Thursday, July 19, 2012

ஃபெட்னா, தமிழச்சி, காந்தி அவதூறு!

இந்த வருடம் ஃபெட்னாவுக்கு போயிட்டு வந்த ஒருவர், தன் வலைதளத்தில் ஒரே ஒப்பாரி! என்னனு  போய்ப் பார்த்தால் காந்தி மேலே அவதூறு! யாரு இப்படி செஞ்சதுனு பார்த்தால் சிறப்பு விருந்தினராக அழச்சு வந்திருந்த தமிழச்சி தங்கபாண்டியன்தான் இப்படி செஞ்சுபுட்டாருனு புலம்பல்!

நான் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் ஃபெட்னாவுக்கு இதுவரை போனதில்லை. ஃபெட்னா மேலே ஒண்ணும் பெரிய விருப்பு, இல்ல வெறுப்பெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா போனதில்லை! ஃபெட்னால கலந்துதான் அமெரிக்க வாழ் தமிழனா காட்டிக்கனும்னு ஏனோ தோன்றியதில்லை.

இந்த வருடம் நடந்த ஃபெட்னா விழாவில், சிறப்பு விருந்தினர், தமிழச்சி பாண்டியன், காந்தியைப்பற்றி அவதூறு பேசியதாக ஒரு வலைதளத்தில் ஒருவர் வருத்தப்பட்டுள்ளார்.  அவர் வருத்தம் ஒரு பக்கம் இருக்கட்டும், எடுத்த எடுப்பில்  இது இந்தத் தமிழச்சிக்குத் தேவையா?னுதான் எனக்குத் தோனுது.  காந்தி தப்பே செய்யவில்லை! அவரு செய்ததெல்லாம் “சரி”னெல்லாம் நான் சொல்லமாட்டேன்.

பொதுவாக, காந்தி பற்றி அமெரிக்கர்களுக்கு மிகவும் நல்ல கருத்துத்தான் இருக்கு. காந்தியின் அஹிம்ஸை போராட்டத்தை எல்லோருமே பெருசாத்தான் சொல்றாங்க. கத்தியின்றி ரத்தமின்றை இப்படியும் போராடலாம்னு  உலகுக்கு எடுத்துக்காட்டிய பெரிய மஹான் என்றுதான் காந்தியை எல்லாரும் நெனைக்கிறாங்க. கருப்பர்களின் முன்னேற்றத்துக்குப் போராடிய எம் எல் கே ஜூனியர், காந்தியின் அனுகுமுறையைத்தான் எடுத்துப் போராடி வென்றார். அவருக்கு, காந்திக்குக் கொடுக்கப்படாத அமைதிக்கான நோபல்ப் பரிசும் வழங்கப்பட்டது. மற்றபடி காந்தியின் அஹிம்சைப் போராட்டம் எனக்கும்  பிடிக்கும்.

காந்தியிடம் இருந்த விவாதத்திற்குரிய குறைகள் நெறையாவே இருந்து இருக்கலாம்.  நான் அதை மறுக்கவில்லை!

நான் கேள்விப்பட்ட சில குற்றச்சாட்டுகள்..

* அரிஜன்னு தாழ்த்தப்பட்டவர்களை சொன்னதே தப்புனு பலர் விமர்சிக்கிறாங்க. இன்னைக்கு, நீங்க அந்தக் கால கட்டத்திற்கு போனால், அதை தப்புனு சொல்ல முடியுமானு தெரியலை.

* காந்தி கொஞ்ச வயது பெண்களை படுக்கையில் வைத்து தன் உணர்ச்சிகளைப் புரிஞ்சிக்க நெறையா ஆராய்ச்சியெல்லாம் செய்தார்னு குற்றச்சாட்டுகள் உண்டு.

* கோட்சே அவரைக் கொன்னது சரினுகூட இந்துவெறியர்களும் சில முட்டாள்ப் பார்ப்பானுகளும் சில காரணங்களைக் காட்டி சொல்வதுண்டு.

* உயர்சாதியில் பிறந்த காந்திக்கும், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அம்பேத்காருக்கும் நெறைய கருத்து வேறுபாடுகள் இருந்துச்சுனு வேற சொல்றாங்க.

ஆமா, தமிழச்சி தங்கபாண்டியனுக்கு அமெரிக்கா  வந்து பேச காந்தியைத் தவிர வேற விசயமே இல்லையா? அமெரிக்கவாழ் தமிழர்களிடம் இவரு காந்தியைப்பத்தி மட்டமா விமர்சிச்சு என்னத்தை கிழிக்கப் போறாரு னு தெரியலை. அது ஏன் தெரியலை, பொதுவாக நம்ம மறத்தமிழர்கள்னு சொல்லிக்கிறவங்க எல்லாருமே காந்தியை கெட்டவராவே காட்டனும்னு மல்லுக்கட்டிக்கிட்டு நிக்கிறாங்க.

எது எப்படியிருந்தாலும், என்னைப் பொருத்தவரையில் கடல் கடந்து அமெரிக்கா வந்து, காந்தியின் குறைகளை தேடிப்பிடித்து அவர் மேல் அவதூறு செய்தது, இந்தம்மா தமிழச்சி தங்கபாண்டியனின்  மிகப்பெரிய முட்டாள்தனம். இவரு, காந்தியை அவமானப்ப்டுத்தினாரோ இல்லையோ, தன்னைத்தானே அவமானப்படுத்திக்கொண்டார்!

Nobody is perfect in the world including her. Why does she expect Gandhi to be an exception? Why can't she talk about herself and her weaknesses instead of Gandhi's? Is she flawless???

77 comments:

நந்தவனத்தான் said...
This comment has been removed by the author.
Jayadev Das said...

இந்தியாவுக்கு சுதந்திரம் ஒன்னும் காந்தியால வரலை, பாப்பாரப் பசங்க வரலாற்றை மாத்தி எழுதிட்டானுங்கன்னு சொல்லி ஒரு கும்பல் அலையுது, நிஜமா?

வருண் said...

***அவரு இவங்க கட்சியாளுக மாதிரி ***
இவரு எந்தக் கட்சியை சேர்ந்தவர்? எனக்கு நெஜம்மாவே தெரியாது! :)

வருண் said...

***Jayadev Das said...

இந்தியாவுக்கு சுதந்திரம் ஒன்னும் காந்தியால வரலை, பாப்பாரப் பசங்க வரலாற்றை மாத்தி எழுதிட்டானுங்கன்னு சொல்லி ஒரு கும்பல் அலையுது, நிஜமா?***

இதென்னங்க புதுசா ஏதோ சொல்றீங்க? காந்தி வரலாறு ரொம்ப சமீபத்திய ஒண்ணுங்க. அதையெல்லாம் "மாத்தி" எழுத முடியாதுனு நெனைக்கிறேன்!

நந்தவனத்தான் said...
This comment has been removed by the author.
சுந்தரவடிவேல் said...

தமிழச்சிக்கு முன்னாடி அதே பெட்னா விழாவிலே எஸ்.ராமகிருஷ்ணன் (உலகப்புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்) பேசினார். அவரது பேச்சில் காந்தியாரைப் பற்றி மிகவும் உயர்வாக, தான் விரும்பும் ஒரு பயணிகளுள் இவரும் ஒருவர் என்பதாகப் பேசினார். காந்தியைப் பற்றிக் குறை கூறும்போது அது பெட்னாவின் குறைபோலவும், காந்தியைப் போற்றும்போது அது தனி மனிதரின் (எஸ்.ரா) கருத்தாகவும் பார்க்கப்படுவது மனதின் ஊனம், அல்லது முழுமையாக விளங்காத்தனம். நான் 2004லிருந்து கிட்டத்தட்ட அனைத்து ஆண்டுகளும் பேரவை (பெட்னா) விழாவில் கலந்துகொள்கிறேன். தமிழன் என்று காட்டிக்கொள்வதற்காக அல்ல. தமிழின் மிகச்சிறந்த பல நற்பண்புகளையும், நன்மக்களையும் காணவும், புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும். ஒருமுறை வந்து பாருங்கள். புரியும். சிலருக்கு பெட்னா என்றாலே எங்கோ எரியும். அது அவர்களது போறாத காலம். ஆனால் பேரவை போன்ற ஒரு அமைப்பின் இன்றியமையாமை ஒரு நாள் எல்லோராலும் உணரப்படும். வாழ்க தமிழ்! வளர்க பேரவை! கொண்டாடுவோரும் வாழ்க! வைவோரும் வாழ்க!

Bala Subra said...

காந்தியைப் பற்றி தமிழச்சி தவறான தகவல்களையும் அவதூறுகளையும் முன்வைக்கும் போது அதை சுட்டிக் காட்டி தட்டிக் கேட்க பிறருக்கு வாய்ப்பு தராத மாதிரி பெட்னா நடந்து கொள்வது வருந்தத்தக்கது. அதாவது திமுக சார்பு அரசியல், இந்த மாதிரி தமிழக மேடைகளில் நடக்கும். அந்த மாதிரி கட்சி பேச்சாளர், அப்படி இட்டு கட்டி பொய் பேசுகிறார் என்று விட்டு விடலாம்.

அதை விட மோசம்.

பெரியார், அம்பேத்கார் என்று அரங்கிலும், விழா மலரிலும் வாய் கிழிய கர்ஜித்து விட்டு, அரங்கினுள் உள்ளே சாதி கேட்டு, குலம் பார்த்து கல்யாணங்களை குழுவாரியாக அடக்கி நடத்தி வைக்க சபை அமைத்துக் கொடுப்பது.

பெரியார் செயலூக்கம் வேண்டும் என்றார். சாதி மறுப்பு திருமணங்களை முன்னிறுத்தினார். பெட்னாவே, சாதி திருமணங்களை நடத்தி வைக்க மேட்ரிமொனி செய்கிறது.

Arasu said...

கவிஞர் தமிழச்சியின் பேச்சினை அரங்கினில் கேட்ட ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். அவர் காந்தியிடமும் குறைகள் உண்டு என்பதாக சில சொன்னார்.அவரது வெகுசிறப்பான பேச்சி்ல் இதுபற்றியது சில சொல்தொடர்களே. காந்தியின்மேல் அளவற்ற பற்றுள்ள எனது உறவினர்கள் (70 வயதுக்கு மேற்பட்டவரகள்) இருவருடன் அவ்வுரையைக்கேட்டுக்கொண்டிருந்தேன். தமிழச்சி காந்தியைப்பற்றி குறைத்துப்பேசியதாக நான் எள்ளளவும் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் எனது உறவினர்களிடம் இதனைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனக்கேட்டிருப்பேன். ஆனால் தமிழச்சி பேச்சு முடிந்ததும்,என் உறவினர்களே என்னிடம் ”இப்படிப்பட்ட சிறந்த பெண்பேச்சாளர்களை அடையாளம் கண்டு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை அழைக்கிறதே” என தமிழச்சி பேச்சினையையும் பேரவை அமைப்பையும் வெகுவாக அவர்கள் பாராட்டினார்கள்.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னால் பேரவையின் ஆண்டுவிழாவில் அழைக்கப்பட்ட பேச்சாளர்களி்ல் ஒருவர் பொதுவாக மிகவும் போற்றப்படுகிற மறைந்த தமிழ்ப்பிரபலம் ஒருவரை மிகவும் நக்கலும் கிணடலும் செய்து நகைச்சுவையாக அவையோர் சிந்திக்கும் வண்ணம் பேசினார். அந்த பிரபலத்தின் எழுத்துக்களை வைத்தே அவர் எவ்வளவு பிற்போக்கானவர், பெண்ணடிமைத்தனத்தை ஒப்புக்கொண்டவர் என்று பேச்சாளர் பேசியபோது அரங்கத்தினர் ஒட்டுமொத்தமாக விழுந்து விழுந்து சிரிப்பதையே கண்டேன். எனக்கே “என்ன இப்படியா வெளிப்படையாக போட்டு உடைப்பது.இது அந்த பிரபலத்தை போற்றுவோருக்கு வலியைத் தருமே” என எண்ணினேன்.

விமர்சனத்துக்குள்ளான அந்த பிரபலத்தை ரசிப்பவர்கள் அரங்கில் 90 சதவீதம் இருப்பார்கள். ஆனால் 4 நாட்கள் நடக்கும் அவ்விழாவில் இதனைப்பற்றி ஒருவரும் குறைபட்டுக்கொள்ளவில்லை. அந்த பேச்சாளர் என்னவோ இரண்டாம் முறையாக அதே விழாவில் பேச அழைக்கப்பட்டார் - அரங்கத்தினரின் ஆரவாரமான விருப்பால்.

பேரவை அமைப்பில் 1991ம் ஆண்டிலிருந்து தொடர்புகொண்டிருக்கிறேன். தமிழ் மொழி,தமிழ் பண்பாடு, தமிழ் கலைகள், இலக்கியங்கள், தமிழர் உரிமை அமெரிக்க மண்ணில் வளர்க்கவும் நிலைக்கச்செய்யவும் பாடுபடும் ஒரு அமைப்பு. உண்மையான தமிழ்/தமிழர் நலப் ப்பற்றாளர்களால் இவ்வமைப்பு நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் டொரோண்டோவில் பேரவை விழா நடக்க இருக்கிறது. நீங்களே நேரில் வந்து பார்த்து விழாவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்களே.

தூங்குவோரை எழுப்பலாம். ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்பவே முடியாது. அவர்களைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடவேண்டியதுதான்.

