Thursday, January 11, 2018

கடவுளின் காதலியா ஆண்டாள்? வைரமுத்துவும் ஞானபீடமும்!

வைரமுத்து ஞானபீடம் பெற்று விடுவாரோ? என்ற வயித்தெரிச்சலில் ஜெயமோகன், சாரு எல்லாரும் இருக்கும்போது ஆண்டாள் பற்றி வைரமுத்து ஏதோ சொல்லப் போக, சாரு முதல்க்கொண்டு ஆண்டாளுக்கு வக்காலத்து.

வைரமுத்துக்கு ஞானபீடமா?னு ஜெயமோகன் ஒப்பாரி மேல் ஒப்பாரி வைத்துவிட்டார்.

இப்போ மகா யோக்கியன் சாரு, ஆண்டாளுக்கு வக்காலத்து


ஆண்டாள் பற்றி வைரமுத்து பேசியிருப்பதைக் கேட்டேன். திட்டமிட்டுத்தான் பேசியிருக்கிறார். ஏனென்றால், அது பேச்சு அல்ல. எழுதிப் படிக்கிறார். யாரோ ஒரு முட்டாள் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தாராம், ஆண்டாள் தாசி என்று. என்னடா என்று பார்த்தேன். கடவுளைக் காதலனாகக் கற்பித்துப் பாடியதால் தாசியாம். அட அறிவுக் கொழுந்துகளா… கடவுளைக் காதலனாக நினைத்துப் பாடுவது நாயக – நாயகி பாவம் என்பது கூடவா கவிப் பேரர்ஜவுக்குத் தெரியவில்லை? கடவுளைக் காதலனாக வரித்தால் தாசியா? அந்த அமெரிக்க ஆய்வாளரைப் பார்த்தால் அவர் முகத்தில் காறி உமிழுங்கள். மேலும், இதை மேற்காள் காட்டிப் பேசியிருக்கும் வைரமுத்துவைக் கைது செய்ய வேண்டும். இதற்குப் பெயர் எல்லாம் கருத்துச் சுதந்திரம் இல்லை. ஒரு ஞானியைத் தேவடியாள் என்று சொல்ல உனக்கு எவன் உரிமை கொடுத்தது? தாசி என்றால் என்னய்யா அர்த்தம்? ஆண்டாள் பெருமாளுக்குத் தன்னைக் கொடுத்தாள். தேவரடியார் என்ற பிரிவை ஏற்படுத்திய சமூகம் அவர்களைத் தங்கள் காம உணர்வுகளைத் தணித்துக் கொள்ளப் பயன்படுத்தியது. ஆண்டாள் அப்படி அல்ல. சரி, கவிப் பேரரஜு, biological ஆக தகப்பனார் யார் என்று தெரியாதவர்களை தாசி என்று சொல்லும் நீங்கள் இதே தர்க்கத்தை மற்றொரு தீர்க்கதரிசிக்கும் வைப்பீர்களா? அந்த தைரியம் உங்களுக்கு உண்டா? இப்படிக் கேட்பதால் என்னை இந்துத்துவா என்று சொல்லக் கூடாது. நான் இந்துத்துவாவைக் கடுமையாக எதிர்ப்பவன்.
ஆண்டாளை தாசி என்று சொன்னதன் மூலம் வைரமுத்து தமிழ்க் கவிஞர்களையும் தமிழையும் தமிழ்ச் சமூகத்தையும் அவமதித்து விட்டார். அவரைக் கைது செய்ய வேண்டும்…

சாரு, இவன் புத்தகத்தை எவனும் படிக்கிறதில்லைனதும் தமிழர்களை இஷ்டத்துக்கு ஆடு மாடுகளுக்கு சமம்படுத்திப் பேசினான். இப்போ பெரிய யோக்கியனாட்டம், இவனோட "க்ராண்ட்மா" ஆண்டாளுக்கு வக்காலத்து.
இவனுக்கு மட்டும் பேச்சுச் சுதந்திரம் உண்டு. ஊருப்பயளுகளுக்கு கெடையாது. கழிவிலும் கழிவு இந்தாளு.

