Wednesday, December 31, 2008

நடிகர் இரா. ஸ்ரீ. கமலஹாசன்!

நடிகர் கமலஹாசன் பிறந்த ஊர் இராமநாதபுரம். தந்தைக்கு வேலை மாற்றத்தால் பிறந்து பல மாதங்களில் பக்கத்தில் உள்ள பரமக்குடிக்கு சென்றார். அங்கிருந்து சென்னை, களத்தூர் கண்ண்ம்மா,அப்புறம் உங்களுக்கு தெரியும் அவர் சினிமா உலகம் மற்றும் தனிப்பட்ட வாழக்கை. ஆனா என்ன காரணமோ தெரியவில்லை, இவர் பிறந்த ஊர் பரமக்குடி என்றுதான் நிறைய நேரங்களில் தவறுதலாகச் சொல்லப்படுகிறது. அதை கமலஹாசனே சரி செய்வதில்லை.

இங்கே இரா-> இராமநாதபுரம்

ஸ்ரீ-> ஸ்ரீனிவாசன் அய்யங்கார்

கமலஹாசன் ஒரு பார்ப்பனராகப் பிறந்தாலும், சமீபகாலம்வரை (அவரின் தசாவதாரம் வெளிவருமுன்னர் வரை) இவர் நாத்தீகர்கள் பலராலும் அரவணைக்கப்பட்டுத்தான் வந்தார், வரப்படுகிறார். தன்னை ஒரு பகுத்தறிவுவாதி என்று தைரியமாக சொன்னவர் இவர். இந்துக்களில் பொதுவாக 99.9% பார்ப்பனர்கள் மத, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். பல பார்ப்பனர்கள்தான் இந்து மதப்பாதுகாவலர்களாக இருக்கும் இந்த உலகத்தில் கமலஹாசன் போல ஒரு பகுத்தறிவுவாதி அக்ரஹாரத்திலிருந்து வந்ததைப் பார்த்ததும் திராவிட கழகத்தை சேர்ந்த பல நாத்தீகர்கள், கமலஹாசனை தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டார்கள். திராவிட பாரம்பரீகம் இவரை நவீனகால பாரதி என்றுகூட மிகைப்படுத்தி அழைத்தனர்.

ஆனால், சமீபத்திய தசாவதாரம் படம், பலவிதமான கேள்விகளை கொண்டுவந்து விட்டது. சினிமாவில் ஒரு நாத்தீகர், ஆத்தீகராக ஒரு வேடத்தில் நடித்தால் என்ன? இது ஃபிக்ஷன் தானே? என்று பல நாத்தீகர்களும் மற்றும் கமலஹாசன் விசிறிகளும் வாதிடத்தான் செய்கிரார்கள். இருந்தாலும் பல ஆத்தீகர்கள் இந்தப் படத்தைப்பார்த்து கமலஹாசன் நம் வழிக்கு வந்துவிட்டார் என்று பெருமிதம் கொள்வதுதான் பிரச்சினை.


இந்து மதத்தை தன் தாயைவிட மேலாக மதிக்கும் பார்ப்பனர்கள் பலரை கமலஹாசன் நடித்த "நம்பி ராஜன்" என்கிற மதவெறி பிடித்த ஒரு வெறியன் பாத்திரம், சந்தோஷப்படுத்தி இருக்கிறதென்பதை புத்தியுள்ள பகத்தறிவுவாதிகள் காணலாம். மொத்தத்தில், நாத்தீகள்களும், ஆத்தீகர்களும் அவரவர் கண்ணோட்டத்தில் கமலஹாசனை தன் "இனமாக" பார்த்ததால், தசாவதாரம் பெரிய வெற்றியை தழுவியது.

ஆத்தீகர்களுக்க்கும் இந்து மத வெறியர்களுக்கும், கமலஹாசன் ஆத்தீகப்பாதையில் வருவதுபோல் தோன்றினாலும், அவர்கள் இதை வெளிப்படையாகச் சொல்லாமல் தங்கள் மனதுக்குள் ரசித்துக்கொண்டார்கள்.


"பைத்தியக்காரன்" என்கிற ஒரு பதிவுலகத்தை சேர்ந்த ஒருவர், தசாவதாரத்தில் உள்ள பாத்திரங்களில் இருக்கும் மதவெறியை கண்டு, கோபமடைந்து கமலஹாசன் தன் பார்ப்பன புத்தியை காட்டிவிட்டார் என்று வசைமொழிகளில் விமர்சனம் எழுதினார்.


எழுத்தாளர் சாரு நிவேதிதா பொதுவாக கமலஹாசனை மதிக்கும் இவர், இந்தப்படத்திற்கு ஒரு நெகட்டிவ்க்ரிடிசிஸம் எழுதினார்.

அதே சமயத்தில், எழுத்தாளர் ஜெயமோஹன் இந்தப்படத்தை ஆஹாஓஹோ என்று புகழ்ந்து எழுதினார்.

பல நாத்தீகர்களுக்கு கமலஹாசனுடைய இன்றைய மனநிலை சந்தேகமாகவே உள்ளது. தசாவதாரம் பார்த்து குழம்பிப்போய் உள்ளார்கள் இவர்கள். ஆனால், வெளியில் இதை தெளிவாக சொல்லுவதில்லை.

கமலஹாசன் நாத்தீகராகவே சாகும்வரை இருக்கப்போகிறாரா? இல்லை ஆத்தீகராக மாறப்போகிறாரா அல்லது மாறிக்கொண்டு இருக்கிறாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.

அவர் என்னவா இருந்தால் உனக்கென்ன என்கிறீர்களா?

அவர் ஆத்தீகப்பாதையில் போனால், என்னைப்போல் ஆட்களுக்கு அவர் கேலிக்கூத்தாக தோனுவார். அதான்.

Monday, December 29, 2008

தற்கொலை! சுயநலமும் தியாகமும்!!!

ஒரு வகை!

எனக்குத்தெரிய ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த “ஜான்” என்ற “நண்பன்” தொங்கிவிட்டான்.

பிரச்சினை என்னவென்றால், அவன் ஒரு அழகான பெண்ணிடம் தன் மனதை பறிகொடுத்துவிட்டான். அவள், அவனுடைய ஜூனியர், மற்றும் அவனுடைய ஆய்வகத்தில் வேலை செய்பவள். இவன் கொடுத்த இதயத்தை அவள் வாங்க மறுத்துவிட்டாள். இவனுக்கு அவளைப் பிடித்ததுபோல் அவளுக்கும் யாரையாவது பிடிக்கும் இல்லையா?

ஜானின் இதயம் அவள் வாங்க மறுத்ததால் கீழே விழுந்து நொறுங்கிவிட்டது. இதயத்தை உடைத்த இவனால் அதிகமான நாட்கள் வாழ முடியவில்லை. தூக்குப்போட்டுக்கொண்டு தொங்கிவிட்டான்.

அவன் உடலைப்பெற அவனுடைய ,அப்பா அம்மா வந்து இருந்தார்கள். ஒரு நடுத்தரக்குடும்பத்திற்கும் கீழே உள்ள ஒரு பரிதாபமான நிலைமை. அவர்களின் ஒரே "ஹோப்" இவந்தான் என்று விளங்கியது! மகன் படித்துவிட்டான்! இனிமேல் மகன் சம்பாரித்து அவங்க கஷ்டத்தை எல்லாம் தீர்க்கப்போகிறான் என்று நம்பி ஏமாந்தவர்கள் அவர்கள்.

இந்த தற்கொலையில் சுயநலம், தன்னலம், தகுதிக்குமீறிய ஆசை, மற்றும் அடுத்தவர்களும் தன்னைப்போல் தான், அவர்களுக்கும் ஆசை இருக்கும், அதையும் நாம் மதிக்கனும் என்ற எண்ணமில்லாமை. இதைத்தான் பார்த்தேன். அவனுக்காக நான் பரிதாபப்படவில்லை! எரிச்சல்தான் வந்தது! இது ஒரு வகை தற்கொலை!

இன்னொரு வகை!

இது என்னுடைய பாஸ் சொன்னார். அவர் அப்பாவுக்கு இப்போது வயது 89. இன்னும் அவராவே கார் ஓட்டிச்சென்று, அவரை அவரே கவனித்துக்கொண்டு தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு பக்கத்தில் இருந்த ஒரு 90 வயது ஆள், அவர் என் பாஸ் அப்பாவுக்கு நண்பர் மாதிரி. அருகில் வசித்து வந்தவர். இந்த முறை என் பாஸ், அவருடைய அப்பாவை கிருஸ்துமஸ்க்கு அழைதுவர போனபோது, அவர் அப்பாவின் ந்ண்பர் இறந்துவிட்டதாக அவர் அப்பா சொன்னதும், என்ன ஆச்சு? என்று கேட்டாராம்!

கிடைத்த பதில் இதுதான். துப்பாக்கி எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டாராம் அந்த 90 வயது ஆள். காரணம்? அவருக்கு சாகும் அளவுக்கு எதுவும் பெரிய வியாதி இல்லை. இருந்தாலும், அவருக்கு சில வியாதிகள் இருந்தன. அதனால் தொடர்ந்து சில உதவிகள் தன் மகன்மற்றும் மகளிடம் இருந்து தேவைப்பட்டுக்கொண்டு இருந்ததாம். அது அவருக்கு தவறாக தோன்றியதாம். தன் குழந்தைகளுக்கு கடைசிக்காலத்தில் தான் பெரிய பாரமாக இருக்க வேண்டாம் என்று தன் உயிரை தானே மாய்த்து கொண்டாராம் அந்த பெரியவர். இதுவும் தற்கொலைதான்! இதில், சுயநலத்தைவிட, நம்மால் தன் குழந்தைகளுக்கு அளவில்லாத கஷ்டம் எதற்கு? என்கிற தியாக மனப்பான்மைதான் அவரிடம் இருந்தது.

In US, people who are in sixties are taking care of their father and mother who are in 80s or 90s. I know several cases. Some people are too healthy and they dont die even if they want to. Mainly bcos of the medical developments in dealing with heart diseases, controlling cancer and so on.

Who says Americans are selfish?

Who says Americans don't have much family value?

That is not what I see here! They take care of their old parents better than us in several cases I know of.

Sunday, December 28, 2008

கவனம்!!! நகைச்சுவை என்பது விபரீதமானது!

எதையாவது ஏடா கூடமாக சொல்லிவிட்டு, நான் நகைச்சுவைக்காக சொன்னேன் என்று சமாளிப்போம்! இதில் வெற்றியடைவது (சமாளித்து தப்பிப்பது) கடினம்.

ஒரு சிலர் நகைச்சுவை பதிவில் சில பெரிய நடிகர்களை இஷ்டத்துக்கு விமர்சனம் பண்ணி மாட்டிக்குவார்கள்.

இது பழையவிசய்ம்தான் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்ப்போம்!

எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி பற்றி திரு.ஜெயமோகன் எழுதிய விமர்சனத்தை பார்ப்போம்



////////

M G R (“தொப்பி”)

செல்லப் பெயர் தொப்பி. அவர் முதுமையை மறைக்க முகத்தின் மீது பச்சைப் பப்படம் ஒட்டுவதாக கணியான் சங்கரன் சொல்லி எங்க ளூரில் பரவலாக நம்பப்பட்டது. ஆகவே, பச்சைப் பப்படம் என்ற பேரும் சில இடங்களில் புழக்கத்தில்இருந்தது.

அவர் இரு லேகியங்களைத் தவறாமல் உண்பதுண்டாம். ஒன்று, தங்க பஸ்பம்; நிறம் மங்காமல்இருப்பதற்காக. இன்னொன்று, சிட்டுக்குருவி லேகியம்; வீரியத்துக்காக! ஆண் சிட்டுக் குருவிகள் எந் நேரமும் பெண் புடைசூழ இருக்குமாம். ஆயிரக்கணக்கில் ஆண் சிட்டுக் குருவிகளைக்கொண்டு செய்யப்படும் சிட்டுக் குருவி லேகியம் சாப்பிடுவதால், எம்.ஜி.ஆர். வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்தால் அவரை மொய்க்கும் பெண் சிட்டுக் குருவிகளை விரட்ட தலைக்கு மேல் வலையைக் கட்டி ஜஸ்டின் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்குமாம். வதந்திதான்.

சிவாஜி ('திலகம்')

'...சிவாஜியை எங்களூரில் ஆசாரிமார் தவிர்த்துப் பிறருக்குப் பிடிக்காது. வேறு யாருக்காவது பிடித்திருந்தாலும் மதிப்பான நாயர், நாடார் பட்டங்களை இழக்க விரும்பாமல் அமைதி காத்தார்கள். பொதுவாக முக்கியக் கட்டங்களில் பாடித் தொலைக்கிறவர் என்ற குற்றச்சாட்டு பரவல். தங்கை கல்யாணமாகிப் போகும் நேரம் வாசலில் டாக்ஸி காத்திருக்க, விருந்தினர் பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் நிற்க, பாசம் பீறிட அவர் பாடுவார். நெஞ்சடைக்கப் பாடாமல் சாக மாட்டார். அன்றெல்லாம் சிவாஜிக்கு காஸ்ட்யூம் அமைக்கும்போதே கக்குவதற்கு கால் லிட்டர் சிவப்பு மையும் தயாராக வைத்திருப்பார்கள்.

சிவாஜி படங்களின் நகைச் சுவையின் உச்சம் சண்டைக் காட்சிகள்தான். 'அவன்தான் மனிதன்' என்ற படத்தில் அவர் சண்டைக் காட்சியில் நடித்த போது, நாக்கைக் கடித்தபடி கையை வெடுக் வெடுக் என்று முன்னால் நீட்டிப் பின்னால் இழுப்பார். 'வைக்கோலு பிடுங்கு கான்' என்று அப்பி தாமோதரன் சொல்ல, அது சிவாஜி பட சண்டைக்கான சொல் ஆகியது. 'சுண்டன் படம் எப்பிடி மச்சினா? நாலு வைக்கோலு இருக்குலே... அதுகொள்ளாம், சிரிக்கவகையுண்டு! பின்ன கடசீ ஸீனிலெ மசி துப்பி சாவுதாரு. அங்கினயும் மனசு தெறந்து சிரிக்கிலாம். ஒருமாதிரி கொள்ளாம் கேட்டியா?'... /////////


எந்த ஒரு எம் ஜி ஆர் அல்லது சிவாஜி ரசிகர்கள் இதை “நகைச்சுவையாக” எடுத்துக்கொள்வார்களா? அல்லது எடுத்துக்கொண்டார்களா?



எம் ஜி ஆர் ஜால்ரா சத்யராஜ் சொல்கிறார்!


/////// ஜெயமோகன் முகத்தில் காறித்துப்ப வேண்டும் என்று பேசினார் சத்யராஜ். ஆனந்த விகடன் படிக்கும் போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அன்று மட்டும்தான் அழுதேன் என்றார் அவர். இன்னும் ஒரு வாரத்திற்குள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்படி கேட்காவிட்டால், இருவருக்குமே திரையுலகை சேர்ந்த அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு நிறுத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. சிக்கல் என்னவென்றால், விகடன் நிறுவனத்தினர் சக்தி மனசில சிவா என்ற படத்தை எடுத்து வருகிறார்கள். ஜெயமோகன் நான் கடவுள், அங்காடி தெரு ஆகிய இருபடங்களுக்கும் வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார். நடிகர் சங்கத்தின் இந்த ஒத்துழையாமை எச்சரிக்கை இருவருக்குமே தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. /////



காறிதுப்ப வேணும்??? என்ன ஒரு திமிர் இந்த நடிகனுக்கு என்று ஒரு பக்கம் நமக்கு எரிச்சல் வருகிறது.

இவர் எம் சி ஆர் ரசிகர் என்பதால் எம் சி ஆர் பத்தி எழுதினால் இவர் காறி துப்புவாராம்? இவர் நடிகர்களை ரசிக்கும் ரசிகர்கள் உணர்வுகளை என்றாவது புரிந்து இருக்கிறாரா என்ன???



ஃ எழுத்துச்சுதந்திரம் என்பதை ஜெயமோகன் துஷ்பிரயோகம் செய்தாரா? அவர் இல்லைனுதான் சொல்றார்.

ஃ ஆனாலும் செயமோகன் இந்த சிவாஜி ரசிகர்களுக்கு சாதிச்சாயம் இவர் பூசுவது படுகேவலமா இருக்கு!

ஃ இல்லை பேச்சு சுதந்திரத்தை அல்லது அவர் சொல்லும் “நகைச்சுவையை” நகைச்சுவையாக எம் சி ஆர் ரசிகர் சத்யராஜால் எடுக்கமுடிந்ததா?

ஃ நகைச்சுவை என்ற போர்வையில் யாரைவேணா எதுவேணா எழுதலாமா? I really don't understand, “What difference it makes whether you claim that as “comedy” or “just for fun” or a serious issue? அதனுடைய விளைவுகள் எதுவும் மாறப்போவதில்லை.

ஃ சத்யராஜ், யாரையும் கிண்டல் அடிப்பதில்லையா? இவர் கிண்டல் அடித்தால் இவரையும் இவர் சொல்வதுபோல் செய்யலாமா?


நகைச்சுவை என்பது ஒரு விபரீதமான விசயம். அதை கையாளும் விதம் பெரிய எழுத்தாளர்களுக்கே தெரியவில்லை. எழுத்தாளன் விமர்சனம் எழுதினால் பொதுவா வம்புதான். அடிக்கடி இவர்களுக்கு கதை எழுதுகிறோமா இல்லை ஒரு சில லெஜெண்டரி கேரக்டர்களை பலர் மனமுடையும் அளவுக்கு கொஞ்சம் கீழ்தரமாக (நகைச்சுவை என்க்ற போர்வையில்) விமர்சிக்கிறமானு இவர்களுக்கு மறந்துவிடுகிறது.

சத்யராஜ் ஒரு சாதாரண hypocrite! எங்க ஊரில் ஒரு சில நண்பர்கள் பார்த்து இருக்கேன். ஊருக்கு ஒரு நியாயம், அவனுகளுக்கு ஒரு நியாயம். அவர்கள் ஊரில் உள்ளவன் தங்கையை எல்லாம் என்ன மாதிரி வேணா “காமெண்ட்ஸ்” அடிப்பானுக. அவன் தங்கையை ஒருத்தன் திரும்பிக்கூட பார்க்ககூடாது! அதுபோல்தான் இருக்கு சத்யராஜ் நியாயம்! படுகேவலமாக!

மொத்தத்தில் நகைச்சுவை என்பது வில்லங்கமான ஒண்ணு. அதை சில பெரியமனிதர்கள் எழுதினால் வம்புதான்! இதில் விதிவிலக்கு யாருமே கிடையாது!

Wednesday, December 24, 2008

“நான்” என்னும் அகந்தை!

“நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” என்கிற கண்ணதாசன் வரிகள் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் வந்துள்ளது. ஆனால் மனிதனுக்கு இந்த “நான்” என்னும் அகந்தை ஒரு சில சின்ன வெற்றிக்குப்பிறகு வந்துவிடுகிறது. “நெனைப்பு” அதிகமாயிடுது. அது வந்துவிட்டால் அந்த இடத்தில் ஒருவன் முட்டாளாகிறான்.

“எப்படி?”

* நீங்கள் பெரிய அழகினு திமிர், அந்த அகந்தை இருந்தால், அந்த அழகு சில வருடங்களில் சிதைந்து/கரைந்து போகும்!

* நீங்கள் விளையாட்டில் பெரிய “மைக்கேல் ஜார்டன்” ஆக இருந்தாலும், உங்கடைய நாப்பது வயதில் ஒரு “ரூக்கி” உங்க கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவான்.

* நீங்கள்தான் பெரிய எழுத்தாளர், க்ரிட்டிக் நு உங்களை நினைத்தால், கொஞ்சம் "அகன்ற பார்வையில்" பார்த்தால் நீங்கள் ஒரு கிணற்றுத்தவளை ஒரு சின்ன வட்டத்தில் இருக்கீங்கனு தெரியும்.

* எனக்குத்தெரிய எங்க ஊரில், என் தெருவில் தாதா/சண்டியர் இருந்தார். அவரைப்பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள். அவருக்கு ஒரு 4 மனைவிகள், மொத்தம் 30 பசங்க. அவரைப்பார்த்தால் அந்த தெருவே பயப்படும். சாராய வியாபாரம், கள்ளக்கடத்தல் இப்படினு தொழில். ஒருமுறை வெளியூரிலிருந்து படிக்கும்போது, லீவுக்கு ஊருக்குப்போகும் போது, அந்த சண்டியர் இறந்துவிட்டதாக சொன்னார்கள். “என்ன ஆச்சு?” நு நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரு நாள் எதோ தண்ணியைப்போட்டு சலம்பல் பண்ணினாராம். யாரோ ஒரு ஆளை திட்டினாராம். அப்பாவை திட்டியதை கேட்ட ஒரு 18 வயது பையன், அப்பாவை திடிவிட்டாரேனு அவன் கோபத்தில் கத்தியை வைத்து குத்தி அந்த சண்டியரை கொன்றுவிட்டான் என்றார்கள்! என்ன சண்டைக்கோழி கதை மாதிரி இருக்கா? இது நிஜக்கதை. என் நண்பர்கள் எல்லாம் "ரொம்ப கேவலமா போச்சுடா ஒரு சின்னப்பையன் கொன்னுபுட்டான்" என்று சிரித்தார்கள்.

“நான்” என்ற அகந்தை இல்லாமல் வாழ்வது நல்லது.

ஆனால் முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறி ?

Tuesday, December 23, 2008

தமிழ்மணமும் சில "மூத்தபதிவர்களின்" அநாகரீகமும்!

தமிழ்மணம் ஒரு நல்லெண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட "ப்ளாக் அக்ரெகேட்டர்". இதில், கருத்துக்களை சொல்லி ஒரு சாதாரண பதிவர் தன் திறமையை வெளிக்கொண்டுவரலாம். அதனால் தமிழ்மணம் பல இளம் பதிவர்களை ஊக்குவிப்பதாக உள்ளது. இன்றைய பிரபலபதிவர்கள் தமிழ்மணத்தால் தன் வலைபூவை வளர்த்தவர்கள்.

