Wednesday, November 2, 2016

கமலு அவர்களே! கல்யாணம் மட்டுமா உடையுது?

உலகநாயகன் விசிறிகள் மன்னிக்கவும். சில வருடங்கள் முன்னால "திருமணங்கள் உடைகின்றன! அதனால் என்னைப் போல் சேர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிதாக இருக்கும். கம்மிட்மெண்ட் இல்லாத உறவுகள் உடையாது. பலப்படும்"  என்பதுபோல் எடுத்துவிட்டார் நம்மாளு.

இப்போ இவருக்கும் கவுதமிக்கும் ஏதோ பிரச்சினையால் பிரிய வேண்டிய கட்டாயம். இவர் கல்யாணம் செய்து ரெண்டு பேரிடம் இருந்து பிரிந்ததுக்கும், சேர்ந்து வாழ்ந்து பிரிந்ததுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இப்போ?

சேர்ந்து வாழ்வதும் திருமணம் செய்து வாழ்வதுபோல்தான். பிரியும்போது ரெண்டிலுமே ஏற்படும் வலி சமமானதுதான். என்ன இவரோட பணம் சொத்து எதையும் சேர்ந்து வாழ்ந்தவர் பெற முடியாது. அந்த வசதிக்காகத்தான் இவரு (அவரும்தான்) சேர்ந்து வாழ்ந்தது. அதைப் பச்சையாக சொல்வதை விட்டுப்புட்டு என்னவோ எனக்குத்தான் வாழத் தெரியும்னு சும்மா எதையாவது சொல்லக்கூடாது.

இந்தக்காலத்தில் நட்பே எளிதாக உடையுது. இதில் கல்யாணம் என்ன? லிவிங்க் இன் டுகெதெர் என்ன?  எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்!

எதற்க்கெடுத்தாலும் எனக்குத்தான் எல்லாம் நல்லாப் புரியுது, எனக்குத்தான் வாழத் தெரியும் என்பதுபோல்  எதையாவது உளறாமல் வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ளுங்கப்பா!

11 comments:

விசு said...

You took the words right out of my mouth! By the Way! Who is your early fav of NFL this season?

G.M Balasubramaniam said...

திருமணமோ லிவிங் இன் டுகெதரோ அவரவர் விருப்பம் ஆனால் அதுதான் இப்போதெல்லாம் முன்னேற்றத்தின் குறியீடாக இருக்கிறது

திண்டுக்கல் தனபாலன் said...

மட்டை தான்... சரி தான்...

வருண் said...

***விசுAWESOME said...

You took the words right out of my mouth! By the Way! Who is your early fav of NFL this season?***

Hi Visu!

I have always been a Dallas Cowboys fan- the team most Americans hate! :-) They do do well this season with a new Rookie qb Prescott and Rb Elliot! :)

வருண் said...

***G.M Balasubramaniam said...

திருமணமோ லிவிங் இன் டுகெதரோ அவரவர் விருப்பம் ஆனால் அதுதான் இப்போதெல்லாம் முன்னேற்றத்தின் குறியீடாக இருக்கிறது.***

வாங்க ஜி எம் பி சார்!

ரெண்டு வகையான மனிதர்கள்தான் சார்.

* ஒண்ணு தன் சந்தோசம்தான் தன்னை சந்தோஷப்படும் என்கிற மனநிலையில் வாழ்பவர்கள்.

* ரெண்டு, மற்றவர்களை சந்தோஷப் படுத்தி அதனால் சந்தோஷமடைபவர்கள்.

கமல்ஹாசன் இதில் முதல் வகை!

தன் வாழ்க்கையை நியாயப்படுத்த "திருமணங்கள் உடைகின்றன" என்பதுபோல் வியாக்யாணம் பேசும்போது எரிச்சல் வந்தது. இப்போ இவர் வாழ்ந்த இந்த வாழக்கையும் உடையத்தான் செய்யுது. It is not "marriage" or "live-in-together" 's fault. IT IS HIS fault! He belongs to the first category I listed. That is the honest truth.

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

மட்டை தான்... சரி தான்...***

வாங்க தனபாலன்! மறுபடியும் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி! :)

நிஷா said...

இந்த லோகத்தில் இதான் முக்கியம் என்பது போல் எல்லாரும் பேசித்தீர்த்தாச்சா? இப்போவெல்லாம் இந்தமாதிரி சேர்தலும் பிரிதலும் சாதாரணமாய் இருக்கும் போதும் இவர்களுக்கு மட்டுமேன் இத்தனை பப்ளிசிட்டி எனத்தான் எனக்கும் புரியவில்லை.

அவங்கவங்க பிரைவசி எப்படி இருந்தால் நமக்கென்ன? நம்மாளுங்களுக்கு வேற வேலையே இல்லை!

வருண் said...

