Wednesday, April 8, 2015

ஏமாற்றுவது என் தொழில் ஐயா!

இவன் ஃப்ராடு! இவனை நம்பிடாதே! பேசுறதெல்லாம் பொய்! கூசாமல் எப்படி இப்படிப் பொய் சொல்றான் பாரு? என்கிற வசனங்கள் எல்லாம் நம் வாழ்க்கையில் மற்றவர்களைப் பார்த்து, அவர்கள் புறம் நின்று  நாம் பேசுவதுதான். அதாவது பொய் பேசுவது இழிவான செயல் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

குறைந்தது ஆறு அறிவாவது வேண்டும், இந்தப் பொய் பேசும் கலையில் தேர்ச்சி பெறுவதற்கு! ஆமாம் ஐந்தறிவு உள்ள விலங்குகளுக்கு பொய் பேசத் தெரியாது. ஆறறிவு உள்ள மனிதனுக்கு மட்டும் இத்திறன் உண்டு. வியாபாரி பொய் சொல்லுவார்னு தெரியும். ஆனால் அவர் எந்தளவுக்குப் பொய்சொல்றார்னு தெரியாது.

இரண்டு நாள் முன்னால் என் பி ஆர் ல பிரபலம் ஒருவரை நேர்முகத் தேர்வு செய்தார்கள். அந்த "விருந்தாளி" சொன்னார் என் தொழிலே பொய் சொல்லுவது மக்களை ஏமாற்றுவதும்தான் என்று சிலாகித்தார்.

இவர் யாரென்று கவனித்தால்..

இவர் ஒரு வக்கீல் இல்லை!

வியாபாரி அல்ல!

அரசியல்வாதியும் அல்ல!

திருடன் இல்லை!

சாமியார் இல்லை!

மிகப் பெரிய அயோக்கியனும் கிடையாது.

காதலன் காதலியிடம் பேசும் வசனமும் இது இல்லை!

யார் இவர்?

யூகிக்க முடிந்ததா?


இவர் ஒரு மாஜிக் வித்வான்!! மேஜிக் என்பதே பொய்யை ஜோடிச்சு, உங்கள் கண்களைக் கட்டி ஏமாற்றுவதுதான் என்றார். மெஜிசியனிடம் ஏமாறுவதை நாம் யாரும் அவமானமாக நினைப்பதில்லை! ஏமாறுவதில்தானே இன்பமே? நாம் ஏமாற்றப்படுகிறோம் என்றே பலருக்குத் தெரியாது. அதானே மேஜிக்?! பொய் சொல்வது தொழில் என்பதால் அவரைச் சட்டத்தின் முன் நிறுத்த முடியாது. ஆமாம் ஏமாற்றுவது ஒரு கலைத் தொழில்தான், மேஜிக்கைப் பொறுத்தவரையில்! :)

**********************

14 comments:

Baskaran Siva said...

வருண், முதல் பாராவை படிச்சுடு வேற என்னாமோ ஏதோனு நினைத்தேன்! :)

-ஆரூர் பாஸ்கர்

saamaaniyan saam said...

வருண்...

பெரும்பாலும் சினிமா பாடல் வரிகளை என் பின்னூட்டத்தில் தவிர்க்க முயற்சிப்பேன்... ஆனா...

" கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்.... "

...மாயா மாயா எல்லாம் மாயா...

அட நீங்க ரஜினி ரசிகராச்சே...

வாழ்க்கையில் ஏமாறலாம் ஆனால் வாழ்வே ஏமாற்றமாகிவிடக்கூடாது !

நன்றி
சாமானியன்

Iniya said...

வாழ்க்கையில் ஏமாறலாம் ஆனால் வாழ்வே ஏமாற்றமாகிவிடக்கூடாது !
உண்மை தான் வருண்.
உண்மை பேசுவது ரொம்ப சுலபம் வருண் பொய் சொல்வது தான் கஷ்டம், அது ஒரு கலை தான். எல்லோராலும் முடியாது. பொய்யை சிலர் உண்மை போல சொல்லிட்டு போய் விடுவாங்க சிம்பிள் ஆக.சிலர் பொய் சொல்லு முன்னரே பொய் சொல்லப் போறாங்க என்று தெரிந்து விடும்.ஹா ஹா ....வேறு யாரு நான் தான். நடுங்கியே காட்டிக் கொடுத்திடுவோம் இல்ல.

வருண் said...

***Baskaran Siva said...

வருண், முதல் பாராவை படிச்சுடு வேற என்னாமோ ஏதோனு நினைத்தேன்! :)

-ஆரூர் பாஸ்கர்***

வாங்க பாஸ்கரன்! நல்லவேளை முழுசாப் படிச்சீங்க! இல்லைனா ஒரு தவறான முடிவுக்கு வந்திருப்பீங்க, போல! :)))

வருண் said...

*** saamaaniyan saam said...

வருண்...

பெரும்பாலும் சினிமா பாடல் வரிகளை என் பின்னூட்டத்தில் தவிர்க்க முயற்சிப்பேன்... ஆனா...

" கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்.... "

...மாயா மாயா எல்லாம் மாயா...

