

சத்யமே வெல்லும்? பூச்சிக்கொல்லி மருந்து!

பூச்சிக்கொல்லி மருந்து பற்றிய விவாதம் வேடிக்கையாக இருந்தது.  

* 1) ஒரு பக்கம் பூச்சுக்கொல்லி தயாரிச்சு, அந்த  மருந்து விக்கிறவன், அதை வச்சு பல நூறுகோடிகள் சம்பாரிக்கிறவன், அகங்காரத்துடன் சொல்றான் பூச்சுக்கொல்லி மருந்து இல்லாமல் இன்னைக்கு யாரும் பொழைப்பை ஓட்டமுடியாது!.   மேலும் பூச்சுக்கொல்லி மருந்தால் கேன்சர் வருது, அது வருது, இது வருதுனு சொல்வதெல்லாம் சுத்தமான பொய், அதெல்லாம் ஏற்புடையதல்ல, னு அடித்து சொல்லுகிறான்.

* 2) இன்னொருபக்கம் அறிவியல் நிபுணர்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தால் பாதிக்கப் பட்டவங்களை பார்த்த, ட்ரீட் பண்ணிய  மருத்துவர் கூட்டம் பூச்சுக்கொல்லி மருந்துதான் எல்லாத்துக்கும் காரணம் என்கிறார்கள். 

* 3) இன்னும் சில உயர்ந்த சிந்தனை உள்ளவங்க,  உரம், பூச்சிக்கொல்லி மருந்து எல்லாம் பயன்படுத்தாமல் சுத்தமான "ஆர்கானிக் விவசாயம்"தான் சிறந்த வழி, அதை செய்ல்படுத்தனும், அதை செயல் படுத்துவது சாத்தியமேனு சொன்னாங்க.

 * பெஸ்டிசைட் கம்பெணியிலிருந்து வந்த ஆள், இதுபோல் பல பிரச்சினைகளை குற்றச்சாட்டுக்களைப் பார்த்தவன், படித்தவன் என்பதால், மனசாட்சியை எல்லாம் அடகு வைத்துவிட்டு, இதுபோல் கேள்விகள் வந்தால் எப்படி பதில் சொல்றதுனு ஏற்கனவே பதில் தயாரிச்சுட்டு வந்ததுபோல் இருந்தது. இப்படி பதில்கள் சொன்னால்தான் தன் பிழைப்பு ஓடும், தன் வேலை தாக்குப் பிடிக்குமென்று அதற்கேற்றார்போல பதில் சொல்லி, சில உண்மைகளையும் மறைத்து தப்பிச்சுட்டான்.

எண்டோசல்ஃபான்  மற்றும் DDT பற்றி விவாதிச்சாங்க. 

பொதுவாக எதையும் கொல்லனும்னா க்ளோரின் (Cl, Cl2) தனிமம் கலந்த வேதிப்பொருள்தான் பயன்படுத்தப் படுது.  நம்ம தண்ணீர்லகூட க்ளோரின் Cl2 கலந்துதான் பாக்ரீரியாவை எல்லாம் கொல்லுறாங்க. அதேபோல் நீச்சல் குளங்களிலும் ப்ளீச்சிங் பவுடர் (க்ளோரின் கலந்த கலவை) போன்றவை பயன்படுத்துறாங்க. 

அதேபோல் இந்த க்ளோரின் தனிமத்தை கலந்த ஒரு காம்பவுண்ட்தான் எண்டோ சல்ஃபான் மற்றும் டிடி ட்டியும். அவைகளுடைய "உருவத்தை" இங்கே தர்ரேன்!


DDT
Skeletal formula
Endosulfan
உண்மை என்னனா, இதுபோல க்ளோரினேட்டெட் பெஸ்டிசைட்ஸ் அது நம்முடைய சுற்றப்புறத்துக்கு நல்லது இல்லை என்பதுதான் மேலை நாடுகளில் பெரிய பிரச்சினை. எண்டோசல்ஃபான் பயன்படுத்துவதை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி சுத்தமாக அமெரிக்காவில் நிறுத்தப்போறாங்க. ஆனால் அதன் காரணம் வந்து அது என்விராண்மெண்ட்க்கு நல்லதில்லை என்பதே. 



Poster in the front foyer of the Geneva meeting hall after the vote to ban endosulfan (Photo courtesy ENB)

Deadly Pesticide Endosulfan Finally Banned in United States

Endocrine-disrupting Chemical Is Highly Toxic to Wildlife, Threatens Endangered Species and Is Dangerous to Human Health

  The EPA is cancelling the registration of endosulfan, reversing a 2002 Bush administration decision that allowed continued use with some restrictions. Most currently approved endosulfan crop uses will end in two years, and all uses will be phased out by 2016. Endosulfan was first registered for use in the 1950s, and there are currently about 80 endosulfan products. The EPA estimates that 1.3 million pounds of endosulfan were used annually from 1987 to 1997. In California, annual use of endosulfan declined from 230,000 pounds in 1995 to 60,000 pounds in 2008.

* உரம், பூச்சுக்கொல்லி மருந்தை வச்சு விவசாயம் செய்து பழக்கப் பட்டவர்கள், திடீர்னு பசுமைப் புரட்சிக்கு மாறப்போறதில்லை!ஆனால் சிறியளவில் நம்ம வீட்டில் தோட்டம் போடும் பழக்கம் உள்ளவங்க, நிச்சயமாக ஆர்கானிக் விவசாயத்தை செயல்படுத்தலாம். யு எஸ்ல ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிக்க, காம்போஸ்ட் எல்லாம் தயாரிச்சு இனாமாகத் தர்ராங்க! எனக்கென்னவோ ஆர்கானிக் விவசாயம் பெரியளவில் செய்ய முடியுமானு தெரியவில்லை. முடியாதுனு நெனைக்கிறேன்.


* மற்றபடி, பலவிதமான குறைபாடுகளை இந்த பெஸ்டிசைட்ஸ் உண்டாக்குது, ஒரு ஊரே எண்டோ சல்ஃபானால பாதிக்கப்பட்டு இருக்கு என்கிற வாதத்தில்  உண்மை இருந்தாலும், என்னுடைய பார்வையில் அதை பயன்படுத்தியவர்கள் எப்படி, எவ்வளவு பயன்படுத்தனும்னு தெரியாமல் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி இருக்கலாம்னு தோனுது. 

http://www.ens-newswire.com/ens/may2011/2011-05-05-01.html

அதனால் பெஸ்டிசைட் விக்கிறவனைப் போயி இந்த விளைவுகளுக்கு நீங்க பிடிக்க முடியாது. 

http://www.ens-newswire.com/ens/may2011/2011-05-05-01.html



அதை பயன்படுத்திய விவசாயிகளின் அறியாமையால்தான் மக்கள் பலியானார்கள்னுதான் சொல்ல முடியும்!  மேலே உள்ள படங்களில் உள்ளதுபோல் மேலை நாடுகளில் endosulfan னால் பாதிக்கப் பட்டதாக எதுவும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. கேரள விவசாயிகளின் கவனக்குறைவுதான் இவர்கள் பலியானதுக்குக் காரணம்னு எனக்குத் தோனுது.

மூன்று குழுக்களின் வாதங்களிலும் ஓரளவுக்கு உண்மையும் பொய்யும் கலந்து இருக்கிறது. சரி, இதிலிருந்து நம் மக்கள் மற்றும் விவசாயிகள் கற்றுக்கொள்ள வேண்டியதை கற்றுக்குவாங்களா?

* பூச்சிக்கொல்லி மருந்துனா விஷம். பூச்சிக்கு அது கொல்லும் விஷம்னா நமக்கும் விஷம்தான்னு எல்லாருக்கும் தெரியும்.  
 இருந்தாலும், அது பூச்சியைத்தான் கொல்லும் நம்மைக் கொல்லமுடியாது என்கிற ஒரு மனோபாவம் உருவாகாமல் இருக்கனும்.

* அதை மிகவும் கவனமாக அளவாக பயன்படுத்தனும். அவன் கொடுத்து இருக்க "இண்ஸ்ட்ரக்சன்ஸ்" படி பயன்படுத்தினால் பூச்சி சாக மாட்டேங்கிது, அவனுடைய இண்ஸ்ட்ரக்சன்ஸ்லாம் அமெரிக்கா இல்லை ஐரோப்பாவில் உள்ள பூச்சி க்குத்தான் ஒத்துவரும், நம்ம பூச்சிக்கு இன்னும் அதிகமா தெளிச்சாதான் சாகும்னுகிற விபரீதமான சுயஅராய்ச்சி செய்து, அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவை சீரியஸாக விவசாயிகள் தவிர்க்கனும்.

* மற்றபடி இந்த வேதிப்பொருள்களால் நம்முடைய சுற்றுப்புறம் பாதிக்கப்படுது என்பது உண்மைதான். அதனால் பூச்சுக்கொல்லி மருந்தே பயன்படுத்தாமல் விவசாயம் செய்யமுடியுமா? னு கேட்டால் இப்போதைக்கு முடியாதுனுதான் நான் சொல்லுவேன்.

Friday, June 22, 2012

எனக்குப் புரியாத பார்ப்பன தர்க்க சாஸ்திரம்! உங்களுக்கு?