வளர்த்தகடா மார்பில் பாய்வதுபோல் இவர்கள் (மூத்தபதிவர்கள் என்று சொல்லிகொள்பவர்கள்) அனைவரும் ஒன்று சேர்ந்துகொண்டு தாங்கள் இல்லை என்றால் தமிழ்மணம் இல்லை என்று மிரட்டுவதுபோல நடப்பதை என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.

எனக்கு தெரிய நிறைய கருத்துக்களங்கள், ஒருவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அந்த களநிவாகத்தை அவமானப்படுத்த முயற்சித்தால் அவரை களநிர்வாகம் நீக்குவது வழக்கம். ஆனால் பல தமிழ் கருத்துக்களங்களில் அதுபோல் செய்வதில்லை. தமிழ்மணமும் அதுபோல்தான் இன்றுவரை இருப்பதுபோல் தோன்றுகிறது. அதே சமயத்தில், ஒரு நிர்வாகிக்கு தன் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று கொஞ்சமாவது தெரியும் என்பதை மூத்த பதிவர்கள் உணரவேண்டும். நான் மூத்த பதிவர், நான் இல்லைனா நீ இல்லைனு மிரட்டும் வகையில் எழுதிவரும் பதிவர்களைப்பார்த்து தமிழ்மணம் கலங்கி, இவர்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் சரி சரி என்று போகவேண்டும் என்று சில "மூத்தபதிவர்கள்" எதிர்பார்ப்பதுபோல் இருக்கிறது.

"சூடான இடுகை" பற்றி உண்மை என்னவென்றால், உங்கள் பதிவு சூடான இடுகையில் வந்தால், சாதாரணமாக அந்த இடுகைக்கு வருகிற பார்வையாளர்கள் 3-10 மடங்கு அதிகமாவார்கள். உங்கள் இடுகை சூடாக்கப்பட்டால் நீங்கள் சாதாரண பதிவராக இருந்தாலும் ஒரு பிரபலபதிவரைக்கூட ஓரத்தில் தள்ளலாம். இந்த சூடான இடுகை இருப்பதால்தான் பலர் தன் "ப்ளாக் களை வளர்க்கமுடிகிறது. இன்று "பெரிய பதிவர்" என்று தன்னை நினைத்துக் கொள்ள முடிகிறது. இதனால் மற்ற தரமான பதிவுகள் வாசகர்களின் பார்வையிலிருந்து மறைக்கபடுகிறது. துரதிஷ்டவசமாக சில சமயங்களில் சில கேலிக்கூத்துகளும், உப்புபெறாத பதிவுகளும் சூடான இடுகையில் இடம்பிடித்து பல நல்ல தரமான இடுகைகளை மறைத்துவிடுகிறது. :-(

சூடான இடுகையில் தன் இடுகை வரவேண்டும் என்பது ஒவ்வொரு பதிவரின் அவா. இதை ஒரு சிலர் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை என்று அகந்தையுடன் சொல்லிக்கொண்டு ஆனால் சூடான இடுகையில் தன் பதிவுகளை கொண்டுவர பலவழிகளில் போராடுகிறார்கள்.

பொதுவாக, காமம், ரஜினி, கமல், கற்பு, நாய், செக்ஸ் போன்ற சொற்கள் தலைப்பில் இடம் பிடித்தால், அல்லது இன்னொரு பதிவரை விமர்சிப்பது போன்ற தலைப்புகள் உள்ள பதிவுகளை எளிதாக சூடான இடுகையில் கொண்டு வந்துவிடலாம். இல்லைனா சாரு நிவேதிதா அல்லது ஜெயமோஹன் பற்றி தலைப்பில் எழுதினாலும் சூடான இடுகையில் வரும்.

பல பதிவர்கள் சூடான இடுகைக்கு தன் பதிவை கொண்டு வந்து வந்து பழக்கப்பட்டு சூடான இடுகைக்கு "அடிக்சன்" ஆகிவிட்டார்கள். பல நேரங்களில் இவர்கள் முயற்சி எப்படி சூடான இடுகையில் இதைக்கொண்டு வருவது என்பது மட்டுமே? என்ன விசயம் நாம் சொல்கிறோம் என்பதல்ல! இதில் அதிகமாக இந்த "சூடான இடுகை" மயக்கத்தில் இருப்பது சில மூத்தபதிவர்கள்தான்.

இப்போது, ஒரு புதிருக்கு விடை தெரியாமல் இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் "பேக்-அப்" செய்துகொண்டு "ஜனநாயகம்" என்கிற வார்த்தையை "தவறாக" பயன்படுத்தி, தமிழ்மணத்தின் தரத்தையும் அதன் நிர்வாகத்தையும் கீழே கொண்டு வருகிறார்கள் என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய ஒரு விசயம்.

இவர்கள் தமிழ்மண நிர்வாகத்திடம் தனிமடலில் பேசவேண்டிய விசயங்களை (புதிருக்கு விடை காண்பதை விட்டு விட்டு) ஊரைக்கூட்டி பஞ்சாயத்து வைக்கிறார்கள். இதுதான் தன்னை "மூத்த பதிவர்" என்று சொல்லிக்கொள்ளும் பதிவர்களின் லட்சணமா?

குறிப்பு: என்னுயை கருத்துக்களை ஓரளவுக்குத்தான் பின்னூட்டத்தில் சொல்ல முடிகிறது. அதனால்தான் இந்தப்பதிவு.

Monday, December 22, 2008

காதலுடன் - 5

அவள் உள்ளே சென்றதும் கொஞ்ச நேரம் டி வி பார்க்கலாம் என்று டிவியை உயிர்ப்பித்து சேனலை மாற்றினான். அமெரிக்கன் மூவி களாசிக் சேனலில், காட் ஃபாதர் பார்ட்-2 ஓடிக்கொண்டு இருந்தது. மைக்கேலின் "மாஸ்டர் மைண்ட்" ஆல், அவனை சட்டத்தால் ஒரு மாஃபியா என்று நிரூபிக்கமுடியாமல் போனவுடன், அவன் மனைவியுடன் அந்த ஹோட்டலில் நடக்கும் வாதம் ஓடிக்கொண்டு இருந்தது. புகழ்பெற்ற அந்த ஹோட்டல் காட்சியில், மைக்கேலிடம் அவன் மனைவி கே ஆடம்ஸ், தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு பிரிந்து போகப்போவதாக சொல்லும் உணர்ச்சிகரமான கட்டம் அது. கே ஆடம்ஸ், தன்னுடைய கருச்சிதைவு இயற்கையானது அல்ல, மைகேலை பழிவாங்க வேண்டுமென்றே ஏற்படுத்திக்கொண்டது, மைகேலின் குழந்தைகளை இனிமேல் பெற்றுக்கொள்வது சரியல்ல என்று அவள் நினைப்பதாக சொன்னவுடன் என்று சொன்னவுடன், மைகெல் அவளை முகத்தில் அறைவான், "என் குழந்தைகளை யாரும் என்னிடம் இருந்து பிரிக்க முடியாது" என்று கோபத்துடனும், அதே சமயம் அவனுடைய மனைவியின் பழிவாங்கும் நடவடிக்கையால் மனமுடைந்தவனாகவும் பேசும் அந்தக்காட்சி முடியும்போது ரூமிலிருந்து வெளியே வந்தாள் சந்தியா.

நல்லா தலைப்பின்னி ரொம்ப மேக்-அப் போடாமல் அழகாக இருந்தாள். சற்றுமுன்னர் ரமேஷ் கண்களுக்கு ப்ரச்சோதகமாக காட்சியளித்த அவள் இப்போது சாத்தீகமாக காட்சி அளித்தாள்!

"இப்போ எப்படி இருக்கேன், ரமேஷ்?" என்றாள் புன்னகையுடன்.

"என் ஃப்ரெண்டுனு பெருமையா சொல்லிக்கிற மாதிரி அழகா, லட்சணமா தெய்வீகமா இருக்க, சந்தியா!"

"தேங்க்ஸ், ரமேஷ்! காட்ஃபாதர் பார்க்கறீங்களா?"

"ஆமாம், இது பார்ட் 2 சந்தியா. கார்ஃபாதர் பார்ட்1, & 2 படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் சலிக்காமல் என்னால் பார்க்க முடியும்"

"அப்படியா! அவ்வளவு நல்லா இருக்குமா? நான் இதுவரை பார்த்ததே இல்லை ரமேஷ்"


"இந்த படம் Chick flick இல்லை சந்தியா, இருந்தாலும் உனக்கு பிடிக்கும்"

"அதில் அப்படி என்ன இருக்கு? சண்டை, மாஃபியா, கேங்க் இதை எல்லாம் தவிர?"

"இன்னும் நிறைய இருக்கு சந்தியா! உதாரணத்துக்கு கடந்த சீனில் ஒரு மனைவி தன் கணவனை எந்த அளவுக்கு நோகடிக்க முடியும் என்பதை அழகா காட்டி இருப்பாங்க. ஒரு மனைவியால் மட்டுமே இந்த அளவுக்கு செய்ய முடியும்!
"
"ஏன் அப்படி?"

"அவளுக்கு மட்டுமே அவனுடைய வீக்கென்ஸ் நல்லா தெரியும், அதனால் தான்."

"OK, முடிந்தால் நான் இந்தப்படம் பார்க்கிறேன், ரமேஷ். அதற்கப்புறம் சொல்லுறேன். இப்போ சாப்பிடலாமா? என்று அழைத்தாள்.

இட்லி, சட்னி, சாம்பார், வெண்பொங்கல், கேசரி எல்லாம் செய்து வைத்திருந்தாள். இருவரும் எதிரெதிரே டைனிங் டேபிளில் அமர்ந்தார்கள்.

"ஏய், நானே எனக்கு வேண்டியதை வேண்டிய அளவு நானே எடுத்து சாப்பிடுகிறேன். சரியா?"

"ஓ கே, ரமேஷ்"

அவன் சாப்பிடும்போது ஸ்பூன் எல்லாம் பயன்படுத்தாமல் சாதாரணமாக கையை பயன்படுத்தியே சாப்பிட்டான். அவளும் அவனுடன் சேர்ந்து சாப்பிட்டாள்.

"ஏன் ஸ்பூன்லாம் யூஸ் பண்ணுவதில்லையா, ரமேஷ்?"

"இட்லிலாம் ஸ்பூன் வச்சு சாப்பிட்டால் டேஸ்ட் குறைந்துவிடும். எனக்கு சாம்பார், சட்னியுடன் நல்ல மிக்ஸ் பண்ணி சாப்பிட்டால்தான் எனக்கு நல்லா இருக்கும், சந்தியா"

அளவா சாப்பிட்டுவிட்டு தான் சாப்பிட்ட கார்னிங் ப்ளேட்டை எடுத்து சிங்க் ல கொண்டுபோய், கழுவி வைத்தான். கையையும் கிச்சன் சிங்க் லயே கழுவிக் கொண்டான். சந்தியா காஃபி கொண்டு வந்து வைத்தாள். அவளுக்கு அவள் சமையல் எப்படி இருந்ததுனு அவன் சொல்லக் கேக்கனும்னு ஆசையாக இருந்தது.

"ஏய் ஒண்ணு செல்லம்மா சொன்னா கோவிச்சுக்க மாட்டியே?"

"சொல்லுங்க!"

"நீ நிஜம்மாவே ரொம்ப நல்லா சமைக்கிறடி, சந்தியா!"

"என்ன டீயா?"

"நீ தான் கோவிச்சுக்க மாட்டேனு நு சொன்ன இல்ல?"

"தேங்க்ஸ்டா பொறுக்கி!"

"ஏய் கோபமா?"

"இல்லையே. நல்லாத்தானே சமச்சு இருக்கேன் நு சொன்னீங்க?"

"ஆமா, எவ்வளோ நாளா என்னைப் பொறுக்கினு சொல்லனும்னு ஏங்கின? நான் என்ன பொறுக்கியா?"

"ரொம்ப நாளா! இல்லையா பின்னே? என்ன கொஞ்சம் டீசண்ஸி தெரிந்த பொறுக்கி"

"நீ வாடா போடா பொறுக்கினு சொன்னா ரொம்ப செக்ஸியா இருக்கு. அதனால் ஒழுங்கா வாங்க
போங்கனு கூப்பிட்டால் உனக்கும் நல்லது, உன் உடம்புக்கும் நல்லது. சரியா?"

"வாடா, போடானு சொன்னால் என்னடா செய்வ?"

"என்ன செய்வேனா? இரு வர்றேன்!" என்று அவன் எழுந்து சிரித்துக்கொண்டே அவளை அனுகினான்.

அந்த நேரம், அழைப்பு மணி அடித்தது..

"யாரு இந்நேரம்?" என்று சொல்லிக்கொண்டே வெளியே பார்த்தாள். அங்கே தோழி காவியா வந்து இருந்தாள். சந்தியா கதவை திறந்தாள்.

"என்னடி காவியா திடீர்னு?"

-தொடரும்

Friday, December 19, 2008

கமல், ரஜினியாக இருந்தால்!

கமலஹாசன் கவுதமி பற்றி ஒரு கிசு கிசு, அதாவது அவர்கள் இப்போது பிரிந்துவிட்டார்கள் என்று ஒரு கேள்விக்குறியுடன் ஆரம்பித்த இடுகைக்கு, கமல் ரசிகர்கள், இல்லை இல்லை, மன்னிக்கவும் "நடுநிலைவாதிகள்" பலர் வந்து, ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது அநாகரீகம் என்கிறார்கள். I am certainly proud of them if and only if they respect everyone's private life!

சரி, just like that, நம்ம சாமியார் ரசினி அப்பப்போ இமயமலை போய் வருகிறார். அதுவும் அவருடைய தனிப்பட்ட வாழக்கைதான். அதை விமர்சித்தால், இதேபோல், அவர் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது தவறு என்று "இதே நடுநிலைவாதிகள்" சொல்வார்களா? இல்லை எங்கேயாவது சொல்லி இருக்கிறார்களா? என்ற கேள்வி கயலின் பின்னூட்டத்திலிருந்து எழுந்து உயிர்பெற்று வந்தது.

******கயல்விழி said...

கமலஹாசனைப்பற்றி மட்டுமல்ல, ரஜினியின் தனிப்பட்ட வாழ்வை(அவரின் இமயமலை பழக்கம்) போன்றவற்றை கிண்டலடித்தும், விமர்சனம் செய்தும் பல பதிவுகள்/கட்டுரைகளை படித்திருக்கிறேன். ******

நன்றி கயல்! :-)

ரஜனியின் இமயமலைப்பயணம் அவருடைய ப்ரைவேட் பிஸினெஸ் என்று எல்லோருக்கும் புரிந்ததாக எனக்கு என்னவோ தோனவில்லை. ப்ரைவேட் லைஃப் என்றால், ஒருவருடைய படுக்கை அறை வாழ்க்கை என்கிற தவறான புரிதல், கருத்து நம்மில் இருப்பதை உணரலாம். I thought we should fix ourselves right here! We need to really understand what is the meaning of one's "private life" when we go on advise others or not?

Another thought, ஒரு வேளை, ரஜினிக்கு பல மனைவிகள் (உலகறிய), கல்யாணம் என்பதில் நம்பிக்கை இல்லாமல், லிவ்-டுகெதெர் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து இருந்தால், இதே போல் ரஜினி-ஒரு நடிகை பற்றி நான் ஒரு கிசு கிசு எழுதி இருந்தால், விமர்சனத்திற்கு, பல நடுநிலைவாதிகள் வருவார்கள் வந்து இருப்பார்கள்.

* எதற்காக அவரின் (ரஜினியின்) படுக்கை அறை பற்றி பேசுகிறாய்? என்பார்கள்.

# ஆனால் அப்படி வரும் நடுநிலைவாதிகள் நிச்சயம் இன்று கமலை டிஃபெண்ட் பண்ணும் நடுநிலைவாதிகளாக இருக்கமாட்டார்கள்!

Are we really respecting a celebrity's or anyone's private life?

Or we just LOVE an ACTOR and DEFEND his WEAKNESSES because we love him?

Unfortuantely the latter statement seems like the TRUTH! :(

ஒருவேளை ஒபாமாவும்?

தோல்வியின் விளிம்பில் நிற்கும் ஜி.எம் மோட்டர்ஸ்,ஃபோர்ட் மற்றும் க்ரைஸ்லர் தொழிற்சாலைகளுக்கு, 17.4 பில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்கப்போவதாக புஷ் அரசு தீர்மானித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை புஷ் வீணடிப்பது இது முதல் முறையல்ல, வழக்கமாக செய்வது தான், இதில் வியப்படைய ஒன்றுமே இல்லை. ஈராக் பத்திரிக்கையாளர் செய்ததைப்போல எத்தனை செருப்பு பறந்தாலும் அதைப்பற்றி எல்லாம் புஷ் கவலைப்படவும் போவதில்லை. ஏற்கெனெவே சிலரது பேராசையால் திவால் ஆக இருந்த வால்ஸ்ட்ரீட்டை கைத்தூக்கி விட்டவர் தான் இவர். இப்படி ஏராளமான நிதி உதவியை பெறப்போகும் கார் தொழிற்சாலைகள், எப்படியும் தாக்குபிடிக்கப்போவதில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளில் சில,

1.பெட்ரோல் கம்பனிகளின் செல்லப்பிள்ளைகளாக விரும்பிய இந்த அமரிக்க கார் தயாரிப்பாளர்கள், வேண்டுமென்றே அளவில் பெரிய, Gas guzzling வாகனங்களையே தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர். சிறிய மாடல் வாகனங்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை, சுற்று சூழலை அதிகம் மாசுப்படுத்தாத ஹைப்ரிட் வகை கார்களையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. டொயோட்டா, ஹாண்டா போன்ற வெளிநாட்டு கம்பனிகளோ, அளவில் சிறிய, சிக்கனமான வாகனங்களை தயாரித்தன. பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் சிக்கனமான காரை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

2. அமரிக்க கார் உற்பத்தியாளர்களின் உதிரி பாகங்கள் கிடைப்பது அரிது, விலையும் அதிகம். மேலும் தரத்தோடு ஒப்பிட்டால் வெளிநாட்டு கார்களை விட தரத்தில் ரொம்ப குறைவு. பல வாடிக்கையாளர்கள் அமரிக்க வாகனங்களை திரும்பிக்கூடப்பார்ப்பதில்லை. உதாரணத்துக்கு, ஹாண்டா, டொயோட்டா போன்ற கார்களைத்தவிர வேறெந்த காரையும் நான் கன்சிடர் கூட பண்ணியதில்லை.

3. ஜி.எம், க்ரைஸ்லர் மற்றும் ஃபோர்ட் நிறுவனங்களின் சீஃப் எக்ஸிக்யூட்டிவ்கள், கையில் "கம்பனி திவாலாகிறது" என்ற ஒப்பாரியோடு எப்படி வந்து இறங்கினார்கள் தெரியுமா? ப்ரைவேட் ஜெட்களில்! ஊதாரித்தனத்தில் நம்ம ஊர் ஜெயலலிதாவையே மிஞ்சி விட்டார்கள். இதைப்பற்றி ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியதற்கு, "தங்களுடைய ப்ரைவேட் ஜெட் உபயோகம் விவாதத்திற்கு அப்பாற்பட்டது" என்று அகங்காரத்துடன் ஒரு முதலாளி குறிப்பிட்டார். டெட்ராய்ட்டில் இருந்து வாஷிங்டன் வருவதற்கான முதல் வகுப்பு விமானக்கட்டணம்: $837, இதுவே ப்ரைவேட் ஜெட் உபயோகித்தால்: $20,000- பல மடங்கு அதிகம்! அமரிக்க மக்களிடத்தும், மீடியாக்களிடத்தும் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. "பிச்சை பாத்திரத்துடன் ப்ரைவேட் ஜெட்டில் வந்து இறங்கிய முதலாளிகள்" என்று பத்திரிக்கைகள் அடுத்த நாள் தலைப்புச்செய்தியாக வெளியிட்டனர்.

விரைவில் சுதாரித்த எக்ஸிக்யூட்டிவ்கள், ஜெயலலிதா ஸ்டைலில் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதாவது, அமரிக்க அரசு பண உதவி செய்தால் இவர்கள் "ஒரு டாலர்" மட்டும் பெற்றுக்கொண்டு வேலை செய்வதாக. இது ஒரு கேலிக்கூத்து, ஏனென்றால் இவர்களுடைய ஊதியம், சும்மா பெயருக்கு தான். இவர்களுடைய பெரும்பான்மையான வருமானம் ஸ்டாக் ஆப்ஷன் மற்றும் இன்ன பிற வழிகளில் இருந்து வருபவை, எனவே 1 டாலர் சம்பளம் வாங்கினாலும் இவர்கள் பில்லியனர்களாகத்தான் இருப்பார்கள். இவர்களுடைய தொழிலாளர்களும் யூனியன்களின் துணையோடு மற்ற கார் தொழிலாளிகளை விட அளவுக்கதிகமான ஊதியம் பெறுகிறார்கள். இவர்கள் எதில் செலவைக்குறைக்கப்போகிறார்கள் என்பது அனைவர் மனதிலும் எழும் நியாயமான கேள்வி.

4. ஒருவேளை எட்டாவது அதிசயமாக எப்படியோ அமரிக்க கார் தொழிற்சாலைகளை பிழைக்க வைத்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் இவர்கள் வாகனங்களை யார் வாங்குவார்கள்? மக்கள் வாங்காமல் இருப்பதற்கு தரம் மட்டும் காரணமல்ல, வரலாறு காணாத அமரிக்க பொருளாதார பின்னடைவும் காரணம். அமரிக்க மக்கள் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பரிசுகள் வாங்கவே ரொம்ப யோசிக்கிறார்களாம், இந்த அழகில் கார் எப்படி? காருக்கு பெட்ரோல்? விந்தையாக இருக்கிறது!

