நேத்து வந்த கபாலி முதல் இவர் படம் வெளிவரும்போது, இவர் படத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட 10 மடங்கு அதிகமாக்கி கள்ளத்தனமாக டிக்கட் விக்கிறானுகனு பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். பாவம் இவருக்குத் தெரியாது போல இருக்கு?! தெரிந்தாலும் அதையெல்லாம் இவரு கண்டுக்கிறதே இல்லை. ஏன்னா, அதெல்லாம் தப்பே இல்லை! இதுக்குப் பேருதான் பக்கா சுயநலம்!
மேலும் பணம் சேர்ந்தவுடன் பழசையெல்லாம் மறந்துட்டாரு இவரு. பங்களூர் கண்டக்டாரா இருக்கும்போது இவர் டிக்கட்டே கொடுக்காமல் டிக்கட் விலையில் பாதிக் காசை மட்டும் வாங்கி தன் பைக்குள்ளே போட்டுக்கிட்டு செய்த சட்டவிரோதங்கள் எல்லாமும் மறந்துபோச்சு. சரி அது போகட்டும்.
இன்னைக்கு இவர் படம் வெளிவரும்போது நடக்கும் தேச துரோகச் செயல்களை எல்லாம் டிவிட்டர் ஹாண்டில் ஒண்ணை வச்சுக்கிட்டு கண்டுக்காமல் விட்டுவிட்டு, இப்போ வந்து மோடியின் இந்தப் பெரிய சாதனையை வரவேற்கேறாராம். மேலும் தான் பெரிய யோக்கியன்னு சொல்லிக்கிறாராம்பா!
இவர் மோடியை பாராட்டியவுடனே, எனக்கே அமீர் கேட்கும் அத்தனை கேள்விகளும் எழுந்தன. இதேபோல் நம் மக்கள் அனைவருக்குமே இதே கேள்விகள் மனதில் தோன்றி இருக்கும்!
இவர் படத்துக்கு அநியாய விலையில் டிக்கட் விக்கும்போது இவருக்கு கண்ணில் படுவது இவரை வைத்து படம் எடுத்தவன் நஷ்டமாகக்கூடாது என்கிற ஒரே குறிக்கோள்தான். அந்தப் பணம் கறுப்பாக வந்தாலும் சரி, சிவப்பாக வந்தாலும் சரி, இவருக்கு கவலையே இல்லை. அப்படி ஒரு சுயநலம்!!!
இதுபோல் அநியாய விலை டிக்கட் விற்பனைகள் நடக்கும்போது, இவர் பகவானிடம் பாவ மன்னிப்பு கேட்டாரே ஒழிய மோடிட்டப்போயி இவர் படம் வெளியாகும்போது நடக்கும் கொள்ளைகள்/அநியாயத்தை யெல்லாம் தட்டிக் கேட்கும்படி சட்டம் கொண்டுவரச்சொல்லி ஒருபோதும் சொல்லவில்லை!
ஆக, இவருக்கு ஒரு நியாயம் ஊரில் உள்ளவனுக்கு இன்னொரு நியாயம். அப்படித் தானே?
இவர் படம் வெளிவரும்போது, இவர் படத்துக்கு சட்டப்படி அரசாங்கம் நிர்ணயித்த விலையில் டிக்கட் என்னைக்கு விற்கப்படுதோ அன்னைக்கே நம்ம நாடு திருந்திவிடும்.
இந்த ஒரு சின்ன விசயம்கூடப் புரியாமல், மோடியை பாராட்டுறேன், ஜெய்ஹிந்த்னு இவர் செய்ற காமடியை அமீர் விமர்சிப்பதில் எந்தத் தப்பும் இல்லை!
சில நியாயமான கேள்விகளை எழுப்பி ரஜினியை விமர்சித்த அமீருக்கு என் வாழ்த்துக்கள்!