Showing posts with label விமானம் எம் எச் 370. Show all posts
Showing posts with label விமானம் எம் எச் 370. Show all posts

Sunday, April 6, 2014

பகவானின் விளையாட்டா எம் எச் 370 விமான மறைவு?!

வெந்த புண்ணில் வேலைப் பாச்சுவதுபோல இந்த விமான மறைவு பற்றி  ஏதாவது ஒரு அதிரடித் தலைப்புடன் (பொய் பொய்யா தலைப்புகளுடன்) ஒரு சில தமிழ் வலைதளங்கள் பதிவெழுதிக்கொண்டு தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டன. விமர்சகர்கள், மீடியாக்கள் தரமற்றவர்களாவதற்குக் காரணம் எதைவச்சு பொழைப்பு நடத்துறதுனே தெரியாமல்ப் போய்விடும் இந்த முண்டங்களுக்கு!

விமானம் மறைந்து 29 நாட்களுக்கு மேலாச்சு! ஆஸ்திரேலியன், மற்றும் யு கே சாட்லைலட்ல ஏதோ தெரிகிறதுனு செய்தி வந்தது. உடனே கப்பல் எடுத்துக்கொண்டு போயி, விமானத்தில் போயி, கடலில் தேடினாலும் இதுவரை எந்தவிதமான உடைந்த விமானப் பகுதிகள் எதுவும் மாட்டவில்லை!
இனிமேலும் இந்தத் தேடுதல்களில் வெற்றியடைவார்களா?  என்னவென்று தெரியவில்லை.

மனிதன் எவ்வளவுதான் அறிவியலில், தொழில் நுட்பத்தில்  வளர்ச்சியடைந்தாலும் இதுபோல் நிகழ்வுகள் "பகவானின் கிருபையால்" நடக்கத்தான் செய்யுது.

பகவான் விளையாட்டில் சிக்கிய பாவி மனிதர்கள்


இறைவன் எதைச் செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும். அது மனிதனுக்குப் புரியாது. இதுவும் நம்ம பகவான் செயலே என இறை பக்தர்கள் நம்புவார்கள் என்றே நானும் நம்புகிறேன்.
பகவானின் விளையாட்டு

 "இறைவனின் விளையாட்டே விளையாட்டு!" னு கடவுளை மெச்சிப் பாராட்டும் கடவுள் பக்தகோடிகள்  எல்லாரும் சேர்ந்து, விஞ்ஞானிகளை எல்லாம் ஓரமாக உக்கார வச்சுட்டு, காணாமல்ப் போன அந்த விமானத்தை, பகவான் துணையுடன் ஆன்மீக முறையிலோ, யாகம் கீகம் வளர்த்தோ, இல்லைனா முழு நேரம் பூஜை செய்தோ விரைவில் தேடிக் கண்டுபிடித்தால் ரொம்ப நல்லாயிருக்கும்.

ஆனால் எவனாவது எப்படியோ தேடி கண்டுபுடிச்ச பிறகு "பகவாந்தான் வழிகாட்டி" கண்டுபிடிக்க வச்சாருனு பகவான் விளையாட்டுக்கு க்ரிடிட் கொடுத்து பகவானிடம் நல்ல பேர் வாங்கமட்டும் தயங்கமாட்டாங்க, இந்த பகவான் அடிவருடிகள்!

இவ்வளவு நாட்கள் கடந்துவிட்டதால், பயணித்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றாலும், பயணிகள் மறைந்துவிட்டதாக  அவர்கள் தாய் தந்தையர், கணவன் மனைவி மற்றும் உறவினர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

அதில் நம்முடைய குடும்பத்தவர் (அக்கா, தங்கை, அம்மா போன்றோர்) பயணித்து இருந்தால், நம் நிலைப்பாடும் அதை ஒத்தே இருக்கும். இல்லையா?

மனிதன் வாழ்க்கையில் இப்படி விளையாடும் மூளையோ, உணர்ச்சிகளோ இல்லாத "உயர்தர பகவானை" தொடர்ந்து கட்டி அழுங்கள்!

"பகவான் விளையாட்டே விளையாட்டு!"என்று இதையும் பெருமையுடன் ஏற்றுக்கொள்ளும் பகவான் அடிவருடிகள்  அவர் கோபத்தை தணிக்க தொடர்ந்து பஜனை பூஜை எல்லாம் செய்யுங்கள்!