Sunday, April 6, 2014

பகவானின் விளையாட்டா எம் எச் 370 விமான மறைவு?!

வெந்த புண்ணில் வேலைப் பாச்சுவதுபோல இந்த விமான மறைவு பற்றி  ஏதாவது ஒரு அதிரடித் தலைப்புடன் (பொய் பொய்யா தலைப்புகளுடன்) ஒரு சில தமிழ் வலைதளங்கள் பதிவெழுதிக்கொண்டு தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டன. விமர்சகர்கள், மீடியாக்கள் தரமற்றவர்களாவதற்குக் காரணம் எதைவச்சு பொழைப்பு நடத்துறதுனே தெரியாமல்ப் போய்விடும் இந்த முண்டங்களுக்கு!

விமானம் மறைந்து 29 நாட்களுக்கு மேலாச்சு! ஆஸ்திரேலியன், மற்றும் யு கே சாட்லைலட்ல ஏதோ தெரிகிறதுனு செய்தி வந்தது. உடனே கப்பல் எடுத்துக்கொண்டு போயி, விமானத்தில் போயி, கடலில் தேடினாலும் இதுவரை எந்தவிதமான உடைந்த விமானப் பகுதிகள் எதுவும் மாட்டவில்லை!
இனிமேலும் இந்தத் தேடுதல்களில் வெற்றியடைவார்களா?  என்னவென்று தெரியவில்லை.

மனிதன் எவ்வளவுதான் அறிவியலில், தொழில் நுட்பத்தில்  வளர்ச்சியடைந்தாலும் இதுபோல் நிகழ்வுகள் "பகவானின் கிருபையால்" நடக்கத்தான் செய்யுது.

பகவான் விளையாட்டில் சிக்கிய பாவி மனிதர்கள்


இறைவன் எதைச் செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும். அது மனிதனுக்குப் புரியாது. இதுவும் நம்ம பகவான் செயலே என இறை பக்தர்கள் நம்புவார்கள் என்றே நானும் நம்புகிறேன்.
பகவானின் விளையாட்டு

 "இறைவனின் விளையாட்டே விளையாட்டு!" னு கடவுளை மெச்சிப் பாராட்டும் கடவுள் பக்தகோடிகள்  எல்லாரும் சேர்ந்து, விஞ்ஞானிகளை எல்லாம் ஓரமாக உக்கார வச்சுட்டு, காணாமல்ப் போன அந்த விமானத்தை, பகவான் துணையுடன் ஆன்மீக முறையிலோ, யாகம் கீகம் வளர்த்தோ, இல்லைனா முழு நேரம் பூஜை செய்தோ விரைவில் தேடிக் கண்டுபிடித்தால் ரொம்ப நல்லாயிருக்கும்.

ஆனால் எவனாவது எப்படியோ தேடி கண்டுபுடிச்ச பிறகு "பகவாந்தான் வழிகாட்டி" கண்டுபிடிக்க வச்சாருனு பகவான் விளையாட்டுக்கு க்ரிடிட் கொடுத்து பகவானிடம் நல்ல பேர் வாங்கமட்டும் தயங்கமாட்டாங்க, இந்த பகவான் அடிவருடிகள்!

இவ்வளவு நாட்கள் கடந்துவிட்டதால், பயணித்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றாலும், பயணிகள் மறைந்துவிட்டதாக  அவர்கள் தாய் தந்தையர், கணவன் மனைவி மற்றும் உறவினர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

அதில் நம்முடைய குடும்பத்தவர் (அக்கா, தங்கை, அம்மா போன்றோர்) பயணித்து இருந்தால், நம் நிலைப்பாடும் அதை ஒத்தே இருக்கும். இல்லையா?

மனிதன் வாழ்க்கையில் இப்படி விளையாடும் மூளையோ, உணர்ச்சிகளோ இல்லாத "உயர்தர பகவானை" தொடர்ந்து கட்டி அழுங்கள்!

"பகவான் விளையாட்டே விளையாட்டு!"என்று இதையும் பெருமையுடன் ஏற்றுக்கொள்ளும் பகவான் அடிவருடிகள்  அவர் கோபத்தை தணிக்க தொடர்ந்து பஜனை பூஜை எல்லாம் செய்யுங்கள்!


12 comments:

கோவி.கண்ணன் said...

அப்படித்தான் சிலர் நம்புறானுங்க. என்னத்த சொல்ல

kevin said...

ஒரு இந்திய விமானத்திற்க்கு இப்படி நிகழ்ந்திருந்தால் நீங்கள் சொன்னது போல் நிச்சயம் யாகம் நடத்தியிருப்பார்கள்.ஏனென்றால் கிரிக்கெட்டில் வெற்றிபெற பூஜை நடத்துவது நம் வழக்கம்...

Syed I H said...

இன்று நடக்கும் T20 கிரிக்கெட் க்கு பூஜை எதுவும் நடந்ததா?

காமக்கிழத்தன் said...