வேண்டுமென்றே பேரவை மீது சேற்றை வாரி அடிக்கும் திருப்பணியை சிலர் கங்கனம் கட்டிக்கொண்டு செய்துவருவதையும் அறிகிறோம். அவர்களது அவதூறுகள் பேரவை அமைப்பின் வளர்ச்சிக்கும் பணிகளுக்கும் தூண்டுகோலாய் அமைவதையும் காணமுடிகிறது.

உதாரணமாக, இம்மாதம் நடந்த பேரவை வெள்ளிவிழாவில் 2400 பேர அமரும் அரங்கம் நிறைந்தது. இடம் கிடைக்காமல் திரும்பியவர்கள் நூற்றுக்கணக்கில்.

எனவே, “வாழ்க வசவாளர்கள்"

Bala Subra said...

ரஜினியின் சினிமாவிற்கு அரங்கு நிறைகிறது. ஒரு நாளில் நாலு காட்சிகளுக்கும் நுழைவுச்சீட்டு கிடைக்காமல் திரும்புவார்கள். அது போல் கூட்டம் சேர்ப்பதும், கல்லா கட்டுவதும் மட்டும்தான் பெட்னாவின் குறிக்கோளா?

யுவகிருஷ்ணா said...

பாஸ்டன் பாலா அவர்களே!

எவ்வளவு வருடங்களாக நீங்கள் சாதிமறுப்பு செய்து வருகிறீர்கள்?

அல்லது ஃபெட்னாவுக்காக என்றே புதுசாக சாதிமறுப்பாளராக கன்வெர்ட் ஆகியிருக்கிறீர்களா?

Bala Subra said...

எனக்கு ராஜேஷ்குமாரும் சுபாவும் முக்கியமானவர்களாக பட்டபோது, அவர்களுக்கு கடிதம் போட்டிருக்கிறேன். அவர்களின் ஆக்கங்களை காசு கொடுத்து புத்தகம் வாங்கினேன். என்னுடைய பரிணாம வளர்ச்சிக்கொத்த செயல்களை செய்கிறேன்.

என்னுடைய சிக்கல், பெட்னா அமைப்பு விழா மேடையில் ஒருவாறாக முழங்குவதும், அதற்கு முற்றிலும் வித்தியாசமாக இயங்குவதும்.

”நாங்க அமலா பால் கவர்ச்சி ஆட்டம் காட்டுவோம்; அதற்கு காசு கொடுங்க” என்று வெளிப்படையாக சொல்லலாம். தெளிவாக எண்ணங்கள் தெரியும்.

“நாங்க பேச்சாளர்களை சும்மா சொற்பொழிவாற்ற வைக்கிறோம். கேட்க வாங்க” என்று அறிவிக்கலாம். புரியும்.

“பெரியார் வழி செல்வோம். அம்பேத்கார் கதைகளை நீதி விளக்கமாக சொல்வோம்” என்று இமேஜ்.

சொல்வது ஒன்று; செய்வது அதற்கு நேர் எதிர்மாறாக பெட்னா இயங்குகிறது.

“எனக்கு கூட்டம் சேர்கிறது!” என்றும், “தமிழச்சி ஏதோ ஒன்றிரண்டு பிழை செஞ்சுட்டார்... அட்ஜஸ்ட் செஞ்சுக்குங்க” என்றும், “சாதி பாத்து கண்ணாலம் கட்டினாத்தான் மக்கள் டாலர் கொடுத்து உள்ளே வருவாங்க” என்று கண்ணடித்து அழைத்து ஒண்ணரை கோடி திரட்டி, அனைத்தையும் நன்கொடையாக கொடுத்தாலாவது மனம் மகிழ்ச்சி கொள்ளும்.

அதுவும் இல்லை.

வருண் said...

பாலா:

ஃபெட்னா ஒரு பெரிய பேரவை. அதில் கலந்துக்கிறவங்க எல்லாரும் பெரியார் அம்பேத்கார் வழிநடப்பாங்கனு நீங்க நம்புறீங்களா?
எல்லாவையான மக்களும்தான் வருவாங்க. நிச்சயம் கடவுள் நம்பிக்கை உள்ளவங்களும், அரேஞிட் மேரேஜ் செய்றவங்களும்தான் அதில் கலந்துக்கிறவங்களில் பெரும் பகுதி.

த த பா கருத்து அவருடையது. ஃபெட்னா உடையது அல்லனு தெரியாதா உங்களுக்கு?

இதென்ன "அகடமிக் செமினாரா"? த த பா பேச்சை கேள்விநேரம் வச்சு க்ரிடிசைஸ் செய்ய? அதைத்தானே இப்போ அரவிந்தன் மற்றும் ஜெயமோஹன் தளத்துல செஞ்சுக்கிட்டு இருக்காக?

I believe matrimony is just a commercial element just like ads in Tamilmanam. We need money to run an organization. Commercial elements are going to be there in any organization. Anyway, your criticisms will help them do better. :)

சுந்தரவடிவேல் said...

//காந்தியைப் பற்றி தமிழச்சி தவறான தகவல்களையும் அவதூறுகளையும் முன்வைக்கும் போது அதை சுட்டிக் காட்டி தட்டிக் கேட்க பிறருக்கு வாய்ப்பு தராத மாதிரி பெட்னா நடந்து கொள்வது வருந்தத்தக்கது. //
பாலா...அசிங்கமாக இல்லையா? நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டீர்களா? நடந்த எதையாவது பார்த்தீர்களா? இப்போது சர்ச்சைக்குரியதாகியிருக்கும் இந்த இலக்கிய அமர்வு நடந்தது இறுதி நாளில், அதாவது ஜூலை 8, ஞாயிறன்று காலையில் மெரியாட் விடுதியில். இந்த அமர்வு கலந்துரையாடலுக்கும், கேள்வி-பதிலுக்குமானது. உயர்கல்விக் கூடங்களில் நிகழும் செமினாரைப் போன்றது. ஒவ்வொரு அமர்விற்குப் பிறகும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டது. அங்கிருந்தவர்களுக்குத் தெரியும், நான் எஸ்.ராவை நோக்கி என் கேள்வியொன்றைக் கேட்டேன். இது ஒரு வெளிப்படையான அகாடமிக் தரம் வாய்ந்த அமர்வு. கேள்வி இருப்பவர்கள் கேட்கலாம். விடையும் அளிக்கப்பட்டிருக்கும். புரியாமல் பெட்னா அனுமதிக்கவில்லை என்று உளறக்கூடாது. நீங்கள் எப்போதும் அரைகுறையாகப் படித்துவிட்டு உளறுவது மாதிரி நடித்து விசத்தைக் கக்குவதில் வல்லவர் என்று எனக்குத் தெரியும். சுட்டிக்காட்டினாலும் இதை விட்டுவிட்டு இன்னொன்றுக்குத் தாவி நழுவுபவர் என்றும் தெரியும். ஆகையால் 10 ஆண்டுகளாகக் கல் போல செழித்து வளர்ந்துவரும் உங்கள் பரிமாண வளர்ச்சிக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லிக்கொள்கிறேன். மேலும், மெட்ரிமோனி நிகழ்வு மக்களைச் சந்திக்க ஏற்படுத்தும் ஒரு வாய்ப்பு. (ஏனுங்க அமெரிக்காவுல இது மாதிரி சந்திக்கிறது இல்லீங்களா? குஜராத்தி அசோஷியேஷன், இந்தியன் அசோஷியேஷன், பெங்காலி அசோஷியேஷன்....இவங்கள்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை அமெரிக்காவுல நடத்துனதையெல்லாம் நீங்க கேள்விப்பட்டதே இல்லிங்களா? அல்லது, ஒரு கல்யாணத்துல, கூட்டத்துல ஒருத்தரை ஒருத்தர் பார்த்து இங்க ஒரு பொண்ணு இருக்கு, இங்க ஒரு மாப்பிள்ளை வேணும்னு பேசிக்கிறதைக் கேட்டதே இல்லீங்களா? என்ன காதும், கண்ணும் பாலா உங்களுக்கு?). இந்தச் சந்திப்பில் சாதியை மறுத்தும் ஏற்றும் திருமணம் செய்துகொள்வது அவரவர் விருப்பம். பெட்னாவின் வேலை பெரியாரையும், அம்பேத்காரையும், உ.வே.சா ஐயரையும், பாரதியையும், வள்ளுவரையும், தொல்காப்பியரையும், கழைதின் யானையாரையும், தனி நாயகம் அடிகளாரையும், எஸ்.ராவையும், கலை செழியனையும், சோதி கண்ணனையும், சக்தி தப்பாட்டத்தையும் கொண்டு வந்து காட்டுதல். பிள்ளைகளுக்குத் தமிழையும், பண்பாட்டையும் சொல்லித் தருதல். உங்களை மாதிரி நான்கு நொட்டைப் பேச்சு பேசுபவர்களால் பெட்னாவிற்கு ஒரு பயனும் இல்லை. உங்கள் வஞ்சமனத்தால் ஏற்படுத்தும் அவதூறுகளும் தமிழையோ பேரவையையோ ஒன்றும் செய்யாது. ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் உள்ளே வரும் தமிழ் ஆர்வலர்களைப் பார்க்கிறேன். கண்கொண்டு பார்க்கிறேன். அவர்கள் உழைப்பு தமிழுக்கும் பேரவைக்கும் உரம் சேர்க்கும். அத்தகையோரது உழைப்பால்தான் இன்று வெள்ளி விழா கொண்டாடிக்கொண்டிருக்கிறது பேரவை. உங்களால் பேரவைக்கும், தமிழுக்கும் உருப்படியாய் ஏதேனும் செய்யமுடிந்தால் செய்யுங்கள். இல்லையென்றால் எரியும் வயிற்றை எதையேனும் ஊற்றி அணைத்துக் கொள்ளுங்கள். பேரவை என்னைப் போன்றோருக்குக் கண்களைப் போன்றது. ஏனெனில் அமெரிக்காவில் தமிழ்ச் சங்கங்கள் என்ற பெயரில் முன்னொரு காலத்தில் கூத்தடித்ததும் எங்களுக்குத் தெரியும். இப்போது தமிழ்ச் சங்கங்கள் விழித்துக் கொண்டு நல்ல தமிழை, தமிழ்க் கலைகளை அமெரிக்க மண்ணுக்குக் கொண்டு வருவது பலருக்குப் பொறாமையாக இருக்கும். என்ன செய்வது, தமிழின் ஒளியைச் சிலரின் மாசுபட்ட கரங்களால் உலகின் கண்களிலிருந்து மறைத்துவிட முடியாது. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் தமிழும் ஒரு பாடமாகும். அமெரிக்கப் பள்ளிகளில் தமிழும் ஒரு இரண்டாம் மொழியாகும். இதனைப் பேரவை முன்னின்று செய்யும். பார்த்துக் கொண்டே இருங்கள்.

தணல் said...
This comment has been removed by the author.
தணல் said...

//நாங்க அமலா பால் கவர்ச்சி ஆட்டம் காட்டுவோம்; அதற்கு காசு கொடுங்க” என்று வெளிப்படையாக சொல்லலாம். தெளிவாக எண்ணங்கள் தெரியும்.//

மிஸ்டர் பால சுப்ரா! ஆமா நீங்க இந்தவாட்டி ஃபெட்னா பக்கம் தலை வைத்துப் பாத்தீங்களா என்ன? அமலா பால் ஆட்டம் போட்டாங்களா? எங்க அந்த நிகழ்வுக்கான வீடியோ இருந்தா போடுங்க பார்ப்போம்???????? எப்படியான புரட்டுக் கதைகளை அவிழ்த்து விட முடியுது இந்த மாதிரி ஆட்களால?

அதுசரி, அவங்க கூட பரத் அப்படின்னு ஒரு நடிகர் வந்திருந்ததாக வீடியோல பார்த்தேன்! ஆனா இந்த எதிர்ப்பாளனுங்க எவனுமே அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசக் காணோம்????? இவனுங்க கண்ணுக்கு எல்லாம் அமலா பால் மட்டுந்தான் தெரிவாங்க போல!!! (இவங்க பாசையிலையே சொல்லனும்ன்னா, தருமர் வெர்சஸ் துரியோதனன் பார்வை ன்னு ஒரு கதை உண்டே மகாபாரதத்துல, அந்த மாதிரி)

அப்படித்தான்யா ஃபெட்னால சினிமாக்காரங்களயும்கூப்பிடுவாங்க! உனக்கு வரப் பிரியமா இருந்தா வா. பிடிக்காட்டி ஒதுங்கிப் போய்க்கோ. நீ போகாத ஒரு விழாவுக்கு அவங்க யாரையோ அழைத்து என்னவோ செய்தா உனக்கு உங்க மோவனுக்கு எல்லாம் என்ன குடையுதுங்கறேன்? நீ யார் அவங்க என்ன செய்யணும் என்ன செய்யக் கூடாதுன்னு சொல்லுறதுக்கு?

தணல் said...

//எவ்வளவு வருடங்களாக நீங்கள் சாதிமறுப்பு செய்து வருகிறீர்கள்?//

அவர் திருமணம் செய்தது எந்தச் சாதியில என்று கேளுங்க! சாதிமறுப்புச் சாயத்தை நல்லாவே பூசிகிட்டு அலையறானுங்க.

Bala Subra said...

ஞாயிறு நிகழ்ச்சியில் நான் அகலந்து கொண்டேன்.

தமிழச்சி கருத்து ரீதியாக சொல்வதோடு மறுத்துப் பேச பிறருக்கு வாய்ப்பு இல்லாமல் போகலாம். ஆனால், தகவல் ரீதியாக திரித்துப் பேசுவதை திருத்த அங்கே வாய்ப்பளிக்க வேண்டும்.