இதைப்படிப்பவர்களுக்கு, அமரிக்க அரசு இந்தப்பணத்தை ஏன் மக்களுக்கு வழங்கக்கூடாது என்ற கேள்வி எழலாம். மக்களுக்கு கொடுத்தால் அவர்கள் கார் வாங்குவார்கள், வீடு வாங்குவார்கள். இது முதலாளிகளுக்கு லாபம் தானே? அது மட்டும் நிச்சயம் நடக்காது, எந்தக்காரணம் கொண்டும் அமரிக்கா "முதலாளித்துவத்தை" விட்டுக்கொடுக்காது, ஆனால் இந்த முதலாளித்துவம் ரொம்ப நாள் நிலைக்காது என்பது மட்டும் உறுதி. அமரிக்காவில் "கம்ப்யூனிசம்" என்பது ஏதோ ஒரு கெட்டவார்த்தையாகவே பாவிக்கப்படுகிறது, நடப்பைப்பார்த்தால் அமரிக்காவும் அதே பாதையில் போவதை தவிர வேறு வழி இருக்காது என்று நினைக்கிறேன்.

5. "அமரிக்க கம்பனிகள் திவாலாகுவதே நியாயமானது" என்று சில பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மற்ற வெளிநாட்டு கம்பனிகள் விரிவடைந்து, வேலை இழந்தவர்களுக்கு வேலை திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது, அதுவரை இருக்கவே இருக்கிறது "அன் எம்ப்ளாய்மெண்ட்". இத்தனை காலம் அவுட்சோர்சிங்குக்கு பெருமாதரவு கொடுத்து வந்த அமரிக்க முதலாளிகள், இன்று தங்களுக்கு ஆபத்து என்று வரும் போது திடீரென்று தேசப்பற்றாளர் வேடம் அணிந்து அமரிக்க மக்களிடத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். அமரிக்க அரசும் மக்களை விட "யாரோ சிலரை" திருப்திப்படுத்தவே அதிகம் முனைகிறது. பேசாமல் "Of the people, for the people and by the people" என்பதை "Of the rich, for the rich and by the rich" என் மாற்றிவிட்டால் சரியாக இருக்கும்.

இதில் வியப்பளிப்பது என்னவென்றால், சமீபத்தில் தேர்தலில் வென்ற வருங்கால அமரிக்க ஜனாதிபதியான ஒபாமாவும் ஆரம்பத்திலிருந்தே இந்த "பெயிலவுட்" திட்டத்தை ஆதரித்து வருவதேயாகும். உருப்படாமல் போகும் என்று தெரிந்தே உதவி செய்வதை ஒபாமாவும் ஆதரிப்பது ஜீரணிக்க கடினமாக இருக்கிறது. மெத்தப்படித்த புத்திசாலியான ஒபாமாவுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை! ஒபாமாவும் விலைபோய்விட்டால் அவருக்கு ஓட்டுப்போட்டவர்கள் வருத்தப்படப்போவது உறுதி. வழக்கமாக இப்படி நினைப்பதில்லை, ஆனால் இந்தமுறை என்னுடைய மேற்கண்ட கருத்துக்கள் தவறாக இருக்க வேண்டும் என ரொம்ப ரொம்ப விரும்புகிறேன்.

Wednesday, December 17, 2008

செருப்பு, அமெரிக்கா, புஷ், அவமானம்!

செருப்பால அடிப்பேன் என்பது ஒருவரை அவமானப்படுத்துவது என்பது இந்திய மற்றும் மிடில்-ஈஸ்ட் கலாச்சாரத்தில்தான். அமெரிக்கர்களை பொருத்தவரையில் செருப்பு ஒரு பொருள் அவ்வளவுதான். செருப்பை வைத்து எறிந்ததால் பயங்கரமாக அவமானப்பட்டதாக சிலர் “செருப்படி” என்று பேசுவது நகைப்புக்குரியது.

இதுபோல் ஒரு கேவலமான செயல் ஈராக் நாட்டின் ஒரு குடிமகன் செய்ததை நினைத்து ஈராக மக்கள் தலைகுனியனும். தன் குடியைக்கெடுத்தவனாக இருந்தாலும் போரில்தான் ஒருவர் ஒருவருக்கு எதிரி. இதுபோல் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் இடங்களில் அல்ல!

இந்த ஒரு விசயத்தை ஒரு பெரிய வெற்றியாக வேற வேலை வெட்டியில்லாத சில தமிழர்கள் கொண்டாதுவதும் நகைப்புக்குரியது. எதைப்பார்த்து சந்தோஷப்படுவதுனே தெரியாமல் மடமையில் வாழும் தமிழர்கள்தான் இதைக் கொண்டாடுவார்கள்!

Tuesday, December 16, 2008

கமல்-கெளதமி உறவு முறிவு???

சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

நடிகர் கமலஹாஷன் ஒரு அபூர்வ பிறவி. அவர் சம்பிரதாயப்படி கல்யாணம் செய்த அய்யங்கார் வகுப்பை சேர்ந்த வாணியிடம் திருமணமாகி சில வருடங்களில் விவாகரத்து வாங்கினார். அவர்களுக்கு குழந்தை இல்லை.

பிறகு சரிஹா என்ற வடஇந்திய நடிகையை, மணம் முடித்தார். அவருடன் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. அவருடனும் சில ஆண்டுகளில் உறவு முறிந்தது.

பிறகு, கெளதமி கமல்ஹாஷனின் கேர்ள்-ஃப்ரெண்டாக இருக்கிறார் என்கிறார்கள். கெளதமியை இவர் மணக்காததற்கு காரணம், கமலஹாஷனுக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. இனிமேல் யாரையும் மணம் முடிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்தார். கெளதமி-கமலஹாஷன் நட்பு மற்றும் உறவு ஊரறிய இருந்தது. ஆனால் இன்று அதுவும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்கிறார்கள்.

அடுத்து இவர் மனதை கொள்ளை கொள்ளும் அதிர்ஷ்டசாலி யாரோ ?

காதலுடன் -4

அன்று, வெள்ளிக்கிழமை இரவு. சந்தியாவும் அவள் தோழி கவிதாவும் டின்னர்க்கு போய் இருந்தார்கள்.

கவிதாவுக்கு சில பர்சனல் விஷயங்களைப் பற்றி பேசவேண்டுமென்பதால் சந்தியாவைத்தவிர மற்ற தோழிகள் யாரையும் அழைக்கவில்லை. சந்தியாவின் நெருங்கிய தோழி கவிதாவுக்கு கல்யாணம் ஆகி 4 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது அவர்களுக்கு ஒரு வயது குழந்தை இருக்கிறது. அவள் கணவர் கார்த்திக், ரொம்ப நல்ல டைப்த்தான். கவிதாவுக்கு அவர் எல்லா விதத்திலும் சரியாக தான் இருந்தார். காதல் திருமணம் என்று சொல்ல முடியாது. தெரிந்த நண்பர்கள் மூலம் அறிமுகமாகி திருமணம் நடந்தது. கல்யாண வாழ்க்கை 3 வருடங்கள் இன்பகரமாகப் போனது. ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. நிர்மலா என்று அழைத்தார்கள்.

ஆனால் குழந்தை பிறந்ததிலிருந்து அவர்களுக்குள் தாம்பத்ய உறவு பிரச்சினை ஆரம்பித்தது. சந்தியாவிடம், அவள் கணவர் முன்புபோல் பிரியமாக இல்லை என்று புலம்பினாள், கவிதா. நாள் ஆக ஆக அவள் ரொம்பவே குறை சொல்ல ஆரம்பித்தாள். ஆனால் நிர்மலாவிற்கு காரத்திக் ஒரு நல்ல அன்பான தந்தை என்பதை அவள் மறுக்கவில்லை. இன்று இரவு சாப்பிட்டு முடித்த பிறகும் ஒரே புலம்பல், அழுகை.

"என்னடி சொல்ற கவிதா? கார்த்திக் ஏன் திடீர்னு இப்படி மாறுகிறார்?" என்று ஆச்சர்யமாகக் கேட்டாள் சந்தியா.

"தெரியலைடி, அவர் முன்னால்போல் இப்போது இல்லை. நான் சொல்வதை நம்புடி"

"அதுக்குள்ளேயே! உங்களுக்கு கல்யாணம் ஆகி 4 வருடம்தான் ஆகிறது?"

"எனக்கும் ஆச்சர்யம்தான்"

"சரி, அவரோட இதுபற்றி பேசினயா? நீ தனியாக அவரை எங்காவது அழைத்துச் சென்று பேசுடி. உன் தேவைகளைப்பற்றி சொல்லு. நீ அவரிடம் எதைப்பற்றியும் பேச தயங்கக்கூடாது. கணவன் மனைவிக்குள் என்ன தயக்கம்?" என்றாள் சந்தியா ஏதோ அனுபவசாலிபோல.

"நான் பேசிப் பார்த்தேன். எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை! அதைப்பற்றிப் பேசினாலே அவருக்கு பிடிக்கவில்லை" என்றாள் அழும் குரலில்.

"எனக்கு இந்த திருமண வாழ்க்கை அனுபவமில்லைடி. அதனால் என்ன சொல்றதுனு என்ன தெரியலை. ஏதாவது தெரபிஸ்ட்டிடம் ரெண்டு பேரும் போய் பேசலாம் இல்லையா? உன்னுடயை தேவைகள் என்ன என்பதை அவர் மூலமா சொல்லாம் இல்லையா?"

"சரி இதுபற்றி வேணா கார்த்திக்கிடம் பேசிப்பார்க்கிறேன் சந்தியா. சரிடி, உன் வாழ்க்கை எப்படிப் போகுது?"

"ஒண்ணும் மாற்றமில்லை கவிதா! ரமேஷ் தெரியுமில்லையா? அவர் கால் பண்ணினார்!"

"ரியல்லி?"

"இப்போ சிகாகோவில் ஹில் சைட் ல தான் இருக்கிறாராம்"

"So, he moved back! You were always comfortable with him, Sandhya"

"எப்போதும்னு சொல்ல முடியாது! ஒவ்வொரு சமயம் ஒரு மாதிரி "ஈகோ க்ளாஷ்" மாதிரி வந்துவிடும். ஆனால் அவரோட பேசிக்கொண்டு இருந்தால் பொதுவா நல்லாத்தான் போகும். சரி, புறப்படுவோமா?" இருவரும் கிளம்பினார்கள்.

அடுத்த நாள், சனிக்கிழமை காலையில் ரமேஷ் வருவார் என்று எழுந்து குளித்துவிட்டு, சாதாரனமாக ஒரு சேலையை கட்டிக்கொண்டு, வீட்டை ஒதுங்க வைத்தாள். தலை குளித்து இருந்ததால், கொஞ்சநேரம் தன் கூந்தலை கட்டாமல் காயவிட்டுவிட்டு இருந்தாள் சந்தியா. நேரம் எதிர்பார்த்ததைவிட வேகமாகவே போனது. இன்னும் தலை பின்னாமல் இருந்தாள். கொஞ்சம் கூந்தல் காற்றில் "ட்ரை" ஆனவுடன் தலை பின்னிக்கலாம் என்றுகொண்டை போட்டுக்கொண்டாள் சந்தியா.

சரியாக 10:55 க்கு காலிங் பெல் அடித்தது. ரமேஷ்தான் என்பதை உறுதி செய்துகொண்டு கதவைத்திறந்தாள். ரமேஷ் உள்ளே வந்ததும் கதவை அடைத்தாள்.

"வாங்க ரமேஷ்! பரவாயில்லை 2 வருடத்தில் ரொம்ப மாற்றம் இல்லை. அப்படியேதான் இருக்கீங்க!"

"நீயும் அப்படியேதான் இருக்க சந்தியா, ஆனால், ஏதோ வித்தியாசம் தெரியுது" என்றான் அவளை ஆராய்ந்துகொண்டே, தான் வாங்கிவந்த சின்ன "கிஃப்டை" அவளிடம் கொடுத்தான்.

"இதென்ன ரமேஷ்? இதெல்லாம் எதுக்கு?! என்றாள் அவன் கொடுத்த பாக்கேஜை காட்டி.

"நான் போனவுடன் ஓப்பன் பண்ணிப்பாரு, தெரியும்!"

ரமேஷ்க்கு அவளின் அதிக ஒப்பனை இல்லாத கோலம் ரொம்ப செக்ஸியாக இருந்தது. எப்போதுமே லூஸ் ஹேர்ஸ்டைல் அணிபவள், அன்று கொண்டை போட்டு இருப்பதால் ரொம்பவே கவர்ச்சியாக தெரிந்தாள். அவன் ஆராய்ச்சி பார்வை அவள் உடலின் வேறு சில இடங்களிலும் பதிந்தது.

சந்தியாவுக்கு அவன் பார்வை ஒரு மாதிரியாக இருந்தது. அதை சமாளிக்க,

"என்ன என்னை இப்படி பார்க்கறீங்க ரமேஷ்? புதுசா பார்க்கிற மாதிரி?" என்றாள் அவனை பார்த்தும் பார்க்காமலும்.

"கொஞ்சநேரம் சென்று சொல்றேனே? வந்ததும் விருந்தாளியை இப்படியா கேள்வி மேலே கேள்வி கேப்பாங்க?"

வந்ததும் என்னை இப்படியா வேடிக்கை பார்ப்பார்கள்! எப்படி பார்க்க்குறீங்க? ஆனால் பேசுவதைப்பாரு!

"சரி, என்ன குடிக்கிறீங்க?"

"அல்கஹால்லாம் கொடுப்பியா என்ன?"

"டின்னெர்னா தரலாம். ப்ரேக் ஃபாஸ்ட்க்கு அதெல்லாம் கிடையாது"

"பொய் தானே?"

"அஃப் கோர்ஸ். என்னைப்பத்தி உங்களுக்கு என்னதான் எண்ணம்?"

"எப்படி அது? உண்மை மாதிரியே பொய்யைக்கூட இவளோ அழகா பேசுறயே அதை எங்கே பழகின, சந்தியா? சரி, என்னோட சண்டை போடாமல், கொஞ்சம் தண்ணி தா போதும், சந்தியா!"

சந்தியா, தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். "காஃபி தர்றேன் என்றால், வேறென்ன கிடைக்கும்னு சொல்லி கேட்டு என்னை நல்லா உபசரிக்க வச்சுட்டீங்க, ரமேஷ். உங்களுக்காக கஷ்டப்பட்டு இட்லி சட்னி எல்லாம் செய்து இருக்கேன்."

"ஏய் நான் அதைபத்தி சொல்லல. சரி, க்ரைண்டர் வச்சிருக்கியா என்ன?"

"அதைப்பத்தி சொல்லலயா? எனக்கு தெரியாதா என்ன? நீங்க நினைப்பதெல்லாம் இப்போ கிடைக்காது சார். என்னிடம் க்ரைண்டர்லாம் இல்லை, ரமேஷ்! மிக்ஸி வைத்தே அரைச்சேன்".

"புதுசா இட்லி அவியவச்சு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணிப்பார்க்கிறாயா? நான் தான் கிடைச்சேனா?"

"அதெல்லாம் இல்லை. நல்லா வந்திருக்குனுதான் நினனக்கிறேன். சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க! சரி என்னிடம் என்ன வித்தியாசம்? கொஞ்சம் வெயிட் போட்டு இருக்கேனா?"

"இருக்கலாம். நீ வெயிட் போட்டு இருந்தால் அப்படி இருப்பது நல்லாத்தான் இருக்கு!"

"நல்லானா எப்படி, ரமேஷ்?"

"இதையெல்லாம் எப்படி விலாவரியா சொல்றது? நீ இப்போ இருக்கிற "கெட் அப்" ல உன்னை கொஞ்சம் வேற மாதிரி காட்டுது"

"வேற மாதிரினா, எப்படி? குண்டாவா? ஒல்லியாவா?"

"சொல்லத்தான் வேணுமா? இங்கே காதைக்கொடு சொல்றேன்!"

"இங்கே வேற யார் இருக்கா? சும்மா சத்தமா சொல்லுங்க!" அவள் சிரித்தாள்.

"நான் சொல்லுவது எனக்கே கேட்கக்கூடாது! அதான்.." அது சரி, நீ என்னை மாதிரி ஆட்களை இன்வைட் பண்னும்போது இப்படியெல்லாம் இருக்காதே! பேசாமல் தலை பின்னி விட்டு வந்திடேன், ப்ளீஸ்?"

"நான் என்ன "நேக்கடாவா" இருக்கேன்? என்னை ரொம்ப குழப்பாதீங்க? ஏன் தலை பின்னி வரனும்?"

"எதற்கெடுத்தாலும் ஏன் நு கேட்டால் நான் என்ன செய்றது? போய் தலை பின்னிட்டு வா, ப்ளீஸ்!"

"சொன்னால்தான் போவேன். சரி காதில் சொல்லி தொலைங்க! இல்லைனா எனக்கு தலையே வெடிச்சுடும்" என்று ரமேஷ் அருகில் சோஃபாவில் வந்து அமர்ந்தாள். அமர்ந்து அவள் காதை அவன் முகம் அருகில் கொண்டுவந்தாள்.

இயற்கையிலேயே சந்தியா ரொம்ப அழகு, அவளுடன் தனியாக இருக்கவே பயப்படுவான் ரமேஷ். அவனைப்பொறுத்தமட்டில் ஒரு ஆண் தன்னை நம்பும் பெண்ணிடம் கன்னியமாக நடந்துக்கனும். அப்போத்தான் அவன் ஒரு நல்ல ஆண்மகன். ஆனால் இப்போ அவன் மேலேயே அவனுக்கு நம்பிக்கை இல்லை. அவள் அருகில் அமர்ந்தது அவனுக்கு ரொம்ப ஒரு மாதிரியாக இருந்தது. சந்தியாவின் உடலில் இருந்து என்னவென்றே சொல்ல முடியாத நறுமணம் அவனை மயக்கியது. அவள் வலதுகாதின் அருகில் உதட்டை கொண்டு சென்றான். சூடான அவன் மூச்சுக்காற்று அவள் காதில் பட்டது. இன்னும் கொஞ்ச நேரம் அவள் அப்படியே இருந்து இருந்தால், அவன் இதழ்கள் அவள் கன்னத்தில் மற்றும் அழகான அவள் காதிலும் பதிந்து இருக்கும்.

அவளின் அருகாமையால் ரமேஷிடம் ஏற்படும் தடுமாற்றத்தை உணர்ந்த சந்தியாவின் நிலைமை அதைவிட மோசமாக ஆகிக்கொண்டு இருந்தது. காதருகில்படும் அவன் மூச்சுக்காற்று அவளை ஏதோ செய்தது. அவள் காதில் ஏதோ மெதுவாகச்சொன்னான். அவன் சொன்னதைக் கேட்ட உடனே அதிர்ச்சியில் உடனே எழுந்தாள்.

"நிஜம்மாவா? உங்களை வந்து கவனிச்சுக்கிறேன்" என்று எழுந்து தன் அறைக்குள் ஓடினாள்.


-தொடரும்

Friday, December 12, 2008

காதலுடன் -3

ராஜூ கோபத்துடன், “நான் உன்னிடம் அதெல்லாம் கேட்டேனா? என்றார். நான் உடனே, "கோபப்படாதீங்க ராஜு, நானும் என் ரிசல்ட்ஸ் தருகிறேன்" சொன்னேன், ரமேஷ்”

”ஆனால் நீ அப்படி கேட்டது பிடிக்கவில்லையா அவருக்கு?”

“ஆமா, அது நான் என்ன பண்ணுறது, ரமேஷ்?”

"உன் முதலிரவு ரொம்ப வித்தியாசமாக ஆரம்பித்து உள்ளது, சந்தியா! ஆனால் எனக்கு இதில் எதுவும் தப்பா தெரியலை! ஆனால் ஒரு சில பேருக்கு இப்படி கேட்பதில் உள்ள நியாயம் தெரிந்தும் ஒரு வரட்டு கவுரவம் இருக்கும் இல்லையா? இவ என்ன கேட்பது, நான் என்ன கொடுப்பது என்று. சரி, வேற என்ன கேட்ட அவரிடம்?”

“நான் அவரிடம் சொன்னேன், கல்யாணம் ஆனாலும், எனக்குனு ஒரு சில பர்சனல் விசயங்கள் சில இருக்கு, அதையெல்லாம் என்னால் முழுவதுமாக ஷேர் பண்ண முடியாது. என்னுடையை சாலரியை என் தனி அக்கவுண்ட்ல போடுவேன். ஏன் என்றால், என் அப்பா, அம்மா மற்றும் ஃப்ரெண்ட்ஸ் சம்மந்தப்பட்ட கம்மிட்மெண்ட்ஸ் க்கு தேவைப்படும். அதே போல் அவரும் செய்துக்கலாம் நு சொன்னேன். அவருடைய பணத்திற்காக நான் அவரை கல்யாணம் செய்யவில்லை! அதே சமயத்தில், வாடகை, வீட்டு தேவைகள் எல்லாவற்றையும் சரியாக கணக்குப்பண்ணி என் பங்கை நான் கொடுத்துவிடுவேன் என்றேன். அதேபோல் அவரிடம் எதிர் பார்ப்பேன் என்றேன். அந்த “ப்ராப்பசிஷன்” அவருக்கு சுத்தமா பிடிக்கவில்லை!”

“எதுக்கு இந்த மாதிரி “ப்ராபொஷிஷன்” சந்தியா?

“என் அப்பா, அம்மா என் ஃப்ரெண்ஸ்லாம் எனக்கு ரொம்ப முக்கியம், ரமேஷ். அவங்க மிடில்-க்ளாஸ். அவர்களுக்கு தேவைகள் இருக்கு. இன்னைக்கும் நான் அவர்களுக்கு தேவையான நேரம் பணம் மற்றும் பலவிதத்தில்உதவுகிறேன். என் கல்யாணம் இதை எல்லாம் மாற்றிவிடக்கூடாது இல்லையா? அதுவும் வயதாக ஆக மருத்துவ செலவு அது இதுனு வரும். நான் நிறைய உதவ வேண்டிய நிலை வரலாம். நான் இதை என் கணவருக்கு ஒரு சுமையாக வைக்க விரும்பவில்லை! என்னுடைய தனிப்பட்ட பிரச்சினையாகத்தான் நான் எடுத்துக்க விரும்புறேன்.”

