Wednesday, February 18, 2009

நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு!

ஆத்தீகர்கள் கடவுள் கடவுள்னு கடவுளை தேடி அலைஞ்சி அவரைக்கண்டு பிடிச்சு, அவரை வணங்கி வழிபட்டு அவரை திருப்திப் படுத்துவதிலேயே நேரத்தை செலவழிக்கிறார்கள். பாவம் அவர்களை கொஞ்சம் விட்டுவிட்டு நம்ம நாத்தீகர்கள் பொதுவாக என்ன செய்கிறார்கள்னு பார்ப்போம்.

கடவுளைக் கும்பிடுறவன் எல்லாம் முட்டாள்னு சொல்லுவாங்க. ஆனால் எனக்குத்தெரிய நாத்தீகர்கள் குடும்பத்தில் உள்ளவர்களே மெஜாரிட்டி ஆத்தீகர்களாக இருப்பார்கள். இவர்கள் வாய்கிழிய எல்லா ஆத்திகர்களையும் முட்டாள் என்பார்கள். இவர்கள் அம்மா, மகள் மற்றும் மனைவி “இவரு ஒரு லூசு” என்று இவர்களை நினைத்துக்கொண்டு பகவானை தவறாமல் வழிபடுவார்கள்- அதிலும் இவருக்கு நல்ல புத்திக்கொடுக்கச்சொல்லி நெறையவே வேண்டிக்குவாங்க. இவர்கள் என்ன செய்ய முடியும்? அவர்களிடம் ஒண்ணும் கிழிக்க முடியாது.

நம்ம புரட்சித்தமிழன் சத்யராசை எடுத்துக்குவோம் . ஏன் அவரை இழுக்குறீங்கனு சொல்லாதீங்க! அவர்தான் இப்போ தந்தை பெரியாரா நடித்த மிகப்பெரிய நாத்தீகர். அவரை எல்லோரும் புரட்சித்தமிழன் என்கிறார்கள்! என்ன புரட்சி செய்தார்னு பார்ப்போம்! இவர், சாமினா கேலி பண்ணுவார். கற்புனா என்னனு கேப்பார்! தன்னை தமிழன் என்று நினைப்பாரே தவிர இந்து என்று ஒருபோதும் நினைக்கவே மாட்டார். இது எல்லோருக்கும் தெரியும்!

சரி, இப்போ சமீபத்தில் இவர் புத்திரனுக்கு திருமணம் நடந்தது. அந்தத்திருமணம் தமிழ் முறைப்படி (அதாவது சிவாஜியில் ரஜினிக்கும். ஸ்ரேயாவுக்கும்நடப்பதுபோல்) நடந்ததா?

இல்லை என்கிறார்கள்!

ஹிந்து முறைப்படி இவர் மகனுக்கு திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு புரட்சித்தமிழனால் தன் மகனுக்கு தமிழ் முறைப்படிக் திருமணம் செய்யமுடியாத பரிதாப நிலையில் இருக்கிறது நம் நாத்தீகர்களின் குடும்ப நிலைமை. :(

இவர்களுக்கு இல்லாத வாயா? இதுக்கு ஏதாவது “நொண்டிச்சாக்கு” அழகா சொல்வார்கள்! பொண்ணுவீட்டில் அப்படித்தான் எதிர்பார்த்தார்கள், அது இதுனு ஏதாவது அழகா ஒரு கதை. எல்லாம் சரிதான், ஆனால் ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ளனும்! அது என்னவென்றால் நாத்தீகம் பேசும் பெரிய பெரிய புரட்சித்தமிழர்கள் கருத்து அவர்கள் வீட்டிலேயே எடுபடுவதிலலை என்பது. இவர்கள் கொள்கையை வீட்டில் உள்ளவர்களிடனம் விறக முடியாது! ஆனா ஊருக்கு உபதேசம் மட்டும் நல்லவே செய்வார்கள்!

நாத்தீகம் வாழ்கிழிய பேசும் ஒருவரின் குடும்பத்தில் அனைவரும் நாத்திகாராக இருப்பது என்பது குதிரைக்கொம்பு!