* நித்யானந்தா செய்ததெல்லாம் பெரிய  தப்பே இல்லை! அவரை குற்றம் சாட்டிய பெண் என்ன யோக்கியமா? இல்லை அவரை அம்பலப்படுத்திய வீடியோ எடுத்தவன் என்ன யோக்கியமா? இந்த லோகத்துல எவன் யோக்கியன், சொல்லுங்காணும்? இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். மக்கள் இதையெல்லாம் வருங்காலத்தில் மறந்துடுவாங்க! நித்யானந்தாவை, தலையில் தூக்கி வச்சுண்டு ஆடத்தான் போறா பாருங்கோ!

* லீனா மணிமேகலை செய்யும் தொழில் படம் எடுப்பது. வலதுசாரிக்காரன் படம் எடுக்கச் சொன்னா என்ன? இல்லை இடதுசாரிக்காரன் எடுக்கச் சொன்னால் என்ன? படம் எடுக்கச்சொன்னவன் யாரை ஏமாற்றினால் அவளுக்கென்ன? இல்லை தெரியாமல்த்தான் கேக்கிறேன், ஒரு சாஃப்ட் போர்ன் படம் எடுக்கிறவன் படம் எடுக்கச் சொன்னா? அதையும் தொழிலாத்தானே பார்க்கனும்? ஆமா, அவன் எடுக்கிற கதை "இண்செஸ்ட்" கதையாவே இருக்கட்டுமே, அதனாலென்ன? ஊர் உலகத்திலே நடக்காததையா எடுக்கச்சொல்றான்? நான் என்ன சொல்றேன்னா லீனா மணிமேகலையுடைய கொள்கைகள் ஒரு பக்கம் இருக்கட்டும், மொதல்ல தன் தொழிலை ஒழுங்கா செய்யனும்! என்ன ஒண்ணு... சட்டவிரோதமா எதுவும் செய்யக்கூடாது! லீனா மணிமேகலை செய்தது தப்புனா இந்த லோகத்துல எனக்குத் தெரிய எவனுமே யோக்கியன் இல்லை, என்னையும் சேர்த்துத்தான். செய்த தொழிலுக்கு காசு ஒழுங்கா கொடுத்தால் சரிதான். இப்படித்தானே என் மூதாதையர் எல்லாம் வெள்ளைக்காரனுக்கு, தொரை தொரைனு  ஊழியம் செஞ்சு இன்னைக்கு "உயர்ந்த நிலையில்" இருக்கோம்! வெள்ளைக்காரனை எதிர்த்த வீணாப்போன பார்ப்பான், பாரதியை அக்ரஹாரத்தை விட்டு வெளியே அனுப்பிடலையா? என்ன தொழில்னா என்னாங்காணும்?  போர்ன் சைட் நடத்தினாலும் பரவாயில்லை- எனக்குத் தெரிய நெறைய பார்ப்பன சகோதரர்கள் போர்ன் சைட்டும் நடத்துறானுக என்பது உங்களுக்கு கூடுதல் செய்தி.! ஆனா ஒண்ணு இண்கம்டாக்ஸ் மட்டும் மறக்காமல் கட்டிடுங்கோ! இல்லைனா பகவான் தண்டிச்சுடுவாரு!

* இதை கேளுங்காணும்! என் அப்பன் ராமன் மறைஞ்சிருந்து வாலியை கொல்லலையா? இதெல்லாம், சிறைச்சாலையில் உள்ள ஒருத்தரை கற்பழிக்கிறமாதிரி, இல்லைனா கொல்றமாதிரி. அவன் கொலை செஞ்சுட்டு உள்ள வந்தவன்தானேங்காணும்? அவன் மேலே என்ன கரிசனம் வேண்டிக்கெடக்கு? இதைவிடுங்கோ, நம்ம  மஹாபாரதத்துல, கர்ணன் உயிரையே நம்ம கிருஷ்ண பரமாத்மா யாசகம் கேட்டு வாங்கி அவனைக் கொல்லலையா? அப்படி கொல்றது தப்பு இல்லைனு பார்ப்பன பெரியவா சொல்லியிருக்கானு தெரியுமோ இல்லையோ?


ஆமா, என்ன இதெல்லாம்? இதுதான் தர்க்க சாஸ்த்திரத்தை கரச்சுக்குடிச்ச பார்ப்பானுக பேசுற நியாயம், தர்மம் ! நோக்கென்னவே தெரியும்? நியாயம் தர்மம் எல்லாம் அவாளுக்குத்தான் சரியாத் தெரியும்! அவாள சாடுறவா எல்லாம் நாசமாப் போகட்டும்!

Wednesday, June 20, 2012

லீனா மணிமேகலை, வினவு, கண்ணன் மற்றும்..

லீனா மணிமேகலை பிடிபட்டார்னு  வினவு சகாக்கள் ஒரு பதிவு எழுதினார்கள். இவங்க ரெண்டுபேருக்கும் இடையில் காலங்காலமாக சண்டை பழிவாங்குதல் எல்லாம் நடந்துக்கிட்டு இருக்குனு சொல்லலாம். ஒருவர் அசைவை இன்னொருவருவர் கவனமாக கவனிப்பதால அப்பப்போ இதுபோல் பரபரப்பா ஏதாவது வந்துக்கிட்டே இருக்கும். என்னடா இப்போ புதுசானு உள்நுழைந்து பார்த்தால் காலச்சுவடு கண்ணன் (இவரு சுந்தர் ராமசாமி மகரா?) என்பவர் "புரட்சித்தலைவி" னு எழுதிய ஒரு பதிவையும் இணைத்து லீனா மணிமேகலையை, வினவு "பிடிச்சி இருக்காங்க".

இவங்க எல்லாமே ஒரே மாதிரி கொள்கைகள் உள்ளவங்கதான். ஆனால் மாத்தி மாத்தி செல்லமாக அடிச்சுக்குவாங்க, மிதிச்சுக்குவாங்க. காலச்சுவடுக் கண்ணன் அவர் பதிவில் என்ன சொல்றாருனா பணக்கார டாடா ஒரு கேப்பிட்டலிஸ்ட். ஏழைகள் ஆதிவாசிகள் உழைக்கும் வர்க்கங்கள். ரெண்டு பேருக்கும் எப்படி ஆகும்? ஆகாது. ஆதிவாசிகளை சமாளிக்க பணக்கார டாடா ஒரு கமர்ஷியல் வெளியிடுறாங்க. அதாவது ஆதிவாசிப் பெண்களின் வாழ்வை  டாடா கார்ப்பரேசன் மேல்ப்படுத்துவதுபோல! அந்த கமர்ஷியலை இயக்கியவர் யாருனு பார்த்தால் "இடதுசாரி" லீனா மணிமேகலை! இதைப் பார்த்து இவரு எப்படி இப்படி ஒரு காரியத்தைச் செய்யப்போச்சுனு உழைக்கும் வர்க்கங்கள் கண்ணன், வினவு எல்லாம் பொங்கி எழுந்துட்டாங்க!

ஆனா ஒண்ணு நம்மளமாரி பெருசா எந்தக்கொள்கையுமே இல்லாத வீணாப் போனவங்களுக்கு இதுமாதிரி பிரச்சினையெல்லாம் வர்றதில்லை! நமக்கு என்ன வசதினா டாடா ஆரம்பிச்ச "உயர்கல்வி பள்ளி" யிலே வெக்கமே இல்லாமல் படிக்கலாம்! ஆசைப்பட்டா அமெரிக்காவில் போயி பிச்சையும் எடுக்கலாம்! கொள்கைகள் இல்லாத நம்மளமாரி கபோதிகளை,  இப்படி என்ன செஞ்சாலும்  ஒரு பய/சிறுக்கி  ஒண்ணும் சொல்லமுடியாது.

லீனா மணிமேகலை, இதுபோல் கண்ணன், வினவு பதிவுகளைப் பார்த்து, இவங்களுக்கு இல்லாத தகுதிகளை விமர்சிச்சு, ஒரு எதிர்வினைப் பதிவு எழுதி இருக்காரு.  தான் எதுவும் தப்பு செய்யலை, உழைக்கும் வர்க்கங்களுக்காக தான் செய்யும் பொதுநலத்தொண்டை, நல்முயற்சியை, வேணும்னே தவறாப் புரிந்துகொண்டு, தவறா அர்த்தம் கொள்கிறார்கள் இவர்கள்னு  இதற்கு ஏதோ பதில் சொல்லியிருக்காரு. இதில் கண்ணனை தகுதியில்லாத வாரிசுனும், வினவு சகாக்களை விலாசம் இல்லாத வாய்சவடால் வீரர்கள்ங்கிற மாதிரி தனிநபர் தாக்குதலுடன் எழுதியிருக்காரு.

 இதையெல்லாம் ஆராய்ச்சி செய்து, bicurious லீனா மணிமேகலை கொள்கைகள்தான் என்ன? இதுபோல் டாடா, ஆதிவாசிகளுக்கு உதவுவதாக "நடிப்பதுக்கு"  இவரு "இயக்குனராக இருக்கிறது" தப்பா?  சரியா? னு அலசி ஆராய எல்லாம் நேரம் இல்லை. அப்படி ஆராய்ந்து "உண்மையை"க் கண்டுபிடிச்சாலும், உலகத்தில்  இந்தமாதிரி கொள்கைவாதிகள் செய்றதுல  எது சரி, எது தப்புனு சொல்றதெல்லாம் கொள்கைப்பிடிப்பே இல்லாத நமக்கெல்லாம் ரொம்ப கஷ்டம்.

