தி மு காரனிடம் இருந்து சொத்தை மீட்ட கதைனு ஒரு பதிவர் விஷப் பதிவெழுதிக்கொண்டு இருக்கிறார். அதாவது எவனோ ஒரு அரசியல்ப்பொறுக்கி செய்த அடாவடித்தனத்தை அவன் தி மு காரன் என்கிற முத்திரை கொடுத்து கழகத்தை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்தும் ஒரு கதை இது.
எனக்குத் தெரிய நேத்து தி மு கவில் இருந்தவன் இன்னைக்கு அதிமுகவுக்கு மாறுவான். நாளைக்கு காங்கிரஸ் போவான். ஒருவனை இந்தக் கட்சிக்காரன் என்று முத்திரை குத்துவதைவிட அவன் ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதி என்கிற முத்திரையே சரி.
எம் சி ஆரே ஒரு காலத்தில் திமுக காரந்தான்.
அடிதடி தாமரைக்கனி அதிமு காரந்தான்.
இதுபோல் விஷம் கலந்து தி மு கழகத்தை இழிவுபடுத்தும் ஒரே எண்ணத்துடன் இந்தக் கதை எழுதுபவரை தி மு க கண்டுகொள்ளாமல் விடுவதும், சட்டப்படி அனுகாததும் எனக்கு அதிசயமாக இருக்கிறது. இதுபோல் விஷம் கலந்து எழுதும் பதிவர்களை சட்டப்படி துரிதமாக சந்திக்காமல் வளரவிடுவது திமு கழகத்திற்கு நல்லதன்று!