Showing posts with label ராஜன். Show all posts
Showing posts with label ராஜன். Show all posts

Tuesday, October 30, 2012

ஐயங்கார் சரி, அதென்ன ஹையங்கார்?!

சாரு, சின்மயி விவகாரம் சம்மந்தமாக இதோட ரெண்டு கட்டுரைகள் எழுதி இருக்காரு. ரெண்டுமே சின்மயிக்கு ஆதரவாக. ரெண்டாவது கட்டுரையில் ஒரு "லெவல்" அதிகமாகவே இறங்கி சின்மயிக்கு வக்காலத்துதான் வாங்குகிறார். சாருவின் ரெப்யூட்டேஷன் உலகறிந்தது என்பதால் இந்த விசயத்தில் சாருவுடைய கருத்தை எவனும் சீரியஸா எடுத்துக்கவில்லை, எடுத்துக்கப் போவதில்லை என்பதே உண்மை! இருந்தாலும் சாருவின் இந்த நிலைப்பாடு அவர் ரசிகர் வட்டத்தில் எரிச்சலைக் கிளப்பியிருக்கத்தான் வாய்ப்பிருக்கு.

மனுஷ்யபுத்திரன் சின்மயியால குற்றம் சாட்டப்பட்டவர்கள் பக்கம் இருந்து அவங்களுக்கு ஆதரவாக வாதிட்டு இருக்காரு. பொதுவாக ஒரு சிலர் "underdog" பக்கம் இருந்து வாதிடுவார்கள். அதுபோல் செய்கிறாரோ என்னவோ. ஆனால் ஜெயமோகன் எரிச்சலடையும் அளவுக்கு மனுஷ்யபுத்திரன் இந்த அதிரடி சட்ட நடவைடிக்கையால்  பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் பேசி இருக்கிறார்.

ஜெயமோகன் நிலைப்பாடு இதில் என்னவாயிருக்கும்னு எனக்கு முன்னாலேயே தெரியும். இருந்தும் எதையும் சொல்லாமல் இருந்தவர் வாயை கிளறி இப்போ வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்காரு ஒருத்தரு. ஒருவேளை வேணும்னே அவர் வாயைப் புடுங்கியிருக்காரா ஒரு சின்மயி ஆதரவாளர்?  என்ற கேள்வியும் எழுகிறது. ஜெயமோகன், பெண்கள் பலவாறு அவமானப்படுத்தப் படுகிறார்கள் என்றும், அதனால பதிவுலகைவிட்டு ஓடிவிடுகிறார்கள் என்றும் சொல்கிறார்.மேலும் ராஜன் தரப்பில், அவருக்கு ஆதரவு கொடுக்க பல லட்சங்கள் திரட்டப்பட்ட்டுள்ளது என்றும் அது தவறு என்பது போலவும் சொல்றாரு. எனக்கென்னவோ பாதிக்கப் பட்டவர்கள் நட்பு வட்டாரம் மற்றும் அவர்கள் வேலையிழப்பு போன்றவற்றை மனதில் கொண்டு மனிதாபமானத்துடன் ஒரு சிலர் அவர்களுக்கு உதவ முன் வந்திருக்கலாம். இதை, ஜெயமோகன் இப்படி  விமர்சிப்பது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை.

டாக்டர் ருத்ரன்கூட  நம் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது சரியல்ல என்கிறார்!!! ராஜன் தரப்புக்கு இவர் கைகொடுப்பது மிகப்பெரிய விடயம்!

*********************

ராஜன் நண்பர்கள் அவருக்கு எப்படி உதவலாம் என்று யோசித்தால், எனக்கு தோணுறது இதுதான்.

* ராஜன் என்ன எழுதினாரோ எழுதியது எழுதியதுதான். அதை இல்லை என்று சொல்ல முடியாது. Plead guilty!

* ராஜன் ஏன் எழுதினார்? என்ற கேள்விக்கு பதில் சொல்லும்போது சின்மயி பக்கத்தில் உள்ள குறைகளை எடுத்து வைக்கலாம்.

* ராஜன் தான் செய்ததை எல்லாம் "தன்  கருத்துச் சுதந்திரம் என்று நினைத்தேன் " என்றுதான் சொல்லனும்.

சின் மயினிடம் உள்ள குறைபாடுகள்..

