Friday, April 10, 2015

ஜெயகாந்தன் மறைவு! சமஸ்கிரதத்திற்கு பேரிழப்பு?!

தமிழில் சிறுகதைகள், புதினங்கள் எழுதிப் புகழின் உச்சியை அடைந்தவர் அமரர்  ஜெயகாந்தன். ஆனால் இவரை ஒரு தமிழன் என்று சொல்லக்கூட நா கூசுகிறது.  இவர் மறைவால் தமிழுக்கு அதிக இழப்பா? இல்லை சமஸ்கிரதத்துக்கு அதிக இழப்பா? என்னும் கேள்வியை முன்வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஒரு சமஸ்கிரதக் கூட்டத்தில் இவர் பேசியது..
‘‘வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’ பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக் கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது.’’
 அவர் இதுபோல் பேசியும், அதில் தவறேதும் இல்லை என்று விவாதித்தவர்கள் பலர்.  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்கிற வசனத்தை எல்லாம் மறந்துவிடுவார்கள். ஜெயகாந்தன், இவரை வாழவைத்தத் தமிழின்மீது செருப்புக்காலுடன் ஏறி மிதித்துக் கொண்டு, சமஸ்கிரதத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும்போதுதான் இவருடைய இலக்கியப் படைப்புகளை  எல்லாம் தோண்டி எடுத்துப் பார்த்து இவருக்கு ஞானபீடப் பரிசை வழங்கினார்கள் ஹிந்தியர்கள்! 

பாரதீய ஞான பீட பரிசைப் பெற்றபோது இவர் உலகறியப் பேசுகிறார்..
இதற்குமுன்னே தமிழர்களில் இவ் விருதைப் பெற்றவர், அகிலாண்டம் (சித்திரப் பாவை) என்னும் அகிலன். அவரும் என்னைப் போல, சைவ வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதில் இன்னும் பெருமையடைகிறேன் ...
 ஜெயகாந்தன்  எத்தனை பெரிய எழுத்தாளன்!  கேவலம்,  தன் சாதிப் பற்றைக் காட்டி தன்னை எவ்வளவு கீழிறக்கிக்கொண்டான்? என்று பலரும் வருந்துமளவுக்கு ஆகிவிட்டது அவர் நடந்துகொண்டது.

நான் ஏன் தமிழில் பேசுகிறேன்? தமிழ் என் தாய்மொழி. எனக்கு நன்றாகப் பேசத் தெரிந்த மொழி தமிழ். என்னைப் போலவேதான் ஜெயகாந்தனும். அவருக்குத் தாய் மொழி தமிழ். தமிழில்தான் அவரால் கதை எழுத முடிந்தது. சமஸ்கிரதத்தில் "நந்தவனத்தில் ஓர் ஆண்டி" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" எல்லாம் எழுதியருந்தால், யாரு இந்தாளு? னு எனக்கு மட்டுமில்லை கோடிக்கணக்கான தமிழர்களுக்கே தெரிந்து இருக்காது.  பேசுவது தமிழ், சிந்திப்பது தமிழில். இருந்தும் தமிழை ஒருபடி கீழிறக்கி, சமஸ்கிரதத்தை உயர்த்தி இவர் பேசியது எல்லோருக்கும் எரிச்சலைக் கிளப்பியது.

 இது சம்மந்தமாக பலவருடங்கள் முன்பு பதிவுலகில் நடந்த விவாதங்கள் பற்றி பார்க்கணும்னா..


தமிழ் காட்டுமிராண்டி மொழின்னு ஒரு கொல்டி விமர்சிக்கலாம் ஆனா....


நம்மைப்போல் தமிழர்களுக்கு சமஸ்கிரதமும் ஒரு அன்னிய மொழிதான், ஆங்கிலமும் அன்னிய மொழிதான். இதில் சமஸ்கிரதம் மட்டும் எப்படி உயர்வானதாகும்? அதை மட்டும் நாம் நம் மொழியாகக் கருதி ஏன் போற்றிப் புகழணும்? இப்படியெல்லாம் யோசித்துப் பார்த்தால், ஜெயகாந்தன்  தமிழர்களுக்கு அன்னியமாகத் தான் தோன்றுவார். தமிழினத் துரோகியாய்த்தான் தோன்றுவார்.

அவரைப் புகழ்ந்து புகழ்ந்து அயர்ந்துபோன மேதைகள் கவனிக்க.. ஜெயகாந்தனின் இதுபோன்ற செயல்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதென்ன?

* எவனோ ஒருவன் தமிழ் தமிழ் என்று எதற்கெடுத்தாலும் தமிழை உயர்வாகப் பேசுகிறான் என்கிற எரிச்சலில், நாம்  தமிழைத் தாழ்த்திப் பிறமொழியை உயர்த்திப் பேசுவதைத் தவிர்க்கணும். என்னதான் இருந்தாலும் தமிழ் நம் தாய்மொழி. நம் தாய்மொழியை நாமே இழிவுபடுத்தினால் மற்றவன் எப்படி மதிப்பான்?