நல்லகண்ணு அய்யா பேசவே அஞ்சு நிமிஷம்தான் கொடுக்கிறாங்க... இதில என்ன மாதிரி காந்தி - அம்பேத்கார் நிகழ்ச்சியில் என்னவெல்லாம் தப்புந்தவறுமாக சொல்கிறார்கள் என்று சொல்ல முடியுமா என்ன?

தணல் said...

// பாலா...அசிங்கமாக இல்லையா? நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டீர்களா? நடந்த எதையாவது பார்த்தீர்களா? //

விடுங்க சார்! போரடித்துப் போய்க் கிடப்பவர்களுக்கு எதையாவது மெல்லனும் இல்லையா? எதைப் பற்றியாவது எதையாவது பேசி சர்ச்சை நெருப்பு மூட்டினால் தானே அதிலே கொஞ்சம் நாள் குளிர் காய சொறிந்து கொள்ள முடியும்?

அரவிந்தன் கன்னையன் என்பவர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறிய கருத்துகளில் உடன்பாடில்லை என்று எழுதியிருந்தது genuine ஆக இருந்தது. அவர் தமிழச்சி சொல்லியிருந்த கருத்துகளுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான தன்னுடைய எதிர்வாதங்களை முன்வைத்திருந்தார். அதை மிஸ்டர் மோவனுக்கு எழுதிப்போடவும் செய்தார் (அதில் குறிப்பிட்டிருப்பார், உங்களுக்கும் எனக்கும் நிறைய கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் காந்தியைப் பற்றிய பார்வையில் நாம் ஒத்துப் போவதால் இதை உங்களிடம் பேசுகிறேன் என்று). ஆனால் அதை வைத்து உடனே ஃபெட்னாவுக்கு எதிராகப் பொரச்சி செய்ய இதோ இவரும் இவருடைய 'ஆதர்ஷ' எழுத்தாளரும் கங்கணம் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்!!

தணல் said...

// ஞாயிறு நிகழ்ச்சியில் நான் அகலந்து கொண்டேன்.//

மேலே போகாத ஒரு விழாவுக்கு என்று எழுதிவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

சுந்தரவடிவேல் said...

//ஞாயிறு நிகழ்ச்சியில் நான் அகலந்து கொண்டேன்.

தமிழச்சி கருத்து ரீதியாக சொல்வதோடு மறுத்துப் பேச பிறருக்கு வாய்ப்பு இல்லாமல் போகலாம். ஆனால், தகவல் ரீதியாக திரித்துப் பேசுவதை திருத்த அங்கே வாய்ப்பளிக்க வேண்டும்.

நல்லகண்ணு அய்யா பேசவே அஞ்சு நிமிஷம்தான் கொடுக்கிறாங்க... இதில என்ன மாதிரி காந்தி - அம்பேத்கார் நிகழ்ச்சியில் என்னவெல்லாம் தப்புந்தவறுமாக சொல்கிறார்கள் என்று சொல்ல முடியுமா என்ன?//

மறுபடியும் உளறுகிறீர்கள் பாலா.
1. நீங்கள் வந்திருந்தால், நீங்களே தமிழச்சியிடம் எழுந்து நின்று கேட்டிருக்கலாமே. யாராவது தமிழச்சியிடம் கேள்வி கேட்கக் கூடாது என்று சொன்னார்களா? ஆக, உங்கள் முதல் பொய்யான, அதாவது "பெட்னா சுட்டி காட்டி தட்டிக் கேட்க வாய்ப்பு தரவில்லை" என்ற பொய்யை ஒத்துக் கொள்கிறீர்கள்.

2. கருத்து ரீதி, தகவல் ரீதி...சரி எந்த ரீதியில் அவர் சொன்னாலும் அது அவரது கருத்து. அதைத் தட்டிக் கேட்க ஒரு மைக் இருந்தது. அதைத் தட்டிப் பறித்து நீங்கள் அந்த ரீதியைக் கேட்டு நீதியைக் காப்பாற்றியிருக்கலாமே. யார் உங்களுக்கு வாய்ப்புத் தராமல் போனது?

3. இப்போது பாலா அவர்கள் நல்லக்கண்ணு அய்யா அவர்களுடைய புகழ் விளக்கை ஏந்துகிறார். இது உங்க அற்பத்தனமான, எங்களுக்குப் பழகிப்போன உங்களது நழுவலுக்கு கிளாசிக் உதாரணம். அய்யாவுக்கு 5 நிமிடம் கொடுத்தார்களாம். நிரூபிக்க முடியுமா? பொது மேடையில் அவர் பேசியது 30 நிமிடங்கள். இந்த அமர்வில் அவர் பேசியது குறைந்தது 10-15 நிமிடங்கள். மற்றும் வேறொரு கேள்விக்கும் (வட கரோலைனா தணி சேரன் எழுப்பிய கேள்வி. எதுவென்றும் என்னால் சொல்ல முடியும்). அந்தக் கேள்விக்கு ஒரு 3-5 நிமிடம் பேசியிருப்பார். பொய் சொல்லாதீர்கள் பாலா!

4. //இதில என்ன மாதிரி காந்தி - அம்பேத்கார் நிகழ்ச்சியில் என்னவெல்லாம் தப்புந்தவறுமாக சொல்கிறார்கள் என்று சொல்ல முடியுமா என்ன?//

இந்தக் கேள்வியில/கருத்துல என்ன சொல்ல வர்றீங்க? தெளிவாகக் கேட்டால் விடை கிடைக்கும். வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். இன்னொன்று, நான் என்னதான் சொன்னாலும் இன்னும் 25 வருடங்கள் கழித்து பேரவை பொன்விழாவைப் பற்றி எதையாவது இதே மாதிரி இல்லாததையும் பொல்லாததையும் அரைகுறையாக எழுதிக் கொண்டுதான் இருப்பீர்கள். ஆனால் அப்போது பேரவைக்குச் சார்பாக எழுத இன்னும் பல்லாயிரம் பேர் வளர்ந்திருப்பார்கள்! வாழ்க!

Bala Subra said...

1. மொத்தம் எத்தனை கேள்விகள், எவரிடமெல்லாம் கேட்கப்பட்டது?

நான் பார்த்தவரை, ஏற்கனவே பேசி ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் கேட்டார்கள். ஒருவர் கேட்க முயலும்போதே, அவரின் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டு மயிலாடுதுறை சிவாவிற்கு சென்றுவிட்டது.

அவரும் கருத்தாழமிக்க கேள்வியோ அல்லது எஸ்ரா பேசியதன் மேற்சென்று விளக்கங்களோ எதுவும் கேட்கவில்லை.
----

2. தமிழச்சி பேசிய பிறகு அவருடைய பேச்சின் மீது கேள்விகள் கேட்கப்பட்டனவா?

நேரம் ஆகிறது; எனவே பேசி முடியட்டும் என சொல்லப்பட்டது.

நீங்கள் ‘ப்ளாகர்’ என்னும் சொல்லை வலைக்கு வந்த புதிதில் பயன்படுத்தி இருக்கலாம். அந்த மாதிரி, உ வே சாவும் நண்பருடன் பேசும்போது ஏதாவது தமிழல்லாத வார்த்தை போட்டிருப்பார். அதைப் பிடித்துக் கொண்டு ஏன் தமிழச்சி தொங்குகிறார் என்று எவராவது கேட்டார்களா?

காந்தி மௌன விரதம் இருந்த அன்று எழுதவும் மாட்டாரா என்று வினவினார்களா?
-----

3. ஞாயிறன்று தமிழச்சிக்கு இருபது நிமிடம் ஆகியும் இடத்தை காலி செய்யச் சொல்லாதவர்கள், நல்லகண்ணு அய்யா ஐந்து நிமிடம் பேசியவுடன், துரத்தாத குறையாக அவரை அமர்த்தியதற்கு அவரின் பேச்சு கருப்பொருள் காரணமா?
----

பெட்னா மீது விமர்சனம் செய்யக் கூடாது என்று சொல்லுங்கள். பேசாமல் போய் விடுகிறேன்.

வெறும் மேடைப் பேச்சில் மட்டுமில்லாமல் செயலிலும் பெரியார் கொள்கைகள் கொணரலாம் என்கிறேன்.

சிவகார்த்திகேயன் முன்பு ‘நீயா/நானா’ போன்ற அரட்டை அரங்களுக்கு பதில் தமிழச்சியுடன் விவாதக் களம் அமையுங்கள் என்கிறேன்.

எங்களிடம் ஆயிரக்கணக்கானவர் கூடுகிறார்கள். எனவே இதெல்லாம் தேவையில்லை எனலாம்.

எண்ணிக்கையில் மட்டுமில்லாமல் எண்ணத்திலும் பெட்னா வளர்வர்தற்கான விருப்பங்களை சொல்ல வேண்டாம் என்று தெரிவியுங்கள். விட்டு விடுகிறேன்.
----

பாலா

பழமைபேசி said...

//Bala Subra said...
ஞாயிறு நிகழ்ச்சியில் நான் அகலந்து கொண்டேன்.

தமிழச்சி கருத்து ரீதியாக சொல்வதோடு மறுத்துப் பேச பிறருக்கு வாய்ப்பு இல்லாமல் போகலாம். ஆனால், தகவல் ரீதியாக திரித்துப் பேசுவதை திருத்த அங்கே வாய்ப்பளிக்க வேண்டும்.//

நமக்காக நம்மால் நடத்தப்படுகிற பேரவையில் உங்களுக்கும் நேரம் கொடுக்கப்படுமுங்க பாலா. நீங்களும் எழுந்து கேள்வி இருக்குன்னு சொல்லி இருக்கலாம். அந்நிகழ்ச்சியே ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிதானே?!

கடைசியில்தான் நான் உங்களைக் காண நேரிட்டது. நீங்களும் புறப்படும் அவசரத்தில் இருந்தீர்கள் போல இருக்கு. தங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி!!

அடுத்த முறையாவது ஊக்கமா எழுந்து எனக்கும் கேள்வி நேரம் கொடுங்கன்னு சொல்லுங்க. மேலும், பேரவைக்கான விழிப்புணர்வு இயக்கம் நடத்துவதில் முனைப்பாக இருக்கும் தங்களுக்கு வாழ்த்தும் நன்றியும்!!

தணல் said...

// பொது மேடையில் அவர் பேசியது 30 நிமிடங்கள். இந்த அமர்வில் அவர் பேசியது குறைந்தது 10-15 நிமிடங்கள். மற்றும் வேறொரு கேள்விக்கும் (வட கரோலைனா தணி சேரன் எழுப்பிய கேள்வி. எதுவென்றும் என்னால் சொல்ல முடியும்). அந்தக் கேள்விக்கு ஒரு 3-5 நிமிடம் பேசியிருப்பார். பொய் சொல்லாதீர்கள் பாலா! //

அந்த நேரத்தில் இவரும் இவரோட ஆதர்ஷ எழுத்தாளரும் எழுந்து அமலா பால் போடாத குத்தாட்டத்தைக் காணப் போயிட்டாங்க போல! ஒரு நடிகை தனது சக நடிகருடன் ஒரு பொதுமேடையில் தோன்றி, பத்தோ அல்லது பதினைந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்துக்குப் பேசியதை இவ்வளவு வல்கராக எழுத இவரைப் போன்ற slutty ஆட்களால் தான் முடியும்!

இதுங்கள்லாம் காதும் காதும் வைத்தாற் போல தமிழ் சொல்லிக்கொடுத்து தமிழ் வளர்க்குதுங்களாம்! ஐயகோ அந்தப் பிள்ளைகள் நிலையை நினைத்தால்!!!

Bala Subra said...

தணல்,

அமலா பாலும் பரத்தும் வருவதற்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள்?

அது தமிழ்ச்சேவைக்கு எவ்வாறு பயன் ஆனது?

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு எவ்வளவு சன்மானம்?

விவரங்கள் தர இயலுமா

தணல் said...

//எண்ணிக்கையில் மட்டுமில்லாமல் எண்ணத்திலும் பெட்னா வளர்வர்தற்கான விருப்பங்களை சொல்ல வேண்டாம் என்று தெரிவியுங்கள். விட்டு விடுகிறேன்.//

விமர்சனங்களை வசவுகளாக மட்டுமே பொதுவில் வைக்கிறீர்கள்! அதுவும் ஃபெட்னா என்றாலே கடுமையான வெறுப்புணர்வு கொண்டிருக்கும் திருமோவனுக்கு அதை எழுதிப்போட்டு அவரது தளத்தில் வெளியிடவும் அதைக் குறித்த தனது காழ்ப்புணர்வை அவர் கொட்டவும் வழிவகை செய்கிறீர்கள்! எனில் உங்கள் நோக்கம் தான் என்ன?

தணல் said...
This comment has been removed by the author.
தணல் said...

// அமலா பாலும் பரத்தும் வருவதற்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள்?

அது தமிழ்ச்சேவைக்கு எவ்வாறு பயன் ஆனது?

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு எவ்வளவு சன்மானம்?

விவரங்கள் தர இயலுமா//

மன்னிக்கவும், என்னிடம் அந்த விவரங்கள் இல்லை!

