Monday, October 22, 2012

தமிழ்நாட்டில் மின்வெட்டு பத்தி துக்ளக் சோ ராமசாமி!

தமிழ்நாட்டில் வரலாறு காணாத மின்வெட்டு! மின்வெட்டால் தொழிற்சாலைகளுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம், மக்கள் பலவாறு அவதிப்படுறாங்க! தமிழ்நாட்டில் பல ஊர்களில் வயதானவர்கள் எல்லாம் மின் விசிறி இல்லாமல் எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் வாடி வதங்குகிறார்கள். பதிவுலகிலேயே பலர் இதுபற்றிப் புலம்பித் தள்ளுறாங்க.  இந்த ஒரு சூழலில் நம்ம நியாயஸ்தன்  சோ ராமசாமி என்கிற அரசியல் விமர்சகர், மற்றும் ஆசிரியர் என்ன செய்துள்ளார்?

இந்தாளு நேர்மையான்வர், தமிழ் மக்களைப் பற்றி கவலைப்படுபவர், தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளை எந்த ஆட்சியிலும் விமர்சிப்பவர் என்றால் ஒரு கார்ட்டூனாவது இதைப் பற்றி விமர்சிச்சு போட்டு இருக்கனும்.

ஆட்சி மாறி ஒரு 16 மாதங்கள் ஆன பிறகும், முழுநேரவேலையாக கருணாநிதி, மற்றும் மத்திய சர்க்காரை விமர்சிக்கும் இவர், கொஞ்சம் கூட நியாயம்னா என்னனு தெரியாமல், தமிழ்நாட்டில் நடக்கும் மின்வெட்டு, விலைவாசி சம்மந்தமாக எந்தக் கருத்துமே சொல்லாமல் வாயைப் பொத்திக்கொண்டு இருக்காரு. இவர் ரசிகர்கள் விமர்சிப்பதுபோல, மதிப்பதுபோல இவர் ஒரு நியாயமான, பத்திரிக்கை தர்மம் தெரிந்த  பத்திரிக்கையாளரா? இல்லை  இன்றைய ஆளுங்கட்சிக்கு முழுநேர தொண்டரா இவர்?

இல்லை  மின்வெட்டைப் பற்றியும், விலைவாசி உயர்வு பற்றியும் தாறுமாறா இவர்  விமர்சிச்சு இருக்கார் என்றால் அது சம்மந்தமான தொடுப்புக்கள் தரவும்! நன்றி!

11 comments:

Vee said...

he is a big jalra. he became a waste guy long back. selfish guys.

வருண் said...

***Vee said...

he is a big jalra. he became a waste guy long back. selfish guys.

22 October 2012 2:08 PM***

இந்தாளு பேசாமல் அதிமுக விலே சேர்ந்துற வேண்டியதுதானே? துக்ளக்கை அந்த கட்சி பத்திரிக்கையா நடத்தலாம்!

பேசுறதெல்லாம் என்னவோ இதுகள்தான் நாட்டைப் பத்தி ரொம்ப கவலைப்படுற மாரி.

இதுபோல் ஒரு "க்ரைசிஸ்" பத்திக்கூட விமர்சிக்க வக்கில்லைனா இந்தாளெல்லாம் என்ன பெரிய ஜேர்னலிஸ்ட்?

துஷ்யந்தன் said...

கருணாநிதிக்கு நக்கீரன்
ஜெயலலிதாக்கு துக்ளக்
கட்சி பத்திரிகை இல்லை இல்லை என்று சொல்லி அந்தந்த கட்சி பத்திரிகையை விட கேவலாமா நடந்துக்கிறாங்க :(

கோவி.கண்ணன் said...

சோ இராமசாமி கருத்து சொல்லாவிட்டாலும் துக்ளக்கின் நாளிதழ் வடிவம் தினமணி தான், இல்லாமை வேறு இயலாமை வேறு என்று கட்டுரை எழுதி உச் கொட்ட வைத்து நேர்மையை நாளிதழாக விற்றார்களே

manir said...

மிகசரியாக கூரினீர்கள் கோவிகண்ணன். இந்த கெடுகெட்ட த்லயங்கத்தை மீள பிரசுரித்து கொண்டாடுகிறார்களெ அவர்கள்ய் என்ன சொல்வது/

Anonymous said...

