Thursday, October 22, 2015

உங்களுக்கு பதிவுலகம் போர் அடிக்கிறதா?

ரொம்ப நாள் சென்று உஷா அன்பரசு ஒரு பதிவு எழுதி இருந்தாங்க. "என்னங்க உயிரோடதான் இருக்கீங்களா?'னு கேட்டால் ஒரு உண்மையைச் சொன்னாங்க. எனக்குத் தெரியப் பலர் இவர்களைப் போல் உண்மையைச் சொல்வதில்லை! அதாவது வலையுலகில் பதிவெழுத ஆர்வம் குறைந்துவிட்டது என்று சொன்னாங்க. ரொம்ப நாள் பதிவுலகை வேடிக்கை பார்க்கும் நான் இதேபோல் பலர் ஆர்வக் குறைவினால் பதிவெழுதுவதை நிறுத்தி விட்டதைப் பார்க்கிறேன்.

இதற்கு காரணம் என்ன? நாம் இப்படி செய்வது தமிழ்ப் பதிவு உலகிற்கு நாம் செய்யும் தீங்கா? எல்லாரும் இப்படியே ஒதுங்கிவிட்டால் தமிழ்ப் பதிவுலகம் செத்து விடாதா? என்றெல்லாம் நான் யோசிப்பதுண்டு. யோசிச்சு என்ன செய்ய? நடக்கிறதுதான் நடக்கும். ஆனால் பதிவுலகில் ஏகப்பட்ட மாற்றங்கள்.

முன்னாளில் எல்லாம் எதிர் பதிவு, தொடர் பதிவு, பழிக்குப் பழிப் ப்பதிவுனு ஒரே அடிதடி வெட்டுக்குத்தா இருக்கும். இப்போ எல்லாம் தமிழாவலர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள்னு பதிவெழுதுறவங்க தரம் உயர்ந்து காணப்படுகிறது. இன்றையப் பதிவர்களின் படைப்புகள் உயர் தரமாக இருக்கிறதுனு என்னால் அடித்துச் சொல்ல முடியாவிட்டாலும்,  இன்றைய சூழலில் தரமான பதிவர்கள் பலர்  (விதி விலக்கு உண்டு) ஆர்வமாகப் பதிவெழுதுறாங்கனு சொல்லுவேன்.

பதிவுகளின் எண்ணிக்கை, அடி தடிப் பதிவுகள், தன்னை அடையாளம் காட்டாமல் என்னைப்போல் பதிவர்கள்  போன்றவை குறைந்தாலும், பதிவுலகத் தரம் என்னமோ உயர்ந்துதானுள்ளது. ஆனால் பதிவுலகில் எதிர்காலம் சிறக்கணும்னா சிறுவர்கள், சிறுமிகள், முக்கியமாக பக்குவமடையாதவர்கள்  ஆர்வத்துடன் பதிவெழுதணும். இளங்கன்றுகள்தான் பயமறியாது உண்மையைச் சொல்லுவார்கள். அதுபோல் பக்குவமற்ற, ஆவலுடன் பதிவெழுதும் பதிவர்களின் பதிவுகள் மிகவும் குறைந்து விட்டது. இது நிச்சயம் எதிர் காலப் ப்பதிவுலகை பாதிக்கும் என்பதென்னவோ  கசப்பான உண்மை.

ஆமாம், எனக்கும்தான் பதிவுலகம் போர் அடிச்சிருச்சு. அதை ஒரு பதிவெழுதி அகற்றலாம்னுதான் இப்படி ஒரு பதிவு! பதிவெழுதிட்டு ஓடிடலாம்னு இல்லை? :)

