Tuesday, November 8, 2011

விஜய்க்கு சூர்யா எவ்வளவோ மேல்!

வேலாயுதம் படம் ஓரளவுக்கு பிக் -அப் ஆனதுல இருந்து எங்கே பார்த்தாலும் சக்ஸஸ் மீட், பிஹைண்ட்வுட்ஸ ல பரிசு கொடுக்கிறது, சாட் பண்ணுகிறேன்னு விசயின் சிறுபிள்ளைத்தனம் தான் பார்க்க முடியுது. என்னவோ உலகத்தரத்திலே ஒரு படம் கொடுத்துட்டதுபோல! ஆமா முன்னப்பின்ன வெற்றியையே பார்த்ததில்லையா இந்த ஆளு? னு எல்லாரும் புருவத்தை சுறுக்குமளவுக்கு கேவலமாயிருக்கு!

இதுல வேடிக்கை என்னனா வேலாயுதம் ஹிட் சரி, அப்போ காவலன் ஃப்ளாப்பா? னு கேட்டால் "பே பே" னு முழிக்கிறானுக!




காவலன் சென்னை கலக்சனை ப்பார்த்தால் மங்காத்தா கலெக்சன் பக்கத்தில்கூட இல்லை. நான் பொய்யெல்லாம் சொல்லலங்க! கீழே நீங்களே பார்த்துக்கோங்க


காவலன்!

Cast:
Vijay, Asin, Rajkiran, Vadivelu
Direction: Siddique
Music: Vidyasagar
Production: C. Ramesh Babu

No. Weeks Completed: 6
No. Shows in Chennai over this weekend: 24
Average Theatre Occupancy over this weekend: 42%
Collection over this weekend in Chennai:Rs.208,560
Total collections in Chennai: Rs. 3.36 Crore

Verdict: Average



மங்காத்தா!

Cast: Ajith Kumar, Trisha, Arjun, Andrea Jeremiah, Lakshmi Rai, Premji, Anjali, Vaibhav

Direction: Venkat Prabhu
Music: Yuvan Shankar Raja
Production: Dayanidhi Azhagiri

No. Weeks Completed: 4
No. Shows in Chennai over this weekend: 75
Average Theatre Occupancy over this weekend: 50%
Collection over this weekend in Chennai: Rs. 838,680
Total collections in Chennai: Rs. 8.07 Crore

Verdict: Blockbuster


பொங்கலுக்கு வந்த காவலன் கிழிச்சுருச்சு, அது இதுனு சொன்னது எல்லாம் பொய்! காவலன் உண்மையிலேயே ஃப்ளாப்னு இப்போ வேலாயுதம் வந்ததும்தான் தெளிவாகத் தெரியுது!

சரி, உனக்கு என்ன பிரச்சினை? எனக்கு பிரச்சினையில்லை! விஜய், விஜய் அப்பா, அப்புறம் விஜய் ரசிகர்கள் எல்லாம் எப்படியாவது வேலாயுதத்தை பெரிய ஹிட்ட்டாக்க்கிப்புடனும்னு நாலுகால்ல நிக்கிறாங்க. வேலாயுதம் ஹிட்னு சொல்ல ரொம்ப கஷ்டப்பட்டு அதோடு சரிக்கு சரி நிக்கும் ஏழாம் அறிவை முந்திப்புடுச்சு, அப்புறம் கொஞ்ச நாள் முன்னால வந்த மங்காத்தாவை முந்திடுச்சுனு சொல்றதுக்கு பதிலா ப்ளாப்பாப்போன காவலனை கம்ப்பேர் பண்ணலாம் னு எனக்கு தோணுது. ஆனால், அப்படி செய்யனும்னா இப்போவாவது உண்மையை ஒத்துக்கொள்ளனும்! என்ன உண்மை? அதான் காவலனும் ஃப்ளாப் படம்தான் னு!

