Saturday, September 2, 2023

என்னடி எப்படி இருக்க? மீ டூ காலம்! (61)

 எனக்கு எப்போவுமே கட வுள் நம்பிக்கை கெடையாது. ஒரு சிலருக்கு அதெப்படி கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்க முடியும்? னு ஆச்சர்யம். எனக்கு என்னனா எப்படி இவங்க இல்லாத கடவுளை நம்புறாங்க? னு ஆச்சர்யம், ஆக, நீங்க வேற நான் வேற! நம்பிக்கைனு வந்துட்டா அது ரஜினியின் அபத்த  கடவுள் நம்பிக்கை மட்டமானது . நம்ம  "அவர்கள்" உடைய உயர்தர கடவுள் நம்பிக்கை உயர்வானதுனு இல்லை. என்னைப் பொருத்தவரையில் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். 

கடவுளை விடுங்க. இப்போல்லாம் எதுலயுமே நம்பிக்கை இல்லை. கூட வேலை பண்றவனை நம்ப முடியாது. தோழர் தோழியரைக் கூட நம்ப முடியாது. யாரு வேணா எப்போ வேணா எப்படி வேணா மாறலாம். இதுதான் நிதர்சனம்.

ஐயோ அவன்கிட்ட இப்படி சொன்னோமே? ஆனால் உண்மை நிலவரம் இப்படி இருக்கே...மெனக்கட்டுப் போயி .. சொன்ன விசயத்தை ஞாபகப் படுத்தி "நான் தவறா சொல்லிட்டேன்ங்க, சாரி" னு சொன்னால் இப்போ எல்லாம் பைத்தியக்காரனை பார்க்கிறார்ப்போல் பார்க்கிறாங்க.

 ஒரு ஸ்டூடென்ட்க்கு ஒரு கான்சப்ட் சொல்லிக் கொடுக்கும்போது இதுபோல் தவறு செய்து இருக்கலாம். 

 அல்லது ஒரு கோவொர்க்கரிடம் ஒரு ப்ரசுஜரை ஷேர் பண்ணும்போது சொல்லி இருக்கலாம். 

ஏன் இப்படி தவறை சரி பண்ணுறோம்? 

சிறு வயதில் மாரல்ஸ் க்ளாஸ்ல படிச்சு இருக்கலாம். இல்லைனா அம்மா (என் தாயார்) சொல்லிக் கொடுத்து இருக்கலாம். இது நம்ம "டைப்" அல்லது "ஹாபிட்" ஆகிவிடுகிறது.

என் சொந்தத்திலேயே ஒரு சிலர் பிளஸ் டூ அல்லது 10 வது மார்க்கை கூட்டி சொல்லுவாங்க. அவங்க "மானத்தை"க் காக்க! யாரு போயி சர்டிபிகேட்டை செக் பண்ணப் போறா? னு ஒரு தைரியம்! அம்மா சொல்லுவாங்க "அதுக தரம் அப்படி" "நம்ம அப்படியெல்லாம் சொல்ல மாட்டோம். நம்ம தரம் உயர்வானது ". இது என் அம்மாவுடைய "தப்பு" கணக்கு.

The point is NOBODY CARES! 

He LIED , SO WHAT? னு சொல்றானுக!

People come from different culture. They had been taught "different kind of morals"  அதுபோல்தான் "உயர் தர"  உலகம் இருக்கு . 

 பாவம் அம்மா நம்மள பைத்தியக்காரனா வளர்த்து விட்டு இருக்காங்க! அவங்களுக்கு வேற உலகில் போய் மகன் கஷ்டப்படப் போறான்னு தெரியாது. இது தெரிந்தால் இதுக்கும் அழுவாங்க!

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுதான் இன்றைய உலகம். சரி எல்லாரும் இப்படி இருக்காணுக நம்மளும் மாறிட வேண்டியதுதான் என்பதும் முடியாது. ஏன்னா அது தொட்டில் பழக்கம்.  ஆமா, நம்ம தரம் உயர்தரம் னு நம்மளே நமக்குச் சான்றிதழ் கொடுத்துக்க வேண்டியதுதான்.

--------------------------

போன வாரம் இந்த நாட்டில் சினிமா டிக்கட் எல்லாம் வெறும் நாலு டாலர்தான். ஜெய்லர் ஜெய்லர் னு சொல்றானுகளே என்னதான் இருக்குனு போய் பார்த்தால்..எனக்குப் புரியலை. ஏன் இந்தப் படத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அமெரிக்கா எல்லா இடத்திலும் விரும்பிப் பார்க்கிறாங்கனு. I think I started realizing something. My taste is different from the rest of the world!