CHO is JJ's adviser...so you can't expect him to say anything...

Anand, Salem said...

Thuglak became namadhu MGR 16 months back. Dont you know that??!!!

k.rahman said...

ஏன் சார் இந்த சோ மாதிரி ஆள் லாம் இப்படி இருக்காங்க? இவரலாம் ஏன் இவர் journalistநு சொல்லிகராறு

Isai mazai said...

சோவாவது அம்மா ஜால்ரா என்பது கண்கூடாக தெரிந்த விஷயம். ஆனால் வழக்கு தொடர்வார்களே என்று விகடன் போன்ற பத்திரிக்கைகள் கூட இனப்பற்றில் எழுதுவதுதான் கொடுமை

ராஜ நடராஜன் said...

சோ,என்.ராம் போன்றவர்கள் அஜெண்டா பத்திரிகையாளர்கள்.இவர்களுக்கான முக்கியத்துவம் தருவதில் பலனில்லை.

வருண்!வழக்கறிஞர் ராஜதுரை பதிவான சைபர் கிரைமில் அமெரிக்காவிலிருந்து கருத்து சொன்னாலும் உள்ளே புடிச்சி போடுவீங்களா என்று நீங்கள் கேட்டதற்கு

//அமெரிக்காவில் அமெரிக்க குடிமகன்களுக்கு நேர்ந்த குற்றத்திற்கு பின் லேடன் சவூதி குடிமகன் என்பதால் விட்டு விட முடியுமா? // என ராஜதுரை கேள்வி எழுப்பியிருந்தார்.

எனக்கு அந்த நேரத்தில் ட்யூப் லைட் வேலை செய்யவில்லை.இந்திய சட்டத்திற்கு சிறந்த உதாரணம் டக்ளஸ் தேவானந்தா.கொலைக்குற்றச்சாட்டோடு புரோட்டக்கலின் படி இந்திய பிரதமர் கைகுழுக்குவதும் டக்ளஸ் வேணுமின்னா கான்பரன்ஸ் முறையில் பதில் சொல்கிறேன் என்று சவால் விடும் இந்திய சட்டங்களை வைத்துக்கொண்டு அமெரிக்கா,பின்லேடன் என ராஜதுரை கானமயில் வான்கோழி பதில் சொல்கிறார்.

வருண் said...

நடராஜன்: அவர் என்னடானா பின் லாடென் னு சொல்றாரு..நீங்க டக்லஸ் வேதானந்தானு இன்னொரு பெரிய தலை பத்தி சொல்றீங்க..:-) இவங்க எல்லாம் பக்கா கிரிமினல்கள் மாதிரி தெரியுது.

ஒரு ஆஸ்திரேலியனை சமீபத்திலே மலேசியாவிலோ சிங்கப்பூரிலோ மரணதண்டனை கொடுத்தாங்க. அவர் மேலே ஏதோ "ட்ரக்" சார்ச். ஆஸ்திரேலியர் அரசாங்க, இதை மிருகத்தனம்னு சொல்லியும் மலேசிய/சிங்கப்பூர் சட்டத்தின் படி தூக்கில் போட்டாங்க. ஏன் என்றால் அவர் குற்றம் செய்த இடம் மலேசியா/சிங்கப்பூர். அவரை தண்டிக்கும் உரிமை அவங்க நாட்டிற்கு உண்டு.

ஆனால், ஒரு கருத்தை அமெரிக்காவில் இல்லை கனடாவில் உக்காந்து எழுதி உலகில் பதிவு செய்யும்போது (ஆண்லைன்ல), எங்கேயிருந்து பதிவு செய்றாங்களோ அந்த நாட்டில்தான் அவங்க செய்ற குற்றம் பற்றி சட்டநடவடிக்கை எடுக்கப் படும்னு நெனைக்கிறேன்.

நம்ம ஊருக்கு வரும்போது ஏதாவது ஜோடிச்சுப் பிடிச்சு உள்ளே போடலாம்தான். ஆனால் ஒருவர் செய்த குற்றம் எந்த நாட்டில் இருந்து செய்யப் பட்டது என்பது முக்கியம் இல்லையா?