அப்போ என்னதான் "இண்டெரெஸ்டிங்" ஆ இருக்கு? எப்படி பொழுது போக்கிற? னு நீங்க கேக்க நினைக்கிறது தெரிகிறது. நாளுக்கு நாள் அறிவியல் வளருகிறது. இன்றைய அறிவியல் புத்தகங்களில் ஏகப்பட்ட விசயங்கள் அழகாக விளக்கப் பட்டு உள்ளது. நாம் படிக்கும்போது நுனிப்புல் மேய்ந்தவற்றையெல்லாம் இப்போது தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இங்கே வெட்டிச் சண்டை வருவதில்லை. 100 பின்னூட்டங்கள் எழுதி யாரையும் மாற்ற முடியாமல் போக வேண்டிய ஒரு அவல சூழல் இல்லை. நேற்று வரை சரியாகப் புரியாத ஒன்று இன்று தெளிவாகிய ஒரு நல்ல உணர்வு வருகிறது. இதுபோல் ஒரு உணர்வு எனக்கு பதிவுலகில் வருவதில்லை! தேவையில்லாமல் வாதாடி நம் கருத்தோட நாம் போவதுபோல்தான் பெரும்பாலும் வரும் உணர்வு. கவனம்! நான் என்னைப் பற்றிதான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு வேறு மாதிரி அனுபவமாக இருக்கலாம்! அதனால்தான் நீங்கள் இன்னும் ஆர்வமாகப் பதிவெழுதுறீங்க!

Misunderstanding, misjudgment, misinterpretation etc etc is all I get out of spending my time in the tamil blog world. That's my reason for losing my interest here. Moreover, I don't think I ever made any constructive contribution in Tamil blog world. Wait!  This is my own assessment about myself. So, it wont be a great loss if people like me leave from here.They can only make this place better by being absent rather.  That's my justification! :) Trust me, I am being extremely honest here! Don't cry please. I am around! Not dead yet! Take it easy folks!

31 comments:

முகுந்த் அம்மா said...

@Varun

All the best for your decision. . If you ask me whether the blog world is boring for me or not, I would say I dont know. I use it as a way to connect to the world. According to me, I use blog world as a get away place to share interesting things I read and learnt.
When I started re enter blog world, starting this year, I made sure three things.

1. I dont read other people's blog other than few selected ones. Because I dont find time.
2. I make sure I dont indulge in blog addiction like constantly checking visitor count and comments or checking tamil manam
3. I make sure I dont participate in a war with comments or arguments,Since according to me we are not here to argue or prove whether we are correct or wrong, that is not going to change even 0.00001% of other people.

I hope I am still following those things..but I dont know, soon I might retire from the blog world as well. Only time will decide that.

I wish you all the best on your quest in learning science. Please do share interesting things and findings, if you want to.

thanks

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//இன்றைய அறிவியல் புத்தகங்களில் ஏகப்பட்ட விசயங்கள் அழகாக விளக்கப் பட்டு உள்ளது. நாம் படிக்கும்போது நுனிப்புல் மேய்ந்தவற்றையெல்லாம் இப்போது தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.//
மிக சரியாக சொன்னீர்கள். வருண். பாடப் புத்தகத்தில் தேர்வுக்காகப் படித்தபோது புரியாதவை சில இப்போது புரிகின்றன என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். நேரம் இருந்தால் அவற்றை கொஞ்சம் எளிமைப் படுத்தி தாருங்கள். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
மேலோட்டமான பதிவுகளும் தேவைத்தான் படுகின்றன. அப்போதுதான் தரமான பதிவுகளை அடையாளம் காண முடியும்.
மனதில் தோன்றியதை உள்ளது உள்ளபடி உரைக்க ஒரு தைரியம் வேண்டும் அது உங்களிடம் உள்ளது
1000 பதிவுகள் எழுதிய வெகு சிலரில் நீங்களும் ஒருவர், உங்கள் பங்களிப்பு நிச்சயம் குறிப்பிடத் தக்கது என்பதில் ஐயமில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

கூடிய விரைவில் இன்னும் நல்ல மாற்றங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.. பார்ப்போம்...

Amudhavan said...

உண்மையில் பதிவுலகம் ரொம்பவும் போர்தான் அடிக்கிறது. எப்படி எழுதுவது என்பதும், அதனை எப்படி எழுதுவது என்பதும் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. அது தெரிந்து பதிவுலகில் எழுதிக்கொண்டிருந்த நிறையப்பேர் இப்போது பல்வேறு காரணங்களால் பதிவுலகில் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன். இன்னமும் நிறையப்பேர் வலைப்பூக்களை விடவும் ஃபேஸ்புக்கில் சுலபமாக மக்கள் அதிகம் கிடைக்கிறார்கள் என்பதற்காக ஃபேஸ்புக் பக்கம் போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
இதில் உங்களைப் போன்றவர்கள் வேறு விருப்பம் குறைகிறது என்று எழுதுகிறீர்களா? வருத்தமாக உள்ளது. வலையுலகம் முன்புபோல் 'பிரகாசிக்க' ஆவன செய்பவர்கள் விலகிப்போகவேண்டாம் என்பதை மட்டும்தான் சொல்லிக்கொள்ள முடியும்.