-------------------------------

ஆக மொத்தத்தில்  ப்ளாக்  உலகம் அழிந்தே விட்டது. 10-15 வருடத்தில் என்ன மாற்றங்கள்! இப்போலாம் ப்ளாக் எழுதுறேன்னு ஆளாளுக்கு தனக்குத் தானே எழுதி புலம்பிக்கிறாங்க- இப்போ ஆக்டிவா உள்ள ப்ளாகர்கள் எல்லாம்,. பரிதாபமாக இருக்கிறது இவர்களைப் பார்க்கும்போது. 

உலக முன்னேற்றத்துடன் போட்டி போட்டுக்கொண்டு ஓடி ஓடி தோல்வி அடைவதுதான் நிதர்சனம். 

ஆமா உலகம் மாறிவிட்டதுதான். அது பிரச்சினை இல்லை!

உலக மாற்றத்துக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள முடியாத என் இயலாமைதான் பிரச்சினை. 

கவனம்!! . என்னைனுதான் சொன்னேன் "நம்மை"னு இல்லை. ஏன்னா எங்கம்மா கணக்குப் படி என் தரம்தான் உயர்தரம். உங்க தரம் பத்தி எனக்கென்னங்க தெரியும்? :நானும் நீங்களும் ஒண்ணு கெடையாது. நான் சொல்லலைங்க. எங்கம்மா சொன்னது!

 

 



3 comments:

'பசி'பரமசிவம் said...

//இப்போலாம் ப்ளாக் எழுதுறேன்னு ஆளாளுக்கு தனக்குத் தானே எழுதி புலம்பிக்கிறாங்க- இப்போ ஆக்டிவா உள்ள ப்ளாகர்கள் எல்லாம்,. பரிதாபமாக இருக்கிறது இவர்களைப் பார்க்கும்போது.//

உண்மையில் பிளாக்கர் நிலைமை பரிதாபத்திற்கு உரியதுதான் வருண். என்னைப் பொருத்தவரை, ‘பார்வை’ எண்ணிக்கை சில நூறு என்னும் அளவில் மிகக் குறைந்துவிட்ட நிலையிலும்[தமிழ்ச்சரத்திலும் இணைப்பதில்லை] எழுதக் காரணம், பொழுதுபோகவும் நினைவாற்றலைத் தக்க வைக்கவும்தான்.

கொஞ்சம் தரமானவை என்று நம்பும் பதிவுகளைத் தொகுத்து அமேசானில் நூலாக வெளியிடுகிறேன். மாதம் ஐம்பது நூறு என்று ஏதோ ஒரு தொகை வருகிறது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை.

வாழ்க்கைப் பிரச்சினைகள் காரணமாக பிளாக் மீதான வாசகரின் ஆர்வம் குறைந்துவிட்டதா, பிளாக்குகளின் தரமே குறைந்துவிட்டதா புரியவில்லை.

தமிழ்ச்சரம் நிர்வாகி[கள்] இது பற்றி விளக்கி எழுதலாம். அவர்களுக்கும் இதில் ஆர்வம் இருக்குமா என்று தெரியவில்லை.







வருண் said...

பரமசிவம் சார்

அமேசானில் உங்கள் தொகுப்பு வெளியிடுவது நல்ல முயற்சி சார். உங்கள் சிறிய வெற்றிக்கு வாழ்த்துக்கள். ஆக்ச்சுவலா இன்றைய தமிழ் ப்ளாகர் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஒரு சில ப்ளாக்தான் வாசித்தேன். ஒரு சிலர் இன்னும் அதேபோல் இயங்கலாம்.

ஏன்னு தெரியவில்லை, நான் ப்ளாகர் உலகில் பல காலமாக இருந்தாலும் "அனானிமஸ்" ஆகத்தான் இருக்கிறேன். இவ்ளோ காலத்துக்கு அப்புறம் அதை சரிசெய்ய முடியவில்லை. அது என்னுடைய மிகப்பெரிய குறைபாடு. அதனால் பலருக்கு என்னை யாருனே தெரியாது. நானும் என் அனுகுமுறை வைத்து நான் ப்ளாகர்களை எடைபோடுவதும் முற்றிலும் தவறான ஒண்ணு. பொதுவாக ப்ளாகரை விட்டு பலரும் ஒதுங்கிட்டாங்கனு தோணுச்சு. ட்விட்டர் முகநூல் னு போயி எழுதுராங்கனு நினைக்கிறேன்.

எனக்கு வேலை அதிகமாகிவிட்டதால் எழுத நேரம் இல்லை. இல்லைனா நான் தொடர்ந்து என் கருத்துக்களை ப்ளாகர் மூலம் பகிர்ந்து கொண்டுதான் இருப்பேன்.




திண்டுக்கல் தனபாலன் said...

ஆக்கமும் அழிவும் நம் கையில்...