யாரையும் ஒரு அளவுக்குமேலே ஆராய்ச்சி செய்து பார்த்தால் உலகில் யோக்கியன்னு எவனுமே கெடையாதுனு நாம் கற்றது! நான் பார்த்தவரைக்கும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நண்பர்கள் பலரிடம் இருக்கும் கொள்கைகள் எல்லாம் பொதுவா பணம், புகழ், opportunity னு வரும்போது ஒரு மாதிரி வலுவிழந்துவிடும். அதனால லீனா மணிமேகலை கொள்கைகள் என்ன?, எப்படிப் பிடிபட்டாரு? சரி, நெஜம்மாவே பிடிபட்டாரா? இல்லைனா பிடிச்சதா சும்மா சொல்றாளா?னு சரியாப் புரியாதனால இதையெல்லாம் விட்டாச்சு.

இது சம்மந்தமாக ஜெயமோஹனும் ஒரு பதிவைப்போட்டு பஞ்சாயத்து வச்சுயிருக்காரு என்பதுதான் பெரிய வேடிக்கை. பதிவுலகில் நடக்கிற இதுபோல சண்டை, பஞ்சாயத்துக்கெல்லாம் இவரு இறங்கி நுழைந்து பார்த்து நியாயம் பேசுறதுக்கெல்லாம் நேரம் இருக்கானு நீங்க யோசிக்கலாம். இவரு எழுதிய இந்தப் பதிவில் இவர்களுக்குள்ளே உள்ள அரசியல் எல்லாமே தெரியுது.(தல சுத்துது எனக்கு!)  இவரு கண்ணன் கண்ணன்னு ஒரு 20 தடவை எழுதிவிட்டு, கண்ணனைப் பத்தி எனக்கு மரியாதையோ,  கவலையோ இல்லைனு சொல்லி காமடி பண்ணியிருக்கதுல இருந்து உண்மையிலேயே ஜெயமோஹன் எவ்ளோ ஒரு காம்ப்லெக்ஸ் பர்சனாலிட்டினு புரிந்துகொள்ளலாம். He claims that he does not have any high opinion on Kannan or Leena or vinavu group, neither he cares about them! Then why the heck he writes this article at all?!

முக்கியமாக இதை எல்லாம் எடுத்து, இவருடைய பதிவில் ஜெயமோஹன் விமர்சிச்சதுக்கு காரணம் வினவுதளம் மேலே இவருக்கு இருக்கிற காண்டு. குறைந்த நாளில் மேலே உயர்ந்த வினவு தளத்தை கவிழ்த்தவே இவருடைய இந்தப் பதிவுனுகூடச் சொல்லலாம். அதுவும் வினவுதளத்தை தாக்க அந்தத் தளத்தில்  வரும் பதிவுகளை விட்டுப்புட்டு, பின்னூட்டங்களில் உள்ள வன்மம் அது இதுனு விமர்சிச்சு ஏதோ நம் சமூகத்தைப் பத்தி கவலைப்படுவதுபோல் இவரு தனிப்பட்ட முறையில் வினவுமேலே வச்சிருந்த வயித்தெரிச்சலைத் தீர்த்துக்கிட்டாரு. வினவு தளத்தில் நான் பார்த்தவரைக்கும் இவரு சொல்றபடி அப்படி ஒண்ணும் கேவலமான பின்னூட்டங்கள் இல்லை! "கேவலமான" என்பது ஒரு relative term! :)

ஆனால் ஒண்ணு.. இவர் தளத்தில் வருகிற..

 "அன்புள்ள ஜெயமோஹன் அவர்களுக்கு, நான் உங்களுடைய நெடுநாளைய வாசகன், நீங்க ஒரு மேதை, உங்க பதிவு எல்லாத்தையும் நான் படிச்சு கிழிச்சுடுவேன்.." அப்படினு பொய் பொய்யாச் சொல்லி ஆரம்பிக்கிற நாகரிக பின்னூட்டங்கள் (கடிதங்கள்) மாதிரி இல்லாமல் கொஞ்சம் காரசாரமான பின்னூட்டங்கள்னு சொல்லலாம். 

இவரு மாதிரி பெரிய மனுசனுக எல்லாம்  பதிவை வாசிக்கிறதை விட்டுப்புட்டு எதுக்கு வேலை வெட்டி இல்லாமல் அனானிகள் எல்லாம் வரும் பின்னூட்டமெல்லாம் வாசிக்கிறாங்கனு தெரியலை. மேலும் இவரு சொல்கிற இந்த முகமூடி எல்லாம் பெரிய மனுசனுகளும், பிரபலங்களும், இவரோட பரமரசிகர்கள் பலரும், இந்துத்தவாக்களும், எல்லாரும்தான் மாட்டிக்கிட்டு பலதளங்களுக்கு வந்து பின்னூட்டத்தில்  வன்மத்தைக் காட்டுறாங்க!.

இவரைப்போல பின்னூட்டங்கள் இடும் வாய்ப்பை முற்றிலுமாக கொடுக்காமல் இருக்கது என்பது எளிதான விசயம். அதை, எதிர்கருத்தை ஏற்கமுடியாத கோழைத்தனம்னு கூட சொல்லலாம். நம்மாளுக்கு சுதந்திரம், பேச்சுரிமைனு கொடுத்தால் இப்படித்தான் குழாயடிச் சண்டையா வந்து நிக்கும். பேச்சுரிமை கொடுக்கிறது தப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது. அதனால பெரிய மனுசனுக எல்லாம் பதிவோட நிறுத்திக்கனும் என்பதே என் பக்க வாதம்! :)

இப்போ "மனசாட்சிச் சந்தை" இன்னொரு பதிவு வேற!  என்ன, எல்லாரும் அயோக்கியன் என்னைத் தவிரனு மனசாட்சிக்குப் பயந்து எழுதியிருக்காரு, ஜெயமோஹன்! :)

அட போங்கப்பா, எதுக்கு இந்தப் பதிவை எழுத ஆரம்பிச்சேன்னு ஆயிப்போச்சு எனக்கு. :(

Monday, June 18, 2012

ஒரு பெண்மணி எழுதிய எராட்டிக் ரொமாண்டிக் கதைகள்!




File:50ShadesofGreyCoverArt.jpg




இன்னைக்கு நியூயார்க் டைம்ஸ் #1 நாவல் என்னனு பார்த்தால், “மாம்மி போர்ன்”  என்றழைக்கப்படும் "50 ஷேட்ஸ் ஆப் gரே" என்கிறார்கள். அதென்ன gரே? grey யை "க்ரே" னு தமிழ்ல சொன்னால் நல்லாவே இல்லை, அதான் gரே. என்னமாதிரி கதைப்பா இது? னு நீங்க கேட்டீங்கனா  Erotic romance என்கிறார்கள்! எராட்டிக் ரொமாண்ஸா? ஆமா எந்தத் தறுதலை இதை எழுதியிருக்கான்? னு பார்த்தால் இ எல் ஜேம்ஸ்! இவர் ஒரு ஆண் இல்லை! 35 வயதான ஒரு தாய் மற்றும் மனைவி, யு கே யை சேர்ந்தவர் இவர் .

இதோட சேர்ந்து இன்னும் ரெண்டு புத்தகங்களும் வெளியாகியிருக்கு, அவைகளும் சூப்பர் ஹிட் தான்.

Erotic novel Fifty Shades of Grey is on course to be one of the best-selling UK books.


2) 50 ஷேட்ஸ்  டார்க்கர்

3) 50 ஷேட்ஸ் ஃப்ரீட்



ஆமா இந்த “மாம்மி போர்ன்”னா என்னங்க அது?

 பொதுவாக அம்மாமார்கள் போர்னோக்ராஃபி ரசிக்க மாட்டாங்க. ஆனால் இதுபோல் அரைகுறை போர்ன்  ரொமாண்ஸோட கலந்து கொடுத்தா ரொம்பவே ரசிப்பாங்களாம். இதெல்லாம் நானும் இப்போப் படிச்சு தெரிஞ்சுக்கிட்டதுதான்.

கதையில் முக்கியமான விசயம் என்னவென்றால் BDSM! 

அப்படினா என்னனு தெரியுமா?

தெரியாதா?

The term BDSM was coined as a condensed acronym in the 1990s to combine communities and practices that had a significant amount of crossover - bondage and discipline (B&D or B/D), dominance and submission (D&S or D/s), and sadomasochism or sadism and masochism (S&M or S/M).

B-Bondage: அப்படினா என்னனு கேக்குறீங்களா?  உங்க பார்ட்னரை, கையை கட்டிப்போட்டு, காலை கட்டிப்போட்டு அவருக்கு செக்ஸுவல் ப்ளஷர் கொடுக்கிறது. அப்படி செய்து உங்க காம தாகத்தை தீர்த்துக்கிறது

D-Descipline: (B/D)

D-Dominance: இந்த மாதிரி “ப்ளே” பண்ணும்போது  ஆணோ அல்லது பெண்ணோ "டாமினேடிங் ரோல்"ல இருக்கிறவங்க. அதாவது கட்டிப்போடுபவராக இருப்பவர்னு சொல்லலாம். இந்தக் கதையில் க்ரிஸ்டியன் gரே என்கிற ஹீரோதான் அவரு.