‘தளிர்’ சுரேஷ் said...

பதிவுலகம் கொஞ்சம் மாறி வருவது சிறப்பு என்றாலும் பலர் முகநூலில் எழுதிவிட்டு பதிவுலகை மறந்திருப்பது மறுக்க முடியாத உண்மை! மாற்றங்களை வரவேற்போம்!

ரூபன் said...

வணக்கம்
மாற்றங்கள் என்பது ஒரு வளர்ச்சி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மலரின் நினைவுகள் said...

மூணு பதிவ எழுதி, திருப்தியில்லாம draft லியே போட்டு வெச்சிருக்கேன் மூணு மாசமா...
interest குறையல..., தினமும் தமிழ்மணத்தை வாசிக்கிறேன். but என்னமோ ஒன்னு குறைஞ்சிடுச்சு..

வருண் said...

***முகுந்த் அம்மா said...

@Varun

All the best for your decision. . If you ask me whether the blog world is boring for me or not, I would say I dont know. I use it as a way to connect to the world. According to me, I use blog world as a get away place to share interesting things I read and learnt.
When I started re enter blog world, starting this year, I made sure three things.

1. I dont read other people's blog other than few selected ones. Because I dont find time.
2. I make sure I dont indulge in blog addiction like constantly checking visitor count and comments or checking tamil manam
3. I make sure I dont participate in a war with comments or arguments,Since according to me we are not here to argue or prove whether we are correct or wrong, that is not going to change even 0.00001% of other people.

I hope I am still following those things..but I dont know, soon I might retire from the blog world as well. Only time will decide that.

I wish you all the best on your quest in learning science. Please do share interesting things and findings, if you want to.

thanks***

You are writing because you certainly like it and makes you feel good. You should keep going. :)

What can I say? It is a very big world. The happiest second of someone is the saddest one of another in the same world. When someone finding it boring, someone might find it very interesting too! So, we should go on according to our own situations I think.

I just shared how I feel today about the Tamil blogging. Take it easy!

வருண் said...

***டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//இன்றைய அறிவியல் புத்தகங்களில் ஏகப்பட்ட விசயங்கள் அழகாக விளக்கப் பட்டு உள்ளது. நாம் படிக்கும்போது நுனிப்புல் மேய்ந்தவற்றையெல்லாம் இப்போது தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.//
மிக சரியாக சொன்னீர்கள். வருண். பாடப் புத்தகத்தில் தேர்வுக்காகப் படித்தபோது புரியாதவை சில இப்போது புரிகின்றன என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். நேரம் இருந்தால் அவற்றை கொஞ்சம் எளிமைப் படுத்தி தாருங்கள். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
மேலோட்டமான பதிவுகளும் தேவைத்தான் படுகின்றன. அப்போதுதான் தரமான பதிவுகளை அடையாளம் காண முடியும்.
மனதில் தோன்றியதை உள்ளது உள்ளபடி உரைக்க ஒரு தைரியம் வேண்டும் அது உங்களிடம் உள்ளது
1000 பதிவுகள் எழுதிய வெகு சிலரில் நீங்களும் ஒருவர், உங்கள் பங்களிப்பு நிச்சயம் குறிப்பிடத் தக்கது என்பதில் ஐயமில்லை.***

தங்கள் கருத்துக்கு நன்றி, முரளி. :)

வருண் said...

***Blogger திண்டுக்கல் தனபாலன் said...

கூடிய விரைவில் இன்னும் நல்ல மாற்றங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.. பார்ப்போம்...***

உங்களைப் போல ஆட்களின் உழைப்புக்கு பலன் கிடைக்க வேண்டும். பார்ப்போம்!:)

வருண் said...