ஆனால் ஒன்று கேட்கத் தோன்றுகிறது, நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து தமிழ்ச் சினிமாவே பார்ப்பது இல்லையா? அதையும் உங்கள் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி என்று தானே கொண்டிருக்கிறீர்கள்? மூன்று நாள் நிகழ்ச்சியில் அவர் ஒரு சதவிகித நேரத்தைக் கூட மேடையில் எடுத்துக் கொள்ளவில்லை எனும் போது, ஏன் அதை மட்டுமே நீங்களும் திருமோகனும் வெளிச்சமிட்டு zoom பண்ணிக் காட்டுகிறீர்கள்? எனில் யாருடைய பார்வையில் மனத்தில் அழுக்கு? ஃபெட்னா வெறும் தமிழ்கலைகள் வளர்க்கும் மாநாடு மட்டுமல்ல, அதுவோர் ஒன்றுகூடல் மற்றும் மனமகிழ் நிகழ்வு. அங்கு சினிமாக் கலைஞர்களும் வருவதை துர்பாக்கியமான விஷயம் என்று கருத முடியவில்லை. அவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப் படுகிறது என்பது மட்டுமே விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டிய ஒன்று.

நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியைக் கொண்டு ஒரு கணக்கு போட முயற்சிக்கலாம்! நடிகர்களுக்கு கொடுக்கப்பட்ட சன்மானம் எவ்வளவு, அவர்கள் அழைக்கப்பட்டதால் கூடுதலாக வந்தவர்கள் எவ்வளவு பேர், அதனால் எவ்வளவு ரெவென்யூ, is that worthy enough to invite them என்று!

பழமைபேசி said...

பாலா,

நீங்க உங்க ஆட்டையத் துவங்கிட்டீங்க. வெள்ளி விழாவுக்கென ஒரு ”நிகழ்ச்சிநிரல் குழு” உண்டு. அவர்கள் திட்டங்களை முன் மொழிவார்கள்.

“வழிகாட்டுதல் குழு” திட்டத்தை நிராகரிக்கும் அல்லது வழிமொழியும்.

“பொதுக்குழு”, அதனை நிராகரிக்கும் அல்லது ஒப்புதல் அளிக்கும்.

இதுதான் நடைமுறை. வரவு/செலவு/முடிவு சார்ந்த கேள்விகளுக்கு எந்தத் தனிநபரும் மறுமொழிவதை எந்த அமைப்பும் செய்யக்கூடாது என்பதை அறியாதவரா நீங்கள்? அப்படியே ஒருவர் அளித்தாலும், அது உண்மை என்றும், முழுமையானது என்றும், அதிகாரப்பூர்வமானது என்றும் எப்படி ஒருவர் ஏற்றுக் கொள்ள முடியும்??

தங்களுக்கு உள்ளபடியே பேரவையின் வளர்ச்சியில் நாட்டமிருப்பின், பேரவைக்குள் வந்திருந்து பங்களிப்புச் செய்யலாம். கேள்விகள் கேட்கலாம். திட்டங்களை முன் வைக்கலாம். விமர்சிக்கலாம் கடுமையாகவே!!

வருண் said...

***Bala Subra said...

தணல்,

அமலா பாலும் பரத்தும் வருவதற்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள்?

அது தமிழ்ச்சேவைக்கு எவ்வாறு பயன் ஆனது?

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு எவ்வளவு சன்மானம்?

விவரங்கள் தர இயலுமா
20 July 2012 7:19 AM ***

செயற்குழு, நிச்சயம் தரத்தான் செய்வாங்கனு நெனைக்கிறேன். இந்தத் தளத்துக்கு வந்து அதைத் தரமாட்டாங்க. நீங்க ஃபெட்னா செயற்குழுவிடம் பேசனும்னு நெனைக்கிறேன். :)

------------

பாலா: 2400 பேரை ஒன்றுசேர்க்கனும்னா இதுபோல் அட்ராக்சன்ஸ் தேவைதான்னு நான் நெனைக்கிறேன். நீங்க வெறும் தமிழ்ச்சேவை, இலக்கிய சேவைனு மட்டும் வைத்தால் பலர் வரமாட்டாங்க. இதெல்லாம் உங்களுக்கே தெரியும். நீங்க இதுபோல் ஒரு பேரவையை நடத்தினால் "இதே நிலை"க்கு தள்ளப்படுவீங்க, இதெல்லாம் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.

**தங்களுக்கு உள்ளபடியே பேரவையின் வளர்ச்சியில் நாட்டமிருப்பின், பேரவைக்குள் வந்திருந்து பங்களிப்புச் செய்யலாம். கேள்விகள் கேட்கலாம். திட்டங்களை முன் வைக்கலாம். விமர்சிக்கலாம் கடுமையாகவே!!***

பழமைபேசி சொல்றாப்பிலே பேசாமல் நீங்களும் உள்ளே நுழைந்து செயல்பட்டு சிறப்பிங்க, பாலா! :)

சுந்தரவடிவேல் said...

//நான் பார்த்தவரை, ஏற்கனவே பேசி ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் கேட்டார்கள்.//
இப்படிப் பேசுவதற்குப் பெயர்தான் அவதூறு. தமிழன்னையின் மீது ஆணையாக, நான் எஸ்.ராவைக் கேட்ட கேள்வி எனக்குள்ளேயே எழுந்தது. என்னை யாரும் "ஏற்பாடு" செய்யவில்லை. இதனைப் போலவே நானறிய எந்தக் கேள்வியும் "ஏற்பாடு" செய்யப்பட்டுக் கேட்கப்படவில்லை. உங்களால் யாரேனும் பேசி ஏற்பாடு செய்யப்பட்டவரை அடையாளம் காட்ட முடியுமா? பேரவையை வளர்க்கவேண்டும் என்பது உங்கள் நோக்கமாக இருந்தால் முதலில் அங்கு நடந்த அத்தனை நல்லவற்றையும் எழுதிவிட்டு, பிறகு, குறைகளை எழுதுங்கள். இதுதான் கல்வியியலில் படித்தவர்களின் பண்புள்ளவர்களின் இயல்பு. அதை விடுத்து, நானும் இத்தனை ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன் உங்கள் நடவடிக்கைகளை, குறைகளை மட்டுமே ஊதிப் பெரிதாக்குவது என்ன நாகரீகமோ? எந்த நிகழ்விலும் குறை இருக்கத்தான் செய்யும். அதனைத் தகுந்தவர்கள் தகுந்தமாதிரி தகுந்த நோக்கோடு சுட்டிக்காட்டினால் நிச்சயம் நன்மை பயக்கும். சிவகார்த்திகேயன் நிகழ்வில் என்ன குறை? நேற்று இன்று நாளை என்று மூன்று தலைமுறையினருக்கும் இடையே இருந்த எத்தனையோ நல்லது கெட்டதுகளை அருமையாகவும், சுவையாகவும் அலசி ஆராய்ந்தார்களே. அதிலென்ன தவறு? ஏனுங்க நானும் பாத்துக்கிட்டே இருக்கேன், அமலா பால் மேல உங்களுக்கு என்னங்க கோவம்? அவங்க நடிச்சு நான் பாத்த மைனா படம் அருமைங்க. அந்த மாதிரி ஒரு நல்ல நடிகையைக் கூட்டிட்டு வந்து ஊக்கப்படுத்தினா, அவங்க இன்னும் நாலு நல்ல படம் நடிப்பாங்க. சொல்லப் போனா, அவங்க பேசுற தமிழைப் பாத்துட்டு இந்த ஊர்ல பொறந்து வளர்ற இளைஞர்கள் தாமும் தமிழ்ல பேசணும்னு நெனைக்கிறாங்க. இளைஞர்கள் மனதில் மாற்றங்களை இளைஞர்களாலே கொண்டு வருவது சுலபம். அது தமிழ்த் தொண்டு இல்லீங்களா? அதனாலதான் சி என் என் ஹீரோ, அக்ஷயா நாராயணனையும் கூப்பிட்டு சிறப்பித்தது பேரவை. சிறீ சிறீ ரவிசங்கரையும் கூப்பிட்டு அவரோட கருத்தையும் கேட்குது பேரவை. இதுக்கு நீங்க பூச நினைக்கிற சாயத்தையெல்லாம் பூசிக்கலாம். அப்புறம், பேரவையில எல்லாத்துக்கும் கணக்கு இருக்கு. பேரவையோட வரவு செலவு எல்லாத்தையும் ஐ.ஆர்.எஸ் அதாங்க நீங்களும் நானும் வரி கட்றம்ல அதைப் பாக்குற ஐ.ஆர்.எஸ் பாத்துக்கிட்டுதான் இருக்கு. எதிலும் ஒளிவு மறைவு கிடையாது. நீங்கள் விரும்பும் வரவு செலவுகளை அமைப்பின் பொருளாளருக்கு எழுதிக் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் ஒன்று, எல்லாவற்றிற்கும் பதிலைச் சொன்னாலும் உங்கள் நோக்கம் வேறாக இருக்கும்போது எந்தப் பதிலும் உங்களை அமைதியுறச் செய்யாது. எனவே எனது தாழ்மையான வேண்டுகோள், உங்கள் அமைதியை உங்களுக்குள்ளே வேண்டுங்கள், வெளியிலிருந்து வரும் விடைகளில் உங்களுக்கான அமைதி இருக்காது. அன்பும் வாழ்த்துக்களும்!

தணல் said...

பாலாவுக்கு அவருடைய கடிதத்திலிருந்து மேலும் சில கேள்விகள்!

// என்னுடைய அலுவலக பாஸ் வாரந்தோறும் மூன்று சீட்டு மங்காத்தா ஆடுவார். தன்னுடைய உற்ற நண்பர்களின் வீட்டில், தங்களுக்குப் பிடித்தமான இசையுடன், உணவுகளுடன், பின்னிரவு வரை சில்லறைக் காசு பந்தயம் கட்டி ஆடுவார். பணம் ஜெயிப்பது குறிக்கோள் அல்ல. எனினும், அந்த வாராந்திர நிகழ்வு ஒரு சடங்கு. எவரின் வீட்டில் எந்த சாப்பாட்டுடன் என்ன விளையாட்டு என்று திட்டமிடுவதே சுகம்.//

இதை மெச்சி இருக்கிறீர்களா இல்லை குறை சொல்லி இருக்கிறீர்களா? எனில் இப்படிக் கூடிக் கும்மிச் (தண்ணியும் உண்டல்லவா?) சீட்டாடுவதை விட, அதே குடும்பங்களை இணைக்க வழி செய்து வருடாந்திர நிகழ்வாக நடக்கும் ஃபெட்னா விழா உங்களுக்கு கேவலமாகத் தோன்றுகிறதா?

//புத்தக வாசிப்பில் ஆர்வம் கிடையாது. நுண்கலைகளை ரசிப்பதை நேர விரயம் என்பர்.//

எனக்கு கூட இலக்கிய வாசிப்பில் பெரியதொரு ஆர்வம் கிடையாது! எவனோ ஒருத்தன் "இப்படி நிகழக் கூடிய சாத்தியம் இருக்கிறது" என்ற தன்னுடைய கற்பனையை கதையாக எழுதினால் நான் என்ன ---- க்கு அதை வாசிக்க வேண்டும்? எனக்குப் பச்சையான உண்மையில் மட்டுமே ஆர்வம்! சிரியாவில் ராணுவ அமைச்சரைக் கொன்ற குண்டு வெடிப்பை எவ்வாறு சாத்தியப்படுத்தி இருப்பார்கள் என்று தேடிப் படிக்கவே விருப்பம்! எனில் நான் என்னுடைய வாழ்க்கையில் நீங்கள் சொல்லும் நுண்ணிய ரசனையற்ற மனிதராகிப் போகிறேனா?

ஒரு அறைக்குள் அடைந்து கொண்டு கதை கற்பனை என்று வாசித்து மனமகிழ்/மனவருத்தப் போதையில் இருப்பவர்களை விட, அந்நேரத்தில் நேரடியாக மனிதர்களுக்கு ஏதேனும் செய்யக் கூடியவர்களே எனக்கு மேன்மையானவர்களாகத் தோன்றுகிறார்கள்! சின்ன உதாரணம் தரவேண்டுமானால், இங்கு கான்சரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிப்பதற்காக முடி சேகரிக்கும் ஒரு குழு இயங்குகிறது! (நான் அதில் இல்லை). புத்தகத்திலோ அல்லது சினிமாவிலோ கான்சருடன் போராடுபவர்களை 'அக'தரிசனம் செய்து அவர்களுக்காக கண்ணீர் சிந்துபவர்களை விட (நான் உட்பட), இப்படி சிறு துரும்பையாவது சேகரிப்பவர்கள் மேலானவர்களாகத் தோன்றுகிறார்கள் எனக்கு!! ஒருவேளை அவர்களும் புத்தகம் வாசிக்கும் ஆர்வம் இல்லாதவர்கள், நுண்ணிய கலையை தரிசிக்கும் மெச்சும் அறிவோ ஆர்வமோ இல்லாதவர்கள் என்றால், அவர்களும் தம்வாழ்வில் ரசனையற்ற மனிதர்களாக்கிப் போகின்றனரா?

// ‘வாகை சூட வா’ வைரமுத்து வரிகளைக் குறித்தும் சிலாகித்து தங்கள் ரசனையைப் பகிர ஆள் அகப்படுகிறார்கள்.//

இதிலே உங்களுக்கு என்ன பிரச்சனை? "வாகை சூட வா" பாடல் ஒருவருக்குப் பிடித்திருந்தால் அந்த ரசனை பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்?

தணல் said...

// அமலா பால் மேல உங்களுக்கு என்னங்க கோவம்?//

அவருக்கு அஞ்சலி தான் பிடிக்குமாம்! அதான்!

பழமைபேசி said...

நண்பர் பாலா அவர்களின் கூற்று:

நல்லகண்ணு அய்யா பேசவே அஞ்சு நிமிஷம்தான் கொடுக்கிறாங்க..

