Showing posts with label நாத்தீகம். Show all posts
Showing posts with label நாத்தீகம். Show all posts

Wednesday, February 18, 2009

நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு!

ஆத்தீகர்கள் கடவுள் கடவுள்னு கடவுளை தேடி அலைஞ்சி அவரைக்கண்டு பிடிச்சு, அவரை வணங்கி வழிபட்டு அவரை திருப்திப் படுத்துவதிலேயே நேரத்தை செலவழிக்கிறார்கள். பாவம் அவர்களை கொஞ்சம் விட்டுவிட்டு நம்ம நாத்தீகர்கள் பொதுவாக என்ன செய்கிறார்கள்னு பார்ப்போம்.

கடவுளைக் கும்பிடுறவன் எல்லாம் முட்டாள்னு சொல்லுவாங்க. ஆனால் எனக்குத்தெரிய நாத்தீகர்கள் குடும்பத்தில் உள்ளவர்களே மெஜாரிட்டி ஆத்தீகர்களாக இருப்பார்கள். இவர்கள் வாய்கிழிய எல்லா ஆத்திகர்களையும் முட்டாள் என்பார்கள். இவர்கள் அம்மா, மகள் மற்றும் மனைவி “இவரு ஒரு லூசு” என்று இவர்களை நினைத்துக்கொண்டு பகவானை தவறாமல் வழிபடுவார்கள்- அதிலும் இவருக்கு நல்ல புத்திக்கொடுக்கச்சொல்லி நெறையவே வேண்டிக்குவாங்க. இவர்கள் என்ன செய்ய முடியும்? அவர்களிடம் ஒண்ணும் கிழிக்க முடியாது.

நம்ம புரட்சித்தமிழன் சத்யராசை எடுத்துக்குவோம் . ஏன் அவரை இழுக்குறீங்கனு சொல்லாதீங்க! அவர்தான் இப்போ தந்தை பெரியாரா நடித்த மிகப்பெரிய நாத்தீகர். அவரை எல்லோரும் புரட்சித்தமிழன் என்கிறார்கள்! என்ன புரட்சி செய்தார்னு பார்ப்போம்! இவர், சாமினா கேலி பண்ணுவார். கற்புனா என்னனு கேப்பார்! தன்னை தமிழன் என்று நினைப்பாரே தவிர இந்து என்று ஒருபோதும் நினைக்கவே மாட்டார். இது எல்லோருக்கும் தெரியும்!

சரி, இப்போ சமீபத்தில் இவர் புத்திரனுக்கு திருமணம் நடந்தது. அந்தத்திருமணம் தமிழ் முறைப்படி (அதாவது சிவாஜியில் ரஜினிக்கும். ஸ்ரேயாவுக்கும்நடப்பதுபோல்) நடந்ததா?

இல்லை என்கிறார்கள்!

ஹிந்து முறைப்படி இவர் மகனுக்கு திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு புரட்சித்தமிழனால் தன் மகனுக்கு தமிழ் முறைப்படிக் திருமணம் செய்யமுடியாத பரிதாப நிலையில் இருக்கிறது நம் நாத்தீகர்களின் குடும்ப நிலைமை. :(

இவர்களுக்கு இல்லாத வாயா? இதுக்கு ஏதாவது “நொண்டிச்சாக்கு” அழகா சொல்வார்கள்! பொண்ணுவீட்டில் அப்படித்தான் எதிர்பார்த்தார்கள், அது இதுனு ஏதாவது அழகா ஒரு கதை. எல்லாம் சரிதான், ஆனால் ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ளனும்! அது என்னவென்றால் நாத்தீகம் பேசும் பெரிய பெரிய புரட்சித்தமிழர்கள் கருத்து அவர்கள் வீட்டிலேயே எடுபடுவதிலலை என்பது. இவர்கள் கொள்கையை வீட்டில் உள்ளவர்களிடனம் விறக முடியாது! ஆனா ஊருக்கு உபதேசம் மட்டும் நல்லவே செய்வார்கள்!

நாத்தீகம் வாழ்கிழிய பேசும் ஒருவரின் குடும்பத்தில் அனைவரும் நாத்திகாராக இருப்பது என்பது குதிரைக்கொம்பு!

இல்லைனு ஏதாவது புரட்சித்தமிழன் நிரூபிக்க முடியுமா?

Wednesday, December 31, 2008

நடிகர் இரா. ஸ்ரீ. கமலஹாசன்!