“இதெல்லாம் ராஜுவுக்கு புரியும் இல்லையா? இப்படி ஒண்ணு கேக்காமலே இருந்து இருக்கலாம் இல்லையா?”

“Ramesh! I don't want to take any chance here! What if he does not understand? I don't want to overlook that possibility. புரியுதோ, புரியலையோ, ரமேஷ், என்னோட தலைவலி எனக்குத்தான் புரியும். அதை அவரும் புரிந்து கொள்ளனுமோ, புரிந்து கொண்டு எனக்காக உருகனுமோனோ, அல்லது அதுபோல் நடிக்கனுமோனு நான் அவரிடம் எதிர் பார்க்கவில்லை. நான் அவரிடம் போய் இதுபோல் சின்ன சின்ன விசயத்தை எல்லாம் சொல்லி, விளக்கி, ஏதோ அவரிடம் பிச்சை எடுப்பது போல் கேட்க எனக்கு இஷ்டம் இல்லை”

“சரி, அதற்கு அவர் ரியாக்ஷன் எப்படி இருந்தது?”

“இதெல்லாம் அவருக்கு சுத்தமா பிடிக்கவில்லை, ரமேஷ். அதாவது புரிந்தாலும், இவ என்ன இப்படி “லா-பாயிண்ட்” பேசுவது என்கிற ஆணாதிக்க எண்ணம் இருக்கு அவரிடம். நான் ஏதோ தேவையில்லாமல் சின்ன விசயத்தை பெருசாக்குவதுபோல நினைக்கிறார். நான் இது சம்மந்தமாக அவரிடம் கெஞ்ச விரும்பவில்லை. அதான் எங்கள் திருமண உறவு இந்த நிலைமைக்கு வந்துவிட்டது!”

“உனக்கு ஐஸ் வைக்கிறதுக்காக சொல்லலை, சந்தியா. எனக்கு உண்மையிலேயே இந்த டீல் பிடிச்சி இருக்கு. ஒரு சில அம்மா அப்பா ஃபேமிலி சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை நம்ம வாழ்க்கை துணை புரியாமல் போவ தற்கு வாய்ப்புகள் நிச்சயம் இருக்கு. திடீர்னு அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவதை நிறுத்த முடியாது என்பது உண்மைதான்..அதேபோல் அவர்கள் உன்னுடைய உறவுகள், அவைகளை நீ உணருவதுபோல் உன் கணவர் உணருவது கடினம்னு எனக்கு தோனுது. என்னை ராஜு நிலைமையில் வைத்து யோசித்து சொல்றேன்”

“நிஜம்மாவா!! தேங்க் யு, ரமேஷ்!”

“எதுக்கு தேங்க்ஸ்லாம் சந்தியா?”

“இல்லை ரமேஷ், என்னை யாருமே புரிஞ்சுக்கலை ரமேஷ். ஒவ்வொரு சமயம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்பா, அம்மா எல்லாம் கூட நான் அதிகப் பிரசங்கித்தனம் பண்ணுவதாக சொன்னாங்க, ரமேஷ்”

“அதைப்பத்தி எல்லாம் கவலைப்படாதே சந்தியா. அது ராஜூவுக்கும் புரியத்தான் செய்யும்னு தோனுது”

“என்ன புரிஞ்சதோ போங்க . அவருக்கு இது பிடிச்ச மாதிரி தெரியலை. நானும் இதை கெஞ்சு கேக்கலை. ஒரு மாதிரி டிமாண்ட் பண்ணினேன் னு தான் சொல்லனும்”

"எதையுமே சொல்றவிதமா சொன்னால் புரிந்துகொள்வார்கள் னு சொல்லுவாங்க. அந்த சூழ்நிலையில் வின் - வின் சிச்சுவேஷன் என்பார்கள். ஆனால் அது எப்படினுதான் யாருக்கும் தெரியாதுனு நினைக்கிறேன்"

"நான் எனக்கு சரினு தெரிந்ததை எனக்கு தெரிந்தவிதத்தில் பேசினேன். பின்னால் நிறைய பிரசினையை தவிர்க்கலாம்னு பார்த்தேன். இப்போ ஆரம்பித்திலேயே பிரச்சினையாருச்சுனு நினைக்கிறேன்" அவள் சிரிக்க முயற்சித்தாள்.

”இதை எல்லாம் என்னிடம் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி, சந்தியா!”

"சரி, ரமேஷ், அடுத்த சாடர்டே என் வீட்டுக்கு வர்றீங்களா? சும்மா ஏதாவது காஃபி கீஃபி தர்றேன்"

"வேற என்ன கிடைக்கும்?"

"நீங்க வாங்க, அப்புறம் பார்க்கலாம். சரியா?"

"சரி வர்றேன். யாராவது கம்பெணி அழச்சுண்டு வரவா?"

"யாரு உங்க கேர்ள் ஃப்ரெண்டையா? அழச்சிட்டு வாங்களேன்?"

"வேணாம் வேணாம்"

"ஏன்?"

"என்னுடைய ஆறாவது அறிவு வேணாம்னு சொல்லுது"

சத்தமாக சிரிக்கிறாள்

"என்ன சிரிப்பு?"

"பரவாயில்லை உங்க அறிவு அப்பப்போ ஒழுங்கா வேலை செய்யுது"

"உன்னை சனிக்கிழமை வந்து கவனிச்சுக்கிறேன்"

"ரொம்ப பயமுருத்தாதீங்க! உங்க வீரத்தை நேரில் காட்டவும்"

"சரி நான் ஃபோனை வைக்கவா?"

"இதென்ன பர்மிஷன் கேக்குறீங்களா? சரி பாவம் பொழச்சு போங்க!"

"பை சந்தியா, சீ யு சாட்டர்டே! ஹேய் வாட் டைம்?"

"ஒரு காலையில் 11 மணிக்கு வாங்க!"

"சரி கால் பண்ணுறேன். இஃப் தேர் இஸ் எனி சேஞ்ச் ஆஃப் ப்ளான், ஐ வில் லெட் யு நோ. பை"

-தொடரும்

Thursday, December 11, 2008

வயாகரா (viagara) = கவேர்ட்டா (Caverta)

வயாகரா பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆண்மைக்குறைவு உள்ளவர்களுக்கு புது வாழ்வு கொடுத்த ஒரு மருந்து. இதை பலர் தவறாக பயன்படுத்தினாலும் ஒரு சிலருக்கு உண்மையிலேயே அவர்கள் குறையை நிவர்த்தி செய்ய உதவுகிறது. அவர்களையும் அவர்கள் மனைவிமார்களை சந்தோஷப்படுத்துகிறது.

ஆண்மைக்குறைவை மறைத்து, கில்ட்டியாக ஃபீல் பண்ணி மனவியாதி வந்து பலர் பலவித பிரச்சினைகளில் இருப்பது என்னவோ உண்மைதான். அதுவும் இந்தியாவில் உள்ள ஆணாதிக்க மனப்போக்கு உள்ள, குறுகிய மனப்பான்மை உள்ள ஆண்கள் இதுபோல் குறைகளை ஏற்றுக்கொள்ளாமல் வாழ்ந்ததெல்லாம் ஒரு காலம், அது இப்போ மலை ஏறிப்போய்விட்டது என்றும் சொல்லமுடியாது.

வயாகராவால் ஃபைஸர் என்கிற அமெரிக்க கம்பெணி பற்பல கோடானு கோடிகள் சம்பாரித்து அமெரிக்காவின் #1 பார்மஸியூடிகல் கம்பெனியாக ஆனது என்று சொன்னால் அது மிகையாகாது.

சரி, இந்தியாவில் இந்த குறை உள்ளவர்கள் என்ன மருந்து சாப்பிடலாம்? வயாகரா இந்தியாவில் கிடைக்குமா? எங்கே கிடைக்கும்? என்கிற கேள்வி பலருக்கும் எழும். இதற்கு பதில்தெரிந்தவர்கள் இருந்தாலும், அதை கேட்க வெட்கப்படுபவர்களும் இருப்பார்கள்.

ரான்பாக்ஸி (Ranbaxy) என்கிற இந்திய ஃபார்மஸியூடிக்கல் கம்பெணி, வயாகராவை (அதில் உள்ள அதே ஆக்டிவ் கெமிக்கலை) கவேர்ட்டா என்கிற பெயரில் விற்கிறார்கள். ஆண்மை குறையுள்ளவர்கள் தனியாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, உங்கள் உடல்நலத்திற்கு இந்த மருந்து தீங்கு விளைவிக்காது என்று அறிந்துகொண்டு பயன்படுத்தவும்!

இந்த லிங்க் பார்க்கவும்!

http://www.xlpharmacy.com/Caverta/


Thursday, December 4, 2008

காதலுடன் - 2

"வேணாம் ரமேஷ்! நான் ஏதாவது சும்மா சொல்லப்போக, அது ஏதாவது வம்பா முடிஞ்சிடும்னு பயம்மா இருக்கு"

"நான் என்ன அவ்வளவு சகிப்புத்தன்மை இல்லாதவனா? நான் ரொம்ப மோசமா, சந்தியா?"

"இல்லையே, ஆனால், ரமேஷ் நீங்க கொஞ்சம் சென்ஸிடிவ்தான். பொதுவா நம்மிடம் உள்ள குறைகளை நாமே ஒத்துக்கொள்வோம். ஆனால், இன்னொருவர் அதையே சொல்லும்போது கொஞ்சம் நமக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். இங்கே என்னை வைத்து நான் உங்களைப்பற்றி சொல்றேன்"

"சரி சொல்ல வேணாம், சந்தியா. நான் என்ன நினைச்சேன்னு (strange feeling) நானே சொல்லிடவா?"

"சொல்லுங்க, ப்ளீஸ்"

"நீ கோவிச்சுக்கக்கூடாது?"

"அதெப்படி எனக்குத் தெரியும்? சரி, முயற்சிக்கிறேன். சொல்லுங்க" அவள் சிரித்தாள்.

"எனக்கு உன் கல்யாணம் தோல்வியடைந்ததை சொல்லும்போது கொஞ்சம்கூட வருத்தமாக இல்லை. மாறாக ரொம்ப சந்தோஷமா இருந்தது. நான் என்ன "செடிஸ்டிக்கா" (sadistic) என்னனு தெரியலை"

"ஏன், ரமேஷ், உங்களுக்கு சந்தோஷம்?"

"தெரியலையே. எனக்கு விளங்கும்போது உன்னிடம் வந்து உன் காதில் யாருக்கும் கேட்காமல் ரகசியமாக சொல்றேன். சரியா?" என்று ஒரு மாதிரியான குரலில் சொன்னான்.

"அவ்ளோ பெரிய ரகசியமா? சரி, நான் காரணத்தை சொல்லவா?"

"சொல்லேன், பார்க்கலாம்"

"என்னோட நீங்க சண்டைபோட்டுவிட்டு, கோபமா இருந்தீங்க இல்லையா? கோபித்துக் கொண்டு இருந்ததால்தான் எனக்கு ஃபோன் நம்பர்கூட கொடுக்காமல் நியூ ஜேர்ஸி மூவ் பண்ணினீங்க, சரியா? அந்தக்கோபம் இன்னும் இருக்கு போல, ரமேஷ். இன்று தியேட்டரில்கூட உங்க கேர்ஃப்ரெண்டோட இருக்கும்போது என்னைப்பார்த்தும் ஒரு ஹாய் கூட சொல்லலை. இல்லையா? அதனால் என்னுடைய தோல்வியில் ஒருவேளை உங்களுக்கு சந்தோஷமா இருக்கலாம்."

" சே சே, நான் அந்த மாதிரி டைப்லாம் இல்லை, சந்தியா. இது வேற மாதிரி ஃபீலிங். ஏய் அவள் என் கேர்ள் ஃப்ரெண்டெல்லாம் இல்லை"

"அப்போ அவள் என்ன பாய் ஃப்ரெண்டா?"

"சும்மா ஃப்ரெண்டு. அவ்ளோதான்!"

"அதென்ன சும்மா ஃப்ரெண்டு? "சும்மா ஃப்ரெண்டு" ஒரு கேர்ளா இருந்தால் "கேர்ள் ஃப்ரெண்டு" நு சொல்லக்கூடாதா, ரமேஷ்?" ஏதோ அப்பாவிபோல கேட்டாள்.

"உனக்கு ஒண்ணுமே தெரியாது பாரு! சின்ன பாப்பா! வாயிக்குள்ளே விரலை விட்டாக்கூட கடிக்கத்தெரியாது உனக்கு!"

"விட்டுப்பாருங்களேன்!"

"சரி அப்போ, நீயும் என் ஃப்ரெண்டுதானே? "கேர்ள் ஃப்ரெண்டா" நீ எனக்கு?"

"லக்ஷ்மிட்ட என்னை கேர்ள் ஃப்ரெண்டுனு சொல்லுங்க. நான் ஒண்ணும் தப்பா நெனச்சுக்க மாட்டேன்"

"அவள் தப்பா நெனச்சுக்கிட்டா?"

"அவள் என்ன உங்க மனைவியா? தப்பா நினச்சாத்தான் என்ன? சரி, கேர்ள்-ஃப்ரெண்டுனா அப்படி என்ன தப்பு? ரொம்பத்தான் அந்த லக்ஷ்மிக்கு உருகுறீங்க"

"சரி உனக்கு இன்னொரு நாள் நேரில் பார்க்கும்போது சொல்றேன். நேரில் சொன்னால்தான் இதெல்லாம் உனக்கு புரிய வைக்க முடியும்"

"என்னைக்கு?"

"அடுத்த முறை நேரில் பார்க்கும்போது, சரியா? இப்போ என்னை ஆள விடும்மா!"

"சரி, நான் சொல்றதைக்கேளுங்க, ரமேஷ்! என் தோல்வியை நினைத்து அப்படி சந்தோஷம் வருவதால் ஒண்ணும் தப்பு இல்லை ரமேஷ். நாமெல்லாம் மனுஷங்கதானே? இதுக்காக ரொம்ப அழாதீங்க, சரியா ?" அவள் குரலில் கேலி தெரிந்தது.

"இல்லை, அது காரணம் இல்லைனு எனக்கு 100% உறுதியா தெரியும் சந்தியா!"

"சரி நீங்களே காரணத்தை சொல்லிடுங்க!"

"இப்போ உன்னோட என்ன வேணா பேசலாம். ஒருவேளை உன் கல்யாண வாழ்க்கை நல்லவிதமா போயிருந்தா இந்த அளவுக்கு உனக்கு நேரம் இருக்காது. நானும் உன்னோட இதுபோல் ஃப்ரீயா பேசமுடியாது என்கிற என்னுடய சுயநலம்தான்."

"உங்களுக்கு என்னோட பேசுவது அவ்ளோ பிடிக்குமா, ரமேஷ்?" அப்போ ஏன் நியூ ஜேர்ஸி போனதிலிருந்து ஒரு தரம் கூட என்னை கூப்பிடவில்லை? அவள் குரலில் கோபம் தெரிந்தது.

"பேசவில்லை உண்மைதான். ஆனால் உன்னைப்பற்றி நிறைய நினைப்பேனே, சந்தியா?" என்றான் அவளை சமாதானப்படுத்த.

"அப்படியா? என்ன மாதிரி நினைப்பு, அது, ரமேஷ்? சொல்லுங்க ப்ளீஸ்"

"அதெல்லாம் சொல்ல முடியாது, சந்தியா. அப்புறம் உன்னிடம் உதை யாரு வாங்கிறது?"

"அச்சச்சோ! அது என்ன ஒரு மாதிரியான நினைப்பா, ரமேஷ்? நீங்க ரொம்ப மோசமான ஆளா?"

"ஆமாம், நான் ரொம்ப கெட்டப் பையன் தான். கொஞ்சம் கவனமாவே இரு, சந்தியா"

"சரி, சும்மா சொல்லுங்க. நான் ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டேன்!"

"நீ வேற! இதெல்லாம் ரொம்ப ப்ரைவேட்"

"ஒழுங்கா மறைக்காம உண்மையை சொல்லுங்க, 'அந்த மாதிரியான' நினைப்பா?"

"அப்படித்தான் நு வச்சுக்கோவேன், என் மனசுக்கு நாந்தானே ராஜா?"

"அதெல்லாம் இல்லை. உங்களை ரொம்ப நல்லவர்னு நெனச்சு பழகினால், இப்படி இருக்கீங்களே, ரமேஷ்"

"எல்லாம் உன் தப்புத்தான், சந்தியா"

"அதெப்படி என் தப்பு?"

"நீ ஏன் அப்படியெல்லாம் யோசிக்கிற மாதிரி இருக்க? எல்லோரையும் பார்த்து அப்படியா தோனுது?"

"என்னைப் பார்த்தால் எப்படி தோணுது?"

"சொல்லிடவா?"

"வேணாம், வேணாம்! சரி, ஆம்பளைங்களுக்கு ஏன் கொஞ்சம்கூட வெட்கமே இல்லை, ரமேஷ்?"

"ஏன் ஆம்பளைங்கனு சுத்தி வளைக்கிற? "உங்களுக்கு கொஞ்சம்கூட வெட்கமில்லை ரமேஷ்"னு சொல்ல வேண்டியதுதானே?"

"மெளனம்"

"என்ன யோசனை?"

"இல்லை, நீங்க என்ன மாதிரி என்னைப்பற்றி நினைத்து இருப்பீங்கனு யோசித்தேன்! உங்களை மாதிரி நினைத்துப்பார்ப்பதால் இப்போ நானும் ரொம்ப கெட்டபொண்ணா ஆயிட்டேன்"

"இது ரொம்ப கண்டேஜியஸ் போலிருக்கு, சந்தியா! சரி, ராஜு நல்ல படித்த, அழகான, உன்னை மணம்முடிக்க தகுதியுள்ள ஆள் தானே? என்ன பிரச்சினை, சந்தியா?"

"வாழ்க்கையை ஆரம்பிக்குமுன், நான் ஒரு சில கேள்விகள் கேட்டேன், கண்டிஷன்ஸ் போட்டேன். அது அவருக்கு பிடிக்கலை, ரமேஷ்!"

"வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்பா? கொஞ்சம் புரியிறார்ப்போல சொல்லு, சந்தியா!"

"கல்யாணம் முடிந்தவுடன், அன்று இரவு தனியாக இருக்கும்போது முதலில் எனக்கு அவருடைய எச் ஐ வி டெஸ்ட் ரிசல்ட் வேணும்னு சொன்னேன். அப்புறம் சில பொருளாதார சுதந்திரம் எனக்கு தேவைனு ஒரு மாதிரி "ப்ராப்பஸிஷன்" கொடுத்து, அவரின் "அப்ரூவல்" கேட்டேன்!"

"அது சரி!. நீ உன்னுடைய ரிசல்ட்டையும் அப்போ அவருக்கு கொடுக்கனும் இல்லையா, சந்தியா?"

"அதை கொடுக்க ரெடியா இருப்பதால்தான் கேட்டேன் ரமேஷ்! அவர் செய்த தப்புக்கு நான் சாகத்தயாரா இல்லை. அவரும் என் தப்புக்காக சாக வேண்டாம் என்கிற நல்லெண்ணம்தான் ரமேஷ்"

"அதற்கு ராஜூ என்ன சொன்னார்?"

-தொடரும்.

Wednesday, November 26, 2008

மும்பையில் தாஜ்மஹால் ஹோட்டலில் பயங்கரவாதம்!!

மும்பையில் பயங்கரவாதிகள் தாஜ் ஹோட்டலில் தாக்குதல்!

இதுவரை சுமார் 80 பேர் சாவு! இந்தியர்களுடன் அமெரிக்கன் மற்றும் ப்ரிடிஷ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை பணய கைதிகளாக தாஜ் ஹோட்டலின் மேல் மாடியில் வைத்துள்ளார்கள். :(

துப்பாக்கிகள் வைத்து தென் மும்பையில் உள்ள ஹோட்டல்களை பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர். வெளிநாட்டுக்காரர்களை பணயகைதியாக்க முயன்றதுபோல் உள்ளது!

cnn.com

http://www.rediff.com/news/2008/nov/26-update-terror-in-mumbai.htm

Monday, November 24, 2008

காதலுடன் -1

சந்தியாவுக்கு ஒரே குழப்பமா இருந்தது. இரவு சீக்கிரமே படுக்கைக்கு வந்துவிட்டாள். படுக்கையில் புரண்டு படுத்துக்கொண்டு யோசித்தாள். அன்று மதியம் அவள் பார்க்கப்போன அந்த தமிழ்படம் "குருவி"யை அவளால் கவனித்துப் பார்க்கவே முடியவில்லை! அவள் நினைவெல்லாம் அவளுக்கு முன்னால் 5 வரிசைகள் தள்ளி உட்கார்ந்து இருந்த ரமேஷ் மற்றும் அவருடன் அமர்ந்திருந்த அந்தப்பொண்ணு பற்றியே இருந்தது. ஏனோ படம் முடிவதற்கு முன்பே தன் தோழியிடம் ஒரு சாக்கு சொல்லிவிட்டு எழுந்து வந்துவிட்டாள்.

இப்போதும் படுக்கையில் படுத்துக்கொண்டு அதையே யோசித்துக்கொண்டிருந்தாள். ரமேஷ் இங்கே எங்கே வந்தார்? யார் அந்தப் பொண்ணு? ரமேஷோட ஏன் படத்துக்கு வந்திருக்காள்? அவரோட மனைவியா? இல்லை கேர்ள் ஃப்ரெண்டா? சும்மா வெறும் ஃப்ரெண்டோ? எப்போ ரமேஷ் சிகாகோ வந்தார்? சும்மா விசிட் பண்ணுகிறாரோ? அவர் ரமேஷ்தானா? வேறு யாருமா? நிச்சயம் அவர்தான். யார் அந்தப்பொண்ணு? ரொம்ப இளமையா இருக்காளே! இருந்தாலும் தன் அளவுக்கு கவர்ச்சியாக அவள் இல்லைதான் என்று ஆறுதல் அடைந்துகொண்டாள், சந்தியா. இப்படி என்னென்னவோ யோசித்து தலையை பிய்த்துக்கொண்டிருந்தாள்.

