இன்றைய காலகட்டத்தில் வலைதளத்தில் எழுதுவது மிகவும் எளிதான காரியம். இன்று யாரு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் வலைதளம் ஆரம்பிச்சு எழுதித்தள்ளி பலருடன் நம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அரைகுறைத் தமிழில் என்னைப்போல பல எழுத்துப்பிழைகளுடன், கருத்துப்பிழைகளுடன் உப்புப்பெறாத சினிமா பற்றி எழுதலாம், உலக நடப்புகளை எங்காவது படித்து வந்து எழுதலாம், என்றுமே தீராத மதப் பிரச்சினை, அழியாத சாதிப் பிரச்சினை இத்யாதி இத்யாதி என்று யாரு வேணா பதிவுகள் எழுதலாம். அதானால்தான் ஆயிரக்கணக்கான தமிழ் வலைதளங்கள் வந்துகொண்டும், நின்று நிலைக்காமல் வந்த சில ஆண்டுகளில் மறைந்துகொண்டும் இருக்கின்றன. ஆனால்...
என்ன ஆனால்???
ஒரு தரமான வலைபூ ஆரம்பித்து, தொடர்ந்து பல ஆண்டுகளாக எழுதும் ஒவ்வொரு பதிவிலும் வலைதளத்தின் தரம் குறையாமல் மிகுந்த சிரத்தையுடன், பொது நோக்குடன், தன் சிந்தனைகளை அழகாக கவிதை, கதைகள் வடிவில் சொல்லி வருவது கடினம். மேலும் அப்படி தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்போது, யாரு மனதையும் புண்படுத்தாமல், வலையுலகில் தன் வாசகர்களின் நட்பை ஒருபோதும் இழக்காமல், பல ஆண்டுகள் வலையுலக ராணிபோல் வலம் வருதுவது ரொம்ப ரொம்ப கடினமான விடயம். நிலையாமை, "தரம் குறையாமை" தான் பலருக்கு பெரும் பிரச்சினை. ராமலக்ஷ்மி அவர்களின் முத்துச்சரம் வலைதளம் அந்த "அரிதான" காலப்போக்கில் தரம் குறையாமல் உயர்தரமாகவே நிலைத்து நிற்கும் வகையைச் சேரும்.
* பொதுவாக ஒரு வலைதளத்துக்கு சென்று ஒரு பதிவை படிக்க வேண்டுமேனு சரியாக்கூடப் படிக்காமல் "நல்ல பதிவு" னு ஒப்புக்கு சொல்லிட்டு, த ம 1 அல்லது த ம நாலுனு ஓட்டுப்போட்டுட்டு போகவும் செய்யலாம். "பதிவை படிச்சானோ இல்லையோ "நல்ல பதிவு"னு சொல்லிட்டு போகிறார்" னு சொல்லும் "குற்றச்சாட்டு"க்கு பயந்து நான் பதிவைப் படித்துவிட்டு "நல்ல பதிவு" னு ஒரு வரி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் தயங்குவேன். ஆனால், முத்துச்சரத்தில் வருகிற கதையோ அல்லது கவிதையோ வாசிக்கும்போது, பல தருணங்களில் உண்மையிலேயே குறை எதுவுமே இல்லாமல், குறை சொல்ல முடியாமல் இருக்கும் அந்தப் பதிவு. அதில் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டு, முழுமனதுடன் "நல்ல பதிவு" னு ஒரே வரிசொல்லனும்னு பலதடவை எனக்கு தோன்றியுள்ளது.
* நீண்டகாலமாகவே நான் முத்துச்சரம் தளம் சென்று பின்னூட்ட மிடுவதில்லை! காரணம் என்னனு கேட்டீங்கனா.. நான் சொன்னால் நம்ப மாட்டீங்க! என் போல "ரெப்யுட்டேஷன்" உள்ளவர்கள் பின்னூட்டங்கள் முத்துச்சரத்தில் வந்தால், மோசமான "ரெப்யுட்டேஷன்" உள்ள என்னால் முத்துச்சரம் தரம் குறைந்துவிடுமே என்கிற ஐயம்தான் காரணம். இதென்ன, புரியலையேனு சொல்றீங்களா? புரியலைனா விட்டுடுங்க!
ஆமா, இப்போ என்ன திடீர்னு ஒரே ஒரு வலைதளத்தை, அதுவும் ராமலக்ஷ்மியின் முத்துச்சரத்தை மட்டும் எடுத்து விமர்சனம்? நெறையவே நல்ல தளங்கள் முத்துச்சரத்துக்கு இணையாக இல்லையா?னு கேட்கிறீங்களா?
என்னுடைய முந்தைய பதிவில் நடத்திய புதிர் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு அவங்க எதிர்பார்க்காத பரிசு கொடுக்கப்படும்னு சொல்லியிருந்தேன். வெற்றிபெற்றவர்களில் ஒருவர், திருமதி. ராமலக்ஷ்மி அவர்கள்! நான் சொன்னதுபோல, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உண்மையான பரிசு, முத்துச்சரம் பற்றிய என்னுடைய உண்மையான இந்த விமர்சனம்தான்! :)
நன்றி, வணக்கம்! :)
பி கு: அடுத்து இன்னொரு "வின்னரான" "ஹாரிபாட்டரு"க்கு என்ன பரிசு கொடுக்கலாம்னு யோசிக்கிறேன்...யோசிச்சுக்கிட்டே இருக்கேன்..