ஒத்த கருத்தைக்கொண்டவர்கள் ரெண்டு பேர் சந்திக்கும்போது அவர்களுக்கு ஒவ்வாத கருத்தைக் கொண்ட ஒரு பதிவர், எரிச்சலூட்டும் பதிவர்கள், திமிர் பிடித்த பதிவர்கள் போன்றவர்கள் பற்றி "காதும் காதும் வைத்தது போல" "கலந்துரையாடல்" நடக்கத்தான் செய்யும்.
என்னைக்கேட்டால் அந்தப் பகுதி ரொம்ப இண்டெரெஸ்டிங்காகவும் இருக்கும்னு சொல்லுவேன். நாகரிகம் கருதி அதைப்பத்தி யாருமே விரிவாக எழுதுவதில்லை. அப்படியெல்லாம் எதுவுமே நடக்கலைனு எல்லாம் பொய் சொல்லாதீங்கப்பா.
ஒரு முறை பதிவர் ஒருவர் இலை மடிப்பதைப் பற்றி விமர்சிச்சு அந்த விவாதம் ஒரு 1000 பதிவுகளை உருவாக்கி, பதிவுலகில் மதச்சண்டை ஒண்ணு பெருசா நடந்த ஞாபகம் வருகிறது.
அதன் பிறகு வேறு எதுவும் பெரிய கலவரம் நடக்கவே காணோம். எல்லாரும் ஒரு "காண்ஃபிடென்ஸியாலிட்டி அக்ரீமெண்ட்" எல்லாம் போட்டுத்தான் இப்படி பிறர்பற்றி பேசுவீங்களா என்னனு தெரியலை.
"பொறணி" என்பது நமது கலாச்சாரத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் எனப்தை நான் சொல்ல வேண்டியதில்லை. இன்னைக்கு பொறணி பேசாமல் எல்லாரும் டி வி பார்க்கிறது, வேலைக்குப் போறதுனு பிஸியானதும் நம்மில் மனநோயாளிகள் அதிகமாகி விட்டார்கள் என்று ஒரு "டேட்டா கலெக்ஷன்" கூட இருக்கு! :)