ஞாயிறன்று தமிழச்சிக்கு இருபது நிமிடம் ஆகியும் இடத்தை காலி செய்யச் சொல்லாதவர்கள், நல்லகண்ணு அய்யா ஐந்து நிமிடம் பேசியவுடன், துரத்தாத குறையாக அவரை அமர்த்தியதற்கு அவரின் பேச்சு கருப்பொருள் காரணமா?

நண்பர் பாலா அவர்களே வெளியிட்டு இருக்கும் காணொலிகள்.

தோழர் நல்லகண்ணு அவர்கள் பேச்சினுடைய பகுதிக் கணொலியின் நீளம்: 11.17 மணித்துளிகள், பேச்சின் நிறைவு பதிவில் இல்லை.

http://youtu.be/ktqRJsrr_Q0

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களது பேச்சினுடைய காணொலியின் நீளம்: 16.29 மணித்துளிகள், பேச்சின் நிறைவு பதிவில் இருக்கிறது.

http://youtu.be/P6fN20StOUU

senthil said...

"அமலா பாலும் பரத்தும் வருவதற்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள்?

அது தமிழ்ச்சேவைக்கு எவ்வாறு பயன் ஆனது?

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு எவ்வளவு சன்மானம்?"

வணக்கம் நண்பரே!

தங்களுக்கு நடிகர் நடிகைகளை மட்டும் கண்ணுக்குத் தெரிகிறது! ஆனால், பேரவைக்கு வந்திருந்த சான்றோர்களைக் கண்ணுக் தெரிவில்லை எனில் தங்களுடைய மன ஓட்டத்தை ஒரு முறை உரசிப் பாருங்களேன்! என்றோ பார்த்த அல்லது கேள்வியுற்ற, தமிழ்க் கலைகளின் ஒன்றான சிலம்பாட்டத்தை அமெரிக்க வாழ் இளம் பெண் நிகழ்த்திக் காட்டியது தங்களுக்குப் புலப்படவில்லையா? இந் நாட்டில் வாழும் தமிழ் இளம் குருத்துக்களுக்கு ஏற்படும் சிந்தனைகளை மேடையில் ஏற்றிய நிகழ்ச்சி தங்களின் மனத்தைத் தைக்கவில்லையா? இதெல்லாம் தங்கள் புரையோடிய கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லைதான்! என்ன செய்வது, குறை கூறல் எளிது, கேள்வியைப் போட்டுத்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் இருப்போரை ஒன்றும் செய்து விட முடியாது. ஆனால், பேரவையின் தொண்டுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும், தமிழினம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிப்படையில் வினாக்களைத் தொடுப்பின் வாருங்கள்! கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்!

தமிழனாகப் பிறந்தமைக்கு மட்டும் பெருமை கொள்வோம் இல்லை! நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் பெருமை கொள்வோம்.

Bala Subra said...

எத்தனாவது நிமிஷத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் எழுந்து நிற்கிறார்கள்?

தமிழச்சிக்கு எப்பொழுது நேரக் கட்டுப்பாடு உணர்த்தப்படுகிறது?

நல்லகண்ணு எத்தனாவது நிமிடத்தில் ‘நான் முடித்துக் கொள்வேன்’ என்று கதறுகிறார்?


என்னுடைய எண்ணம், இங்கு பதில் அளிப்பது... இது எதுவுமே இந்த நிமிடக் கணக்கை தங்களுக்கு சொல்ல வேண்டும் என்பது அல்ல.

“பார்வையாளர்களுடன் கலந்துரையாடல்” என்பதை சிவகார்த்திகேயன் போன்றோரால் பல மணி நேரம் செய்ய முடிகிறது.

ஆனால், தன் பேச்சில் தகவல் பிழைகள் கொண்ட தமிழச்சிக்கு அந்த மாதிரி விரிந்த நேர அவகாசத்தை பெட்னா ஒதுக்கவில்லை.

எஸ் ராமகிருஷ்ணன், தமிழச்சி, நல்லகண்ணு மூன்று பேரும் தங்கள் கருத்துகளை பங்கேற்பாளருடன் உரசி வாதங்களையும் சிந்தனைகளையும் பகிருமாறு நிகழ்ச்சி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

அப்படிப்பட்ட நிகழ்வு சாத்தியப்படாததற்கு பல காரணங்கள். ஆனால், பன்னிரெண்டு மணிக்கு அரங்கை காலி செய்ய வேண்டும் என்று சொல்லி விட வேண்டாம்.

வருண் said...

***Bala Subra said...

எத்தனாவது நிமிஷத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் எழுந்து நிற்கிறார்கள்?

தமிழச்சிக்கு எப்பொழுது நேரக் கட்டுப்பாடு உணர்த்தப்படுகிறது?

நல்லகண்ணு எத்தனாவது நிமிடத்தில் ‘நான் முடித்துக் கொள்வேன்’ என்று கதறுகிறார்?***

பாலா, இப்படியெல்லாம் நீங்க வீம்பு பேசினால் ரொம்ப கஷ்டம்தான்.

நீங்க ஃபெட்னாவுக்குப் போனதே இதுபோல் குறை கண்டுபிடிக்கத்தானா? னு எனக்கு சந்தேகம் வருது.

சுந்தரவடிவேல் அவர்கள் சொன்னதுபோல நீங்க கீழே சொல்லியிருக்கதை "கருத்தில்" கொள்ளுங்க! :)

**எனவே எனது தாழ்மையான வேண்டுகோள், உங்கள் அமைதியை உங்களுக்குள்ளே வேண்டுங்கள், வெளியிலிருந்து வரும் விடைகளில் உங்களுக்கான அமைதி இருக்காது. அன்பும் வாழ்த்துக்களும்!***

Bala Subra said...

’புலி உறுமுது’ போன்ற திரைப்பாடல்களுக்கு நடனம் ஆடுவதும் பிரச்சினையில்லை. ஏதோ குழந்தைகளுக்கு அரங்கு வாய்ப்பு கிடைத்தால் போதுமானது.

அமலா பால் அஞ்சு விநாடி தமிழில் உரையாற்றினாலும் பிரச்சினையில்லை. அவரால் ஆயிரக்கணக்கானோர், ஆயிரம் டாலர் தந்தால் போதுமானது.

வேலு நாச்சியார் நாடகத்தில் வரலாற்றுப் பிழை இருப்பதும் பிரச்சினையில்லை. ஏதோ, தமிழில் பேசினால் போதுமானது.

மேடைப் பேச்சாளர் அந்தக் கால நிகழ்வுகளை இடஞ்சுட்டாமல், பொருள் விளக்காமல் இட்டுக் கட்டினாலும் ஒகே. ஏதோ, பேசுவதற்கு ஆள் கிடைத்தால் போதுமானது.

பலர் கூடும் இடத்தில் சாதி பார்த்து குழுவிற்குள் மணமுடிப்பு நடந்தாலும் சரிதான். மேடையிலாவது முற்போக்கு கருத்துகளை முன்வைத்தால் பேஷ்.

பழமைபேசி said...

இது நியாயமான வாதம் நண்பரே! தங்களிடம் நண்பன் என்ற முறையில் வேண்டுவதெல்லாம் போகிற போக்கில் மேம்போக்காக காலக்கணக்கை எல்லாம் தவறாக உரைப்பது நன்றன்று.

சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் என்பது மேம்போக்கான வாதம்.

அந்நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் 17 பேர் கலந்து கொண்டார்கள். ஆக 17+1= 18 பேருக்கான மேடைக்காலம் ஒரு மணி நேரம்.

பெரியவர்களோடு கலந்துரையாக எப்போதும் இணையரங்குகள் தயாராகவே இருந்தன. அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு ஓம்படையாளனாகப் பணியாற்றியவன் நான். அவரோடு பல கலந்துரையாடல்கள் பல முறை நானே நடத்திக் கொடுத்தேன்.

பாலா, திறந்த மனத்தோடு சொல்கிறேன். பேரவையில் என்னைப் போல சண்டை போடுபவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. உரிய நேரத்தில், உகந்த காரணங்களுக்காக, உரிமையோடு சண்டை போட என்னுடன் இணைந்து நீங்களும் செயலாற்றலாம். அதற்கு என்னாலான அனைத்துப் பங்களிப்பும் செய்வேன். ஆனால், ஏறுமாறான, முன்னுக்குப்பின் தகவல்களைத் தவிர்ப்போமே?!

பழமைபேசி said...

// Bala Subra said...
’புலி உறுமுது’ போன்ற திரைப்பாடல்களுக்கு நடனம் ஆடுவதும் பிரச்சினையில்லை. ஏதோ குழந்தைகளுக்கு அரங்கு வாய்ப்பு கிடைத்தால் போதுமானது.

அமலா பால் அஞ்சு விநாடி தமிழில் உரையாற்றினாலும் பிரச்சினையில்லை. அவரால் ஆயிரக்கணக்கானோர், ஆயிரம் டாலர் தந்தால் போதுமானது.

வேலு நாச்சியார் நாடகத்தில் வரலாற்றுப் பிழை இருப்பதும் பிரச்சினையில்லை. ஏதோ, தமிழில் பேசினால் போதுமானது.

மேடைப் பேச்சாளர் அந்தக் கால நிகழ்வுகளை இடஞ்சுட்டாமல், பொருள் விளக்காமல் இட்டுக் கட்டினாலும் ஒகே. ஏதோ, பேசுவதற்கு ஆள் கிடைத்தால் போதுமானது.

பலர் கூடும் இடத்தில் சாதி பார்த்து குழுவிற்குள் மணமுடிப்பு நடந்தாலும் சரிதான். மேடையிலாவது முற்போக்கு கருத்துகளை முன்வைத்தால் பேஷ்.//

ஆதாரமற்ற வெறுப்பை உமிழ்கிறீர்கள். இத்தோடு நான் என் கருத்தாடலை முடித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!!

தணல் said...

// ’புலி உறுமுது’ போன்ற திரைப்பாடல்களுக்கு நடனம் ஆடுவதும் பிரச்சினையில்லை. ஏதோ குழந்தைகளுக்கு அரங்கு வாய்ப்பு கிடைத்தால் போதுமானது.//

இதுல உங்களுக்கு என்னதான் பிரச்சனை? Are you against cinema as a whole?

//அமலா பால் அஞ்சு விநாடி தமிழில் உரையாற்றினாலும் பிரச்சினையில்லை. அவரால் ஆயிரக்கணக்கானோர், ஆயிரம் டாலர் தந்தால் போதுமானது.//

அப்ப அவங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் குறைவுன்னு சொல்லுறீங்களா! :-)

வருண் said...

***பலர் கூடும் இடத்தில் சாதி பார்த்து குழுவிற்குள் மணமுடிப்பு நடந்தாலும் சரிதான்.***

Bala: Just like you did, if someone wants to marry in their own caste by "arranged marriage" feTNA can not control it.

This summer, two Tamil brahmin girls happily married african american boys. For those girls, AA guys are HOT and LOVEABLE, not Tamil boys! Their parents could not control that too.What can you do about it?

Hey! This is America! They can do anything they are comfortable with as long as it is legal. Nobody can control that. Let it be fetNA or their own parents or you or me!

senthil said...

"வேலு நாச்சியார் நாடகத்தில் வரலாற்றுப் பிழை இருப்பதும் பிரச்சினையில்லை. ஏதோ, தமிழில் பேசினால் போதுமானது"

ஜான்சி ராணி தான் விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரே வீர மங்கை என்ற சில அறிவாளிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 'வேலு நாச்சியார்' ன்னு ஒருத்தி இருந்தா அவ நம்ம ஊர்க்காரிதான் சொல்றதுக்காகத் தான் பேரவையில் அச் சிறப்பு மிக்க வரலாற்று நாடகம் நிகழ்த்தப்பட்டது.

"மேடைப் பேச்சாளர் அந்தக் கால நிகழ்வுகளை இடஞ்சுட்டாமல், பொருள் விளக்காமல் இட்டுக் கட்டினாலும் ஒகே. ஏதோ, பேசுவதற்கு ஆள் கிடைத்தால் போதுமானது"

ஏதோ எழுத வேண்டும். அடுத்தவர்களை உணர்ச்சியேற்றி அதன் வழியே இன்பம் அடைகிறீர்களா..? நண்பரே

"பலர் கூடும் இடத்தில் சாதி பார்த்து குழுவிற்குள் மணமுடிப்பு நடந்தாலும் சரிதான். . "

இப்படி ஒரு திருமணமாவது நடந்தது என்று தாங்கள் சான்றுடன் விளக்க முடியுமா?

பொதுவாக,உண்மையை தெரிந்த கொள்ள விரும்பாது, ஏதோ எழுதி மற்றவர்களின் மனதை நோகச் செய்து எழுதுவது தாங்கள் கற்ற கல்வியின் பயன் என்றால் அதற்கு என்னிடம் பதில் கூற்று ஏதுமில்லை.

தணல் said...

//மேடைப் பேச்சாளர் அந்தக் கால நிகழ்வுகளை இடஞ்சுட்டாமல், பொருள் விளக்காமல் இட்டுக் கட்டினாலும் ஒகே. ஏதோ, பேசுவதற்கு ஆள் கிடைத்தால் போதுமானது.//

மேடைப் பேச்சாளர் தவறாகப் பேசியதாகவே இருக்கட்டும். அதற்கு ஃபெட்னா நேரடியாகப் பொறுப்பாகாது. உங்கள் பிரச்சனை கேள்விபதில் பகுதிக்கு நேரம் குறைவாக இருந்தது என்பதுதானே! அந்தக் குறையை நேரடியாகச் சொல்லலாமே? அதைவிட்டுட்டு, தமிழச்சியை என்னவோ ப்ளான் செய்து நிறைய நேரம் பேசவிட்டது போலவும், நல்லகண்ணு ஐயாவை abruptly interrupt செய்து அமரச் செய்தது போலவும், கேள்வி கேட்டவர்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் என்று கூறுவதும் எந்த வகையில் அய்யா நியாயம்?

