Thursday, May 22, 2014

பதிவர் சந்திப்பின்போது பொறணி பேசுவதைப் பத்தி எழுதுங்களேன்?

எல்லா பதிவர் சந்திப்பிலும் நடக்கிற சிறப்பு நிகழ்ச்சி, கற்றது, புகைப்படங்கள். பதிவர் பட்டறைனு எல்லாரும் எழுதுறாங்க. இது தவிர "பிஹைண்ட் த சீன்" நடப்பதை யாருமே எழுதுவதில்லை! நீங்க எதுவுமே சொல்லாவிட்டாலும், சந்திப்பின்போது யார் யாரு தலையெல்லாம் யாரு யாரிடம் உருளும் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது. :)
 ஒத்த கருத்தைக்கொண்டவர்கள் ரெண்டு பேர் சந்திக்கும்போது அவர்களுக்கு ஒவ்வாத கருத்தைக் கொண்ட ஒரு பதிவர், எரிச்சலூட்டும் பதிவர்கள், திமிர் பிடித்த பதிவர்கள் போன்றவர்கள் பற்றி "காதும் காதும் வைத்தது போல" "கலந்துரையாடல்" நடக்கத்தான் செய்யும்.

என்னைக்கேட்டால் அந்தப் பகுதி ரொம்ப இண்டெரெஸ்டிங்காகவும் இருக்கும்னு சொல்லுவேன். நாகரிகம் கருதி அதைப்பத்தி யாருமே விரிவாக எழுதுவதில்லை. அப்படியெல்லாம் எதுவுமே நடக்கலைனு எல்லாம் பொய் சொல்லாதீங்கப்பா.ஒரு முறை பதிவர் ஒருவர் இலை மடிப்பதைப் பற்றி விமர்சிச்சு அந்த விவாதம் ஒரு 1000 பதிவுகளை உருவாக்கி, பதிவுலகில் மதச்சண்டை ஒண்ணு பெருசா நடந்த ஞாபகம் வருகிறது.

அதன் பிறகு வேறு எதுவும் பெரிய கலவரம் நடக்கவே காணோம். எல்லாரும் ஒரு "காண்ஃபிடென்ஸியாலிட்டி அக்ரீமெண்ட்" எல்லாம் போட்டுத்தான் இப்படி பிறர்பற்றி பேசுவீங்களா என்னனு தெரியலை.

"பொறணி" என்பது நமது கலாச்சாரத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் எனப்தை நான் சொல்ல வேண்டியதில்லை. இன்னைக்கு பொறணி பேசாமல் எல்லாரும் டி வி பார்க்கிறது, வேலைக்குப் போறதுனு பிஸியானதும் நம்மில் மனநோயாளிகள் அதிகமாகி விட்டார்கள் என்று ஒரு "டேட்டா கலெக்ஷன்" கூட இருக்கு! :)

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

Gossip...? sip.. sip... small sip (or sit [!])... haa.... haa... please visit : http://dindiguldhanabalan.blogspot.com/2012/11/GOSSIP.html

thanks my dear fri'end'...

வருண் said...

தனபாலன்: உங்க பதிவைப் பார்த்தேன். ஏகப்பட்ட குறள்கள் புறங்கூறாமை பற்றி. :-)

என்னுடைய கண்ணோட்டம் இதில் கொஞ்சம் வேறுபட்டது.

பொதுவாக நாம் அனைவருமே குறைகள், நிறைகள் ரெண்டுமே உள்ளவர்கள்தான்.

ஒருவர் குறைகளை முகத்துக்கு முகம் சொல்வது, "சரி இல்லை" என்றுகூட வாதிடலாம். நீங்க நேரிடையாவும் சொல்லாமல் மற்றவரிடமும் (புறங்கூறாமல்) இருந்தால், அது உங்க மனதில் தேங்கி இருக்கும். அது தேங்கத் தேங்க, பலூன்போல அது பெரிதாகிக்கொண்டே போகும். ஒரு நாள், அது உடைந்து வெள்ளமாக வரும்போது, அது விபரீதமாகத்தான் முடியும். அதற்கு பதிலே அப்பப்போ யாரிடமாவது அவரிப்பற்றி புறம்பேசி அதை தேக்கி வைக்காமல் இருப்பது நல்லதுனு விவாதிக்கலாம்.

அதனால புறம் பேசுவதை தப்புனு அடித்துச் சொல்ல முடியுமானு எனக்குத் தெரியவில்லை.

என்னைப்பற்றி, என் காதுக்கு கேக்காமல் மற்றவர்கள் என்ன பேசினாலும் எனக்கு பிரச்சினை இல்லை என்பதுதான் என் பாலிசி. :)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பல விஷயங்களை நேரிடையாக முகத்தில் அடித்தாற்போல் சொல்வது
நாகரீகம் இல்லை என்பது என் கருத்து.
ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் பேசுவது தவறல்ல என்றாலும் அவரைப் பற்றிய தவறான தகவல்களை சொல்வது தவறு என்றே கருதுகிறேன்.

வருண் said...

***பல விஷயங்களை நேரிடையாக முகத்தில் அடித்தாற்போல் சொல்வது
நாகரீகம் இல்லை என்பது என் கருத்து.***

நாகரீகம் அல்லது டீசென்ஸி கெடையாது என்பது ஒரு பக்கம்.

ஒரு சில நேரங்களில் உங்க மேலதிகாரி ஒரு மட்டமான ஐடியாவை கொடுத்து ஒரு ப்ராஜெக்ட் பண்ண சொல்லுவாரு. அது மட்டமான ஐடியானு அவரிடம் சொன்னால் உங்க வேலை போயிடும். அதுபோல் சூழலில் அவைடம் சொல்லமுடியாமல் ("தற்காப்புக்காக") மற்ற கலீக் களிடம் உங்க பாஸ் ஐடியா மட்டமானதுனு பேசவேண்டிய சூழல் வரும்..:)