****Amudhavan said...

உண்மையில் பதிவுலகம் ரொம்பவும் போர்தான் அடிக்கிறது. எப்படி எழுதுவது என்பதும், அதனை எப்படி எழுதுவது என்பதும் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. அது தெரிந்து பதிவுலகில் எழுதிக்கொண்டிருந்த நிறையப்பேர் இப்போது பல்வேறு காரணங்களால் பதிவுலகில் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன். இன்னமும் நிறையப்பேர் வலைப்பூக்களை விடவும் ஃபேஸ்புக்கில் சுலபமாக மக்கள் அதிகம் கிடைக்கிறார்கள் என்பதற்காக ஃபேஸ்புக் பக்கம் போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
இதில் உங்களைப் போன்றவர்கள் வேறு விருப்பம் குறைகிறது என்று எழுதுகிறீர்களா? வருத்தமாக உள்ளது. வலையுலகம் முன்புபோல் 'பிரகாசிக்க' ஆவன செய்பவர்கள் விலகிப்போகவேண்டாம் என்பதை மட்டும்தான் சொல்லிக்கொள்ள முடியும். ***

வாங்க அமுதவன் சார்.

"போர்" அடிக்கிதுனு சொன்னாலே, இன்றைய ஆக்டிவ் பதிவர்களை குறை சொல்வதுபோல் தோனும். எதுக்கு அப்படிச் சொல்லணும்? னு ஒரு யோசனை..அப்புறம் இப்படி யோசிச்சு யோசிச்சுத்தான் எதையும் சொல்லாமல் பதிவுலகம் பாதாளத்தில் போகுதோ?னு இன்னொரு எண்ணம் அதை வென்றது. சரினு எழுதினேன் சார், தோன்றியதை! :)

வருண் said...

*** ‘தளிர்’ சுரேஷ் said...

பதிவுலகம் கொஞ்சம் மாறி வருவது சிறப்பு என்றாலும் பலர் முகநூலில் எழுதிவிட்டு பதிவுலகை மறந்திருப்பது மறுக்க முடியாத உண்மை! மாற்றங்களை வரவேற்போம்!***

வாங்க சுரெஷ்!

நான் முகநூல் பகிர்வுகளை வாசிப்பதில்லை! அதனால்தான் இப்படி உணர்கிறேனோ என்னவோ..:)

வருண் said...

***ரூபன் said...

வணக்கம்
மாற்றங்கள் என்பது ஒரு வளர்ச்சி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-***

மாற்றங்கள் எல்லாமே வளர்ச்சி இல்லைங்க..ஆனால் உங்க "பாஸிடிவ் திங்க்கிங்" நன்று, ரூபன்! :)

வருண் said...

***மலரின் நினைவுகள் said...

மூணு பதிவ எழுதி, திருப்தியில்லாம draft லியே போட்டு வெச்சிருக்கேன் மூணு மாசமா...***

அது சரி, நீங்க என்ன பர்ஃப்கெக்ஸனிஸ்டோ என்ன வோ? :)

***interest குறையல..., தினமும் தமிழ்மணத்தை வாசிக்கிறேன். but என்னமோ ஒன்னு குறைஞ்சிடுச்சு..***

புதியவர்களுக்கு இவ்வுணர்வு வராது பாருங்க. ஏன்னா அவங்களுக்குத் தெரிந்த பதிவுலகம் வேறு. இல்லையா? :)

விசுAWESOME said...

வருண்,

சிந்திக்க வைக்கும் பதிவு. எனக்கும் என்றாவது ஒரு நாள் இது அலுத்து போகும் என்ற எண்ணம் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருகின்றது. ஆனால் அதுவரை எழுதலாம் என்று நினைத்து எழுதி கொண்டு இருக்கின்றேன்.
எழுத நிறைய விஷயங்கள் இருப்பதை போல் தான் தோன்றினாலும், எழுத ஆரம்பித்தவுடன் தடுமாறும் நாட்கள் உண்டு. அந்நாட்களில் எல்லாவற்றையும் ஓரம் கட்டிவிட்டு சமையலறைக்கு போய் விடுவேன்.
முகமறியா பலர் தொடர்ந்து எழுத சொல்லி உற்சாகபடுதினாலும் அருகில் உள்ள நம்மை அறிந்த சிலர் " உனக்கு இது தேவையா ? ஏதாவது உருப்புடுற காரியம் ஏதாவது செய் , பதிவு எழுதி நேரத வீணடிக்க வேண்டாம்" என்று சொல்லும் போது அணைத்து உற்சாகமும் காணாமல் போய்விடும்.
அடுத்த நாளே, நம் பழைய பதிவை பல்லாயிர மைல்க்கு அப்பால் வாழும் ஒருவர், ரசித்து படித்து ஒரு பின்னூட்டம் இடுகையில் அந்த உற்சாகம் மீண்டும் வருகின்றது.
பார்க்கலாம்... எவ்வளவு தூரம் எவ்வளவு நாட்கள் போகின்றது என்று.

