Tuesday, May 17, 2016

தமிழ்நாடு எக்ஸிட் போல் என்ன சொல்லுதுனா..

உலகநாயகனுக்குத்தான் இங்கேயும் வெற்றி போல இருக்கு! அதாவது தமிழ்நாட்டில் எக்ஸிட் போல் என்ன சொல்லுதுனு ஹிந்து ல ரெண்டு மூனு டேட்டா வெளியிட்டு இருக்காங்க.

"அம்மாதான் அடுத்தும்"னு மனப்பால் குடித்தவர்களுக்கு பாதகமாக வந்திருக்கு!


Exit polls hint at anti-incumbency in T.N., Kerala


Tamil Nadu projections: 234 total seats
Parties Chanakya India Today-Axis C-voter
AIADMK 90 +/- 9 89-101 139
DMK+ 140 +/- 11 124-140 78
Others 4 +/- 2 4-8 17


காவேரி மகரும், இன்றும்  நீயும் சேர்ந்து ஒரேயடியா ஒப்பாரி வைக்காமல்  எக்ஸிட் போல் எல்லாம் தி மு க காரன் நடத்தியதுனு சொல்லி ரெண்டு நாளு தெம்பா இருங்க!

பகவான் என்னைக்குமே பார்ப்பனர் வழிபடும்  உங்க பக்கம்தான்! :)

எனக்கெல்லாம் யாரு ஆண்டாளும் ஒன்னும் ஆகப் போவதில்லை!


Thursday, May 12, 2016

யாருக்கு ஓட்டுப் போடுவார் உலகநாயகன்?

டிவிட்டரில் தன் எண்ணங்களை வெளியிடுவதில் நம்பர் ஒன் ராம் கோபால் வர்மா. நம்பர் ரெண்டு யாருனா? அது உலகநாயகன்.

அவருடைய  ட்வீட் என்ன சொல்கிறது?

May 10
ஃபிலிபைன்ஸில் மேடைவிவேகமில்லாத கட்டப் பஞ்சாயத்துக்காரரைத்தான் Presidentஆக்கியிருக்கின்றனர் அடுத்து USA.. தமிழகமும் உலகோடொத்துபோய்விடுமோ?

 Kamal Haasan

ஏதோ சொல்ல வர்ரார் ஆனால் என்ன சொல்றார்னு புரியலையா? சரி விடுங்க!

 

Wednesday, May 4, 2016

த வின்னர் இஸ் டொனால்ட் ட்ரம்ப் !

டெட் க்ரூஸ் மற்றும் ஜான் கேசிக் ட்ராப்பிங் அவ்ட்!  நம்ம ட்ரம்ப்தான் ரிபப்ளிகன் போட்டியாளர்! நவம்பரில் ஹில்லரி க்ளிண்டனை எதிர்த்துப் போட்டியிடப்போபவர்!


Image result for trump vs hillary
Trump vs Clinton