Sunday, September 9, 2018

ரஞ்சனியின் அன்புத் தோழி நித்யா!

இது ஒரு மாதிரி கதை! படிச்சுட்டு என்னைத் திட்ட வேண்டாம். நான் முதல்லயே சொல்லீட்டேன். சமீபத்திய தமிழ்நாட்டை கவனிக்கும்போது, அமெரிக்கா எல்லாம் மிகவும் பின்பட்ட நிலையில் இருக்க மாதிரி இருக்கு. சரி இனிமேல் தமிழ் மக்கள் லெவெலுக்கு நாமும் எழுதுவோம்னு..

************************

படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள் ரஞ்சனி . ரஞ்சனிக்கு தூக்கம் வரவில்லை. அதிசயமாக இருந்தது. எப்படி அவளால் அந்த நிமிடம் அசையாமல் எப்படி இருக்க முடிந்தது? ஒருவேள அவளுக்கும் பிடித்ததா நித்யாவின் அந்தச் செயல்?அந்த இதம்?

நித்யா ஏன் அப்படி நடந்து கொண்டாள்? சரி அவள்தான் விளயாட்டா அப்படி நடந்து கொண்டாள் என்றால்..  போடினு தள்ளி விட்டுவிட்டு நான் விலகி இருக்கலாமே? ஒரு நிமிடம் நானும் என்னை மறந்துவிட்டேனே? ஒரு வேள எனக்கும் பிடித்ததா? நித்யாவின் உதடுகள் எத்தனைதான் சாஃப்ட். நிஜமாவே வெந்த அந்த வலி தெரியாமல் இதமாகத்தான் இருந்தது அவளுடைய அந்த ஒத்தடம். என்ன ஆச்சு எனக்கு?

*************************

நித்யாவுக்கு திருமணம் ஆகி, 6 மாதங்களில் டைவோர்ஸ் ஆகிவிட்டது. அடுத்து இன்னொருவனை டேட் பண்ணினாள். அவனும் பிடிக்கவில்லை. அடுத்து இன்னொருவன். அதே கதைதான். அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.  எல்லா ஆண்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.  மாஜி  கணவனும் சரி, கட்டி அழுத ஆண் நண்பர்களும், அன்பர்களும் சரி, அவளுக்குத் தேவையான இன்ப உச்சிக்கு அவளை அழைத்துச் செல்ல அவர்களால் இயலவில்லை. எல்லாமே ஒருதலைப் பச்சமாக இருந்தது அவர்கள் உறவில். ஆனால்  என்னவோ அவளுக்குத்தான் ஏதோ குறை இருப்பதுபோல் அவர்கள் பேசியது எரிச்சலாக இருந்தது. அவளைப் பார்த்து யாரும் பரிதாபப்படுவதும் அதைவிட பிடிக்கவில்லை.

ஆமாம், அவளுக்கு 10-15 நிமிடங்கள் பத்தவில்லை. ஒரு  மணி நேரம் தேவைப்பட்டது. இன்ப வெள்ளத்தில் நீந்தி கரையை அடைய.  அழைத்துச் செல்லத்தான் ஆண்கள் இல்லை. அவளுக்கு ஆண்களில் யாருமே அவள இன்ப உச்சிக்குக்கு அழைத்துச் செல்ல இயலாதவர்களாக தோன்றியது. இனிமேல் இன்னொரு ஆளைத் தேட வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள். தனியாகவே வாழ ஆரம்பித்தாள்.

நித்யாவின் நெடு நாள்த் தோழிதான் ரஞ்சனி. கல்லூரியில் படிக்கும்போததிருவரும் க்ளூஸ். அவள் கணவன் இந்தியா போயிருந்ததால், போர் அடித்தது என்றூ தனியாக வாழும் நித்யாவுடன் அதிக நேரம் செலவழித்தாள் ரஞ்சனி.  நித்யாவிடம் அவள் திருமணத் தோல்வி பத்தி தோண்டித் துருவி கேள்விகள் கேட்டதில்லை.  ஏதோ பிரச்சினை என்று தெரிந்தது. விட்டுவிட்டாள்.