கடவுளை? கடவுளே இல்லை! அப்புறம் அவரை காதலிக்கிறது எங்கே? என்றெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது, வருண்.

பொண்ணுகளிடம் சில்மிஷம் செய்யும் கிருஷ்ணன் ஒரு கடவுள். அந்த கிருஷ்ணனை காதலித்ததால் ஆண்டாளும் கடவுள். அவர் பாசுரங்கள் எல்லாம் அருமை. ஆண்டாளை விமர்சித்தால் அது தெய்வ குற்றம். இதிலே என்ன உனக்குப் புரியலை வருண்?

ஞானபீடத்திற்கு ஆசைப்படும் வைரமுத்து, ஆண்டாளை விமர்சித்திருக்கக் கூடாதுதான். கவனக்குறைவு. சரி, விமர்சிச்சாச்சு. இப்போ என்ன பண்ணுறது?

நம்ம உலகநாயகன் இந்துக்களிடம் தானும் ஹிந்துதான்னு மன்னிப்பு கேட்கவில்லையா?

அதேபோல் நம்ம வைரமுத்துவும் மன்னிப்பு?

ஆக மொத்தத்தில் எந்த ஆசையும் இல்லாத (புத்தனுக்கு அடுத்து) வருண் மட்டும்தான் ஆண்டாளை கடவுள் என்பது கேலிக்கூத்துனு எழுத முடியும். வேற எந்தக் கொம்பனாலும் முடியாது!

14 comments:

நம்பள்கி said...

மனுதர்மம் அல்லது மனுஸ்ம்ரிதி மூலம் சூத்திரர்கள் என்று வரையறுக்கப்பட்டவர்கள், ஞான பீடை விருதை வாங்க [தலையில் இருந்து பிறந்தவர்களுக்கு] ஒத்து ஊதினா தான் முடியும் என்பதை ஜெயகாந்தன் என்ற சூத்திரன் (according to Manusmrithi) ¨ஜெய ஜெய சங்கரா¨ என்று ஒன்று எழுதி ¨ஞான பீடை¨ விருதை வாங்கினார்; அதே அணுகுமுறை தான் தனக்கும் என்று ஏன் வைரமுத்துவிற்கு புரியவில்லை? என்ன படித்தது என்ன அறிவு இருந்து என்ன உபயோகம்---தனது அறிவை உபயோகப் படுத்தவில்லை என்றால்? அந்த அறிவு இருந்தால் என்ன இல்லாமலே போனால் என்ன?

So, ஜெயகாந்தன் ¨ஜெய ஜெய சங்கரா¨ என்று ஒரு தமிழ் நாவல் எழுதி ஞான பீடை விருதை வாங்கினா மாதிரி சூத்திரன் வைரமுத்து (according to Manusmrithi) அவர்கள் ¨பய பய சங்கரா¨ என்று ஒரு தமிழ் நாவல் எழுதி அந்த ¨ஞான பீடை¨ விருதை வாங்கட்டுமே!

ஜெயகாந்தன் இறந்த பொது அந்த ¨ஞான பீடை¨ விருது அவர் பூத உடலுடன் வந்ததாக அவரும் சொல்லலை--வேற எவனும் சொல்லலை----வைரமுத்து இதை சிந்தித்து பிறகு நாவல் எழுதட்டும்!

வருண் said...

அடேங்கப்பா! நம்பள்கியா இது!!! :)

வருண் said...

ஆமாம், தமிழின துரோகி ஜெவகாந்தன், தமிழனை, தமிழை இகழ்ந்து ஹிந்துக்களையும் சமஸ்கிரதத்தையும் உயர்த்தி வாங்கியதுதான் அவ்விருது.

விருது வாங்கணும்னா யாரையாவது விக்கணும். அட் லீஸ்ட் மானத்தையும், சுய மரியாதையும் விற்கணும். இப்போ வைரமுத்து விலை பேசிக்கொண்டு இருக்கிறார். :)

Yarlpavanan said...

தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

நம்பள்கி ?

=

https://www.blogger.com/profile/10243505907080194057

புதிய வார்ப்புகள் : http://kaatupanni.blogspot.in/
ஆன்மீக உலா...! : http://kaattu-erumai.blogspot.in/

!!!!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதன் தலைப்பில் - சாருவின் வயிற்றெரிச்சலும் என்று சேர்த்திருக்கலாம். வைரமுத்துவும் ஆண்டாளை நன்கு புகழ்ந்து அவர்களைக் குளிமைப்படுத்திதான் பேசி, சற்று " தங் சிலிப்பாகி" விட்டார். அவ்வளவே!
வைரமுத்துக்கு விருது வேண்டும். உங்கள் ஆசையை "ஜெயகாந்தன்" போல் விரைவில் ஈடேற்றுவார்.
அவர் ஏற்கனவே "மாயக் கண்ணன் குழலைக் கேட்டு, மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டவரே! " நாத்திகம் பேசிக் கொண்டு!

தனிமரம் said...

ஞானபீடம் விருது விரைவில் கவிப்பேரசு வைரமுத்துக்கு கிடைக்கட்டும்)))

தனிமரம் said...

நம்பளகி blogs
புதிய வார்ப்புகள்
ஆன்மீக உலா, புதிய வடிவில் வந்துவிட்டார் போல)))

வருண் said...

***Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்***

நன்றிங்க! உங்க, மற்று உங்க குடுப்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

நம்பள்கி ?

=

https://www.blogger.com/profile/10243505907080194057

புதிய வார்ப்புகள் : http://kaatupanni.blogspot.in/
ஆன்மீக உலா...! : http://kaattu-erumai.blogspot.in/

!!!!!

January 12, 2018 at 5:01 AM***

அவர் ஒரேயடியா கடையை அடச்சுட்டு போயிட்டு, பின்னால் புதுக்கடை ஆரம்பிக்கிறதுதான் வழக்கம். :)

வருண் said...

***யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதன் தலைப்பில் - சாருவின் வயிற்றெரிச்சலும் என்று சேர்த்திருக்கலாம். வைரமுத்துவும் ஆண்டாளை நன்கு புகழ்ந்து அவர்களைக் குளிமைப்படுத்திதான் பேசி, சற்று " தங் சிலிப்பாகி" விட்டார். அவ்வளவே!
வைரமுத்துக்கு விருது வேண்டும். உங்கள் ஆசையை "ஜெயகாந்தன்" போல் விரைவில் ஈடேற்றுவார்.
அவர் ஏற்கனவே "மாயக் கண்ணன் குழலைக் கேட்டு, மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டவரே! " நாத்திகம் பேசிக் கொண்டு!***

ஜெயமோகனும், சாருவும் ஒப்பாரி வைப்பதைப் பார்த்தால் வைரமுத்து ஞானபீடம் வாங்கிவிடுவார்னுதான் தோனுது. :)

என்னதான் இருந்தாலும் வைரமுத்து ஒரு பச்சைத் தமிழன். வாங்கினால் சந்தோசமே!

வருண் said...

***தனிமரம் said...

ஞானபீடம் விருது விரைவில் கவிப்பேரசு வைரமுத்துக்கு கிடைக்கட்டும்)))***

பார்க்கலாம். :)

Kasthuri Rengan said...

யப்பா எங்கப்பா இருக்கீங்க

இப்படி ஒரு பாய்ன்ட் கீதா ...?

அதான் சமோவும் சாருவும் அழறாளா ?

ஆதி said...

ஆக மொத்தத்தில் எந்த ஆசையும் இல்லாத (புத்தனுக்கு அடுத்து) வருண் மட்டும்தான் ஆண்டாளை கடவுள் என்பது கேலிக்கூத்துனு எழுத முடியும். வேற எந்தக் கொம்பனாலும் முடியாது! # அருமை