வருண் said...

***விசுAWESOME said...

வருண்,

சிந்திக்க வைக்கும் பதிவு. எனக்கும் என்றாவது ஒரு நாள் இது அலுத்து போகும் என்ற எண்ணம் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருகின்றது. ஆனால் அதுவரை எழுதலாம் என்று நினைத்து எழுதி கொண்டு இருக்கின்றேன்.
எழுத நிறைய விஷயங்கள் இருப்பதை போல் தான் தோன்றினாலும், எழுத ஆரம்பித்தவுடன் தடுமாறும் நாட்கள் உண்டு. அந்நாட்களில் எல்லாவற்றையும் ஓரம் கட்டிவிட்டு சமையலறைக்கு போய் விடுவேன்.
முகமறியா பலர் தொடர்ந்து எழுத சொல்லி உற்சாகபடுதினாலும் அருகில் உள்ள நம்மை அறிந்த சிலர் " உனக்கு இது தேவையா ? ஏதாவது உருப்புடுற காரியம் ஏதாவது செய் , பதிவு எழுதி நேரத வீணடிக்க வேண்டாம்" என்று சொல்லும் போது அணைத்து உற்சாகமும் காணாமல் போய்விடும்.
அடுத்த நாளே, நம் பழைய பதிவை பல்லாயிர மைல்க்கு அப்பால் வாழும் ஒருவர், ரசித்து படித்து ஒரு பின்னூட்டம் இடுகையில் அந்த உற்சாகம் மீண்டும் வருகின்றது.
பார்க்கலாம்... எவ்வளவு தூரம் எவ்வளவு நாட்கள் போகின்றது என்று.***

விசு, நிச்சயம் நீங்க பதிவுலகையும் அங்கு கிடைக்கும் நட்பு வட்டத்தை நீங்க "எஞ்ஜாய்" பண்ணுறீங்க! தொடர்ந்து எழுதுங்கள்.

நான் பார்க்கப் பலர் ஊக்கத்துடன் எழுதிவிட்டு பிறகு ஆர்வம் குறைந்து நிறுத்திவிட்டார்கள். ஆனால் "எனக்கு ஆர்வம் குறைந்து விட்டது" என்று சொல்லுவதில்லை. நாமாப் புரிந்து கொள்ளணும்.நான் அவர்களையும் சேர்ந்து "அட்ரெஸ்" பண்ணினேன். அவ்வளவுதான். ஒரு இலை உதிரும்போது பல இளம் இலைகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கு. நீங்க பதிவுலகில் மிகவும் "புதிய இளைய இலை'தான். :) தொடருங்கள்.:)

பரிவை சே.குமார் said...

மாற்றங்கள்தான் வளர்ச்சி... நன்றி.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

பதிவுலகத் தரம் என்னமோ உயர்ந்துதானுள்ளது.
என்பதல்ல
பதிவுலகத் தரம் உயர்ந்து கொண்டே தானிருக்க வேண்டும்!
சிந்திக்க வைக்கிறியள்
http://www.ypvnpubs.com/

உஷா அன்பரசு said...

இன்னொன்னு வாசிக்க சலிப்பு இல்லாத மாதிரி எழுதனும்... நம் உலகம் சின்னதா சுருங்கிடறப்ப கற்பனை வறட்சி ஏற்பட்டு விடுகிறது. தினமலர்-பெண்கள் மலருக்கு ஆன்-லைன் ஷாப் பத்தி ஒரு கட்டுரை எழுதி சென்ற வாரம் பிரசுரமாகியது, அந்த கட்டுரை எழுத காரணம் amazon, shop clues ஆகிய தளங்களில் நம்மூர் மாட்டுச்சாணத்தில் செய்யும் வறட்டியை கூட 31% ஆபர் ல 6 வறட்டி 250, 400 ரூபாய்னு போட்டிருந்தாங்க... அடப்பாவிகளா எங்க பாட்டி ஒரு ரூபாய்க்கு ஆறுன்னு வாங்கி பொங்கல் வச்சதை இப்ப ' கவ டங் கேக்' ன்னு அதிரசம் மாதிரி பேக் பண்ணி போட்டிருக்கானுங்க... இதுல வேற டயாமீட்டர், விட்த், குவாண்ட்டிட்டி ன்னு குறிப்பு வேற.. மறந்து போன மேத்ஸை எல்லாம் நியாபகம் பண்ணிக்கிட்டேன்..... ஹா.. ஹா