S-Sumission: இந்த மாதிரி “ப்ளே” பண்ணும்போது ஆணோ அல்லது பெண்ணோ பார்ட்னரை டாமினேட் பண்ணவிடும் ரோல்ல இருப்பவர். அதாவது கட்டிப்போடப்படுபவராக இருப்பவர்னு சொல்லலாம். இந்தக்கதையில் Anastasia Steele என்கிற கன்னித்தன்மையிழக்காத ஹீரோயின்!

S-Sadism: இதென்ன செக்ஸ்ல? னு கேட்டீங்கனா, "செக்ஸுவல் ஆக்ட்டிங்" போது பார்ட்னரை “ஸ்பேங்கிங்” அது இதுனு பலவிதமாகத் துன்புறுத்தி ரசிப்பவர்.

M-Machoism: இதென்னனா, செக்ஸுவல் ஆக்டிங் போது பார்ட்னரை “ஸ்பேங்கிங்” அது இதுனு  பலவாறு துன்புறுத்தச் செய்து துன்புறுத்தலை, தானந்துன்புறுத்தப் படுவதை  ரசிப்பவர். In other words, To gain satisfaction from dissatisfaction, pleasure from pain, enjoyment from suffering.

எனிவே, இதுபோல செக்ஸுவல் ஆக்டிங்கை மையமாக வச்சு ஒரு பெண்மணி எழுதிய எராட்டிக் நாவல்கள்தான் இது.


இந்த புத்தகங்களின் வெற்றிக்குக் காரணம் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது.

பொது இடங்களில் இதுபோல் படிக்க விரும்பாத வாசகிகள் இப்போ எல்லாம் "இ-புத்தகம்" "கிண்ட்ல்"னு இருப்பதால், இதை பஸ், ட்ரயின்ல முக்கியமாக பெண்கள் உங்க பக்கத்துதுல உக்காந்துக்கிட்டே "டேர்ன் ஆண்" ஆகிக்கிட்டே வாசிக்கிறாங்களாம்.

"டேர்ன் ஆண்" அது இதுனு  நான் சேர்த்து கதை விடவில்லைங்க!

இங்கே போயி வாசிச்சுப் பாருங்க!

நான் கொஞ்சம் சாம்பிள் மட்டும் கொடுக்கிறேன்!
Rachel, a 39-year-old mother and lawyer from New Jersey, specializes in medical malpractice and often asks "intimate" questions in obstetrical cases, but scenes from the new erotic trilogy, "50 Shades of Grey," shocked even her.
"I am not a prude and I am not shy," she said. "But this [book] made me blush."
The romance novels of EL James are heating up bedrooms across the country, and fans can't seem to get enough of what is being called "mommy porn."
Anastasia Steele, 21, and a virginal college student, can't say no to dashing 27-year-old Christian Grey, who insists she sign a contract that allows him to submit her to his every sadomasochistic whim.
In their first sexual encounter, Grey unveils his silver tie and binds her wrists in knots, and Steele does as she is told.
He is also fabulously rich, a telecommunications tycoon, and uses his wealth to take care of her like a pampered princess.
"Ana," as he calls her, willingly and excitedly agrees to spanking, whipping and gagging, with props like ice, rope, tape -- a repertoire right out of a BDSM [bondage, discipline, dominance and submission] manual.
Grey instructs her to call him, "sir," and sets rules on everything from her diet to her most intimate grooming routines.
"I loved the book -- all three," said Rachel, who has been married to her husband since she was 19 and has a healthy sex life. "But this is pretty hard-core porn."

"The first book is very, very graphic and harsh with a lot of S & M – and quite frankly, did not do it for me," she said. "I would never try anything with pain."
But, she got hooked on the romance that develops in the second book, when Steele tries to change Grey.
"What I loved was that it was a great love story."
The heart of the romance is the notion of submission and the way in which Steele accommodates Grey to "make him love her," according to Rachel.

New York times best sellers of today!

COMBINED PRINT & E-BOOK FICTION

  1. FIFTY SHADES OF GREY, by E. L. James
  2. FIFTY SHADES DARKER, by E. L. James
  3. FIFTY SHADES FREED, by E. L. James
  4. GONE GIRL, by Gillian Flynn
  5. KISS THE DEAD, by Laurell K. Hamilton

E-Book Fiction

  1. FIFTY SHADES OF GREY, by E. L. James
  2. FIFTY SHADES DARKER, by E. L. James
  3. FIFTY SHADES FREED, by E. L. James
  4. GONE GIRL, by Gillian Flynn
  5. FIFTY SHADES TRILOGY, by E. L. James

ஒரு சில நூலகங்களில் இந்தப் புத்தகத்தை தடை செய்து இருக்காங்க. இருந்தாலும் இதை தடை செய்யக்கூடாது என்று பொதுஜனங்கள் நெனைக்கிறாங்க மற்றும் போராடுறாங்களாம்! போராடி தடையை கழட்டி வெற்றியும் அடைந்துள்ளார்கள்.

Fifty Shades of Grey ban defended by librarian

June 05, 2012|By Dave Rosenthal
The Baltimore-area librarian who banned the wildly popular and wildly racy "Fifty Shades of Grey" says she knew her move would spark criticism. But Mary Hastler, director of the Harford County Public Library, says E.L. James' book violated the system's policy on pornography -- and was poorly written to boot.
"I've been doing this a long time, and I knew it was going to make some people happy and others unhappy. That's just a given. But if I had gone against our policy, it would have been a lot more difficult for me," she said in a profile by The Baltimore Sun's Childs Walker.


Florida readers are getting their "mommy porn" back.

The library system in Brevard County, Fla., has taken the handcuffs off "Fifty Shades of Grey," lifting its temporary ban on the steamy, sexy best-selling trilogy.
The library yanked its 19 copies off its shelves earlier this month amid concerns that the books were little more than soft-core pornography.
Cue the complaints of area residents clamoring to get their hands on this hot stuff. The Associated Press reports that the library is returning the trilogy to the shelves in response to requests from library patrons. The library system referred all requests for further comment to its director, who was not in the office on Tuesday.
The trilogy revolves around a sexually charged relationship between a young woman and her much older business-tycoon lover. There are plenty of saucy scenes involving bondage and discipline, sadism and masochism.

The Seattle-based trilogy, which was first self-published by author E.L. James in e-book format, has become a publishing sensation. It's dominating the first three spots in the Amazon.com bestseller list, and movie rights to the book set off a Hollywood bidding war.

The book is still banned in plenty of places, including libraries in Wisconsin and Georgia. The book's print publisher, Random House, says it's fighting those bans.

இந்தக்கதை முழுவதும் நான் படிக்கவில்லை! நான் படிப்பேனா என்பதும் சந்தேகம்தான். இதெல்லாம் chick flick னு சொல்றதுபோல chick novels! நம்ம டேஸ்ட்க்கு ஆகாது! இருந்தாலும் நான் புரிந்து கொண்டது இது.

நம்ம ஹீரோ க்ரிஸ்டியன் gரே ஒரு 27 வயதான  பணக்காரர். ஹீரோயின் "ஆனா" இவரிடம் வந்து "மாட்டும்போது" அவருக்கு 21 வயதுதான் -கன்னித்தன்மை இழக்காத கல்லூரி மாணவி.  இவரை ஒரு இண்டெர்வியூப் பண்ண வர்ராராம். ஹீரோ, ஹீரோயினிடம் ஒரு டீல் போட்டு BDSM ல இறங்குறாங்களாம், ரெண்டுபேரும்.

ஹீரோ ஏன் இப்படி இருக்காருனா அவரை அவரோட "ஸ்டெப் மாம்" இப்படி "அப்யூஸ்" பண்ணியிருப்பாராம். அதனுடைய பாதிப்புதான் இதாம்.

நம்ம ஹீரோயின் இந்தப் பரிதாபத்துக்குரிய ஹீரோவின் வழிக்கே போயி அவரு காம இச்சை விளையாட்டுகளுக்கு இணங்கி, அவரை திருத்துவதுபோல இருக்கும்  ஒரு அழகான  "லவ் ஸ்டோரி"னு சொல்றாக படித்த மேலைநாட்டுப் பெண்கள்! :)

இது போல் "மாம்மி போர்ன்"  ரசிக்கும் பெண்கள் நிறைந்திருப்பதை பார்க்கும்போது எனக்குத் தோனும் அபாயம் என்னனா..

கற்பழிக்கிறவன், பெண்ணை பலாத்காரம் செய்பவன், பஸ்ல கை வைக்கிறவன், எளியவர்களை "அப்யூஸ்" செய்றவன் எல்லாரும் அதில் பலியான/பலியாகிற பெண்கள் அதை ஓரளவுக்கு ரசித்ததாக, விரும்பியதாகத்தான் கற்பனை பண்ணிக்கிறாங்க (இது ஒரு மாதிரி மன வியாதினு சொல்லலாம்) என்று நான் நம்புறேன்.

இந்த மாதிரி எராட்டிக்ப் புத்தகங்களை பெண்கள் ரசிப்பது, ரசிக்கிறேன் என்று வெளியே சொல்வது என்ன விளைவுகளை உண்டாக்குமென்றால்.. இதுபோல் பாலியல் பலாத்காரம்  செய்துகொண்டு அதில் பலியாபவர்கள் அதை ரசிப்பதாக  நினைத்து  நியாயப்படுத்தும் மனவியாதி உள்ளவர்களை மேலும் பலாத்காரம் செய்ய ஊக்குவிக்கிதுனு எனக்குத் தோனுது.

