Showing posts with label கடற்கொள்ளை. Show all posts
Showing posts with label கடற்கொள்ளை. Show all posts

Sunday, April 12, 2009

கடற்கொள்ளைகாரர்கள்! ஹீரோக்களா?




கடற்கொள்ளைக்காரர்கள் என்பது சினிமாவிலும் கதைகளிலும் படிப்பது போலில்லாமல் இப்போது உண்மையிலேயே நடக்குது. கடற்கொள்ளை நடக்கும் இடம் மேலே உள்ள வரைபடத்தில் உள்ளது. ஏழை நாடுகளான சொமாளியா நாட்டை சேர்ந்தவர்கள் இதில் பெரிய ஹீரோக்களாக இருக்கிறார்கள்.



ஒரு கப்பலை பிடித்து அது அவர்கள் வசமாக ஆனதும் எப்படி ரேன்சம் தொகையை பெறுவார்கள்?

என்ன சொல்றாங்கனா, ஹைஜாக் பண்ணியவுடன், இவர்களுக்கு ரான்சம் தொகையை பெற்றுத்தர, இவர்கள் ஒரு மிடில்மேனை ஹயர் பண்ணுவாங்களாம். அந்த மிடில்மேன் தான் இந்த பேரம் பேசுவது என்கிறார்கள். அந்த மிடில்மேன் க்கும் கொள்ளைப்பணத்தில் ஒரு பங்கு உண்டாம்.

பொதுவாக, பணமாகத்தான் அந்த பணயத்தொகையை பெறுவார்களாம். நான் கூட தங்கமாக பெறுவார்களோ என்று யோசித்தேன். $50 மற்றும் $100 டாலராக கொண்டு வந்து கொடுக்கச்சொல்வார்களாம். பணத்தை எண்ணுவதற்கான மெஷின் வைத்து இருப்பாங்களாம். அதோடு கள்ள நோட்டா என்று கண்டுபிடிக்கும் மெஷினும் வைத்திருப்பாங்களாம்.

21ம் நூற்றாண்டில் இருக்கிறோம். ஆனால் கடல்கொள்ளைக்காரர்களை இன்னும் ஒழிக்க முடியவில்லை. கப்பலை ஹைஜாக் பண்ணி இவர்கள் பெறும் பணம் வருடத்திற்கு $100 மில்லியனுக்கு மேலாம்!

யாரை யாரையோ ஹீரோ என்கிறோம். இவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள் போல தோனுது!