Monday, May 23, 2016

அமெரிக்கா சொர்க்கபூமியா? இந்தியர்கள் கவனிக்கவும்!

சங்கீதா ரிச்சேர்ட்னு ஒரு மலையாளி, அமெரிக்கா வர எந்தவித படிப்பறிவோ, தகுதியோ இல்லாத இவர் வேலைக்கு வந்த இடத்தில்  தன்னை அழைத்து வந்த எஜமானி தேவயாணியை வில்லனாக்கி அமெரிக்க குடியிரிமை பெற்றுவிட்டார். ஜீசஸ்தான் பாவிகளை மன்னிச்சுடுவாரே? துரோகிகளும் ஒரு மாதிரியான பாவிகள்தான். ஒரு தர சர்ச்க்கு போயி பாவமன்னிப்பு கேட்டுவிட்டால்  ஜீசஸ் மன்னிசுட மாட்டாரா என்ன?

சமீபத்தில் இவரும் இவர் கணவர் ரிச்சேடும் டைவோர்ஸ் ஃபைல் பண்ணிவிட்டதாக ஒரு செய்தி.

சங்கீதா-ரிச்சேர்ட் இதுவும் உண்மையான டைவோர்ஸா?  இல்லைனா இன்னும் ரெண்டு பேரை இருவரும் ,மறுமணம் புரிந்து அவர்களையும் அமெரிக்க குடிமகள், குடிமகனாக்க இன்னொரு ஸ்ட்ரட்டஜியா என்னனு எனக்குத் தெரியவில்லை. அனேகமாக இது அந்தவகை டைவோர்ஸாக இருக்கலாம்னுதான் எனக்குத் தோனுது. ஜீசஸ்தான் இன்னொரு சர்ச் விசிட் செய்தால் மன்னித்து விடுவாரே?

------------------------------

இதுபோல் பலவிதமான மானிப்புலேசன் செய்து அமெரிக்கா வந்து வாழ ஆரம்பித்துவிட்டால். அப்படியென்ன அமெரிக்கா சொர்க்கமா? இவர்கள் இப்படி வந்து வாழ்வதால் அது சொர்க்கபூமி என்று ஆகிவீடுமா என்ன?

அதுதான் இல்லை.

அமெரிக்கவாழ் இந்திய குடிமக்கள் வாழ்க்கை எல்லாம் நாறிக்கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்க சட்டதிட்டங்கள் எந்தளவுக்கு சங்கீதா ரிச்சேர்டை வர வேற்றதோ அதேபோல் நாளைக்கு இன்னொரு முகத்தைக் காட்டலாம். அப்புறம் ஜீஸஸ் மன்னித்தாலும் அமெரிக்க சட்டம் மன்னிக்காது.

அப்படி என்ன நாசமாப்போயிட்டாங்க?

கீழே படத்தில் உள்ள ஐயா, அந்தம்மாவை சுட்டுக் கொன்னுட்டு, அவரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டாராம். அவருக்கு வயது 62. அந்தம்மாவுக்கு 58 னு சொல்றாங்க!

anil kharabanda
Anil Kharabanda, 62, and Neeta Kharabanda, 58* தேன்மொழி ராஜேந்திரன் சிவகுமார்னு ஒரு தம்பதியினார் தன் குழந்தையை ஒரு குஜராத்தி பெண்ணிடம் பேபி சிட்டிங் சொல்லிப் பார்க்கச் சொல்ல,, அந்தப் பொண்ணுக்கு ஏதோ மனவியாதியாம். குழந்தையை என்ன செய்தது, எப்படி பார்த்துக்கொண்டதுனு தெரியவில்லை. குழந்தை இறந்துவிட்டது. அந்தப்பொண்ணைப் பிடிச்சு உள்ள போட்டுட்டாங்க. இந்த தம்பதியர் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதால் சட்டம் இவர்களையும் விடவில்லை!
சிவகுமார், தேன்மொழி ராஜேந்திரன், கிஞ்சால் பட்டேல் (பேபி சிட்டர்)


* பிரபலப் பாடகர் கே ஜே ஜேசுதாஸ் சகோதரி பையனாம் இவர். ஆனந்த் ஜான் என்பது பெயர். இந்தியாவில்பிறந்து அமெரிக்காவில் "ஃபேஷன் டிஷைனர்" ஆக பணியாற்றி பிரபலமானவர்.

ஆனந்த் ஜான்


ஆமா இப்போ என்ன பண்ணுகிறார்?

ஜெயில்ல ஆயுள் தண்டனை கைதி!

என்ன பிரச்சினை? கொஞ்ச வயது பெண்களை தவறான முறையில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு.

சங்கீதா ரிச்சேர்ட்க்கு அமெரிக்க சட்டம் சப்போர்ட் செய்தது.. அமெரிக்கக் குடியிரிமை வழங்கியது. இதென்ன சட்டம்? ணு தப்புக் கணக்குப் போட்டுடாதீங்க.

அமெரிக்க சட்டத்திற்கு இன்னொரு முகம் உண்டு.

அமெரிக்காவீல் வாழ்ந்திருந்தால் சல்மான் கான் எல்லாம் ஜெயில்லதான் இருப்பாரு..

இந்தியர்களைத்தான் அமெரிக்கா இப்படி செய்கிறது என்றெல்லாம் பொய் குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டாம்.. அமெரிக்க சட்டம் "பில் காஸ்பி" யையும் விடாது.

5 comments:

viyasan said...

உண்மையை எடுத்துரைக்கும் நல்ல பதிவு.

Avargal Unmaigal said...


சொர்க்கத்தில் வாழும் தங்கள் பிள்ளைகளை அல்லது பேரக் குழந்தைகளை பார்க்க வரும் நம்மூர் தாத்தாப்பாட்டிகளில் சில பேர் ஷாப்பிங்க் செல்லும் போது அங்குவைத்திருக்கும் சிறு பொருட்களை பழக்க தோஷத்தில் யாரும் பார்க்கவில்லை என்று எடுத்து பாக்கெட்டில் அல்லதுஹேண்ட் பேக்கில் போட்டு கொள்வார்கள் ஆனால் கேமரா மூலம் அண்ணங்கள் பார்த்து கொண்டு இருப்பதை அறியமால் இறுதியில் மாட்டிக் கொள்வார்கள் இந்தியாவில் என்றால் நாலு அடி அடித்து விட்டுவிடுவார்கள் ஆனால் இங்கு ஒரு டாலர் மதிப்பு மிக்க பொருள் என்றாலும் அந்த நிறுவனத்தார் ரிப்போர்ட் செய்தால் போலீஸ் அரஸ்ட் செய்துவிடுவார்கள் அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அவர்கள் மீண்டும் இங்கே குழந்தைகளை பார்க்க வரமுடியவே முடியாது இதை பற்றி நான் முன்பு ஒரு பதிவு இட்டு இருந்தேன் அந்த லிங்கை முடிந்தால் கண்டுபிடித்து சொல்லுகிறேன்...


அமெரிக்கா சொர்க்கமட்டுமல்ல சிலசம்யங்களில் நரகமாகவும் மாறிவிடும்

G.M Balasubramaniam said...

நீங்கள் குறிப்பிட்டுள்ளவர் இந்தியாவில் இருந்திருந்தால் சட்டம் எப்படி அணுகிஇருக்கும் ?ஒரு சந்தேகம் எழுகிறது

ஆரூர் பாஸ்கர் said...

புதிய தகவல்கள். அந்த குழந்தைக்கு நேர்ந்தது மிகக் கொடுமை.

Srimalaiyappanb sriram said...

அட கருமமே ... ஊரா அது