ஆமா, பெண்கள் மனம் பெண்களுக்கே புரியுதோ என்னவோ, பாவம் என்னைமாதிரி ஆண்களுக்கு எப்படிங்க புரியும்! :)))

Friday, June 15, 2012

சோவின் மரபு ஆதரிப்பை ரசிக்காத ஜெயமோஹன்!

நீங்க எல்லாம் நெனைக்கிறதுபோல ரெண்டு இந்துத்தவாக்கள் ஒரேமாதிரி சிந்திக்கனும் என்பதில்லை! அதுவும் ரெண்டுபேரும் பெரிய மேதைகளாக இருந்தால் சாண்ஸே இல்லை! வாசகர் ஒருவர், மேதாவி "சோ" பற்றி விமர்சிக்கச் சொல்லி திருவாளர் ஜெயமோஹனிடம் கேட்டுயிருக்காரு.

பொதுவாக இதுபோல் தளங்களில் பதில் சொல்ல விரும்பிய, பதில் தெரிந்த கேள்விகளை மட்டும்தான் பதிலுடன் நாம் பார்க்க இயலும். பதில் தெரியலைனா இ-மெயில்ல "ஆனஸ்ட்டா" சொல்லிடுவாங்களானு கேக்காதீங்க! எனக்குத் தெரியலை! கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது தர்மசங்கடமாக இருந்தால், குப்பை கூடைக்குப் போய்விடும்னு நம்புறேன்!

எனிவே, "சோ" பற்றி கருத்துச் சொல்லச்சொல்லிக் கேட்ட இந்தக் கேள்வியை தூக்கி குப்பையில் போடாமல், இதற்கு தைரியமாக பதில் சொல்லியிருக்கிறார், ஜெயமோஹன்!

அவரு சுத்தி வளைச்சு சொன்ன பதிலை வள வளனு நான் ஜவ்வா இழுக்க விரும்பவில்லை! அந்த பதிலில் உள்ள எனக்குத் தேவையான பகுதியை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.

சோ மகாபாரதம் போன்றவற்றை முன்னோர் அளித்த பொக்கிஷம் என்ற நோக்கிலேயே அணுகுகிறார். கிட்டத்தட்ட இஸ்லாமியர் குரானை அணுகும் அதே பார்வை.
நான் மதப்ப்பேரிலக்கியங்களை இன்றைய வாழ்க்கையில் வைத்து அணுகுவதை, இன்றைய சிந்தனைகளில் வைத்து ஆராய்வதையே சரியான வழி என நினைப்பவன். இந்த வேறுபாடு எங்கள் பார்வைகளுக்கு நடுவே உண்டு.

சோவை நான் மதிப்பேன். அவரது நேர்மை மீது எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் அவரை எவ்வகையிலும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. எப்படி நான் நம்முடைய முற்போக்கினரின் மூர்க்கமான மரபு நிராகரிப்பை எதிர்க்கிறேனோ அதேபோலவே சோவின் கண்மூடித்தனமான மரபு ஆதரிப்பையும் எதிர்க்கிறேன். என்னுடையது நடுவே உள்ள பாதை.

பதில் சொன்னதுக்கு பாராட்டுக்கள், திரு ஜெயமோஹன்!

எனக்கென்னவோ சோ வுடைய வயதுக்கு மட்டும்தான் இவரு மரியாதை கொடுப்பதாகத் தெரிகிறது.

ஆமா, இந்தக் காமெடியன் "சோ" வுடைய மரபு ஆதரிப்புனா என்னப்பா? அந்தக்காலத்தில் எழுதிய குப்பைகளையெல்லாம் போற்றிப் புகழ்ந்து "பார்ப்பாந்தான் உயர்ந்தவன்னு" பச்சையாச் சொல்லாமல், சுத்தி வளைச்சுச் சொல்றதா இருக்கும். வேறெதுக்கு மஹாபாரத்தை எல்லாம் பொக்கிஷம்னு சொல்றாரு இந்தாளு?

தமிழ்நாட்டில் என்னவோ கடந்த ஒரு வருடமா பொற்காலம் நடக்கிறமாரி எதைப்பத்தியுமே விமர்சிக்காம மூடிக்கிட்டு இருக்கான். இவந்தான் உலகமஹா ஜேர்னலிஸ்ட்டாம்! இந்தச் சோ மாரிப் பார்ப்பானுக பேசுற நியாயம் இருக்கே.. அதெல்லாம் பகவானுக்கே புரியாதுப்பா!

Thursday, June 14, 2012

திருடி பிழைப்பை ஓட்டும் தமிலர்கள்!

தமிழ்யூத்கஃபே.காம் னு ஒரு தளத்தில் என் பதிவு! அப்படியே என் பதிவை  காப்பி - பேஸ்ட் செய்திருக்கிறார்கள். ஆமா, தொடுப்புக் கொடுக்கவில்லை! என் தளப் பெயரோ அல்லது ஒரிஜினல்ப் பதிவை எழுதிய என் பெயரோ எங்கேயும் குறிப்பிடக் காணோம்!

அந்தத் தள நிர்வாகி இதை எழுதியது போல,  திருடி "போஸ்டெட் பை அட்மினிஸ்ட்ரேட்டர்" னு போட்டுக்கிறான், சாவுகிராக்கி!!

இம்முறையாவது வெல்வாரா உலகநாயகர்?

விஸ்வரூபத்திற்கு உதவிய பேர்ரி ஆஸ்பார்ன்!

வர வர கமலஹாசன் திறமையான வியாபாரியாகிக் கொண்டு வருகிறார். தான் தயாரித்து, இயக்கி, வெளியிடும் விஸ்வரூபம் மிகப்பெரிய பட்ஜெட் படம் (100 கோடினு சொல்றாக? உண்மைதானுங்களா?) என்று உலகை நம்ப வைக்க ஓரளவுக்கு முயன்று வெற்றிடைந்தாரா என்னனு தெரியலை.

32 வருடங்கள் முன்னால் வந்த விஸ்வரூபம், சிவாஜியுடைய ஒரு குப்பைப் படம்னு சொல்லலாம். அதனால்தானோ என்னவோ ஆரம்பத்தில் பலருக்கும் கமலின் இந்த புதிய படம் விஸ்வரூபம்  ஒரு நல்ல எதிர்பார்ப்பை கொடுக்கவில்லை!

அது பழைய கதை! சமீபத்தில் வெளியான விஸ்வரூபம் ஸ்டில்கள் மற்றும் ட்ரைலர் ஓரளவுக்கு இந்தப்படக்கதையை இல்லைனா ப்ளாட்டை சொல்லிவிட்டது போல அமைந்திருக்கு. படம் எதைப்பற்றி என்று இன்னும் தெரியாத நிலையில் இது அதுக்குள்ள இந்த ஸ்டில்கள்/ட்ரைலர் பல யூகங்களை உருவாக்கி பலவிதமான சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது!

* படத்தில் கமல் ஒரு "இரட்டை வாழ்வு" வாழும் ஒற்றராக இருக்கலாம். ஸ்பை த்ரில்லர்னா, நம்ம ஹீரோ கமல் ஒற்றர்தானே?

*  குறிப்பாக  வலமிருந்து இடம் எழுதுவது போல் எழுத்துக்கள் ட்ரைலரில் எழுதப்படுகின்றன. மேலும் எழுத்துக்கள் அரபு/ஹீப்ரு எழுத்துக்கள் போல ஏன் இருக்கின்றன என்கிற கேள்வி எல்லார் மனதிலும் எழுகிறது.

* ஒருவேளை  உன்னைப்போல் ஒருவனில் செய்ததுபோல இஸ்லாமியர்களை கெட்டவர்களாக காட்ட முயசிக்கிறாரோ என்று அதுக்குள்ளே இஸ்லாமியர்களுக்கு எரிச்சலை கிளப்பியுள்ளார், கமல் என்கிற சாதனையாளர். இதையே வேற மாதிரிச் சொன்னால் இஸ்லாமியர்களை பிடிக்காதவர்களை சந்தோஷப் படுத்தியுள்ளார், கமல்னுகூட சொல்லலாம்!

* ரொம்ப மெனக்கெட்டு பேர்ரி ஆஸ்பார்னை அழைத்து இந்தப் படத்தை அவரை பார்க்க செய்துள்ளார்!!! ஹாலிவுட், ஆஸ்கர்னு அவங்களே அவங்களைப் பாராட்டி அவங்க படங்களுக்கே ஆஸ்கர் கொடுத்துக்கிறாங்க! ஏழு முறை என் தரமான படங்கள் அனுப்பப்பட்டும் எவனும் என்னைக் கண்டுக்கலைனு தன் மனதுக்குள்ளே திட்டிக்கொண்டு,  பலவாறு ஆஸ்கர்/ஹாலிவுட் பத்தி க்ரிடிசைஸ் பண்ணிய கமல்,  என்னனா ஹாலிவுட் தயாரிப்பாளர் பேர்ரி ஆஸ்பானைப்  போயி வலிய அழைச்சு வந்து தன் படத்தைப் போட்டுக் காட்டி இருக்காரு!!

