Showing posts with label எஸ் வி ராஜதுரை. Show all posts
Showing posts with label எஸ் வி ராஜதுரை. Show all posts

Thursday, November 8, 2012

ஜெயமோஹன் - எஸ் வி ராஜதுரை விவகாரத்தில் கருத்துச் சுதந்திரம்?!

சின்மயி, கார்திக் சிதம்பரம் போன்றவர்கள் "மானநஷ்ட இழப்பு"/ "defamation" சம்மந்தமாக வழக்குப் ப போட்டதால் நம்ம கருத்துச் சுதந்திரம் பறிபோனதாக இணையதளமே கலங்கி நிற்கிறது. பறிக்கப்படும் நம் கருத்துச் சுதந்திரத்தைத் திரும்பப் பெற  தமிழ் இணையதளம் போராடுகிறது.

இந்த சூழ்நிலையில் எஸ் வி ராஜதுரை - ஜெயமோஹன் பிரச்சினை மறுபடியும் உயிர்பெற்று எஸ் வி ஆர், ஜெயமோஹன் மேலே வழக்குத் தொடுத்து இருக்கார்.

 எஸ்.வி.ராஜதுரை வழக்கு

"தன்னைப்பற்றி உண்மைக்கு புறம்பானதை எழுதிய ஜெயமோஹன் தன்னை அவமனாபபடுத்தி, தன்னை மனவுளைச்சளுக்கு ஆளாக்கிவிட்டார். அதனால் அதை ஈடு செய்ய 20 லட்ச ரூபாய் மானநஷ்டம் கொடுக்க வேண்டுமென சட்டப்படி நோட்டிஸ்" அனுப்பியுள்ளார், எஸ் வி ஆர்.

இந்த மாஷ்டுத் தொகையையும் அவர் வக்கீல் எழுதிய மிகவும் "கடுமையான" நேட்டிஸையும் பார்த்து நான் பயந்துட்டேன்.

இந்தப் பிரச்சினைகளும்மேலே சொல்லப்பட்ட இரண்டு பிரச்சினைகள் (சின்மயி, கார்த்திக் சிதம்பரம்) போல்தான். இதைப்பற்றி ஏற்கனவே இந்தத் தளத்தில் பாலாசுப்ரா என்பவரிடம் நெறையவே பின்னூட்டங்களில் விவாதிச்சாச்சு. அதைப்பற்றி அறிய கீழே க்ளிக் செய்யவும்.

 அய்யோ பாவம் ஜெயமோஹன்!

சரி, ஜெயமோஹன் வார்த்தை பியோத்தில் தவறே செய்திருந்தாலும், அந்தத் தவறுக்கு தண்டனை என்ன? ஒரு மன்னிப்பா? இல்லைனா அபராதம்  20 லட்ச ரூபாயா?? என்ன இருந்தாலும், 20 லட்ச ரூ நஷ்ட ஈடு என்பது என்னைப் பொருத்தவரையில்  மிகவும் அதிகம்தான். எஸ் வி ராஜதுரை அவர்கள் கொஞ்சம் கருணை காட்டி "ழை எழுத்தாளர்" ஜெயமோஹனை (அவரு சிறு தவறு செய்திருந்தாலும்) மன்னித்துவிட்டால்த்தான் என்ன? என்றுதான் எனக்குத் தோணுது. சரி, இது அவரு பிரச்சினை. இதில் நான் என்ன எதுவும் சொல்வது? னு ஒதுங்கிக்கிறேன்.

நம்ம எல்லாம் அசியல்வாதிகள் இல்லை என்தால் பொதுவாக இணையவெளியில் ஒருவர் மீது பண சம்மத்தப்பட்ட குற்றச்சாட்டை வைக்கும்போது எனக்கு எப்போதுமே அது சரி என்று தோணாது. "அதில் ஒண்ணும் தவறில்லை, அதுவும் நம் கருத்துச் சுதந்திரம்"  என்பதுபோல்தான் பலர் சொல்றாங்க. சிங்கை செந்தில்நாதனுக்குக்கு பதிவுலகில் பல நல்ல உள்ளங்கள்  உதவி செய்யும் பொழுது, பணம் கலக்ட் செய்த நம்ம  பதிவர் நரசிம்மிடம் கணக்குக்கேட்டு, மேலும் பலவாறு கேள்விகளை இணையதளங்களில் எழுப்பி விமர்சனம் வந்தபோதுகூட நான் நரசிம்க்கு  ஆதரவாக, அவரை இணையதளத்தில் embarrass செய்யக்கூடாது என்றுதான் பேசியதாகத்தான் எனக்கு ஞாபகம்.

ஒருவகையில் பார்த்தால் இன்னைக்கு உள்ள ஜெயமோஹன் - ராஜதுரை பிரச்சினை, ரவி- கார்த்திக் சிதம்பரம் பிரச்சினை எல்லாமே ஒரே வகைதான்.

* இந்த ரெண்டு பிரச்சினைகளிலுமே நம் நிலைப்பாடு ஒண்ணுதானா?

* அதாவது விமர்சனம் செய்தவர்களின் கருத்துச் சுதந்திரமா இவைகள்?

* இல்லைனா  நம் நிலைப்பாடு வேறு வேறவா?

என்பதை "பெரியவர்கள்" சொன்னா நல்லாயிருக்கும்!