ரமேஷ், சந்தியாவின் பழைய ஃப்ரெண்டு மற்றும் ரொம்ப நெருங்கிப் பழகியவர். இருவருக்கும் இடையில் ஒரு சின்ன "ஈகோ க்ளாஸ்" ஏற்பட்டு அது ஒரு பெரிய "வைல்ட் டேர்ன்" எடுத்ததால் இருவரும் பிரிந்துவிட்டார்கள். அது ஒண்ணும் அப்படி ஒண்ணும் பெரிய விசயமே இல்லை. ஆனால் ஒவ்வொரு சமயம் ஒரு சின்ன சாதாரண விஷயம்கூட இப்படி பெரிதாகி முடிந்துவிடுகிறது. அதன்பிறகு சந்தியாவுக்கு கல்யாணம் முடிவான போது, ஏதோ வேலை காரணமாக ரமேஷ் நியூ ஜேர்சிக்கு வேலை மாற்றலாகிப் போய்விட்டார். ஃபோன் நம்பர் கூட சந்தியாவுக்கு கொடுக்கவில்லை. அல்லது வேணும்னே கொடுக்கலையானு தெரியவில்லை. அவளை அதற்கப்புறம் அவர் கூப்பிடவும் இல்லை. அவள் இன்னும் அதே வீட்டு ஃபோன் நம்பர்தான் வைத்திருந்தாள். அவள் கல்யாணத்திற்கு ஒரு வாழ்த்து தந்திகூட அவரிடம் இருந்து இல்லை. ஒரு வேளை என் பத்திரிக்கை கிடைத்து இருக்காதோ? ஒரு ஈ-மெயில் வாழ்த்துக் கூட இல்லை! அதன் பிறகு இரண்டு வருடமாகிவிட்டது அவரைப் பார்த்து. ரமேஷிடம் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.

இதற்கிடையில் சந்தியா திருமண வாழ்க்கையில் வெற்றியடையவில்லை. கல்யாணம் ஆகி 3 வாரம்கூட அவளை மணந்த ராஜுவுடன் சேர்ந்து வாழமுடியவில்லை அவளால். இப்போது இருவருக்கும் விவாகாரத்து ஆகிவிட்டது.

சந்தியாவின் ஃபோன் அலரியது! அவள் ஃபோனை எடுக்காமல் படுத்தே ரமேஷ் யோசனையில் இருந்தாள்.

"ஹாய் சந்தியா! நான் தான் ரமேஷ் பேசுறேன். மூவ்ட் பேக் டு விண்டி சிட்டி! சும்மாதான் கூப்பிட்டேன்" என்று போனது ரமேஷின் மெசேஜ்!

அவசரமாக எழுந்து வந்து ஃபோனை எடுத்தாள், சந்தியா.

"ஹாய் ரமேஷ்! ஹல்லோ!!"

"ஆர் யு தேர் சந்தியா?"

"யா"

"எப்படி இருக்கீங்க?"

"இருக்கேன். நீங்கள்?"

"நான் நல்லா இருக்கேன் சந்தியா. உங்களை இன்று தமிழ்ப்படம் பார்க்கப்போனபோது தியேட்டரில் பார்த்தேன். பழைய ஞாபகம் எல்லாம் வந்தது. எப்படி இருக்கீங்க? கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கு?"

"தியேட்டரில் என்னைப் பார்த்தீங்களா! நானும் உங்களைப்பார்த்தேன் ரமேஷ். ஆனால் பேச முடியவில்லை"

"ஆமா, ஆனால் ஒரு ஃப்ரெண்டோட வந்திருந்தேன். படம் முடிந்த பிறகு உங்களோட பேசலாம்னு நினைத்தேன். ஆனால் உங்களை பிடிக்கமுடியவில்லை"

"நான், படம் முடியும் முன்பே வெளியில் வந்துவிட்டேன், ரமேஷ்! என்ன சிகாகோ பக்கம், ரமேஷ்?"

"இங்கே மூவ்பண்ணிட்டேன், சந்தியா. இங்கேதான் வேலை"

"ஆர் யு சீரியஸ்?"

"யெஸ்"

"எங்கே இருக்கீங்க?"

"ஹில்சைட்' ல இருக்கேன் சந்தியா!"

"ஹு வாஸ் இட்?"

"ஹூ?"

"அந்த பெண்? உங்களோட படத்துக்கு வந்திருந்தாளே?"

"ஓ அவளா? ஜஸ்ட் எ ஃப்ரெண்ட், சந்தியா. அவள் பெயர் லக்ஷ்மி. என் கம்பெணியில் வேலை பார்க்கிறாள். அவள்தான் இந்தப் படத்துக்கு என்னை அழைச்சுண்டு வந்தாள்"

"இல்லை யாருனு சும்மாதான் கேட்டேன்" என்று ஏதோ உளறினாள் சந்தியா.

"உங்க ஹஸ்பண்ட் வீட்டில் தான் இருகாரா? நான் பேசலாமா?"

"நோ, ரமேஷ்! நான் தனியா தான் இந்த வீட்டில் இருக்கேன்"

"ரியல்லி?! சாரி, நான் நியூ ஜெர்சி போகும் முன் என் நம்பர் கூட கொடுக்கல"

"இந்த சாரியெல்லாம் இப்போ எதுக்கு, ரமேஷ்? ஐ ஆம் நாட் கோயிங் டு அக்செப்ட் யுவர் சாரி! சரி, இப்போவாவது கூப்பிட்டீர்களே? தேங்க்ஸ்"

"ஹேய், கொஞ்சம் புதிர் போடாமல் கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன் ப்ளீஸ்?"

"எதைச் சொல்ல, ரமேஷ்?"

"உங்க கல்யாண வாழ்க்கைபற்றித்தான்.. என்ன ஆச்சு? ஒன்ஸ் ஐ யூஸுட் டு பி யுவர் க்ளோஸ் ஃப்ரெண்ட் தானே? சொல்லக்கூடாதா, சந்தியா?"

"ஒண்ஸா? அப்போ சரி சொல்லக்கூடாதுதான்" என்று சிரித்தாள்.

"ஏய் ஏய், இப்போவும் நான் உன் ஃப்ரெண்டுதான் சந்தியா!"

"அதை ஏன் கேக்குறீங்க, ரமேஷ்! அது ஒரு வாரம்கூட ஒழுங்கா போகலை! ரமேஷ். இட் வாஸ் எ ஃபியாஸ்கோ"

"ஐ ஆம் சாரி டு நோ தட்! சரி ஏன்? என்ன ஆச்சு?"

"ரெண்டு பேரும் கம்ப்ளீட் மிஸ்-மேட்ச்! சேர்ந்து வாழ வழியே இல்லைனு எனக்கு தோனியது. அதனால் டிவோர்ஸ் ஆயிடுத்து. எல்லாம் நன்மைக்கேதான் னு போக வேண்டியதுதான் ரமேஷ்" என்று சிரித்தாள்.

"எனக்கு எதுவுமே தெரியாதே, சந்தியா!"

"சரி இப்போ தெரிந்துவிட்டதில்லையா?"

"இது ரொம்ப ஸ்ட்ரேஞ் சந்தியா"

"எது?"

"சரி விடுங்க"

"ரமேஷ்! ஒரு உதவி செய்ய முடியுமா,ப்ளீஸ்?"

"டெல் மி"

"ப்ளீஸ், பழைய மாதிரியே, வா போ என்றே என்னை கூப்பிடுங்களேன்?"

"எனக்கு நடந்ததை பற்றி எல்லாம் தெரியாது இல்லையா? அதனால் தான்..."

"சரி, இப்போ தான் தெரிஞ்சிடுச்சே?"

"ஓ கே சந்தியா"

"சரி இப்போ என்ன ஸ்ட்ரேஞ்னு சொல்லுங்க?"

"வெளிப்படையா சொல்ல முடியல சந்தியா"

"நீங்க ரொம்ப ஈகோயிஸ்டிக்கா, ரமேஷ்?"

"தெரியலையே! இருந்தாலும் இருக்கும்"

"தெரியலையா? சரி, உங்களைப்பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?"

"என்னைப்பற்றி என்னோட நெருங்கி பழகியவர்களுக்குத்தான் நல்லாத் தெரியும். அதனால நீதான் சொல்லனும்!" ரமேஷ் சிரித்தான்.

"சொல்லவா?"

"ம்ம்"

-தொடரும்

பின் குறிப்பு: இது ஒரு கற்பனை கதைதான். எவ்வளவு தூரம் எழுத முடியும்னு தெரியலை. ஏதோ நேரம் கிடைக்கும்போது எழுதி எல்லோரையும் கொல்லுறேன். சரியா, வாசகர்களே? :-)

Wednesday, November 19, 2008

நாத்தீகர்களும் கடவுளும்!

என்னவோ கடவுள்னு ஒருவர் இருந்தால், அவர் ஆத்தீகர்களுக்குத்தான் நன்றியோட இருப்பார்னு நினைப்பது தவறு! கடவுள் என்பவர் இருந்தால், சாதாரண ஜால்ராவுக்கும், முகஸ்துதிக்கும் மயங்கும் மனிதனைப்போல் உணர்வு உள்ளவர்/ள் போல் நினைத்து மடமையில் வாழ்கிறார்கள் சில ஆத்தீகர்கள்!

நாத்தீகர்களுக்கு கடவுள் என்றுமே எதிரி அல்ல. கடவுள் இல்லாமல் அவர்களால் வாழமுடியுது. அவர்களுக்கு கடவுளின் உதவி தேவைப்பட வில்லை! நாத்தீகர்களைப் பொறுத்தமட்டில் கடவுள் கடவுள்னு சொல்லி ஊரை ஏமாற்றும் சில ஆத்தீகர்களைத்தான் அவர்களுக்கு பிடிக்காது! கடவுள் என்பவர் இருந்தால் அவர் ஒரு போதும் நாத்தீகர்களுக்கு எதிரி அல்ல.

இப்போ எல்லோருக்கும் உதவி செய்ய ஒருவர் இருக்கார். அவரை எதுக்கு தொந்தரவு பண்ணனும், நம்ம பிரச்சினையை நாமே போராடி வெற்றியடைவோமே என்கிற தன்னம்பிக்கையில் அவரிடம் போகவில்லை, அவர் உதவியை நாடவில்லை என்றால், அவர் கோவிச்சுக்குவாரா? அப்படி கோபித்துக்கொண்டால் அவரும் சாதாரண மனிதர்தான். இல்லையா?

கடவுளுக்கு நாத்தீர்ககளைத்தான் ரொம்ப பிடிக்கும், பிடிக்கனும். தான் இல்லாமலே இவர்களால் தன்னம்பிக்கையுடன் போராடி வாழமுடியுது என்பதை கடவுளே பாராட்டுவார். என் பேரைச்சொல்லிச் சொல்லி ஊரை ஏமாற்றாமல்/ தங்களையே ஏமாற்றாமலும் இருக்காங்கனு ரொம்ப சந்தோஷப்படுவார்! அதைவிடுத்து, தன்னை வழிபடுவனைத்தான் எனக்கு பிடிக்கும் என்று கடவுள் நினைத்தால், அந்தக் கடவுளுக்கு கடவுளாக இருக்கும் தகுதி இல்லாமல்போகிறது!

பொதுவாக மனிதனாகப்பிறந்தவர்கள், ஏமாற்றாமல், திருடாமல், பெண் பொறுக்கியாக இல்லாமல், நம்பிக்கை துரோகம் பண்ணாமல், மேலும் எல்லோரையும் தன்னைப்போல் நினைப்பது, மனிதாபிமானத் தோட வாழ்வது போன்ற நற்பண்புடன் வாழ்ந்தால், நாத்தீகராக இருந்தாலும் அவர்களும் உயர்ந்த மனிதர்கள்தாம் என்பதை தன் சுயநலத்திற்காக, இறைவழிபாடு மற்றும் கடவுளை திருப்திப்படுத்த முயலும் ஆத்தீகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

நாத்தீகர்கள், கடவுள் இல்லை என்று நம்புவது ஒண்ணும் பெரிய குற்றமல்ல! நம்ப முடியாததால் நம்புவதில்லை! அவர்களுக்கு நடிக்கத்தெரியவில்லை! தன் மனதில் தோன்றுவதை உண்மையாக சொல்கிறார்கள்! அவ்வளவுதான்!

நற்குணங்களுடன், மனிதாபிமானத்துடன் இருந்து தன்னால் உணரமுடியாத கடவுளை வணங்கவோ வழிபடவோ நாத்தீகர்கள் செய்யவில்லையென்றால் அது ஒண்ணும் தவறல்ல! அது எந்த வகையிலும் அவர்களை குறைக்காது என்பதை ஆத்தீகர்கள் உணர்வது நல்லது!

Friday, November 14, 2008

காதல் கல்வெட்டு-15 (முற்றும்)

கொஞ்சம் நில்லுங்கள்!!! நிறைய ஃப்ளாஸ்பேக் லாம் போயிட்டு இப்போ வந்து சேர்ந்தாச்சு! இந்தப்பகுதி காதல் கல்வெட்டு-4 ன் தொடர்ச்சி! சரி இப்போ படிங்க!
---------------------------

கயலுக்கு அன்று தூக்கம் வரவே இல்லை. ஆனாலும் வருண்,ரொம்ப ரொம்ப மோசம் என்று நினைத்தாள், எப்படி இப்படியெல்லாம் என்னை தூங்க விடாமல் பண்றார்? ஒரு பக்கம் இவ்வளவு இண்டிமேட்டா பேசுவார். ஆனால் இன்னொரு பக்கம் ஏதோ அந்நியன் மாதிரி நடிக்கவும் செய்வார். வாயை திறந்து சொன்னால் என்ன? இவர் ரொம்ப தலைக்கனம் பிடித்தவரோ? ஒருவேளை வேறு யாரையும் விரும்புறாரா? அந்த ஜென்னி இப்போ தனியாத்தானே இருக்கிறாள்? என்ன ட்யூட்டரிங் பண்ணுறாரோ யாருக்குத் தெரியும்? வாழ்நாள் முழுவதும் ட்யூட்டரிங் பண்ணுவாரோ? மறுபடியும் ஃபோனை எடுத்து வருணை கால் பண்ணினாள்.

"என்ன கயல்! தூங்கலையா இன்னும் நீ?"

"தூக்கம் வரலை. நீங்களும் தூங்கலை போல இருக்கு? எதுவும் ட்யூட்டரிங் ப்ரிப்பரேஷனா?'

"என்ன கிண்டலா?"

"இல்லையே ஏன் இன்னும் தூங்கலை?"

"வர வர நீ ரொம்பத்தான் என்னை அதட்டுற! சரி, ஒரு பொண்ணைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன், அதனால் தூக்கம் வரலை"

"யார் அவள்? யாரும் வெள்ளைக்காரியா?"

"இல்லையே. ஏன் வெள்ளைக்காரினா பிடிக்காதா உனக்கு? வெள்ளைக்காரனோட ஏதாவது டேட் போயிருக்கியா?"

"போயிருக்கேன். ஆனா எனக்கு அவர்களை எல்லாம் பிடிக்கலை, வருண்"

"ஆனால் எனக்கு வெள்ளைக்கார பெண்கள் பிடிக்கும், கயல்"

"அப்படியா? வெள்ளையா இருப்பதால் பிடிக்குமா?"

"யாராவது வெள்ளையா இருந்தால் போதும் அலைவேன்கிறயா? இல்லை, கயல். எனக்கு அவங்க மேலே நிறைய மரியாதை உண்டு"

"யாரையாவது காதலிச்சு இருக்கீங்களா?"

"வெள்ளைக்காரியையா?"

"ஆமாம்!"

"இல்லையே"

"சரி சொல்லுங்க! என்ன அப்படி ஒரு பெரிய மரியாதை வெள்ளைக்காரிகள் மேலே?"

"ஒரு முறை ஜென்னியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். எனக்குத் தெரிந்த ஒரு வயதான ஒரு ஆள், அவர் நடந்துகொள்ளும் விதத்தைப்பற்றி. 82 வயது இருக்கும். அந்த வயதில் காம உணர்வோட அலைவது பற்றி பேச்சு வந்தது. அதைப்பற்றி கொஞ்சம் அலசினோம்"

"யார் அவர்? உங்க ரிலேட்டிவ் யாருமா வருண்?"

"ரிலேடிவ் மாதிரித்தான், கயல். பொதுவா இந்த மாதிரி இந்த வயதில் காம உணர்வு இருந்தால் மற்றவர்களிடம் தவறாக நடந்தால், நம் இந்தியர்கள் எல்லாம் வெறுப்பார்கள். ஆனால் ஜென்னி அவருக்காக பரிதாப்பட்டாள்"

"எதுக்கெடுத்தாலும் ஜென்னி! ஜென்னி! ஜென்னி! சரி, ஏன் இந்தப் பரிதாபமாம், வருண்?"

"ஏன் என்றால்? அவருக்கு நடக்க முடியாது. கண் தெரியாது. எதுவுமே முடியாது. ஆனால் வேலைக்காரி போய் டீ கொடுக்கும்போது அவள் கைய்யைப்பிடிப்பாராம். அவர் அவரே இல்லை கயல், எல்லா உணர்வுகளையும் இழந்துவிட்டார். ஒரு குழந்தை மாதிரினு சொல்லலாம்"

"என்ன இருந்தாலும் இது அருவருப்பான விசயம் தானே? இதுக்கு என்ன தீர்வு, வருண்?"

"எனக்குத் தெரியலை கயல். எனக்கும் பயங்கர எரிச்சலாக வரும். ஆனால் அவள் சொன்னதுக்கப்புறம் யோசித்துப்பார்த்தால் அவரை திட்டுவதைவிட பரிதாபப்படுவது சென்ஸிபிளா தோனுது'

"செக்ஸ் ரொம்ப மோசமான விசயம்னு நினைக்கிறீங்களா, வருண்"

"செக்ஸ் ஒரு அழகான விஷயம், கயல். ஆனால்.."

"ஆனால்?"

" தகுதிப்பெற்ற இரண்டு நபர்களுக்குள் நிகழ்ந்தால் தான் அது அழகு"

"அப்படினா?"

"ஒரு 13 வயது பெண்ணை ஒரு 34 வயது ஆள் அரட்டைப்பெட்டியில் சந்தித்து அவளுடன் செக்ஸ் சாட் பண்ணுவது எல்லாம் அழகா இருக்காது'

"அந்த அபிலேஷ் பாஸ்கரனை பிடிச்சு உள்ளே போட்டுட்டாங்க, வருண்"

"நம்ம ஊரில் உள்ள மடையனுகளுக்கு ஃப்ரீ செக்ஸுக்கும், செக்ஸுவல் அப்யூஸுக்கும் வித்தியாசம் தெரியலை. அது தெரியாமல் ஏதாவது லூசுத்தனமா செய்து மாட்டிக்கொண்டு நம்ம மானத்தையும் சேர்த்து வாங்கிறானுகள்"

"சரி விடுங்க, நம்ம விசயத்துக்கு வாங்க. யார் அந்தப் பொண்ணு, உங்களை தூங்கவிடாமல் தொந்தரவு பண்ணியது?"

"அவளா? அவள் ஒரு ரொம்ப நல்ல பொண்ணு. என்னோட உரிமையா பழகுவாள் பேசுவாள். ரொம்ப அழகா இருப்பாள். தமிழ் பொண்ணு"

"யார் உங்க பழைய காதலி ஜெயந்தியா?"

"அவள் எல்லாம் இப்போ இடத்தை காலி பண்ணிட்டா"

"அப்போ யாரு?"

"நீ என்ன சரியான ட்யூப் லைட்டா?"

"ஆமா. யார் அந்தப் பொண்ணு?'

"கண்ணாடி எதுவும் பக்கத்தில் இருக்கா?"

"இருக்கு"

"அதில் பாரு. உன்னையே பார்ப்பாள்!"

"அவளா? நேரம் கெட்ட நேரத்தில் என்ன அவள் நினைப்பு?"

"நானா நினைச்சேன்? அவள்தான் வந்து அநியாயம் பண்ணுறா?"

"என்ன அநியாயம்?'

"இப்போ சொல்ல மாட்டேன்!"

"நீங்க ரொம்ப ரொம்ப மோசம் வருண்"

"என்ன குரல் ஒரு மாதிரியா இருக்கு? வெட்கமா?"

"ஆமா, உங்களுக்கு நான் யாரு வருண்?"

"எனக்கு நீ யாரு? எனக்கு நீ, கயல்!"

"அதில்லை! என்ன உறவு?"

"உனக்குத் தெரியாதா?"

"சொல்லுங்க"

"பச்சையா சொல்லவா?"

"ம்ம்"

"என் உயிருக்குயிரானவள்"

மெளனம்

"ஹேய்! இருக்கியா?"

"ம்ம்"

"ஐ லவ் யு, கயல்!"

"மறுபடியும் சொல்லுங்க வருண்!"

"ஐ லவ் யு வெர்ரி மச்!"

"லவ் யு டூ ஸ்வீட் ஹார்ட்!"

-முற்றும்

Friday, November 7, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 8

பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6
பாகம் 7
"Did you have inter****** with him?" என்னுடைய ஒரு நடிகரைப்பற்றிய பதிவுக்கு ஒரு சகோதரர் இப்படி ஒரு "கனிவான" பின்னூட்டம் எழுதி இருந்தார். பாவம், அவர் கூட பயணம் செய்பவர்களோடு எல்லாம் இண்டர்கோர்ஸ் வைத்துக்கொள்ளும் மனநோயாளி போலிருக்கிறது. சகோதரரே, அந்த பழக்கம் எல்லாம் என்னிடம் இல்லை என்பதை தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன்.உங்களுடைய மனநோய் விரைவில் குணமாகவும் பிராத்திக்கிறேன். என்ன அந்த காமெண்டை டிலிட் பண்ணிட்டு பேசாமல் விட்டுவிடுவேன் என்று நினைத்தீர்களா? அதெல்லாம் இல்லை, கமெண்ட் பக்கத்தில் எழுதினால் ஒருவேளை கவனிக்கப்படாமல் போய்விடும் வாய்ப்பிருக்கிறது இல்லையா, அதனால் தான். இப்படி எல்லாம் எழுதி உங்களுக்கு என்ன கிடைத்துவிட்டது? ஏதாவது கிடைத்திருந்தால் மகிழ்ச்சி!