ஏழாம் அறிவு பயங்கரமாக எதிர்பார்க்கப்பட்டு, விகடன் தவிர (48/100) மற்ற விமர்சகர்கள் மத்தியில் பயங்கர அடிவாங்கியது உண்மைதான். ஆனால் என்ன காரணமோ படம் தோல்வினு சொல்ல முடியாத அளவுக்கு ரெண்டு வாரக் கலக்சன் சென்னையில் 4.58 கோடிகள்னு வந்து நிக்கிது. படம் எல்லா எடத்திலேயுமே நல்லாப் போகுதுனு வேற சொல்றாங்க.

ஆந்திராவிலும் ரா ஒன் /ஜி-1 கலக்சனைவிட இந்தப்படம் (7th sense) அதிகமாக வசூல் பண்ணியிருக்கு! மேலே உள்ள படத்தைப் பாருங்க!

இந்த விஜய் தொடர் ஒளறல் (வேலாயுதம் கிழிச்சிடுச்சுனு) தாங்கமுடியாமல் சூர்யா தெளிவாக ஒரு ப்ரஸ் மீட் கொடுத்து இருக்காரு!

Suriya met the press in a jubilant and happy mood to celebrate the success of his 7 Aum Arivu and to thank the media for their support.

The actor said, “At the start of my career, I could never imagine that any film of mine would get this kind of a response as 7 Aum Arivu has got and that any of my films could do such business. The film has had a tremendous response. Many viewers who haven’t gone to the theatres in a long time have come to see this film, as per what some exhibitors have told me. A very different crowd has come to see this film at many places. Both in India and overseas the response has been terrific. I want to thank the media for their role in supporting me through my career and also pointing out any flaws which made me introspect.”

He agreed that the film had got a mixed response from the media in their reviews but added that the exhibitors, producer and director are very happy with the results. “Singham was my biggest commercial success till now but this film’s collections have surpassed that in the first ten days itself,” he said.



இப்போ சொல்லுங்க நடிப்பிலும் சரி, நாகரிகத்திலும் சரி, நடத்தையிலும் சரி, விஜய்க்கு சூர்யா எம்புட்டோ மேல்தானே?

இவ்வளவு தெளிவா விளக்கியதுக்கப்புறமும் இனிமேல் எவனாவது காவலன் ஹிட் னு சொல்லிக்கிட்டு திரிஞ்சா அப்புறம் நல்லாயிருக்காது சொல்லிப்புட்டேன் ஆமா!

Friday, November 4, 2011

சாதனைகள் படைத்த வேலாயுதம்?! உண்மைகள்!

இப்போ எல்லாம் ஒரு படம் வெற்றியா தோல்வியானு கண்டுபிடிக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டமாப் போயிடுச்சு! வெளி வந்தபோது வெற்றினு சொன்னபடமெல்லாம் பின்னால நஷ்டமடைந்ததா வேற சொல்றாங்க! பொதுவாக எல்லாப்படங்களுமே நாலு வாரம்தான் ஒழுங்கா ஓடுது. இதுல முதல் மூனு நாள்யே 50 கோடி எடுத்துட்டார்கள் னு சொல்றாங்க! அப்புறம் இந்த "சக்ஸஸ் மீட்" னு ஒண்ணை வேணும்னே ஆரம்பிச்சு படத்தை வெற்றிப்பாதையில் செலுத்த முயல்றாங்க! இந்த சக்ஸஸ் மீட்டே வியாபார யுக்திதான்! ஏன்ப்பா வெற்றி யடைந்ததை 25 நாளுக்கப்புறம் கொண்டாடக்கூடாதா??

சரி, வேலாயுதத்தைப் பார்ப்போம்! போன பொங்கலுக்கு அப்புறம் விஜய் படம் தீபாவளிக்குத்தான் வந்திருக்கு! பெரிய இடைவெளிக்கு அப்புறம்!

காவலன் வெளியிடப்பிரச்சினைகள், தியேட்டர்கள் கெடைக்கலை, திமுக ஆட்சி விஜயைக் கவுத்துறாங்கனு சொல்லிச் சொல்லி எழவைக்கூட்டினாங்க. அப்புறம் காவலன் தடைகளைமீறி பெரிய வெற்றியடைந்துவிட்டதாக ஊர் உலகத்துல உள்ள விஜய் ரசிகர்கள் எல்லாம்- அண்ணே சந்திரசேகராவையும் சேர்த்துத்தான் - சொன்னாங்க! ஆக விஜய் படம் காவலன் கவுத்தப்பட்டதால் பாக்ஸ் ஆஃபிஸில் முதல் இடத்தை பெற முடியாமல் ரெண்டாவதுக்கு போனதுனு நம்பினோம்! அதுக்கப்புறம் அது முதல் இடத்தை அடையவே இல்லை. சிறுத்தைதான் #1 ல கடைசிவரை இருந்தது. அது தான் காவலனை விட வெற்றி பெற்றது!

