சரத்குமாரும், ராதா ரவியும் எத்தனைகாலம் இருந்தாலும் இறங்க மாட்டேன்னு அடம் பிடிச்சு ஒருவழியா இறக்கப் பட்டுவிட்டார்கள். ஆனால் ஒண்ணு பதவிக்கு வந்திருக்கிற நாசர் அணி ஒண்ணும் பெருசா சாதிக்கப் போவதில்லை என்றுதான் தோனுது. ஏதாவது உருப்படியா செய்யணும்னா அன்னையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடணும் (ஆள்ற வரைக்கும்)! அப்படி எதுவும் செய்யத் தவறினால் ஒண்ணும் கிழிக்க முடியாது! எங்கே என் கூற்றை தவறாக்கிறாங்களானு பார்க்கலாம்.
நம்ம கமலஹாசன் அவர்கள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் பங்குகொள்ளும் ஒரு குழுவை, இந்திய திரைப்பட கழகம்னு மாத்தணும்னு சொல்றாரு. அதாவது சென்னையில் உள்ள இந்த குழுவை மட்டும் அப்படி மாத்தணுமா? இல்லை வட இந்தியா, மற்ற மாநிலங்களில் உள்ள எல்லாக் குழுவையும் ஒரே குழுவாக மாற்றணும்னு சொல்றாரா?னு எனக்கு விளங்கவில்லை!
ஆமா, "உலக நாயகன்" ஏன் இந்தியாவோட நிறுத்திக்கிட்டாரு? னு தெரியலை, உலகத் திரைப்பட கலைஞர்கள்னு மாத்த வேண்டியதாக சொல்லியிருக்கலாம்.
ஏன் கமல் இப்படி ஒரு டிஸ்க்ரிமினேஷன்? உங்க பார்வை குறுகிய வட்டத்திலேயே நிக்கிதுனு தெரியலை.
"நாம் தமிழர்" சீமானுக்கு இது பிடிக்கவில்லை போலும்! தமிழ் தமிழர்னு பொங்கி எழுகிறார்..
--------------------
உங்களுக்கு எப்படினு தெரியலை, எனக்கு ஒரு சில பதிவர்களை சுத்தமாக ஆகாது. எனக்கு ஆகாதுனா உடனே அவர்கள் கெட்டவர்கள்னு நெனச்சுப் புடாதீங்க. ஒருவேளை நான் "வில்லன்" னாவும், பிடிக்காத பதிவர்கள் "கீரோ"வாகக் கூட இருக்கலாம்.
அப்படிப்பட்ட ஒரு "கீரோ" ரொம்ப நாள் சென்று ஒரு பதிவெழுதினார். பதிவு, நடிகர் சங்கம் தேர்தல் பற்றியது. இந்தப் பதிவின் இடையில் ஏதோ வருண் பற்றி விமர்சனம். எனக்கும் இவருக்கும் எப்போவுமே சுத்தமாக ஆகாது. ஏன்? அவரு ஏனோ என்னை அவர் "நண்பன்"னு நெனச்சுக்குவாரா என்னனு தெரியலை. என்னைப் பொருத்தவரையில் நான் அவர் நண்பனா இருக்க எப்போவுமே எனக்குத் தகுதி கெடையாது. இவர் எப்படினா எப்போவுமே தன்னை ஒரு படி மேலே வைத்துக்கொண்டு, மேதாவிபோலதான் பேசுவார்- பதிவா இருக்கட்டும் பின்னூட்டமா இருக்கட்டும் எல்லாவற்றிலும் இதே இழவுதான். அந்த "ஆட்டிட்டூட்" எனக்கு நண்பர்களிடம் சுத்தமாகப் பிடிக்காது.
இன்னும் புரியலையா?
இவர் சமீபத்திய பதிவில் "சங்கிலி முருகன்" னு "பூச்சி முருகனை" மனதில் கொண்டு தவறாக எழுதிவிட்டார். சரியா? இது ஒரு சாதாரணத் தவறுதான். எல்லாரும் செய்றதுதான். இதை வாசிச்ச ஒரு பின்னூட்டதாரர், அதை பின்னூட்டத்தில் சரி செய்யச் சொல்லி சொல்ல முயல்கிறார்.
