Tuesday, October 30, 2012

ஐயங்கார் சரி, அதென்ன ஹையங்கார்?!

சாரு, சின்மயி விவகாரம் சம்மந்தமாக இதோட ரெண்டு கட்டுரைகள் எழுதி இருக்காரு. ரெண்டுமே சின்மயிக்கு ஆதரவாக. ரெண்டாவது கட்டுரையில் ஒரு "லெவல்" அதிகமாகவே இறங்கி சின்மயிக்கு வக்காலத்துதான் வாங்குகிறார். சாருவின் ரெப்யூட்டேஷன் உலகறிந்தது என்பதால் இந்த விசயத்தில் சாருவுடைய கருத்தை எவனும் சீரியஸா எடுத்துக்கவில்லை, எடுத்துக்கப் போவதில்லை என்பதே உண்மை! இருந்தாலும் சாருவின் இந்த நிலைப்பாடு அவர் ரசிகர் வட்டத்தில் எரிச்சலைக் கிளப்பியிருக்கத்தான் வாய்ப்பிருக்கு.

மனுஷ்யபுத்திரன் சின்மயியால குற்றம் சாட்டப்பட்டவர்கள் பக்கம் இருந்து அவங்களுக்கு ஆதரவாக வாதிட்டு இருக்காரு. பொதுவாக ஒரு சிலர் "underdog" பக்கம் இருந்து வாதிடுவார்கள். அதுபோல் செய்கிறாரோ என்னவோ. ஆனால் ஜெயமோகன் எரிச்சலடையும் அளவுக்கு மனுஷ்யபுத்திரன் இந்த அதிரடி சட்ட நடவைடிக்கையால்  பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் பேசி இருக்கிறார்.

ஜெயமோகன் நிலைப்பாடு இதில் என்னவாயிருக்கும்னு எனக்கு முன்னாலேயே தெரியும். இருந்தும் எதையும் சொல்லாமல் இருந்தவர் வாயை கிளறி இப்போ வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்காரு ஒருத்தரு. ஒருவேளை வேணும்னே அவர் வாயைப் புடுங்கியிருக்காரா ஒரு சின்மயி ஆதரவாளர்?  என்ற கேள்வியும் எழுகிறது. ஜெயமோகன், பெண்கள் பலவாறு அவமானப்படுத்தப் படுகிறார்கள் என்றும், அதனால பதிவுலகைவிட்டு ஓடிவிடுகிறார்கள் என்றும் சொல்கிறார்.மேலும் ராஜன் தரப்பில், அவருக்கு ஆதரவு கொடுக்க பல லட்சங்கள் திரட்டப்பட்ட்டுள்ளது என்றும் அது தவறு என்பது போலவும் சொல்றாரு. எனக்கென்னவோ பாதிக்கப் பட்டவர்கள் நட்பு வட்டாரம் மற்றும் அவர்கள் வேலையிழப்பு போன்றவற்றை மனதில் கொண்டு மனிதாபமானத்துடன் ஒரு சிலர் அவர்களுக்கு உதவ முன் வந்திருக்கலாம். இதை, ஜெயமோகன் இப்படி  விமர்சிப்பது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை.

டாக்டர் ருத்ரன்கூட  நம் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது சரியல்ல என்கிறார்!!! ராஜன் தரப்புக்கு இவர் கைகொடுப்பது மிகப்பெரிய விடயம்!

*********************

ராஜன் நண்பர்கள் அவருக்கு எப்படி உதவலாம் என்று யோசித்தால், எனக்கு தோணுறது இதுதான்.

* ராஜன் என்ன எழுதினாரோ எழுதியது எழுதியதுதான். அதை இல்லை என்று சொல்ல முடியாது. Plead guilty!

* ராஜன் ஏன் எழுதினார்? என்ற கேள்விக்கு பதில் சொல்லும்போது சின்மயி பக்கத்தில் உள்ள குறைகளை எடுத்து வைக்கலாம்.

* ராஜன் தான் செய்ததை எல்லாம் "தன்  கருத்துச் சுதந்திரம் என்று நினைத்தேன் " என்றுதான் சொல்லனும்.

சின் மயினிடம் உள்ள குறைபாடுகள்..

