Showing posts with label நான் கடவுள். Show all posts
Showing posts with label நான் கடவுள். Show all posts

Friday, March 20, 2009

“நான் கடவுள்” கமர்ஷியலாக வெற்றிப்படமல்ல- நிதர்சனம்!

அதான் "ப்ளாப்" ஆயிருச்சுனு ஏற்கனவே ஒரு பதிவு போட்ட இல்லை? இப்போ எதுக்கு இன்னொரு பதிவுனு கேக்கிறீர்களா? அதையெல்லாம் மறப்பேனா? இல்லை மறுக்கத்தான் முடியுமா? விசயம் என்னவென்றால், ஒரு சில படங்கள் 4 வாரங்களுக்கு அப்புறம் கண்ணா பின்னானு பிக்-அப் ஆகலாம். அதுமாதிரி எல்லாம் தமிழ் சினிமா உலகில் ஆகியிருக்கு. ஆனால் அதுபோல எதுவும் இந்தப்படத்திற்கு பெருசா லேட் பிக்-அப் ஆகவில்லை. அதுதான் உண்மையில் நடந்தது!

தலைப்புக்கு வரேன்...

மூன்று வருடம் சிரமப்பட்டு மூன்று ஹீரோக்களை மாற்றி கடின உழைப்பில் உருவான ஒரு படம்தான் “நான் கடவுள்” என்கிற படம். தமிழ் வலைபூக்களில் எந்தப்படத்திற்கும் இல்லாத பெரிய பாராட்டுக்கள் இந்தப்படத்திற்கு கிடைத்தது. மற்றபடி இது விமர்சனர்களை ஓரளவுக்கு கவர்ந்தது. ஆனந்தவிகடன் 44 மதிப்பெண்கள் கொடுத்தது. மற்ற விமர்சகர்கள் ஓரளவுக்கு நல்ல விமர்சனமே கொடுத்தார்கள். இந்தப்படத்தில் நடித்ததற்காக நடிகை பூஜாவுக்கு ஒரு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இயக்குனர் பாலாவுக்கும் ஒரு தேசிய விருது கிடைக்கலாம்.

கமர்ஷியலாக எப்படிப்போகிறது என்று இன்றைய தேதிக்குப் பார்த்தால்,

· இன்று 7 வது வாரம்! சென்னையில் பல மல்டிப்ளெக்ஸில் இதை தூக்கிவிட்டார்கள். சத்யம் காம்ப்ளெக்ஸில் ஒரு ஷோ கூட இன்று ஓடவில்லை! அபிராமி காம்லெக்ஸ்ல ஒரு சின்ன தியேட்டரில் மட்டும் ஓடுது. அவ்வளவுதான்.

· சென்னையில் செக்கண்ட் ஸ்ட்ரிங் தியேட்டர்களான முரளி கிருஷ்ணா, கிருஷ்ண வேணி, மஹாலக்ஷ்மி போன்ற திரையரங்குகளில் ஓடுது.

· மற்றபடி, மதுரை, கோவை , சேலம், பங்களூர் போன்ற பெரிய ஊர்களில் இப்படத்தை தூக்கி விட்டார்கள் என்று தெரிகிறது.

· பி அண்ட் சி செண்டர்களில்படம் சுமாராகத்தான் போனது. போட்ட காசை கஷ்டப்பட்டு எடுத்து இருக்கலாம்.

· ஓவெர் சீஸ் லயும் படம் பெரிய கலெக்ஷன் கொடுக்கவில்லை! மலேசியாவில் மட்டும் இன்னும் ஒரு 9 திரையரங்குகளில் ஓடுகிறது. இருந்தாலும் இது ஒரு பெரிய சாதனை அல்ல!

இதிலிருந்து என்ன தெரியுதுனா ஓவெர் ஹைப் நல்லதில்லை! நான் கடவுள், ரஜினி கடிதம் எழுதியதால் பிச்சுக்கிட்டு ஓடுச்சு, அது இதுனு சொன்னதெல்லாம் அர்த்தமற்றது.
படம் 7 வாரம்கூட மல்டிப்ளக்ஸ்ல ஓடலை என்பதுதான் இன்றைக்கு உண்மை நிலவரம். 7 வாரங்களில் சென்னையில் மட்டும் சென்னை வசூல் என்ன என்று பார்த்தால் அதுவும் தோல்விப்படங்கள்(வில்லு) போல்தான் இருக்கு!ஒண்ணும் பெரிய அளவில் இல்லை(சோர்ஸ்: பிஹைண்ட்வூட்ஸ்).

ஏற்கனவே "ப்ளாப்" னு நான் க்ளைம் பண்ணிய பதிவு இங்கே!

http://timeforsomelove.blogspot.com/2009/02/blog-post_17.html

Wednesday, February 25, 2009

நான் கடவுளில் இளையராஜாவின் இசை நல்லாயில்லை- சாரு நிவேதிதா?!!

