Monday, July 22, 2019

பிக் பாஸ்! தமிழர்கள்னு ஒரு உறவு?

ஒரு வருடம் முன்னால எனக்கு திடீர்னு ஞானோதயம் வந்தது. எந்நேரமும் என்னப்பா சீரியல்னு இந்த இழவையெல்லாம் போட்டு கொல்றானுகனு விஜய் சன் போன்றவற்றை திட்டிக் கொண்டே இருந்தேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நம்மதானே காசு கொடுத்து இந்த இழவையெல்லாம் சப்ஸ்க்ரைப் பண்ணுறோம்?னு இந்த மரமண்டைக்கு புரிய ஆரம்பிச்சது, அதோட சன், விஜயோட சேர்த்து பிக் பாஸையும் புதை குழிக்கு அனுப்பியாச்சு.

இப்போ இந்த தமிழ் சேனல்கள் இல்லாமல், பொழுது போகாமல் கஷ்டப் படுறேனா?  உள்ள வேலைகளைப் பார்க்கவே நேரத்தைக்காணோம்? நல்ல வேளை தப்பிச்சோம்னு இருக்கு.

இதுபோல் பல பிரச்சினைகளுக்கு தீர்வு நம்மிடம் இருக்கிறது என்பதை நாம் (நான்) பல நேரங்களில் யோசிப்பதில்லை. சும்மா தேவையில்லாமல் நமக்குப் பிடிக்காததை  பல நேரங்களில் கட்டி அழுகிறோம்.

பிக் பாஸை ரசித்துப் பார்ப்பவர்களை எல்லாம் விமர்சிக்கிறது தவறு. அவர்கள் ரசனைக்கு அது தீணியாக இருந்தால்.. Why not?

-------------

மொழிக்கு அப்பாற்பட்டு  நட்புறவுக்கு ஒத்த சிந்தனைகள் மிக  மிக அவசியம்

புதிதாக ஒரு தமிழர் அறிமுகமானார். புதியவர் என்பதால் முதலில் கொஞ்சம் உதவி செய்தேன். ஓரளவுக்கு செட்டில் ஆகிவிட்டார். அவரோட பேசும்போது கொஞ்சம் கொஞ்சம் அவர் ரசனை, வீக்னெஸ், ஆசை எல்லாம் புரிய ஆரம்பித்தது. ஒருவரோட பழகனும்னா கொஞ்சமாவது நம் ரசனை, நாம் எதை முக்கியம்னு நினைக்கிறோம், நம் பொழுதுபோக்கு இதில் ஏதாவது ஒத்துப் போகனும். எல்லாமே எதிரும் புதிருமாக இருந்தால், தமிழராக இருந்தாலும் கட்டி அழறது கஷ்டம்- எனக்கு. அது தமிழராக இருந்தாலும் சரி, உங்க நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரி. யாருக்கு வேணா நம்மால ஆன உதவி ஓரளவுக்கு செய்யலாம், ஆலோசனை சொல்லலாம். ஆனால் உக்காந்து ஒரு 10 நிமிடம் ஒருவருடன் பேசனும்னா, கொஞ்சமாவது ரசனை, சிந்தனைகள் ஒத்துப் போகனும். நான் புரிந்து கொண்டது, மேற்படியாரின் ரசனை என் ரசனைக்கு கம்ப்ளீட் ஆப்போசிட் என்பது. என்னடா இது வம்பாப் போச்சுனு கொஞ்ச நாளில் நான் ஹலோ வோட அவரிடம் இருந்து ஒதுங்கிக்கிட்டேன். பார்த்தாலும் அவரிடம் பேசுவதைத் தவிர்த்து விடுவேன். பாவம், அவருக்கு என்னனு புரியமாட்டேன் என்கிறது. என்னடா இவன் நல்லா உதவிலாம் செஞ்சான். இப்போ என்னடானா ஒதுங்கி ஓடுறான்னு குழம்புகிறார். நேரிடையாக சொல்லிடலாம்தான். இல்லங்க உங்க ரசனையும், உங்க சிந்தனைகளும் வேற மாதிரி இருக்குனு சொல்லிடலாம்தான். இதை எல்லாம் சொல்லித்தான் அவர் தெரிஞ்சுக்கனுமாக்கும்? இதெல்லாம அவரா புரிஞ்சுக்கனும். For me, it is very important. கொஞ்சமாவது சிந்தனைகள் ஒத்துப் போகனும் அப்போத்தான் யாருடனும் கொஞ்சமாவது பழக முடியும். மற்றபடி எனக்கு அவர் மேலே எந்தக் கோபமோ, அல்லது வருத்தமோ கிடையாது. என்னால அவரோட பழக முடியாது.  நான் என்ன சொல்றேன்னா, அவர் அவர் சிந்தனையை ஒத்து சிந்திக்கும் நண்பர்களுடன் பழகனும். This is a big world. He can find many people who have the same "wavelength" as "his". என்னை விட்றனும்.

 Related image

அவரிடம் இதை சொல்லப் போவதில்லை. உங்களிடம் ஏன் சொல்றேன்னா.. நீங்களும் "அவரைப்போல்" யாரு உயிரையாவது வாங்காதீங்க னு சொல்லத்தான்.

 Image result for friends with opposite taste


----------2 comments:

திருப்பதி மஹேஷ் said...

oruvelai ningal antha nanpar idathil irunthirunthu ungalai avar ninga treat pannura maathiri nadathi irunthaal....?

வருண் said...

இப்போ என்னங்க நடந்துருச்சு, மஹேஷ்?! நீங்க ரஜினி விசிறீனு வச்சுக்கோங்க, ரஜினி படம் பார்க்க, கமல் விசிறீயோட போவீங்களா? இல்லை ரஜினி விசிறீயோட போவீங்களா? உங்கள பத்தி தெரியலை, நான் கமல் விசிறீயோட ஒருக்காலும் போக மாட்டேன். ஏன்னா அப்படிப் போவது அடிமுட்டாள்த்தனம். உங்க ரசனையை ஒத்த ரசனை உள்ளவர்களூடன் போவதில் தவறீல்லை. We can choose like-minded people. There is nothing wrong in it.