Wednesday, November 2, 2011

தங்கம் பதுக்க ஒரு விபரீத வழி!

உலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க!

தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்வதும் இந்தியாதான். தங்கம் தங்கம்னு அலைபவர்கள், 100 சவரன், 200 சவரன்னு நகைபோட்டு திருமணம் செய்பவர்களும் இந்தியர்கள்தான். இன்னைக்கும் தங்கத்தில் "இன்வெஸ்ட்" பண்ணுறதுதான் புத்திசாலித்தனம்னு நம்புறவங்களும் நம்ம மக்கள்தான்.





ஆமா தங்கத்துக்கு ஏன் இம்பூட்டு மதிப்பு?

அது எப்போவுமே பிரகாஷமாக இருப்பதுதான்னு சொல்லலாம். அது ஏன்? It does not get oxidized easily like Iron or other metals னு சொல்லலாம். அதைவிட முக்கியக்காரணம் என்னனா அதனுடைய Natural abundance ரொம்ப கம்மி என்பதே! அப்படினா? உலகமே ஒரு நூற்றி பதினெட்டுத் தனிமங்களால் ஆனதுதான். ஒவ்வொரு தனிமமும் ஒரு குறிப்பிட்ட அளவுதான் இயற்கையில் கிடைக்கிறது. ஒரு தனிமத்தை இன்னொரு தனிம்ம்மா மாத்துவதெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம்.

குதற்கமா ஒரு கேள்வி!

சப்போஸ் திடீர்னு தங்கம் டன் கணக்கில் கெடைக்குதுனா?? தங்கத்திற்கு மதிப்புக் குறைந்துவிடும். அது குறைய கிடைப்பதால்தான் அதற்கு மதிப்பு! டன் கணக்கில் எங்கேயோ கெடச்சதுனா தங்கம் வச்சிருக்கவன்லாம் தலையில் துண்டைப் போட வேண்டியதுதான். அதை வச்சு வேற எதுவும் பெருசா பண்ண முடியாது!

உலகமே 118 தனிமங்களால் ஆனதா? ஆமாம்! உங்களையும் என்னையும் சேர்த்துதான். கடவுளும் இதில் அடங்குவாளா/வாரா னு கேக்காதீங்க? அடங்கனும்! நம்ம உடம்பெல்லாம், நம்ம சாப்பிடும் உணவு, உடுத்தும் உடை எல்லாமே இந்த 118 தனிமங்களால் ஆனதுதான். அதுல ஒரு தனிமம்தான் இந்தத் தங்கம் என்கிற உலோகம்!




Au தான் இந்த உலோகத்தினுடைய "சிம்பல்"!

அணு எண்: 79

அப்படினா என்னங்க? அதெல்லாம் எதுக்கு? ஃப்ரீயா விடுங்க! அது ஒண்ணும் இப்போ முக்கியம் இல்லை!

விஷத்தங்கம்:

தங்கம் ஒரு விஷத்தன்மை இல்லாத உலோகம்தான். அதனாலதான் தங்கப்ஸ்பம்லாம் சாப்பிடுறாங்களானு தெரியலை. ஆனால் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதான்.

தங்கத்தை விஷமாக்க முடியுமா? ஏன் முடியாது? Au(CN)3 என்பது தங்கத்தின் விஷ வடிவம். தங்கத்தை ஒரு சயனோ காம்பவுண்டாக மாற்றி (அதாவது கோல்ட் சையனைட்) விட்டால் இதனுடைய நிறம் வெள்ளை. கிலோ கணக்கில் நீங்க வச்சிருந்தாலும் அது தங்கமாக யாருக்கும் தெரியாது! அதாவது கிலோகணக்கில் கோல்ட் சையனைடா நீங்க பதுக்கி வைத்தால் அதை தங்கம்னு கண்டுபிடிப்பது கஷ்டம்.

வேணும்கிற போது சையனைடை கழட்டிவிட்டுட்டு தங்கமா மாத்திக்க வேண்டியதுதான்!

அவ்வளவு ஈஸியா பண்ணிட முடியுமா? முடியலைனா என்னிடம் கொடுத்துருங்க! உங்களுக்கு எதுக்கு இந்த விஷம், விஷப்பரீட்சை எல்லாம்? :)

4 comments:

ILA (a) இளா said...

நீங்கதான் வவ்வாலோ?

வருண் said...

இல்லங்க, அது நான் இல்லை! :) யாருனு எனக்கும் தெரியலை, இளா! :)

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு:)!

வவ்வால் said...

@இளா,

//நீங்கதான் வவ்வாலோ?//

இப்படி கேட்க எப்படி மனசு வந்துச்சு ராசா? இது போல பிழையான பதிவெல்லாம் நான் போட மாட்டேன்னு தெரிய வேண்டாமா! இன்னிக்கு நைட் ரெண்டு பெக் எட்ச்ராவா போடனும் போல இருக்கு :-((

ஏதோ, தங்கம், தாமிரம்னு தலைப்பு பார்த்து வந்தேன்(எல்லாம் கம்மோடிடி டிரேட் பண்ணதால வந்த வினை)