அ) இவர் தன்னை ஹையங்கார் என்கிறார் என்கிறார்கள்!!! Even if she claims that as a joke,  தன் சாதியை உயர்சாதி என்று பீத்துவது பலருக்கும் எரிச்சலைக் கிளப்பும்! மேலும் அது சிறுபிள்ளைத்தனம்! இளையராஜா, ரகுமான், யுவன் சங்கர் ராஜா, இவங்க எல்லாம்தான் இவருக்கு சாண்ஸ் கொடுப்பவங்க. அவங்கல்லாம்  ஹையங்கார் இல்லை! அவங்க இதை வாசிச்சுப்புட்டு என்ன நெனைப்பாங்க! This is certainly casteist attitude! என்பதை மறுக்கமுடியாது.

ஆ) இன்னொரு இடத்தில் "so called thazthhappattavarkaL"  என்கிறார்!  If she claimed herself as hiyengar,  அவருக்கு இது மிகப் பெரிய பிரச்சினைதான். She is talking as if nobody is inferior by birth when she criticizes about the reservation. Then why the heck she claims herself as "higheyngar"? Now, it is hard to justify her stand on reservation as she sounds like a hypocrite and a casteist as she thinks her caste is SUPERIOR or not???!  (அரசியல்வாதிகள் இதைப் பெரிதுபடுத்தி தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமே உண்டாக்கலாம்!)

 இ) மேலும் சின்மயி  தனக்கு சாதகமான ட்விட்களை மட்டுமே காட்டுகிறார் என்கிறார்கள். இவர் காட்டும் ஸ்க்ரீன் ஷாட் "fabricated"  னு மாமல்லன் சொல்கிறார். மாமல்லனுடைய ரெண்டு ட்வீட்கள் ஒரே ட்விட் நம்பருடன் (# 421) வருது!!!அதெப்படி சாத்தியம்னு எனக்கு இன்னும் புரியலை! If the defense can prove that the screen shot she shows  is a fabricated one, she will be in big trouble!

ஈ) ரிசர்வேஷனை விமர்சிப்பது, மீனவர்களுக்கு ஆதரவு தராத நிலைப்பாடெல்லாம் "பொதுப் பிரச்சினைகள்". அதில் "தவறான" ஒரு கருத்துச் சொல்லியிருந்தால் அதில் பாதிக்கப் பட்ட பொதுமக்களை விடுங்க. தாழ்த்தப்பட்டவர்கள், மீனவர்கள் சம்மந்தப்பட்ட பெரிய ஆர்கனைசேஷன்கள் தன்னை ஹையங்கார் என்று சொல்பவரைப் பார்த்து எரிச்சலடைந்து  இதைப் பெரிதாக்கினால, சின்மயி மேல் பலவாறு குற்றம் சாட்டி பல கேஸ்கள் போடலாம்தான். ஆனால் அது ராஜனுக்கு எப்படி உதவும் என்று எனக்குத் தெரியவில்லை.

உ) ராஜனை மஹேஷ் மூர்த்தி என்கிற க்ரிடிக் ட்விட்டரில் நல்லா எழுதுறார்னு விமர்சிச்சதும், அதை சின்மயி சீரியஸாக எடுத்துக்கொண்டு அவர் பெயரை நீக்கு இல்லை என் பெயரை நீக்குனு போராடியிருக்கிறார் என்கிறார்கள். இவருக்கு இதெல்லாம் தேவையா? ராஜனின் வெறுப்பை சம்பாரிப்பதற்கு இவரே காரணம் எனலாம்.

இதுபோல் ராஜனின் "defense" ராஜன் நிலைப்பாட்டை நியாயப்படுத்தலாம்!

ஆக மொத்தத்தில் இந்தப் பிரச்சினை போகிற போக்கைப் பார்த்தால்...

* சைபர் க்ரைம் சட்டக்காவலர்கள், இதற்குமுன் பதிவு செய்யப்பட்ட பல கேஸ்களை எல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, தன்னை உயர்சாதி என்றும், ஹையங்கார்  என்றும் பெருமையடித்துக்கொள்ளும் பிரபலம் ஒருவருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது எப்படி சரி?  என்று பெரிதுபடுத்தினால் இதனால்  தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட ஒண்ணுமில்லை!

18 comments:

Pebble said...

Based on the materials posted on the web. It seems that both the parties are not matured enough to have a debate on common issues. Some of twits seem to be very naive.

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

Pebble: If that is the case, the police should have just warned them, "NOT TO do any such" hereafter and let them go.

Now the "accused" have been punished already. So, now, chinmayi has to prove that she is giving all the facts only as such without any manipulation/fabrication. Can she do that? If she can not do that, and whatever maamallan claims as fabricated is true, then there is a price for chinmayi's mistake too!