வழக்கம்போல ரஞ்சனி அன்று வேலை முடிந்து வீட்டிற்கு போகும்போதே போர் அடிப்பது போலிருந்தது. சரி நித்யாவை போய் பார்த்து இன்னைக்கும் அவள அறுக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தாள். ஷவர் எடுத்துவிட்டு, டெக்ஸ்ட் பண்ணினாள்.

"நித்யா! கேன் ஐ கம் டு யுவர் ஹோம்?"

"பர்மிஷன் எல்லாம் எதுக்கு? புறப்பட்டு வாடி. ஓசி டின்னர் தானே வேணும்? நான் தர்ரேன். ஹேய் ஜஸ்ட் கிடிங்"

"வர வர நீ ரொம்ப கணக்கு பார்க்கிற, நித்யா. ஐ வில் ரைட் எ செக் எவ்வெரி டைம் ஐ விசிட் யு, ஓ கே?"

"வாட்டவர்"

******************

20 மினுடஸ் ட்ரைவ். காரை பார்க் பண்ணீட்டு அவள் அப்பார்ட்மென்ட் பில்டிங் உள்ளே போனாள். டாப் ஃப்ளோரில் இருந்தாள், நித்யா.

டோர் பெல் அழுத்திய உடனே கதவைத் திறந்தாள்.

"ஏய் இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கடி  ரஞ்சி " என்றாள் நித்யா புன்னகையுடன்.

"என்ன வேண்டும் உனக்கு? ரொம்ப ஐஸ் வைக்காதே!"னு அவள் "பட்" ல் தட்டினாள்.

"என்னடி தனியா இருக்க பொண்ணுட்ட இப்படி எல்லாம் தப்பா நடக்கிற?" னு சிரித்தாள் நித்யா.

இருவரும் சிரித்தார்கள். ரஞ்சனிக்கு ஏனோ ஒரே வெட்கமாக இருந்தது அவள் அப்படிச் சொன்னது.

காஃபி போட்டு எடுத்து வந்தாள், நித்யா.

" ரஞ்சி! காஃபி  ரொம்ப சூடாயிருக்கு. மெதுவாக் குடி! இல்லைனா உதட்டை பதம் பார்த்துடும்! னு வார்ன் பண்ணினாள் நித்யா.

நெட்ஃப்ளிக்ஸ்ல "orange is the new block" ஓடிக் கொண்டு இருந்தது.

"என்னடி இது? அவன் என்ன இவ  பெஸ்ட் ஃப்ரெண்டோடயே? அடப்பாவி"

"ஆமடி, அவ்ளோதான் காதல் எல்லாம்..பிரிந்து இருந்தால் கொஞ்ச நாள்தான் தாக்குப் பிடிக்கும் போல"

'என்ன இருந்தாலும் அவளோட பெஸ்ட் ஃப்ரெண்ட்தான் கெடச்சாளா இவனுக்கு? இதை எப்படித்தான் திரும்பத் திரும்ப பார்க்கிறயோ?"

"நீயும் தான் ஒவ்வொரு முறை இங்கே வரும்போதும், தேடிப்பிடிச்சு தொடர்ந்து இதைப்பார்க்கிற? ஆமா உனக்கென்ன லாரா  ப்ரெட்டான் மேலே லவ்வா?" னு  விஷமமாக சிரித்தாள்.

"கொழுப்புடி உனக்கு."

"ஐ தின்க் ஷி இஸ் ஹாட்!" என்றாள் நித்யா காசுவலாக.

"என்னவோ போ!"

நித்யா டின்னர் டேபில் செட் பண்ளிக்கொண்டு இருந்தாள். சீரியலை பார்த்துக் கொண்டே, சூடான காஃபியை பருக வாயில் வைத்துவிட்டாள் ரஞ்சனி. ஒரு சிப் உள்ளே போயி அது சுட்டவுடந்தான் அவளால் சூடாக இருப்பதை உணர்ந்து குடிப்பதை நிறுத்த முடிந்தது.

"ஓ மை காட், இட் இஸ் ஹாட்"ணு கத்தினாள்.