சரி, இப்போ அதிமுக ஆட்சி வந்துருச்சு. 10 மாதங்களுக்கு அப்புறம் நம்ம விஜய் படம் அம்மா ஆட்சியில், அம்மா ஆசிகளுடன் வெளிய வருது! இப்போவாவது #1 இடத்தைச் சென்னையில் பெற்றதா? அதுவும் இல்லை! ஏழாம் அறிவைக் கொஞ்சம் முன்னால தள்ளி, விளம்பரம் பண்ணி அப்படி இப்படினு ஏழாம் அறிவுதான் #1 ஆகிப்போச்சு!

ஆந்திராவில் ஏழாம் அறிவு ஒரு 200 தியேட்டர் போல ரிலீஸ் பண்ணி இருப்பாங்க. ஹைதராபாத்லயே ஒரு 50 தியேட்டர்ல வெளி வந்தது. எப்படி கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும் ஒரு 20 கோடியைத் தேத்திடும். வேலாயுதம் இந்த இருபது கோடியைப் பெறவே முடியாது!

சரி, யு கே ல எப்படி?

ரா ஒன் க்கு சுமார் 908,768 ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ், வேலாயுதம் 66,842 பவுண்ட்ஸ் அப்புறம் ஏழாம் அறிவு 55,600 பவுண்ட்ஸ்னு வந்து நிக்கிது! ரா ஒண்ணு எங்கேயோ போயிடுச்சு!

வேலாயுதம் கலக்சன் காவலன் கலக்சனைவிட கொஞ்சம் அதிகம்!

ஏழாம் அறிவு கலக்சன் காவலனைவிட கொஞ்சம் அதிகம். வேலாயுதத்தைவிட கொஞ்சம் கம்மி!

6 Ra.One UK/Ind/USA \£908,768 Eros - 1 94 \£9,668 \£908,768


22 Kaavalan Ind £49,475 Ayngaran 0 1 17 £2,910 £49,475



23 7 Aum Arivu Ind \£55,602 B4U - 1 19 \£2,926 \£55,602


21 Velayutham Ind \£66,843 Ayngaran - 1 17 \£3,932 \£66,843


ஆனால்
யு கே னு எடுத்துக்கிட்டா அஜீத்துடைய "மங்காத்தா" தான் காவலன், வேலாயுதத்தை எல்லாம் விட கலக்சனில் ரொம்ப அதிகம்!


15 Mankatha Ind \£110,383 Ayngaran - 1 16 \£6,899 \£110,383

மலேசியாவில் எப்படி?

இங்கேயும் அப்படி ஒண்ணும் வேலாயுதம் எழாம அறிவைவிட ரொம்ப முன்னால் போனதாகத் தெரியலை! ஓப்பெனிங் ரெண்டு படத்துக்கும் நல்லாத்தான் இருந்ததாக சொல்றாங்க.


அமெரிக்காவில் எப்படி?

இங்கே ஏழாம் அறிவுதான் அதிகாம திரையிடப்பட்டது. இங்கேயும் வேலாயுதம் அப்படி ஒண்ணும் அதிகம் கலக்ட் பண்ணியிருக்க முடியாது. ரெண்டாவது வாரம் கலக்ஷன் என்பது அமெரிக்கா, யு கே ல எல்லாம் அர்த்தமற்றது. மலேசியால என்ன நடக்குதுனு பார்ப்போம்.

இதுவரை வேலாயுதம் எதையும் பெருசா சாதிக்கவில்லை! இனிமேல் எப்படினு பார்ப்போம்! :)

Wednesday, November 2, 2011

தங்கம் பதுக்க ஒரு விபரீத வழி!

உலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க!

தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்வதும் இந்தியாதான். தங்கம் தங்கம்னு அலைபவர்கள், 100 சவரன், 200 சவரன்னு நகைபோட்டு திருமணம் செய்பவர்களும் இந்தியர்கள்தான். இன்னைக்கும் தங்கத்தில் "இன்வெஸ்ட்" பண்ணுறதுதான் புத்திசாலித்தனம்னு நம்புறவங்களும் நம்ம மக்கள்தான்.





ஆமா தங்கத்துக்கு ஏன் இம்பூட்டு மதிப்பு?

அது எப்போவுமே பிரகாஷமாக இருப்பதுதான்னு சொல்லலாம். அது ஏன்? It does not get oxidized easily like Iron or other metals னு சொல்லலாம். அதைவிட முக்கியக்காரணம் என்னனா அதனுடைய Natural abundance ரொம்ப கம்மி என்பதே! அப்படினா? உலகமே ஒரு நூற்றி பதினெட்டுத் தனிமங்களால் ஆனதுதான். ஒவ்வொரு தனிமமும் ஒரு குறிப்பிட்ட அளவுதான் இயற்கையில் கிடைக்கிறது. ஒரு தனிமத்தை இன்னொரு தனிம்ம்மா மாத்துவதெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம்.

குதற்கமா ஒரு கேள்வி!

சப்போஸ் திடீர்னு தங்கம் டன் கணக்கில் கெடைக்குதுனா?? தங்கத்திற்கு மதிப்புக் குறைந்துவிடும். அது குறைய கிடைப்பதால்தான் அதற்கு மதிப்பு! டன் கணக்கில் எங்கேயோ கெடச்சதுனா தங்கம் வச்சிருக்கவன்லாம் தலையில் துண்டைப் போட வேண்டியதுதான். அதை வச்சு வேற எதுவும் பெருசா பண்ண முடியாது!

உலகமே 118 தனிமங்களால் ஆனதா? ஆமாம்! உங்களையும் என்னையும் சேர்த்துதான். கடவுளும் இதில் அடங்குவாளா/வாரா னு கேக்காதீங்க? அடங்கனும்! நம்ம உடம்பெல்லாம், நம்ம சாப்பிடும் உணவு, உடுத்தும் உடை எல்லாமே இந்த 118 தனிமங்களால் ஆனதுதான். அதுல ஒரு தனிமம்தான் இந்தத் தங்கம் என்கிற உலோகம்!




Au தான் இந்த உலோகத்தினுடைய "சிம்பல்"!

அணு எண்: 79

அப்படினா என்னங்க? அதெல்லாம் எதுக்கு? ஃப்ரீயா விடுங்க! அது ஒண்ணும் இப்போ முக்கியம் இல்லை!

விஷத்தங்கம்:

தங்கம் ஒரு விஷத்தன்மை இல்லாத உலோகம்தான். அதனாலதான் தங்கப்ஸ்பம்லாம் சாப்பிடுறாங்களானு தெரியலை. ஆனால் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதான்.

தங்கத்தை விஷமாக்க முடியுமா? ஏன் முடியாது? Au(CN)3 என்பது தங்கத்தின் விஷ வடிவம். தங்கத்தை ஒரு சயனோ காம்பவுண்டாக மாற்றி (அதாவது கோல்ட் சையனைட்) விட்டால் இதனுடைய நிறம் வெள்ளை. கிலோ கணக்கில் நீங்க வச்சிருந்தாலும் அது தங்கமாக யாருக்கும் தெரியாது! அதாவது கிலோகணக்கில் கோல்ட் சையனைடா நீங்க பதுக்கி வைத்தால் அதை தங்கம்னு கண்டுபிடிப்பது கஷ்டம்.

வேணும்கிற போது சையனைடை கழட்டிவிட்டுட்டு தங்கமா மாத்திக்க வேண்டியதுதான்!

அவ்வளவு ஈஸியா பண்ணிட முடியுமா? முடியலைனா என்னிடம் கொடுத்துருங்க! உங்களுக்கு எதுக்கு இந்த விஷம், விஷப்பரீட்சை எல்லாம்? :)