* படத்தைப் பார்த்த ஆஸ்பார்ன் (4 தர திரும்பத் திரும்பப் பார்த்தாராம்ப்பா!!!) , நாகரிகமாக விஸ்வரரூபம் படத்தையும், கமலையும் புகழ்ந்து சொன்ன சில வரிகளை வைத்தும், ஆஸ்பார்ன் இவரை வச்சு படம் செய்யப் போவதாக சொன்னதை வைத்தும் தன்னுடைய சொந்தப் படமான விஸ்வரூபத்திற்கு ஒரு பெரிய கமர்ஷியல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒண்ணு ஆஸ்பார்ன் இவரை நம்பி, இவரை வச்சு படம் எடுக்கிறாரோ இல்லையோ, இந்த ஆஸ்பார்ன் - கமல்  கூட்டு முயற்சியை வைத்து இன்னைக்கு விஸ்வரூபத்திற்கு ஒரு பெரிய கமர்ஸியலைக் கொடுத்துளளார் கமல் என்பதே உண்மை.

* இதைப்பற்றி பத்திரிக்கைகள் பல எழுதி எழுதி, கமல் திரும்பத் திரும்பப் பேசிப் பேசி, தன் தயாரிப்பில் உருவான விஸ்வரூபம் படத்திற்கு ஒரு நல்ல ஓப்பனிங் பெற முயல்கிறார் கமலஹாசன் என்கிற வியாபாரி என்பதே இன்றைய நிதர்சனம்.

எனக்கென்னவோ, கமலை நம்பி ஆஸ்பார்ன் படம் எடுத்து.. அதை வெளியிட்டு.. கமல் நடிச்ச முதல் ஹாலிவுட் படத்திற்கே அவரு ஒரு ஆஸ்கர் வாங்கி.. இதெல்லாம் எதுவும் நடக்கிற விசயம் போல தோனலை. உண்மையிலேயே கமலை நம்பிப் பணம்போட்டு அவரை கட்டி அழறது ரொம்ப கஷ்டம்னு பல தயாரிப்பாளர்களுக்குத் தெரியும்! ஆனால் ஒரு வேளை ஆஸ்பார்ன் ஒரு வெள்ளைக்காரன் என்பதால் வேறமாதிரி ஆகி இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி வொர்க்-அவ்ட் ஆகி நல்லாவும் முடியாலாம்தான். அப்படியே கமல்- ஆஸ்பார்ன் ஹாலிவுட்ப் படம் நடந்தாலும், இந்தப் பதிவு இங்கேயேதான் இருக்கும், வந்து "நீ சொன்னது தப்பு! ஆஸ்பார்ன் கமலை வச்சு படம் எடுக்கிறார்"னு என் தளத்திற்கு வந்து என்னை நீங்க அறையலாம்!

ஆஸ்பார்ன் கமலை வச்சு படம் எடுத்து அது வெளிவந்து கமல் உலகப்புகழ் அடைந்தால், ஒரு தமிழன் வென்றுவிட்டான் என்று நானும் மகிழ்ச்சியையப்போவதென்னவோ மறுக்கமுடியாத உண்மைதான்!  :-)

Friday, June 8, 2012

இம்முறையாவது வெல்வாரா உலகநாயகர்?


முன்னால(ள) எல்லாம் கமல் என்கிற "ஜீனியஸ்" பேசினா ஒண்ணுமே புரியமாட்டேன்கிதுனுதான் இவரை கேலி பண்ணுவாங்க. ஆனால் சமீபத்தில் அந்தக் குற்றச்சாட்டு எல்லாம் காணாமல் போய்விட்டது. அப்போ நெஜம்மாவே  கமல் பேசுறதை மக்கள் புரிஞ்சிக்க கடுமுயற்சி எடுத்துப் பழகிக்கிட்டாங்களா? இல்லைனா கமல் இதுபோல் "புரியிறமாரிப் பேசப்பழகிக்கோங்காணும்"னு விமர்சனங்களைப் பார்த்துத் தெளிவாக பேசுறாரானு எனக்குத் தெரியலை.

சில ஆண்டுகளுக்கு முன்னால ஒரு விஜய் டி வி அவார்ட் கொடுக்கும்போது, நடிகர் சூர்யா, கமலஹாசன் காலில் விழுந்து வணங்கினார். தான், கமலுடைய மிகப்பெரிய விசிறினும் பெருமையாக சொல்லிக்கொள்பவர் இந்த இளம் நடிகர், சூர்யா.

 இது போதாதுனு இவருடைய தந்தை சிவக்குமார் கமல் பத்திப் பேசும்போது, அன்று சிவாஜி இருந்ததுபோல இன்று கமல் உச்சநிலைய்ல் இருக்காரு. அன்று, சிறந்த நடிகர்னு விருது கொடுக்கனும்னா  எப்படி ஒவ்வொரு வருடமும் சிவாஜிக்கு கொடுக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியதோ,  அதுபோல இன்று ஒவ்வொருவருடமும் என் தம்பி கமலுக்குத்தான் கொடுக்கனும். ஆனால் ஒவ்வொரு வருடமும் ஒரே நடிகருக்கு கொடுத்தா நல்லாயிருக்காதுனு மற்றவர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று முடிவுசெய்ததால்தான் சூர்யாவுக்கும் (வாரணம் ஆயிரம் ?) இந்த வருடம் கிடைத்துள்ளதுனு சொன்னாரு. என்னைப்பொருத்தமட்டில் இதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தான்த் தெரிஞ்சது.

 இது பத்தாதுனு கலைத்தாயின் "செல்லப்பிள்ளை" இவர்தான்னு இவருடைய "ரைவல்" ரஜினியே உலகறிய "பெருந்தன்மை"யாக ஏற்றுக்கொண்டுவிட்டார். இதெல்லாம் தேவையா? னு பலர் இதற்கும் எரிச்சலடைந்தாங்க என்பதும் உண்மைதான்.

ஆக, இன்னைக்கு கமலஹாசன் தமிழ் திரையுலகில் மிக உயர்ந்த ஸ்தானத்தில், மிகவும் மரியாதைக்குரிய இடத்தில் உள்ளவர், மற்றும் ரசிகர்களால் மட்டும்ல்ல, சக நடிகர்களாலும் மிகவும் மதிக்கப்படுபவர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை! 3 முறை தேசிய விருது பெற்றுள்ள ஒரே தமிழ் நடிகரும் இவருதான்.

பார்ப்பனராக பிறந்தாலும், நாத்திகன் என்றும், நான் மாமிசம் சாப்பிடுவேன் தன்னை எந்தக்கூச்சமும் இல்லாமல் சொல்வதாலும், தன் கடவுள் நம்பிக்கையில்லா கொள்கைகளை தெளிவாக உள்மனதிலிருந்து சொல்வதால், இவருடைய நேர்மைக்காக,  மறத்தமிழர்களுக்கும் இவர்மேல் பற்று அதிகம்.

தன் சொந்த வாழ்வில் இரண்டுமுறை விவாகரத்து செய்துவிட்டு, லிவ்-இன் பார்ட்னருடன் இன்று வாழ்கிற அவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை இன்றைய நிலையில் அவருடைய மரியாதையை எந்த வகையிலும் குறைக்கவில்லை! மாறாக இன்று இவருடைய முற்போக்கு சிந்தனையையும், நேர்மையையும் பாராட்டுகிறார்கள் தமிழக மக்கள்.

நான் கமல்ஹாசன் விசிறியல்ல!  நான் ஏற்கனவே சொன்னதுபோல கமல் அபிமானிகள் கமலை இஷ்டத்துக்குப் புகழ்ந்து தள்ளுவதால் கமலைப் புகழவும் பிடிக்காது. ஆனால் அவருடைய அபிமானிகள் பேச விரும்பாத, கமலுடைய குறைகளைத்தான் எனக்குப் பேசப்பிடிக்கும்.

கமலஹாசன் திறமைக்கு க்ரிடிட் கொடுப்பதில் கமல் மட்டுமன்றி அவர் அபிமானிகளும்  மிகப்பெரிய குழப்பவாதிகள்.

என்னத்தை குழப்பிப்புட்டாங்க???  கமல், இயக்காத படங்களையும் அவர் இயக்கிய படமாகத்தான் அவருக்கே முழு க்ரிடிட்டையும் கொடுத்து இன்னைக்கும் எதையாவது எழுதிக்கொண்டு வர்றாங்க.

உதாரணமாக, இன்றுவரை கமல் இயக்கிய படங்கள் எத்தனை னு பார்த்தால்,

1) சாச்சி 420

2) ஹே ராம்

3) விருமாண்டி

4) விஸ்வரூபம்


* 1) சாச்சி 420 ! கமல் இயக்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதன் தமிழாக்கம் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய ஒளவை சண்முகி. அதெப்படி remake பண்ணும்போது கமல் இயக்கினார்னு புரியவே இல்லை. கே எஸ் ரவிக்குமார்னா ஹிந்தியில் தெரியாதுனு கமல் தனக்கு க்ரிடிட் கொடுத்துக்கிட்டாரானு என்னனு தெரியலை. இந்தியில் இது ஒரு கமர்ஷியல் ஹிட் என்பதை யாரும் மறுக்கவில்லை! இது ராபின் வில்லியம்ஸ் நடித்த மிஸர்ஸ் டஃப்ட்ஃபயர் வுடைய காப்பி என்பதால் கமலஹாசனை பாராட்டியவர்களைவிட திட்டியவர்கள்தான் அதிகம்.

