Showing posts with label ரகுமான். Show all posts
Showing posts with label ரகுமான். Show all posts

Monday, February 23, 2009

மூன்று ஆஸ்கர்கள்! இரண்டு இந்தியர்கள்!

ரெஷூல் பூக்குட்டி என்கிற ஒரு மலையாளி (?) இந்தியரும், மற்றும் நம் தமிழர் ஏ ஆர் ரகுமானும் 3 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றனர்! தமிழர்கள் இந்தியாவுக்கு பெரிய விருதுகள் பெற்றுக்கொடுப்பது அரிது. ஆஸ்கர் என்பதெல்லாம் நமக்கு கொடுக்கமாட்டார்கள் என்று பச்சையாகவே ஒரு சிலர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். நல்லவேளை, ஏ ஆர் ரகுமான் அதுபோல் ஆஸ்கர் எல்லாம் நமக்கு கிடைக்காது என்று அர்த்தமில்லாத தேவை இல்லாமல் வார்த்தைகளை என்றுமே விடவில்லை.

தமிழர் ஏ ஆர் ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது [பெஸ்ட் ம்யூசிக்கல் ஸ்கோர் மற்றும் பெஸ்ட் சாங் (ஜேய் ஹோ)]. ஏ ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் வழங்கிய அலிஸா கீஸ், இரகுமான் என்கிற தமிழ்ப் பெயரை அழகாக உச்சரித்தார்.

தமிழருக்கே உள்ள தனிப் பெருமை, தனி சிக்னேச்சர் என்னவென்றால் நமக்கு ஒரு பெயர்தான் (பர்ஸ்ட் நேம், லாஸ்ட் நேம் என்றெல்லாம் நாம் குழப்புவதில்லை)! இரகுமான் என்கிற ஒரே பெயர்தான் சொல்லப்பட்டது (இனிஷியலுடன்).

உண்மையிலேயே எல்லாமே கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. ஆஸ்கர் பரிசை அவர் பெற்றுக்கொள்ளும் போதும் ரொம்ப உணர்ச்சிவசப் படாமல், தமிழில் ஒரு வரியுடன் அவர் நம்பும் கடவுள் அருள்தான் எல்லாம் என்றும், கடவுளுக்குத்தான் எல்லாப் புகழும் என்று அடக்கமாக சொன்னார்.

பூக்குட்டி என்கிற இன்னொரு இந்தியர் (மலையாளி?) "சவுண்ட் மிக்ஸிங்"க் காக ஆஸ்கர் பரிசு பெற்றார். அவர் மிகவும் உணர்ச்சிவசப் பட்டாலும் என் இந்திய நாட்டிற்கு அற்பனம் என்றார். அதுவும் கேக்க நன்றாகவே இருந்தது.

கடைசியாக பெஸ்ட் பிக்ச்சர் பெற எல்லோரும் குடும்பமாக வந்தார்கள். இந்தியர்களாக (அனில் கபூர் மற்றும் ஸ்லம்டாக் மில்லினர் நடிக நடிகர்கள்) ஒன்று சேர்ந்து ஒரே குடும்பமாக நின்றது மிகவும் நன்றாக இருந்தது!

ஸ்லம் டாக் மில்லியனர் நாமினேட் பண்ணிய எல்லா பகுதிகளிலும் வெற்றி பெற்றது- ஒன்றே ஒன்றைத்தவிர (சவுண்ட் எடிட்டிங், "டார்க் நைட்" க்கு கொடுக்கப்பட்டது).

Slumdog millionaire won 8 Academy awards out of nominated 9 (10) for different categories! The BEST Picture and best director and cinematogrpahy and editing are other big ones!

By the way, Sean Penn has won another oscar for actor in reading role! I was surprized when he was anounced as the winner for the film MILK! Not long ago, he has won one for Clint Eastwood's Mystic river! I thought "best actor award" would go to someone else! People say sean Penn is a very good human being!