Wednesday, September 12, 2018

என்ன? உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா?!

"ப்ரியா! என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம்? எங்கே போன?" என்றாள் ரம்யா!

"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனால்.."

"ஒரேயடியா இழுக்காதே. இதெயெல்லாம் நான் கேக்கிறதுதான் தப்பு. என்னதான் க்ளூஸ் ஃப்ரெண்ட்னாலும் உன் பெட்ரூம் ரகசியம் எல்லாம் கேக்கிறது அனாகரிகம். இல்லையா? சரி விடு"னு சலித்துக் கொண்டாள் ரம்யா.

"இப்போ உனக்கு என்னடி வேனும்? அந்த "டேட்" யாருனா? இல்லை என் பெட்ரூம் ரகசியமா?"

"என்ன! டேட் டா? யாருடி அந்த அன்பர்? இல்லைனா அன்பியா?"

"இல்லடி..சரி யார்ட்டயும் சொல்லாதே..அது என் எக்ஸ்தான். ஏதோ கான்பரண்ஸ்க்கு வந்தாராம். சும்மா டின்னர்க்கு போகலாம்னு சொன்னார்?"

"அடிப்பாவி! டைவோர்ஸ் பண்ணீட்டு இப்போ என்னடி அவரோட குழாவல்"

"குழாவல் எல்லாம் இல்லை. சும்மா ஒரு ஃப்ரெண்ட்லி டேட். நீ நெனைக்கிற மாதிரி ஒன்னுமில்ல"

"ஆமா நான் என்ன நெனச்சேன்?"

"உன்னைப் பத்தி தெரியாதா? பச்சையா சொல்லவா?"

"வேணாம் வேணாம்! நீ சொன்னாலும் சொல்லிருவ! அப்படினா வெஜ் டேட்டா?"

"ஆமா அப்படித்தான்னு வச்சுக் கோவேன். நீ சப்பாட்டில் மட்டும்தான் வெஜ். இல்லடி? பிராமண ஆத்துப் பொண்ணூங்க எல்லாம் உன்ன மாதிரித்தானா?"

"ஒரு சர்வே எடுடி, அனானிமஸா? நானும் தெரிஞ்சுக்கிறேன்"

"நல்ல ஐடியா.  பட் ஐ நோ யு ஆர் நாட் அலோன்"

"உண்மை என்னதான்னு சொல்லு? என்ன திடீர்னு எக்ஸ் மேலே இத்தனை அன்பு? அதுவும் இப்போ நீ சிங்கிளாத்தான் இருக்க?னு எல்லாம் நான் நுழச்சு சுழச்சு கேக்க மாட்டேன். என்னதான் நீ க்ளூஸ்ணாலும் அது அநாகரிகம்!"

"அடிப்பாவி! எல்லாத்தையும் கேட்டுட்டு.. கேக்க மாட்டேன்னு சமாலிப்பு வேற. ஏன்டி வயசாக ஆக இப்படி கரப்ட் ஆகிக்கிட்டே போற நீ, ரம்யா?"

"நான் மட்டுமா? இந்த லோகமே அப்படித்தான்டி ரம்மி என்பார் என்னோட எக்ஸ் பாய்ஃப்ரெண்ட்!"

"யார்டி அது?"

"இப்போ அதெல்லாம் எதுக்கு? அவரைத் தலைமுழுகி ரொம்ப வருடமாச்சு. விடுடி ப்ளீஸ்"

"சரி உனக்கு என்ன தெரியனும்? என் எக்ஸ் ஒரு டீசன்ட்டான ஆள் தான். ஆனால் எங்க நிலைமையில் டைவோர்ஸ்தான் பெஸ்ட் சொலுஷன் னுதான்... டைவோர்ஸ் பண்ணீனேன்.'