தணல் said...

// சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் என்பது மேம்போக்கான வாதம்.

அந்நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் 17 பேர் கலந்து கொண்டார்கள். ஆக 17+1= 18 பேருக்கான மேடைக்காலம் ஒரு மணி நேரம் //

இந்த பதிலுக்கு பாலா என்ன சொல்லுகிறார்?

பெருசு said...

முதல் முறையாக தொலைத்தூரத்திலிருந்து பெட்னா பேரவையில் கலந்து கொண்ட என் போன்ற நபர்களுக்கு கண்டிப்பாக இது ஒரு பொழுது போக்கு மற்றும் சிந்தையை தூண்டும் நிகழ்வுதான்.

திரு.சகாயம் அவர்களின் முதல் நாள் பேச்சுக்கு அரங்கம் முழுதும் எவ்வாறு எழுந்து கையொலித்து ஆர்ப்பரித்தது என்பதை கண்கூடாக கண்ட பின்பும்,அய்யா நல்லகண்ணு அவர்களின் எளிமையான கலந்துரையாடலுக்கும், திரு.இலக்குவனார், திரு.பொன்னவைக்கோ,திரு.இராமசாமி போன்ற சான்றோர்களின் உரைகளுக்கும் நடுவண் தமிழச்சியின் உரை,
என் செய்வது, தமிழன் பண்பு சில நேரங்களில் எழும் வினாக்களுக்கு விடை தேட முயல்வதில்லை.

பாட்டு பாடி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்.
குற்றம் கண்டு பிடித்து பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.
தாங்கள் எந்த வகையில் சார்ந்தவர் பாலா?

பிழையற்ற ஒரு நிகழ்வு,அதுவும் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து மனக்குறையின்றி நடாத்துவது என்பது இயலுமா,சிந்தித்து நியாமாக உரையுங்கள்.,
வடை சே விடை கிடைக்கும்.

தணல் said...

//பாட்டு பாடி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்.
குற்றம் கண்டு பிடித்து பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.
தாங்கள் எந்த வகையில் சார்ந்தவர் பாலா?//

நீங்க பூணூல் போட்டிருக்கீங்க என்று நான் சொன்னால் (சொல்லுறது மட்டுமே, எந்த ஆதாரமோ இல்லை புகைப்படமோ காட்டப்போவதில்லை), போடவில்லை என்று சட்டையைக் கழற்றி நிரூபிக்க வேண்டியது உங்க பொறுப்பு என்று சொன்னவர்! எந்த வகைன்னு நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்!

சுந்தரவடிவேல் said...

I am posting this based on the request(see below):

//Pl publish this on my behalf. We are travelling now. nanRi.


ஞாயிறு நிகழ்ச்சியின்(கலந்துரையாடல்) ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நடந்தவற்றை முன்வைக்கிறோம்.
(1) பேச்சாளர்களின் கருத்து சுதந்திரத்தில் பேரவை தலையிடவில்லை.
(2) நேர ஒழுங்கிற்காக , உரைகளை(தமிழச்சி அவர்களையும் சேர்த்து) முடிக்கும்படியாக சீட்டு மூலம் செய்தி கொடுத்து அறிஞர்களை மதிப்போடு நடத்தினோம். நல்லகண்ணு, மறைமலை, எஸ்ரா, தமிழச்சி ஆகியோருக்கு அவரவர்களிடம் கலந்தே நேரங்கள் முடிவு செய்தோம்.
(3) கேள்விகளை கேட்க விரும்பியவர்கள் எவ்வித தடையுமின்றியே வினவினார்கள். எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்பதை அவையோர் ஒத்துக் கொள்வர்.

அன்புடன்
மலர்ச் செல்வன்
ஒருங்கிணைப்பாளர் - பேரவை கலந்துரையாடல் நிகழ்வு//

சுந்தரவடிவேல் said...

I am posting this based on the request(see below):

//Pl publish this on my behalf. We are travelling now. nanRi.


ஞாயிறு நிகழ்ச்சியின்(கலந்துரையாடல்) ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நடந்தவற்றை முன்வைக்கிறோம்.
(1) பேச்சாளர்களின் கருத்து சுதந்திரத்தில் பேரவை தலையிடவில்லை.
(2) நேர ஒழுங்கிற்காக , உரைகளை(தமிழச்சி அவர்களையும் சேர்த்து) முடிக்கும்படியாக சீட்டு மூலம் செய்தி கொடுத்து அறிஞர்களை மதிப்போடு நடத்தினோம். நல்லகண்ணு, மறைமலை, எஸ்ரா, தமிழச்சி ஆகியோருக்கு அவரவர்களிடம் கலந்தே நேரங்கள் முடிவு செய்தோம்.
(3) கேள்விகளை கேட்க விரும்பியவர்கள் எவ்வித தடையுமின்றியே வினவினார்கள். எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்பதை அவையோர் ஒத்துக் கொள்வர்.

அன்புடன்
மலர்ச் செல்வன்
ஒருங்கிணைப்பாளர் - பேரவை கலந்துரையாடல் நிகழ்வு//

வருண் said...

பாலா: ஃபெட்னாவுக்கும் ஜெயமோஹனும் என்ன சம்மந்தம்? என்னத்துக்கு அந்தாளுக்கு எல்லா விளக்கமும்? அரவிந்தனும் நீங்களும் அமெரிக்கத் தமிழர்கள் வாழ்க்கை பற்றி ஒரு மண்ணும் தெரியாத அந்தாளு தளத்துக்குப் போயி ஏன் எதையாவது உளறுறீங்க?

The letter you wrote in his blog is just your experience.

***என்னுடைய அலுவலக பாஸ் வாரந்தோறும் மூன்று சீட்டு மங்காத்தா ஆடுவார். தன்னுடைய உற்ற நண்பர்களின் வீட்டில், தங்களுக்குப் பிடித்தமான இசையுடன், உணவுகளுடன், பின்னிரவு வரை சில்லறைக் காசு பந்தயம் கட்டி ஆடுவார். பணம் ஜெயிப்பது குறிக்கோள் அல்ல. எனினும், அந்த வாராந்திர நிகழ்வு ஒரு சடங்கு. எவரின் வீட்டில் எந்த சாப்பாட்டுடன் என்ன விளையாட்டு என்று திட்டமிடுவதே சுகம்.

இன்னொரு சகா, மாதந்தோறும் புத்தக சங்கத்திற்காக நூலைப் படித்து அலசி ஆராய்ந்து பேசுவார். அதற்காக ஆறு பேர் ஒன்றுகூடுகிறார்கள்.

இந்த மாதிரி எந்தவித ஒன்றுகூடலும் இல்லாத சமூகமாகவே பெரும்பாலான அமெரிக்கத் தமிழர் இருக்கின்றனர். புத்தக வாசிப்பில் ஆர்வம் கிடையாது. நுண்கலைகளை ரசிப்பதை நேர விரயம் என்பர்.***

I don't do 10% of what you do. But you talk as if you represent the whole American Tamil community?

Who the hell are you, Bala, go insult me in JM'blog with your half-baked knowledge? Please next time you talk about YOURSELF and explain what you do in America. Dont try to extrapolate to other "american tamils". Or you can just represent your "community" and give a "picture" of how you pray your God and that bs!

Bala Subra said...

வருண்,
நீங்க பெட்னா சென்றீர்களா? எத்தனை தடவை சென்றிருக்கிறீகள்? எதற்காக சென்றீர்கள்?

சுந்தரவடிவேல் said...

இது தொடர்பான ஒரு சிறு குறிப்பு:

இன்று (ஜூலை 20, 2012) அன்று பேரவையின் விருந்தினர்களில் ஒருவரான கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களது கவனக நிகழ்ச்சியினை தென் கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்தில் நடத்தினோம். இது இங்குள்ள பனைநில தமிழ்ச் சங்கத்தின் ஒத்துழைப்பில் நிகழ்ந்தது. ஆங்கிலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பல அமெரிக்க/பன்னாட்டு மாணவர்கள் வந்திருந்து கவனகக் கலையை அறிந்து பாராட்டினார்கள். இத்தகைய நல்ல தமிழ் அறிஞர்களை, கலைஞர்களை அமெரிக்கர்கள் இனம் கண்டுகொண்டது பேரவையின் மூலமாகவே. மேலும், இது முனைவர் கலை.செழியனுக்கும் ஒரு அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திய நற்பெயரைத் தந்தது. பேரவையின் தமிழ்த் தொண்டுக்கு இது ஒரு சிறிய சான்று. அரசாங்கங்களின் நிதி உதவியுடன் கலை பண்பாட்டுத் துறை செய்யும் வேலைகளையெல்லாம் அமெரிக்கத் தமிழர்கள் மகிழ்வுடன் மனமுவந்து உழைப்பையும் பொருளையும் ஈந்து, பேரவையின் உதவியுடன் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு பதிவிற்காக! நன்றி!

வருண் said...

*** Bala Subra said...

வருண்,
நீங்க பெட்னா சென்றீர்களா? எத்தனை தடவை சென்றிருக்கிறீகள்? எதற்காக சென்றீர்கள்?

20 July 2012 12:56 PM***

நான் என் பதிவில் நான் ஃபெட்னா போகவில்லைனு தெளிவாக சொல்லியிருக்கேன். தமிழச்சியின் காந்தி அவதூறையும் நான் ரசிக்கவில்லைனு என் நிலையை சொல்லியிருக்கேன். அப்புறம் எதுக்கு இந்தக் கேள்வி???

நான் சொல்ல வருவது, நீங்க ஃபெட்னா பத்தி மட்டும் அந்த கடிதத்தில் சொல்லவில்லை.
நான் மேலே "மேற்கோள்" (கீழேயும்) காட்டியிருப்பது நீங்க அமெரிக்கவாழ் தமிழர்களுடைய வாழ்க்கை முறையை!

///இந்த மாதிரி எந்தவித ஒன்றுகூடலும் இல்லாத சமூகமாகவே பெரும்பாலான அமெரிக்கத் தமிழர் இருக்கின்றனர்.//

உங்களை உங்க வாழ்கையை நீங்க மட்டப்படுத்திக்கோங்க? ஏன் எல்லா அமெரிக்கத்தமிழர்களையும் அப்படி செய்றீங்க என்பதே கேள்வி? It has nothing to do with FeTNA!

Bala Subra said...

மொத்தமாக நூறு சதவிகிதம் அவ்வாறுதான் என்று நான் சொல்லவில்லை. அவ்வாறு பொருள் வந்திருந்தால் அதற்கு மன்னிக்கவும்.

ஜெனேரேஷன் எக்ஸ், ஒய், ஜீ என பலவாறாக பிரிப்பது போல் அமெரிக்கத் தமிழரையும் வகைப் படுத்தலாம்.

அதற்கு இன்னும் ஆழமான மார்க்கெடிங் ரிசர்ச் தேவை.

ஜெயமோகனுக்கான கடிதத்தில் நான் சொல்ல வந்தது, அமெரிக்க தமிழருக்கான இனக் குறியீட்டிற்கான தேவையை; ஒத்த மனதுடைய, நாட்டமுடையவர்களைக் கண்டடைய வேண்டியதன் அவசியத்தை; தொழில் நுட்பத்தில் மட்டும் கவனம் செலுத்துபவர்களின் விருப்பங்களை.

கடைசியாக எப்போது நாம் அருங்காட்சியகம் சென்றோம்? எவரை அழைத்து சென்றோம்? எங்கு மேடை நிகழ்ச்சிகளை கண்டு களித்தோம்? எந்த நாடகத்தை ரசித்தோம்? ரசித்ததை, படித்ததை, கலைகளை எவ்வாறு மற்றவருக்கு அறிமுகம் செய்தோம்? ஓய்வு நேரத்தில் என்ன செய்கிறோம்? எதை தொடர்ச்சியாக, கடமையாக, அதே சமயம் மன ஓய்விற்காகவும் புலன் மேம்படலுக்கும் சிந்தை கூர்மைக்கும் அன்றாடம் நடத்துகிறோம்?

இதை எல்லாம் ஆய்ந்தால் இன்னும் விரிவாக தமிழரின் போக்கை சொல்லலாம்.

வருண் said...

***கடைசியாக எப்போது நாம் அருங்காட்சியகம் சென்றோம்? எவரை அழைத்து சென்றோம்? எங்கு மேடை நிகழ்ச்சிகளை கண்டு களித்தோம்? எந்த நாடகத்தை ரசித்தோம்? ரசித்ததை, படித்ததை, கலைகளை எவ்வாறு மற்றவருக்கு அறிமுகம் செய்தோம்? ஓய்வு நேரத்தில் என்ன செய்கிறோம்? எதை தொடர்ச்சியாக, கடமையாக, அதே சமயம் மன ஓய்விற்காகவும் புலன் மேம்படலுக்கும் சிந்தை கூர்மைக்கும் அன்றாடம் நடத்துகிறோம்?***

நீங்க நெறைய மிஸ் பண்ணுறீங்க போல. நான் எல்லாம் இந்த ஊரில் பணத்துக்காக மட்டும் இல்லை, வாழ்க்கையையே ரசித்துத்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.

