Showing posts with label கோச்சடையான். Show all posts
Showing posts with label கோச்சடையான். Show all posts

Tuesday, May 27, 2014

கோச்சடையான் வசூலில் எப்படி?

கோச்சடையான் படத்தை சவுந்தர்யா எடுத்தாரு எடுத்தாரு எடுத்துக்க்கிட்டே இருந்தாரு. ஆண்டுகள் கடக்கக் கடக்க, படம் வெளியாகுமா? என்கிற சந்தேகம் வலுத்துக்கொண்டே போனது. கடைசியில் ஒரு வழியா  படம் வெளி வந்துவிட்டது. சவுந்தர்யாவின் அனுபவத்தை வைத்துப் பார்த்தால் இப்படத்திற்கு வந்துள்ள  விமர்சங்கள் நல்லாவே வந்து இருக்கின்றன.

முக்கியமாக ரஜினி ரசிகர்களை இந்தப்படம் ஏமாற்றவில்லை!

அடுத்தது, வசூல் நிலவரம் எப்படி?

எந்திரன், விஸ்வரூபம் போன்ற படங்களோட கோச்சடையானை கம்பேர் பண்ண வேண்டுமா? இல்லைனா சும்மா வசூல் பற்றி சொல்லலாமா?

என்னைப் பொருத்தவரையில் இந்தப்படம் போட்ட காசை எடுத்தாலே மிகப் பெரிய வெற்றினு சொல்லுவேன்.

கடந்த வீக் எண்ட் வசூல் 42 கோடி என்று ஈரோஸ் நிறுவனமே வெளியிட்டு உள்ளது.

அதாவது இது அஃபிஸியல் ஸ்டேட்மெண்ட்! சும்மா ஆளாளுக்கு ஒண்ணச் சொல்லி, கடைசியில் தயாரிப்பாளர்கள் வந்து இன்னொரு தொகையை எந்திரனுக்கு சொன்னது போலல்லாமல், இது தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாகச் சொன்ன தொகை!

இது பெரிய தொகையா? னு கேட்டால், சேட்டலைட் ரைட்ஸ், ம்யூசிக் ரைட்ஸ்னு பல மொழிகளில் இந்தப்படம் ஏற்கனவே விற்கப்பட்டு இருக்காம், சும்மா சுமாரான ஒரு தொகையைப்போட்டு அதை கூட்டினால் ஒரு 20 கோடியாவது தேறிடும்.சரி இப்போதைக்கு 62 கோடினு வச்சுக்குவோம்.

இது மூன்று அல்லது நான்கு நாட்கள் வசூல். இது கோடை விடுமுறை காலம். இந்தப் படம் சிறுவர்களை ஏமாற்றவில்லை. அதனால் ஓரளவுக்கு தொடர்ந்து வசூலாகிக்கொண்டே போச்சுனா மூனு வாரத்தில் 200 கோடியை தொட்டுவிடுமா? என்பதெல்லாம் தெரியவில்லை!

சரி, எப்படி 42 கோடி கணக்கு?

அமெரிக்கா மற்றும் கனடாவில் 3 கோடி

தமிழ்நாடு  25 கோடி

ஆந்திரா, கேரளா, கர்நாடகா: 7 கோடி

ஹிந்தி வேர்ஷன்: 3 கோடி

யு கே, மலேசியா, சிங்கப்பூர், மிடில் ஈஸ்ட், ஆஸ்திரேலியானு எல்லாத்தையும் கூட்டி ஒரு 4 கோடி

கணக்கு சரியா வருதா? :)

இதில் வேடிக்கை என்னவென்றால், கமல் ரசிகர்களெல்லாம் இந்த 42 கோடி வசூலையே பொய்னு சொல்ல ஆரம்பிச்சுட்டானுக.

விஸ்வரூபம் வந்த போது, ஒரு நாளைக்கு 10 கோடி 15 கோடினு கூட்டிக்கிட்டே போனானுக! அப்போ அதையும் நம்பலையா இவர்கள்??

* ஆந்திராவில் மனம் ரிலீஸ் ஆச்சு, அதனுடைய வசூல் கோச்சடையான் வசூலைவிட ஆந்திரா மற்றும் அமெரிக்காவில் இரண்டு மடங்கு தான். இல்லைனு யாரும் சொல்லவில்லை! இருந்தும், மொத்த வசூல் என்னனு பார்த்தால் கோச்சடையான் வசூலில் பாதிகூட மனம் வசூல் கெடையாது. ஏனென்றால், மனம், கனடா, மலேசியா, சிங்கப்பூர், மற்றும் மிடில் ஈஸ்டில் கனிசமான தொகை வசூல் செய்யவில்லை. அதேபோல், கோச்சடையான் பிர மாநிலங்களில் வசூல் செய்வதுபோல், மனம்  தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா போன்ற மாநிலங்களில் எதுவும் பெருசா வசூல் பெறவில்லை!

* அதேபோல் HEROPANDI என்கிற  ஹிந்திப்படம் ஒண்ணு ரிலீஸ் ஆச்சு. வட இந்தியாவில் மட்டும்தான் இந்தப்படம் பெரியளவில் வசூல் செய்தது. ஓவர் சீஸ்ல சொல்லிக்கிறாப்பிலே வசூல் செய்யவில்லை.

ஆக, மொத்த வசூல்னு பார்த்தால் கோச்சடையாந்தான் முன்னால நிக்கிது என்பது புரியும்.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஆந்திரா மற்றும் மொத்த வசூல் எவ்ளோனு மனம் மற்றும் ஹீரோபாண்டிக்கு நான் கொடுக்கத் தயார்.

* HEROPANDI  collection 20 கோடிகள் (பாக்ஸ் ஆஃபிஸ் இந்தியா , Times of India சொல்வது)

Heropanti Box Office: earns Rs 21 crores in opening weekend



* மனம்

 NoImage
இப்போ 4 வது நாள் கலக்சன் என்னனு பார்த்தால்..

கோச்சடையான் 8-10 கோடி வசூல்

மனம் 2.5-3 கோடி வசூல்

ஹீரோபாண்டி  6.5 கோடிகள்.


நிச்சயம் கோச்சடையான், கோடை விடுமுறையில் தொடர்ந்து ஒரு ரெண்டு வாரமாவது தொடர்ந்து இதே வசூலைத் தரும். யாரு உண்மையான வின்னர்னு நீங்களே சொல்லுங்கள்!