இல்லைனு ஏதாவது புரட்சித்தமிழன் நிரூபிக்க முடியுமா?

6 comments:

dondu(#11168674346665545885) said...

கடவுள் இல்லை, இல்லவே இல்லை. கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி, திருடன், அயோக்கியன் என்றெல்லாம் பெரியார் அவர்கள் கூறி அந்த வாக்கியங்களும் அவரது சிலையின் பீடங்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆகவே அவரது கூற்றுப்படியும் பகுத்தறிவு சொல்படியும் பார்த்தால், அவர் காட்டுமிராண்டிகளுக்கு பிறந்தவர், காட்டுமிராண்டியை மணந்தவர் என்றுதான் ஆகிறது என்று நீங்கள் சொல்வதாக நினைத்து பகுத்தறிவுப் பாசறை சிங்கங்கள் தத்தம் வீட்டாரிடம் காட்ட இயலாத/விரும்பாத கோபத்தை உங்கள் மேல் காட்டிவிடப் போகிறார்கள், ஜாக்கிரதை. :)

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராமலக்ஷ்மி said...

நாத்திகம் பேசினாலும் எல்லோருக்கும் நல்லது நினைப்பவன் உண்மையான ஆன்மீகவாதி. கடவுள் கடவுள் என்று சொல்லியபடி அவர் பேராலேயே மனித குலத்துக்கு பேரழிவு உண்டாக்குபவர் என்னவாதி? சேர்க்கவே முடியாது அவரை எந்த ஜாதியிலும்.

வருண் said...

***பகுத்தறிவுப் பாசறை சிங்கங்கள் தத்தம் வீட்டாரிடம் காட்ட இயலாத/விரும்பாத கோபத்தை உங்கள் மேல் காட்டிவிடப் போகிறார்கள், ஜாக்கிரதை. :)

அன்புடன்,
டோண்டு ராகவன்***

வாங்க திரு. ராகவன்! நாத்தீகக்குடும்பம் என்பது அரிது என்கிற உண்மையத்தான் நான் வலியுறுத்தினேன்!

உண்மையை சொல்ல என்றுமே தயங்கியதில்லைங்க!

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
நாத்திகம் பேசினாலும் எல்லோருக்கும் நல்லது நினைப்பவன் உண்மையான ஆன்மீகவாதி. கடவுள் கடவுள் என்று சொல்லியபடி அவர் பேராலேயே மனித குலத்துக்கு பேரழிவு உண்டாக்குபவர் என்னவாதி? சேர்க்கவே முடியாது அவரை எந்த ஜாதியிலும்.***

வாங்க ராமலக்‌ஷ்மி!

ஆமாங்க, நாத்தீகம் பேசினாலும்,ஆத்தீகம் பேசினாலும் மனிதருக்கு மனிதர் தன்னால் ஆன உதவி செய்து அழிவு வேலை எதுவும் செய்யாமல் வாழனும், அதுதான் முக்கியம்.

பழைய பாடல் ஒண்ணு இருக்குங்க,

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்!
வாழைப்போலே தன்னைத்தந்து தியாகியாகலாம்!
உருகியோடும் மெழுகு போன்று ஒளியை வீசலாம்!

இந்த மனிதன் ஆத்தீகனாகவும் இருக்கலாம் நாத்தீகனாகவும் இருக்கலாம்!

உங்கள் கருத்துக்கு நன்றிங்க, ராமலக்‌ஷ்மி! :)

ஸ்ரீதர்கண்ணன் said...

இவர்கள் அம்மா, மகள் மற்றும் மனைவி “இவரு ஒரு லூசு” என்று இவர்களை நினைத்துக்கொண்டு பகவானை தவறாமல் வழிபடுவார்கள்- அதிலும் இவருக்கு நல்ல புத்திக்கொடுக்கச்சொல்லி நெறையவே வேண்டிக்குவாங்க.

:)))))))

வருண் said...

வாங்க ஸ்ரிதர்கண்ணன்! :)