//...ஆனால் எவனாவது எப்படியோ தேடி கண்டுபுடிச்ச பிறகு "பகவான்தான் வழிகாட்டி" கண்டுபிடிக்க வச்சாருனு பகவான் விளையாட்டுக்கு க்ரிடிட் கொடுத்து...//

மிகச் சரியாகச் சொன்னீர்கள். இந்தத் தந்திர புத்தி/யுக்திதான் கடவுளோடு சேர்த்து இவர்களையும் கௌரவமாக வாழவைக்கிறது!


நாடோடி said...

வணக்கம் வருண்,

என்ன நீங்க, எப்படிப்பட்ட சாமியார்கள் எல்லாம் நம்ம ஊர்ல இருக்காங்க.. நீங்க இன்னும் குத்தம் கொறை சொல்லிட்டு.. :)

இந்த வீடியோவை நீங்க இன்னும் பார்க்கல போல...

https://www.youtube.com/watch?v=QJ6rcB_ILKc

Bagawanjee KA said...

பகவான் கண்ணைத் தொறந்து வீட்டார் போலிருக்கு ..விமானத்தின் கருப்பு பெட்டி சிக்னலை சீனா கண்டு பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ,அதில் இருந்து பயணிகள் அனைவரும் உயிருடன் மீட்கப் பட்டால் ,பகவானின் திரு விளையாடலை நாமும் நம்பலாம் !

வருண் said...

***கோவி.கண்ணன் said...

அப்படித்தான் சிலர் நம்புறானுங்க. என்னத்த சொல்ல***

வாங்க, கோவி! உங்க தொடுப்புக்கு நன்றி!

வருண் said...

***kevin said...

ஒரு இந்திய விமானத்திற்க்கு இப்படி நிகழ்ந்திருந்தால் நீங்கள் சொன்னது போல் நிச்சயம் யாகம் நடத்தியிருப்பார்கள்.ஏனென்றால் கிரிக்கெட்டில் வெற்றிபெற பூஜை நடத்துவது நம் வழக்கம்...***

எனக்கு பூஜை பிடிக்கும். ஏன்னா பகவான் சாப்பிடாமல் விட்ட சுண்டல் கெடைக்கும்! :)))

வருண் said...

***இன்று நடக்கும் T20 கிரிக்கெட் க்கு பூஜை எதுவும் நடந்ததா?***

பக்தகோடிகள்தான் உங்களுக்கு பதில் சொல்லணும்! :)

வருண் said...

***காமக்கிழத்தன் said...

//...ஆனால் எவனாவது எப்படியோ தேடி கண்டுபுடிச்ச பிறகு "பகவான்தான் வழிகாட்டி" கண்டுபிடிக்க வச்சாருனு பகவான் விளையாட்டுக்கு க்ரிடிட் கொடுத்து...//

மிகச் சரியாகச் சொன்னீர்கள். இந்தத் தந்திர புத்தி/யுக்திதான் கடவுளோடு சேர்த்து இவர்களையும் கௌரவமாக வாழவைக்கிறது!***

இவனுக செய்றதுக்கெல்லாம் ஆடு மாடுகள்மாரி தலையை ஆட்டினால், "நீங்க அறிவாளி"னு சான்றிதழ் கொடுப்பாணுக, இந்த மரமண்டை ஆத்திக சண்டியர்கள்!

வருண் said...

***வணக்கம் வருண்,

என்ன நீங்க, எப்படிப்பட்ட சாமியார்கள் எல்லாம் நம்ம ஊர்ல இருக்காங்க.. நீங்க இன்னும் குத்தம் கொறை சொல்லிட்டு.. :)

இந்த வீடியோவை நீங்க இன்னும் பார்க்கல போல...

https://www.youtube.com/watch?v=QJ6rcB_ILKc ***

தொடுப்புக்கு நன்றி நாடோடி. பக்தை மேல் ஆத்தா வந்துட்டா போல இருக்கு! :)

வருண் said...

***Bagawanjee KA said...

பகவான் கண்ணைத் தொறந்து வீட்டார் போலிருக்கு ..விமானத்தின் கருப்பு பெட்டி சிக்னலை சீனா கண்டு பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ,அதில் இருந்து பயணிகள் அனைவரும் உயிருடன் மீட்கப் பட்டால் ,பகவானின் திரு விளையாடலை நாமும் நம்பலாம் !***

என்னனு பொறுத்துப் பார்ப்போம். ஆனா பகவான் பக்தர்கள் மேலே ரொம்பக் கோவமா இருக்காரு போல! ஒழுங்கா ஆறுகால் பூஜை செய்து "நீதான் எல்லாம் பரம்பொருளே" னு ஐஸ் வச்சா அவர் அவருக்கு கோவம் தணியும்! :))) இந்த பக்தகோடி மூதேவிகள் ஒழுங்கா புகழ்பாடி அவரை சரிக்கட்டாததாலே வந்த வினை இது! :)))