விஜய்காந்த், மேடையில் கேட்டாராம்,
* நான் தி மு க வில் கூட்டணிசேரலாமா?
வேண்டாம்!!! (அவர் தொண்டர்கள்)
* அ தி மு க வில் கூட்டு சேரலாமா?
வேண்டாம்!! (அவர் தொண்டர்கள்)
* காங்கிரஸ்ல சேரலாமா??
வேண்டாம்!! (அவர் தொண்டர்கள்)
இப்படி மேடையிலே கேட்டு மக்கள் தனியாக நில்லுங்கள், நீங்க "பெரிய இவரு" னு சொன்னதைக் கேட்டு தனியாக போட்டியிடப் போறாராம்!
இதோட சேர்த்து அவர் இன்னொரு கேள்வியும் கேட்டிருக்கலாம்!
* நான் தனியாக நின்றால் டெப்பாசிட் இழப்பேனா?
"ஆமா!" என்று மக்கள் கூவி இருப்பார்கள்!!
தமிழக அரசியலில் இறங்கி விட்டால், எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்! இவர் பெரிய யோக்கியன் என்றால், அரசியல் சாக்கடையில் இருந்து ஒதுங்கி நிக்கனும்! இவருக்கும் முதல்வராகனும்னு பேராசை இருக்கு! அந்த வகையில் இவர் ஒரு சாதாரண சுயநலம்கொண்ட அரசியல்வாதிதான். பெரிய பெரியாரோ, காந்தியோ இல்லை இந்த நடிகர்!
இது வந்து பாராளுமன்ற தேர்தல். இதில் தனியாக போட்டியிட்டால் நிச்சயம் டெப்பாசிட் போகும் என்று தெரிந்துதான் எல்லோரும் காங்கிரஸ், பி ஜெ பி பின்னால் கேவலமாக அலைகிறார்கள்.
விஜய்காந்த் தன்னை எம் ஜி ஆர் னு சொல்லிக்கிறார்.
* இவர் சொல்லும் எம் ஜி ஆரே காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்டு 1980 ல் மரண அடி வாங்கினார். அந்த அடியை அவர் என்றுமே மறந்ததில்லை!
* குடிக்காதேனு படத்துக்கு படம் வெள்ளித்திரையில் அறிவுரை செய்த எம் ஜி ஆரே சாராயக்கடையை திறந்துவிட்டுத்தான் சத்துணவு கொடுக்க முடிந்தது!
இதுதான் தமிழ்நாட்டு அரசியல்!!!
வெள்ளை எம் ஜி ஆர் கே பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலைமைனா, இந்த கருப்பு எம் ஜி ஆர் நிலைமைய கேக்கவா வேணும்! உண்மை என்னனா, சும்மா பேருக்கு பாராளுமன்ற தேர்தலில் நிக்கிறார் விஜய்காந்த். இதில் படுதோல்வி வருகிறது என்று தெரிந்துகொண்டே! இது ஒரு மாதிரியான இவருடைய "ஒரிஜினாலிட்டி" கொள்கையை காட்டும் கண்துடைப்பு. இந்தக் கொள்கை, வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் உதவுமமென்று நம்புகிறார்! அதுதான் இவருடைய ஃபோக்கஸ்! பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் விஜய்காந்த் வெற்றுவேட்டு! சட்டமன்ற தேர்தலில் பார்க்கலாம்!