Friday, January 23, 2009

கண்ணதாசனுக்கு “கடவுள்" செய்த உதவி!

கவியரசு கண்ணதாசன் பாடல் வரிகள் ஒரு தனி ரகம்தான். காதலாக இருக்கட்டும் தத்துவமாக இருக்கட்டும், அவருக்கு இணை அவர்தான். தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு பல குறைகள் உண்டு. ஒரு பெரிய குடிகாரர், அவருக்கு பல மனைவிகள்.

கண்ணதாசன், நாத்தீகராக இருந்து ஆத்திகப்பாதையில் வந்தவர். நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பில் பிறந்த இவர் அர்த்தமுள்ள இந்துமதம் என்கிற புத்தகமும் எழுதியுள்ளார்.

ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை அவசியமா? கடவுள் நம்பிக்கை செய்யும் தொழிலுக்கு உதவுமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். தன்னம்பிக்கை, நேர்மை, உழைப்பு இருந்தால் போதும் என்றுதான் சொல்லுவேன். கடவுள்நம்பிக்கை கோயில் பூசாரிக்கு உதவும். ஏன்னா கடவுள் இல்லைனு ஆயிடுத்துனா அவருக்கு அந்த தொழில் செய்யமுடியாது. ஆனால், கண்ணதாசனுக்கு அவருடைய கடவுள்நம்பிக்கை நிச்சயம் பலவகையில் உதவியது என்றுதான் சொல்வேன். அவர் எழுதிய கவிதைகளில் உணர்ச்சிப்பூர்வமான வரிகள் அனைத்திலும் கடவுளை சாடுவார், புகழ்வார், குற்றம் சொவார் கவியரசர் கண்ணதாசன். ஒருவேளை அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் அந்த வரிகளை அவரால் உருவாக்கி இருக்க முடியாது என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்.

கடவுள் பற்றி அவர் எழுதிய கவிதைகளில் உள்ள சில வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது!

ஃ பெண்ணைப்படைத்து கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!

ஃ கடவுளை தண்டிக்க என்ன வழி?

ஃ ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ?

ஃ அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே! அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே.

ஃ ஆண்டவன் படச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்.

ஃ படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே!

ஃ உன்னைச் சொல்லி குற்றமில்லை! என்னைச்சொல்லிகுற்றமில்லை! காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி!

ஃ இரண்டு மனம் வேண்டும்! இறைவனிடம் கேட்டேன்!


ஒரு நாத்தீகரால் இதுபோல் வரிகள் எழுதமுடியாது. அதனால், கடவுள் இருக்காரோ இல்லையோ, கண்ணதாசனுடைய கடவுள் நம்பிக்கை இங்கு அவர் “தொழிலுக்கு” உதவி உள்ளது என்கிறேன்.

டி வி ஆர் அவர்களின் இந்தப்பதிவையும் பார்க்கவும்:
http://tvrk.blogspot.com/2009/01/blog-post_24.html

19 comments:

ராமலக்ஷ்மி said...

உங்கள் பதிவின் கருத்துக்குள் நான் வரவில்லை:))! ஆனால் இந்த லிஸ்டில் ஒரு பாட்டை விட்டு விட்டீர்களே!

“கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்”

இப்பாடல் வரிகள் முதலின் எங்ஙனம் எழுதப் பட்டு பிறகு எப்படி கவிஞராலேயே திருத்தித் தரப் பட்டது என்பதை இங்கே பாருங்கள்.

Nilofer Anbarasu said...

ஏதோ முழுமை பெறாத பதிவு போலவே தெரிகிறது. நேரமின்மை காரணமா?

//கண்ணதாசனுடைய கடவுள் நம்பிக்கை இங்கு அவர் “தொழிலுக்கு” உதவி உள்ளது என்கிறேன்.//
ஒரு சிறு திருத்தம். தொழிலாக நினைத்து அவர் பாடல் எழுதியதில்லை. அரசியல், ஆன்மிகம், கவிதை, கட்டுரை என பல தளங்களில் இயங்கியவர். பணம் வருவதும் அவருக்கு தெரியாது போவதும் தெரியாது.