"நான்தான் சொன்னேன் இல்ல?"னு ஓடிவந்தாள் நித்யா.

"ஆமடி நீ சொன்ன. ஆனால் மறந்துட்டேன். சீரியல் பார்த்துட்டே"

"ரொம்ப எரியுதா உதடு?"

"ஆமடி, லிப்ஸ்ல ப்ளீஸ்டர் வரப்போது"

"இருடி,  கொஞ்சம் ஐஸ் எடுத்து வர்ரேன்"  னு ஐஸ் க்யூப்ஸ் கொண்டு வந்தாள் நித்யா.

"ஏய் ஐஸ் வைத்தால்  ரொம்ப குளிரும்.. விடுடி வேணாம்" என்றாள் ரஞ்சனி

"ஐஸ் வச்சா நல்லாயிருக்கும்டி. இட் வில் ஹெல்ப். சரி கொஞ்சம் பேசாமல் இரு"

ஒரு ஐஸ் க்யூபை தன் வாயில் போட்டு கொண்டாள் நித்யா. ; அவள் வாயை குளிரவைத்துவிட்டு பிறகு அதை துப்பிவிட்டு..

இங்கே வாடி பக்கத்திலே, பார்க்கலாம்னு அருகில் உட்கார்ந்து. அவள் நாடியைப் பிடித்து தன் பக்கம் கொண்டு வந்து  ரஞ்சனி உதட்டை ஆராய்ச்சி செய்தாள்.

 Image result for orange is the new black laura prepon


Related image
திடீர்னு குளிர்ந்த நித்யா இதழ்களை  ரஞ்சி உதட்டில் பதித்து, தன் நாக்கால் ரஞ்சியின் இதழ்கள இதமாக தடவுவதுபோல் மெதுவாக அசைத்தாள்.


இதை ரஞ்சனி கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. ஆனால் ஷாக் னாலயோ அல்லது அந்த குளிர் உதடு  அவள் உதட்டுக்கு இதமாக இருந்ததாலோ என்னவோ அவள் உடனே விலகாமல் இருந்தாள். மறுபடியும் இன்னும் அழுந்த முத்தமிட்டாள் நித்யா. எல்லாம் சில நொடிகள்தான். யுகம் போல் இருந்தது

"யு ஃபீல் பெட்டர் நவ்?" னு அவள் வாயிலிருந்து தன் உதடுகள விடுத்துச் சொன்னாள் புன்னகையுடன்.

"போடி நீ ரொம்ப மோசம்" அவள் முகம் சிவந்தது

"சரி டின்னர் சாப்பிடலாம் வா"

இருவரும் டின்னர் சாப்பிட்டார்கள். வேலை சம்மந்தமான பேச்சு. அவ ஹஸ்பண்ட் எப்போ யு எஸ் திரும்புகிறார்னு பேசுவதிலேயே போச்சு.

**************************

படுக்கையில் புரண்ட ரஞ்சனிக்கு உதட்டில் வலி தெரியவில்ல, ஆனால் நித்யாவின் இதழ்கள்தான் ஞாபகம் வந்தது. நித்யா பத்தி மட்டுமல்லாமல் தன்னைப் பத்தியே நெறய சந்தேகங்கள் வந்தன ரஞ்சனிக்கு. ஒரு வேளை எனக்கும் பிடித்ததா? அப்படித்தான் இருக்கனும். அப்போ நான் என்ன...


முற்றும்.
2 comments:

G.M Balasubramaniam said...

அண்மையில் வெளி வந்த செய்தி ஓரினச் சேர்க்கை க்ரிமினல் குற்றமல்ல இதுவே கதைக்குக்காரணமோ

வருண் said...


வாங்க ஜி எம் பி சார்!

நீங்க சொல்றது ஓரளவுக்கு உண்மைதான் சார்.

இந்தப் பதிவு பார்த்தீங்களா?

http://marubadiyumpookkum.blogspot.com/2018/09/blog-post_9.html

அதற்கு எதிர் விணைபோல் எழுதியிருக்கேன்னு நினைக்கிறேன், சார்.