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதானதை எங்கும் காணோம்"  என்று சொன்ன பாரதி எங்கே? ஜெயகாந்தன் எங்கே?

* சாதீய அடையாளங்கள் தேவையில்லை என்பதே என்றுமே என் நிலைப்பாடு. அது பெருமாள் முருகனாக இருக்கட்டும், இல்லைனா செயகாந்தனாக இருக்கட்டும், இல்லைனா ஜெயமோவனாக இருக்கட்டும், சாதீய அடையாளங்களை இவர்கள் தவிர்த்தே ஆகணும். பாரதிய ஞானபீட விருது பெறும்போதும், சாகித்ய அகாதமி விருது பெறும்போதும் இவர்கள் தன் சாதீய அடையாளங்களை வீட்டுக்குள்ளேயே வைத்துவிட்டு வர வேண்டும். பொது இடங்களின் தன் சாதீய அடையாளங்களைப் பற்றி இவர்களே குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லவே இல்லை! அது எழுத்துலக மேதை ஜெயகாந்தனின்  சிறுபுத்தியையும், குறுகியமனதையும்தான் காட்டியது  என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துண்டா? இருந்தால் பரவாயில்லை! அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். I have made up my mind on this. So, Dont even try, convince me! Thanks.

43 comments:

taruada said...

Varun,


You are telling half and hiding half. I was there on occassion where he talked about Sanskrit and Tamil.

What he was telling was, Tamil language lost lot opportunities to enhance itself because the Tamil pundits shunned Sanskrit.
While Tamil contains the sonic elements needed to briefly articulate, it lacked phonetic elements to verbalize emotions and also lacked logical constructs for in-depth dialogues.
His anguish was that Tamil lost this great opportunity to evolve using Sanskrit.

And he chose strong words to wake up those stupid Tamil pundits that suppressed Sanskrit.

Request you to elminate this post

Amudhavan said...

ஜெயகாந்தனை மிகப் பெரிதாக மதிக்கிறவர்களைக்கூட 'என்ன இவர் இம்மாதிரி நடந்துக்கறாரே' என்று எண்ணிக் குமைய வைத்துவிடும்படியான போக்குகள், சம்பவங்கள் அவருடைய வாழ்க்கை நெடுகிலும் நிறைய தொடர்ந்துகொண்டே இருந்திருக்கின்றன.
அவருக்கு ஞானபீடம் பரிசு கிடைத்த அன்றைக்கு எனக்கு மிகவேண்டிய நண்பர் ஒருவர் ஜெயகாந்தனுக்கு வாழ்த்துத் தெரிவிக்க அவர் வீட்டிற்குப் போயிருக்கிறார். அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது போன் அடித்திருக்கிறது. அடுத்த முனையில் பேசியவர்கள் "நாங்கள் தமிழ்நாடு சி.எம். அலுவலகத்திலிருந்து பேசுகிறோம்.உங்களுக்கு ஞானபீடம் கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள். சி.எம். உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்க இப்போதே புறப்பட்டு வருகிறார். கொஞ்சம் உங்கள் விலாசத்தைச் சொல்கிறீர்களா?" என்று கேட்டிருக்கிறார்கள். அப்போதைய சி.எம். கலைஞர் கருணாநிதி.
"ஒரு முதலமைச்சருக்கு என்னுடைய வீட்டு விலாசம்கூடத் தெரியாதா? என்ன சி.எம். அவர்? அதை நானே சொல்லவேண்டுமா? சொல்லமுடியாது. வேண்டுமானால் அவரே விலாசம் தேடிக் கண்டுபிடித்து வரட்டும்" என்று சொல்லிப் போனை வைத்துவிட்டிருக்கிறார்.
அவர்கள் மறுபடியும் போன் செய்து "சார் அப்படியில்லை. நீங்கள் சில புரோட்டோகால்களை எல்லாம் புரிந்துகொள்ளவேண்டும். உங்கள் விலாசம் என்று எங்களிடம் ஒரு விலாசம் இருக்கிறது. அது சரியா என்பதை க்ன்ஃபர்ம் செய்துகொள்வதற்காகவும் நாங்கள் கேட்கலாமில்லையா? ஏனெனில் சி.எம் வருகிறாரென்றால் அவருடைய பாதுகாவலர்கள் என்றெல்லாம் வரவேண்டியிருக்கும். நீங்கள் இந்த விலாசத்திலிருந்து தற்போது மாறிக்கூடப் போயிருக்கலாம்.வேறு விலாசத்தில்கூட வசித்துக்கொண்டிருக்கலாம். அதையெல்லாம் சரி பார்ப்பதற்குத்தான் நாங்கள் கேட்கிறோம்" என்றிருக்கிறார்கள்.
"கருணாநிதி வருவதாயிருந்தால் அவரே விலாசம் தேடிக் கண்டுபிடித்துக்கொண்டு வரட்டும்" என்று சொல்லிப் போனை வைத்துவிட்டிருக்கிறார்.
இப்படி ஒரு பதிலை இந்த அம்மையாருக்குச் சொல்லியிருந்தாரென்றால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை.
ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு ஜெயகாந்தனுக்கு இதய ஆபரேஷன் நடைபெற்றபோது அதற்கான செலவுகள் அத்தனையையும் ஏற்றுக்கொண்டவர் கலைஞர். கலைஞருடைய இப்படிப்பட்ட சில குணங்கள்தாம் அவரை வியக்கவைக்கின்றன.
இம்மாதிரியான செய்திகள் ஜெயகாந்தனைப் பற்றி நிறைய இருக்கின்றன. ஆனால் அவருடைய எழுத்துலக மேதைமை பற்றியும் எனக்கு நிறைய மதிப்பும் வியப்பும் உள்ளது. அதற்காக நான் யார் மீதும் அவற்றைத் திணிக்கத் தயாரில்லை.