பெண்கள் பயந்துக்கொண்டு ஓடுவதால் தான் துரத்தும் ஜென்மங்களுக்கு ரொம்ப திரில்லிங்காக இருக்கிறது, பதிலுக்கு திரும்பி நின்று கையில் ஒரு கல் எடுத்துப்பாருங்கள், துரத்தும் கோழை தலைதெறிக்க ஓடிவிடும். இப்படி கடுமையாக எழுத எனக்கும் பிடிப்பதில்லை, சிலருக்கு இந்த மொழி தான் புரிகிறது, நான் என்ன செய்ய? சரி அதை விட்டுத்தள்ளுவோம், சில ஜென்மங்கள் என்ன திட்டினாலும் திருந்தாது. போன தொடரில் ஒரு விஷயத்தை சரியாக எழுதாமல் குழப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். அதாவது, இளம் வயது பெண்கள் வயதான ஆண்களை காதலிக்க கூடாது என்ற பொருள் வந்துவிட்டது, நான் எழுத நினைத்தது அதுவல்ல.

படிக்கும் வயதில் பெண்கள்/ஆண்கள் தயவு செய்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும். இன்று காதல் வசனம் பேசுபவர்கள், நாளை நீங்கள் கஷ்டப்படும் போது உதவப்போவதில்லை. நன்றாக படித்து, வேலை கிடைத்து ஒரு நிலையை அடைந்தப்பிறகு 50 வயதுக்காரர் என்ன, Anna Nicole மாதிரி 80 வயது மனிதரைக்கூட காதலியுங்கள், திருமணம் செய்துக்கொள்ளுங்கள், தவறே கிடையாது. காதல் வயதெல்லாம் பார்த்து வருவதில்லை, ஆனால் காதலை செயல்முறைப்படுத்தும்போது வயது வரம்பு அவசியம்! இது தான் நிதர்சனம், நம்பினால் நம்புங்கள்.

மேலும் மற்றொரு கேள்வி, இந்தியப்பெண்களோ அல்லது ஆண்களோ திருமணத்துக்கு முன் உடலுறவு கொண்டால் அதை தைரியமாக உங்கள் significant otherருக்கு தெரிவிப்பீர்களா? இல்லை தானே? வெஸ்டர்னர்ஸ் அப்படி எல்லாம் மறைக்க மாட்டார்கள், திருமணத்தின் போதே 'வெர்ஜின் இல்லை' என்பது நன்றாக தெரிந்தே திருமணம் செய்துக்கொள்வார்கள். அப்படி என்றால் நாம் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ பொய் சொல்லி ஏமாற்ற வேண்டும்! ஏமாற்றுவதில் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றால், திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்ளும் விஷயத்தில் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

கற்பு, கத்திரிக்காய் என்ற லெக்சரடிக்க வரவில்லை, ஒரு மனிதரை ஏமாற்றுவது ரொம்ப தவறு, அதுவும் திருமணம் போன்ற முக்கியமான உறவுகளில் ஏமாற்றுவது ரொம்ப ரொம்ப தவறு என்பது என் கருத்து. அதுவும் பொதுவாக நம்ம ஊரில் ஆண்களின் மெண்டாலிட்டி அருமையிலும் அருமை! அவர்கள் எப்படிப்பட்ட கோவலன்களாக இருந்தாலும், தங்களுடைய மனைவி மட்டும் கண்ணகியாக இருக்க வேண்டும் என்ற அசாதாரண எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. பொதுவில் உணர்ச்சிவசப்பட்டு பெண் சுதந்திரக்கருத்துக்களை உதிர்ப்பவர்களும், தனியறையில் எப்படி என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது. பெண் சுதந்திரம் எல்லாம் ஓவர் நைட்டில் கிடைத்துவிடாது.ஜாதி சமத்துவமே இன்னும் கிடைக்காத போது, ஆண் -பெண் சமத்துவம் கொஞ்சம் பேராசையே! சமத்துவமே வராது என்று சொல்லவில்லை, நிச்சயம் உடனே வராது என்பது மட்டும் உண்மை. இதை எல்லாம் சமாளிக்க முடியுமென்றால், You go girl!!! Sky is the limit!. இதெல்லாம் டூ மச் என்று நினைப்பவர்கள் ஒழுங்கு மரியாதையாக நன்றாக படித்து முன்னேறுவதில் கவனத்தை திருப்பவும். நமக்கெல்லாம் Limit is the sky!

இதெல்லாம் புரியாதவர்களுக்கு அவர்களுக்கு புரிந்த மொழியிலேயே எழுத முயலுகிறேன், பெற்றோர் கடினமாக உழைத்து நம்மை படிக்க வைக்கும் பணத்தை வீணாக்குவது தவறில்லையா? வீணாக்க விருப்பம் என்றால் சுயமாக சம்பாதித்து உங்கள் பணத்தை மற்றும் நேரத்தை வீணாக்கவும். இன்றைய இளையத்தலைமுறை ஆண்களுக்கு தன்னம்பிக்கையுள்ள, படித்த, அதிகாரத்தில் இருக்கும் பெண்களை ரொம்ப பிடிக்கிறது, ஒரு நிலைக்கு வந்த பிறகு தானாகவே காதலிக்கும் வாய்ப்புகள் வரும், வேண்டுமென்றால் சுயம்வரம் வைத்து கூட வேண்டியவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதற்கு நல்ல உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய தோழி சரஸ்வதியை(அடையாளம் தெரியாமல் இருக்க பெயரை மாற்றுவதற்குள் உயிர் போகிறது எனக்கு!)குறிப்பிடலாம். தானாகவே உழைத்து முன்னுக்கு வந்தவர்கள் பட்டியலில் அவளுக்கும் நிச்சயமாக ஒரு இடம் உண்டு.

யூனிவர்சிட்டியில் புதிதாக வந்து சேர்ந்த போது எங்கள் யாருக்குமே அவளை அவ்வளவு பிடிக்கவில்லை. ஒல்லியாக, நெடு நெடுவென்று சுடிதாருடன் வருவாள். Fashion sense என்றால் கிலோ என்ன விலை அவளுக்கு, இந்தியப்பெண்கள் குறைவு என்பதால் வேண்டா வெறுப்பாக அவளையும் சேர்த்துக்கொள்வோம். அவளுடைய குடும்ப பிண்ணனியை தெரிந்துக்கொண்ட போது பாவமாக இருந்தது. அப்பா உடற்பயிற்சி ஆசிரியர், அம்மா ஹவுஸ் ஒய்ஃப், இவளுக்கு முன் ஒரு அக்கா, பின்னால் ஒரு தங்கை. கல்லூரி கட்டணம் கூட கட்ட முடியாமல் ரொம்ப திணறி இருக்கிறார்கள். படிப்பு மட்டும் அவளுக்கு ரொம்ப நன்றாக வந்தது என்று சொன்னால் அது பச்சைப்பொய்! அதெல்லாம் இல்லை, அவள் ஒரு கடின உழைப்பாளி. நாங்கள் டிவி பார்க்கும் போது, வெட்டி அரட்டையடித்து பொழுதைப்போக்கும் போது, டான்ஸ் க்ளப்புக்கு போகும் போது- எதிலும் கலந்துக்கொள்ளாமல் படிப்பு, படிப்பு, படிப்பு!

அவள் உழைப்பெல்லாம் தேர்வுகளில் ஜொலித்தது, பேராசிரியர்கள் அவள் என்றால் மரியாதையாக பார்த்தார்கள். எங்கள் செட்டிலேயே அதிக க்ரேட் பாயிண்ட் ஆவெரேஜில் க்ராஜுவேட் பண்ணினாள். Fortune 500 கம்பனியில் உடனே இண்டர்னாக எடுத்துக்கொண்டார்கள், எங்களுக்கெல்லாம் ஒரு உப்புமா கம்பனிகளில் வேலை கிடைத்தது. 'வேலை கிடைத்துவிட்டதே' என்று எங்களை மாதிரி வெட்டியாக அவள் சொன்ன வேலையை மட்டும் செய்துவிட்டு வீட்டுக்கு ஓடவில்லை, தன் வேலை மட்டுமில்லாது, மற்றவர்கள் வேலைகளையும் கற்றுக்கொண்டாள். சில மாதங்களில் அவளை நிரந்தரமாகவே வேலைக்கு எடுத்துக்கொண்டார்கள். சக தோழிகள் அவளை பொறாமை கலந்த மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தோம். அதுமட்டுமல்ல, ரொம்ப நல்ல மனிதரை தேர்ந்தெடுத்து திருமணமும் செய்துக்கொண்டாள். சரஸ்வதி தற்போது 6 மாதமேயான அழகான பெண்குழந்தைக்கு அம்மா, Software quality control பிரிவில் ப்ராஜக்ட் லீட்! ஏதோ தேவதை கதை போல இருக்கிறது இல்லையா?

தேவதைக்கதை எல்லாம் இல்லை, இந்தப்பெண் பல போராட்டங்களை கடந்தே இந்த நிலையை அடைந்திருக்கிறாள். எத்தனையோ நாள் என்னிடம் தாங்க முடியாமல் வாய்விட்டு அழுதிருக்கிறாள்! எத்தனை துன்பம் வந்தாலும், அடுத்த நாள் நல்லதாக விடியும் என்பது அவளின் அசைக்க முடியாத நம்பிக்கை. இவள் ஆண்களையே ஏறெடுத்துப்பார்க்காதை கவனித்து, ஒருவேளை லெஸ்பியனோ என்று கூட நினைத்திருக்கிறோம். இவளுடைய இந்நாள் கணவர், அந்நாள் காதலராக இருக்கும் போது ரெஸ்டாரண்டுக்கு அவரை அறிமுகப்படுத்த அழைத்து வந்தாள். சாப்பிட்டுக்கொண்டிருந்த எனக்கு புரை ஏறிவிட்டது. "I thought you are a lesbian!" என்று ஒரு தோழி வாய்விட்டே அலற, உடனே அனைவரும் ஆமோதித்தோம். பிறகு சூழ்நிலையை உணர்ந்து அவசரமாக அவளுடைய காதலரின் முகத்தைப்பார்த்தோம், பேயறைந்தது போல இருந்தது! இப்போதும் அதே எக்ஸ்ப்ரெஷனுடன் தான் உலா வருகிறார்(சும்மா ஜோக்):)

-நினைவுகள் தொடரும்

Wednesday, November 5, 2008

மைக்கேல் க்ரைக்டன் (Michael Crichton) மறைந்தார்!

ஆங்கில நாவல் ஆசிரியர் மைக்கேல் க்ரைக்டன் இன்று மரணம் அடைந்தார் :( இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் ஒரு டாக்டர் (ஃபிசிஸியன்) என்பது குறிப்பிடதக்கது.

இவர் எழுதிய சில நாவல்கள்..

Disclosure

Jurassic Park

State of Fear

Next

ER (creator) (TV show)

இவர் மரணம் எதிர்பாராதது :(.

இவருக்கு வயது 66 தான்! :(

Tuesday, November 4, 2008

பராக் ஒபாமா- ப்ரசிடெண்ட் ஆஃப் யு எஸ் எ!

அமெரிக்கா சரித்திரம் படைக்கிறது!

ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் பராக் ஒபாமாவை 44 வது ப்ரசிடெண்ட் ஆக தேர்ந்தெடுத்தது.

இது அமெரிக்கர்களை ஒரு தலை சிறந்த மற்றும் திறந்த மனப்பான்மை உள்ள மக்களாக காட்டுகிறது!

இந்தியாவில் இன்னும் ஒரு திராவிட ப்ரைம்மினிஸ்டர் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது!

Friday, October 31, 2008

ரஜினி-கமல்!!! இது உண்மையா?!

கீழே உள்ள செய்தி உண்மையா என்று தெரியவில்லை!

-----------------------------------
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ரஜினி-கமல், நடிகர்கள் 'பேசா' உண்ணாவிரதம்?

[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2008, 10:02.05 AM GMT +05:30 ]
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவழியாக சம்மதம் தெரிவித்துள்ளனர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும், ஒரு நிபந்தனையோடு!.
உண்ணாவிரத்தில் மைக் கட்டி பேசக்கூடாது என்பதே அந்த நிபந்தனை. கிட்டத்தட்ட இதே நிபந்தனையை தமிழ அரசும் விதித்துள்ளது!!. இந்த நிபந்தனையின் நோக்கம் யாரும் புரிந்து கொள்ளக் கூடியதே. சில மாதங்களுக்கு முன் ஓகேனக்கல் பிரச்சனை தொடர்பான உண்ணாவிரததில் பங்கேற்ற நடிகர்கள் பலர், குறிப்பாக சத்யராஜ் உணர்ச்சி வசப்பட்டு, கட்டுப்பாடில்லாமல் சில வார்த்தைகளைப் பிரயோகிக்க, அதனால் டென்ஷனான ரஜினி 'உதைக்கணும்' என்றெல்லாம் பேசப்போய், அதற்கு குசேலன் என்ற படமே பலியானதும் அனைவருக்கும் தெரிந்த சமாச்சாரங்கள்.

இன்னொரு பக்கம் ராமேஸ்வரம் பேரணியில் வரம்பு மீறிப் பேசியதற்காக இயக்குநர்கள் சீமானும், அமீரும் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. தமிழக அரசுக்கும் இதனால் சில சங்கடங்கள் உருவாயின. பெரிய நடிகர்கள் என்ன பேசினாலும் அது அரசியலாக்கப்படுவதால், இந்த முறை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மைக் வைத்துப் பேசுவதையே அடியோடு தவிர்த்துவிட்டால் என்ன? என நடிகர் சங்கத் தலைவர் சரத் குமாருக்கு யோசனை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

ரஜினிக்கும் இந்த யோசனை சரியாகப் படவே, பேசச் சொல்லி வற்புறுத்தாதீர்கள் என்ற நிபந்தனையோடு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சம்மதித்துள்ளதாக, நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அஜீத், விஜய் போன்ற நடிகர்களும் இந்த வகை 'பேசா உண்ணாவிரதப் போராட்டம்' பிரச்சனை இல்லாதது என நடிகர் சங்க நிர்வாகிகளிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதைவிட முக்கியமான விஷயம், நடிகர் சத்யராஜை அடக்கி வாசிக்குமாறு தமிழக முதல்வரிடமிருந்தே அறிவுரை வந்திருப்பதாக நடிகர் சங்கம் தரப்பில் கூறப்படுகிறது. பிரச்சினைக்குரிய எந்த விவகாரம் குறித்தும் நடிகர்கள் பேசவேண்டாம் என்றும், உணர்வைத் தெரிவித்தால் மட்டும் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் இனி தமிழக அரசு நடந்து கொள்ளாது என சமீபத்தில் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதைத் தொடர்ந்தே இந்த 'அறிவுரை' அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நடக்கும் உண்ணாவிரதத்துக்காக நடிகர் சங்க வளாகத்தில் பிரமாண்டமான மேடை போடப்பட்டுள்ளது.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

----------------------------

Wednesday, October 29, 2008

அனைவரின் கனிவான கவனத்திற்கும்!

தானம், உதவி- இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றால் பரவாயில்லை, இன்றைக்கு மற்றவர்களுக்கு செய்தால் நாளைக்கு மற்றவர்கள் நமக்கு உதவி செய்வார்கள் என்ற Golden ruleலை கருத்தில் கொண்டு, கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கொஞ்சம் கவனமாக படிக்கவும்:

Loyola College supports the education of 65 visually challenged students. I would kindly invite you to join hands with us to help the students with their 1st Semester exams which are due by November.

Exam Dates: 3rd – Nov to 18th Nov, 08. (Except on Sunday, 9th and 16th Nov.)
Exam Time:1st Secession 9.00 to 12.30pm
2nd Secession 1.00 to 4.30pm


Exam Papers:

TL & FC – TAMIL PAPER
EL, SO, HT & EC – ENGLISH PAPER
CO & BU – COMMERCE PAPER
LH – Hindi Paper

Exam Venue: Loyola College,MF – 01, Main Building 1st Floor,Nungambakkam, Chennai – 34 For any further clarifications, please contactS. Mathew, Coordinator9444223141Email: smathew27@gmail.com

மேலும் விவரங்களுக்கு:

http://www.mediafire.com/?znwgenm0hiz

இவர்களுக்கு உதவும் பதிவர்கள், புதுகை அப்துல்லா, எஸ்.கே மற்றும் அமிர்தவர்ஷிணி அம்மா போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Tuesday, October 28, 2008

தமிழ் ஈழப்பிரச்சினை- எனது குறுகிய பார்வையில்

ஈழத்தமிழர்கள், உயிர், உரிமைகள் பறிக்கப்பட்டு நாடுவிட்டு நாடு போய் என்னவெல்லாமோ துன்பம் அனுபவித்து இருக்கும் இந்த சூழ்நிலையில் இந்த பிரச்சினையைப் பற்றி பேசும்போது நல்ல பக்குவம் வேண்டும். அது என்னிடமில்லை என்பதால் என் எழுத்தில் நிறைய குறைகள் வரலாம். சகித்துக்கொள்ளுங்க, ப்ளீஸ்!

* ஈழத்தமிழர்கள் உயிருக்காக போராடிக்கொண்டு இருக்கும்போது சில பெரிய நாடுகள் அவர்களை வைத்து அரசியல் செய்வது மிக மிகத்தவறு. அது எந்த நாடாக இருந்தாலும் அப்படி செய்வது மிருகத்தனம். அதென்னவோ தெரியவில்லை தனிமனிதனுக்கு உள்ள மனிதாபிமானம், நாடு சம்மந்தப்பட்ட அரசியலில் இருப்பதில்லை! :(


* பொதுவாக, பத்திரிக்கைகள் "பிராமண க்ரிடிக்ஸ்" 95% மேல் ஈழப்பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.

கவனம்! நான் தமிழ் பிராமண உடன்பிறப்புக்களைப் பற்றி இங்கே சொல்லவில்லை

இது சமீபத்தில் வந்த ஹிந்து ஆர்ட்டிகிள் மற்றும் சோ ராமசாமி, ஹிந்து ராம் போன்றவர்கள் எழுதுவதில் இருந்து வரும் 'குற்றச்சாட்டு".

சரி, இந்த மெத்தப்படித்த அரைகுறை ஞானம் கொண்ட க்ரிடிக்ஸ் ஈழத்தமிழருக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், முழு ஆதரவு கொடுத்தால், இந்த பிரச்சினை முடிவாகிவிடப் போகிறாதா என்பது என் கேள்வி?

இல்லை என்றுதான் நினைக்கிறேன்! அதனால் இவர்களை சும்மா உளறிக்கொண்டு திரியட்டும் என்றுவிட்டுவிடுவது நல்லது! இவர்கள் ஈழத்தமிழர்களை கஷ்டத்துக்கு உண்டாக்கி ஏற்கனவே இவர்கள் மேல் உள்ள "ப்ரிஜடிஸ்" மற்றும் "பயஸ்" போன்றவற்றை இன்னும் பலமடங்காக்கி, தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் முட்டாள்கள் இந்த க்ரிடிக்ஸ்!

பேசாமல் இவர்கள் வேலையைப்பார்க்க வேண்டியதுதானே?

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சனுமா?

இவர்களுக்கு மட்டும் ஏன் ஈழத்தமிழர்கள் மேல் இரக்கமே இல்லை?

ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள்?

என்பது போன்ற கேள்விகளுக்கு பதில்கள் பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை! ஏன் இவர்களாலேயே புரிந்துகொள்ள முடியயுமா என்றும் தெரியவில்லை! உபகாரம் செய்யவில்லையென்றாலும் உபத்திரவம் செய்யாமல் இவர்கள் மூடிக்கொண்டு இருக்கலாம்!


* இதைவிட கொடுமை, தமிழ்நாட்டில் உள்ள பெரிய அரசியல்வாதிகளும், யார் காங்கிரஸுடன் கூட்டமைப்பது என்கிற போட்டியில், காங்கிரஸ்காரர்களை திருப்திப்படுத்த மனசாட்சியை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, ஈழப்பிரச்சினையில் சில அரசியல் செய்கிறார்கள்! இதுவும் கண்டிக்கதக்க/மிகவும் வருந்தத்தக்க ஒன்று. மனதளவில் அவர்கள் ஆதரவு ஈழத்தமிழருக்கு இருந்தாலும், மேலே உள்ளவர்களை திருப்திப்படுத்த அவர்கள் மனதை கல்லாக்கி அரசியல் செய்வதை பார்க்கலாம்! :(


* ஈழத்தமிழர்களிடம் இந்த பிரச்சினை பற்றிப்பேசும்போது/விவாதிக்கும்போது நான் கண்ட குறை.

அவர்கள் இந்த பிரச்சினையைப்பற்றிப்பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். :( பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் வலி தெரியும் என்பது எனக்குத்தெரியும். இருந்தாலும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல், தமிழ் உறவுகள் கொஞ்சம் மாறுபட்ட கருத்துகள் வைத்தாலும் அவர்கள் அறியாமையால் வைத்திருந்தால், அந்த அறியாமையை கனிவாக அவர்களிடம் இருந்து போக்க வேண்டும்.


ஈழத்தமிழ் உறவுகள் என்ன செய்ய வேண்டும்?

* ஈழத்தமிழ் பிரச்சினையை வைத்து அரசியல் செய்யும் எந்தத் தமிழ் அரசியல்வாதி யையும் அவர்கள் நம்பக்கூடாது!

* பிராமண பத்திரிக்கையாளர்களை துச்சமாக நினைத்து ஒதுக்க வேண்டும்!

* ஒரு உண்மையை நம்புங்கள்! தமிழ்நாட்டில் மற்றும் உலகில் உள்ள எல்லாத்தமிழ் சகோதர சகோதரிகளுமே நீங்கள் அதிவிரைவில் தனி தமிழ் ஈழம் அமைத்து, மனநிம்மதியுடன் நீங்கள் நீடூழிவாழவேண்டும் என்றுதான் மனதாற எண்ணுகிறார்கள், பிரார்த்திக்கிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை .

Monday, October 27, 2008

காவேரியும், நானும்..

போன வாரம் என் அலுவலக தோழி ஒருத்தி, "க்ளாசட் முழுக்க துணி வைச்சிருக்கியே, அப்புறம் ஏன் போட்டதையே திரும்ப திரும்ப போடறே?" என்று சொன்னபோது கவனித்தேன், ஏன் போட்டதையே போடுகிறேன்? கவனித்து பார்த்ததில் தெரிந்தது, என்னுடைய க்ளாசட் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது. இதனால் அலுவலக உடைகள் எங்கேயோ தொலைந்துப்போக, மேலே இருக்கும் உடைகளையே திரும்பத்திரும்ப அணிந்துக்கொண்டிருக்கிறேன் போல. சென்ற வார இறுதியில் என் க்ளாசட்டுக்கு விடிவு காலம் பிறந்தது, 1 வருடத்துக்கு மேல் உபயோகிக்காத உடைகளை "Good will" என்ற தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டு வந்தேன்.

உடைகள் என்றதுமே எனக்கு காவேரி தான் நினைவுக்கு வருகிறாள். காவேரி என்பது வேறுயாருமில்லை, என் பெற்றோர் வீட்டின் வேலைக்காரப்பெண்! ஒடிசலான உருவம், கருத்த தேகம், தெற்றுப்பல், உருவத்துக்கு சற்றும் பொருந்தாத மைக் செட் குரல், வாய் கொள்ளா சிரிப்பு, கண்களில் எப்போதும் தென்படும் ஒரு துறு துறுப்பு, கூடவே இழையோடும் ஒரு மெல்லிய சோகம் - இதுவே நம்ம கதாநாயகி காவேரியின் அடையாளம்.என்னை விட ஒரு 4-5 வயது சிறியவளாக இருப்பாள்.

போன முறை இந்தியாவுக்கு போன போது அவளை முதல் முறை சந்தித்தேன். திரைச்சீலைக்கு பின்னால் முகத்தை மட்டும் நீட்டி என்னைப்பார்த்து சிரித்தாள். யாராவது அவளை அறிமுகப்படுத்தி வைக்கமாட்டார்களா என்ற ஆர்வம் அவள் முகத்தில் இருந்தது. என்னை வெகு நாட்களுக்குப்பிறகு பார்த்த மகிழ்ச்சியில் என் பெற்றோருக்கு காவேரி மறந்துபோனாள். பொறுத்துப்பொறுத்துப்பார்த்த காவேரி பொங்கி எழுதாள். ஒரு ஸ்வீட் பாக்கெட்டை கையில் எடுத்துக்கொண்டு என் முன்னால் வந்தாள்.

"யக்கா இந்தா ஷிட்டு"

நான் FOB(fresh of the boat) என்பதால், காவேரி சொன்னதை ஒரு ஆங்கிலக்கெட்ட வார்த்தையோடு குழப்பிக்கொண்டு அதிர்ந்தேன். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத காவேரி,

"அய்யே, ஷிட்டு எடுத்துக்கோயேன்கா"

விபரீதத்தை உணர்த்த அப்பா என்னை காப்பாற்றினார், "ஒன்னும் இல்லை கயல், ஸ்வீட்டை தான் அப்படி சொல்றா. அமரிக்கா அக்கா வருதுனு 2 வாரமா இங்க்லீஷ் பேச ட்ரை பண்றா"

"யெஸ்ஸு" என்றாள் காவேரி பெருமை கொப்பளிக்க!

சாப்பிட டைனிங் டேபிளில் உட்கார்ந்த போது தன்னை தானே பெருமையாக அறிமுகப்படுத்திக்கொண்டாள், "யக்கா, நான் தான் இந்த வூட்டு வேலக்காரி, எது வோணும்னாலும் என்னை கேளு, செரியா?"

அடுத்த சில நாட்களில் காவேரியைப்பற்றி நான் கவனித்தது, ஒரு நாளுக்கு ஆயிரம் முறையாவது காவேரியின் பெயர் அந்த வீட்டில் உச்சரிக்கப்பட்டது. யார் எது கேட்டாலும் முகம் சுளிக்காமல் செய்தாள், சில அதிகப்பிரசங்கி உறவினர்களுக்கு கூட!

"யக்கா டிபன் சாப்ட்டியா?"

"இந்தாக்கா சக்கரைப்பொங்கலு, ஒனக்கு புடிக்குமாமே?"

"யக்கா, தலை கசக்கி வுடட்டுமா?"

"யக்கா, காப்பி கொண்டாந்திருக்கேன்"

எனக்காக அவள் வேலை செய்வது எனக்கு சங்கடமாக இருக்கும், ஒரு மனிதருக்கு தன் தனிப்பட்ட வேலையை செய்யக் கூட ஒரு ஆள் வேண்டுமா? அது சக மனிதரை கேவலப்படுத்துவது இல்லையா? சில வருடங்களில் என்னுடைய பார்வை மாறி இருந்தது. ஆனால் இதெல்லாம் ப்ளாகில் எழுத தான் சரிவரும், வீட்டில் இந்த வாதங்கள் எடுபடாது.

"போடி பேசாம, வந்துட்டா" - இது என் அம்மாவின் பதில்.

ஒரு நாள் ஹாலில் உட்கார்ந்து தமிழக சேனல்களை அசுவாரஸ்யமாக திருப்பிக்கொண்டிருந்த போது காவேரி கண்ணில் தட்டுபட்டாள். சந்தன நிறத்தில், சிகப்பு நிற எம்ப்ராயிட்ரி பூ சிதறல்களோடு ஒரு சுடிதார் அணிந்திருந்தாள். இந்த சுடிதார் ரொம்ப ஃபெமிலியரா இருக்கே? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே அம்மா, "கயல் இந்த சுடிதார் ஞாபகம் இருக்கா?"

நினைவுக்கு வந்துவிட்டது! கல்லூரியில் நான் விரும்பி அணிந்த சுடிதார், ஒரு ஆணி மாட்டி கிழிந்துவிட்டதால் அதை பீரோவில் ஒரு மூலையில் போட்டு வைத்திருந்தேன்! எப்படி சரி பண்ணினாள்? வியப்பாக அருகில் சென்று பார்த்தேன். கிழிந்து போன சுடிதாரை தைத்து, தையலை மறைக்கும் படி மேலே எம்ப்ராயட்ரி பண்ணி இருந்தாள், அதே பேட்டர்ன் சுடிதார் முழுவதும் அங்கங்கே ரிபீட் பண்ணி இருந்தாள். பார்க்க டிசைனர் சுடிதார் மாதிரி இருந்தது.

"கயல், இந்தக்குட்டியே அழகா எம்ப்ராயட்ரி பண்ணுவா, தெரியுமா?"

"அப்படியா காவேரி? இத்தனை அழகா எம்ப்ராயட்ரி பண்ணத்தெரியுமா?" நான் வியந்து போய் கேட்க,

"யெஸ்ஸூ" என்றாள் ஏதோ சினிமா பாட்டை முணுமுணுத்தபடியே.

ஒரு நாள் அவளிடம் பேசிக்கொண்டிருந்த போது அவள் குடும்பத்தைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தேன்.அவள் அம்மா பற்றி, தம்பி பற்றி, முறை பையனைப்பற்றி(ரொம்ப வெட்கப்பட்டுக்கொண்டே பதில் சொன்னாள்). அவள் அப்பாவைப்பற்றி தான் நிறைய பேசினாள், என்னை மாதிரியே அவளும் அப்பா செல்லம் போலிருக்கிறது.

"சின்னப்புள்ளேல, வாராவாரம் எங்க நைனா என்னை சந்தைக்கு இட்டும்பூடும். அங்கே சவ்வு முட்டாய், லப்பர் வளீல் எல்லாம் வாங்கித்தரும். எப்படியாச்சும் என்னை டீச்சரு ஆக்கிப்புட பார்த்துச்சு, ஆனா பாவம், அல்பாயுசுல பூட்ச்சி"

"என்ன சொல்ற காவேரி, அப்பா செத்துப்போயிட்டாரா!!??"

"யெஸ்ஸு"

"என்னடி இப்படி சொல்றே?"

"கலக்கல் சரக்க குடிச்சுபுட்டு சாக்கடையில் வுளுந்து கெடந்தா வெற என்ன ஆவும்? கொடலு வெந்து ரெத்த வாந்தியா எடுத்து செத்து பூட்ச்சு"

என்ன சொல்வது என்று தெரியாமல் நான் அமைதியாக இருக்க, அவளுடைய முகத்தில் படர்ந்த கனத்த சோகம் 1 நிமிடம் வரையில் மட்டுமே நீடித்தது. பிறகு சுதாரித்துக்கொண்டாள்

"யக்கா, உன்னோட வம்பளத்தா வூட்டு வேலை எல்லாம் என்னாறது? போட்டது போட்ட மாதியே கிடக்கு, ஏதாவது வோணும்னா ஒரு கொரலு குடு, ஓடியாந்துட்ரேன்" கண்ணில் துளிர்த்த கண்ணீரை புறங்கையால் துடைத்தப்படியே சிட்டாக ஓடி மறைந்தாள்.

எதுவுமே தோன்றாமல் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். உலகில் சிலருடைய கஷ்டங்களை நினைத்துப்பார்த்தால் நம்முடைய "பிரச்சினையாக" நாம் நினைப்பது எல்லாம் எவ்வளவு சில்லியாக தோன்றுகிறது இல்லையா? காவேரிக்கு ஏதாவது செய்ய வேண்டும் போல தோன்றியது, பணமாக மட்டுமில்லை, பணம் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.அந்த பெண்ணை சந்தோஷப்பட வைக்கிற மாதிரி ஏதாவது செய்யவேண்டும்.

அடுத்த நாள் ஷாப்பிங்குக்கு அவளை மட்டும் அழைத்துப்போனேன். அவளுக்கு நம்பவே முடியவில்லை, "யக்கா என்னையா இட்டும்போறே? வெயிட் எதுனாச்சும் தூக்கனுமா?" கண்கள் விரித்து அப்பாவியாக கேட்டாள்.

"பேசாம வா காவேரி"

"யெஸ்ஸூ"

கார் ட்ரைவரிடம் அவளுக்கு பிடித்த சினிமா பாட்டு போட சொல்லி வம்பு பண்ணினாள், கூடவே சுதி சேராமல் இவளும் உரக்க பாடினாள். அந்த புகழ் பெற்ற கடையில் பெண்கள் செக்ஷனில் நுழைந்தவுடனே, 2-3 விற்பனை பெண்கள் என்னை சூழ்ந்தார்கள். "மேடம் புது புது ஐட்டம் வந்திருக்கு பாருங்களேன், யூ.எஸ்காரங்க இதை தான் வாங்கிட்டு போறாங்க". இந்த விற்பனை பெண்களுக்கு வாடிக்கையாளர்கள் எந்த ஊர்க்காரர்கள் என்று எப்படித்தான் தெரிகிறது என்பதே புரியவில்லை!

மழையில் நனைந்த கோழிக்குஞ்சைப்போல ஒரு ஓரமாக ஒடுங்கி நின்ற காவேரியின் கையை பிடித்து இழுத்து "எனக்கில்லை, இவ அளவுக்கு பாருங்க" என்றவுடன் விற்பனை பெண்களின் முகம் காற்றுப்போன பலூனாக களை இழந்தது. உழைக்கும் வர்கத்துப்பெண்கள், தங்களின் நிலையில் இருக்கும் மற்ற பெண்களை இழிவு படுத்தி பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நாட்டில் பார்க்கலாம்.

காவேரிக்கு துணி எடுத்துப்போடுவதில் விற்பனை பெண்கள் ஆர்வம் காட்டவில்லை. ராக்கில் இருக்கும் ரெடிமேட் சுடிதார்களை நானே தேர்வு செய்து எடுக்க வேண்டி இருந்தது. அதுவரை அதிர்ச்சியில் ஏதும் பேசாமல் இருந்த காவேரி சுயநினைவு வந்தவளாக, "யக்கா, யக்கா எனகெதுக்கு துணி எல்லாம்? தீவாளி கூட இல்லையேகா?" என்றாள். உதடு மட்டும் தான் அப்படி சொன்னது, அவள் கண்கள் "ப்ளீஸ், ப்ளீஸ், நிறுத்திவிடாதே" என்று கெஞ்சின. இதை நான் முன்பே செய்திருக்க வேண்டும், வறுமையில் இருக்கும் பெண்கள் என்றால் விதம் விதமாக உடை அணிய ஆசை இருக்காதா? பல சமயம் ரொம்ப சுயநலவாதியாக இருந்திருப்பதை நினைத்து வருந்துகிறேன்.

பில் போடும் போது, "யக்கா ரொம்ப வெலேக்கா. ஒரு சுடிதாரு வோணும்னா எடுத்துக்கறேன்" இந்த முறை நிஜமாக தான் சொன்னாள். "அடி பைத்தியமே, ப்ளூமிங் டேலில் ஒரு பர்ஸை இதை விட அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறேன் தெரியுமா?" நினைத்துக்கொண்டேன் ஆனால் சொல்லவில்லை. "செரி, பேக்கையாவது குடுக்கா" குற்ற உணர்ச்சியுடன் பேகை வாங்கிக்கொண்டு நடந்தாள். "வேற ஏதாவது வேணுமா காவேரி? காஸ்மெடிக்ஸ், ஜுவல்லரி ஏதாவது? பரவாயில்லை சொல்லு".

"முடிஞ்சா எனக்கு ஒன்ன மாதிரியே ஒரு சில்பர் வாங்கித்தரியாக்கா?" ரொம்ப தயங்கியப்படி தான் சொன்னாள்(ஹை ஹீல்ஸ் ஷூவை தான் இப்படி குறிப்பிடுகிறாள்). வீடு திரும்பும் போது சம்மந்தம் சம்மந்தமில்லாமல் எதையோ பேசிக்கொண்டிருந்தாள். நான் வாங்கிக்கொடுத்த ஒரு சுடிதாரை ஜோதிகா ஒரு படத்தில் போட்டு வருகிறாராம். இந்த ஹீல்ஸ் மாதிரியே சினேகாவிடம் இருக்கிறதாம்.

இறங்கும் போது நிறைவாக சொன்னாள் "என் சென்மத்தில இத்தனை நல்ல துணிய சேத்து வச்சு பார்த்ததில்லீங்க்கா". உண்மையாக சொல்கிறேன், சிறுவயதில் இருந்து நான் கேட்ட உடைகளை எல்லாம் பெற்றோர் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். பிறகு வேலைக்கு போனவுடன் நானும் (அதான் க்ளாசட் நிறைஞ்சிடுசே!) நிறைய உடைகள் வாங்கி இருக்கிறேன், சலிக்க, சலிக்க. இவளுக்கு வாங்கிக்கொடுத்ததைப்போன்ற மகிழ்ச்சியை என்றுமே அடைந்ததில்லை.

ஊருக்கு போகு முன் ஏர்போட்டுக்கு அந்த சுடிதாரில் ஒன்றையும், ஹைஹீல்ஸ் ஷூவையும் அணிந்து வந்திருந்தாள். கடைசியாக டெர்மினலுக்கு போகுமுன் அனைவரிடமும் சொல்லிவிட்டு, அவளிடம் திரும்பியபோது கவனித்தேன். அவள் கண்ணில் வழமையாக தென்படும் மென்சோகம் காணாமல் போயிருந்தது.

என் தலை மறையும் வரை கத்தினாள், "யக்கா ஒளுங்கா வேளா வேளைக்கு சாப்புடு, செரியா?"

"யெஸ்ஸு"

Saturday, October 25, 2008

கயல்! நமது ஹிட்கவுண்டருக்கு என்ன ஆச்சு?

நமது ஹிட் கவுண்டர் மறுபடியும் பிரச்சினை கொடுக்கிறது.

நேற்று 14500 இருந்தது. இன்று 13 ஆயிரத்து சம்திங்!

திடீர்னு ரிவேர்ஸ்ல ஓடுது!!!

இதற்கு முன்னால் 18,000 அருகில் சென்று மறுபடியும் 13 ஆயிரத்து சம்திங் வந்தது!

நாந்தான் எதோ தவறுதலாக நினைத்ததாக நினைத்தேன்!

இன்று ஏதோ "க்ளிட்ச்" இருப்பது உறுதியாகிவிட்டது!

என்ன ஆச்சு இந்த ஹிட் கவுண்டருக்கு? :-(

Friday, October 24, 2008

எனது ஈழச்சிந்தனைகள்

இந்த முக்கியமான பிரச்சினைக்கு அழைப்பு தேவை என்று நான் நினைக்கவில்லை. அழைப்பில்லாமலே கலந்துக்கொள்ளுகிறேன்.

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

ரொம்ப தெரியாது, ஈழப்பிரச்சினைகளைப்பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது, ராஜீவ் காந்தியின் படுகொலை, பின் தொடர்ந்து பத்திரிக்கைகளில் ஏறக்குறைய தினம் தினம் வந்த புலனாய்வு செய்திகள். ஒற்றைக்கண் சிவராசன், தாணு போன்ற பெயர்கள் அனைவராலும் உச்சரிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி இறந்த பிறகு எடுத்த புகைப்படத்தை சிறுவயதில் பத்திரிக்கையில் பார்த்து அலறி இருக்கிறேன். ரொம்ப நாள் வரை தவறு செய்தவர்கள் வெறும் புலிகள் மட்டுமே என்று நினைத்திருந்தேன். பின் பலதரப்பட்ட செய்திகளையும், கருத்துக்களையும் படித்த போது, என்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டேன்.

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

முழு ஆதரவும் உண்டு, நான் படித்த வரையில், ஈழத்தமிழர்களுக்கு(பெரும்பான்மை) ஈழம் தனிநாடாக அமைவது தான் விருப்பம் என்று நினைக்கிறேன். இந்தப்பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் என்பதால் அவர்களுக்கு எது விருப்பமோ, அதுவே என்னுடைய விருப்பமும்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

ரொம்ப ஆர்வமாக பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் படிப்பேன்.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

ரொம்ப லேட்!! இந்த ஆதரவிலும் நிறைய அரசியல் கலந்திருப்பது சலிப்பைத்தருகிறது. முக்கியமாக மனிதர்களின் இறப்பை வைத்து கூட அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளின் மீது ரொம்ப எரிச்சல் வருகிறது. முக்கியமாக ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு சாக்காக வைத்து "தனி தமிழ் நாடு" கேட்கும் வீணர்கள் மீது. இதனால் இவர்கள் பலரது ஆதரவுக்குரல்களை நசுக்க கூடும். நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இவர்கள் எல்லாம் தீமை செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

இப்படி செய்பவர்கள் ஒரு புறம் என்றால், தனி ஈழம் அமைந்தால் தமிழ் நாடும் தனியாகிவிடும் என்ற ஆதாரமில்லாத புரளியை கிளப்பி விட்டு எரியும் நெருப்பில் எண்ணையை விடும் ஒரு கூட்டம் மறு புறம். பெரும்பாலான தமிழர்களுக்கு தனித்தமிழ் நாட்டில் விருப்பமில்லாத போது, இந்த paranoia பிரச்சாரம் ஏதோ சதி திட்டம் போல தோன்றுகிறது.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

கண்ணீரிலும், கவலையிலும் மூழ்கி இருக்கும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஆறுதலைத்தவிர வேறெதையும் சொல்ல எனக்கு தகுதியும் இல்லை, உரிமையும் இல்லை. வரிசையாக குவிக்கப்படும் சடலங்களின் புகைப்படங்களைப்பார்க்கும் போது ரொம்ப ரொம்ப வேதனையாக இருக்கிறது. அதிலும் பிஞ்சுக்குழந்தைகளின் முகம் பார்க்கும் போது... மனிதர்களுக்கு மனிதத்தன்மையே மரித்துவிட்டதோ? சீக்கிரம் இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும்.

நான் ஒரு தர சொன்னா 100 தர சொன்ன மாதிரி!

(-: (-: மன்னிக்கவும்! இது சும்மா சினிமா தொடர் பதிவுதான். சும்மா கூட்டம் சேர்க்க இப்படி ஒரு சினிமாவசனத் தலைப்பு! :-) :-)
--------------------------------------

நான் ஒண்ணும் சினிமா பைத்தியம் இல்லை. தமிழ் படங்கள் பார்ப்பதுண்டு. நிறையப்படம் பிடிக்காது. ஒரு சில படங்கள் பிடிக்கும். நான் ஒரு பழமை விரும்பி.
கயலுக்கும் எனக்கும் ரொம்ப டேஸ்ட் வேறுபடும் என்பது உங்களுக்குப் புரியும்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்

நான் சிறுவயதில் இருந்து பார்க்கிறேன்.யாரோடாவது போயிருப்பேன் ஒண்ணும் புரியாமல் வந்து இருப்பேன்.

அ) நினைவு கண்ட முதல் சினிமா?

நெஜம்மாவே தெரியலை!

2. கடைசியில் அரங்கில் பார்த்த சினிமா?

குசேலன்! ஒளிப்பதிவு, மற்றும் க்ளைமேக்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. படம் சுமார்தான்.

3. அரங்கிலன்றி பார்த்த சினிமா?

சுப்பிரமணியபுரம். அந்த ஹீரோவுக்கு, மதுரைத்தமிழ் வரலை! அது எரிச்சலா இருந்தது.

மதுரையை பற்றி தெரியாத ஒரு தற்பெருமை பேசும் விமர்சகர், சுப்பிரமணியபுரம் ஒரு ஊர் நு சொல்லி எழுதிய விமர்சனம் சிரிப்பை உண்டாக்கியது.

ஓரளவுக்கு நல்ல படம் அதுனு சொல்லலாம். போர் அடிக்கவே இல்லை. ஆனால், கடைசில கஞ்சா கருப்பு துரோகியாவெதெல்லாம் நம்ம மதுரை மக்களிடம் நடக்காத ஒண்ணு. ஏதோ ஆங்கிலப்படத்தைப் பார்த்து இது மாதிரி எடுக்கிறாங்க! அப்போத்தானே இந்த மாதிரி புதுமையைக் கண்டு நம்ம "க்ரிடிக்கள்" மயங்குவாங்க!