என்ன க்ரிக்கெட்டுக்கு பதிலா அமெரிக்கன் ஃபுட் பால், பாஸ்கட் பால் அலல்து பேஸ் பால் (ஸ்டேடியம் போயி)ப் பார்ப்பேன். தமிழ்ப் பள்ளிக்கு நெறையாவே நேரம் செலவழிச்சு இருக்கேன். இங்கேலாம் 3 மாதத்துக்கு ஒரு முறை 6 மணி நேரம் தமிழ் ஃபங்க்சன் ஒண்ணு நடத்திடுவாங்க. டென்னிஸ், வாலிபால்னு பொழுது போயிடும். Most of all I love the caste-free, corruption-free life here! I dont really miss anything that much. :) May be that is the reason I dont even go to FeTNA I guess!

பழமைபேசி said...

க்கும்... ‘வருண்’ங்ற பேர்ல பழமைபேசிதான் எழுதிட்டுத் திரியுறான்னு அங்கங்க பேசிக்கிடுதாங்க! அதை உடைக்கிறதுக்காகவாவது அடுத்த அமெரிக்க தமிழ்த் திருவிழாவுக்கு வந்து தலையக் காட்டுங்க சாமி!

தணல் said...

//கடைசியாக எப்போது நாம் அருங்காட்சியகம் சென்றோம்? எவரை அழைத்து சென்றோம்? எங்கு மேடை நிகழ்ச்சிகளை கண்டு களித்தோம்? எந்த நாடகத்தை ரசித்தோம்? ரசித்ததை, படித்ததை, கலைகளை எவ்வாறு மற்றவருக்கு அறிமுகம் செய்தோம்? ஓய்வு நேரத்தில் என்ன செய்கிறோம்? //

ஏன் நான் அருகாட்சியகத்துக்கோ அல்லது மேடை நிகழ்ச்சிக்கோ அல்லது ஏதாவது கலையையோ ரசித்து தான் எனது வாழ்க்கையை நகர்த்தனுமா? ஒரு பார்க்குக்குப் போய் கொஞ்சம் நேரம் ஜாக் பண்ணிட்டு கொஞ்சம் நேரம் ஓய்வாக அமர்ந்திருந்து வர்றவங்க போறவங்கள வேடிக்கை பார்த்துட்டு வந்தால் அந்தப் பொழுதுக்கு என் மனம் நிறைந்துவிடாதா? எனக்கு எது நிறைவு தரக் கூடியது என்பதை யார் முடிவு செய்வது? பத்து பேரைக் கூட்டிவைத்து எதுனா புத்தகம் பற்றிப் பேசினால் தான் மனநிறைவு என்றால் எப்படி? நண்பர்களை வீட்டுக்கு அழைப்பது அல்லது அவர்கள் வீட்டுக்குச் சென்று உணவருந்திவிட்டு பேசிக்கொண்டிருப்பது, சேர்ந்து சினிமா பார்ப்பது (சீட்டாட்டத்துக்கு சினிமா ஒன்னும் குறைச்சலில்லை), அருகிலிருக்கும் நண்பர் குடும்பத்துடன் ஹைக்கிங் அல்லது பிக்னிக் செல்வது என்று எங்களுடைய நேரத்தை எங்களுக்கு விருப்பமான முறையில் செலவழிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? How can you force your ways of enjoyment on others?

சுந்தரவடிவேல் said...

Marketing research :)) அதற்கு முதலில் தேவை திறந்த அணுகுமுறை. அவதூறு மூட்டையைச் சுமந்துகொண்டு முன்னமேயே வடிவமைத்துக்கொண்ட முடிவுகளுடன் மார்க்கெட்டிங் ரிசர்ச்சோ அல்லது எந்த ரிசர்ச்சுமோ செய்தால், அல்லது செய்ய ஆரம்பித்தாலே நன்றாக விளங்கிவிடும்:))

இன்று மாலை Folly Beach-ல் சுண்டல், வடை, சிற்றுண்டியுடன் ஒரு ஒன்றுகூடல் இருக்கிறது. அய்யா நல்லக்கண்ணுவும், முனைவர் கலை.செழியனும் மற்றும் பல நண்பர்களும் இருப்பார்கள். கடற்கரையில் ஓடலாம், கபடி ஆடலாம், உட்கார்ந்து அரசியலும் இலக்கியமும் பேசலாம். அல்லது எங்காவது எதையாவது நொட்டையாக எழுதி இயலாமையைக் காட்டிக்கொண்டிருக்கலாம். தேர்வு அவரவருடையது :)

வருண் said...

***சுந்தரவடிவேல் said...ஒருமுறை வந்து பாருங்கள். புரியும். சிலருக்கு பெட்னா என்றாலே எங்கோ எரியும். அது அவர்களது போறாத காலம். ஆனால் பேரவை போன்ற ஒரு அமைப்பின் இன்றியமையாமை ஒரு நாள் எல்லோராலும் உணரப்படும். வாழ்க தமிழ்! வளர்க பேரவை! கொண்டாடுவோரும் வாழ்க! வைவோரும் வாழ்க!***

***Arasu said...அடுத்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் டொரோண்டோவில் பேரவை விழா நடக்க இருக்கிறது. நீங்களே நேரில் வந்து பார்த்து விழாவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்களே.***

***பழமைபேசி said...

க்கும்... ‘வருண்’ங்ற பேர்ல பழமைபேசிதான் எழுதிட்டுத் திரியுறான்னு அங்கங்க பேசிக்கிடுதாங்க! அதை உடைக்கிறதுக்காகவாவது அடுத்த அமெரிக்க தமிழ்த் திருவிழாவுக்கு வந்து தலையக் காட்டுங்க சாமி!***

சரி, எல்லாரும் இவ்வளவு சொல்றீங்க.. அடுத்த வருடம் டொரண்டோவில் கட்டாயம் பார்க்கலாம். :-)

பாலா! உங்களையும்தான்! :-))))

-/சுடலை மாடன்/- said...

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் வளர்ந்திருந்தால் ஒரு காட்சியைக் கண்டிருப்பீர்கள். செந்தட்டி என்ற ஒரு செடி முட்செடிகளுக்கு பக்கத்திலேயே வளர்ந்திருக்கும். செந்தட்டி இலைகள் தோல்மேல் இலேசாகப் பட்டாலே போதும். தாங்க முடியாத அளவுக்கு தோல் அரிக்கும் அல்லது எரியும். நாய்கள் சில நேரங்களில் தெரியாமல் அச்செடிகளின் பக்கம் மூத்திரம் பெய்யப்போய் தோலில் செந்தட்டி இலைபட்டவுடன் தரையில் கிடந்து புரளும். அரிப்பையும், எரிப்பையும் போக்கிக் கொள்ள அப்படியும் இப்படியும் புரண்டு துடிக்கும்.

சனாதன இந்துத்துவத்தை ஒளித்துவைத்துகொண்டு வெளியே லிபரல் வேடம்போடும் பாஸ்டன் பாலா போன்றவர்களின் நிலை செந்தட்டி இலைபட்ட நாயைப் போன்று பரிதாபமாக இருக்கிறது. பேரவையைப் புறக்கணிக்கவும் முடியாமல், காசு கொடுத்து கலந்து கொள்ளவும் மனம் வராமல் செந்தட்டி இலையைப் போய் இலேசாகத் தொட்டுவிட்டு உருண்டு புரண்டு கொண்டிருக்கிறார்கள். நண்பர்களே, அவரைப் போன்றவர்களுக்கு புரியவைக்க வேண்டுமென உங்கள் நேரத்தை வீணாகக்காதீர்க்ள். அவர் இப்படியெல்லாம் எழுதவில்லை என்றால்தான் நாம் வியப்படைய வேண்டும். அவர் இப்படியெல்லாம் எழுதுவதில்தான் பேரவையும், அது முன்னெடுத்துச் செல்லும் தமிழர் அடையாளமும் ஒற்றுமையும் தெரிகிறது.

(சனாதன இந்துத்துவத்தை ஒளித்துவைத்துகொண்டு வெளியே லிபரல் வேடம்போடும் *தமிழ்இந்து*க்களின் புனிதபிம்பமான ஜெயமோகனின் ”யானை வைத்தியர்” என்ற சிறுகதையில் செந்தட்டி இலையைப்பற்றி விவரித்திருப்பார், மேலும் படித்துத் தெரிந்துகொள்க :-)

ஜெயமோகனைப் பற்றிச்சொல்ல விரும்புவது ஒன்று. தமிழ் மொழியில் ஆழமான விதயங்களை அருமையாக எழுதும் திறமையாளர். ஆனால் அவரது இந்துத்துவ அரசியலுக்காக பல பொய்களையும், போலித்தனங்களையும் உதிர்த்துக்கொண்டே மற்றவர்களைப் பொய்யர்களென்றும், போலிகள் என்றும் கூறிவரும் நகைச்சுவையை அவர் தளத்தை தொடர்ந்து படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். (அண்மைக்கால எடுத்துகாட்டு எஸ்.வி.இராஜதுரையைப்பற்றி சொன்னது). முன்பொரு முறை தமிழ்மணம் திரட்டி பெண்களுக்கெதிரான ஆபாச எழுத்துகளையும், வன்முறையையும் ஊக்குவித்து வருகிறது என்று ஒரு இணையத்தமிழ் அமைப்பின் ஆண்டிதழ் கட்டுரையில் எழுதிச் சென்றார். அவருக்கு நெருக்கமானவர்களே அதைச் சுட்டிக்காட்டிய பின்னும் கூட தன் பொய்யைப்பற்றிய எந்த கூச்சமுமில்லாமல் கடந்து சென்றவர். தன்னுடைய அரசியலுக்காக எந்தப்பொய்யையும் உண்மை போல் சொல்வதில் மிகுந்த திறமைசாலி. இதையும் தாண்டி அவர் விவாதிக்கும் பல விதயங்கள் சிந்தனைக்கு மிகவும் அவசியமானவை. அதனால் தமிழர்களால் கண்டிப்பாகப் படிக்கப்படவேண்டியவர். ஆனால் பாஸ்டன் பாலா போன்ற அவரது *அரசியல்* தொண்டரடிப்பொடிகளை நிராகரித்துச் சென்றால் நேரத்தை மிச்சமாக்கலாம்.

பேரவை இவர்களிடமிருந்தெல்லாம் பாராட்டுப் பெறவேண்டிய அவசியமில்லை. தமிழ்ச்சமூகத்தின் தரம்தாழ்ந்த அவலத்துகிடையே, அவற்றை படிப்படியாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு தொடர்ந்து செய்யவேண்டிய நல்ல செயல்களே பேரவையின் வெற்றிக்கு மேலும் உதவும்.

பேரவையும், தமிழ்மாநாடுகளும்

ஒருமுறையாவது பேரவை மாநாட்டில் முழுமையாகக் கலந்து கொண்டவர் தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில் கலந்துகொள்ள விரும்புவார். குறைகளுக்கிடையே பல நிறைகளும் உள்ளன என்பதும் தெரியும். ஜெயமோகன் தளத்தில் தன் கடிதத்தில் திரு. நிர்மல் மிகவும் பக்குவமாக எழுதியிருக்கிறார்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

தணல் said...

//ஜெயமோகனைப் பற்றிச்சொல்ல விரும்புவது ஒன்று. தமிழ் மொழியில் ஆழமான விதயங்களை அருமையாக எழுதும் திறமையாளர்.//

ஜெயமோகன் ஃபெட்னா விழாவுக்கு வந்ததே இல்லை என்று நினைக்கிறேன்! அவர் எதிர்பார்க்கும் 'தரம்' இல்லையென்றால் விழா பிடிக்கவில்லையென்றால் விலகி இருக்க வேண்டியது தானே? நிர்மல் போன்ற வாசகர்கள் அவருக்கு எழுதிய கடிதங்களுக்கு தன்னுடைய நிலையை தனிப்பட்ட முறையில் மெயிலில் சொல்லி சொல்லியிருக்கலாம்! காந்தி பற்றிய கடிதத்தை தளத்தில் வெளியிட்டது கூடச்சரி, ஆனால் அதற்கு எதிர்வினையாக ஃபெட்னா இதைத் திட்டமிட்டே செய்கிறது என்று கூறுகிறார். நாட்டைப் பிளவு செய்யும் சக்திகள் என்று அ.நீ யின் கட்டுரையை மேற்கோள் காட்டுகிறார். (அ.நீ ஓர் ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்கிறார்கள், அதை அவர்தம் சட்டையைக் கழற்றி மறுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்!) அரவிந்தனின் இரண்டாவது கடிதத்தை பிரசுரிக்கும் போதும், காந்தி - ஃபெட்னா அவதூறு என்றே தலைப்பிட்டு எழுதியிருக்கிறார்! உள்நோக்கத்துடனே அவ்வாறு செய்திருப்பதாகப் பட்டதால் தான் எதிர்வினையைச் சற்று கோபத்துடன் ஆற்றவேண்டி இருந்தது. இவர் செய்வது எப்படி இருக்கிறதென்றால், ஜெயமோகனைப் பிடிக்காத ஒருவர் ஃபெட்னா மேடையில் வைத்து அவரை விமர்சனம் செய்வது போன்றது! எனக்கென்னவோ ஃபெட்னா இவரைச் சீந்துவது கூட இல்லை என்றே தோன்றுகிறது!

பாலா எழுதிய கடிதத்தையும் அவர் அவ்வாறே அணுகியிருக்கிறார்! ஃபெட்னா குறித்து இந்தளவு முன்வெறுப்பு கொண்டுள்ளவரிடத்து, ஃபெட்னா முன்னேற்றத்தில் அக்கறை இருப்பதாகச் சொல்லும் பாலா தனது விமர்சனக் கடிதத்தை அனுப்பியது எவ்வித நடுநிலைத்தன்மை என்று தெரியவில்லை!