* 2) என்னைக் கேட்டால் கமல் முழுமுயற்சியுடன் இயக்கிய முதல்ப் படம் ஹே ராம்தான். ஹே ராம்  மாதிரி ஒரு படம் யாராலையும் எடுக்க முடியாது, அது இதுனு னு பல பாஸிடிவ் விமர்சங்கள், விமர்சகர்கள் (கமல் அபிமானிகள்) சொன்னாலும், இந்தப் படம் வியாபார ரீதியில் படு தோல்வி மற்றும் விமர்சகர்கள் மனதையும் கவரவில்லை என்பதே உண்மை!
அதற்குக் காரணம், அது ஒரு விவகாரமான சப்ஜெக்ட் என்பதால்னு ஒரு சிலர் சொல்றாங்க. ஆனால் அதெல்லாம் உண்மையினு நான் நம்பவில்லை. இயக்குனராக ஜனங்களை கவரமுடியாமல் ஹே ராமில் கமல் தோற்றார் என்பதே என் பக்க வாதம்.

*3) விருமாண்டி, கமல் இயக்கத்தில் வந்த ரெண்டாவது படம். ஹே ராம் இந்திய அளவில் பிரச்சினையானதுனா, விருமாண்டி தமிழ்நாட்டு அளவில் "சண்டியர்" டைட்டில் பிரச்சினை ல ஆரம்பிச்சு கடைசியில் எப்படியோ வெளியே வந்தது. இந்தப் படமும் பருத்திவீரன் அளவுக்குக்கூட பாராட்டப்படவில்லை. கமர்ஷியலாகவும் சுமாராகத்தான் போனது.

* 4) விஸ்வரூபம்: கமல் இயக்கத்தில் வரப்போகும் அடுத்த படம்.
 

 க்ளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்குனரானது, 1971 லயே, ஆனால் அவரை திறமையான இயக்குனர் என்று உலகம் ஏற்றுக்கொண்டது 1992 ல வந்த அண்ஃபர்கிவின் படத்திற்கு ஆஸ்கர் கிடைத்தவுடன்தான். நிச்சயமாக க்ளிண்ட்க்கு அதுதான் "ப்ரேக் த்ரு". அதேபோல் கமலுக்கு விஸ்வரூபம் "ப்ரேக் த்ரு"வாக அமைந்தால், கமல் அபிமானிகள் மட்டுமன்றி உலகமே கமலை சிறந்த இயக்குனர் என்று ஏற்றுக்கொள்ளும்! போற்றிப் புகழும்!

இந்தமுறையேனும் வெல்வாரா இயக்குனர் கமல்?

Tuesday, June 5, 2012

உங்க ஆத்துக்காரர் எப்படி?

"ஏண்டியம்மா வர்ஷா! உன் ஆத்துக்காரன்தான் நெறையா சம்பாரிக்கிறானே, ஏண்டி டெய்லி அவனோட சண்டை போட்டுண்டே இருக்க?"

"விடுங்கோ மாமி! அதெல்லாம் வெளிய சொல்ல முடியாது!"

"கேக்கிறேன்னு கோவிச்சுக்காதடிம்மா. குடிப்பழக்கம் எதுவும் இல்லையே?"

"குடிச்சாக்கூட பரவாயில்லையே, மாமி!"

"அதான், கோயில் கோயிலாப்போயி பகவானை  தரிசனம் பண்றாரே.. அதெல்லாம் குடிக்கமாட்டார்னு நேக்குத் தெரியும்."

"ஆமா, உங்களுக்குத்தான் அவரைப் பத்தி எல்லாம் தெரியுது, மாமி!"

"நான் இப்போ தப்பா என்னடி சொல்லிட்டேன்? நேக்கு எல்லாம் தெரியும்னு குதற்கமா சொல்ற?"

"நீங்கதானே சொன்னீங்க, மாமி "

 "நாலு சுவத்துக்குள்ள என்ன நடக்கிதுனு நேக்கென்னடி தெரியும்?!"

"ஆமா நாலு சுவத்துக்குள்ள என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியாதா?!"

"என்னடி இப்படி அசடாட்டம்? நேக்கெப்படி உன் ஆம்படையான் தெரியும்?"

"அப்போ ஒரு நாள் வந்துதான் பாருங்களேன்!"

"நானா? இதென்னடி வெக்கக்கேடு?"

"ஓ நீங்க அதச்சொன்னேளா?"

"ஏண்டி, நீதான்  எதுக்கு சண்டை போடுறனு சொல்லப்படாதோ? அப்படி என்னடி தப்பு செய்றான் உன் ஆம்படையான்?"

"அவருக்கு ஏதோ மன வியாதி போல இருக்கு மாமி!"

"அவனைப் பார்த்தா பித்துப் பிடிச்ச பிள்ளையாண்டான் மாதிரியா இருக்கான்?"

"அதெல்லாம் நாலு சுவத்துக்குள்ள நடக்கிறது! நேக்குத்தான் தெரியும் மாமி!"

"என்னடியம்மா சொல்ற?"

"சரி, ஊரெல்லாம் போயி என் ஆத்துக்காரர் பித்துப்பிடிச்சு அலையிறாருனு சொல்லிடாதீங்கோ, மாமி! நான் வரேன்"

-------------------------------

"நம்ம ருக்மணி மாமி நேத்து நமகுள்ள என்ன சண்டைனு நொழச்சி நொழச்சிக் கேக்கிறா.  சொல்லிடவா?"

"என்னடி சொல்லப் போறங்கிற?"

"நீங்க நேத்து சொன்னதை சொல்லவா?"

"நான் உன் புருஷன்டி! சும்மா குடிச்சுட்டு வந்து அடிக்கிறாருனு சொல்லு!"

"எதுக்குப் பொய் சொல்ல? இல்ல நீங்க சொன்னதையே  சொல்லிடுறேன்."

"அதெல்லாம் படுக்கையறையிலே சொல்றதுடி. தூங்கி எழுந்ததும் மறந்துடனும்!"

"அதெப்படி மறக்க முடியும்? உள்ள மூடையும் இப்படி ஏதாவது சொல்லி கெடுத்துடுறேள் ..!  அந்த மாமியை பார்க்கும்போது எனக்கு நீங்க சொன்னதுதான் ஞாபகம் வருது! அது ஒரு அசடு..எதையோ ஒளறிக்கிட்டு இருக்கு"

"சரி, எனக்கு ஒரு ப்ராஜெக்ட் முடிக்கனும். ஈவனிங் லேட்டாத்தான் வருவேன். நீ?"

"நான் எப்போவும் போலதான்.

-----------------------------------------

"சுபத்ரா! எல்லா ஆம்பளைகளுமே என் புருசன் மாதிரித்தானா?"

"உன் புருசன் என்ன நல்லாத்தானே இருக்காரு? அழகா, நெறையா சம்பாரிக்கிறாரு."

"நான் அதை சொல்லலடி!"

"வேறென்ன?"

"சொல்லவே அருவருப்பா இருக்கு!"

"அப்போ சொல்லாதே!"

"உனக்குப் புரியலையா?"

"என்ன எந்நேரமும் போர்ன் பார்க்கிறாரா? உன்னையும் பார்த்து ரசிக்கச் சொல்றாரா?"

"அடிப் பாவி!"

"அதைத்தானே சொல்ற? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்!"

"என்னடி சொல்ற?"

"இன்னைக்கு எல்லா ஆம்பளைகளுமே ஆண்மை இல்லாதவனுகதான்! இது மாதிரி ஏதாவது எவளோட தூண்டுதலையோ வச்சுத்தான் ஒரு பத்து நிமிசம் தாக்குப் பிடிக்கிறானுக!"

"இல்லைனா?"

"அதான் சொன்னேன் இல்ல?"

"என்ன சொன்ன?"

" இன்னைக்கு புருசனோட சந்தோஷமா ஒருத்தி இருக்கேன்னு சொன்னாள்னு வச்சுக்கோ.. அது பச்சைப் பொய்! இல்லைனா நைட்டு, அவள், அவனோட "ஏதோ பண்ணிட்டுப்போ"னு குடிச்சுட்டு போதையிலே அவள் படுத்து இருக்கனும்."

"இது வேறயா செய்ற?"

"ரெட் வைன் இதயத்துக்கு  நல்லது! எஸ்பெஷல்லி நம்மள மாதிரி மிருகங்களுடன் வாழும் பெண்கள் இதயத்துக்கு!"

"அல்கஹால் நல்லதா? என்னடி இது புதுக்கதை!"

"மொதல்ல, உயிரோட இருக்க  இதயம் வெடிக்காம இருக்கனும் இல்ல? அல்கஹால் ஒண்ணும் உன் ரத்தக் குழாயை அடச்சிடாது. ஆனா இந்த ஆம்பளைங்க செய்றதெல்லாம் சுயநினைவோட இருந்தால் இதயத்தை சுக்கு நூறா வெடிக்க வச்சிடும்!"

Friday, June 1, 2012

ராஜனின் தரங்கெட்ட பதிவும், அக்கப்போரும்!

ராஜன்னு ஒரு "பெரிய பதிவர்" இருக்காருனு உங்க எல்லாருக்கும் தெரியும். சமீபத்தில் ஒரு பதிவில்,  நண்பர் சி பி செந்திகுமாரை வச்சு காமெடி பண்ணி இருக்காரு. 

சிபி செந்தில் குமார் மனைவியிடம் ஒரு பேட்டி! - காமெடி கும்மி!