Jayadev Das said...

\\சாரு, சின்மயி விவகாரம் சம்மந்தமாக இதோட ரெண்டு கட்டுரைகள் எழுதி இருக்காரு. ரெண்டுமே சின்மயிக்கு ஆதரவாக.\\ தோ பார்டா............. யாரு யாருக்கு ஆதரவா........... இந்தக் குரங்கே இதே மாதிரி கம்பியூட்டர்ல நோண்டிகிட்டு இருந்ததுக்கு சக்கையா மாட்ட வேண்டியது, அது ஏதோ இன்புளுயன்ஸ் இல்லாத பொண்ணுங்கிறதாலே இது தப்பிச்சது, இன்னைக்கு இது சின்மயிக்கு ஆதரவாகவா!! மூஞ்சியப் பாரு....!! ஹெ ..ஹெ ..ஹெ ....ஒரு வேலை __________ க்கு நூல் விட்டுப் பாக்குதோ..........

\\ஆனால் ஜெயமோகன் எரிச்சலடையும் அளவுக்கு மனுஷ்யபுத்திரன் இந்த அதிரடி சட்ட நடவைடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் பேசி இருக்கிறார்.\\ அய்யய்யோ நான் எடத்தை காலி பண்ரண்டா சாமி. யோவ் ஜெயமோகன் எந்த நேரத்துலயா உன்னை உங்க அப்பனும் ஆத்தாவும் பெத்தாங்க, ஏன்யா இப்படி உசிர எடுக்கறே, இந்த பிளாக்குல ஏதாவது படிக்கலாம்னு வந்தா இப்படி கெடுத்திட்டியேய்யா......

வருண் said...

ஏங்க, ஜெயவேல், நான் எல்லாருடைய கருத்தையும்தானே சொல்லியிருக்கேன்? நான் என்னவோ இவருடைய (ஜெ மோ) தொடுப்பை மட்டும் கொடுத்து இவருக்கு கூட்டம் சேர்க்கும் "கைக்கூலி"னு நீங்க என்னைச் சொல்லாதவரைக்கும் சரிதான். :))

Jayadev Das said...

இந்தாளை உங்களைத் தவிர வேற யாரும் சீண்டுற மாதிரி கூடத் தெரியலை!! நிறைய பேத்துக்கு இப்படி ஒருத்தன் இருக்கான்னு உங்க பிளாக்கை பாத்துதான் தெரிஞ்சுக்கிறாங்க!! இலவச விளம்பரம். வளர்க உங்கள் தொண்டு!!

ப.கந்தசாமி said...

எது எப்படியோ, விவகாரம் விறுவிறுப்பா போகுது.

Easy (EZ) Editorial Calendar said...

எவளவோ பிரச்னையை விட்டு இத போய் எழுதி இருகீங்களே அது தான் ஏன் என்று புரியவில்லை....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

ராஜ் said...

முதலில் இது ---> http://t.co/QP4kFjg2 பிறகு இதை படிக்கவும் ---> http://t.co/FhJpgO6w
சாரு, சின்மயிக்கு ஆதரவாக பதிவு எழுத இது போன்ற ராஜனின் பதிவுகள் தான் மெயின் காரணம்.
இது மாதிரி நிறைய ஸ்பூப் ராஜன் ப்ளாக்ல பார்க்கலாம்..

சூனிய விகடன் said...

எனக்கு ரொம்ப நாட்களாகவே மனதைக்குடையும் சந்தேகம் ஒன்று.....நமது தமிழக அரசியல்வாதிகள் மற்றும் சமூக முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவதாக வெளிப்படுத்திக்கொள்ளும் நபர்கள் ஒருவர் விடாமல் உங்களை மாதிரி பிளாக்கர்கள் வரை
" தாழ்த்தப்பட்ட....பிற்படுத்தப்பட்ட ....." என்ற வார்த்தைகளை அடிக்கடி பிரயோகம் செய்கிறார்களே... அவை ஆங்கிலத்தில் scheduled caste , backward class , scheduled tribe , என்றுதானே உள்ளன. அவைகளுக்கு நேர்முகமான வார்த்தைகள் " அட்டவணை சாதியினர் , பின்தங்கிய வகுப்பினர் ........." இப்படித்தானே வர வேண்டும். இவைகளை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்று சொல்லி சொல்லியே இன்றளவும் சமூகத்தில் ஒரு வெறுப்புணர்வையே விதைப்பதில் இவர்களுக்கு என்ன ஒரு குரூர திருப்தி ?


