அன்று சனிக்கிழமை! இருந்தாலும் ஒரு முக்கியமான ஒரு எக்ஸ்பெரிமெண்ட் செய்யவேண்டும் என்று காலையில் எழுந்து ஆய்வகத்திற்கு கிளம்பினாள், ஷர்மிளா. அவள் அந்த பல்கலைகழகத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் புதிதாக இந்த வேலையில் சேர்ந்து இருந்தாள். வேதியிலில் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருந்தாள், ஷர்மிளா. சில வருடங்கள் வேலை செய்துவிட்டு முதுநிலை படிப்பு படிக்கலாம் என்று நினைத்து, தன் படிப்புக்கு உதவும் இந்த வேலையில் சேர்ந்து மூன்று மாதம்தான் ஆகிறது. தன்னுடையை "பாஸ்" உடைய நல்ல புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக லீவு நாட்களில்கூட வேலை செய்தாள்.
ஷர்மிளா அன்று காலையில் எழுந்து குளித்து ரெடியாகி, ப்ரெட் டோஸ்ட் பண்ணி விட்டு காஃபி குடிக்க ஸ்டவை ஆண் பண்ணினாள். சரியாக 10 நிமிடத்தில் பால் பொங்கியது. கவனமாக ஸ்டவில் இருந்த நெருப்பை ஆஃப் செய்துவிட்டு, காய்ச்சிய பாலில் காஃபிப்பொடி போட்டு, சர்க்கரை கலந்து காஃபி குடித்துவிட்டு ஆய்வகத்திற்கு சென்றாள்.
அன்று "க்ரிஸ்த்மஸ் ஹாலிடேக்களில் ஒரு நாள்" என்பதால், ஆய்வகத்தில் அவளைத்தவிர வேறு யாரும் இல்லை. வேதியியல் ஆய்வகத்தில் தனியாக ஒருவர் மட்டும் வேலை செய்யக்கூடாது - அதுவும் பைரோஃபோரிக் வேதிப்பொருள் பயன்படுத்தக்கூடாது என்று பல சேஃப்ட்டி லெக்சர்களில் திரும்ப திரும்ப சொல்ல கேட்டிருக்காள், ஷர்மிளா. இருந்தாலும் அதை அவள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இன்று அவளுக்கு அந்த ரியாக்ஷன் செய்தே ஆக வேண்டும். அப்படி என்ன ஆகிடப்போகிறது? என்று நினைத்தாள், ஷர்மிளா.
ஷர்மிளா ஒரு அக்ரிலிக் ஸ்வெட்டர் அணிந்து இருந்தாள். அதற்குமேல் நெருப்பு பற்ற முடியாத லேப் கோட் அணிந்தால், ரொம்ப ஹாட்டாக இருக்கும் என்று எண்ணிய அவள் லாப் கோட் அணியவில்லை. கையில் கவனமாக க்ளவ்ஸ் மட்டும் அணிந்து இருந்தாள்.
வினை குடுவையை "நைட்ரஜன் அட்மாஸ்ஃபியரில்" வைத்துவிட்டு, குளிர் பெட்டியில் இருந்த டெர்சியரி-பியூட்டில் லித்தியம் ரியேஜண்ட் பாட்டிலை எடுத்து வந்தாள். ஒரு ப்ளாஸ்டிக் சிரின்ஞ்வுடன் நீடிலை கனெக்ட் செய்து, தன் ரியாக்ஷனுக்கு தேவையான 16 எம் எல் டெர்சியரி ப்யூட்டில் லித்தியம் சொலுஷனை சிரிஞ்சில் சக் பண்ணி எடுத்தாள். சிரிஞ்சில் இருந்த அந்த சொலுஷனை, ரியாக்ஷன் ஃப்ளாஸ்க் ல கொண்டு செல்வதற்கு முன்னால், அவள் நீடிலை நன்றாக டைட்டாக சிரிஞ்சில் கணெக்க்ட் செய்யாததால். சிரிஞ்சிலிருந்து மெட்டல் நீடில் கழண்டு கீழே விழுந்தது. அதிலிருந்த ப்யூட்டில் லித்தியம் சில ட்ராப்ஸ் வெளியே வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ப்யூடில் லித்தியம் அட்மாஸ்ஃபியரில் உள்ள "நீராவி" மற்றும் ஆக்ஸிஜனுடன் இணைந்து நெருப்பாக மாறியது! அந்த நெருப்பை பார்த்தவுடன் ஷர்மிளா ரொம்ப நேர்வஸாகி பயந்துவிட்டாள்! நெருப்பைப் பார்த்து பயந்து சிரிஞ்சை தன் மேலேயே நழுவவிட்டாள். அந்த சொலுஷன் அவள் க்ளவ்ஸிலும், அவள் ஸ்வெட்டரிலும் பட்டது, உடனே அது பாலித்தீன் என்பதால் க்ளவ்ஸும் தீப்பிடித்து எரிந்தது, அவள் உடலில் போட்டிருந்த, அக்ரிலிக் ஸ்வெட்டரிலும் நெருப்பு பரவியது. அது போதாதென்று அருகில் இருந்த எத்தில் ஈத்தரில் நெருப்பு பட்டு பெரிய நெருப்பாகியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் உடலில் உள்ள ஆடைகளில் நெருப்பு வேகமாக பரவியது.
ஷர்மிளாவால் சரியாக யோசிக்க முடியவில்லை!
இதுவரை அவளுக்கு எக்ஸ்பெரிமெண்ட் செய்யும்போது இதுபோல் நெருப்பு உருவானதில்லை! உதவிக்கு யாரும் இல்லை! எமர்ஜென்ஸி ஷவர்க்கு ஓடி அதை ஆண் பண்ணி தன் நெருப்பை அணைக்க ஏனோ தோனவில்லை!
பயந்து ஓடினாள்! நெருப்பு வேகமாக அவள் உடலில் பரவியது! வேறு யாரும் அவள் ஆய்வகத்தில் அருகில் இல்லததால், அவள் உடலில் நன்றாக நெருப்பு பரவிய பிறகுதான் இவள் போட்ட கூச்சல் கேட்டு பக்கத்து ஆய்வத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தார்கள். அவர்கள் வருவதற்கு முன் அவள் உடலில் பரவிய நெருப்பு அவளை உயிரைக்குடிக்கும் அளவுக்கு அவள் உடலில் பரவி, அவள் உடல் கருகியது. உதவிக்கு வந்தவர்கள் அருகில் இருந்ந்த ஷவருக்கு கொண்டு சென்று நெருப்பை ஒருவாறு அணைத்து, எமர்ஜன்ஸி சர்வீஸை அழைத்தார்கள். சில நிமிடங்களில் வந்த ஃபயர் சர்வீஸ், அவளை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்று, இண்டென்ஸிவ் கேரில் சிகிச்சை கொடுத்தார்கள்.
ஹாஸ்பிட்டலில் மரணக்காயங்களுடன் இருந்த அவளுக்கு புரிந்தது ஏன் வேதியியல் ஆய்வகத்தில் தனியாக வேலை செய்யக்கூடாது என்று. இப்போது புரிந்து அவளுக்கு என்ன பயன்? சில நாட்களில் இந்த நெருப்புக்காயங்களால் உயிர் இழந்தாள், ஷர்மிளா.
இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய கதை!
http://calfire.blogspot.com/2009/03/chemical-fire-t-butyl-lithium-and.html