திரு. சாரு நிவேதிதா “நான் கடவுளு”க்கு ஒரு விமர்சனம் எழுதி இருக்கார்(?). என்ன மொழி யிலே? மலையாளத்தில்! ஏன் தமிழ் படத்துக்கு மலயாளத்தில் தமிழ் தளத்தில் விமர்சனம் எழுதனும்? அதெல்லாம் கேக்க கூடாது. முடிஞ்சா ட்ரேண்ஸ்லேட் பண்ணி புரிஞ்சுக்கோங்க! இல்லைனா போயிக்கிட்டே இருங்க!

நான் கடவுள்? விமர்சனம் எழுதப்போறேன் நு இவர் இரண்டு ஆர்டிக்கிள் எழுதிவிட்டார். இப்போ மலையாளத்தில் ஒரு விமர்சனம்!

என்ன கொடும இது சாரு? னு கேட்கக்கூடாது. யார் உம்மைப் படிக்கச்சொன்னது னு கேட்பார்!

சரி இந்தப்படத்துக்கு ஒரு விமர்சனம் எழுத ஏன் இவருக்கு இவ்வளவு குழப்பம்? ஏன் இவ்வளவு தயக்கம்?

ஜெயமோஹன் வசனம் எழுதியதாலா? இல்லை இளையராஜா இசை அமைத்ததாலா? ரெண்டுமேவா? யாருக்குத் தெரியும்?

பிரபல பதிவர்கள் பலர் இளையராஜா தான் இதில் ஜொளி க்கிறார் என்றார்கள். இவர்கள் இசை ஞானம் பற்றி எனக்குத்தெரியாது! ஆனால் திரு. சாரு நிவேதிதா சொல்கிறார் (என் மலையாள நண்பர் மொழிபெயர்ப்பின் படி) நான் கடவுளில் இளையராஜா “இழவுகாட்சி” க்கு ”காதல் காட்சி” க்கு அடிக்க வேண்டிய இசை அமைத்துள்ளதாக! But he says that he is NOT commenting badly because of his personal opinion differences with IR. It is strictly business, னு சொல்றார்! நீங்க நம்புறீங்களா? இல்லையா? ஏன்?

Are you proud of being a Tamil? You should be. Don’t ask me why! LOL

See how complicated our artistes and critics are! LOL

Friday, February 20, 2009

சுப்பிரமணியபுரம் vs நான் கடவுள்

ஒரு விசயம் சொல்றேன் கேட்டுக்கோங்க! என்னனா, நீங்க எதுலயுமே பெரிய ஆளா ஆகம, பிரபலமாகாம இருப்பது நல்லது. ஒருவர் பிரபலமானதும் அவருக்கு திமிர் அதிகமாவது ஒருபுறமிருக்கட்டும், அவரிடம் இருந்து மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாயிடும். இந்த எதிர்பார்ப்பு அதிகமானதும் வாசகர்கள் ரசிகர்கள் விமர்சகர்களை திருப்திப்படுத்துவது ரொம்பக் கடினம்.

சினிமா உலகில் இதை கண்கூடாகப் பார்க்கலாம். இயக்குனர் மணிரத்னத்தின் மெளனராகம், நாயகன் போன்ற படங்கள் அவர் பிரபலமாகுமுன்பு வந்தன. அதுக்கு முன்னாலே வந்த இதயக்கோயில், பகல் நிலவெல்லாம் இவர் இயக்கியதுதான். அவைகளை யாரும் பெருசாக்கூட பேசலை. கோவைத்தம்பியின் இதயக்கோயில் பார்த்துட்டு, ஆர். சுந்தர்ராஜன் (இவர்தான் கோவைத்தம்பி படமெல்லாம் வரிசையாக எடுத்தார்) படங்கள் அளவுக்கு இல்லை என்று சொன்னார்களாம்! ஆனால் மெளனராகம், நாயகனுக்கு அப்புறம் மணிரத்னம் எங்கோ போயிட்டார். அக்னிநட்சத்திரம், தளபதி போன்றவைகள் கமெர்ஷியல்லா பெரிய ஹிட் ஆச்சு.

அதுபோல்தான் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, அவர் யாருனே தமிழ் சினிமாவுக்கு தெரியாதபோது வந்த படம். அவருடைய 5 வது படம் நிழல்கள்தான் தோல்வியைத்தழுவியது.

பாலாவின் சேது, அதேபோல்தான் சசியின் சுப்பிரமணியபுரமும் போன்றவையும், அதில் உள்ள குறைகளை ஒதுக்கி பாராட்டப்பட்டன. இப்படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கு பெயரும் புகழும் வாங்கி தந்தன.

ஆனா ஒருவர் பிரபலமானவுடன் மக்கள் எதிர்பார்ப்பு அளவுக்கு மிஞ்சிவிடும். மணிரத்னம் இன்னைக்கு தமிழ்ப்படம் தைரியமாக எடுக்க முடியலை. அவரால் தமிழ் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியவில்லை. அதனால் ஹிந்திக்கு ஓடிவிட்டார்! சமீபத்தில் இவர் இயக்கிய தமிழ்ப்படங்கள் எதுவுமே க்ரிடிக்க்லாகவோ கமர்ஷியலாகவோ வெற்றியடையவில்லை.