உடனே இவர் என்ன செய்யணும்? "சாரிங்க, தப்பா எழுதிட்டேன். திருத்திடுறேன். நன்றி"னு சொல்லணும். ஒண்ணு தவறை சரி செய்யணும். இல்லைனா நான் சொன்னது சரினு விளக்கம் கொடுக்கணும்.
என்னதான் சொன்னாரு?னா..
எனக்கு ரொம்ப டச் விட்டுடுச்சு, அதனால் தவறா எழுதிட்டேன் போல. சரி செய்ய வந்த நீங்களாவது அதை சரியாச் சரிசெய்யாமல் அதில் தவறு செய்து இருக்கீங்களே?!! னு சரி செய்ய வந்தவன் செய்ததுதான் தவறு. நான் செய்தால் அது தவறில்லை! எனக்கு டச் விட்டுப் போயிடுச்சுனு ஒரு கேவலமான சமாளிப்பு.
பதிவில் இவரு சொன்னது (சங்கிலி முருகன்)..
அரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிறது எனலாம்.சங்கிலி முருகன் யாரென்றும், அவர் வழக்கு தொடர்ந்து காலம் தொட்டு சுமார் 5 வருடங்களுக்கும் மேலாகியும்,குமரிமுத்து,எஸ்.வி.சேகர் போன்றவர்களை வெளியேற்றிய கால கட்டங்களில் புகைய துவங்கி இன்று கோபக்கனல்கள்,எதிர் மறுப்பு என பொது வெளிக்கு வந்து விட்டதால் கருத்துரிமை பங்காளியாகிறேன்.
பின்னூட்டத்தில் சரி செய்ய வந்தவர் பாவம்..
ராஜேஷ், திருச்சி said... Sangili Murugan???????? yepaaa adhu "poochi" Murugan.. October 12, 2015 at 10:15 AM
தப்பை சரி செய்யாமல் ஒரு சமாளிப்பு! (இன்னும் அந்தப் பதிவில் சங்கிலி முருகன் னுதான் இருக்கு)
ராஜ நடராஜன் said... திருச்சி ராஜேஸ்/நாந்தான் டச் விட்டுப்போய் தப்பா சொல்றேன்னா நீங்களாவது சொல்றதை ஒழுங்கா சொல்லக்கூடாதா:)
![]() |
சங்கிலி முருகன் |
![]() |
பூச்சி முருகன் |
எனக்குத் தெரிய சங்கிலி முருகனுக்கும் இந்தப் பிரச்சினைக்கும் சம்மந்தமே இல்லை. அதை பின்னூட்டத்தில் சரி செய்யச் சொன்னதுக்கு எதுக்கு விதண்டாவாதம்? ஏன் இப்படி இருக்காங்கனு தெரியலை!
இந்தியர்கள் மனநிலை ஏன் இப்படி இருக்கு? "சாரி, தவறுதலா எழுதிட்டேன்..சரி செய்துவிடுகிறேன்" னு சொல்றது ஏன் அவ்வளவு பெரிய கஷ்டம்??.
இன்னும் அப்படியே அதை விட்டுவிட்டு புரியாதமாதிரி நடிக்கிறது. நீங்க அதைச் சொன்னீங்களா நான் இதை நெனச்சேன்னு எதையாவது சொல்றது..ஆனால்;
போடுறதெல்லாம் பெரிய மனுஷன் வேடம். உண்மையில் இருப்பது வெறும் வரட்டு கவுரவம்!
ஆமா, மேன்மை தாங்கிய பதிவுலகக் கண்மணிகள் நீங்க என்ன சொல்ல வர்ரீங்க?
ஆமா, உங்களுக்கு இது எல்லாம் ஒரு சாதாரண விசயம்தான். எனக்கு அப்படி இல்லை! அதனால் உங்க அறிவுரையை இங்கே பின்னூட்டத்தில் வைக்க வேணாம்! புரிதலுக்கு நன்றி!
*****************