வருண் said...

***taruada said...

Varun,


You are telling half and hiding half.***

So, I am lying? Ok, let me be a liar!

*** I was there on occassion where he talked about Sanskrit and Tamil.

What he was telling was, Tamil language lost lot opportunities to enhance itself because the Tamil pundits shunned Sanskrit.
While Tamil contains the sonic elements needed to briefly articulate, it lacked phonetic elements to verbalize emotions and also lacked logical constructs for in-depth dialogues.
His anguish was that Tamil lost this great opportunity to evolve using Sanskrit.

And he chose strong words to wake up those stupid Tamil pundits that suppressed Sanskrit.***

Good to know that.

*** Request you to elminate this post***

Well, you have not justified his "casteist attitude" yet.

Why dont you justify that too? Thanks


வருண் said...

Amudhavan said...

ஜெயகாந்தனை மிகப் பெரிதாக மதிக்கிறவர்களைக்கூட 'என்ன இவர் இம்மாதிரி நடந்துக்கறாரே' என்று எண்ணிக் குமைய வைத்துவிடும்படியான போக்குகள், சம்பவங்கள் அவருடைய வாழ்க்கை நெடுகிலும் நிறைய தொடர்ந்துகொண்டே இருந்திருக்கின்றன.
அவருக்கு ஞானபீடம் பரிசு கிடைத்த அன்றைக்கு எனக்கு மிகவேண்டிய நண்பர் ஒருவர் ஜெயகாந்தனுக்கு வாழ்த்துத் தெரிவிக்க அவர் வீட்டிற்குப் போயிருக்கிறார். அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது போன் அடித்திருக்கிறது. அடுத்த முனையில் பேசியவர்கள் "நாங்கள் தமிழ்நாடு சி.எம். அலுவலகத்திலிருந்து பேசுகிறோம்.உங்களுக்கு ஞானபீடம் கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள். சி.எம். உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்க இப்போதே புறப்பட்டு வருகிறார். கொஞ்சம் உங்கள் விலாசத்தைச் சொல்கிறீர்களா?" என்று கேட்டிருக்கிறார்கள். அப்போதைய சி.எம். கலைஞர் கருணாநிதி.
"ஒரு முதலமைச்சருக்கு என்னுடைய வீட்டு விலாசம்கூடத் தெரியாதா? என்ன சி.எம். அவர்? அதை நானே சொல்லவேண்டுமா? சொல்லமுடியாது. வேண்டுமானால் அவரே விலாசம் தேடிக் கண்டுபிடித்து வரட்டும்" என்று சொல்லிப் போனை வைத்துவிட்டிருக்கிறார்.
அவர்கள் மறுபடியும் போன் செய்து "சார் அப்படியில்லை. நீங்கள் சில புரோட்டோகால்களை எல்லாம் புரிந்துகொள்ளவேண்டும். உங்கள் விலாசம் என்று எங்களிடம் ஒரு விலாசம் இருக்கிறது. அது சரியா என்பதை க்ன்ஃபர்ம் செய்துகொள்வதற்காகவும் நாங்கள் கேட்கலாமில்லையா? ஏனெனில் சி.எம் வருகிறாரென்றால் அவருடைய பாதுகாவலர்கள் என்றெல்லாம் வரவேண்டியிருக்கும். நீங்கள் இந்த விலாசத்திலிருந்து தற்போது மாறிக்கூடப் போயிருக்கலாம்.வேறு விலாசத்தில்கூட வசித்துக்கொண்டிருக்கலாம். அதையெல்லாம் சரி பார்ப்பதற்குத்தான் நாங்கள் கேட்கிறோம்" என்றிருக்கிறார்கள்.
"கருணாநிதி வருவதாயிருந்தால் அவரே விலாசம் தேடிக் கண்டுபிடித்துக்கொண்டு வரட்டும்" என்று சொல்லிப் போனை வைத்துவிட்டிருக்கிறார்.
இப்படி ஒரு பதிலை இந்த அம்மையாருக்குச் சொல்லியிருந்தாரென்றால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை.
ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு ஜெயகாந்தனுக்கு இதய ஆபரேஷன் நடைபெற்றபோது அதற்கான செலவுகள் அத்தனையையும் ஏற்றுக்கொண்டவர் கலைஞர். ***

