அவமானம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒண்ணு. எதிரிகள் மட்டுமல்லாமல், கள உறவுகள், பதிவர்கள், நம்மை நன்கு அறிந்தவர்கள் நம்மை அவமானப் படுத்துவதை யாராலும் தவிர்க்க முடியாது. நம்ம வேணா யாரையும் அவமானப்படுத்தாமல் பக்குவமாக வாழலாம். ஆனால் உலகமே அப்படி இருக்கணும்னு எதிர்பார்த்தால் அது அபத்தமான ஒரு சிந்தனை. இதற்கு ஜெயமோகன் மட்டும் விதிவிலக்கு அல்ல!
எழுத்தாளர்னா கொஞ்சம் பரந்த எண்ணங்கள் இருக்கும். அவர்களுக்கு மனோதத்துவம் தெரியும். வாழ்க்கையின் தத்துவங்கள் தெரியும். பலருடைய பார்வைகளை புரிந்து கொள்வார்கள். பலரின் பலவிதமான கண்ணோட்டங்கள் எல்லாம் புரிந்துகொள்ளும் சகிப்புத்தன்மை உள்ளவர்கள். என்றெல்லாம் எண்ணிக்கொண்டு இருந்த என் எண்ணத்தில், நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுபவர்களில் முதன்மையானவர் நம்ம ஜெயமோஹன் தான். என்னதான் குடித்தாளும், குட்டிகளுடன் அலைந்தாலும், நட்பு பாராட்டத் தெரியாதவராக இருந்தாலும், அப்பப்போ பிச்சை எடுத்தாலுமகூட சாரு நிவேதிதா, ஜெயமோகனை விட பலமடங்கு உயர்ந்தவர்னு சொல்லுவேன். சாருக்கு கொஞ்சமாவது பொதுஜனத்தின் சைக்காலஜி, மேலும் மற்றவர்கள் மனநிலை பற்றிய ஒரு நல்ல புரிதல் உண்டு. தான் பட்ட அவமானத்திக்கூட பிறர் ரசிக்கத்தக்க நகைச்சுவை கலந்து விமர்சிக்கவும் தெரியும். அதுபோல் ஒரு திறமையோ, சகிப்புத்தன்மையோ நிச்சயம் ஜெயமோகனுக்கு இல்லவே இல்லை.
இலக்கிய வட்டத்தில் ஜால்ராப் பசங்களோடயே குப்பை கொட்டும் ஜெயமோகனுக்கு இவர்மேல் பலவிதமான மனிதர்கள் இடும் கண்ணோட்டங்களோ, இலக்கியவட்டமல்லாத சாதாரண மனிதன் தன்னை எப்படி எடை போடுவான்? என்பது பற்றி எந்தவிதமான புரிதலோ, அளவுகோலோ இல்லாமல் அடிமுட்டாளாவே வாழ்கிறார் மனுஷன்.
ஈரோட்டில் பேசப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கே போய் பேசி இருக்கிறார். என்ன காரணத்தாலோ இவர் பேசும்போது நெறையப்பேர் எழுந்து போய்விட்டார்கள் போலும். சரி போறான், அவன் கொடுத்து வைத்தது அவ்ளோதான்னு விட்டுட்டுப் போகாமல்..நம்ம சிக்கல் சண்முக சுந்தரம் நாதஸ்வர்த்தை கேட்காமல் வான வேடிக்கையைப் பார்க்கப்போன மக்களை திட்டுறதுபோல் இதை விமர்சிச்சு தன் சிறுபுத்தியை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.
இவரு, தியானம் பண்ணுறது, யோகா பண்ணுறது, பகவத் கீதை படிக்கிறது போன்ற நல்ல காரியங்கள் எதுவும் செய்றது இல்லைபோல இருக்கு! யாராவது அவரோட ஜால்ராப் பசங்க, அவருக்கு உதவுங்கப்பா!