அ) இவர் தன்னை ஹையங்கார் என்கிறார் என்கிறார்கள்!!! Even if she claims that as a joke,  தன் சாதியை உயர்சாதி என்று பீத்துவது பலருக்கும் எரிச்சலைக் கிளப்பும்! மேலும் அது சிறுபிள்ளைத்தனம்! இளையராஜா, ரகுமான், யுவன் சங்கர் ராஜா, இவங்க எல்லாம்தான் இவருக்கு சாண்ஸ் கொடுப்பவங்க. அவங்கல்லாம்  ஹையங்கார் இல்லை! அவங்க இதை வாசிச்சுப்புட்டு என்ன நெனைப்பாங்க! This is certainly casteist attitude! என்பதை மறுக்கமுடியாது.

ஆ) இன்னொரு இடத்தில் "so called thazthhappattavarkaL"  என்கிறார்!  If she claimed herself as hiyengar,  அவருக்கு இது மிகப் பெரிய பிரச்சினைதான். She is talking as if nobody is inferior by birth when she criticizes about the reservation. Then why the heck she claims herself as "higheyngar"? Now, it is hard to justify her stand on reservation as she sounds like a hypocrite and a casteist as she thinks her caste is SUPERIOR or not???!  (அரசியல்வாதிகள் இதைப் பெரிதுபடுத்தி தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமே உண்டாக்கலாம்!)

 இ) மேலும் சின்மயி  தனக்கு சாதகமான ட்விட்களை மட்டுமே காட்டுகிறார் என்கிறார்கள். இவர் காட்டும் ஸ்க்ரீன் ஷாட் "fabricated"  னு மாமல்லன் சொல்கிறார். மாமல்லனுடைய ரெண்டு ட்வீட்கள் ஒரே ட்விட் நம்பருடன் (# 421) வருது!!!அதெப்படி சாத்தியம்னு எனக்கு இன்னும் புரியலை! If the defense can prove that the screen shot she shows  is a fabricated one, she will be in big trouble!

ஈ) ரிசர்வேஷனை விமர்சிப்பது, மீனவர்களுக்கு ஆதரவு தராத நிலைப்பாடெல்லாம் "பொதுப் பிரச்சினைகள்". அதில் "தவறான" ஒரு கருத்துச் சொல்லியிருந்தால் அதில் பாதிக்கப் பட்ட பொதுமக்களை விடுங்க. தாழ்த்தப்பட்டவர்கள், மீனவர்கள் சம்மந்தப்பட்ட பெரிய ஆர்கனைசேஷன்கள் தன்னை ஹையங்கார் என்று சொல்பவரைப் பார்த்து எரிச்சலடைந்து  இதைப் பெரிதாக்கினால, சின்மயி மேல் பலவாறு குற்றம் சாட்டி பல கேஸ்கள் போடலாம்தான். ஆனால் அது ராஜனுக்கு எப்படி உதவும் என்று எனக்குத் தெரியவில்லை.

உ) ராஜனை மஹேஷ் மூர்த்தி என்கிற க்ரிடிக் ட்விட்டரில் நல்லா எழுதுறார்னு விமர்சிச்சதும், அதை சின்மயி சீரியஸாக எடுத்துக்கொண்டு அவர் பெயரை நீக்கு இல்லை என் பெயரை நீக்குனு போராடியிருக்கிறார் என்கிறார்கள். இவருக்கு இதெல்லாம் தேவையா? ராஜனின் வெறுப்பை சம்பாரிப்பதற்கு இவரே காரணம் எனலாம்.

இதுபோல் ராஜனின் "defense" ராஜன் நிலைப்பாட்டை நியாயப்படுத்தலாம்!

ஆக மொத்தத்தில் இந்தப் பிரச்சினை போகிற போக்கைப் பார்த்தால்...

* சைபர் க்ரைம் சட்டக்காவலர்கள், இதற்குமுன் பதிவு செய்யப்பட்ட பல கேஸ்களை எல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, தன்னை உயர்சாதி என்றும், ஹையங்கார்  என்றும் பெருமையடித்துக்கொள்ளும் பிரபலம் ஒருவருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது எப்படி சரி?  என்று பெரிதுபடுத்தினால் இதனால்  தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட ஒண்ணுமில்லை!