அதையும் இவர் வேண்டாம் நானே செலவழிக்கிறேன் என்று மறுத்து இருக்கலாம், சார். :)

***கலைஞருடைய இப்படிப்பட்ட சில குணங்கள்தாம் அவரை வியக்கவைக்கின்றன.
இம்மாதிரியான செய்திகள் ஜெயகாந்தனைப் பற்றி நிறைய இருக்கின்றன. ஆனால் அவருடைய எழுத்துலக மேதைமை பற்றியும் எனக்கு நிறைய மதிப்பும் வியப்பும் உள்ளது. அதற்காக நான் யார் மீதும் அவற்றைத் திணிக்கத் தயாரில்லை.***

உங்க ஆழ்ந்த கருத்துக்கு நன்றி, சார். :)

taruada said...

Why are painting a wrong color to caste.
Caste is an identity for social harmony.
Even blood has caste difference.
It is the way works together.

Also, it is possible to attain mugthi irrespective of your caste. When you take pride in identifying with a language, and simply accept people spreading venom in the name race, what is so bothering about a caste.
In fact caste has forged values on group, and prevent them from bad things.
For example, you can see that Brahmins will not harm animals for their food.

We have to eradicate the thinking menace that caste means bad
Taru

NewWorldOrder said...

You are half-backed Tamil. I am shame for you for your comparison of Tamil and Sanskrit! We don't need any languages help to write the great Thirukkural, which teaches the entire aspect of life for any one in the earth for any time.

Varun, you no need to remove this post. This person is bjp' cooley asking in every blogs to remove the post against modi or Hindi.

G.M Balasubramaniam said...


நான் ஜெயகாந்தனின் படைப்புகள்பல படித்திருக்கிறேன்பலதும் நினைவில் இல்லை. எழுத்தி விமரிசிப்பது நல்லது எழுதியவரையுமா? May be he was a freak.

NewWorldOrder said...

If jeya kanthan has really said what you written here, then we need to reasses his writings

When it is high time said...

Taruada

First of all, he didn't master Sanskrit. He had a scrappy acquaintance with the language. He couldn't write and speak Sanskrit. So, he wasn't the right person to compare and contrast the two languages. Even if he was, the way he expressed his opinion was inappropriate. No one would like to hear that his or her language is inferior to any other language. Like a mother to whom the most ungainly child is the most beautiful child in the world! Can you find fault with such maternal attachment? Will you call it fanatical love? You say, against Tamil pundits. No, it was hurled against all those who hold their mother-tongue dearer to them.

Nevertheless, he could express such opinion in a conference of scholars where languages are discussed (one such meeting was recently organised in Delhi by Sahitya Academy in New Delhi that I attended). Cultured and learned people also have independent and strong opinions. But being cultured, they choose their platforms and ways to say. Indeed in University linguistic department (seminars, Extension lectures and the like) it would be possible to express a variety of differing opinions. He avoided such stages because of his fear that he would be caught red-handed for lack of knowledge in language studies. He was self-taught. He school life ended with at V Std. He picked up everything in life but never learnt anything as a scholar should do. Anybody can pick up anything: the porter at Central Station speaks faster English than a teacher of English language!

So he feared conferences of learned people. (The truth is such conferences won’t invite writers. The Conferences may discuss their writings; but they won’t call any writer to deliver a speech on various merits of languages unless such a writer himself is a scholar like Mu Va. A writer may be invited as a guest to deliver a speech. But never a to participate and discuss in seminars or conferences. Writers make up a motley crowd: robbers, womanisers, drunkards, derelict tramps, mentally deranged, drug additions can be found among them. We honour their writings, not their way of living. A cultured society give them a place to live in and produce. That's all. Therefore, writers should know their places and keep themselves within there: they can perform all gimmicks there. We can enjoy watching them.)

Jeyakanthan thought he could get away with anything, just like EVR, I mean, any manner of talk. While the Brahmins are up in arms against EVR for saying Tamil is a language of barbarians, they, and you too, are up in arm only against the Tamilians who feel unfairly wronged by his obscene condemnation of their mother-tongue. He could have expressed the same opinion from the same platform in a way that is acceptable. Appropriate way can make even your enemies listen, introspect and perhaps come to accept yours. This fellow lacks basic qualification to live in a cultured society. He was fit to live only in a jungle. This is just a matter of language. In social issues, his behaviour was despicable. He is alleged to have called all Srilankan Tamils bastards.