***நிஷா said...

இந்த லோகத்தில் இதான் முக்கியம் என்பது போல் எல்லாரும் பேசித்தீர்த்தாச்சா? இப்போவெல்லாம் இந்தமாதிரி சேர்தலும் பிரிதலும் சாதாரணமாய் இருக்கும் போதும் இவர்களுக்கு மட்டுமேன் இத்தனை பப்ளிசிட்டி எனத்தான் எனக்கும் புரியவில்லை.

அவங்கவங்க பிரைவசி எப்படி இருந்தால் நமக்கென்ன? நம்மாளுங்களுக்கு வேற வேலையே இல்லை! ***

வாங்க நிஷா! பார்த்து ரொம்ப நாளாச்சி! :) எனக்கும் வேலை அதிகமாயிடுச்சு, நானும் இந்தப்பக்கம் அதிகமாக (முன்போல்) வர்ரதே இல்லை!

கெளதமிதான் தான் பிரிந்ததாக இல்லோகத்துக்கு சொல்லியிருக்கிறார். ஆவர் பாட்டுக்கு பிரிந்து போயிட்டு தன் ப்ரைவசி பற்றி லோகத்துக்கு சொல்லவில்லையெனில், யாரும் இதைப் பற்றி பேசமாட்டாங்க.

அவரே முன் வந்து இதை வெளியிட்டு எல்லாரையும் பேச வைத்துவிட்டார். மற்றபடி உறவுகள் உடையத்தான் செய்யும். "திருமணம்" என்கிற ஒரே உறவுக்கும் மட்டும் சொந்தமானது இல்லை. உயிருக்கு உயிராக இருந்த நண்பர்கள்/தோழிகள், காதலர்/காதலிகள், சேர்ந்து வாழ்ந்தவர்கள் எல்லாரும் பிரிந்து கொண்டுதான் இருக்காங்க. திருமணங்கள் உடைகின்றன என்கிற என்கிற கமல்ஹாசன் நியாயப்படுத்தல் தேவையற்றது. என் திருமண்ம் உடைந்தால் மற்றவர் திருமணம் உடையவேண்டிய கட்டாயம் இல்லை. எனக்கு உடைந்ந்ததால் திருமணத்தை குறை கூறுவது தேவையே இல்லாதது என்பதை கமல் மட்டுமன்றி நீங்களும் புரிந்ந்து கொள்ளணும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கிறேன், நிஷா :))

நிஷா said...

வேலைஅதிகம்,எப்போதும் நவம்பரில் கொஞ்சம் பிரேக் தான்.

திருமணங்கள் எல்லாமே உடைகின்றன என நானும் புரிந்து கொள்ளவும் இல்லை,சொல்லவும் இல்லை.இக்காலத்தில் எல்லா உறவிலும் சேர்தலும் பிரிதலும் சர்வ சாதாரணமாக போய் விட்டது என்று தான் நானும் சொல்ல வந்தேன்.

நீங்க சொன்னதும் சரிதான் அவங்களே தங்கள் பிரச்சனைக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்கின்றார்கள். நம்ம மீடியாக்களும் அதற்கு கொம்பு சீவி விடுகின்றார்கள். நம்மாட்கள் நல்ல சத்தமாக ஊதி கொண்டிருக்கின்றார்கள்.

'பரிவை' சே.குமார் said...

நடிகனாய் கமல் பிடிக்கும்...
தனிப்பட்ட வாழ்க்கையில் அவரின் போக்கு நமக்கெதற்கு... இவரைப் போல் நிறைய இருக்கிறார்கள்...

13 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு பிரிந்து செல்லும் கவுதமி, அதற்கு காரணமான கருத்துக்களில் தன் மகளின் வாழ்வும் முக்கியம் என்று சொல்வதுதான் கேலிக்கூத்தானது... 13 வருடமாக மகள் குறித்து சிந்திக்கவில்லையா... அதைச் சொல்லியிருக்க வேண்டாம்....

ஓகே... அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்... :)

வருண் said...

வாங்க குமார். கமல் கெளதமியை விடுங்க. பொதுவாக நம் சிந்தனைகள், தேவைகள் நாளுக்கு நாள் மாறுகிறது. அதற்கேற்ப நாமும் மாறுகிறோம்.

என் வாழ்க்கையிலேயே நான் பலரைப் பார்த்து இருக்கிறேன். மாறிக்கொண்டே போவதை. அதேபோல் நானும் மாறிக்கொண்டே போகிறேன். அது மற்றவருக்கு என்னைவிட நல்லாவே புரியும்.

இன்றைக்கு ஒருவருக்கு என்ன முக்கியம் அல்லது யார் முக்கியம்? நாளைக்கு என்ன முக்கியம் அல்லது யாரு முக்கியம்? 10 வருடம் சென்று என்ன முக்கியம், யாரு முக்கியம்? என்பது மாறிக்கொண்டேதான் போகிறது.