சரி, ராஜன், அவருக்கு சரினு தோனுறதை எழுதுறாரு. அவர் மனசாட்சிக்கு அது தப்பா தோணலைனு அவருடைய பேச்சுரிமைனு விட்டுப்புடுவோம்.
 
இந்தப் பதிவில்  பொதுவாக பலருக்கும் பிடிக்காத விசயம் என்னனா பதிவரின் "தவறு"க்கு (அப்படியே சி பி செந்தில்  ஏதாவது செய்து இருந்தால்)  அவருடைய மனைவியை அவர் பதிவில் இழுத்து காமெடி என்கிற பேரில் கீழ்த்தரமா நடந்து இருக்காரு இந்த ராஜன்.

திறந்துவிடப்பட்ட பின்னூட்டப்பெட்டியில் ஒரு சில பின்னூட்டங்கள் பதிவர் ராஜனை தாக்கி வந்தவுடன் தற்காப்புக்காக, காமெண்ட் மாடெரேசனை ஆரம்பிச்சு வடிகட்டி, தரமான பின்னூட்டங்களை வெளியிட ஆரம்பிச்சு  இருக்காரு. 
 
நல்லதுதான், அவர் தளத்தில் அவரை அவமானப்ப்டுத்த விடுவாரா? மாட்டாரு. தரமான பின்னூட்டங்களை தேர்ந்து வெளியிடுவது அவருடைய உரிமை! அதில் எந்தத் தவறுமே இல்லை!

இவரு, காமெண்ட் மாடெரேசன் செய்ய ஆரம்பிச்ச பிறகு "அக்கப்போரு" னு ஒரு பொறுக்கி ஒருத்தன் போட்ட பின்னூட்டம் இது!
 
அக்கப்போரு said...
தாயோளிக இதுக்கும் மைனஸ் குத்திருக்காய்ங்க. இவய்ங்கள எல்லாம் பெத்தாய்ங்க்களா இல்ல வோட்டுப் போட்டு எடுத்தாய்ங்கலா?

இந்த தரங்கெட்ட பின்னூட்டதையும், மட்டுறுத்தல் எதுவும் செய்யாமல் வெளியிட்டு அற்ப சந்தோசம் அடைந்துள்ளார் இந்த தரங்கெட்ட பதிவர் ராஜன்.
 
மைனஸ் மதிப்பெண் போடுவது ஒருத்தனோட உரிமை. அதை அந்த தள உரிமையாளர் பொத்திக்கிட்டு வாங்கிக்கிடனும். அப்படி அடுத்தவன் உன் பதிவுத் தரத்தை எடைபோட  இஷ்டம் இல்லைனா ஓட்டுப் போடும் பதிவுப்பட்டையை உன் தளத்தில் எடுத்துவிடனும். அதை விட்டுப்புட்டு, பதிவு பிடிக்காமல் அதற்கு மைனஸ் ஓட்டுப் போட்டவனையெல்லாம் "தாயோளி"னு கீழ்த்தரமா விமர்சிக்கும் "அக்கப்போருனு ஒரு ஈனப்பிறவி" யின் பின்னூட்டதை வெளியிட்டு இருக்கான் ராஜன் என்கிற இந்தப் பொறுக்கிப் பதிவர்! 
 
இதுபோல ஈனத்தனமா காமெண்ட் மாடெரேசன் செய்வதில் இருந்து  என்ன தெரிகிறது?   இந்த ராஜன் என்கிற பொறுக்கியின் தரம் தெளிவாகத் தெரியுது.

சத்யமே என்னவோ அமீர்கான் ஜீ!

உங்களுக்கெல்லாம் அது கேக்காது! வருண்! நீ என்னடா பெரிய புடுங்கி மாதிரி ஆங்கிலத்திலேயே எழுதிக்கிழிக்கிற? தமிழ்மணத்தில் வேற உன் பதிவை திரட்டச் சொல்லுற? னு என்னை நானே திட்டிக்கிறது வழக்கம்! ஆனால் நான் பாசைத்தமிழன்னு எனக்கே தோனுவது ஒரு சில வடமொழி வார்த்தைகளை எரிச்சலுடன், உச்சரிக்க முயற்சியே எடுக்காத சோம்பேறித்தனத்தின் போதும், இந்திப் படம்னா, நல்ல தரமான படத்தையும் புறக்கணிப்பது போன்ற சின்னப்புத்தி என்னிடம் இருப்பதால்தான். இவைகள்தான் என் தமிழ்ப்பற்றுக்கு அடையாளம்னு சொல்லலாம்.

இந்த அமீர்கான் நடத்துற சத்யமே என்ன எழவோ ஒளிபரப்பு நிகழ்ச்சி பத்திச் சொல்லனும்னா, தலைப்புப் பேரை சொல்லக்கூட எனக்குப் பிடிக்கலை. அதென்ன சுத்தமான அர்த்தம் தெரியாத வடமொழி வார்த்தை! அது வடமொழி என்பதால் அதுக்கு  என்ன அர்த்தம்னு தெரிந்துகொள்ளக்கூட  ஆசையில்லை! ஆமா, தமிழ்ல தலைப்பை மொழிபெயர்த்து ஒளிபரப்பினால்  என்ன்? ங்கிற வீம்புதான் வரும் எனக்கு. ஆமா எனக்கு அந்தளவுக்கு வடமொழியை ஏற்றுக்கொள்ள திறந்த மனது கெடையாதுனுகூட சொல்லலாம்.

இதுவரை நாலுமுக்கியப் பிரச்சினையை இந்த நிகழ்ச்சியில் உகலகறியப் பேசித் தீர்த்து இருக்காங்க!

List of Episodes

Episode # Title Topic Song Original Air Date
01 Daughters are precious Female foeticide in India "O Ri Chiraiya" 6 May 2012
02 Break the Silence Child sexual abuse "Haule Haule" 13 May 2012
03 Marriage or Marketplace Dowry system in India "Rupaiya" 20 May 2012
04 Every Life is Precious Medical malpractice "Naav" 27 May 2012


இவைகளில்  எந்த அத்தியாயத்தையும்  சோடை சொல்ல முடியாது!

* இந்த நிகழ்ச்சி  வியாபார நோக்கில் உருவாக்கப்பட்டதா?

ஆமாம்னு வச்சுக்குவோம். அதனால என்ன? சினிமா, டி வி என்றாலே வியாபாரம்தான்! அதனால வியாபார நோக்கில் எதுவும் ஒண்ணும் தப்பில்லை! போர்னோக்ராஃபியை விக்காதவரைக்கும்!

ஆமா இந்த போர்ன் சைட் வச்சு நடத்துற மாமாக்கள் எல்லாம் விலைமாது, கூட்டிக்கொடுக்கிறவனைவிட கேவலமான ஜந்துக்கள்னு உங்களுக்குத் தெரியும் இல்லை?


* இந்த நிகழ்ச்சியால்  என்ன பெரிய பயன்?

வரதட்சணை வாங்குவதை சரி என்று சொல்லாத, சிசுக்கொலையெல்லாம் மிகப்பெரிய தவறு என்று நம்பும், குழந்தைகளை பாலியல் வன்புணர்வு கொள்றவனையெல்லாம் தூக்கில் போடனும்னு நினைக்கிற நம்மளமாதிரி எது தப்பு எது சரினு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்களுக்கு இந்த நிகழ்ச்சியால எந்த நன்மையும் இல்லைனு கூட சொல்லலாம்.

ஆனால்.. இது மிகப்பெரிய உலகம்! இதுபோல் awareness ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும், அடிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களுக்கும் நிச்சயம் தேவைதான்! எனக்கு இந்த நிகழ்ச்சித் தலைப்பை சொல்லப் பிடிக்கலைங்கிறது வேற விசயம். ஒரு பெரிய நோக்கில் நம் விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது  இதில் எடுத்துப் பேசப்படும் விசயம் நமது நாட்டுக்கும், மக்களுக்கும்  மிகவும் அவசியமான நல்ல விசயம்னு தான் சொல்லனும்.

* அமீர்கான், நிச்சயமாக இந்த நிகழ்ச்சியில் மின்னுகிறார். ஏற்கனவே அவருக்கு ரொம்ப நல்ல பெயர்னு கேள்விப்பட்டு இருக்கேன். அது  இப்போ பலமடங்கு உயர்ந்துள்ளதுனுதான் சொல்லனும்.

* மேலும் விஜய் டிவியை இந்த நிகழ்ச்சி இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வதுபோலத்தான் இருக்கு. ஏற்கனவே * நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, * நீயா நானா, * அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் தரமாகவும் நல்லாவும் போயிக்கிட்டு இருக்கு.  இந்த நிகழ்ச்சியும் ஆரிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களான ஸ்டார் விஜய் டி விக்கு தமிழ் மக்களிடம் பேராதரவை பெற்றுத் தருதுனுதான் சொல்லனும். மக்களின் அறியாமையைப் போக்கி, அவர்களுக்கு நல்லறிவையும், தைரியத்தையும் கொடுக்கும் "பேரைக்கூட சொல்ல விரும்பாத"  இந்த "சத்யமே என்னவோ"  நிகழ்ச்சி நிச்சயம் ஒரு நல்ல நிகழ்ச்சி, நமக்குத் தேவையான ஒண்ணுதான் என்பது என் தாழ்மையான கருத்து!