My opinion is: Enjoy reading his novels and short stories and don’t go beyond that. Discuss him only in the context of his literature. But don’t forget to condemn him for being a human being with a bestial mind.

-- BALA SUNDARA VINAYAGAM

ஜோதிஜி திருப்பூர் said...

அமுதவன்

உங்கள் தகவலுக்கு நன்றிங்க. நானும் பல விசயங்களை யோசித்துப் பார்த்தேன்.

வருண் said...

***taruada said...

Why are painting a wrong color to caste.
Caste is an identity for social harmony.
Even blood has caste difference.
It is the way works together.

Also, it is possible to attain mugthi irrespective of your caste. When you take pride in identifying with a language, and simply accept people spreading venom in the name race, what is so bothering about a caste.
In fact caste has forged values on group, and prevent them from bad things.
For example, you can see that Brahmins will not harm animals for their food.

We have to eradicate the thinking menace that caste means bad
Taru***

You are a "funny guy" Taru. I should not take you seriously as you are "shallow". Take care!

வருண் said...

*** NewWorldOrder said...

You are half-backed Tamil. I am shame for you for your comparison of Tamil and Sanskrit! We don't need any languages help to write the great Thirukkural, which teaches the entire aspect of life for any one in the earth for any time. ***

I think you are talking to Jeyakanatan! I hope he is listening. :)

வருண் said...

***Varun, you no need to remove this post. This person is bjp' cooley asking in every blogs to remove the post against modi or Hindi. ***

You and Taru seem to understand each other pretty well. :))

வருண் said...

***G.M Balasubramaniam said...


நான் ஜெயகாந்தனின் படைப்புகள்பல படித்திருக்கிறேன்பலதும் நினைவில் இல்லை. எழுத்தி விமரிசிப்பது நல்லது எழுதியவரையுமா? May be he was a freak.***

பெரிய எழுத்தாளனிடம் திறந்த மனதும் பகுத்தறியும் சிந்தனைகளும் இருக்கணும்னு எதிர்பார்ப்பது என் தவறுதான் சார். :)

வருண் said...

***NewWorldOrder said...

If jeya kanthan has really said what you written here, then we need to reasses his writings***

அவர் இப்படிப் பேசியதைப் பார்த்து தமிழ் உலகமே அதிர்ச்சி அடைந்தது. இதில் பொய்கலப்பு எதுவும் இல்லை.

சாதீயப் பெருமையும், சமஸ்கிரதம் தமிழைவிட உயர்ந்த மொழி என்னும் நம்பிக்கையில் வாழ்ந்து மறைந்தவர்தாம் அமரர் ஜெ கா!

வருண் said...

***When it is high time said...

Taruada

First of all, he didn't master Sanskrit. He had a scrappy acquaintance with the language. He couldn't write and speak Sanskrit. So, he wasn't the right person to compare and contrast the two languages. Even if he was, the way he expressed his opinion was inappropriate. No one would like to hear that his or her language is inferior to any other language.***

I am not sure, Taru's mother tongue is Tamil. It could be Sanskrit. So he loves to hear JK's statement that his mother tongue, Sanskrit is superior to Tamil! I care less about how "other language speaking" non-tamil guys like Taru feels about JK or Thamizh or Tamils.

Let him worship Sanskrit and, look at Tamils as if they are uncivilized morons! That's how non-tamils in general feel about Tamils and thamizh! He is just one of them. I do understand his feelings. :)

வருண் said...

***ஜோதிஜி திருப்பூர் said...

அமுதவன்

உங்கள் தகவலுக்கு நன்றிங்க. நானும் பல விசயங்களை யோசித்துப் பார்த்தேன்.***

வாங்க, ஜோதி கணேஷ்!:)

When it is high time said...

NewWorldOrder guy!

It is dangerous to link personal life of a writer with his books. In my long message, this point has been emphasised. There are no rules in literature of any language to the effect that only the virtuous guys should write; and the vicious keep off. Not at all. I said a motley crowd. Hence, anyone can write. Society welcomes all with open hands. Even a criminal, from Jail, can produce literature: like Jeffrey Archer and a French writer who was jailed for robberies. Our own Charu admits his heavy drinking; and Kushwant Singh said he was a womaniser. Kanndadasan was a confessed womaniser, drunkard and a drug addict. They are so because they feel they are defying socially accepted norms of good behavior. It gives them some sort of Holier than thou attitude, which is indeed essential to produce great literature in many of them. Our Bharatiar was a victim of emotional outbursts, and a drug addict too. His addiction to drugs caused his life. Coleridge's Kubla Khan was abandoned in the middle, not because the poet couldn't know how to finish, but because he overloaded himself with kanja and fell unconscious and lost the MS. The unfinished poem remains one of the dazzling gems of Eng literature today.