அட நீங்க ரஜினி ரசிகராச்சே...

வாழ்க்கையில் ஏமாறலாம் ஆனால் வாழ்வே ஏமாற்றமாகிவிடக்கூடாது !

நன்றி
சாமானியன்***

எனக்காக உங்களுக்குப் பிடிக்காத ரசினி வசனம்லாம் சொல்றீங்களே சாம்!! உங்களுக்குப் பெரிய மனசுதான். :))

வருண் said...

***சிலர் பொய் சொல்லு முன்னரே பொய் சொல்லப் போறாங்க என்று தெரிந்து விடும்.ஹா ஹா ....வேறு யாரு நான் தான். நடுங்கியே காட்டிக் கொடுத்திடுவோம் இல்ல. ***

எப்படியோ என்னை சிரிக்க வச்சுட்டீங்க!!

நாந்தான் ரொம்ப அப்பாவினு நினைத்தேன், நீங்க என்னைவிட மோசமா (அப்பாவியா இருக்கீங்களே), இனியா! :))

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான்...

saamaaniyan saam said...

வருண்...

ஒரு சின்ன correction ! எனக்கு ரஜினியை பிடிக்காது என யார் சொன்னது.... ?! நடிகர்களை சர்வலோக நிவாரணிகளாய் கொண்டாடும் கண்மூடித்தனமான போக்கு தான் நான் வருந்துவது. ஆனால் கவணித்துபார்த்தால் அவர்களே விரும்பாத அந்த ஒளிவட்டத்தை அவர்கள் தலையில் கட்டுவதில் நமது ஊடகங்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது !

உண்மையையை சொல்லவேண்டுமானால் எனக்கு பிடிக்காதவர்கள் என யாருமே கிடையாது வருண் ! ஒரு நடிகராய் ரஜினிகாந்த் கொண்ட இடம் மிகப்பெரியது. அது அவரது உழைப்பினால் அவருக்கு கிடைத்த இடம்.

நன்றி
சாமானியன்

G.M Balasubramaniam said...

மெஜிஷியன் பொய் எங்கே சொல்கிறார். அவர் சொல்வதை நடத்திக் காட்டுகிறாரே. நாம்தான் தவறாக நினைக்கிறோம்

Nirmala said...

அவர்களிடம் ஏமார்ந்தாலும் ஒரு இன்பம் இருக்க தானே செய்கிறது !..... நாம் அதை விரும்பி தான் ரசிக்கிறோம் !.... - chudachuda.com

When it is high time said...

That comes under optical illusion, which comes under science. It can't be equated with lying by people. Even the lying by people is divided into four:

1. Fibs
2. Ethically valid
3. Blatant and brazen just to protect one's interests, that may be, saving one's life also.
4. Lying with malignity just to bring harm to another person.

To explain:

Fibs are polite lies - children indulge in it. They lie to parents and playmates. Adults do also, for bantering colleagues and friends. But beware! children's lies may be a symptom of an underlying malady of mental kind. The child is feeling emotionally unwanted and insecure. If the child habitually lies, take it for counselling.

Ethically valid: Valluvar's Kural - Puraitheerntha namai payakkum enil. To save an innocent's life, even saints can lie as in this story: A hunter was in hot chase of a deer. It ran into the hut of the hermit and hid itself. The hermit, awakened from his meditation, saw the deer entering and hiding. The hunter came and asked: I am after a deer; which came in this direction. Have you seen it?
Hermit's reply - NO - is ethically valid lie.

No. 3 - the innocent guy caught by police wrongly says many lies, all to protect himself. This kind of lies are used in marriage proposal. The families of both sides tell many lies - all to see the couple get married. Ayiram poi solli oru kaliyaanam. Let the girl get married; she is already aging. This consideration makes such lies acceptable.

No.4: Lies used by crooked people - either to gain; or just to see the person he dislikes to suffer. These lies are told to get malicious pleasure in sadistic delight of seeing someone else suffer. In other versions, but softer ones, the kinds of lies the real estate dealers use to lure potential buyers.

Under none of the above four, magician's art which you call lies erroneously - doesn't fall.

-- Bala Sundara Vinayagam

வருண் said...

****G.M Balasubramaniam said...

மெஜிஷியன் பொய் எங்கே சொல்கிறார். அவர் சொல்வதை நடத்திக் காட்டுகிறாரே. நாம்தான் தவறாக நினைக்கிறோம் ***

இல்ல சார், என் பி ஆர் ல வந்த அந்த மெஜிசியன் அப்படித்தான் சொன்னார். He used words like "cheating" "deception" and calling himself as cheating and deceiving is my "profession"! :)


வருண் said...

***Nirmala said...

அவர்களிடம் ஏமார்ந்தாலும் ஒரு இன்பம் இருக்க தானே செய்கிறது !..... நாம் அதை விரும்பி தான் ரசிக்கிறோம் !.... - chudachuda.com**

வாங்க சுடச்சுட டாட் காம் நிர்மலா! காசு கொடுத்து ஏமாற்றச்சொல்லி ரசிக்கிறோம். :)))

வருண் said...

wisht: He only claimed that he believed in deceiving and cheating. I always thought words like "trick"! :)