நல்ல பாடல் வரிகள். கடவுள் பற்றி கண்ணதாசன் எழுதியவைகளில் எனக்கு பிடித்த ஒரு வரி ...
"உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா? "

இதுக்கு சற்றே தொடர்புடைய ஆன்மிகம் + கண்ணதாசன் பற்றிய பதிவை இங்கே வாசிக்கலாம்.

மேலும் ஒரு பதிவு இங்கே

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
உங்கள் பதிவின் கருத்துக்குள் நான் வரவில்லை:))! ஆனால் இந்த லிஸ்டில் ஒரு பாட்டை விட்டு விட்டீர்களே!

“கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்”

இப்பாடல் வரிகள் முதலின் எங்ஙனம் எழுதப் பட்டு பிறகு எப்படி கவிஞராலேயே திருத்தித் தரப் பட்டது என்பதை இங்கே பாருங்கள்.***

வாங்க ராமலக்ஷ்மி!

அந்த வரி ரொம்ப "அஃபெண்ஸிவா" தான் இருக்குங்க. ஒருவேளை அப்போ அவர் நாத்தீகராக இருந்திருப்பாரோ?

ரொம்ப நல்லாயிருக்கு இந்த
டி-எம்-எஸ், கே வி எம், கண்ணதாசன் கலந்துரையாடல்! சுட்டிக்கும் உங்கள் வருகைக்கும் நன்றி :)

எனக்கு "வாட வேண்டும்" தான் பிடிச்சிருக்கு, அதுதான் "அப்ரோப்ரியேட்" டாக தெரியுது. ஏன் என்றால் ஒருவர் இறந்துவிட்டால் ஒரு விடுதலை கிடைத்ததுபோல். உயிரோடு இருந்து வாடி வதங்குவதுதான் பெரிய தண்டனை!

வருண் said...

வாங்க அன்பரசு! :)

உங்கள் ஆன்மீகப்பதிவை வாசித்தேன். நல்லாயிருக்கு.

***ஒரு சிறு திருத்தம். தொழிலாக நினைத்து அவர் பாடல் எழுதியதில்லை. அரசியல், ஆன்மிகம், கவிதை, கட்டுரை என பல தளங்களில் இயங்கியவர். பணம் வருவதும் அவருக்கு தெரியாது போவதும் தெரியாது.***

அப்படியா? உங்கள் திருத்தத்திற்கு நன்றி.

வாலி, ஒரு பேட்டியில் அவரைப்பற்றி இதுபோல்தான் சொன்னார்னு நினைக்கிறேன்.

அப்புறம், இந்தப்பதிவு அவ்வளவுதான். அப்ரப்ட்டா முடித்த மாதிரித்தான் எனக்கும் ஒரு உணர்வு :)

உங்கள் வருகைக்கும், திருத்தத்திற்கும், உங்கள் பதிவை பகிர்தலுக்கும் நன்றி, திரு. அன்பரசு!

மிஸஸ்.டவுட் said...

கயல்விழியின் எழுத்துக்களை இப்போதெல்லாம் ஏன் பார்ர்க்க முடிவதில்லை?அவரது சில பதிவுகளை வாசித்தேன் என்ற முறையில் இந்த டவுட் வந்ததால் கேட்டு விட்டேன்.ஏன் ?ரொம்ப பிஸி ஆயிட்டாங்களா?

வருண் said...

***மிஸஸ்.டவுட் said...
கயல்விழியின் எழுத்துக்களை இப்போதெல்லாம் ஏன் பார்ர்க்க முடிவதில்லை?அவரது சில பதிவுகளை வாசித்தேன் என்ற முறையில் இந்த டவுட் வந்ததால் கேட்டு விட்டேன்.ஏன் ?ரொம்ப பிஸி ஆயிட்டாங்களா?***

ஆமாங்க,ரொம்ப பிஸி! :-)

Kannadhasan said...