If we restrict literature only to the virtuous, then even Sangam poetry itself will have to be thrown into Bay of Bengal because if history is fairly reserarched and writern, we can find, among these poets, many rogue guys.

Therefore, don't link a writer with his social opinions, however outrageous to social modesty they may be. Varun links the two. He isn't alone in this. A lot of us decide the worth of an author on the basis of the proverb: Practise before you Preach. This rule is not applicable to writers. They are a class apart, a kind of mavericks, swimmers against current; for which they suffer gladly. Shelley was rusticated from Oxford University and he exiled himself to Italy and died during the voyage: What for? For his atheistic writings as a student. An American University did the same to Russel for writing the book: Why I am not a Christian? Today Shelley is known as a great poet, Russel a popular philosopher.

The question - Whether Jayakanthan is a good or a bad writer ought to be examined regardless of the fact whether he loved or hated Tamil, whether he called Srilankan Tamils bastards or legitimate children. Read his books with this mindset and evaluate his contribution to Tamil llt. I was shocked by your statement. Varun's blog is misleading you. I talked about Jeyakantan as a social guy, not as a writer at all. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு. அண்ணாவின் அற்புத வழிகாட்டல். வருண் படித்துக்கொள்ளலாம் அண்ணாவிடமிருந்து.

My opinion: He did contribute to modern Tamil literature emphatically. But I like more this fact that he blazed a new trail in Tamil literature. It is for you to explore what that
trail was.

--- BALA SUNDARA VINAYAGAM

வருண் said...

****மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு. அண்ணாவின் அற்புத வழிகாட்டல். வருண் படித்துக்கொள்ளலாம் அண்ணாவிடமிருந்து.***

ஆமாம், "அண்ணா", அவர் மனைவியிடம் போய் உன்னைவிட பக்கத்துவீட்டுப் பெண்தான் அழகி, அவள் பேசினால் அழகு, சிரித்தால் அழகு, அவள் பின்னழகு என்ன! முன்னழகு என்ன! நீ அவளிடம் இருந்து கற்றுக்கொள்ளணும்னு சொன்னால், "அண்ணா"விற்கு நாலு அறைகளும், விவாகரத்தும் கிடைக்கும்! அப்புறம் பக்கத்துவீட்டுப் பெண்ணை எண்ணி "அண்ணா" வாழ்நாள் பூராம் "சுய இன்பம்" செய்து காலத்தை ஓட்ட வேண்டியதுதான். :)

When it is high time said...

Varun!

I have read the distortion of his statement by his political as well as social enemies. But he made the statement - in legislative assembly or a public meeting, not remember exactly! - only as a sapient advice to his young followers who called him Anna and looked up to him wise for guidance - not to reject all that the rival party leaders speak because there were occasions when, what they said was sound, substantial and sapient.

One can distort anything if one is prejudiced against the speaker for his own reasons. Even Saints and Mahatmas face such attacks posthumously. And, prophets like Jesus and Mohammed were driven out their places by hostile mobs. Hence, Jesus correctly observed: NO PROPHET IS NOT WITHOUT HONOUR SAVE IN HIS OWN COUNTRY. He further rued: The foxes have holes and the birds of the heaven have nests, but the Son of Man does not have a place where He may lay His head. (His counsel to people were distorted before the King. Oh King, he is declaring himself as the King of Jews! Are you the King or he?)

Great people will have to suffer the stones thrown at them by small people. The small don't leave even Saints and Prophets un-stoned.

But such malicious conduct is ok with politicians because it is one of their survival tricks. Politics is the last refuge of scoundrels. But we aren't scoundrels, so we need to be fairr-mined common persons who shouldn''t distort anything to suit our base interests.

Anna is well known for fair treatment of all in personal life. Seshan has recorded in his autobiography how on the very first day of his occupying his chair in CM room after coming to power, all brahmin bureaucrats trembled in their shoes about the possible discrimination from a DMK CM. He called Secretaries of all departments to his room: most of them were Tamil brahmins. Anna spoke to them as CM and that speech, rather counsel, left the skeptical brahmins in amazement at Anna's fair-mindedness. Henceforward, they went to Anna's room happily and during his whole, but alas@ brief tenure as CM, they worked happily.

We should learn from Anna how not to reject a good thing merely because that person has offended us somewhere for other reasons. Hate the sin, not the sinner.

Jeyakantan should be appreciated as a writer who showed a new path in literature. At the same time, there is no doubt that he should be condemned for his non-literary nonsense.

taruada said...

Varun,

You seem to make assumptions quicker and then approach a subject with predisposed assumptions.
Can't expect a composed view from you.
Please grow up.

