எழுத்துச் சித்தர் பாலகுமாரன் இறந்துவிட்டாராம். அவருக்கு இரங்கல் தெரிவிப்பவர்கள் எல்லாருமே அவர் ஆன்மா ஷாந்தி அடையட்டும் என்றுதான் சொல்லி அழுது முடிக்கிறார்கள்.
ஆன்மா எப்படி சாந்தி அடையும்?! என்பது எனக்கு விளங்காத ஒண்ணு.
இவர் இரண்டு மனைவிகளோட சந்தோஷமாக வாழ்ந்ததாக சொல்றாங்க. வட்டுச் சோற்றைப் பகிர்ந்துகொண்டாளும் வாழ்க்கையைப் பகிர மாட்டாள் தமிழ்ப் பெண் என்று பழமொழி தாலினு பிதற்றுகிறோம். ஆனால் இங்கே ஒப்பாரி வைக்கிற எவனுக்குமே இதெல்லாம் ஒரு குறைபாடாகத் தெரியவில்லை! அதிலும் இவருக்கு பெண் விசிறிகள்தான் ரொம்ப அதிகமாம்!
சட்டப்படி ஒருவர் இரு மனைவியோட வாழமுடியாது.
இதெல்லாம் இப்போ எதுக்கு? ஏன் இப்போ இதைப் பத்தி பேசினால் என்ன? எனக்கு ரெண்டு பொண்டாட்டி இல்லை!
அதுவும் ஒரு ஹிந்து. இஸ்லாமியர்களுக்கு ஏதோ விதிவிலக்கு இருக்கதா சொல்லிக்கிறாங்க. ஆக ஒருவர் சட்டப்படி திருமணம் செய்யாமலே வாழ்ந்தவர்? இவர் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்ததாக சொல்றாங்க.
சந்தோஷமாக வாழ்ந்தால் ஏன் ஆன்மீகத்தை தேடித் தேடி ஓடுறாங்கனு தெரியலை. ஒருவன் ஆன்மீகத்தை நோக்கி ஓடுவதற்கு காரணம்? பயம், மனக்குழப்பம், மனத் தெளிவின்மை, கேவலமான எண்ணங்களால் மனசாட்சி உறுத்தல் போன்றவைதான் காரணம் என்பது என் புரிதல். அதான் நம்ம ரஜினி இமயமலைக்கு ஓடிப்போயி ஆன்மீகத்தைத் தேடுறாரு.
இவர் நாவல்களில் ஒண்ணு ரெண்டு படிச்சு இருக்கேன். சிறுகதை
"கெட்டாலும் ஆண்மக்கள்" னோ என்னமோ ஒண்ணு. ஒரு கணவன் மனைவி இருப்பாங்க. அவங்களுக்கு குழந்தை இல்லையா என்னனு ஞாபகம் இல்லை. அந்தம்மா ஒரு சின்னப் பையன் (கருப்பா இருப்பான்?) செக்ஸ் வச்சுக்கும். கற்பமாயிடும்னு நினைக்கிறேன். கடைசியில் பிரசவப் பிரிச்சினைகளால் இறந்து போயிடும். அந்தப் பையன் வந்து கடைசி மரியாதை செய்வானோ என்னவோ. அதான் கெட்டாலும் ஆணமக்கள் மேன்மக்கள் னு சொல்ல வருவாரு.
ஒரு கதையில் படுக்கையில் மனைவியை தேவடியாள் னு கூப்பிட்டால்தான் மூடு வருது எழுதி இருப்பார். பொண்டாட்டி படுக்கையில் தேவடியாளா இருக்கணும்னோ என்னவோ? ஆமா தேவடியாள் அப்படி என்ன பண்ணுவாள்? நான் தேவடியாளிடம் போனதில்லை அதனாலதான் கேக்கிறேன்? ஆமா அதெல்லாம் வயாகரா கண்டுபிடிக்காத காலம் .
இதெல்லாம் பெண்களை கவர்ந்த வரிகள்!
அப்புறம் இன்னொரு கதையில் ஒரு ஏழை அய்யர், ஒருத்தனை போர்ன் ஸ்டோரி எழுதச்சொல்லி வித்து அதை வச்சு பொழைப்பு நடத்துவாரு. சுண்டல்ல அத்தனை காசு வராது! மறைந்த டோண்டு ராகவன், நாய் வித்த காசு குரைக்காதுனு சொன்ன ஞாபகம். கடைசியில் அவர் பொண்ணை யாரோ ரேப் பண்ணி கொன்னுடுவாங்க. அவள் ஹாண்ட் பேக்கில் இவர் வித்த போர்ன் ஸ்டோரி பத்திரிக்கை இருக்கும். இது மெர்க்குரிப்பூக்களா என்ன கதைனு தெரியலை. இவர் எழுதிய நாவல்.
யாரு ஆன்மாவும் செத்ததும் சாந்தியை அடையப்போவதில்லை. ஆன்மானு ஒண்ணே இல்லை. சும்மா நம்மளா ஆன்மாவை கற்பனை பண்ணிக்க வேண்டியதுதான். அப்படி இருந்தால்தானே அது ஷாந்தி அடைய?
செத்ததும் மூளையை பாக்டீரியாகள் சாப்பிட்டுவிடும் (புதைத்தால்). எரித்தால், எல்லாம் எல்லாம் எரிந்து கார்பன்டையாக்சைட், நைட்ரிக் ஆக்ஸைட், சல்ஃபர் ஆக்ஸைடுனு ஆக்ஸைட்களாகி போயிடும். இதில் சாந்தியை எங்கே அடைய?!!