இப்போ பிரபலமாகிவிட்ட பாலாவின் நான் கடவுளுக்கு சசியின் சுப்பிரமணியபுரத்திற்கு கெடச்ச வரவேற்பு கிடைக்கவில்லை! மாயாவி சொன்னதுபோல சுப்பிரமணியபுரம் ஒரு ப்ளாக் பஸ்ட்டர். இந்தப்படமும் செட்டிங்ஸ் எல்லாம் போடாமல் பாலாவின் ஸ்டயிலில் எடுக்கப்பட்டது. ஆனால் திரைக்கதையில் சாதாரண மனிதர்களைப்பற்றி மட்டுமே சுற்றி இருந்தது கதை. அவர்கள் உணர்ச்சிகள் எல்லாம் ரொம்ப புரியும்படி இயற்கையாக இருந்தது. சினிமாத்தனம் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது. ஆனால் சசி ஒரு "அந்நியனையோ" அல்லது "அகோரியையோ" காட்டப்படவில்லை!

ஆனால் பாலாவிடன் நான் கடவுள் ஒரு 3 வருடம் "மாஞ்சி மாஞ்சி" எடுக்கப்பட்ட படம். இது பாலாவின் 4 வது படம். இதனால் பாலாவிடம் எதிர்பார்ப்பு ரொம்ப ரொம்ப அதிகமானது. அது ஒரு பெரிய பிரச்சினை இந்தப்படத்துக்கு. என்னைப்பொறுத்தவரையில் இன்னொரு காரணம் என்னவென்றால் ஒரு சாமியாரை பெரிய ஹீரோவாக காட்டியது. சுப்பிரமணியபுரத்தில் வருகிற அனைத்துமே இயற்கையில் நடப்பது. அதில் எந்தவிதாமான செயற்கைத்தனமும் இல்லை. ஆனா, இங்கே ஒரு அகோரி சாமியார் வந்து காப்பாத்துறார். இதெல்லாம் ஊர் உலகத்தில் நடக்கிற இயற்கையான ஒண்ணு இல்லை. வீட்டுக்கு நடுவில் உக்காந்து கஞ்சா கசக்கினால், பெத்த மகனே என்றாலும் செருப்பால அடிவிழும். பாசம், அன்பு என்றால் என்னனே தெரியாத ஒரு ஆளை பெத்த அம்மா பார்த்து உருகுவதெல்லாம் சும்மா சினிமாத்தனம். அதுபோக சாமியார்னாலே பொதுவாக என்னைப்போல மக்களுக்கு மற்றும் நம்ம திராவிட பாரம்பரிகத்தில் இருந்து வருபவர்களுக்கு பிடிக்காது.

சாமியார் என்றாலே ஏமாற்றுக்காரகள் என்று நம்புகிறது நம் தமிழ் மண்ணில் வாழும் மறத்தமிழர்கள்.

நம்ம தந்தை பெரியார் அகோரி சாமியார் ஹீரோவைப் பார்த்தா என்ன பண்ணுவார்?

பாராட்டுவாரா?

கெட்டவார்த்தை சொல்லி திட்டுவாரு!

பாலாவையும் சேர்த்து திட்டுவாரு! இல்லைனு சொல்ல யாருக்காவது தில்லு இருக்கா?


இப்படி இருக்கும் நம் தமிழ் மண்ணில், மறத்தமிழர்கள் வாழும் சூழலில் ஒரு காசியில் வளர்ந்த தமிழ் சரியாகப் பேசத்தெரியாத ஒரு சாமியார் (அதுவும் கஞ்சா குடித்து மூளையை எரித்த சாமியார்) வந்து இல்லாத உணர்ச்சிகளை காட்டி காப்பாத்துவதுபோல் இருப்பது தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு வட இந்திய சாமியார் வந்து நம்ம தமிழர்களுக்கு புத்திபுகட்டுவது போல இருக்கு. நவீன காலத்து ராமாயணமானு தோனுது. அதுலதான் நம்ம தமிழர்களை இவ்வளவு கேவலமா காட்டுவார்கள்.

சுப்பிரமணியபுரம் ஒரு ப்ளாக் பஸ்ட்டர்! காரணம் அதில் வந்த ஹீரொ ஒரு சாதாரண தமிழ் சண்டியர். நான் கடவுள் அதுபோல் ஒரு ப்ளாக் பஸ்ட்டராக முடியவில்லை என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காதுனு நினைக்கிறேன்!

பின்குறிப்பு: நான் கடவுளை பிடிச்சு ரொம்பவே தொங்கியாச்சு, இதை விட்டு தொலையலாம்னு இருந்த என்னை தூண்டிவிட்டு இந்தப் பதிவை எழுத வைத்த பெருமை, திரு. மாயாவி மற்றும் திரு. மணிகண்டனைச் சேரும்