பதிவுலகில் ஒரு சிலர் தங்கள் கருத்தைப் பரிமாறிகொள்வதுடன் சரி, தன் முகவரி, தன் புகைப்படம், தன் தொழில், தன் சாதி, தன் மதம் போன்றவற்றை சொல்லாமலே காலத்தைக் கடத்துகின்றனர். இது தனிப்பட்ட ஒருவருடைய விருப்பம். அதை மதிக்கத் தெரியாத இன்றைய பதிவுலக ஜாம்பவான்கள் சிலர், இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம் முகமூடிப் பதிவர்கள். இது வெளிக்கு! மனதுக்குள் நினைப்பது "இவனுக எல்லாம் எதுக்கு பதிவுலகில் பதிவெழுதுகிறானுக, முதுகெலும்பில்லாதவனுக" என்பது.
இங்கிதம் தெரிந்த ஒரு சிலர், இது அவர்களின் சொந்தப் பிரச்சினை, இதை கூகுலே அனுமதிக்கிறது. இது சட்டவிரோதமானதல்ல! என்றெல்லாம் பல முறை எடுத்துச் சொன்னாலும் ஒரு சிலர் இதை விடுவதே இல்லை. மறுபடியும் மறுபடியும், ஏன் இப்படி இருக்காங்க?னு மூனு மாத்திற்கு ஒரு முறை இவர்களை மிகுந்த "அக்கறை"யுடன் விமர்சிக்காமல் விடுவதில்லை! இந்த முகமூடிப் பதிவர்கள் இவர்கள் மனநிலையை ரொம்பதான் பாதிக்க வச்சுட்டாங்கப்பா.
உங்களுக்கு என்ன பிரச்சினை? பதிவர் கூட்டமா? முகம் காட்ட விருப்பப்பட்டவங்க ஒண்ணா சேருங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுங்க. தமிழை இன்னும் மேலே கொண்டு போங்க! உங்கள் தமிழ்ப் பணியை எல்லாரும் மெச்சி விருது கொடுக்கட்டும். அது ஏன் சும்மா முகம் காட்ட விரும்பாதவர்களும் எல்லாரும் அவங்க முகத்தை காட்டியே ஆகணும்னு திரும்பத் திரும்ப அடம் பிடிக்கிறீங்கனு விளங்கவில்லை!
முக்காடு போட்டு இருக்கும் ஒரு இஸ்லாமியப் பெண்ணை, "முகத்தைக் காட்டினால் என்ன?" என்பீர்களா? ஏன் அப்படி செய்வதில்லை? அது அவருடைய விருப்பம். அவரை முகம் காட்டச் சொல்லி விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை! என்பதை உணர்ந்துதானே?
இந்த உலகில் பலதரப்பட்ட மனிதர்கள் பிறந்து வாழத்தான் செய்றாங்க. அவங்க எல்லாம் தமிழ் தெரிஞ்சவங்களா இருந்தால் அவங்க எல்லாம் உங்க உறவு என்று யாரும் சொல்லிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி எதுவும் அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை!
முகம் தெரிந்த பதிவர்கள்தான் உங்களுக்குப் பிடிக்குமா? அவங்க மேலேதான் உங்களுக்கு மரியாதையா? அவர்களோட மட்டும் உறவாடுங்க. உங்களுக்குப் பிடிக்காத முகமூடிப் பதிவர்கள் பதிவுகளை புறக்கணியுங்கள்! முகமூடி அணிந்தவர் உங்க தளத்தில் கருத்துச் சொல்ல வந்தால் உங்க தரத்துக்கு அவர்கள் தரம் குறைந்த தென்றால், அவர்கள் பின்னூட்டங்களை ஒரு போதும் வெளியிடாதீங்க! அவர்களை அறவே புறக்கணியுங்கள்! இதெல்லாம் உங்க உரிமைகள்!