Taru

வருண் said...

when it is high time: I am not saying anything about Annadurai here. We need to be "LOYAL"! That's all I am saying

வருண் said...

***taruada said...

Varun,

You seem to make assumptions quicker and then approach a subject with predisposed assumptions.
Can't expect a composed view from you.
Please grow up.***

So do you have "assumptions"! Seems like you stopped growing up as reached the "mughthi"! :)

NewWorldOrder said...

You are such a corrupted fellow praising caste system! I am shame on you for having you learned to read Tamil.

We are not speaking Tamil pride. But we do not want you guys to enslave tamil or other indian languages.

You do not know the difference between sandal (sangha am) and dung (saani). It is waste of time to argue with you. You guys never change. You guys never allow the death of caste in India.

NewWorldOrder said...

It was commented for Taru. Not told for jeya kanthan to listen it.

NewWorldOrder said...

Bala sundari vinayagi,
I could not understand your stand. You are telling that Jeya kanthan is not good at personal life. But you are asking us to read his books as literature. It is ironical. It's hard to digest when you have to eat sweet and bitter at same time.

When it is high time said...

My name has been distorted by you, NewWorldOrder. You have even changed my sex.

I said Literary sense and Non-literary nonsense. It is possible with writers. Kannadasan is a supereme example. We don't hate his lyrics because he was a confessed womaniser, drunkard and drug addict. We don't hate Bharatiar's poems because he was a hardened drug addict. There are hundreds of such examples in literatures of all languages. Naipaul''s Hindutva leaning is not acceptable to many people. But he won Nobel prize not for his non-literary Hintuva; but for his early novels, which should be read and enjoyed by all. He is one of the finest living prose stylists in English lit.

I don't want to flog these examples to death. Only remain saying this: If we reject the writings of an author based on personal character, we will have to lose a lot of good literature. A child born to a prostitute is not to be rejected because it is illegitimate. The child and the mother are linked by umbilical cord; and yet, they belong to two different worlds for ever. Is there any irony here? Loving one and hating other: both from the same stock :-) NO! Good literature stands on its own: it recommends itself. No extraneous agency, including the author's good social conduct, is necessary.

With this literary principle, I took and read Karunaiyinaal Alla and Yarukkaaka Azuthaan. Great work. Derived immense literary pleasure. I took thereafter Cinemaavukku pona siththaalu and on finsihing it threw it into fire. It is a book which is an example of how to abuse one's status as an established writer. He abused it brazenly. He used, or rather, abused the poor of Chennai as caricatures in order to mount his agenda: Scurrilous attack on the mass hero MGR. That endeared him to the rival of the hero: Muka. Is it literature? NO! It is trash of the most condemn-able kind in the name of literature.

Accept this principle: you will have good time with books.

My obituary on Jeyakantan: LOVE HIM OR HATE HIM; BUT YOU CAN'T IGNORE READING HIS NOVELS AND SHORT STORIES. MY MODERN TAMIL LITERATURE HAD A FRESH AIR TO BREATH WHEN HE WROTE.

-- Bala Sundara Vinayagam (Male)

வருண் said...

****We don't hate his lyrics because he was a confessed womaniser, drunkard and drug addict. We don't hate Bharatiar's poems because he was a hardened drug addict.****

Self-destruction is not same as arrogance or being "disloyal"!

Self-destruction should not be compared with "lack of loyalty" to his own community. A guy who is disloyal to his own "mother tongue" and "his family" is a CHEAP human being. Unfortunately JK falls in that category.

If you want me to criticize his novels/ short stories, I can do that too. His writings are not flawless either. Yes, he was a great writer. That's why we do not want him to be "disloyal" to the language and the community which awarded him everything he "earned".

Just because he was a great writer, we dont have to overlook his "UGLY interior". Nobody is makin gup stories here. He himself revealed his ugly interior.NewWorldOrder said...

Mr Bala sir,
I know you are male, but I purposefully distorted your name . Because I want to teach you a good lesson about the impact of WRITING from your case itself. If I know you are male, and if I write as in other form, it hurts you! right?

Same thing will apply for any body who thinks/knows about Tamil and writes his view in differently.

I am not concerned whether jeya kanthan is drunkard or womanizer, but I am concerned that he was surviving by the grace of Tamil. But he commented Sanskrit is superior to Tamil . It cannot be accepted.

In fact, we are not talking empty pride of Tamil.nit has wealth of literature for greater antiquity than any other languages.

taruada said...

This is what is called as linguistic intolerance.

When it is high time said...

No it hasn't hurt me. But it will, if only I consider being a female is bad. If someone calls me transgender too, I won't mind. You can call me that. I don't disrespect people for no fault of their own.