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ரொம்ப நாள் கழித்து வருகிறேன் , நலமா வருண்?
மற்ற வேலைப்பளுவினால் சிலர் எழுதாமல் போய் விடுகிறார்கள்.
பதிவுலகில் நல்ல மாற்றம் வரும் என்று நினைக்கிறேன் .. பார்ப்போம்.

வருண் said...

***பரிவை சே.குமார் said...

மாற்றங்கள்தான் வளர்ச்சி... நன்றி.**

வாங்க குமார். நல்மாற்றங்கள்னு நான் சொல்லுவேன்னு நினைக்கிறேன். :)

வருண் said...

***Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

பதிவுலகத் தரம் என்னமோ உயர்ந்துதானுள்ளது.
என்பதல்ல
பதிவுலகத் தரம் உயர்ந்து கொண்டே தானிருக்க வேண்டும்!
சிந்திக்க வைக்கிறியள்
http://www.ypvnpubs.com/**

தரம் உயரும்போது எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிடும். எண்ணிக்கையும், தரமும் உயர்வதே சிறப்புனு நினைக்கிறேன். :)

வருண் said...

*** உஷா அன்பரசு said...

இன்னொன்னு வாசிக்க சலிப்பு இல்லாத மாதிரி எழுதனும்... நம் உலகம் சின்னதா சுருங்கிடறப்ப கற்பனை வறட்சி ஏற்பட்டு விடுகிறது. தினமலர்-பெண்கள் மலருக்கு ஆன்-லைன் ஷாப் பத்தி ஒரு கட்டுரை எழுதி சென்ற வாரம் பிரசுரமாகியது, அந்த கட்டுரை எழுத காரணம் amazon, shop clues ஆகிய தளங்களில் நம்மூர் மாட்டுச்சாணத்தில் செய்யும் வறட்டியை கூட 31% ஆபர் ல 6 வறட்டி 250, 400 ரூபாய்னு போட்டிருந்தாங்க... அடப்பாவிகளா எங்க பாட்டி ஒரு ரூபாய்க்கு ஆறுன்னு வாங்கி பொங்கல் வச்சதை இப்ப ' கவ டங் கேக்' ன்னு அதிரசம் மாதிரி பேக் பண்ணி போட்டிருக்கானுங்க... இதுல வேற டயாமீட்டர், விட்த், குவாண்ட்டிட்டி ன்னு குறிப்பு வேற.. மறந்து போன மேத்ஸை எல்லாம் நியாபகம் பண்ணிக்கிட்டேன்..... ஹா.. ஹா ***

வாங்க உஷா!

பார்த்தீங்களா? நீங்க உங்க பொண்ணு "அச்சு' பற்றி எழுதியதால்தான் இந்தப் பதிவு. அதுவும் பொறுப்பாக பின்னூட்டத்துக்கு பதில் சொல்லியதால்..

ஒண்ணு, ரெண்டாகி நிக்கிது.

எனக்கு போர் அடிக்கிதுனு சொன்னாலும், அதை வெளியில் சொன்னால்த்தான் பதிவுலகை "போர்" ம்ம் ஊக்குவிக்கிது.

இது போதாதுனு இப்போ பை ஆர் ஸ்கொயட், 2 பை ஆர் னு "எரு"ல ஆரம்பிச்சு ஜியாமெட்ரி வேற சொல்லிக் கொடுக்குறீங்க..:)

வருண் said...

***தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ரொம்ப நாள் கழித்து வருகிறேன் , நலமா வருண்?
***

வாங்க கிரேஸ்!