அதை விட்டுப்புட்டு எதுக்கெடுத்தாலும் முகமூடிப் பதிவர்கள் ஏன் தங்கள் அழகு முகத்தை காட்ட மாட்டேன்றாங்க? அவங்க பொறந்த ஊர் என்ன? என்ன சாதி? என்ன மதம்? அவர்களுக்கு என்ன சம்பளம்? என்கிற கவலையெல்லாம் உங்களுக்கு எதற்கு?
"கார்பன்"க்கு வாலென்ஸி என்ன? ஏன் ரெண்டு இல்லை? நாலு?
டையமண்ட் ஏன் கடினமானதாக இருக்கிறது?
தங்கம் மட்டும் ஏன் மஞ்சளாக மிளிருகிறது?
வைரஸுக்கு உயிரில்லையாமே? நெஜம்மாவா?
என்கிற கேள்விகளுக்கெல்லாம் இந்த வெர்ச்சுவல் உலகில் முகம் காட்டாத, முகம் தெரியாத, தமிழ் தெரியாத ஒருவர் வந்து வலையுலகில் சரியான பதில் சொல்வதில்லையா? அந்த பதில் உங்களுக்கு உபயோகம் ஆவதில்லையா? முகம் தெரிந்தவர் "தவறுதலான" பதிலாக சொன்னாலும் அந்த பதிலைத்தான் நான் எடுத்துக்குவேன்னு அடம் பிடிப்பீர்களா?
நீங்க நல்லா வாழுங்கள்- உங்கள் இஷ்டப்படி!
மற்றவர்களை வாழவிடுங்கள்- அவர்கள் விருப்பப்படி!
6 comments:
அனானியாகப் பின்னூட்டம் இடுவோர்தான் முகமூடிப் பதிவர்கள் என்று நினைக்கிறேன்
உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன்! பதிவுலகில் முகம் காட்டுவதும் மறுப்பதும் அவரவர் தனிப்பட்ட விஷயம்! இதில் கட்டாயப்படுத்துவதில் அர்த்தம் இல்லை! தனிப்பட்ட உரிமைகளில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.
அங்கேயே பலரும் அப்படி குறிப்பிட்டது சரியில்லை என்றும், அப்படி எழுதவேண்டிய சூழல் எதனால் எல்லாம் ஏற்படுகிறது என்றும் விரிவாக எதிர்வாதம் வைத்திருந்தனரே வருண்!! அதுவும் அன்றி அவர் கருத்து எல்லோர் கருத்தும் ஆகிவிட்டது. அவர் உங்கள் நண்பரும் அல்லவே!! லீவ் இட்!! அப்புறம் இவ்ளோ கோபமான பதிவையும் சரியான வார்த்தைகளைக் கொண்டு தெளிவாக கூறியதற்காக வருணுக்கு ஒரு பொக்கே பார்சல்:)
எனக்கு அப்படி ஒரு தேவை வந்ததில்லை. சரியோ பிழையோ சொந்தப் பெயர், சொல்லடியும் பட்டுள்ளேன். ஆனால் நான் மாறவில்லை, ஒழிக்கவுமில்லை.
நல்லபடி முகமூடியில் சொல்லும் போது ஏற்றுக்கொள்ளும் நாம் பிடிக்காமல் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென நினைப்பேன். முகமூடிகளின் கருத்தே சரியானதாகவும் இருக்கலாம்.
அவர்களை ஒதுக்கக் கூடிய வழிவகையிருந்தும், கட்டியழவேண்டுமெனும் கட்டாயமா?
உங்கள் பாணியில் உங்கள் கருத்து - எனக்குப் பிடித்தது.
நானும் இந்த பதிவோடு 100% ஒத்துப்போகிறேன் சார்!
உங்கள் கருத்தை நான் முழுவதும் ஆமோதிக்கிறேன். எனது நிஜப்பெயர் வேறு. ஆனால் வலையுலகத்தில் நான் கவிப்ரியன். ஆனால் சில இடங்களில் முழு விபரத்தையும் கேட்டால் என்ன செய்வது? எனக்கு விருப்பமில்லை என்றால், அதற்கு ஏன் இப்படிப்பட்ட பட்டப் பெயர்கள்?
Post a Comment