"புரியுறமாதிரி சொல்லுடி, ப்ரியா, ப்ளீஸ்?  தமிழ்ல்ல, இல்லைனா ஆங்கிலத்தில்.  எனக்கு நீ பேசுற "ஹீப்ரு" எல்லாம் தெரியாது"

"சரி சரி சொல்றேன். எங்களூக்கு நடந்தது அரேஞிட் மேரேஜ். அதுவும் ரெண்டு பேரும் இந்தியாவில் விசிட்ல இருக்கும்போது, திடீர்னு பேசி முடிவு செய்தார்கள். ஆள் ஹான்ட்சம்மா இருந்தார், மேலும் ஹை பொசிஷன்ல இருந்தார்னதும் நானும், "லெட் அஸ் கிவ் அ ட்ரை" னு  சரினு சொல்லீட்டேன். ஆனால் அப்புறம்தான் தெரிந்தது அவரைப் பத்தி"

"ப்ரியா ப்ளீஸ்டி..சுத்தி சுத்தி வராதே! எனக்குத் தலை சுத்துது நீ சுத்துறதுல"

"இல்லடி அவரு "------------" யாம்!' னு ரம்யா காதில் சொன்னாள். அந்த கோடிட்ட வாக்கியத்தை"

"என்னடி சொல்ற? ரொம்ப எஜுகேட்டட் ஆள் அவரு. அப்புறம் ஏன் உன்னை கட்டிக்க சம்மதிச்சாராம்?"

"அவங்க அப்பா அம்மா ரொம்ப கன்சர்வேட்டிவாம். ஆச்சாரமான, கவுரவமான குடும்பமாம்.  என்னதான் இவர் சொன்னாலும் கல்யாணம் ஆனா, ஒரு அழகான பொண்ண அம்மனமாப் பார்த்தால் எல்லாம் சரியாயிடும்னு நம்பினார்களாம் பாவம்"

 'ஆமா, நீ நேக்கடா இருக்கும்போது ரொம்ப அழகா இருப்பியா ப்ரியா"ணு சிரித்தாள் ரம்யா.

"நீதான் பார்த்துச் சொல்லனும்! பார்த்துச் சொல்றீயா? அழகா இருக்கேனா இல்லை செக்சியா இருக்கேனா? இல்லை பார்த்ததும் கட்டிக்க தோனுதா? னு?"

"ஹா ஹா ஹா"

"சொல்றதைக் கேளூடி. என்னிடம் எல்லா விபரத்தையும்  அவர் சொன்னாரு. "எனக்கு ஒரு உதவி செய் ப்ளீஸ், ப்ரியா. இந்தாளூ சரியில்லைனு நீயே என்னை டைவோர்ஸ் பண்ணீடு அப்போத்தான் என் பேரென்ட்ஸ் என்னை யார்னு புரிந்து கொள்வார்கள்" ணு சொன்னாரு. அதுக்கப்புறம் நடந்தது உனக்கும் வெளீ உலகத்துக்கும் தெரியும்!"

"சரி, நீ எப்படி? ஸ்ரைட்டா? இல்லைனா? நீயும் அவரைப் போலதானா?"

"வெல், எனக்கே அப்பப்போ இந்த சந்தேகம் வருதுடி. ஒரு நாள் "ஸ்லீப் ஓவருக்கு" என் வீட்டுக்கு வாவேன். உன் ஹஸ்பண்ட்ட ஏதாவது சாக்குச் சொல்லி பெர்மிஷன் வாங்கிட்டு. நம்மளே கண்டுபிடிச்சுடலாம்.  என்ன சொல்ற? " ஒரு மாதிரியாப் பார்த்தாள் ப்ரியா.

"என்னை ஆள விடுப்பா"

"ஹா ஹா ஹா! ஏன்டி, உன் மேலேயே உனக்கு நம்பிக்கை இல்லையா?"

"சரிடி, பார்க்கலாம். நான் போகனும்டி"ணு புறப்பட்டாள் ரம்யா.

*******************

ட்ரைவ் பண்ணீக்கொண்டே ப்ரியா எக்ஸ் நிலைமையை நினைத்துப் பார்த்தாள், ரம்யா. இந்தியாவில் இவரைப் போல் எத்தனை பேரு வெளீயில் சொல்ல முடியாமல் குடும்ப சகிதமாக வாழ்ந்து கொண்டு இருக்காங்களோ..பாவம்..

முற்றும்.

No comments: