Tuesday, November 22, 2016

கலிஃபோர்னியாவில் கஞ்சா புகைக்கலாம்!

உலகம் எப்படி தோன்றியது? மனிதன் எப்படி தோன்றினான்? சிவன், விஷ்ணு, அல்லா, ஜீசஸ் லார்ட் கிருஷ்ணா எல்லாரும் சேர்ந்து மனிதனை உருவாக்கி, அப்புறம் காடு, கடல், தாவரங்கள், சூரியன், சந்திரன், மிருகங்கள் பறவைகள் எல்லாவற்றையும் உருவாக்கினாங்கனு எவனாவது சொன்னால்  யாருடா இந்த கிறுக்கன் அல்லது கிறுக்கச்சினு நினைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது இன்றைய மனநிலை. மனிதனின் மனவியாதிக்குக்கு கடவுள் என்னும் கற்பனை ஒரு மருந்து. அவ்வளவே!

ஒருபக்கம் சிகரட் குடித்தால் நுரையீரல் புற்று நோய் வரும் என்றும், அல்கஹால் குடித்தால் கல்லீஈரல் பழுதாகும் என்று வியாக்யாணம் பேசிக்கொண்டு அலைகிறார்கள். இன்னொரு பக்கம் கஞ்சாவை லீகல் ஆக்கிக் கொண்டு வருகிறார்கள். கலிஃபோர்னியாவில் கடந்த நவம்பர் எல்கசனில் கஞ்சா பயன்படுத்துவது லீகல் ஆக்கப் பட்டது!

என்ன காரணம்?

பணம் தான். வேறென்ன?

நல்ல வகையில் சம்பாரிப்பது கஷ்டம். கெட்ட வழியில் சம்பாரிப்பது எளிது. இதை மக்கள் செய்தால் தவறு. அரசாங்கம் மக்களுக்காக, மக்களை சீரழித்து (உடல் நலத்திற்கு தீங்கானது என்கிற எச்சரிக்கையுடன்)  செய்தால் தவறில்லை! கடவுள் மன்னித்து விடுவார். Because in God we Trust!

டாஸ்மாக் வருமானம்தான் இன்னைக்கு தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை காப்பாத்தி வருகிறது. அதேபோல்தான் அமெரிக்காவிலும், அல்கஹால், சிகரட், போர்னோக்ராஃபி, சூதாட்டம், லாட்டரி, இப்போ கஞ்சா இவைகளில் வரும் வருமானம் அரசாங்கத்திற்கு முக்கியமானதாகி விடுகிறது.

இன்று கலிஃபோர்னியா! பிறகு பல மாநிலங்களில்! பிறகு அமெரிக்காவில் எல்லா மாநிலங்களிலும்.

இந்தியாவில் எப்போது கஞ்சா கடையில் கிடைக்கும்?

இன்னும் ஒரு 20 வருடங்கள் பின்னால், கஞ்சா லீகல் ஆகும். கஞ்சா அடிக்காமல்தான் நாளுக்கு நாள் நம்ம ஊரில் மெண்டல்கள் அதிகமாகிக்கொண்டு போகிறான். கஞ்சாவில் தன்னை மறந்தால் மனநிம்மதி கிடைக்கும்னு ஒரு தியரி அறிவியல் பூர்வமாக்வே வெளியிடலாம்.

ஆக, மனிதன்னா என்ன? சும்மா கடவுள், காதல்னு எதையாவது கற்பனைகளை உருவாக்கி தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து சாகும் மடஜன்மங்கள்!

விலங்குகள் தவறுகள் செய்யும். அதை நியாயப் படுத்தாது. ஆனால் ஆறிவுள்ள மனிதர்கள் தவறுகள் செய்தால் அதை வெட்கமே இல்லாமல் கேவலமாக நியாயப்படுத்துவான்.

கடவுள் என்பான், மன்னிப்பார் என்பான், பாவி என்பான், பாவ மன்னிப்பு என்பான்! இப்படி அவனையும் ஏமாற்றி ஊரையும் ஏமாற்றி இவன் வாழும் வாழ்க்கை பரிதாபத்துக்குரியது!

இன்னுமா வாழ்க்கை பற்றி, மனிதன் பற்றி புரியவில்லை உங்களுக்கு? மூளையை சரியாக பயன்படுத்துங்கள்! முடியவில்லையா? கொஞ்சம் கஞ்சா புகைத்துவிட்டு ட்ரைப் பண்ணுங்க! கடவுள் உதவவில்லையென்றாலும் கஞ்சா உதவலாம்!


6 comments:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...


அருமையான தகவல்
சிறந்த படைப்பு

G.M Balasubramaniam said...


@ கஞ்சா புகைக்க கலிஃபோர்னியா போகவேண்டுமா. திருவண்ணாமலையில் நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன்

ஆரூர் பாஸ்கர் said...

ஏன் புலம்பல் வருண். கொஞ்சம் விவரமாக சொல்லுங்களேன். லீகல் மெரவாணா பார் மெடிக்கல் ??

வருண் said...

***Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...


அருமையான தகவல்
சிறந்த படைப்பு***

வாங்க, காசிராஜலிங்கம்! :)

வருண் said...

*** G.M Balasubramaniam said...


@ கஞ்சா புகைக்க கலிஃபோர்னியா போகவேண்டுமா. திருவண்ணாமலையில் நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன் ***

வாங்க ஜி எம் பி சார்! இங்கேயும் ஆதேபோல் "இல்லீகலாக" புகைக்கிறாங்க சார். கலிஃபோர்னியாவில் சட்டமே இதை அனுமதிக்கிறது. :)

வருண் said...

***ஆரூர் பாஸ்கர் said...

ஏன் புலம்பல் வருண். கொஞ்சம் விவரமாக சொல்லுங்களேன். லீகல் மெரவாணா பார் மெடிக்கல் ??***

இல்லைங்க நான் மெடிக்கல் மிருவானா (கஞ்சா) பற்றி நான் சொல்லவில்லை. கலிஃபோர்னியாவில் "ரெக்ரியேஷனல் ட்ரக்" காக அனுமதிக்கிறாங்க. 21 + ஆக இருந்தால் சிகரெட் வாங்குவதுபோல் கஞ்சாவும் வாங்கி புகைக்கலாம். :)