இதைப் பற்றிக்கேள்வி கேட்டால் பாப்பாத்திக்கொழுப்பு அப்படி இப்படின்னு தான் சொல்லித்தொலைக்கிறீர்களே தவிர சரியான பதில் கிடைப்பதில்லை.

சரி அதை விடுங்கள்.....இந்து மதத்தைப் பற்றியும் தெய்வங்களைப் பற்றியும் ஆயிரம் ஊடகங்களில் ஆயிரம் விதமாகக் கிண்டல் கேலி செய்யப்படும் போது இந்த சொல்லாடல் எல்லாம் எங்கு சாமி போனது. ?

அது பட்டியல் இனத்தவராயினும் பின்தங்கியோராயினும் ஏளனமாகப் பேசினால் புண்பட்டுவிடுவார்கள் என்பது உண்மைஎன்றால் இந்துமதத்தைச் சார்ந்தவனும் மேற்சொன்ன கிண்டல்களால் புன்பட்டுத்தானே போவான். ?

அரசியல் சட்டம் என்ன பெரிய இதுவா....மாறி மாறி திருத்தம் செய்யப்பட்டு நாரிப்போனதுதானே அய்யா அது ...அதை விமரிசனம் செய்யக்கூடாதா ?

சின்மயி சொன்னதில் எந்தத் தவறும் இல்லை ...சொல்லப்போனால் அவர் சொன்னது மிகவும் குறைவே....அதே போல் மீனவர்கள்னா எதையும் சொல்லக்கூடாதா ......இப்போது இலங்கைக்காரன் உதைப்பதே ஒரு காலத்தில் இவனுங்க தான் அவனுங்களுக்கு பெட்ரோலும் டீசலும் இன்னும் கண்ட கருமாந்திரங்களையும் கடத்திக்கொண்டுவந்தவங்கள் என்ற கோபத்தினால் தான்...இதை வெளிப்படையாகச் சொல்ல இங்கே உள்ள அரசியல் வியாதிகளுக்கு வாயில்லை.....உங்களை மாதிரி பிளாக்கர்களுக்கு ஞானக்குருடு ...அப்புறம் யார் என்ன சொல்ல ?

உண்மையைச்சொன்னால் யாருக்கும் பின்னாடி மொளகா வச்சு தேச்ச மாறித்தான் இருக்கும்

பொம்பளை சொல்லிட்டான்னா ...அதுவும் பாப்பாத்தி சொல்லிப்புட்டானா அவ அம்மா வரைக்கும் போயிடுவீங்களாக்கும்.

தாழ்த்தப்பட்டவர் ...பிற்ப்படுத்தப்பட்டவர் என்று இனிமேலும் சொல்லி அவர்களையும் கேவலப்படுத்தி நீங்களும் கேவலப்படாதீர்கள்

வருண் said...

*** பழனி.கந்தசாமி said...

எது எப்படியோ, விவகாரம் விறுவிறுப்பா போகுது.***

சார்! அதுக்குள்ள ரெண்டு பேர் சிறையில் இருக்காங்க!

வருண் said...

***ராஜ் said...

முதலில் இது ---> http://t.co/QP4kFjg2 பிறகு இதை படிக்கவும் ---> http://t.co/FhJpgO6w
சாரு, சின்மயிக்கு ஆதரவாக பதிவு எழுத இது போன்ற ராஜனின் பதிவுகள் தான் மெயின் காரணம்.
இது மாதிரி நிறைய ஸ்பூப் ராஜன் ப்ளாக்ல பார்க்கலாம்..***

ஆக இது சாருவுக்கு ராஜனை பழிவாங்கும் தருணம்?!!

இதான் சாருவிடம் உள்ள பிரச்சினை!

வருண் said...

***இதைப் பற்றிக்கேள்வி கேட்டால் பாப்பாத்திக்கொழுப்பு அப்படி இப்படின்னு தான் சொல்லித்தொலைக்கிறீர்களே தவிர சரியான பதில் கிடைப்பதில்லை.***

* நான் ஐயங்கார் என்கிறார்

* நான் ஹையங்கார் என்கிறார்.

* ராம்நாட்டை ஆண்ட மன்னர் வழி சேதுபதி எங்க தாத்தா நண்பர் என்கிறார்..

கேள்வி 1) ஏன் இப்படி சாதி சாதினு அலைகிறார், சின்மயி?

கேள்வி 2) தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று சலுகைகள், இட ஒத்துக்கீடு தவறு என்கிறார். யாரும் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லைனு வியாக்யாணம் பேசும் இவர்..

தன்னை "ஹையங்கார்" என்று சொல்வது ஏனாம்?

இதற்கு பதில் சொல்லும், சூனியம்!

வருண் said...

***பொம்பளை சொல்லிட்டான்னா ...அதுவும் பாப்பாத்தி சொல்லிப்புட்டானா அவ அம்மா வரைக்கும் போயிடுவீங்களாக்கும்.***

அவங்க, தன்னை பாப்பாத்தி என்றும், ஹையங்கார் னு ஊர் உலகுக்கு பெருமையுடன் விளம்பரம் செய்தது அவங்களேதான். யாரும் அவங்க சாதிச் சான்றிதழை தோண்டி எடுத்துவரவில்லை! அதைப் புரிந்துகொள்ளும்!

குடுகுடுப்பை said...

அது பட்டியல் இனத்தவராயினும் பின்தங்கியோராயினும் ஏளனமாகப் பேசினால் புண்பட்டுவிடுவார்கள் என்பது உண்மைஎன்றால் இந்துமதத்தைச் சார்ந்தவனும் மேற்சொன்ன கிண்டல்களால் புன்பட்டுத்தானே போவான். ?//

பட்டியல் இனத்தவராயினும் பின்தங்கியோராயினும்//
Ivangellaam enna matham?

வருண் said...

***குடுகுடுப்பை said...

அது பட்டியல் இனத்தவராயினும் பின்தங்கியோராயினும் ஏளனமாகப் பேசினால் புண்பட்டுவிடுவார்கள் என்பது உண்மைஎன்றால் இந்துமதத்தைச் சார்ந்தவனும் மேற்சொன்ன கிண்டல்களால் புன்பட்டுத்தானே போவான். ?//

பட்டியல் இனத்தவராயினும் பின்தங்கியோராயினும்//
Ivangellaam enna matham?***

பார்ப்பணர்களுக்கும், உயர்சாதி இந்துக்களுக்கும் மட்டும்தான் இந்து மதம் சொந்தம்னு சொல்ல வர்ராரு போல.:-))))


சார்வாகன் said...

வணக்கம் வருண் அய்யா,
நான் சின்மயியை மேட்டுக் குடி என்றதற்கு நீங்கள் என் தியரி செல்லாது என்றீர் .பாருங்க அவங்களே ஹையங்கார் என தெளிவாக சொல்வதை!!!
சரி என்று சொல்லி விடுவோம் எதுக்கு வம்பு!!!

எலக்கிய மேதைகள் அண்ண‌ன் செயமோகன் ,அண்னன் சாரு போன்றவர்களே இணைந்து வழிமொழிந்தால் சரியாக்த்தானே இருக்கும்!!!

நாம் சொன்னால் யார் கேட்கிறார்??

அப்புறம் "இந்த மேட்டுக்குடி ஆட்களை கண்டால் மேசையின் கீழ் பதுங்கு"
இது சார்வாக பண்டாரத்தின் புது மொழி

அப்புறம் பெண்களை நம்பாதே என்ற பாடல்[படம்: தூக்கு தூக்கி] எனக்கு மிகவும் பிடிக்கும், இதை பாடினால் என்ன ஆகும்???

நன்றி

வருண் said...

சார்வாகன்: அவர் மேட்டுக்குடி என்று நாம் சொல்வது வேறு. தன்னை ஹையங்கார் என்று அவரே பீத்துவது வேறு. அதில்கூட தப்பில்லை. ஆனால் "சோ கால்ட் தாழ்த்தப்பட்டவர்"னு சொல்லும்போது எல்லாரும் சமம்தான். எதற்கு அவங்களுக்கு இடஒதுக்கீடு? என்கிறார்.

அப்படிச் சொல்லி நியாயப்படுத்துவதால், இவர் தன்னை "ஹையங்கார்" என்று சொன்னது பெரிய தவறாகிறது. தன்னை, தன் சாதியில் பிறந்ததால் "உயர்ந்தவர்" என்று சொல்கிறார் என்றே "ஹையங்கார்" என்று சொல்வதற்கு பொருள் என்பதை அவர் மறுத்தாலும் யாரும் ஏற்க தயாராக இல்லை!