/*
தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு பல குறைகள் உண்டு. ஒரு பெரிய குடிகாரர், அவருக்கு பல மனைவிகள், அவர் நாத்தீகராக இருந்து ஆத்திகப்பாதையில் வந்தவர். நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பில் பிறந்த இவர் அர்த்தமுள்ள இந்துமதம் என்கிற புத்தகமும் எழுதியுள்ளார்.
*/

i don't understand why the last 2 points went under "Kuraighal" category.

வருண் said...

வேணும்னே இப்படி ஒரு லொள்ளா?? :) :) :)

நான் கடைசி ரெண்டையும் குறைனு சொல்லலை. குறையெல்லாம் அதுக்கு முன்னாலேயே சொல்லியாச்சு சார் :)

புதுகைச் சாரல் said...

ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரைசத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழைநிஜார் போட்ட மனிதனின் பேஜார்

வருண் said...

வாங்க புதுகைச்சாரல்!

என்ன சொல்றீங்க? :)

Kannadhasan said...

/*
வேணும்னே இப்படி ஒரு லொள்ளா?? :) :) :)

நான் கடைசி ரெண்டையும் குறைனு சொல்லலை. குறையெல்லாம் அதுக்கு முன்னாலேயே சொல்லியாச்சு சார் :)
*/
Sir,
I am not doing any lollu. To any lay man like me,who read that para will understand like I did.
If you think those 2 points are extra info, it should be either in his intro or atleast in a new para.
I saw a comma between 2 and 3 rd point. which clearly convey that you are adding to his "Kurai" list.

Anyways it is your blog, you can write about anyone, this is your view. but clearly those 2 are not his weakness.

Thanks

வருண் said...

KaNNadasan!

Someone who calimed as an atheist becoming a theist is a DRAWBACK in my humble opinion!

You can disagree.

There is a period just there! :)

வருண் said...

***ஒரு பெரிய குடிகாரர், அவருக்கு பல மனைவிகள், அவர் நாத்தீகராக இருந்து ஆத்திகப்பாதையில் வந்தவர். ***

I hope KaNNadasan could see the PERIOD at the end of this sentence!

Kannadhasan said...

/*
I hope KaNNadasan could see the PERIOD at the end of this sentence!
*/

Varun,
I did mentioned that there is comma between 2 and 3rd point and NOT 3rd and 4th.

வருண் said...

KaNNadasan!

I fixed the post as you suggested. Thanks for your critical remarks and for your visit here!

Take it easy :)

Kannadhasan said...

/*
KaNNadasan!

Someone who calimed as an atheist becoming a theist is a DRAWBACK in my humble opinion!

You can disagree.

There is a period just there! :)

*/

As I told you before It is your view. As a reader ( I don't know how I stumbled on this ) I thought I will at least post my comment that this is not a major drawback in one's personal life.

Kannadhasan said...

Thanks for updating the original post.

Pretty soon expecting blogs like

Kannadhasan Kudi palakagham seitha uthavi.


Kannadhasan iku pala manaivighalal kidaitha palan.

---

Take it easy :)

வருண் said...

***As I told you before It is your view. As a reader ( I don't know how I stumbled on this ) I thought I will at least post my comment that this is not a major drawback in one's personal life.

26 January, 2009 12:48 PM***

I am not sure, whether it is NOT a major drawback. It is sort of hard to dfend oneself I guess. Anyway, it happens to lots of people!

Espe when people get older and older they get scared of death and somehow they want to beleive in something like God.

I dont understand how can one start beleiving after being a nonbeliever! I really DONT :)

வருண் said...

***Kannadhasan said...
Thanks for updating the original post.

Pretty soon expecting blogs like

Kannadhasan Kudi palakagham seitha uthavi.

Kannadhasan iku pala manaivighalal kidaitha palan.

---
Take it easy :)***

Really?! That is funny!!! LOL!