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பருத்திவீரன்- இன்று

முள்ளும் மலரும்-அன்று ( டி வி டி யில் பார்த்தலில்). ரசினியும் மறைந்த நடிகைகள் ஷோபா மற்றும் ஃபடாப்பட்டும் என்னம்மா நடிச்சிருக்காங்க! ரசினி நடிப்புல எல்லோரையும் மிரட்டி இருக்காருங்க!!!

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

நம்ம ரசினி என்ன பேசினாலும் அரசிலாக்குவது, வேடிக்கையா இருக்கும்.

அது அண்ணாமலை முதல் குசேலன் வரைக்கும்!

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஜீன்ஸ் படத்தில் காட்டிய பிரஷான்ந்தின் டபுள் ஆக்ஷன்.
சிவாஜியில் காட்டிய வெள்ளை ரசினி.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எக்கச்சக்கமாக!

7.தமிழ்ச்சினிமா இசை?

இசை நல்லாயிருந்தால் பிடிக்கும். இவர்தான் பெரிய ஆள் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.

எனக்கு உத்தமபுத்திரனில் ஜீ ராமநாதன் இசை, பாலும் பழமும் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் படங்களில் எம் எஸ் விஸ்வனாதன் இசை, வசந்த மாளிகை, மற்றும் அடிமைப்பெண் படங்களில் கே வி மஹாதேவன் இசை, முதல் மரியாதை இல் இளையராஜா இசை, பாஷா/அண்ணாமலை யில் தேவா இசை, ஒருதலை ராகத்தில் டி ராஜேந்தர் இசை, முதல்வன் இல் ஏ ஆர் ரகுமான் இசை , கஜினி யில் ஹரீஸ் ஜெயராஜ், 7G ரெயின்போ காலனி யில் யுவன் சங்கர் ராஜா இசை, எல்லாமே பிடிக்கும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழ் தவிர ஆங்கிலப்படங்கள் மட்டும்தான் பார்ப்பது.

The Godfather 1 & 2, Unforgiven, Shawshank Redemtion, Sixth sense, American beauty, Departed etc.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை! இல்லவே இல்லை!

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அமீர், பாலா, சங்கர், தங்கர்பச்சான், சேரன் எல்லாம் இருக்காங்களே? நிறைய இசையமைப்பாளர்களும் முன்னேறிக்கொண்டு வர்றாங்க. நல்லா வரும் என்றுதான் தோனுது.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நம்ம ஊர்ல தெருச்சண்டை, கோயில் திருவிழா, கல்யாண கொண்டாட்டம் எல்லாவற்றிலும் இதைவிட 10 மடங்கு ஈடுபாடு உண்டாகும்னு நினைக்கிறேன்.

தொடர்பதிவு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி, இவன், அது சரி, அணிமா மற்றும் கயல்! :-)

ஆமா அடுத்து யாரை அழைப்பது?


1) எஸ் கே


2) சுந்தர் :-)

Thursday, October 23, 2008

நடிகருடன் ஒரு விமானப்பயணம்!

விமான பயணம் எனக்கு பிடிக்காத ஒன்று, ஏன் தெரியுமா?

செக்யூரிட்டி செக்கிங், செக்கிங், செக்கிங்! விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் அப்படியே பொடி நடையாக நடந்து போனால் கூட போகவேண்டிய இடத்துக்கு சீக்கிரம் போய் சேரலாம் போலிருக்கிறது. அதுவும் எனக்கும், விமான நிலைய செக்யூரிட்டி கேட்டுகளுக்கும் நிரந்தர தகராறு. நான் கேட்டை கடக்கும் போதெல்லாம் அது என்ன மாயமோ தெரியாது, தவறாமல் அலாரம் அடிக்கும். வளையல், செயின், கம்மல், சாண்டல்ஸ் என்று எல்லா மெட்டல்களையும் பார்த்து பார்த்து ரிமூவ் பண்ணி இருந்தாலும், கவனிக்க தவறிய ஹேர்க்ளிப் வில்லியாக சதி பண்ணி இருக்கும்.

சுய புலம்பல் இருக்கட்டும், இதெல்லாம் வழக்கமா நடப்பது தான். இருந்தாலும் அன்றைய விமானப்பயணம் எனக்கு வழக்கத்தை விட கொடுமையாக இருந்தது. நான் கொண்டு வந்த ஹாண்ட் லகேஜில் இருந்த லிக்விட் சோப், ஷாம்பூ, கண்டிஷனர் எல்லாம் 3 oz எடைக்கு அதிகமாம்!(என் இனிய தமிழ் மக்களே, 3 அவுன்சுக்கு குறைவாக யாராவது க்ரீம் எடுத்து வருவாங்களா?). "I am extremely sorry young lady" என்று ஒரு குண்டர் என்னுடைய விக்டோரியா சீக்ரெட் க்ரீம்களையும், பால் மிட்சல் ஷாம்பூ- கண்டிஷனரையும் என் கண் முன்னால் குப்பையில் தூக்கிப்போட்டார்(ண்ணா.. நல்லா இருப்பீங்களாணா?)

என்னுடைய சோகத்தை ஸ்டார்பக்ஸ் காஃபி குடித்து ஆற்றிக்கொண்டிருந்தபோது ஒரு இந்திய இளைஞர் தட்டுப்பட்டார். வழக்கமாக இந்தியர்களைப்பார்த்தால் சிரித்து ஒரு 'ஹாய்' சொல்வதுண்டு, அன்றைய தினம் மூட் இல்லாததால் பேசாமல் போய்விட்டேன். விமானத்தில் என்னுடைய பக்கத்து சீட் காலியாக இருந்தது, நான் வழக்கம் போல அங்கே இருந்த அறுவை மேகசீன்களை புரட்டிக்கொண்டிருந்த போது, "எக்ஸ்க்யூஸ்மி" என்ற குரல் என் கவனத்தை கலைத்தது. மீண்டும் அந்த இந்திய இளைஞர்!

"4 மணி நேர பயணம், நீங்க செல்போன்ல தமிழ்ல பேசிட்டு இருந்தீங்க. போரடிக்காம போகலாம் இல்லையா? உங்க பக்கத்தில உட்காரலாமா?"- இப்படி தமிழில் கேட்டவுடன் எனக்கு என்ன சொல்வததென்று தெரியவில்லை. No, offense to gentlemen here, தனியே பயணிக்கும் போது, அந்நியர்களுடன் முக்கியமாக ஆண்களுடன் நான் அதிகம் பழகுவதில்லை. பாதுகாப்பு சம்மந்தமான கவலை தான் காரணம். "அதுக்கென்ன,go ahead" என்று உதட்டளவில் சொல்லிவிட்டாலும் மனதளவில் தர்மசங்கடம். தமிழ் மட்டும் பேசாமல் இருந்தால் எப்படியாவது மறுத்திருக்கலாம்.

அவர் வந்து உட்கார்ந்ததில் இருந்து கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி பேசிக்கொண்டேஏஏஏ இருந்தார்.முக்கியமாக நம்ம Gapடன் புகழ் பாடிக்கொண்டிருந்தார்.Gapடன் தான் தமிழ்நாட்டின் வருங்கால முதல்வராம்(!) ஏற்கெனெவே பயணம் என்றால் மைல்ட் மோஷன் சிக்னெஸ் வந்து அவதிப்படும் எனக்கு அவர் அணிந்திருந்த கொலோன் எக்ஸ்ட்ராவாக தலைவலியையும் ஏற்படுத்தியது. கூடவே ஒரு எண்ணம் "இவரை எங்கோ பார்த்தா மாதிரி இருக்கே?". அவர் சொல்வதற்கெல்லாம் சும்மா சிரித்துவைத்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் திடீரென்று என்னிடம் இந்தக்கேள்வியைக்கேட்டார் "என்ன வேலை செய்யறீங்க?"

நான் என்னுடைய கணிப்பொறியியல் வேலையைப்பற்றியும், ப்ராஜெக்டுகளைப்பற்றியும் சொல்லிவிட்டு ஃபார்மாலிட்டிக்காக அதே கேள்வியை அவரிடமும் கேட்டு வைத்தேன், அங்கே தான் வந்தது வினை. உடனே அவரின் முகம் சிறுத்துவிட்டது, "என்ன இப்படி கேட்டுட்டீங்க, நான் தான் *****. என் படம் பார்த்ததில்லையா? -----, ----- படத்தில் எல்லாம் நடிச்சிருக்கேனே, அதிலும் இந்த(ஒரு படத்தின் பெயரைக்குறிப்பிட்டு)படம் நல்லா ஓடியதே? எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.

அவர் குறிப்பிட்ட அந்த பாடாவதி படம் அவர் சொன்ன பிறகு தான் நினைவு வந்தது, கூடவே அவர் முகமும். "ஷாருக்கான் படத்தை காப்பி அடிச்சது மாதிரி இருக்கே" என்று எரிச்சலடைந்து பாதியிலேயே டிவிடியை நிறுத்திய படம். "ஓ நல்லா நினைவிருக்கே, ரொம்ப சாரி நான் ஒரு சரியான ஸ்காட்டர் ப்ரெயின்" என்று எப்படியோ சமாளித்தேன்.

"இட்ஸ் ஓகே" என்று அவர் சொன்னாலும் ஏமாற்றத்தை மறைக்க முடியாமல் தடுமாறினார்(இந்த எக்ஸ்ப்ரெஷன்களில் பாதியாவது படத்தில் காட்டி இருக்க கூடாதா?). அவரை அடையாளம் காண முடியாமல் போனதில் எரிச்சலோ என்னவோ, பிறகு தொடர்ந்து இந்தியர்கள் எப்படி இந்தியாவில் படித்துவிட்டு அமரிக்காவில் வேலை செய்ய ஓடிவிடுகிறார்கள், அதனால் இந்தியாவுக்கு எவ்வளவு நஷ்டம் என்பதைப்பற்றி எல்லாம் எனக்கு முழு நீள லெக்சர் கொடுத்தார்(அதெல்லாம் எங்களுக்கு தெரியாதாக்கும்?).

லெக்சரின் முடிவில், "வேலை எல்லாம் போதும், நீங்க ஏன் சென்னை வந்து செட்டில் ஆகக்கூடாது? எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ், நாமெல்லாம் ஜாலியா ஊர்சுற்றலாம்" என்று கடைசியாக ஒரு போடு போட்டார். சென்னையில் வந்து அப்படி நடிகருடன் ஊர் சுற்றினால் என்னுடைய கன்சர்வேட்டிவ் பெற்றோர்களும், உறவினர்களும் என்ன கலாட்டாவெல்லாம் பண்ணுவார்கள்? நினைக்கும் போதே சிரிப்பு வந்தது. அவர் சொன்னதைக்கேட்டு சிரிப்பதாக நினைத்த நம்ம ஹீரோ அதற்கு பிறகு டாப் கியரில் அலற(பேச) ஆரம்பித்தார். எனக்கு ஒரு விஷயம் புரிவதில்லை, பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களிடம் பேச இப்படி ஏன் எட்டு ஊருக்கு கேட்கிற மாதிரி சிலர் கத்தவேண்டும்?

அவருடைய அலறலில் இருந்து நான் அறிந்துக்கொண்டவை: நம்ம ஹீரோவுக்கு ஏதோ ஷூட்டிங்காம். அவர் சொன்ன படத்தலைப்பை கேட்டாலே தூக்கம் வரும், அப்படி ஒரு அற்புதமான டைட்டில். அப்படி ஒரு படத்தை நான் எங்கேயும் கேள்விப்பட்டதாகவே நினைவில்லை. ஒரு வேளை மெகாசீரியலாக இருக்குமோ? அடுத்த ஜேகே ரித்தீஷ் ஆவதற்கான எல்லா பிரகாசமான வாய்ப்பும் நம்ம ஹீரோவுக்கு இருந்தது.

ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களை எல்லாம் கட்டாய ஓய்வு எடுக்க வைக்கனுமாம், அவரை மாதிரி யூத்துகளுக்கு வாய்ப்பே இல்லாமல் போகிறதாம்(அவங்க ஓய்வெடுத்துட்டா மட்டும்?). வாய்ப்புகள் கிடைக்க அவர் படும் சிரமங்களை எல்லாம் ரொம்ப விரிவாக விளக்கினார், கடைசியில் "பாருங்க உங்களுக்கு கூட என்னை அடையாளம் தெரியாமல் போச்சு" என்று அவர் சொன்னதும் எனக்கே பாவமாக போய்விட்டது. "எனக்கு ஒரு ஆட்டோகிராப் ப்ளீஸ்" என்று அவரிடம்(வேறுவழி இல்லாமல்)கேட்டேன்.

ஏதோ ஒரு போஸ்ட் கார்ட்டில் அவருடைய தொலைப்பேசி எண் மற்றும் வீட்டு முகவரி எழுதி, கூடவே ஆட்டோகிராப்பும் போட்டு கொடுத்தார். இறங்கிய பிறகு, நான் போக வேண்டிய இடம் வரையில் கொண்டு வந்து விட்டு, போகும் போது "மறக்காமல் சென்னை வரும் போது என்னை வந்து பார்க்கனும், டைம் கிடைக்கும் போது போன் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு போனார். சரி என்று சொன்னேன்(நிச்சயம் போகப்போவதில்லை).

அவர் எழுதிக்கொடுத்த ஆட்டோகிராப் கார்ட் எங்கோ தொலைந்துவிட்டது, இப்படி சில தகவல்களை நான் தொலைப்பதற்காகவே வாங்குவதுண்டு. ஆனால் அவர் குறிப்பிட்ட படத்தை மட்டும் ரிலீஸ் ஆகும் போது டிவிடியில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

Wednesday, October 22, 2008

அடாவடியா எழுதுறது தான் நம்ம ஸ்டைல்!

நான் பார்க்கும் தமிழ் சினிமாவே ரொம்ப ரொம்ப குறைவு, இந்த லட்சணத்தில் ரொம்ப நாளுக்குப்பிறகு பார்த்த தமிழ் சினிமா பிடிக்காமல் போக, அதை விமர்சித்து எழுதிய விமர்சனத்தை ஒரு குறிப்பிட்ட நடிகரைப்பற்றிய விமர்சனமாக கருதிய 'உலகநாயகர்கள்' பொதுவாக ஒரு கமெண்ட் எழுதினார்கள், "விமர்சனமா இது? அடாவடியா இருக்கே!".

அந்த நற்பெயரைக்காப்பாற்ற மற்றொரு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது! Way past due date இந்த தொடர் விளையாட்டை தொடருகிறேன் என்று சொல்ல ஆசை தான், ஆனால் உண்மை அதுவல்ல. வேலைக்கு வந்து ஏதோ தமிழ் மணம் பார்த்தோமா, விகடன்-குமுதம் படிச்சோமா என்று நல்ல பிள்ளையாக இருந்த எனக்கு ப்ராஜெக்ட் ஒர்க் எல்லாம் கொடுக்கும் அக்கிரமம் நடந்தது. ஜாவா கோடுகளோடு நான் போராடிக்கொண்டிருந்தபோது உங்களது தொடர் விளையாட்டை ஒரு ஏக்கப்பார்வை மட்டுமே பார்க்க முடிந்தது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோக நிகழ்ச்சியாகும்.

இனி ஒரு formal statement: தொடர் விளையாட்டுக்கு அழைத்த அதுசரி, அணிமா மற்றும் இவனுக்கு நன்றி :)

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நான் பிறக்கும் முன்பே டிவி வாங்கிவிட்டார்கள் என்பதால் நினைவு தெரிந்ததில் இருந்தே(3 வயது இருக்கும்) சினிமா பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். முதன் முதலில் "Tarzan" என்ற படம் பார்த்ததாக நினைவு, காட்டிலேயே வளரும் சிறுவனுடைய கதை. அந்த சமயத்தில் தூர்தர்ஷன் என்ற ஒரே சேனல் தான். அதில் வெள்ளிக்கிழமைகளில் "ஒளியும் ஒலியும்", சனிக்கிழமைகளில் இந்திப்படம், ஞாயிற்றுக்கிழமை என்றால் தமிழ்ப்படம் பார்த்த நினைவிருக்கிறது(கூடவே ஞாயிறு மதியங்களில் வேற்றுமொழிப்படங்கள் வந்ததாக ஞாபகம்).

Tarzan படம் என்னை ரொம்ப கவர்ந்தது, அதுவும் Tarzan மரம் விட்டு மரம் தாவும் காட்சிகள்! டார்ஜன் மாதிரியே கட்டில், நாற்காலி, சோபா என்று ஏறி குதித்து அம்மாவிடம் அடி வாங்கி இருக்கிறேன். விலங்குகளின் மீது விசேஷ மதிப்பு வந்தது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

அரங்கிலா? அதெல்லாம் இந்தியாவில் பார்த்ததோடு சரி, இங்கே அத்தனை நேரம் உட்கார்ந்து பார்க்க பொறுமை இல்லை. கடைசியாக அரங்கில் உட்கார்ந்து பார்த்த படம், "அன்பே சிவம்", என்னுடைய All time favorite!

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தசா.... வேண்டாம், ஏன் திரும்பவும் வம்பு? விட்டுடுங்க!

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

திரும்பவும் அன்பே சிவம்! கமலஹாசனைத்தவிர வேறு யாராலும் நடித்திருக்கவே முடியாத நல்லசிவம் பாத்திரம். அந்தப்படத்தைப்பார்ப்பதற்கு முன் என்னுடைய பார்வையும் படத்தில் வரும் மாதவனின் பார்வையைப்போலவே இருந்தது, எல்லாவற்றிலும் சுயநலம். சுற்றி இருப்பவர்களைப்பற்றியும் சிந்திக்க, கவலைப்பட எனக்கு சொல்லிக்கொடுத்த படம் என்பதால் அந்தப்படத்தின் மீது பெருமதிப்பு உண்டு.

அப்புறம், முதல்வன்!- பிரம்மாண்டம் மற்றும் தொழில்நுட்பத்தில் என்னை வியக்க வைத்த படம். அதில் வரும் மனிதக்குரங்... சாரி, கைத்தவறிவிட்டது. படத்தில் வரும் மனிஷா கொயிராலாவைத்தவிர அனைத்தும் பிடித்திருந்தது.

சின்ன வயதில் "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" என்ற படத்தின் கதை ரொம்ப பிடித்திருந்தது.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

எதுவும் இல்லை. தமிழ் நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தமிழ் சினிமா தொழில்நுட்பத்தை ரசிப்பதுண்டு, ஆனால் 'தாக்கிய' என்பதெல்லாம் ரொம்ப ஓவர். தொழில்நுட்பம் என்றாலே எனக்கு ஹாலிவுட் படங்களே நினைவில் வருகிறது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்போதாவது சில சமயம்.அதிலும் கிசு கிசு பகுதியைப்படித்து மூளை குழம்புவது தான் மிச்சம்.

7.தமிழ்ச்சினிமா இசை?

ஏ.ஆர்.ஆரின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் கேட்கும் போது சாதாரணமாக இருக்கும் பாடல்கள் கூட திரும்ப திரும்ப கேட்கும் போது பிடித்துப்போய்விடும். என்னுடைய ஐபாடில் இருக்கும் தமிழ்ப்பாடல்கள் அனைத்துமே ரஹ்மான் பாடல்கள்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழைத்தவிர உலகத்திரைப்படங்கள் நிறைய பார்ப்பதுண்டு, முக்கியமாக ஹாலிவுட் படங்கள். இந்த ஹலோவீனுக்கு "Saw" வருகிறது, அதையும் விடாமல் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஏறக்குறைய புதிதாக ரிலீஸாகும் ஹாலிவுட் படங்களில் 50% பார்த்துவிடுவேன். பிறகு சைனீஸ் படங்கள், "Crouching Tiger, Hidden Dragon" படம் பார்த்தபிறகு சீன இயக்குநர்கள் மீதும், நடிகர்கள் மீதும் பெருமதிப்பு ஏற்பட்டது. ஜாப்பனீஸ் படங்களில் பேய்ப்படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் "One missed call" பார்த்திருக்கீங்களா? ஹாரர் படங்களை ஜாப்பனீஸை விட பயங்கரமாக யாராலும் எடுக்க முடியாது. தமிழில் ஏன் பேய்ப்படங்கள் அதிகமாக வருவதில்லை?

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித்தொடர்பு என்றால் உறவினர்களா? நெருங்கிய உறவினர் யாரும் கிடையாது, ஆனால் நண்பர்கள் உண்டு. சமீபத்தில் கூட விமானத்தில் ஒரு நடிகரை சந்தித்தேன், அவர் நடிகர் என்பதே அவர் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது(அது ஒரு பெரிய கதை, தனிப்பதிவாவே எழுதலாம்). அவரிடமே போய் "என்ன வேலை செய்யறீங்க?" என்று கேட்டு வைத்தேன். அந்தளவு எனக்கு தமிழ்சினிமாவைப்பற்றிய பொது அறிவு இருக்கிறது!

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்சினிமா தற்போது ஒரு cult-ல் சிக்கிக்கொண்டிருக்கிறது. பிரம்மாண்டம், அரசியல், சூப்பர் ஹீரோயிசம், ஆபாசம், வன்முறை - இதை விட்டால் வேறு படங்கள் வருவதில்லை. நல்ல கதையமைப்புக்கொண்ட படங்கள் ரொம்ப ரொம்ப குறைவு. இதே நிலை தொடர்ந்தால் தமிழ் சினிமாவின் நிலை கவலைக்கிடம் என்பதில் சந்தேகமில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

என்னை அது கொஞ்சம் கூட பாதிக்காது, ஆனால் தமிழகத்துக்கு நிறைய நன்மை இருக்கிறது. தமிழகம் உருப்படும்! தமிழ் சினிமாவை நம்பி இருக்கும் கலைஞர்கள் தான் பாவம்.

அடுத்து யாரை அழைப்பது? எழுதாதவர்கள் யாராவது இருக்கிறார்களா?

1. வருண்

2. எஸ்.கே(?)