இதற்கிடையில் பல தளங்களில் க ம ல ஹா ச ன் அவர்களின் அபிமானிகள், மற்றும் அவர் "பக்தர்கள்" இதில் வரப்போகிற வருமானத்தில் ஒரு பகுதியை எய்ட்ஸ் (உயிர்க்கொல்லி ?) நோயாளிகளுக்கு வழங்கப் போவதாக பேசிக்கொண்டார்கள். உடல் தானம் செய்தவர் இவர் என்பதால் இவருடைய பொதுநோக்குப் பார்வை, மற்றும் மக்கள் நல சேவைகள் என்றுமே சிறப்பாகவே இருக்கும்.
இவ்விளம்பரத்திற்காக க ம ல ஹா ச ன் எவ்வளவு பணம் வாங்கினார் என்பதும் யாருக்கும் தெரியாது.
இதெல்லாம் வெளியே சொல்லணுமா என்ன? ஆனால் எவனோ ஒரு மட்டமான ஆள், பொய்ச்சான்றிதழ் ஒண்ணை உருவாக்கி, இந்த கமர்ஷியலுக்கு "க ம ல ஹா ச ன் 16 கோடி வாங்கியதாகவும், அந்தத் தொகையை அப்படியே "பெற்றால்தான் பிள்ளையா?" என்கிற ஒரு பொதுநல இயக்கத்துக்கு அளித்துவிட்டதாகவும் இணையதளம் எல்லாம் பரப்பிவிட்டுவிட்டான்!
அந்தச் ச்செய்தி உண்மை இல்லைனு அந்த ஆர்கனைஷேசன் அறிவித்துவிட்டது! (கீழே பார்க்கவும்)
Some of you have read tweet regarding a donation by Mr.Kamal Haasan to the Petralthan Pillaiya Trust ( PTP Trust). This is false. Spreading this info gives false hope to our children. Please share and retweet this msg. Please avoid spreading inaccurate information. - Msg from Mr.Rajeev Nambiar (Founder Trustee) #kamalhaasan #ptptrust
இந்தப் பொய் செய்தியை இணையதளத்தில் வெளியிட்டவன் க ம ல ஹா ச ன் ரசிகரோ இல்லை க ம ல ஹா ச னை அவமானப் படுத்தணும்னு கிளம்பிய வேறொரு நடிகனின் ரசிகனோ தெரியவில்லை. என்ன ஒரு அநியாயம் இது?
சைபர் க்ரைம் போலீஸ் இவர்களை எல்லாம் ஏன் சும்மா விட்டு வைக்கிறதுனு தெரியலை. பிடிச்சு உள்ள போடுறதை விட்டுட்டு..
--------------------------------
நம்ம விஜயண்ணாவுடைய புலிப் படம் வெளி வரும்போது, அரசியல்வாதி யாரு வேலைனு தெரியலை, முந்திய நாள் வீட்டில் ஐ டி ரெய்ட்! படம் ரிலீஸ் ஆக தாமதமாகி பெரிய பிரச்சினை ஆயிடுச்சு. இது போதாதுனு சிறுவர்களுக்குனு சொல்லப் படும் இப்படத்திற்கு, யூ சான்றிதழ் வழங்கப்பட்டாலும், கவர்ச்சியாக, வல்கராக இருக்குனு சொல்லி தமிழ்நாடு அரசு வரிச்சலுகை தருவதை மறுத்துவிட்டது.
![]() |
ஏன்னு தெரியலை நம்ம விஜயண்ணா எங்கேயோ பார்த்துக்கிட்டு நிக்கிறாரு! |
![]() |
இதையும் புலினுதான் சொல்றாங்க- கூகுல் பண்ணிப் பாருங்க |
படத்துக்கு ரிவியூ எல்லாம் ஒட்டு மொத்தமாக நல்லா வரவில்லை என்பது இன்னொரு சோகம். முக்கியமாக விஜய் ரசிகர்களை இப்படம் திருப்திப் படுத்த முடியவில்லை. அரைப்பரிச்சை லீவில் வெளிவந்ததால் குழந்தைகளையும், பெண்களையும் திருப்திப் படுத்தியதாக தோன்றுகிறது.
ஆனால் பட பட்ஜெட் 118 கோடினு சொல்றாங்க. அது உண்மை என்றால் போட்ட காசை எடுப்பதே கஷ்டம் என்கிற நிலையில் இந்தப் ப்புலி இருக்கிறது. நம்ம ர ஜி னி இந்தப்படம் பாத்துட்டு நல்லாயிருக்குனு ஒரு "கமர்ஷியல்" கொடுத்ததும் இப்படத்தின் தோல்வியைக் கொண்டாட காத்துக்கிட்டு இருக்க அஜீத் விசிறிகளெல்லாம் கடுப்பாகிட்டாங்க போல. ட்விட்டரில் ஆளாளுக்கு ரசினியைத் திட்டி தீக்குறாணுக!
தமிழர்களின் தரம் மட்டமானதுனு இப்போ ட்விட்டர்கள் மூலம் உலகம் தெரிந்து கொள்கிறது.
விஜயண்ணாவை, ஆயுதங்கள் (துப்பாக்கி, கத்தி) காப்பாத்திய அளவுக்கு, மிருகங்களும் பறவைகளும் (சுறா, குருவி, இப்போ புலி) காப்பாத்தவில்லைனு சொல்லி இனிமேல் விலங்குகள் பறவைகளிடமிருந்து "அண்ணாவை" தள்ளி இருக்கச் சொல்லி எல்லாரும் கேட்டுக்கிறாங்களாம்!
இதிலே கொடுமை என்னனா, ஐ டி ரெய்டின் விளைவால் யு எஸ்ல படம் சரியான நேரத்தில் வெளி வரவில்லை என்பதால் எல்லாருக்கும் "free pass" கொடுக்க வேண்டிய கட்டாயம் . யு எஸ் பட விநியோகஸ்தர்களுக்கு "இந்தப் புலியால்" பெரு நஷ்டம்!