நடிகர் கமலஹாசன் பிறந்த ஊர் இராமநாதபுரம். தந்தைக்கு வேலை மாற்றத்தால் பிறந்து பல மாதங்களில் பக்கத்தில் உள்ள பரமக்குடிக்கு சென்றார். அங்கிருந்து சென்னை, களத்தூர் கண்ண்ம்மா,அப்புறம் உங்களுக்கு தெரியும் அவர் சினிமா உலகம் மற்றும் தனிப்பட்ட வாழக்கை. ஆனா என்ன காரணமோ தெரியவில்லை, இவர் பிறந்த ஊர் பரமக்குடி என்றுதான் நிறைய நேரங்களில் தவறுதலாகச் சொல்லப்படுகிறது. அதை கமலஹாசனே சரி செய்வதில்லை.

இங்கே இரா-> இராமநாதபுரம்

ஸ்ரீ-> ஸ்ரீனிவாசன் அய்யங்கார்

கமலஹாசன் ஒரு பார்ப்பனராகப் பிறந்தாலும், சமீபகாலம்வரை (அவரின் தசாவதாரம் வெளிவருமுன்னர் வரை) இவர் நாத்தீகர்கள் பலராலும் அரவணைக்கப்பட்டுத்தான் வந்தார், வரப்படுகிறார். தன்னை ஒரு பகுத்தறிவுவாதி என்று தைரியமாக சொன்னவர் இவர். இந்துக்களில் பொதுவாக 99.9% பார்ப்பனர்கள் மத, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். பல பார்ப்பனர்கள்தான் இந்து மதப்பாதுகாவலர்களாக இருக்கும் இந்த உலகத்தில் கமலஹாசன் போல ஒரு பகுத்தறிவுவாதி அக்ரஹாரத்திலிருந்து வந்ததைப் பார்த்ததும் திராவிட கழகத்தை சேர்ந்த பல நாத்தீகர்கள், கமலஹாசனை தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டார்கள். திராவிட பாரம்பரீகம் இவரை நவீனகால பாரதி என்றுகூட மிகைப்படுத்தி அழைத்தனர்.

ஆனால், சமீபத்திய தசாவதாரம் படம், பலவிதமான கேள்விகளை கொண்டுவந்து விட்டது. சினிமாவில் ஒரு நாத்தீகர், ஆத்தீகராக ஒரு வேடத்தில் நடித்தால் என்ன? இது ஃபிக்ஷன் தானே? என்று பல நாத்தீகர்களும் மற்றும் கமலஹாசன் விசிறிகளும் வாதிடத்தான் செய்கிரார்கள். இருந்தாலும் பல ஆத்தீகர்கள் இந்தப் படத்தைப்பார்த்து கமலஹாசன் நம் வழிக்கு வந்துவிட்டார் என்று பெருமிதம் கொள்வதுதான் பிரச்சினை.


இந்து மதத்தை தன் தாயைவிட மேலாக மதிக்கும் பார்ப்பனர்கள் பலரை கமலஹாசன் நடித்த "நம்பி ராஜன்" என்கிற மதவெறி பிடித்த ஒரு வெறியன் பாத்திரம், சந்தோஷப்படுத்தி இருக்கிறதென்பதை புத்தியுள்ள பகத்தறிவுவாதிகள் காணலாம். மொத்தத்தில், நாத்தீகள்களும், ஆத்தீகர்களும் அவரவர் கண்ணோட்டத்தில் கமலஹாசனை தன் "இனமாக" பார்த்ததால், தசாவதாரம் பெரிய வெற்றியை தழுவியது.

ஆத்தீகர்களுக்க்கும் இந்து மத வெறியர்களுக்கும், கமலஹாசன் ஆத்தீகப்பாதையில் வருவதுபோல் தோன்றினாலும், அவர்கள் இதை வெளிப்படையாகச் சொல்லாமல் தங்கள் மனதுக்குள் ரசித்துக்கொண்டார்கள்.


"பைத்தியக்காரன்" என்கிற ஒரு பதிவுலகத்தை சேர்ந்த ஒருவர், தசாவதாரத்தில் உள்ள பாத்திரங்களில் இருக்கும் மதவெறியை கண்டு, கோபமடைந்து கமலஹாசன் தன் பார்ப்பன புத்தியை காட்டிவிட்டார் என்று வசைமொழிகளில் விமர்சனம் எழுதினார்.


எழுத்தாளர் சாரு நிவேதிதா பொதுவாக கமலஹாசனை மதிக்கும் இவர், இந்தப்படத்திற்கு ஒரு நெகட்டிவ்க்ரிடிசிஸம் எழுதினார்.

அதே சமயத்தில், எழுத்தாளர் ஜெயமோஹன் இந்தப்படத்தை ஆஹாஓஹோ என்று புகழ்ந்து எழுதினார்.

பல நாத்தீகர்களுக்கு கமலஹாசனுடைய இன்றைய மனநிலை சந்தேகமாகவே உள்ளது. தசாவதாரம் பார்த்து குழம்பிப்போய் உள்ளார்கள் இவர்கள். ஆனால், வெளியில் இதை தெளிவாக சொல்லுவதில்லை.

