Showing posts with label மின் வெட்டு. Show all posts
Showing posts with label மின் வெட்டு. Show all posts

Monday, October 22, 2012

தமிழ்நாட்டில் மின்வெட்டு பத்தி துக்ளக் சோ ராமசாமி!

தமிழ்நாட்டில் வரலாறு காணாத மின்வெட்டு! மின்வெட்டால் தொழிற்சாலைகளுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம், மக்கள் பலவாறு அவதிப்படுறாங்க! தமிழ்நாட்டில் பல ஊர்களில் வயதானவர்கள் எல்லாம் மின் விசிறி இல்லாமல் எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் வாடி வதங்குகிறார்கள். பதிவுலகிலேயே பலர் இதுபற்றிப் புலம்பித் தள்ளுறாங்க.  இந்த ஒரு சூழலில் நம்ம நியாயஸ்தன்  சோ ராமசாமி என்கிற அரசியல் விமர்சகர், மற்றும் ஆசிரியர் என்ன செய்துள்ளார்?

இந்தாளு நேர்மையான்வர், தமிழ் மக்களைப் பற்றி கவலைப்படுபவர், தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளை எந்த ஆட்சியிலும் விமர்சிப்பவர் என்றால் ஒரு கார்ட்டூனாவது இதைப் பற்றி விமர்சிச்சு போட்டு இருக்கனும்.

ஆட்சி மாறி ஒரு 16 மாதங்கள் ஆன பிறகும், முழுநேரவேலையாக கருணாநிதி, மற்றும் மத்திய சர்க்காரை விமர்சிக்கும் இவர், கொஞ்சம் கூட நியாயம்னா என்னனு தெரியாமல், தமிழ்நாட்டில் நடக்கும் மின்வெட்டு, விலைவாசி சம்மந்தமாக எந்தக் கருத்துமே சொல்லாமல் வாயைப் பொத்திக்கொண்டு இருக்காரு. இவர் ரசிகர்கள் விமர்சிப்பதுபோல, மதிப்பதுபோல இவர் ஒரு நியாயமான, பத்திரிக்கை தர்மம் தெரிந்த  பத்திரிக்கையாளரா? இல்லை  இன்றைய ஆளுங்கட்சிக்கு முழுநேர தொண்டரா இவர்?

இல்லை  மின்வெட்டைப் பற்றியும், விலைவாசி உயர்வு பற்றியும் தாறுமாறா இவர்  விமர்சிச்சு இருக்கார் என்றால் அது சம்மந்தமான தொடுப்புக்கள் தரவும்! நன்றி!