உங்களை உங்க பதிவு மூலமாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் கிரேஸ்! நீங்க அமெரிக்க வந்ததும், பக்கத்துலதான இருக்கீங்கனு உங்களை ஒரு உதாசினப் படுத்த ஆரம்பிச்சுட்டேன் போல இருக்கு.

***மற்ற வேலைப்பளுவினால் சிலர் எழுதாமல் போய் விடுகிறார்கள்.
பதிவுலகில் நல்ல மாற்றம் வரும் என்று நினைக்கிறேன் .. பார்ப்போம்.***

நான் பார்த்தவரைக்கும் "ஃபேமிலி"க்கு முதலிடம், பதிவுலகிற்கு ரெண்டாவது இடம்.

தன் குழந்தைகளுக்கு முதல் இடம், வயதான் தன் பெற்றோரருக்கு ரெண்டாவது இடம்.

இந்த ரெண்டாவது இடத்தில் வர்ரவங்க புறக்கணிக்கப் படுகிறார்கள், கிரேஸ்! :(Thenammai Lakshmanan said...

தொடர்ந்து எழுதுங்கள் வருண்.

நான் முதன் முதலா உங்க தளத்துக்கு வந்துருக்கேன். அருமையா இருக்கு.. நன்றி :)

saamaaniyan saam said...

வருண்...

நான் மூன்று மாதம் கழித்து வருகிறேன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்... ஆனால் நான் காணாமல் போனது போரடித்ததால் கிடையாது !!!

ஓகே.... சீரியஸாய் பேசுவோம்....

வழக்கம் போலவே உண்மையை போட்டுடைக்கும் பதிவு !

தமிழ் வலைப்ப்படைப்புகள் பற்றிய எனது கண்ணோட்டம்...

பெரும்பாலும் மற்றவர்களின் படைப்புகளை நுனிப்புல் மேய்பவர்கள் அதிகம் ! எழுதுபவர்கள் சோர்வடைவதற்கு இது ஒரு முதல் காரணம் ! ஒரு படைப்பை முழுவதும் உள்வாங்கி படிப்பவர்களைவிட அப்படி இப்படி கண்ணோட்டி கருத்து பதிவதற்கு வார்த்தைகள் கிடைத்தவுடன் நடையை கட்டி விடுவதாக தோன்றுகிறது அடுத்ததாக பெரும்பான்மை வலைப்பூ படைப்பாளிகள் ஒரு பாதுகாப்பான வட்டத்தினுள் இருந்துக்கொண்டு " விளையாடுவதையே " விரும்புவதாக தோன்றுகிறது. சமூக அவலங்களையும் அரசியல் தகிடுதித்தங்களையும் நமக்கேன் வம்பு என தாண்டிவிடும் வழக்கம் அதிகம் !

ஆனாலும் வலைப்பூ படைப்புலகம் இன்னும் தளர்நடை பருவத்தில்தான் உள்ளது... எதிர்காலத்தில் " தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளார்கள் சங்கம் " போன்ற ஒரு இயக்கம் வலைப்பூ படைப்பாளிகள் மூலம் தோன்றும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

நன்றி வருண்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!

யாழ்பாவாணன்
http://www.ypvnpubs.com/

swathium kavithaium said...

உங்களை கடவுளைக் கண்டேன் என்ற இணைப்பில் இணைத்துள்ளேன் நன்றி...வாழ்த்துக்கள்

swathium kavithaium said...

உங்களை கடவுளைக் கண்டேன் என்ற இணைப்பில் இணைத்துள்ளேன் நன்றி...வாழ்த்துக்கள்

Mythily kasthuri rengan said...

so varun உங்களை இங்கு மீண்டும் பார்த்தேன் என நம்புகிறேன். நல்ல நம்பிக்கைகள் தோற்காது:) கொஞ்சம் நாள் ரெஸ்ட் எடுத்துட்டு மீண்டும் வாங்க/take care !

Ilaiya raja said...

பதிவுகள் குறைவது பதிவர் களின் தவறாக நான் பார்க்க வில்லை. பிளாகரின் தவறாகவே பார்க்கிறேன். பிளாக்கர் மரபில் பிரண்ட்லியாகவும் யூசர் பிரண்ட்லியாகவும் மாறாமல் தேக்கமடைந்து நிற்கிறது. ஆர்க்குட் பாதையில் வீறுநடை போட்டு வருகிறது!