கமலஹாசன் நாத்தீகராகவே சாகும்வரை இருக்கப்போகிறாரா? இல்லை ஆத்தீகராக மாறப்போகிறாரா அல்லது மாறிக்கொண்டு இருக்கிறாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.

அவர் என்னவா இருந்தால் உனக்கென்ன என்கிறீர்களா?

அவர் ஆத்தீகப்பாதையில் போனால், என்னைப்போல் ஆட்களுக்கு அவர் கேலிக்கூத்தாக தோனுவார். அதான்.

Wednesday, November 19, 2008

நாத்தீகர்களும் கடவுளும்!

என்னவோ கடவுள்னு ஒருவர் இருந்தால், அவர் ஆத்தீகர்களுக்குத்தான் நன்றியோட இருப்பார்னு நினைப்பது தவறு! கடவுள் என்பவர் இருந்தால், சாதாரண ஜால்ராவுக்கும், முகஸ்துதிக்கும் மயங்கும் மனிதனைப்போல் உணர்வு உள்ளவர்/ள் போல் நினைத்து மடமையில் வாழ்கிறார்கள் சில ஆத்தீகர்கள்!

நாத்தீகர்களுக்கு கடவுள் என்றுமே எதிரி அல்ல. கடவுள் இல்லாமல் அவர்களால் வாழமுடியுது. அவர்களுக்கு கடவுளின் உதவி தேவைப்பட வில்லை! நாத்தீகர்களைப் பொறுத்தமட்டில் கடவுள் கடவுள்னு சொல்லி ஊரை ஏமாற்றும் சில ஆத்தீகர்களைத்தான் அவர்களுக்கு பிடிக்காது! கடவுள் என்பவர் இருந்தால் அவர் ஒரு போதும் நாத்தீகர்களுக்கு எதிரி அல்ல.

இப்போ எல்லோருக்கும் உதவி செய்ய ஒருவர் இருக்கார். அவரை எதுக்கு தொந்தரவு பண்ணனும், நம்ம பிரச்சினையை நாமே போராடி வெற்றியடைவோமே என்கிற தன்னம்பிக்கையில் அவரிடம் போகவில்லை, அவர் உதவியை நாடவில்லை என்றால், அவர் கோவிச்சுக்குவாரா? அப்படி கோபித்துக்கொண்டால் அவரும் சாதாரண மனிதர்தான். இல்லையா?

கடவுளுக்கு நாத்தீர்ககளைத்தான் ரொம்ப பிடிக்கும், பிடிக்கனும். தான் இல்லாமலே இவர்களால் தன்னம்பிக்கையுடன் போராடி வாழமுடியுது என்பதை கடவுளே பாராட்டுவார். என் பேரைச்சொல்லிச் சொல்லி ஊரை ஏமாற்றாமல்/ தங்களையே ஏமாற்றாமலும் இருக்காங்கனு ரொம்ப சந்தோஷப்படுவார்! அதைவிடுத்து, தன்னை வழிபடுவனைத்தான் எனக்கு பிடிக்கும் என்று கடவுள் நினைத்தால், அந்தக் கடவுளுக்கு கடவுளாக இருக்கும் தகுதி இல்லாமல்போகிறது!

பொதுவாக மனிதனாகப்பிறந்தவர்கள், ஏமாற்றாமல், திருடாமல், பெண் பொறுக்கியாக இல்லாமல், நம்பிக்கை துரோகம் பண்ணாமல், மேலும் எல்லோரையும் தன்னைப்போல் நினைப்பது, மனிதாபிமானத் தோட வாழ்வது போன்ற நற்பண்புடன் வாழ்ந்தால், நாத்தீகராக இருந்தாலும் அவர்களும் உயர்ந்த மனிதர்கள்தாம் என்பதை தன் சுயநலத்திற்காக, இறைவழிபாடு மற்றும் கடவுளை திருப்திப்படுத்த முயலும் ஆத்தீகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

நாத்தீகர்கள், கடவுள் இல்லை என்று நம்புவது ஒண்ணும் பெரிய குற்றமல்ல! நம்ப முடியாததால் நம்புவதில்லை! அவர்களுக்கு நடிக்கத்தெரியவில்லை! தன் மனதில் தோன்றுவதை உண்மையாக சொல்கிறார்கள்! அவ்வளவுதான்!

நற்குணங்களுடன், மனிதாபிமானத்துடன் இருந்து தன்னால் உணரமுடியாத கடவுளை வணங்கவோ வழிபடவோ நாத்தீகர்கள் செய்யவில்லையென்றால் அது ஒண்ணும் தவறல்ல! அது எந்த வகையிலும் அவர்களை குறைக்காது என்பதை ஆத்தீகர்கள் உணர்வது நல்லது!