I have made it clear that Jeyakantan's statement about Tamil vs Sanskrit will hurt all Tamils, not only language fanatics. At the same time, it will be examined and accepted, if found convincing, if the same statement is made by a scholar from an appropriate forum, who is known for his erudition in both languages. In fact, some learned people who are not Tamils, have told me the same: Tamil lacks sufficient letters to express various shades of feelings as against Sanskrit which has.

All said and done, I won't accept the books of any author derided just because he has made statements which hurt a lot of people. Written literature and spoken words are different for me.

If you don't accept, we may agree to disagree.

- Bala Sundara Vinayagam

வருண் said...

*** taruada said...

This is what is called as linguistic intolerance. ***

You misinterpret everything for your convenience. JK was a "Tamil traitor" and he was disloyal to Tamil and Tamils. Yeah, he was a great writer. So what? You dont have to defend him for any nonsense he was doing just because he knows how to tell "stories"!

NewWorldOrder said...

Where is the point of linguistic intolerance here? When you get hurt, if I point out, it is my intolerance. What can be called for your behaviour?

NewWorldOrder said...

For her (Taruda), what she says is correct! She cannot accept others opinion. If she cannot accept our opinion, she will mark as racist/chavaunist/intolerant. What is called for this stupid behavior?

KILLERGEE Devakottai said...


வணக்கம் நண்பரே தங்களது கருத்து அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது நண்பரே எதையும் ஒளிவு மறைவின்றி சொன்னதற்க்கு ஒரு சபாஷ்.

yathavan nambi said...

அன்பு நண்பரே!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!

நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!

புதுவை வேலு

Yarlpavanan Kasirajalingam said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

வருண் said...

***KILLERGEE Devakottai said...


வணக்கம் நண்பரே தங்களது கருத்து அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது நண்பரே எதையும் ஒளிவு மறைவின்றி சொன்னதற்க்கு ஒரு சபாஷ்.***

வாங்க, கில்லர்ஜி. பொதுவாக பெரிய ஆட்களை இதுபோல் விமர்சித்தால் எல்லோரும் மந்துக்குள்ளேயே திட்டிவிட்டுத்தான் போவார்கள். உங்களைப் போல் இப்படி பாராட்ட ரொம்பவே திறந்த மனது வேண்டும். நன்றி. :)

வருண் said...

தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி, யாதவன் நம்பி மற்றும் யாழ்பாவணன் அவர்களே! :)

Mathu S said...

அவசியமான பதிவு...
வழக்கம்போலவே ... எதிர்திசையில் இருந்து...
பெரும் எழுத்தாளுமை என்பதில் எந்த மாற்றும் கிடையாது ..
ஒரு மனிதனாக சரிந்துபோய்விட்டார்...
என்னோமோ போடா மாதவா... நிலைதான் போங்க

வருண் said...***Mathu S said...

அவசியமான பதிவு...
வழக்கம்போலவே ... எதிர்திசையில் இருந்து...
பெரும் எழுத்தாளுமை என்பதில் எந்த மாற்றும் கிடையாது ..
ஒரு மனிதனாக சரிந்துபோய்விட்டார்...
என்னோமோ போடா மாதவா... நிலைதான் போங்க***

வாங்க மது!! உங்களுக்குத் தெரியுமா என்னனு தெரியவில்லை, பதிவுலகில் ஜெ கே வுடைய நெருங்கிய சொந்தம் ஒருவரும் இருக்கிறார். என்ன பண்ணுறது? தன் தாய்மொழியை இழிவுபடுத்திய ஜே ஜெ கே க்கு "இந்தத் தண்டனை" குறைவான ஒன்றே!

Mathu S said...

தெரியும் அவரது தளம் நான் வாசிக்கும் தளம்தான்

KILLERGEE Devakottai said...


நண்பரே பெரிய மனது சின்ன மனது 80ல் எமக்கு நம்பிக்கை இல்லை இந்தியா கருத்து சுதந்திரம் உள்ள நாடு உங்களது கருத்துகளை நீங்கள் உங்கள் தளத்தில் எழுதுகிறீர்கள் அதை பொது இடத்தில் வைக்கிறீர்கள் அதில் கருத்து சொல்வது எனது உரிமை அதை எவனும் கேள்வி கேட்க முடியாது நீங்கள் உள்பட (காரணம் தாங்கள் பொதுவில் வைத்ததால்) தங்களது கருத்து எனக்கு பிடிக்காமல் போனால் அதைத்தான் எழுதியிருப்பேன் காரணம் எனக்கும் சுதந்திரம் உள்ளதே... என்ன ஒன்று நாம் வரம்பு மீறக்கூடாது அதாவது அனாவசிய வார்த்தைகள் அதுதான் பொது நாகரீகம் மற்றபடி நான் யாருக்கும் பயப்படும் பழக்கம் இல்லை பிறந்தது முதல் காரணம் நான் நேர்மையானவன் தாங்கள் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.
நன்றி நண்பரே...