Tuesday, April 3, 2012

பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் பற்றி தவறான புரிதல்கள்!

நண்பர் கிரி அவரோட கொசுறு செய்திகளில் சிங்கப்பூர்ல இருந்து வலைதளங்களில் எழுதும்போது கவனமாக இருக்கனும்னு சொல்லியிருக்காரு. சிங்கப்பூரில் ஒரு கல்லூரி மாணவன் எதையோ வரம்பு மீறி எழுதி மாட்டிக்கிட்டான் என்று தொடுப்புக் கொடுத்து  கவனமாக இருங்கனு  ஒரு நல்ல விழிப்புணர்வுப் பதிவு எழுதியிருக்காரு.

எழுத்துச் சுதந்திரம், கருத்துச்சுதந்திரம் எல்லாம் நாட்டுக்கு நாடு வேறுபடுவதென்னவோ உண்மைதான். சிங்கப்பூரில் உள்ள சுதந்திரத்தை விட அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் "பேச்சுச் சுதந்திரம்" அதிகம்தான். அமரிக்காவாக இருந்தாலும் அதற்கும் ஒரு லிமிட்(வரம்பு)  இருக்கு. இந்த லிமிட் தெரியாமலோ இல்லை உணமையிலேயோ வரம்பு மீறி எழுதும்போதும் ஒரு சிலர் பெரிய வம்பில் மாட்டிக்கொள்கிறார்கள்.

அமெரிக்காவிற்கு வந்து, அமெரிக்காவில் மேற்படிப்பு படிச்சு, பிறகு நல்ல வேலையில் சேர்ந்து கோடி கோடியாக சம்பாரித்துக்கொண்டு இந்த நாட்டில் உள்ள எல்லாவிதமான வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு அதே சமயத்தில் அமெரிக்காவுக்கு எந்தவித நன்றியுமில்லாமல் வாழ்ற இந்தியர்களை அன்றாட வாழ்வில் நெறையவே பார்க்கலாம். இதிலே ஒரு சில பார்ப்பானுகள் பேசுற வியாக்யாணம் இருக்கே, யப்பா!!

இங்கே ஒரு கேஸ்!  இவரு பேரு விக்ரம் பத்தி!

 



அமெரிக்காவில் படிப்பதற்காக பர்டியூ யுனிவேர்சிட்டில வந்து இருந்து கொண்டு  அமெரிக்க ப்ரெசிடெண்ட் ஜார்ஜ் புஷ் பற்றி வரம்பு மீறி தாறுமாறாக வலைதளங்களில் எழுதி பிரச்சாரம் செய்ததால் இக்கட்டில் மாட்டிக்கொண்டார் என்று சொல்லப் படுகிறது.

உண்மையிலேயே இந்தாளு ஒரு விஷமியா அல்லது "அமெரிக்காவில் இல்லாத கருத்துச் சுதந்திரமா?" னு தன் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை தவறாக புரிந்துகொண்ட ஒரு மண்டா என்னனு எனக்குத் தெரியவில்லை!

எனிவே, எப்படி இருந்தாலும்  இவனைப் பிடிச்சு பல வருடங்கள் உள்ளே போட்டுட்டாங்க. யாரையும் கொலை பண்ணுவேன் அது இதுனு  மிரட்டல், மற்றும் அதுபோல கருத்தை வலைதளங்களில் வெளியிடுவதெல்லாம்  அமெரிக்காவிலும் "ஃப்ரீடம் ஆஃப் எக்ஸ்ப்ரெஷன்" கெடையாது! பிடிச்சு உள்ளே போட்டுடுவாங்கப்பூ!

இந்த ப(பு)த்தி மாரி ஆட்கள் எல்லாம்  என்னத்துக்கு யு எஸ் வர்ரானுகனு தெரியலை. இவன் அப்பாவும் (சுப்பாராவ் பத்தி) ஒரு பெரிய மேதை போலயிருக்கு! இந்தியாவில் ஒரு சில பேராசிரியர்கள் தங்கள் மாணவர்களை படிச்சுட்டு இந்தியாவிலேயே இருந்து நாட்டுக்கு உதவுனு ஓயாமல் சொல்லிப்புட்டு தன் மகள் மகனை மட்டும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதைப் பார்த்து இருக்கேன். இந்தாளும் (சுப்பாராவ் பத்தி) அப்படித்தான் தன் மகனையும் ஏற்றுமதி செஞ்சானோ என்னவோ.

 நீ அமெரிக்காவில் பொறக்கலை, உனக்கு அமெரிக்கா பிடிக்கலை, அந்த நாட்டோட பாலிஸி பிடிக்கலை, அமெரிக்க ப்ரெசிடெண்ட்டை பிடிக்கலை எல்லாம் சரி, அப்படியிருக்கும்போது என்ன மயித்துக்கு விசாக்காகப்போயி நின்னு  கெஞ்சி கூத்தாடி  இங்கே அமெரிக்கா வந்து குப்பை கொட்டனும்னு நெனைக்கிற? சரி கடல் கடந்து வந்து இந்த நாட்டிலேயே இருந்துக்கிட்டு படிச்சுக்கிட்டு இந்த நாட்டுக்கு எதிரா என்னத்துக்குப் பிரச்சாரம்?  சரியான அறிவுகெட்ட மரை கழண்ட ஜென்மங்கள்! இவங்கல்லாம் இந்தியாவிலேயே இல்லைனா எங்கேயாவது மிடில் ஈஸ்ட்ல போயி பெருசா படிச்சுக் கிழிக்க வேண்டியதுதானே?

4 comments:

கிரி said...

நம்ம ஆளுங்க கிட்ட இது தாங்க பிரச்சனையே! பிழைக்க வந்த ஊர்ல அவர்களையே என்ன சங்கதி என்று கேட்பார்கள். சிங்கப்பூரில் இந்த "வடா" இந்தியர்கள் செய்கிற அட்டகாசம் இருக்கே சொல்லி மாளாது.

//அமெரிக்காவிற்கு வந்து, அமெரிக்காவில் மேற்படிப்பு படிச்சு, பிறகு நல்ல வேலையில் சேர்ந்து கோடி கோடியாக சம்பாரித்துக்கொண்டு இந்த நாட்டில் உள்ள எல்லாவிதமான வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு அதே சமயத்தில் அமெரிக்காவுக்கு எந்தவித நன்றியுமில்லாமல் வாழ்ற இந்தியர்களை அன்றாட வாழ்வில் நெறையவே பார்க்கலாம். //

இதை நானும் வழி மொழிகிறேன். நன்றி இல்லாமல் கூட இருக்கலாம் பரவாயில்லை அவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருந்தால் போதும். நம்ம ஆளுங்க இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பார்கள் அது தான் பிரச்சனை.

நம்மால் அவர்களும் பெரியளவில் பயன் பெறுகிறார்கள் இல்லை என்று சொல்ல முடியாது அதனால் தான் பலர் அமைதியாக இருக்கிறார்கள்.

VANJOOR said...

.

அவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள்

.
.

Jayadev Das said...

அங்கே தேர்தலில் நிற்க நமக்கு இட ஒதுக்கீடு வேணும்னு கேட்கலாம்னு இருக்காங்களாமுல்ல .....????

வருண் said...

கருத்துக்கு நன்றி, கிரி!

-----------------

வாங்க வாஞ்ஜூர்!

இது வேறயா! :(

----------------

***Jayadev Das said...

அங்கே தேர்தலில் நிற்க நமக்கு இட ஒதுக்கீடு வேணும்னு கேட்கலாம்னு இருக்காங்களாமுல்ல .....????***

தெரியலையேங்க. :-)