மேலும், சினிமா என்னவோ நீஷ கலை போலவும் (I agree that some tamil movies are mere stupidities, but there are good ones too!), இலக்கியம் புனிதமானது போலவும், நடிகர்கள் தமிழ்விழா ஒன்றுக்கு அழைக்கப்படக் கூடாத தீண்டத்தகாதவர்கள் போலவும் எழுதுகிறார்கள்! தன்மானவுணர்வு சற்றுமில்லாது நடிகர்களைக் கண்டவுடன் ஈ யென்று மொய்த்து, ஆராதனை அபிஷேகம் செய்து ரசிகப்பொடிகள் செய்யும் அசிங்கம் ஒரு பக்கம் என்றால், அவர்களை அழைக்கவே கூடாது என்பது இன்னொரு எக்ஸ்ட்ரீம் என்றே தோன்றுகிறது. அவர்களும் தம்தொழிலை திறம்படச் செய்பவர்கள் என்கிற வகையில் அதற்கான மதிப்பும் மரியாதையும் மட்டும் அளித்து கடந்து செல்லும் பக்குவம் கொண்டவர்களுக்கு அவர்கள் வருவது பெரிய விடயமெனத் தோன்றாது!

Bala Subra said...

அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போட்டால், எல்லாரும் பொங்கி எழுவார்கள்.

தெரிந்தவர்கள் இரட்டை வேடம் போடுவதை சொன்னால், “குத்தம் சொல்லுறான்; நல்லது நடக்குறது பிடிக்கல... அனுசரிச்சு போங்க” என்று சொல்லி விடுகிறார்கள்.

முற்போக்கு, சமத்துவம் என்றேல்லாம் சொல்லில் மட்டும் இல்லாமல், கடைபிடியுங்கள் என்றால்... அதற்கு பதிலைக் காணோம்

பெட்னா கூட்டத்தில் மேட்ரிமொனியை சாதி கேட்காமல் செய்ய உங்களால் முடியாதா?

வருண் said...

***பெட்னா கூட்டத்தில் மேட்ரிமொனியை சாதி கேட்காமல் செய்ய உங்களால் முடியாதா?***

Jeyamohan was born on April 22, 1962 to S.Baguleyan Pillai and B.Visalakshi Amma in Arumanai, Nagercoil,Tamilnadu. Baguleyan Pillai was an accounts clerk in the Arumanai registrar's office

பாலா: ஜெயமோஹன் அப்பா பேரு பிள்ளையா இல்லை பிள்ளை என்பது அவருடைய சாதிப்பேரா? ஒரு கடிதம் எழுதிக்கேளுங்களேன். என்னவோ பெரிய சீர்திருத்தவாதி மாதிரிப் பேசுறீங்க. If it is his dad's caste, request him to REMOVE it as it will bother you so much. Could you do that, please?

Bala Subra said...

உங்க தப்பை சரி செய்யுங்களேன் என்றால், அடுத்த வீட்டுக் காரி உத்தமியானு நாலு விரலை வீட்டலாம்.

சாதி கேட்காம ஃபார்ம் நிரப்ப வழி செய்யுங்க என்றால், இவ்வளவு திசை திருப்பல்!

வருண் said...

பாலா: அது ஏன் உங்களுக்கு ஃபெட்னால உள்ள குறைகள் மட்டும் தெரியுது. அதை மட்டும் ஊதி ஊதி பெருசாக்குறேள்?

ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க, நான் இதைப்பத்தி, ஜெயமோஹன் சாதி சம்மந்தமா, முன்னாலேயே எழுதியிருக்கேன்.

http://timeforsomelove.blogspot.com/2010/06/blog-post_03.html

///ஜெயமோஹன் தமிழந்தான்னு சொல்றீங்களா? எனக்கென்னவோ அவர் பிறப்பால், மனசால் மலையாளினுதான் தோனுது. அவர் சாதியை, சஃபிக்ஸா பிள்ளை, நாயர்னு எல்லா இடத்திலேயும் போட்டு இருக்கார். அதென்ன இவ்வளவு சாதிப்பெருமைனு தெரியலை! ரொம்ப ஹானஸ்ட்டாதான் எழுதி இருக்கார். அவர தாயின் மறைவு பற்றிப்படிக்கும்போது கஷ்டமா இருந்தது. அவர் தனிப்பட்ட வாழ்க்கையைப்பத்தி நான் விமர்சிக்கவில்லை! அவர் எழுத்தையும், அவர் எழுதிய வசனங்களையும்தான்! மற்றபடி தமிழ் அவர் தொழிலுக்காக அவர் கற்ற ஆயுதம்.///

I brought it up now because you worship him so much.You make him look he is God or something. BTW, I don't say whatever feTNA does is correct. I am saying we should not be doing what Asiantribune does. Bcos we are all Tamils! We should be together and support our organization.

சுந்தரவடிவேல் said...

//சாதி கேட்காம ஃபார்ம் நிரப்ப வழி செய்யுங்க //

In which form does FeTNA require one to fill-in the caste?

Bala Subra said...

http://www.fetna.org/index.php/fetna-2012-tamil-vizha has "Meet, Mingle & Match" link, which asks its registrants for caste

தணல் said...

Well, I have a question here! I clicked that link, but the registration is closed now, so I don't have much details! But that ad looks like a sponsor from tamilmatrimony.com. If that is how tamilmatrimony site functions, how can FETNA be held responsible for? Did FETNA itself ask for caste? May be when FETNA itself conducts such match making function directly and asks for caste, then we can point our fingers directly to it!

Bala has portrayed it as "FETNA is asking for your caste"!!!! I don't think it is that significant!

சுந்தரவடிவேல் said...

//http://www.fetna.org/index.php/fetna-2012-tamil-vizha has "Meet, Mingle & Match" link, which asks its registrants for caste//

Bala, That link is an EXTERNAL LINK, taking one to http://profile.bharatmatrimony.com/singlesmeet/sm_login.php?EventId=18

This is ridiculous! How can FeTNA be responsible for the information Tamilmatrimony.com is asking for! நீங்கள் நாணயமானவராக இருந்திருந்தால் சாதிகளால் திருமணங்களை நிச்சயிக்கும் பாரத் மெட்ரிமோனியை (தமிழ் மெட்ரிமோனி இதன் ஒரு அங்கம்) எப்போதோ கேட்டிருக்கலாமே. ஆன்லைன் திருமணம் ஆரம்பித்த காலத்திலிருந்தே சாதியில்தானே இயங்குகிறது. சமூக சீர்திருத்தம் வேண்டுபவர் அவர்களுக்கு எழுதட்டுமே. அதிலும் சாதி குறிப்பிட விரும்பாதவர்கள் குறிப்பிட வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லையே. ஆக, பெட்னாவைக் குறை சொல்வதுதான் உங்கள் நோக்கம். அதற்காக தமிழச்சி, நல்லக்கண்ணு அய்யாவுக்குக் கொடுத்த நேரம், சாதித் திருமணம், பெட்னாவைச் சீர்திருத்தல், மார்க்கெட்டிங் ரிசர்ச்....என்று இத்தனை நெளிசல்கள். திசை திருப்பல்கள். உங்களுக்குள்ளே உள் முரண்கள். வெட்கம்! உண்மையிலே நீர் பாவம் அய்யா! பழகிய குற்றத்துக்காக உமக்காக உண்மையிலேயே வருந்துகிறேன்.

பழமைபேசி said...

கையப் பிடிச்சி இழுத்தியா??

வருண் said...

***Bala Subra said...

http://www.fetna.org/index.php/fetna-2012-tamil-vizha has "Meet, Mingle & Match" link, which asks its registrants for caste***

என்ன பாலா, தமிழ்மாட்ரிமோனி advertisement டைத்தான் இப்படி திரிச்சுட்டீங்களா!!!

என்ன பாலா இப்படி சின்னப்பிள்ளைத் தனமா பேசுறீங்க? தமிழ் மாட்ரிமோனிக்கும் ஃபெட்னாவுக்கும் சம்மந்தம் இல்லைனு உங்களுக்குத் தெரியாதா? நாசமாப்போச்சு போங்க!

வருண் said...

***பழமைபேசி said...

கையப் பிடிச்சி இழுத்தியா??

21 July 2012 5:05 PM***

அந்த வடிவேலு என்னிடம் மாட்டினான், சட்னி தான். He is getting on in my nerve!! :)

Bala Subra said...

வெளியில் நடப்பது நம்ம கட்டுப்பாடில் இல்லை. தமிழ் மேட்ரிமொனி பொதுவில் செய்வதை நிறுத்த வேண்டுகோள் மட்டுமே வைக்க முடியும்.

ஆனா, நம்ம அரங்கில் நடப்பதை எப்படி செய்யணும்னு சொல்ல முடியாதுனு சொல்லுறது எஸ்கேப்பு.

இது பெட்னா நிகழ்ச்சி நிரலில் இடம் பெறுகிறது. அதை ‘இப்படித்தான் நடத்தணும்னு’ நியதியாக்க முடியாதா?

சால்ஜாப்புகளும் திசை திருப்பல்களும் தொடர வாழ்த்துகள்.

அடுத்த முறை வரதட்சிணைக்கும் ஒரு கட்டம் கட்டி ஏற்பாடு செஞ்சு கமிஷன் அடிக்கலாம் பெட்னா

பழமைபேசி said...

//ஆனா, நம்ம அரங்கில் நடப்பதை எப்படி செய்யணும்னு சொல்ல முடியாதுனு சொல்லுறது எஸ்கேப்பு.//

இதற்குப் பெயர் புரட்டு! இருந்ததை இருந்தபடி சொல்லாது புரட்டிப் போட்டுச் சொல்வது.

Caste no bar அப்படின்னு ஒரு தெரிவு இருக்குங்க. புலம் பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளர்ந்தவர்கள் பெரும்பாலும் அதையேதான் தெரிவு செய்கிறார்கள். ஊரில் இருந்து வந்திருப்பவர்கள் மட்டுமே சாதியைக் குறிப்பிடுகிறார்கள் என்றார் இணையமர்வின் ஒருங்கிணைப்பாளர்.

அவர்களுக்காகத்தான் சிந்தனையாளர்கள், பொதுநலவாதிகளின் உரைகள் முக்கிய அரங்கில் நடைபெறுகிறது. அய்யா நல்லகண்ணு போன்றோரை வரவழைப்பதுவும் அதற்குத்தான்!

//பெட்னா கூட்டத்தில் மேட்ரிமொனியை சாதி கேட்காமல் செய்ய உங்களால் முடியாதா?//

இதற்குப் பெயர் திரிப்பு. ”சாதி கேட்காமல் செய்ய உங்களால் முடியாதா?”

எதோ பெட்னாவே அந்த இணையமர்வில் நுழைந்து வருவோர் போவோரை எல்லாம் உங்க சாதி என்ன என வினவியது போல இட்டுக்கட்டுவது திரிப்பு.

யார் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமானாலும், விண்ணப்பதாரருக்கு 18+ மேற்பட்ட உறவினர் அல்லது பெற்றோராய் இருத்தல் வேண்டும். நான் என்னுடைய சின்னம்மா மகனுக்காகச் சென்றிருந்தேன். $30 கட்டித்தான்! ஆகவே அங்கிருந்த நடைமுறை எனக்குத் தெரியும். விமர்சகரும் நண்பருமான பாலாவை விழாவுக்கு வரச் சொல்லியும் வரவில்லை. அடுத்த முறையாவது நேரில் வந்திருந்து அனைத்தையும் கண்ணுற்று இன்னும் வலுவாக முயற்சிக்கலாம்! அது பேரவையின் வளர்ச்சிக்கும் உதவும்!!

இப்படி “கையப்பிடிச்சி இழுத்தியா?” விமர்சனம் ஒன்னுக்கும் உதவாதுங்க வருண்!!

தணல் said...

//அடுத்த முறை வரதட்சிணைக்கும் ஒரு கட்டம் கட்டி ஏற்பாடு செஞ்சு கமிஷன் அடிக்கலாம் பெட்னா//

I think it is time for Mr. Bala to have some antacid and take rest!

Anonymous said...

நியாயமான கேள்விகள் ! தற்காலத்தில் தமிழையும் இந்தியாவையும் வளர்க்க எவ்வளவோ வேலைகள் இருக்கு இப்பவும் கம்பன் அரங்கம் நடத்துவதும், காந்தி நல்லவரா கெட்டவரா என பட்டிமன்றம் நடத்துவதும் தேவையற்றது .. காந்தி இறந்து 60 ஆண்டுகளாச்சு .. அவரை நோட்டுக்கள் (ரூபாய் ) தவிர வேறு எங்கும் நினைப்பது கூட இல்லை பலர் ... இன்று இந்தியா பலவித சிக்கல்களை எதிர்னோக்கி செல்கின்றது .. இதையெல்லாம் விட்டுட்டு .. பழையது பேசுவது நியாயமே இல்லை ..

இந்தியா என்றாலே வெள்ளையர்களுக்கு முதலில் நியாபகம் வருவது காந்தி தான் !

Anonymous said...

பெட்னாவில் அமலா பால் என்ன பேசினாங்க. அதைப் பற்றி யாருமே எழுதவே இல்லை.

Anonymous said...

இரண்டாம் உலப் போரினால் தான் பல நாடுகளுக்கு சுதந்திரம் கிடைத்தது .. அனைத்தையும் கட்டி ஆள திராணி இல்லாதத்தாலும் இந்தியாவில் எழுந்த போராட்டங்களை சமாளிக்க முடியாததாலும் வெள்ளையர் கொள்ளையடித்து போதும் மிச்சத்தை நீங்களே கொள்ளையடியுங்கள் என நம்மிடம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.